ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கட்டியணைக்க வா காவலனே 2 (கதை திரி )

Status
Not open for further replies.

kala Elumalai

New member
Wonderland writer
1000091170.jpg
Evergreen அப்பார்ட்மெண்ட் என்ற பலகையை தாங்கி இருந்து அந்த செல்வ செழிப்பான அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்பதாம் தளத்தில் உள்ள தனது பிளாட்டில் தனக்கென தனியாக அமைத்துக் கொண்ட ஜிம்மில் வேர்த்து விறு விறுக்க நரம்புகள் புடைக்க வெறித்தனமாக உடற்பயிற்சி செய்துகொண்டு இருந்தான் விஜய்..

கண்மூடித்தனமாக மூச்சு வாங்க வாங்க உடற்பயிற்சி செய்து முடித்தவன் அங்கிருந்த பஞ்சிங் பேக்கை குத்தி கொண்டிருந்தான்.. அத்தனை கோபம் அவனிடத்தில் அதற்கு காரணம் கமிஷனர் பரதன்.. யோசித்து சொல்கிறேன் என அவர் சொல்லி இன்றுடன் ஒரு வாரம் முடிந்திருக்க.. அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை..

பொதுவெளியில் விஜயை கண்டாலே அமைதியாக அந்த இடத்தில் இருந்து நழுவினார்.. அவனும் அவரை பார்த்து பேச முயற்சிக்க அவரோ அதற்கெல்லாம் வழியே கொடுக்காமல் அவனை புறக்கணித்தார்.. இப்படி அவர் செய்வார் என எதிர்பார்க்காத விஜய்க்கு அவர்மேல் கோபம் கோபமாக வந்தது.. அந்த கோபத்தை தான் இப்போ உடற்பயிற்சியில் காட்டிக் கொண்டிருக்கிறான்..

புஜங்களில் தசைகள் இறுக, நெற்றியில் வேர்வை துளிர்க்க, அவன் எகிறி எகிறி குதிப்பதில் தலைமுடி கலைந்து கிடைக்க.. வெறியேறி போய் கண்கள் சிவக்க இருந்தான் விஜய்..

உடற்பயிற்சி முடித்து அறைக்குள் தண்ணீரை அருந்திய வண்ணம் வந்தவனை பார்த்து.. " ஏன்டா இவ்வளவு கோபம்.. " என்று கிருஷ்ணா கேட்க..

"கோபம் வராம என்ன பண்ணும்.. பதில் சொல்றேன்னு சொன்னாரே இப்போ வரைக்கும் ஏதாவது சொன்னாரா அவரு.." அவன் தோளில் இருந்த துண்டை கோபமாக தூக்கி வீசினான்..

"அவருக்கும் நிறைய ஃபார்மாலிட்டிஸ் இருக்கு இல்ல.. அதெல்லாம் அவர் ஃபாலோ பண்ண வேணாமா.. எடுத்தோமா.. கவுத்தோமான்னு அவரால முடிவு எடுக்க முடியாதுடா.. அதை நீ புரிஞ்சிக்கோ.." பரதனின் நிலையை குறித்து கிருஷ்ணா விளக்க..

ஹும்ம் என தலை ஆட்டிய விஜய்.. " எனக்கென்னவோ அவரும் இந்த கேஸ்ல லாபம் பாக்க நினைக்குறாருனு தான் தோணுது.. " அவர் விலை போய் விட்டாரோ என்ற எண்ணத்தில் விஜய் சொல்ல..

"டேய்.. அப்படியெல்லாம் இருக்காதுடா.." என்றான் கிருஷ்ணா.

"அப்போ எல்லா case மாதிரி இந்த கேஸ்க்கும் உடனே அவர் ஆர்டர் இஸ்சு பண்ணிருக்கலாமில்ல இன்னும் ஏன் பண்ணாம இருக்காரு.. அப்போ அவருக்கு பின்னாடி யாரோ இருக்காங்கனு தானே அர்த்தம்.." விஜய் தன் மனதில் உறுத்திக் கொண்டிருப்பதை சொல்ல..

"எனக்கு என்ன சொல்றதுனு தெரியலடா.." என்றான் கிருஷ்ணா..

"நீ ஒன்னும் சொல்ல வேணாம்.. இன்னைக்கு அவரை நேராவே பார்த்து பேசிடலானு இருக்கேன்.. எப்படி என்கிட்ட இருந்து தப்பிக்கிறாருனு நானும் பார்க்கிறேன்.." என வேக வேகமாக குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டான்..

அடுத்த அரைமணி நேரத்தில் தயாராகி கமிஷனர் அலுவலகத்தில் நின்றிருந்தான் அவன்..

அவரின் அனுமதி கூட வாங்காமல் அவன் உள்ளே நுழைய அவனை அதிர்ந்து பார்த்தார் அவர்..

"விஜய் என்னதிது பெர்மிஸ்ஸின் கூட கேட்காம உள்ள வர பழக்கம்.." என்று அவர் கேட்க..

"நீங்க பெர்மிஸ்ஸின் குடுத்தா நான் ஏன் சார் கேட்காம வர போறேன்.. நீங்கதான் என்னை பார்த்தாலே வேலையா இருக்கேன் அப்புறம் பேசலானு உங்க அசிஸ்டன்ட்கிட்ட சொல்லி அனுப்புறீங்களே.." என்றான் கோபத்தை அடக்கி கொண்டு அமைதியாக..

பெருமூச்சு ஒன்றை இழுத்து வெளியிட்டவாரு அவன் சொன்னது உண்மை தான் என தனக்குள்ளே எண்ணிக் கொண்டவர்.. " விஜய் இது சரி வருனு எனக்கு தோணுல.. " என்று சொல்ல..

" எதை சொல்றீங்க சார்.. இந்த case பத்தியா என்று கேட்க.. அவரும் ஆம் என்று தலை அசைத்தார்..

"சார் சரி வருதோ இல்லையோ இதை கண்டுபிடிக்க வேண்டியது நம்மளோட கடமை சார்.."

"எனக்கும் அது தெரியும் விஜய்.. ஆனா இதுல பெரிய ரிஸ்க் இருக்கே.." என்றான்..

"சார் என்ன ரிஸ்க் வந்தாலும் நான் பார்த்துகிறேன்.. என்னை நம்புங்க.. நான் இறங்கி வேலை பாக்கிறேன்.. அத்தனை பேரையும் கூண்டோட தூக்கிறேன்.." என்று கம்பீரமாக நிமிர்ந்து நின்று சொல்ல..

"அது முடியுமா.." என அவர் ஆச்சரியமாக கேட்டார் அவனை பார்த்து.. அவனின் தைரியம் அவருக்கு வியப்பாக இருந்தது..

"கண்டிப்பாக முடியும் சார்.. நான் முழுசா பிளான் போட்டு எல்லாத்தையும் ரெடி பண்ணி வச்சிருக்கேன்.. நீங்க பெர்மிஸ்ஸின் மட்டும் குடுத்தா போதும்.. மத்ததெல்லாம் நான் பாத்துக்குறேன் சார்.." என்றான் நிமிர்வாக..

"ஆனா எப்படி.." பரதனுக்கு சந்தேகம் எழ..

"அதான் நான் பார்த்துகிறேன்னு சொல்றேன் இல்ல சார்.. நீங்க கவலையை விடுங்க.." என்றவன்.. "இந்த விஷயம் வெளிய தெரியாம மட்டும் பார்த்துகோங்க.." என்று கூற.. அவரும் சரியென தலை அசைத்து அவனின் பிளானிற்கு பச்சை கொடி காட்டினார்..

"பாத்து பத்திரம் விஜய்.." என எச்சரிக்கை கொடுத்து அனுப்பினார் அவர்..

"எப்படியோ.. பேசி பேசியே அவர்கிட்ட பெர்மிஸ்ஸின் வாங்கிட்ட..இந்த கேஸ்ல வெற்றி பெற வாழ்த்துக்கள் மச்சான் ." என சந்தோசமான புன்னகையுடன் கிருஷ்ணா சொல்ல..

"தேங்க்ஸ்டா.."என்றவன்.." கண்ணும் முன்னாடி இப்படி ஒரு அநியாயம் நடக்கும் போது பார்த்துட்டு சும்மா இருக்க சொல்றியா.." என கேட்டவாரு இருவரும் ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்..

"அந்த வீட்டுக்கு எப்போ போற.. எப்படி போற.." என்று கேட்க..

"அதுக்கெல்லாம் ஆள் ரெடி பண்ணி வச்சி இருக்கேன்டா.. ஈஸியா உள்ள போயிருவேன்.." என்று விஜய் சொல்ல..

விழிகளை விரித்த கிருஷ்ணா.. "இது எப்போ.." என்று கேட்க..

"அதெல்லாம் அந்த ஒரு வாரத்திலேயே பண்ணி முடிச்சிட்டேன்.." என்றான் கர்வமாக..

"சூப்பர்டா.." என்றவன்.. " மச்சான் பார்த்து பத்திரம்டா.." என்றான் நண்பனை எண்ணி கவலையாக..

"அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. அந்த ஆள் மகேஷ் இருந்தலாவது நீ பயப்படுறத்தில் ஒரு நியாயம் இருக்கு.. ஆனா அங்க இருக்குறது அந்த ஆளோட இரண்டு பொண்ணுங்களும்.. அவனோட தங்கச்சி குடும்பமும் மட்டும் தான்.. அவங்களுக்கு எல்லாம் போய் பயந்துகிட்டா.. நம்மளால அடுத்த ஸ்டெப்க்கு போகவே முடியாது.." என்று விஜய் கூற..

அதுவும் சரிதான் என எண்ணிய கிருஷ்ணா.. "எப்போ கிளம்புற.." என்று கேட்க..

"விடிஞ்சதும்.." என்றான் கண் சிமிட்டி புன்னகையுடன்..

அடுத்த நாள் காலை பொழுது அழகாக விடிய.. விஜயோ விடிந்தும் விடியாததுமாக NY இல்லத்தின் கேட்டின் முன் நின்றிருந்தான்.. கேட்டே கிட்டத்தட்ட பத்து, பனிரெண்டடி உயரம் இருந்தது..

சாதாரண பேண்ட் சட்டையில், நெற்றியில் விபூதி, கையில் துணி பையுடன் நின்றிருந்தான் அவன்.. இங்கிருந்து எட்டி உள்ளே பார்க்க முயல ஒன்றும் தெரியவில்லை அவனுக்கு..

"யாருப்பா நீ.. என்ன வேணும் உனக்கு.." என கேட்டுக் கொண்டே அந்த அரண்மனையின் வாட்ச்மேன் வர.. அவரை பார்த்து புன்னகைத்தவன்.. "நான் மணி மாமாவை பார்க்க வந்தேன்.. அவருதான் என்னை வர சொல்லிருந்தாரு.." என அந்த வீட்டில் சமையல் வேலையும் செய்யும் மணியை பற்றி கூற..

"ஒ.. அவன் சொன்ன அவனோட அக்கா பையன் நீதானா.. வா.. வா.." என கேட்டின் அருகில் இருந்த தன்னுடைய சிறிய இடத்திற்கு அழைத்து சென்றவர் அங்கிருந்து மணிக்கு அழைப்பு விடுத்து விஷயத்தை சொன்னார்..

"ஆமா பாக்க நல்லா ஜிம் பாடியா இருக்கியே.. நீ எப்படி சமையல் வேலைக்கு.." என்று அவர் கேட்க..

"அது.. " என தலையை சொறிந்தவன்.. "சமையல் மேல ஒரே ஆர்வம் அண்ணா.. அதான் சமைச்சி பழகிட்டேன்.." என்று சொன்னான்.

"நல்லா சமைப்பியா.." என்று கேட்க..

"அதெல்லாம் நல்லாவே செய்வேன் அண்ணா.. எங்க ஊரில் கோவில் திருவிழாவில் எல்லாம் சமைச்சிருக்கேன்.. நிறைய கல்யாண வீட்டில் கூட சமைச்சிருக்கேன்.." தன்னை பற்றி
பெருமையாக கூறிக் கொள்ள

"ஓ.. அப்படியா.." என்றவர்.. "நீ என்னதான் நல்லா சமைச்சாலும் உள்ள இருக்குற இரண்டு மூணு கேஸ்சுங்க தட்டை தூக்கி அடிச்சிட்டு தான் போவோம்.. அந்த அளவுக்கு திமிரு பிடிச்சதுங்க.." அவர் சலித்துக் கொண்டே சொல்ல..

யாரை சொல்கிறார் இவர் என யோசித்த விஜய்.. "அண்ணா நீங்க யாரைபத்தி சொல்றிங்கனு தெரியலையே.." என்று கேட்க ..

"இப்போதானே வந்துருக்க.. போக போக தெரிஞ்சிக்குவா.." என்று சொல்ல..

அதே சமயம் மணி வீட்டிற்குள் இருந்தே வண்டியில் வந்து நின்றார்..

அவன் மணியையும் வண்டியையும் மாறி மாறி பார்க்க.. "வாடா வந்து ஏறு.. இங்க நடந்து உள்ள போக எப்படி கால் மணி நேரமாவுது ஆகும்.. அதுக்குத்தான் வண்டி.. வா போலாம்.." என அழைக்க.. அவனும் சரிதான் என்பது போல் ஏறி அமர்ந்தான்..

"வரேண்டா முத்து.." என மணி வாட்ச்மேனிடம் சொல்ல.. அவரும்.. "ம்ம்.. தம்பிக்கு இடத்தை பத்தி கொஞ்சம் சொல்லு.." என்றார் கை அசைத்த வண்ணம்..

வண்டி நடைப்பாதையில் ஓட.. விஜய் சுற்றியும் வேடிக்கை பார்த்தான்.. கிட்டத்தட்ட பல ஏக்கரில் தோட்டம் அமைக்கபட்டு அதன் நடுவில் நடைபாதை போடப்பட்டிருந்தது .. தோட்டத்தில் பழ வகைகள், காய் வகைகள், பூ வகைகள், ஊஞ்சல்கள், உட்கார்ந்து இளைப்பாற பந்தல்கள், அழகான விளக்கு கம்பங்கள், நீச்சல் குளம், ஜிம், விளையாடும் இடம், பார்க்கிங் ஏரியா என அதற்க்தற்கு ஏற்றார் போல் இடங்கள் ஒதுக்கி வடிவமைத்திருந்தனர் அந்த இடத்தை.. அதற்கான வேலையாட்களும் ஆங்காங்கே நின்று அதனை பராமரித்துக் கொண்டிருந்தனர்..இவற்றையெல்லாம் கடந்து அந்த வீட்டை நெருங்கும் பொழுது அது வீடா இல்லை அரண்மனையாய் என்று தோன்றியது விஜய்க்கு.. அத்தனை அழகாய் கண்ணாடிகளாய் ஜொலித்துக் கொண்டிருந்தது.. பார்க்கும் இடமெல்லாம் செல்வ செழிப்பு கூத்தாடியது.. பட்டப் பகலிலேயே கண்களைப் பறிக்கும் அளவிற்கு அழகழகான விளக்குகள் மின்னிக் கொண்டிருந்தன.. அந்த அரண்மனையில் இருந்து சிறிது தொலைவில் அங்கு வேலை பார்ப்பவர்களுக்கான வீடுகளும் அமைக்கப்பட்டிருந்தது.. அவர்களுக்கென பயன்படுத்த வாகனங்களும் வழங்கப்பட்டிருந்தது.. இதையெல்லாம் பார்க்க பார்க்க போதைப் பொருளை விற்றே இவர்கள் பணக்காரர்களாக மாறியிருப்பார்களோ என்ற எண்ணம் விஜய்க்கு தோன்றாமல் இல்லை..

" டான்னு சொன்னதுக்கு மன்னிச்சிடுங்க தம்பி.. " என்ற மணியின் குரல் அவன் கவனத்தை திசை திருப்ப..

சிரித்தவன்.. "அது பரவால்ல விடுங்கண்ணே.. "என்றான்..

" இல்ல தம்பி அவன் நம்பணுமே என்பதற்காக தான் டா சொல்லிட்டேன்.." என்றவர்.. "அப்புறம் நான் உங்களுக்கு அண்ணன் இல்ல மாமா " அவர் விளக்கம் அளிக்க..

"அட இதுல என்ன இருக்கு மாமா விடுங்க.." என அவரின் தோள்களை பிடித்து ஆட்டினான் அவன்..

" தம்பி இங்க உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராம நான் பாத்துக்குறேன்.. நீங்களும் கொஞ்சம் பாத்து பத்திரமா இருங்க தம்பி.. " என அவர் பாசமாக சொல்ல

"அதெல்லாம் நான் பார்த்துகிறேன் மாமா.. முதலில் நீங்க என்னை தம்பின்னு கூப்பிடுறதை நிறுத்துங்க.." என்று சொல்லிக் கொண்டே வண்டியில் இருந்து இறங்க..

"சரிங்க தம்பி.." என்றார் அவர்..

அவன் முறைத்து வைக்க.. "சரிடா மருமகனே.." என்று அவர் சிரித்துக் கொண்டே சொல்ல.. "ஆ.. இது சரியா இருக்கு.." என்றவன் சிரித்தவாரே அவருடன் அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தான் விஜய்..

அணைப்பான் 🧡

கருத்துக்களை கமெண்டில் சொல்லவும் நன்றி 🙏
 
Status
Not open for further replies.
Top