
மணியும், விஜயும் அந்த விசாலமான ஹாலில் நடு நாயகமாக போடப்பட்டிருந்த உயர்தர ஷோபாகளின் முன் நின்றிருந்தனர்.. விஜய் வீட்டை சுற்றி விழிகளை சுழல விட ஆங்காங்கே ஹீரோயின் நேத்ராவும், அவளின் சகோதரி யாத்ராவும் இருக்கும் பல புகைப்படங்களும், சில ஓவியங்களும் மாட்டப்பட்டிருந்தது.. வீடு முழுக்க விலை உயர்ந்த பொருட்களை கொண்டு அலங்கரித்திருந்தனர்..ஹாலில் இருந்து சற்று தொலைவில் ஓபன் கிட்சனும் அதனை ஒட்டி டைனிங் டேபிளும் போடப்பட்டிருந்தது.. ஹாலில் இருந்து நேராக மாடிக்கு செல்லும் படிக்கட்டுக்கள் கண்ணாடியால் அமைக்கபட்டு இருக்க.. மேலே மாடியில் நிறைய அறைகள் அமைக்கப்பட்டிருந்தது.. வேலையாட்கள் ஆங்காங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்..
" எங்க யாரையும் காணோம்.. " என விஜய் கேட்க..
"வருவாங்க தம்பி.. இப்போதானே மணி ஆறாகுது பொறுமையாக பத்து மணிக்கு எழுந்து எல்லாரும் வருவாங்க.." என்று அவர் அனுபவத்தில் சொல்ல..
அவரை பார்த்தவன்.. "அப்போ எதுக்காக நாம இப்போவே இங்க கால் வலிக்க நிக்கணும்.. போய் எங்கையாவது உட்காரலாமே.." என்று சொல்ல..
"ஐயோ தம்பி நாம இவங்களுக்காக காத்திட்டு இல்ல.. நேத்ரா பாப்பாக்காக காத்திட்டு இருக்கோம்.. அவங்க இப்போ வந்துடுவாங்க.. " என்று அவர் சொல்லவும்.. வெளியே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது..
"வந்துட்டாங்க.." என்று மணி வாசலை பார்த்து சொல்ல..
திரும்பி வாசலை பார்த்தான் விஜய்.. அங்கு யாருமில்லை என்றதும் மீண்டும் அவரை பார்க்க.. "கார் சத்தம் கேட்டுச்சு இல்ல தம்பி.. அப்போ கண்டிப்பாக பாப்பா தான் வந்துருக்கும்.." என்று அவர் கணித்து சொன்னார்..
"ஒ.." என்றவன்.. " ஆமா இவ்வளவு காலையில அவங்க எங்க போனாங்க.. " என ஒரு காவல் அதிகாரியாக மாறி கேட்க..
"பாப்பாக்கு நைட் ஷூட்டிங் தம்பி.. அதை முடிச்சிட்டு இப்போ தான் வருது.. ரொம்ப நல்ல பொண்ணு தம்பி.. அந்த பாப்பா மேல எல்லாம் சந்தேகப்படாதீங்க.." என தன் மனதில் இருப்பதை கூற.. சிரித்தவன் விஜய்..
"எப்போவுமே பாப்பானு தான் கூப்பிடுவீங்களா.." என்று கேட்க..
"ஆமா தம்பி.. பாப்பா தான் மேடம்னு எல்லாம் கூப்பிட வேண்டாம்.. உங்க பொண்ணை எப்படி கூப்பிடுவீங்களோ அப்படியே கூப்பீடுங்கனு சொன்னுச்சி.." என்று சொன்னார்..
சரிதான் என தலை ஆட்டியவன் வாசலை பார்க்க.. ப்ளூ ஜீன்ஸ் வித் பிளாக் டீஷர்ட் உடன் வைட் கலர் ஷூஸ் அணிந்து கார் கூந்தலை கேட்ச் கிளிப் கொண்டு அடக்கி இருந்தாள்.. கையில் மொபைலுடன் அவர்கள் முன் வந்து நின்றாள் அவள்..
இத்தனை நாள் படத்தில் பாத்திருக்கிறான்.. இன்று தான் முதன் முதலாக நேரில் பார்க்கிறான்.. மாசு மரு இல்லாத தெளிவான வெண்ணிறமும், ரோஸ் நிறமும் கலந்த முகம் , இதழ்கள் இயற்கையாகவே பிங்க் நிறத்தை தத்தெடுத்திருக்கும் போல அவ்வளவு அழகாக இருந்தது.. கார் கூந்தலின் இரு கற்றை முடிகள் முன் நெற்றியில் இருந்து வழிந்து பட்டுக் கன்னத்தை வருடிக் கொண்டிருக்க.. கண்களோ நேற்றைய இரவின் தூக்கமின்மையால் சிவந்திருந்தன.. ரோஜா பூவின் மடல்கள் போல் இருக்கும் காதில் ஒற்றை கல் கொண்ட தோடு இடப்பட்டிருந்தது.. ஒரு நொடி அவளை ஆழ்ந்து ரசித்தவன் பின்னர் தான் உணர்ந்தான் தான் செய்துகொண்டு இருக்கும் காரியத்தை.. "ச்சே என்ன இப்படி பார்த்துட்டு இருக்கேன்.." என மனதில் திட்டியவன்.. "அதுசரி.. ஹீரோயினா எல்லாரும் இப்படிதானே பார்ப்பாங்க.." என தனக்கு தானே சொல்லிக் கொண்டான்..
"இவருதான் நீங்க சொன்னவர அண்ணா.." என கிளி போல அவள் கேட்க..
அவரும்.."ஆமாம்மா இவன்தான் என்னோட மாப்பிள்ளை.. பேரு விஜய்.. " என்று சொல்ல..
"ஒ.."என மெலிதாக புன்னகைத்தவள்.."நைஸ் டு மீட் யூ.." என கை கொடுக்கும் எண்ணத்தில் அவள் கையை கொடுக்க.. அவன் அதிர்ந்து போய் பார்த்தான்.. வாழ்நாளில் முதல் முறையாக ஒரு சினிமா நடிகை அவரே வந்து கை கொடுப்பதை பார்க்கிறான்.. அதுவும் வேலை செய்ய வந்த வேலைக்காரனுக்கு.. இதில் புன்னகை வேறு.. என அவன் யோசித்துக் கொண்டே இருக்க.. அவனை கண் சிமிட்டியபடி பார்த்து நின்றாள் நேத்ரா..
"மாப்பிள்ளை... பாப்பா கையை ரொம்ப நேரமா நீட்டிட்டு இருக்கு.." என்று மணி நினைவுப்படுத்த.. சுயம் உணர்ந்தவன் மெதுவாக அவளுக்கு கை கொடுத்தான்.. அவளும் புன்னகை மாறாமல் கை குலுக்கி விடுத்தாள்..
"வீட்டுல எல்லாரும் நல்ல இருக்காங்களா.." ரொம்ப நாள் பழகியவள் போல் சாதாரணமாக பேச.. விஜய்க்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது.. ஒரு நடிகை இவ்வளவு சாதாரணமா இருப்பாங்களா என்று..
இவர்கள் பேசிக் கொண்டிருக்க.. நேத்ராவின் பின்னே வந்து நின்றான் ஆறடி ஆண்மகன் ஒருவன்..
விஜயின் பார்வை அவன்மேல் படிய.. அவனின் பார்வையும் விஜய் மேல் தான் படிந்து இருந்தது.. இருவரின் எண்ணமும் யார் இவன்.. என்றிருக்க.. அதற்கு பதில் அளிக்கும் வண்ணம்.. " இவரு என்னோட PA துருவன்.. என்னோட பாடிகார்டும் இவர்தான்.. " என துருவனை அறிமுகம் செய்தவள்.. துருவனிடம்.. " இவர் விஜய்.. மணி அண்ணனோட அக்கா பையன்.. " என அவள் விஜய்யை அறிமுகப்படுத்தினாள்..
"ஒ.. குக்கா கூட்டிட்டு வரேன்னு சொன்னீங்களே அது இவர்தானா.." என்றவன்.. "ஹலோ..' என்றான் விஜய்யை பார்த்து ..
"உங்களுக்கு இங்க வேலை செய்யறதில் எதாவது பிரச்சனை இருக்கு.. யாராவது உங்களை டார்ச்சர் பன்றாங்க அப்படினும் போது இவர்கிட்ட சொல்லுங்க.. இவர் எல்லாத்தையும் பார்த்துப்பாரு.. இங்க எல்லாமே இவரோட இன்சார்ஜ்ல தான் இருக்கு.." என நேத்ரா வெளிப்படையாக சொல்லி விட..
எல்லாமே இவரோட இன்சார்ஜ்ல தான் இருக்கு என அவள் கூறிய வார்த்தை காதில் ரீங்காரம் இட.. துருவனின் முகத்தை பார்த்தான் விஜய் .. அவனோ புன்னகையுடன் நின்றிருந்தான்..
விஜயின் லிஸ்ட்டில் முதல் ஆளாக துருவனின் பெயர் சேர்க்கப்பட்டது..
"ஓகே.. எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு.. நான் போய் ரெஸ்ட் எடுக்குறேன்.. மேற்கொண்ட எல்லா விஷயத்தையும் துருவன் டீல் பண்ணிப்பாரு.." என்று விட்டு அவள் மாடிக்கு சென்று விட..
"வாழ்த்துக்கள்.." என விஜயிடம் கையை நீட்டினான் துருவன்..
விஜய் எதுக்கு என்று பார்க்க..
"என்னங்க இப்படி பாக்குறீங்க.. நேத்ரா யாதவ் வீட்டுல உங்களுக்கு வேலை கிடைச்சிருக்கு.. அது எவ்வளவு பெரிய வரம் தெரியுமா.."என்றவன்.."அவனவன் நேத்ரா மேடமை ஒரு நொடி பார்த்துடா மாட்டோமானு துடிச்சிட்டு இருக்கான்.. ஆனா உங்களுக்கு அவங்களை தினமும் பாக்குற வாய்ப்பு கிடைச்சிருக்கே.. அதுக்கு தான் வாழ்த்துக்கள்.." என ஏகத்துக்கும் யாத்ரவை தூக்கி வைத்து பேச... விஜய்க்கு கடுப்பாக இருந்தது..
"இந்த வீட்டில் உங்க சம்பளத்துக்கு எந்த குறையும் இருக்காது.. அதேமாதிரி நீங்க சாப்பாட்டில் எந்த குறையும் வைக்க கூடாது.." என துருவன் சிரிக்க.. விஜய்க்கு அவனின் சிரிப்பு போலியோ என்று தோன்றியது..
"ஆ.. அப்புறம் இந்த வீட்டில் யாத்ரா மேடமும், நேத்ரா மேடமும் மட்டும் இல்ல.. அவங்களோட அத்தை, மாமா, அவங்களோட பையனும், பொண்ணும் கூட இருக்காங்க..அவங்களுக்கு தேவையானதையும் நீங்க தான் செஞ்சி குடுக்கணும்.. அப்புறம் நீங்க தங்குற இடத்தை உங்க மாமா காட்டுவாரு.. நீங்க இப்போ போய் உங்க வேலையை பார்க்கலாம்.." என்று துருவன் கூற ..
"யாரிது.." என்ற குரல் அந்த ஹாலை நிறைத்தது.. யாரென்று விஜய் திரும்பி பார்க்க.. நேத்ராவின் மறுபதிப்பாய் அவளின் அழகிற்கு ஈடு கொடுக்கும் விதத்தில் செதுக்கி வைத்த சிலை போல் உடற்பயிற்சிக்கான உடையில் இறங்கி வந்தாள் யாத்ரா ..
நேத்ராவாவது மேக்கப் போட்டு போட்டு சிவந்திருப்பாள் போல.. ஆனால் இவள் சுண்டி விட்டால் ரத்தம் வரும் அளவிற்கு அழகோவியமாய் வந்து நின்றாள்..செப்பு இதழ்கள் அநியாயத்திற்கு சிவந்திருந்தது..
"நம்மளோட புது குக் மேம்.." என்று துருவன் அவளிடம் மென்மையாக அறிமுகப்படுத்த..
"குக்கா.." என அவனை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தவள்.. "எந்த அங்கிளிலும் குக் மாதிரி தெரியலையே.." என்று அவனின் பிட் ஆனா உடலை கண்டு சொல்ல..
அவள் எதை வைத்து இப்படி சொல்கிறாள் என உணர்ந்து கொண்ட மணி "என்னோட அக்கா பையன் தாம்மா.. அவனுக்கு கொஞ்சம் உடற்பயிற்சி செய்யறதில் ஆர்வம்.. அதான் இப்படி உடம்பை ஏத்தி வச்சிருக்கான்மா.." பணிவாக கூறினார்..
ம்ம் என தலை ஆட்டியவள்.. "Id Prof எல்லாம் வாங்கிட்டீங்களா துருவன் .." என்று அவள் கேட்க..
"ஹான்.. இல்ல மேம்.. நேத்ரா மேம் அதை எதையும் கேட்கல.." என்று தயக்கத்துடன் கூற.. அவனை முறைத்தாள் அவள்.. துருவன் கீழே குனிந்து கொள்ள..
"யாரா இருந்தாலும் ஒரிஜினல் prof வாங்காம வேலைக்கு வைக்க கூடாதுனு பேசிக் சென்ஸ் கூட இல்லையா உஙகளுக்கு.." என அவனை கோபமாக திட்டியவள்..
மணியிடம்.. " அண்ணா உங்க அக்கா பையனாவே இருந்தாலும் சரியான டீடெயில்ஸ் இருந்தா மட்டும் தான் வேலை குடுக்க முடியும்.. " என கடுமையாக எச்சரித்தவள்.. "துருவன்.. இவரோட ஒரிஜினல் டீடெயில்ஸ் அண்ட் id prof எல்லாத்தையும் கலெக்ட் பண்ணிட்டு ஜிம்முக்கு வாங்க.." என கோபமாக கூறிவிட்டு அவள் செல்ல.. துருவனும் சரியென தலை அசைத்தான்..
போகும் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் விஜய்..
அவன் முகத்தை தன் பக்கமாக திருப்பிய துருவன்.. "அவங்களை பார்த்துட்டே இருக்க சொல்லி மனசு சொல்லும் தான்.. அதுக்காக இப்படியே நிக்காம கொஞ்சம் உங்க prof எல்லாம் தரீங்களா.." என்று கிண்டலாக கேட்க..
அவனும் பேக்கில் இருந்து எல்லாவற்றையும் எடுத்து தந்தான் விஜய் .. அதை வாங்கிக் கொண்டவன்.. "சரி நீங்க மணி அண்ணா கூட போங்க..வீட்டை பத்தி எல்லாம் அவரு சொல்லுவாரு " என்று விட்டு அவன் வீட்டில் இருந்து வெளியேறி தோட்டத்தின் ஒரு பக்கத்தில் அமைந்திருந்த ஜிம்மை நோக்கி சென்றான்.. போகும் அவனின் முதுகையே வெறித்து நின்ற விஜய்..
"இவன் எப்போதிலிருந்து இங்க வேலை பாக்குறான்.." என மணியிடம் சந்தேகமாக கேட்க..
"ஒரு இரண்டு மூணு மாசமா தான் தம்பி.." என்றார் அவர்..
விஜயின் விழிகள் திகைப்பில் விரிந்தது.. காரணம் அந்த ட்ராக்ஸ் தமிழ்நாட்டில் பரவ ஆரம்பித்ததும் இந்த இரண்டு மூன்று மாதங்களில் தான்.. இனி இவனை பின் தொடர வேண்டும் என மனதில் எண்ணிக் கொண்டே மணியின் பின்னே சென்றான் விஜய்..
விஜய்யின் prof உடன் துருவன் ஜிம்மிற்குள் நுழைய.. யாத்ரா அங்கு ட்ரட் மில்லில் ஓடிக் கொண்டிருந்தாள்.. அக்கா, தங்கைக்குகென மட்டுமே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மிக பெரிய ஜிம் அது..
ஓடிக் கொண்டிருந்தவள் அவன் வந்ததும் அதை நிறுத்தி விட்டு.. அதன்மேலே அமர்ந்தப்படி கையை நீட்ட அவனும் விஜய்யின் டீடெயில்ஸ்யை கொடுத்தான்.. அவள் அதை வாங்கி பார்த்துக் கொண்டிருந்தாள்.. துருவன் பின்னால் கை கட்டிய வண்ணம் நின்றிருந்தான் ..
அதனை பார்த்து எல்லாம் சரியாக இருக்கிறது என தெரிந்துக் கொண்டவள்.. "எப்போ வேலைக்கு ஆள் எடுத்தாலும் இதை எல்லாம் செக் பண்ணனும் புரியதா.." என்று பின்னே சரிந்து அமர்ந்த வண்ணம் கேட்க.. துருவனும் சரியென தலை ஆட்டினான்..
"சரி இதையெல்லாம் எடுத்துட்டு போ .." என அவனை பார்வையால் விழுங்கி கொண்டே அவள் சொல்ல ..
துருவனும் கீழே குனிந்து அதையெல்லாம் எடுக்க போன சமயம் அவனின் ஷர்ட்டின் காலரை பிடித்து இழுத்தாள் யாத்ரா.. அவள் இழுத்த இழுப்பில் அவன் நிலை தடுமாறி அவள்மேல் விழ.. அவள் ட்ரட் மிலின் மீது படுக்க இச் என முத்தம் விழுந்தது அவள் கன்னத்தில்..அதனை ரசித்து உள் வாங்கினாள் யாத்ரா.. பட்டென்ற அவனின் அழுத்தமான ஒற்றை இதழ் ஒற்றலில் மயங்கி போனாள் அவள்
துருவன் அவள் கன்னத்தில் இதழ் பட்டதும் பதறிக் கொண்டு எழ போக மீண்டும் பிடித்து இழுத்தாள் அவள்..
"மேம் மேம் ப்ளீஸ் விடுங்க.." என்று கெஞ்சி கொண்டே அவன் சட்டையில் இருந்து அவள் கையை எடுத்து விட முயன்றான் ..
"எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. டோன்ட் கால் மீ மேம்.." என்றவள் அவனை கீழே தள்ளி முத்தமிட போக.. "மேம் மேம்.." என்று துருவன் தடுக்க.. அவனின் மேம் என்ற வார்த்தைகளில் முறைத்து வைத்தாள்..
அதை புரிந்துக் கொண்டவன்.. "ப்ளீஸ்.. நேத்ரா மேடம் தேடுவாங்க.." என்று விலகி செல்ல எழுந்தான் ..
"அவள் தூங்க போய்ட்டா.. நீ ஒன்னும் பதறாத.." என்று மீண்டும் அவனை இழுத்தவள்.. அவன் நெஞ்சுடன் நெஞ்சம் மோத அவன் மீது படர்ந்து இதழில் முத்தமிட தொடங்கினாள் .. முதலில் இணங்க மறுத்தவன்.. பின் அவளின் முத்தத்திற்கு மயங்கி இடுப்பில் கை போட்டு இறுக்கி அவனும் முத்தமிட்டான்..யாரும் இல்லாத இடத்தில் முத்த கவிதை அரங்கேறி கொண்டிருந்தது..
அணைப்பான்