ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஒரு வானிலே இரு வெண்ணிலா

Status
Not open for further replies.

suriakala saravanan

Member
Wonderland writer
அத்தியாயம் 1

"பச்சை பசேல் என்று கண்ணெட்டும் தூரம் வரை இருந்த வயல்காட்டில் நடுவே.. வரப்பில் கரும்பை கடித்து கொண்டு இங்கேயும் அங்கேயேயும் கண்ணை இராட்டினம் போல சுத்தி சுத்தி பார்த்துக்கொண்டே.. தனது நீளமான கூந்தலை ரெண்டை சடை பிண்ணி போட்டு தோளின் இருபுறமும் ஆட நடந்து வந்தாள் நிலா.



ஒயிலாக நடந்துவரும் தனது பேத்தியை பார்த்த பொன்னியம்மா “ஏ புள்ள நிலா நல்ல நேரம் முடியறதுக்குள்ள நடவு நடோனுமாத்தா விரசா வா” என நிலாவிடம் சொன்னார்.



நிலா பாவாடையை ஒரு கையில் பிடித்து கொண்டு தாவணியின் முனையை இடுப்பில் சொருகி “சொல்லுங்கம்மச்சி என்ன பண்ணோனும்” என பொனியம்மாவிடம் கேட்டாள்.



பொன்னியம்மா நிலாவின் கையில் நாத்த எடுத்து சனி மூலையிலிருந்து நட ஆரம்பிக்கோணும் கண்ணு என்றும், அதுக்கு முன்ன நம்ம ஊரு விநாயகரு, முருகரு, மாரியம்மா, எல்லையம்மா, ஐய்யனாரு எல்லா சாமியையும் கும்பிட்டு ஆரம்பிக்கோணும் தாயி என நிலாவின் கையில் கொடுக்க.. நிலா தன் அம்மச்சியின் முகத்தை பார்த்து தன் முத்து பற்கள் மின்ன சிரித்துக் கையிலிருந்த நாத்தை எடுத்து கிழக்கு நோக்கி கை கூப்பி



சந்திரரே சூரியரே
சாமி பகவானே

சந்திரரே நான் நினைச்சி
சாய்ச்சேன் திருஅலவு

சாய்ச்ச திரு அலவு
சமச்சி பறி ஏறனும்

எடுத்த திரு அலவு
எழுந்து பறி ஏறனும்




என்ற கடவுளை கும்பிட்டு நாத்தை நட ஆரம்பித்தாள்.. நிலா நாத்து நடட்டும் என்று காத்திருந்த வேலையாட்கள் அனைவரும் நாத்து நட ஆரம்பித்தனர்.


பொன்னியம்மா நிலாவுக்கு கைகளை கழுவ தண்ணீரை ஊற்ற.. அவள் கைகளை கழுவி விட்டு அம்மச்சி “எனக்கு நாத்து நட்டத்துக்கு காசு கொடுங்க” என்று தன் இடுப்பில் சொருகியிருந்த தாவணியை எடுத்துவிட்டு கையை நீட்டி கேட்டாள்..

பொன்னியம்மா நிலாவின் கதுப்பு கன்னத்தை பற்றி “ராசாத்தி காசெல்லாம் உன் மாமன் மகிழன் கிட்ட கேட்டு வாங்கிக்கத்தா” என்று சொன்னார்.


என்னது?.. என்ன சொன்னீங்க.. காசு.. தரமாட்டீங்களா..? என்று முகம் சிவக்க.. நேத்து பொழுதோட நீங்க அம்மாகிட்ட காலையில நாத்து நடோனும் நிலாவா வெள்ளனே எழுந்த வர சொல்லுனு சொன்னீங்களாம்..


நான் என் வேலையெல்லாம் விட்டு வயலுக்கு வந்தா.. காசை தராம மாமா கிட்ட வாங்கச் சொல்லுறீங்க இது ஞாயமா அம்மச்சி என்று கையை நீட்டி பேசிக்கொண்டே.. பொன்னியம்மாள் இடுப்பில் சொருகியிருந்த சுறுக்கு பையை எடுத்த அதிலிருந்த ஐநூறு ரூபாய் தாளை எடுத்துட்டு மீண்டும் அவர் இடுப்பில் சொருகி விட்டாள்..



நாளை பின்ன நான்தான் இந்த வயலுக்கு சொந்தகாரி ஆக போறேன்.. நான் கேட்டா ஏதும் இல்லைனு சொல்லுவீங்க.. உங்கள இந்த வயகாட்டுப்பக்கம் கூட விடமாட்டேன் பார்த்துக்கோங்க என்று பொன்னியம்மாவை போலியாக மிரட்டி பேசி விட்டு புள்ளி மானை போல வயலை விட்டு வீட்டுக்கு ஓடினாள்..





பொன்னியம்மா வயல் வேலை செய்யும் ஆட்களிடம் வேலை பகர்ந்து கொடுத்துவிட்டுக்கு சென்றார்.



தஞ்சாவூர் மாவட்டம் எட்டக்குடி கிராமம் (கற்பனை ஊர்)
கணபதி - பொன்னியம்மாவுக்கு ஒரு பையன் இரு பெண்கள்.. கணபதி இரண்டு வருடங்களுக்கு முன்பு காலாமானார்.. பொன்னியம்மா கணவர் இறந்ததும் தன் மகன் சக்ரவர்த்தி வீட்டில் தஞ்சமடைந்தார்.



முதல் பெண் –ஜானகி–வரதன்
இரண்டாவது பையன் – சக்ரவர்த்தி – சாந்தி
மூன்றாவது மகள் –வாணி – சுந்தர்



ஜானகி வரதன் சென்னையில் ரியல் எஸ்டேட் பிசினஸ், கெமிக்கல் பேக்டரி.. ஸ்டீல் பேக்டரி என்று சென்னையில் பிரபல தொழிலதிபராக இருக்கிறார்.. வரதன் பிஸ்னஸில் கெட்டிக்காரர்.. அதே சமயம் முன் கோபம் கொண்டவர்.. ஜானகி பெயருக்கேற்ப சாந்த குணமுடையவர்.. ஜானகி தந்தை இறந்த போது தாய் வீட்டுக்கு போனது அதன் பிறகு இன்னும் அவரை அனுப்பவில்லை வரதன். அதற்காக பெண்டாட்டியை கொடுமைபடுத்துபவர் அல்ல.. மனைவி இல்லையென்றால் தன் குடும்பம் இயங்காது என்று அவரை எங்கும் அனுப்ப மாட்டார்.

வரதனுக்கு மூத்தவன் சுகன் மருமகள் சுகந்தி இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் துருவ். சுகன் அவர்களின் கெமிக்கல் பேக்டரியை நிர்வாகம் பார்க்கிறான்.



இளையவள் பொன் நிலா எம்.பி.ஏ முதல் வருடம் படித்துக்கொண்டிருக்கிறாள்.. படித்து கொண்டிருந்தாலும் பொன்நிலா ஒரு கம்பெனியை நிர்வாகம் பார்க்கிற அளவுக்கு ஆளுமைதிறன் வாய்ந்தவளும், கூடவே திமிரும், தான் பணக்காரி என்ற கர்வமும் கொண்டவள்.. அவள் மரியாதை கொடுப்பது தன் தாயிடம் மட்டும் தான்.. தந்தைக்கு செல்ல பெண்.. அவள் என்ன செய்தாலும் தலைஆட்டுவார் வரதன்.. அவளை யாரும் கேள்வி கேட்க விட மாட்டார்.



சக்ரவர்த்தி – சாந்தி


இவர்களின் தவப்புதல்வன் மகிழன் நம்ம ஹீரோ 28 வயது ஆணழகன்.. படித்தது மெக்கானிக்கல் இன்ஜினியரிங்.. ஆனால் பிடித்தது விவசாயம்.. இப்போது தந்தைக்கு உதவியாக விவசாயம் பார்க்கிறான்.. விவசாயத்தில் புதிய உத்தி முறைகளை கண்டுபிடித்து அதில் சாதனை படைத்து வரும் கிராமத்து காளை.. அவன் தனது ராயல்என்பீல்டில் ஓட்டி வரும் அழகே தனி.. கிராமத்து பெண்களின் நாயகன் மகிழன்.


இளையமகள் சுகந்தி சொந்தம் விட்டு போக கூடாது என்று தன் அண்ணன் மகன் சுகனுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்.



வாணி சுந்தர்



இவர்களின் தவப்புதல்வி தேனிலா.. பெயருக்கேற்ப எப்போதும் தேனியாக வலம் வருபவள்.. தன் மாமன் மகிழனின் மனதை கொள்ளையடித்தவள்.. சுந்தர் தேனிலா மூன்று வயது குழந்தையாக இருக்கும் போது வயற்காட்டில் விஷ நாகம் தீண்டி இறந்துவிட்டார்.


சக்ரவர்த்தி வாணியின் கணவன் இறந்தபிறகு அவளை தனியாக இருக்க வேண்டாம் என்று தன்னுடனே அழைத்து வந்துவிட்டார்..

வாணி தேனிலா வளர்ந்த பிறகு தன் அண்ணனிடம் எங்களுக்கு ஒரு வீடு தனியாக கட்டிகொடுத்துவிடுங்கள் என்று கேட்டவுடன் அவரும் தன் வீட்டின் அருகிலேயே ஒரு மச்சுவீட்டை கட்டிக்கொடுத்துவிட்டார்.


தேனிலா பி.ஏ. இங்கிலீஷ் இறுதியாண்டு படித்து கொண்டிருக்கிறாள். தேனிலாவை நாம நிலாவென்று அழைப்போம்.


நிலா தன் மாமன் சக்ரவர்த்தி வீட்டுக்குள் “அத்த.. அத்த” என்ற அழைத்துக்கொண்டே உள்ளே வந்தாள்..



சாந்தி சமயலறையில் மதிய உணவை தன் வீட்டில் வேலை செய்யும் கோமதியின் உதவியுடன் சமையலை செய்துகொண்டிருந்தார்.



கோமதி சாந்தியிடம் “பெரியம்மா, நிலாம்மா வந்துட்டாக இனி சமையல் கட்டை ஒரு வழி பண்ண போறாங்க” என்று புலம்ப.. சாந்தி காயை நறுக்கிகொண்டே.. “எப்ப இருந்தாலும் இந்த வீட்டு சமையல் கட்டை ஆள போறவ அவதான் அதனால அவ இஷ்டத்துக்கு விடறேன்” என்றார்.


அவர் பேசிமுடிப்பதற்குள் அத்த என சாந்தியின் பின்னால் அவரை கட்டியணைத்தாள் நிலா.. கோமதி அவர்களிருவரையும் பார்த்துகொண்டே நிற்க.. அதை பார்த்த நிலா “என்ன கோமதியக்கா எங்க ரெண்டு பேரையும் அப்படி பார்க்குறீங்க.. கண்ணு வைக்காதீங்க” என்று பேசினாள்.

கோமதி நிலாவிடம் நான் ஏன் நிலாம்மா உங்களை கண்ணு வைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே அடுப்பில் வெந்துகொண்டிருக்கும் சிக்கன் குழம்பை கிளறிவிட்டார்.

நிலா கோமதியக்கா என்ன குழம்பு வைக்கிறீங்க.. இன்னிக்கு மாமா காளை அடக்குற போட்டிக்கு போறாக.. எப்படியும் மாமா காளைய அடக்கி ஜெயிச்சுட்டுதா வருவாக.. அதனால மாமாக்கு நான் என் கையாள மட்டன் வறுவல் சமைக்கோணும்.. நீங்க இந்த பக்கம் வாங்க என்று கூறி மட்டன் வறுவல் செய்ய தேவையான மசாலை தயாரிக்க ஆரம்பித்தாள்.


சாந்திக்கு எப்படிதான் என் மகன் இந்த வாயாடிய சமாளிக்க போறானோ தெரியல என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டார்.. நிலா மாசாலை அரைத்துக்கொண்டே சாந்தியை பார்த்து “அத்த நீங்க என்ன மனசுக்குள்ள நினைக்கிறீங்கனு நான் சொல்லட்டுமா… உங்க பையன் இந்த வாயாடிய எப்படி சமாளிப்பேன்னு தானே நினைச்சீங்க” என்று சொன்னாள்.


சாந்தி நிலாவிடம் ஆமாடி ராஜாத்தி நா அப்டிதா நெனச்சேன்.. என மனசுல உள்ளத எப்படியம்மா கண்டுபிடிச்ச என்று நிலாவின் கன்னத்தை பற்றி நெட்டி முறித்தார்..


நிலா “அத்த நான் சமையல முடிச்சுட்டேன் நான் காளை அடக்குறத பார்க்க போறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.. கோமதி சாந்தியிடம் “மழை பெய்து ஓஞ்ச மாறி இருக்குங்கம்மா” என்று கூறினார்.


நிலா வீட்டு வாசலுக்கு வரும் போது சக்ரவர்த்தியை பார்த்தாள்.. அவர் “அம்மாடி ராஜாத்தி என் மகனுக்கு குழம்பெல்லாம் வச்சாச்சா" என்று அவள் தலையை வருட.. நிலா “ஏனுங்க மாமா நான் செஞ்ச மட்டன் வறுவல் உங்களுக்கும் வேணுமா.. நான் மாமனுக்கு மட்டும் தான் செஞ்சு வச்சேன்.. போனா போகுது கொஞ்சுண்டு மட்டும் அத்தய போட சொல்லி சாப்பிடுங்க” என்று கிளம்ப.. சக்ரவர்த்தி.. “தேனு மா” என்று அழைக்க.. நிலா திரும்பி “மாமா நீங்க மட்டும் தான் தேனுனு கூப்புடுறீங்க” என்று சிணுங்க.. அவர் எனக்கு அப்படி கூப்பிடதா புடிக்குதா ராசாத்தி என்றார்..

நிலா “சொல்லுங்க மாமா” என்று கேட்டாள்.. சக்ரவர்த்தி பணப்பையை கொடுத்து அம்மாவிடம் கொடுத்துவிட்டு காளை அடக்கும் இடத்துக்கு போ தேனு என்று சொன்னார்.



நிலா “மாமா நா எங்க வீட்டுக்கு போனா அம்மா என்னை காளை அடக்குற இடத்துக்கு அனுப்பாது” என்று சக்ரவர்த்தியிடம் வாதாடிக்கொண்டிருக்க.. அதே நேரம் வாணி தன் அண்ணனின் வீட்டுக்கு வந்தார்.


தன் அண்ணனிடம் வாயாடிக்கொண்டிருக்கும் தன் மகளின் காதை பிடித்து “ஏண்டி எவ்ளோ கொழுப்பிருந்தா எங்கண்ணன்கிட்டயே எதிர்த்து பேசிட்டு இருப்ப” என்று அவள் காதை திருக.. சக்ரவர்த்தி வாணியை அதட்டினார்.. தேனுவ விடுமா அவ நம்ம மகிழன் காளைய அடக்குறத பார்க்கோணும்னு ஆசைபடுது. அனுப்பி வைக்கலாம் என்று கூறினார்.

நிலா மாமா மாமாதான் அவரை கண்டியணைத்து விட்டு என்று தன் அன்னையிடம் வாயை கோணித்து காட்டிவிட்டு போட்டி நடக்கும் இடத்திற்குச் சென்றாள்.


வாணி சக்ரவர்த்தியிடம் “அண்ணா நீங்க அவளுக்கு ரொம்ப செல்லம் கொடுக்கிறீங்க அதுதான் அவ உங்க தல மேல ஏறிக்குறா.. சொன்ன பேச்ச கேட்க மாட்டேன்கிறா” என்றார்.

சக்ரவர்த்தி வாணியிடம் “அம்மாடி அவ சின்ன பொண்ணு தான” என்றார்.. வாணி “அண்ணா நானே உங்ககிட்ட பேசணும்னுதான் இருந்தேன்.. இந்த வருசம் அவ படிப்ப முடிக்குறா நாம பேசி வச்ச மாறி மகிழுக்கும் நிலாவுக்கு வர தை மாசம் கல்யாணத்த நடத்திபுடலாமுங்கண்ணா” என்று சொன்னார்.. அவரும் அதுக்கென்னம்மா “சோக்கா நடத்திபுடலாம்” என சிரித்துக்கொண்டே பேசினார்.



இருவரும் வீட்டின் உள்ளே நுழைய சாந்தி வாணியை பார்த்து “வா வாணி” என்று கூறிவிட்டு கணவருக்கும் வாணிக்கும் காபியை போட்டுக் கொடுத்தார்..



வாணி “என்ன மதினி உங்க மருமக சமையல்கட்ட ஒரு வழி பண்ணியிருப்பாளே” என்று வாணி கூற சாந்தி “என் மருமவ காரசாரமா மட்டன் வறுவல் செய்துருக்கா நீ வேணும்னா சாப்ட்டு பாரேன்” என்று அவளை சாப்பிட அழைத்தார்.



வாணி போதும்.. போதும்.. “உங்க மருமக சமையல நீங்கதான் மெச்சிக்கணும்” என்று சொல்லி விட்டு சக்ரவர்த்தியிடம் நெல்லுவித்த பணத்தை வாங்கிச் கொண்டு கிளம்பினார்.



காளை அடக்கும் போட்டி நடத்தும் இடம் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது.. அங்கே காளைகள் நிறுத்தப்பட்டிருந்தது.. . அந்த ஊர் மக்கள் கோவில் திருவிழா நடக்கும் முன் காளையை அடக்கும் போட்டி வைத்துவிடுவார்கள்.

அந்த ஊர் பண்ணையார் ராஜாங்கம் தன் காளையை அடக்க யாராலும் அடக்க முடியாது என்று பெருமை பேசிக்கொண்டு மேடையில் அமர்ந்திருந்தார்.. அந்த ஊர் பெரியவர் உங்க காளையை அடக்க எங்க ஊருலயும் வலசு பசங்க இருக்காங்க என்று அவருக்கு பதிலடி கொடுத்தார். ராஜதுரை பார்க்கலாம் யாரு என் காளைய அடக்குறாங்க என்று மீசையை முறுக்கிகொண்டார்.


ஒவ்வொருவராக ராஜதுரையின் காளையை அடக்க அது அனைவரையும் முட்டித் தள்ளியது



ராஜதுரை பக்கத்திலிருந்த பெரியவரை ஏளனமாக பார்த்து என்னமோ சொன்னீங்க.. என் காளைய இந்த ஊரு வலசு பயலுவ அடக்கிறிருவாங்கன்னு என்று பெருமை பீத்தினீங்க இப்ப எல்லா பயலுவங்களும் என் மாட்டுக்கு கிட்ட குத்து வாங்குரானுங்க என்று கேலி சிரிப்பு சிரித்தார்.



அங்கு மைக்கில் பேசிக்கொண்டு நபரிடம் மைக்கை வாங்கி காளைய அடக்குரவங்களுக்கு பத்து பவுனு இலவசம்னு கூறினார்.


ராஜதுரையின் மகன் என்னப்பா நீங்க காளைய அடக்குரவங்களுக்கு பத்து பவுனு இலவசம்னு சாதாரணமா சொல்லிட்டீங்க என்று முகம் சுளித்தான்.


ராஜதுரை யாரு நீ இந்த ஊருல நம்ம காளையை அடக்க எவனுக்கு துப்பிருக்க என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

மகிழன் பக்கத்து ஊரின் பஞ்சாயத்து ஒன்றிக்கு சென்றவன் வர தாமாதமானது.. அங்கு போட்டியில் ராஜதுரையின் காளையை யாரும் அடக்க முடியாது என்ற செய்தி அவன் காதுக்கு எட்டியது. தன் ராயல் என்பீலிட்டிலுடன் மைதானத்திற்குள் சீறிப் பாய்ந்தான்.



மகிழன் தன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு காளையின் பக்கத்தில் போக காளை முக்காரமிட்டது. மாடு விட்ட மூச்சில் தரைமண் பறந்தது.. மகிழன் டுர்ரீ எனக் குரல் கொடுத்துக்கொண்டே காலையின் வாலை தொட்டு ஒதுக்கினான்..


மகிழனின் மீது பாயக் காளை திரும்பியது.. மகிழன் காளைமீது நொடிபொழுது தாமதிக்காமல் பாய்ந்து அதன் திமிழில் இடக்கை போட்டு நெஞ்சோடு இறுக்கி அணைத்து உடலைக் காளையின் கழுத்தோடு ஒட்டி, வலக்கையால் காளையின் கொம்பை பற்றிகொண்டான்.. மகிழனின் எதிர்பாராத தாக்குதல் காளைக்கு பாதமாகிவிட்டது.. ஆனாலும் அதன் மிருக சுபாவத்துடன் சமாளித்து மகிழனை கீழே தள்ள பார்த்து, துள்ளி ஆள் உயரம் குதித்தது. ஆனால் மகிழின் பிடி இன்னும் இறுக்கினான்.

ஒரு கட்டத்தில் நீயா நாணா என்று பார்த்துவிடுவோம் என்று காளை இரண்டாவது முறையும் ஆள் உயரத்திற்கு எம்பி குதித்து அவனை கீழே தள்ள பார்த்தது.. மகிழன் தன் கால்களை தரையில் பதிக்க முயன்றான்.. காளை துள்ளியது.. காளை களைத்து போனதால் மூன்றாம் முறை அதனால் துள்ள முடியவில்லை..


மகிழன் காளையின் நெற்றி திட்டில கைபோட்டு, உருமால் பட்டையை இழுத்து மெடல், சங்கலி பட்டுத்துணியை வாயில் கவ்வியபடி, தரையில் கால் பதித்து அழுத்தி, தன் மார்பில் அழுத்தம் கொடுத்துக் காளையை எதிர்பக்கம் தள்ளிவிட்டு ஒதுக்கினான். கூட்டத்தில் பெரிசுகள் மகிழா உங்க அப்பன் சக்ரவர்த்தி பேரை காப்பாத்திட்டா! நீ புலிக்குப் பொறந்தவன்டா" என்று பாராட்டினர்..



மகிழன் மகிழ்ச்சியின் உச்சத்தில் கூட்டத்தில் நின்றிருந்த நிலாவை தேடினான். அங்கு நிலா அவனை பார்த்து கண்ணடித்து மாமா சூப்பர் என்று மீண்டும் ஒரு பறக்கும் முத்தத்தை கொடுத்தாள்.


கூட்டத்தில் விசில் சத்தமும் மகிழு மகிழு என்று சத்தமும் விண்ணைக் கிழித்தது.. ராஜாங்கத்துக்கு முகம் சிறுத்து போய்விட்டது.. ராஜாங்கம் சொன்னது போல பத்துபவுனு சங்கலியை மகிழின் கழுத்தில் போட்டு விட்டு மகிழின் தோளை தட்டி நல்லா உடம்ப உரமேத்தி வைச்சிருங்க தம்பி என்று அவன் தோளில் தட்டி விசமமாக சிரித்தார்.. மகிழன் என்ன ராஜாங்கம் ஐய்யா. என்னமோ சொன்னீராமே.. இந்த ஊரு வலசு பயலுவ என் காளைய அடக்க முடியாதுன்னு.. ஒரு உண்மைய தெரிஞ்சுக்கோங்க.. இந்த எட்டக்குடி ஊருல மகிழன் இருக்கற வர யாரும் எங்க ஊரு பயலுவல பத்தி தப்பா பேச விடமாட்டேன்.. என் ஊருக்காக என் உயிரையும் கொடுப்பேன்.. கொஞ்சம் பார்த்து பேசுங்கய்யா என்று ராஜாங்கத்திடம் நெஞ்சை நிமிர்த்தி விரைப்பாக பேசினான்.

இப்போது பெரியவர் ராஜாங்கத்திடம் என்னப்பா எங்க ஊருலயும் உன் காளைய அடக்க ஆளுங்க இருக்காங்க என்று அவர் மீசையை முறுக்கினார்.



ராஜாங்கம் ம்..ம்.. ஒத்துக்குறேன் பெரியவரே தன் காளையை அழைத்துக்கொண்டு பழிவெறியுடன் அவர் ஊரை நோக்கிச் சென்றார்.

மகிழன் தன் அத்தை பெத்த இரத்தினத்தை கூட்டத்தில் தேடினான்.. நிலா அவன் கண்ணுக்கு சிக்காமல் கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தாள். மகிழன் விடாக்கொட்டன் விடுவானா.. அவள் பின்னே பூனை போல சென்று நிலாவை பின்புறம் அணைத்தான்.
 

suriakala saravanan

Member
Wonderland writer
அத்தியாயம் 2

மகிழன் நிலாவை அணைக்க.. அது தன் மாமன் அறிந்து, “மாமா எதுக்கு மாட்டபிடிக்குற மாறியே என்னையும் கட்டிப்பிடிக்குற” என்று அவன்புறம் திரும்ப.. மகிழன் நிலாவை தன் அணைப்பிலேயே வைத்து கொண்டு நிலாவின் கதுப்பு கன்னத்தை பிடித்து.. “ஏய் நான் மெதுவா தாண்டி உன்ன கட்டிபிடிச்ச.. என்னவோ புதுசா கட்டிபிடிக்கற மாறி சிலுத்துக்குற” என அவள் காதோரோம் மீசை முடியை உரசி.. அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்..

நிலா அவன் மீசை உரசலில் உடல் சிலிர்த்து மா.. மாமா.. சும்மா இரு.. வேணாம்.. நீ இதுக்கு மேல என்ன பண்ணுவன்னு தெரியும் வி..விடு மாமா என்று வாய்குளறி பேசினாள்..

மகிழனும் “மாமூல கொடுத்துடுடி நான் உன்ன விடுறேன்” என்று நிலாவின் காதில் சொல்ல.. எ..என்னது மாமூல.. போ மாமா இதே பொலப்பா போச்சு.. அம்மச்சி வேற கல்யாணதுக்கு முன்ன எந்த தப்பும் பண்ண கூடாது சொல்லுசு” என்று அவன் பிடியிலிருந்து நழுவினாள்.. அவள் அவனை விட்டு நழுவியதும்.. மகிழன் கோபம் கொண்டு திரும்பி நின்றான்..

அச்சோ மாமா கோவிச்சுகிச்சு.. நிலா மகிழனின் முன்னாள் சென்று “மாமா” என்று ராகம் போட்டு அழைக்க அவன் வேறு எங்கோ பார்ப்பது போல முகத்தை திருப்பிக்கொண்டான்..

நிலா “மாமா உன்னை எப்படி என்னை பார்க்க வைக்குறேன் பாரு” என்று அவனை இறுக அணைத்து அவன் மார்பில் சாய்ந்து கொண்டு “மாமா உன்னோட பட்டுவ மன்னிச்சுக்க.. நான் உனக்கு தரவேண்டிய மாமூலை இனிமே கண்டிப்பா தருவேன்” என்றாள். நிலா அணைத்ததுமே அவன் கோபம் எல்லாம் பஞ்சு பஞ்சாக பறந்தது..

மகிழன் கோபம் குறையாமல் இருப்பது போல நடித்துக் கொண்டிருந்தான்.. நிலா மகிழன் இன்னும் தன்னை அணைக்காமல் இருப்பதை கண்டு.. சரி இதைவிட்டா நமக்கு வேற வழியில்லை என்று அவன் கன்னத்தை பிடித்து அவன் பருத்த இதழில் தன் மென் இதழை சேர்த்தாள்..

மகிழனின் மனது குத்தாட்டம் போட்டது.. இதுதாண்டி பட்டு எனக்கு வேணும் என்று சந்தோசப்பட்டான்.. நிலா மகிழனின் இதழிலிருந்து விலக பார்த்தாள்.

மகிழன் நிலாவை இறுக அணைத்துக் அவள் விட்ட முத்தத்தை தொடர்ந்தான்.. தேன்நிலாவின் இதழில் தேனை விடாமல் பருகினான்.. நிலா மூச்சுக்காற்றுக்காக ஏங்க அவளைப் விட்டு பிரிந்து.. நிலா “இங்க பாருடி.. நமக்கு வயசான கூட எனக்கு இந்த முத்தம் தரத நிறுத்த கூடாது” என்று அவளை கட்டியணைத்துக் கொண்டே கூறினான்..

நிலா மகிழனின் அணைப்பில் இருந்தபடியே “என் மேல நீ அவ்ளோ ஆசை வச்சிருக்கியா மாமா” என்று கேட்க.. மகிழன் “என் உசிரே நீ தாண்டி” என்று நிலாவின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான். இருவரும் மோன நிலையில் நின்றிருந்தார்கள்..

இவர்களின் மோன நிலையை கலைக்க மகிழனின் உயிர் நண்பன் ராசுகுட்டி போன் செய்தான்..

நிலா “மாமா உன் போன் அடிக்குது” என்று சொல்ல.. மகிழன் “அது அடிக்கட்டும்டி கொஞ்சம் நேரம் இரு” என்று சொல்ல.. போன் மீண்டும் அடித்தது..

மகிழன் நிலாவை தன்பிடியிலிருந்து விடுவிடுத்து போனை எடுத்துப்பார்க்க ராசுகுட்டியின் எண் ஒளிர்வதை பார்த்து.. போனை ஆன் செய்து “சொல்லுடா கரடி பயலை” என்று திட்ட.. மறுமுனையில் “டேய் மாப்ள ஊரு பெரியவங்க திருவிழா நடத்த நம்ம வூட்டுக்கு வந்துருகாகடா உன்ன அப்பாரு வர சொன்னாக விரசா வாடா” என்று போனை வைத்தான்.

மகிழ் நிலாவிடம் “ஏய் புள்ள நம்ம வூட்டுக்கு போகலாம் வா” என அவளை அழைத்துச் சென்றான். இவர்கள் இருவரும் வீட்டை அடைந்ததும் அங்கே வாசலின் முன்னே இருந்த பெரிய செட்டில் பெரியவர்கள் நின்றிருக்க சக்ரவர்த்தி நடுநாயகமாக அமர்ந்திருந்தார்.. மகிழன் தன் தந்தையின் அருகில் நின்றுகொண்டான்.. நிலா பொன்னியம்மாவின் பக்கத்தில் நின்றாள்..

சக்ரவர்த்தி ம்ம்.. என்ன பேசணுமோ பேச ஆரம்பிங்க என்றார். ஊர் பெரியவர் ஒருத்தர் சக்ரவர்த்தியிடம் “ஐயா வர செவ்வா கிழமை காப்பு கட்டி திருவிழா ஆரம்பிச்சுருவோம்ங்கய்யா.. ஏழு நாள் திருவிழா நடத்துவோம்.. ஊருக்குள்ள கவுச்சி எதுவும் செய்யாம இருக்கோணும்.. வெளியூருக்கு யாரும் போக கூடாதுங்க..பொண்ணுங்க எல்லாம் சுத்த பத்தமா இருந்து காப்பு கட்டுண நாளுலயிருந்து முலப்பாரி போட்டு வைக்கணும்ங்க.. பொங்கல் அன்றைக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு ஏத்தி ஊர்வலம் வரணும்.. பொங்கல் விழா நிறைவடைந்த பிறகு அடுத்து நாள் மஞ்சள் நீர் திருவிழாவோடு பொங்கல் விழா நிறைவடையும் என்று ஊர் பெரியவர் எல்லோரும் முன்பு கூறினார்.

சக்ரவர்த்தி பெரியவர் சொன்னதை எல்லாரும் காது கொடுத்து கேட்டுக்கிட்டிங்கள்ள.. நாளை மறுநாள் திருவிழாவை காப்பு கட்டி தொடங்கிடலாம் என்று கூற ஊர் கூட்டம் கலைந்தது..

பொன்னியம்மா மகிழனையும் சக்ரவர்த்தியையும் சாப்பிட அழைத்தார்.. இருவரும் சாப்பிட அமர சாந்தி சமைத்த உணவுகளை நிலாவிடம் எடுத்துக்கொடுத்தார்..

நிலா “அத்த நான் செஞ்ச மட்டன் வறுவல எடுத்து வைச்சிங்களா” என்று கேட்க.. நிலா பேசியதை கேட்ட மகிழன் “என்னது நீ சமைச்சயா” என்று அவளை கேலியாக கேட்க..நிலா முகம் வாடிப்போனது.. சாந்தியிடம் மகிழன் “அம்மா உங்க மக நல்லாயிருக்கறது பிடிக்கலயா நிலாவ எதுக்கு சமைக்க விட்டிங்க.. நான் சாப்பிட மாதிரிதான்” என்று நிலாவை கிண்டல் செய்தான்.

நிலா மகிழனை பார்வையால் எரித்தாள்.. சக்ரவர்த்தி “நிலாவிடம் கறியை எனக்கு போடு தாயி நான் சாப்புடுறேன் அவனுக்கு எதுவும் போடாதா” என்று சக்ரவர்த்தி மகனுக்கு எதிராக பேசினார்.

நிலா “அது எப்புடிங்க மாமா வுடமுடியும்.. நான் கஷ்டபட்டு மசாலை மிக்சியில அரைக்காம.. என் கை நோவ அம்மில அரைச்சு வைச்சு வறுவல செய்துருக்கேன்.. சாப்புட்டு தான் ஆகணும்” என்று மகிழினின் இலையில் இரண்டு கரண்டியை எடுத்து வைத்துவிட்டாள்.

மகிழன் “நான் விடிய விடிய புலக்கடையில படுத்துக்க வேண்டியதுதான்” என்று நிலாவை பார்த்து கண்ணடித்து கறி துண்டுகளை சாப்பிட ஆரம்பித்தான்..

உண்மையில் நிலா கறியை அருமையாக செய்திருந்தாள்.. மகிழன் நிலாவை பார்த்து “என்னடி கறியில உப்பு இல்ல.. காரம் இல்ல என்று சொல்லிக்கொண்டு இலையில் இருந்த கறி துண்டை அனைத்தையும் சாப்பிட்டு.. பக்கத்தில் குண்டாவில் இருந்த கறியையும் இன்னும் ஒரு கரண்டியை போட்டு சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டு ம்ம். ஏதோ சமைச்சிருக்க” என்று சலிப்பாக சொன்னான்.. நிலாவின் முகம் சிறுத்து போய்விட்டது.

நிலா சாப்பிட்ட இலைகளை எடுத்து கொண்டு போக.. அவள் சென்றதும் பொன்னியம்மா தன் பேரனிடம் “அடேய் பேராண்டி மகிழு.. காரம் இல்ல.. உப்பு இல்லன்னு கறிய நல்லா சாப்பிட்டு .. அவ சமைச்சத குறை சொல்லுறவ..காலம் முழுக்க அவ கையாலதான நீ சாப்பிடோணும் ராசா..சும்மா அவள சீண்டாதய்யா.. புள்ள மனசு காயப்படும்” என்று தன் பேத்திகாக வக்காலத்து வாங்கி நின்றார்..

மகிழன் பொன்னியமாவிடம் “ஆத்தா அவகிட்ட நான் விளையாடமா யாரு விளையாடுவா.. கண்ணாலத்துக்கப்புறம் இது மாறி விளையாட முடியுமா அதான் அவள கொஞ்ச நேரம் சூடுடேத்தினேன்” என்றான்

நிலா இலைகளை போட்டு விட்டு மகிழன் முகம் பார்க்காமல் சாந்தியிடமும், பொன்னியம்மாவிடமும் “நான் எங்க வூட்டுக்கு போறேன்” என்று கிளம்பினாள்..

மகிழன் பொன்னியம்மாவிடம் “ஆத்தா வாசல தாண்டுனா வூடு..இவ என்னமோ பக்கத்து ஊருக்கு போற மாறி பேசுறா.. இரவாயிருச்சு பொட்ட புள்ள இங்கணயா கிடக்குற.. அங்க அத்த புள்ளைய வூட்டுக்கு வர சொல்லு ராசா என்கிட்ட சொல்லுறாவ” என்று அவளை பார்த்து சிரித்துக்கொண்டே பேச.. நிலாவுக்கு கோபம் வந்துவிட்டது…

பொன்னியம்மாவும் சக்ரவர்த்தியும் சாய்வு இருக்கையில் அமர்ந்துகொண்டு இருவரது சம்பாசணைகளை கேட்டு சிரித்துகொண்டிருந்தனர்..

நிலா சக்ரவர்த்தியின் காலுக்கடியில் அமர்ந்து கொண்டாள்.. புசு புசுவெனெ கோவம் வந்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க சக்கரவர்த்தியை பார்த்து “மாமா நான் இங்கன தான் இருப்ப.. உங்க பையன வேணா எங்க வூட்டுக்கு போகச் சொல்லுங்க.. இது என் வூடு” என்று கண்களில் கண்ணீருடன் கோவம் தீராமல் பேசினாள்.

சக்கரவர்த்தி தன் மருமகளின் கண்ணீரை துடைத்துவிட்டு “இது உன் வீடுடா தேனுமா அவன் கிடக்குறான் பொசகிட்ட பையன்” என்று மகிழனை திட்டினார்.

நிலாவிற்கு மாமனை திட்டியதும் சிறிது சமாதானம் ஆனாள். ஆனால் நிலா இன்னும் அமர்ந்த நிலையிலிருக்க சாந்தி சாதத்தை போட்டு வந்து நிலாவிற்கு ஊட்ட.. மகிழனை பார்த்து வாயை கோணித்து காட்டி உணவை வாங்கிக்கொண்டாள்..

மகிழனிடம் பார்த்தயா மாமா எல்லாரும் எனக்குதான் சப்போர்ட் என்று மனதில் நினைத்து அவனை பார்த்தாள்..

நிலவின் பார்வையை புரிந்து கொண்டு . ரொம்பதான் என்று வாயில் முணகி கொண்டே அவளை போலியாக முறைத்தான்..

அதே நேரம் வாணி உள்ளே நுழைந்தார் ... சாந்தி நிலாவிற்கு சாப்பாடு ஊட்டுவதை பார்த்த வாணி “மதினி நீங்க கொடுக்கற செல்லத்துனாலதான் அவ இந்தளவு வாயாடுற என்று கூறிவிட்டு .. நிலாவிடம் திரும்பி "பொட்டப்புள்ள இராவானா வூட்டுக்கு வரதுல்ல.. இங்கணயே கிடக்குற.. நான் உனக்காக சோறு ஆக்கி வைச்சு காத்திருக்க நீ இங்க சாப்பிடுற" என்று அவளை திட்ட ஆரம்பித்தார்.

பொன்னியம்மா வாணியிடம் “ஏத்தா வாணி புள்ளைய எதுக்கு திட்டுறவ.. நான் தான் நிலாவ இருக்க வைச்சேன் என்ன சொல்றவ” என்று மகளை பேசவிடாமல் செய்தார்..

சக்ரவர்த்தி “வாணிம்மா அவளை திட்டாத அவ எங்க இருக்கா.. உரிமைபட்ட வூட்டுல தானே இருக்கா” என்றார்.

வாணி சக்ரவர்த்தியிடம் “அண்ணே இன்னும் நாம பரிசம் போடல அதுக்குள்ள இராவுல நேரத்துல இங்க இருக்கற நல்லாயில்ல.. ஊருல நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க அண்ணே” என்றார்.

சக்ரவர்த்தி வாணியிடம் “திருவிழா முடியட்டும் கண்ணு கல்யாணத்தை முடிச்சிடலாம்” என்றார்.. கல்யாணம் என்றதும் மகிழனும் நிலாவும் பார்வையால் காதல் செய்தனர்.. பொன்னியம்மா இவர்களின் பார்வையை புரித்துகொண்டு "ம்ம். சீக்கிரம் சொந்தபந்தங்களுக்கு சொல்லி அனுப்பிடலாம்" என்றார். வாணி நிலாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றார்.

சாந்தி சாப்பாட்டு தட்டை எடுத்துக்கொண்டு சமையல் கட்டுக்கு சென்றார்.. மகிழனும் உறங்கச்சென்றான்.

பொன்னியம்மா சக்ரவர்த்தியிடம் “ராசா திருவிழாவுக்கு உன் அக்கா ஜானகியையும் மாமா வரதனையும் அழைக்கணும்” என்றார். அவர் சொன்னதும் சக்ரவர்த்தியின் முகம் மாறியது..

தன் மகன் முகம் மாறியது கண்டு “எய்யா.. சுகனு வேணும்னு அப்படி செய்யல அய்யா. சுகந்தி கிட்ட உரிமையா தான் நடந்துகிட்டான்.. அதுனால தானே நாம சுகந்திய சுகனுக்கு கட்டி வைத்தோம்” என்று மனம் வருந்தி பேசினார். சக்ரவர்த்தி சம்பவம் நடந்த நாளை நினைத்துப் பார்த்தார்.

திருவிழா சமயத்தில் வரதன் ஜானகியுடன் சுகனையும் அழைத்துவந்திருந்தார்.. பொன்னிலாவை அழைத்து வரவில்லை.. அவளுக்கு அந்த வருட தேர்வு இருந்தது .. சுகனுக்கு சுகந்தியை சிறுவயதிலிருந்தே பிடிக்கும்.. தனது தந்தைக்கு பயந்து அடங்கி போய்கொண்டிருந்தான்.. ஜானகிக்கும் தனது தம்பி மகள் சுகந்தி தான் மருமகளாக வரவேண்டும் என்று அவருக்கும் ஆசை.. ஆனால் வரதனுக்கு சக்ரவர்த்தி வீட்டில் சம்மந்தம் பண்ண விருப்பமில்லை.. ரத்த பத்தத்தில் கல்யாணம் செய்தால் குழந்தை குறைபாடோடு பிறக்கும் என்று அவர் நினைத்திருந்தார்..

திருவிழா அன்று அனைவரும் கோவிலுக்கு சென்றிருக்க.. சுகந்தி தலைக்கு குளித்ததால் கோவிலுக்கு செல்ல வில்லை.. சுகன் இதை சாதகமாக எடுத்துக்கொண்டு அனைவருடன் கோவிலுக்கு சேர்ந்து செல்வது போல சென்றான்.. அங்கு சிறிது நேரம் இருந்துவிட்டு யாரிடமும் சொல்லாமல் வீட்டுக்கு வந்துவிட்டான்.
சுகன் கதவை தட்டியதும்.. சுகந்தி கதவை திறந்து “வாங்க மாமா.. ஏன் பாதியிலே வந்திட்டீங்க” என்று கேட்டாள்.. சுகன் சுகந்தியின் கண்களை பார்த்து ஐ.லவ்.யு என்றான்

சுகந்தி “மாமா நீங்க யாரும் இல்லாத நேரம் பாத்து இப்படி என்கிட்ட தனியா பேசுறது தப்பு.. என்னதான் நீங்க முறைப்பையனா இருந்தாலும் தனியா இருக்கிற பொண்ணுகிட்ட இப்படி வம்பு பண்ணாதீக” என்று யாரும் வரதுக்குள்ள இங்கணயிருந்து போயிருங்க என் அவன் மார்பில் கை வைத்து தள்ள..சுகன் அவள் கையை பிடித்து அவளை தன்நெஞ்சோடு இறுக அணைத்துக்கொண்டு அவள் முகம் முழுவதும் முத்தமிட சுகந்தி அவனிடமிருந்து விலக பார்க்க. அவன் பிடி விலக்காமல் அதிரடியாக சுகந்தியின் இதழோடு தன்னிதழை வன்மையாக சேர்த்தான்.

சுகந்தியின் கெட்ட நேரம். கோவிலுக்கு சென்றிருந்த குடும்பமே விட்டிற்குள் நுழைந்தது.. இந்த காட்சி அவர்கள் கண்ணில் பட.. சக்ரவர்த்தி சுகந்தி எனவும்.. வரதன் சுகன் என்றும் இருவரும் ஒரே நேரம் சத்தம் போட்டனர்.. அந்த அறையில் அனைவரும் அதிர்ச்சியுடன் சிலையாக நின்றிருந்தனர்.

சக்ரவர்த்தி சத்தம் போட்டதில் சுகந்தி பயந்து தன் தாய் சாந்தியிடம் வர அவர் அவள் கன்னத்தில் அறைந்து விட்டார்..

பொன்னியம்மா சாந்தி என்று சத்தம்போட்டார்.. இப்ப எதுக்கு புள்ளைய அடிக்குறவ.. ரெண்டு பேரும் உரிமை பட்டவங்கதான் என்று வரதனை பார்த்துக்கொண்டே பேசினார்.

வரதன் எதுவும் பேசாமல் கோபத்துடன் நின்றிருந்தார்.. தன் தந்தையின் கோபத்தை கண்ட சுகன் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு “டாட் நான் தான் சுகந்திகிட்ட அப்படி நடந்துகிட்டேன்.. சுகந்தி என்ன வெளியே போகச்சொன்னா.. நான் அவளை பலவந்தப்படுத்தி முத்தம் கொடுத்தேன்” என்று கூறியதுதான் தாமதம் சக்ரவர்த்தி கோபம் கொண்டு சுகனை அடிக்க கையை ஓங்கி கொண்டு வர.. அதற்குள் வரதன் சுகனை மாறி மாறி கன்னத்தில் அடிக்க ஆரம்பித்தார்..
தொடரும்...​
 

suriakala saravanan

Member
Wonderland writer
அத்தியாயம் 3

சக்ரவர்த்தி "போதும் மாமா சுகன் மாப்பிள்ளைய அடிக்கறத நிறுத்துங்க.. இப்ப என் பொண்ணுக்கு என்ன பதில் சொல்லுறீங்க.. இனி என் பொண்ண யாரு கல்யாணம் பண்ணுவாங்க"
வரதன் ஒரு நிமிடம் கண்ணை மூடி திறந்து சக்ரவர்த்தி என் பையன் சுகனுக்கு சுகந்தியை கல்யாணம் செய்து வைக்கலாம்” என்று சொல்லி விறுவிறுவென அறைக்கு சென்றார்.

ஜானகி கணவனுக்கு என்று பார்ப்பாரா.. இல்லை மகனுக்கா.. இல்லை தம்பிக்கா.. யாருக்கு ஜாதகமாக பேசுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றார்..

ஜானகி தனது தம்பியை எதிர்கொள்ள முடியாமல் தலைகுனிந்து நின்றார்.. தன் மகன் இப்படியொரு காரியத்தை செய்வான்னு அவர் கனவிலும் நினைக்கவில்லை.

பொன்னியம்மா பொதுவாக இனி ஆக வேண்டிய காரியத்தை பாருங்க.. ஊருக்குள்ள சொந்தம் விட்டு போக கூடாதுன்னு கல்யாணத்த முடிவு பண்ணிட்டோம் என்று சொல்லிக்கலாம்.

சக்ரவர்த்தி தன் தாயை பார்க்க.. அவர் எல்லாம் நல்லதுக்குதான் ஜய்யா.. காரணம்மில்லா காரியம் ஒண்ணுமில்ல.. நீ நடக்கவேண்டியதை மேற்கொண்டு பாரு ராசா. திருமண வேலைகள் வேகமாக நடந்தேறியது..
யாரும் ஒருவொருக்கொருவர் முகம் கொடுத்து பேசவில்லை.. சுகன் சுகந்தியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தனது மனைவியாக்கினான்..

சுகன் தான் ஆசைபட்டவள் கிடைத்துவிட்டாள் என்ற சந்தோசத்தில் இருந்தான்.. சுகந்தியோ தனது பெற்றோரை விட்டு எப்படி போவது.. அதுவும் பல மைல்களுக்கப்பால் நாம் போக போகிறோம் என்பதை நினைத்து மனத்திற்குள் தவித்துக் கொண்டிருந்தாள்.
வரதன் “நீங்க நினைச்ச படியே கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிதுல்ல.. நாங்க கிளம்புறோம்.. உங்க பொண்ண என் பையன் கண் கலங்கா பார்த்துக்குவான் அதுக்கு நான் பொறுப்பு” என்று சக்ரவர்த்தியிடம் விட்டேத்தியாக சொல்லி.. ஜானகியை வருமாறு கண்ணால் ஜாடை காட்டி காரின் உள்ளே சென்று அமர்ந்தார்.

சுகனும் சுகந்தியும் பொன்னியம்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.. அவர் ரெண்டு பேரும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழணும் என இரு பேரப்பிள்ளைகளையும் வாழ்த்தினார்.

சக்ரவர்த்தியும் சாந்தியும் சேர்ந்து நிற்க அவர்களிடமும் ஆசிர்வாதம் வாங்கினர்.. சுகந்தி சாந்தியின் தோளில் சாய்ந்து கண்ணீர் விட்டாள்.

சாந்தி “சுகந்தி முகத்தை கையிலேந்தி இங்க பாருடா அங்க உனக்கு ஜானகி அத்தை துணையாயிருப்பாங்க எதுக்கும் பயப்படாதே.. சுகந்தியின் கண்ணீரை துடைத்துவிட்டார்.. சக்ரவர்த்தி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

சுகந்தி தன் தந்தையின் அமைதியை கண்டு அவர் பக்கத்தில் செல்ல.. அவர் தன் மகளை பார்த்து எதற்கும் பயப்பட கூடாது.. என்னவாயிருந்தாலும் நீயே எல்லாத்தையும் சமாளிக்கோணும் கண்ணு.. அப்பா பேர காப்பாத்தணும் கண்ணு.. என தன் மகளை உச்சி முகர்ந்தார் .

சுகன் “மாமா நான் சுகந்தியை யாரும் ஒண்ணு சொல்ல விட மாட்டேன்.. நீங்க கவலைபடாதீங்க.. சுகன் பேசியதை கேட்டு சக்கரவர்த்தி நேத்து அவசர பட்டு நடந்த மாதிரி எந்த விசயமும் தப்பா பண்ணாதீங்க மாப்பிள்ளை.. நான் மனுசனா இருக்க மாட்டேன்.. என் பொண்ணுக்கு ஏதாவது ஒண்ணு நடந்ததுனா என பண்ணுவேன் என எனக்கே தெரியாது. நல்லவேளை என் மகன் மகிழன் இந்த நேரம் இங்க இல்ல.. நீங்க பண்ணின காரியத்துக்கு.. அவன் இருந்தா உங்கள உண்டு இல்லைனு பண்ணயிருப்பான் என்றார்.

ஜானகி எதுக்கு இவ்ளோ கோவப்படுற தம்பி.. நான் வாழ்ந்திட்டிருக்க வீட்டுல தான் உன்ற பொண்ணும் வாழ போறா.. நான் சுகந்தியை என்ற பொண்ணு மாறி பார்த்துக்குவேன்.. எனக்கு பொன் நிலா வேற.. சுகந்தி வேற இல்ல..நீ கவலை பட வேண்டிய அவசியமில்லை என்றார் சக்ரவர்த்தியிடம்.

வரதன் காரிலிருந்தவாறே இவர்கள் பேசுவதை கோப முகத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். சக்ரவர்த்தி ஜானகியிடம் ஏதோ பேச வாயெடுத்தார்.

பொன்னியம்மா சக்ரவர்த்தியை பேசவிடாமல் மாப்பிள்ளையும், பொண்ணும், நல்ல நேரம் முடியறதுக்குள்ள காருல ஏறுங்க என்று எல்லாருடைய கவனத்தையும் திசை திருப்பினார்.

ஜானகி தன் தாயை நன்றியுடன் பார்த்து புன்னகைத்தார். ஜானகி வரதன் இருந்த காரில் ஏறிக்கொண்டார்.. சுகனும் சுகந்தியும் ஒரு காரில் ஏறினர்.. கார் சென்னையை நோக்கி சென்றது.

சக்ரவர்த்தி பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தார்.. பொன்னியம்மா ஐய்யா சக்ரவர்த்தி என அழைப்பது கேட்டு சொல்லுங்கம்மா என அவர் முகம் பார்த்தார்.. ஏய்யா பழைசயே நினைச்சுட்டுயிருந்தா ஒண்ணும் பண்ணமுடியாது.. நாம வரதன் மாப்பிள்ளை போன் போட்டு திருவிழா பற்றியும், மகிழன், தேன்நிலா கல்யாணமும் முடிவு பண்ணியிருக்கோம் என்ற விசயத்தையும் சொல்லிருவோம் என்றார். அவர் சரிங்கம்மா சொல்லிடலாம் என்று உறங்கச் சென்றார்.

சென்னையில் வரதன் வாக்கிங் சென்று விட்டு ஹாலில் ஷோபாவில் அமர்ந்து ஜானகி காபி கொண்டு வாம்மா என்றார்.
ஜானகி காபி கோப்பையை நீட்ட வரதன் புன்னகையுடன் எடுத்துக்கொண்டார்.. என்னம்மா பொன் நிலா எழுந்துட்டாளா.. ம்ம்.. உங்க பொண்ணு ஐந்து மணிக்கே எழுந்து ஜாக்கிங் போயிட்டாங்க.. என்றார்.

பொன்நிலா வியர்வை வழிய ஹாய் டாட்.. குட்மார்னிங்.. ஹாய் மாம்.. என்று தந்தையின் அருகே அமர்ந்து அருகே இருந்த டவலால் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்தாள்.

ஜானகி நிலாவிற்கு பால் கொண்டு வந்து கொடுக்க வாங்கி பருகினாள்.. வரதன் பொன்நிலாவை தலையை வருடி என்னடா எக்ஸ்ஸாம் முடிச்சுதா.. இல்ல டாட் நாளையோட எல்லாம் எக்ஸ்ஸாமும் முடியுது.. முடிச்ச அடுத்த நாளே நான் நம்ம கம்பெனிக்கு வந்துடுவேன்.. அதுக்குதான் நான் காத்திட்டிருக்கேன்டா செல்லம்.. எப்ப பிஸ்னஸ்ஸ கையெலெடுப்பனு பார்த்திட்டிருக்கேன் என்றார்.

பொன்நிலா “நோ டாட்.. நீங்க எப்பவும் எனக்கு அர்ச்சுனனுக்கு கிருஷ்ணன் போரில் வழிகாட்டின மாறி பிஸ்னஸ்ல என் கூட உதவியாக இருக்கணும் என்றாள்.

ஜானகி இருவரும் பேசுவதை கேட்டு.. வரதனிடம் என்னங்க உங்க பொண்ணு பரிட்சை முடிச்சதும் ஒரு நல்ல வரனா பார்த்து கல்யாணத்தை முடிச்சிடலாம்.. நீங்க என்னான்னா பொண்ண கம்பெனிய பார்த்துக்க சொல்றீங்க என கணவனை முறைத்தார்.

வரதன் ஏண்டி உன் பொண்ணயும் உன் தம்பி பையனுக்கு கல்யாணம் பண்ணலாம்னு ஐடியா வைச்சிருக்கியா என்று ஏளனமாக பேசினார்.
ஜானகி ஏன் என் தம்பி பையன் மெக்கானிக்கல் இன்ஜியனிரிங் முடிச்சிருக்கான் தெரியுமில்ல.. நம்ம பொண்ணுக்கு மேல படிச்சிருக்கான் என்று மகிழனின் பெருமை பேசினார்..

நிறுத்துடி உன் பொறந்த வீட்டு புராணத்தை.. பெரிய மெக்கானிக் படிச்சிருக்கானாம்.. படிச்ச படிப்புக்கு ஏத்த வேலை பார்க்காம.. விவசாயம் பார்க்குறான்.. நான் என் பொண்ண அவனுக்கு கல்யாணம் செய்து வைக்கணுமா என கோபம் கொண்டு ஜானகியை முறைத்தார்.

பொன் நிலா தன் தந்தையின் கோபத்தை தணிக்க எண்ணி டாட் இப்ப எதுக்கு இவ்ளோ கோபம் படுறீங்க.. நீங்களோ, மாம்மோ என் கல்யாணத்தை டிசைட் பண்ண முடியாது.. நான் முதல்ல என் கல்யாணத்தை பத்தி யோசிக்கவே இல்லை.. இதை வச்சு நீங்க ரெண்டு பேரும் சண்டை போடாதீங்க.

சுகனும், சுகந்தியும் தன் மகன் துருவ்வுடன் ஹாலுக்கு வந்தனர்.. துருவ் அத்தை என ஓடி பொன்நிலாவின் மடியில் உட்கார்ந்தான்.. வாடா என் செல்ல மருமகனே என துருவ் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.. துருவ்வும் நிலா சொன்னது போலவே என் செல்ல அத்தை என நிலாவின் கன்னத்தில் முத்தம் வைத்தான். பள்ளி வாகனம் ஹார்ன் அடிக்க சுகந்தி துருவை அழைத்துக்கொண்டு வெளியே சென்று சென்றாள்.

பொன்னியம்மா சக்ரவர்த்தியை வரதனுக்கு போன் பண்ண சொன்னார்.. இவர்கள் பேசியதை கேட்ட மகிழன் யாருக்கு ஆத்தா அப்பாவை போன் பண்ண சொல்லுறீங்க என்று அவர் பக்கத்தில் அமர்ந்தான்.. இல்ல ராசா வரதன் மாமாவுக்கு உன்ற கல்யாணத்தை பத்தியும், திருவிழாவுக்கும் சேர்த்து அழைக்க சொல்லுறேன்.
சக்ரவர்த்தி வரதனுக்கு போன் போட்டார்.. போனில் சக்ரவர்த்தியின் எண் ஒளிர. வரதன் இறுகிய முகத்துடன் போனை ஆன் செய்து சொல்லுங்க என போனை ஸ்பீக்கரில் போட்டார்.
மாமா வர்ற செவ்வாய்கிழமை எங்க ஊர்ல திருவிழா ஆரம்பமாகுது.. அதுமட்டுமில்லாம மகிழனுக்கும், சுந்தர் மாமா பொண்ணு தேன்நிலாவுக்கு கல்யாணம் முடிவு பண்ணியிருக்கோம்.. நீங்களும், அக்காவும், சுகன் மாப்பிள்ளையும் கட்டாயம் வரவேண்டும்.. நாங்க இங்க வேலை வெட்டி இல்லாம உட்கார்ந்திருக்கல.. நீங்க சொன்னவுடன் ஓடிவரதுக்கு.. வேணும்னா உங்க பொண்ணயும் உங்க பேரனையும் அனுப்புறேன் என்று முகத்திலடித்தாற் போல பேசி போனை வைத்தார்.

சக்ரவர்த்தி போனை கட் பண்ணிவிட்டு.. பார்தீங்களா அம்மா வரதன் மாமா எப்படி பேசினார்னு.. கொஞ்சம் கூட மருவாதியில்லாம.. என்ன மனுசன் போங்க.. நான் ஒண்ணும் அவர் வசதிக்கு குறைச்சவன் இல்ல.. அவரை விட ஒரு படி மேல தான் இருக்கேன்.. அவருக்கு என்ன கண்டாலே புடிக்க மாட்டேன்குது.. பொன்னியம்மாவிடம் ஆதங்கமாக பேசினார்.

விடுப்பா நாம சொல்ற கடமைக்கு சொல்லியாச்சு.. நாம வூட்டு பொட்டபுள்ளைங்க ரெண்டு பேரு அவங்க குடும்பத்துல வாழுறாங்க.. நாம விட்டுக்கொடுத்து போறது ஒண்ணும் தப்பில்லை.. அதுக்காக நம்ம தன்மானத்தை விட்டுக்கொடுக்கோணுமா ஆத்தா என வெகுண்டெழுந்தான் மகிழன்..

போச்சுடா இப்ப தான் மகனை சமாதானம் பண்ணினோம்.. இப்ப இவனை எப்படி சமாளிப்பது என்று யோசித்து.. டேய் பேராண்டி வயற்காட்டில் எல்லாருக்கும் கூலி கொடுக்கோணும் என்னை வயல் கொண்டு போய் விடு என்று பேச்சை மாற்றினார்.

மகிழன் ஆத்தா பேச்சை மாத்தாதீங்க..சுகந்தி அக்கா அங்க வாழுறாங்கனு தான் கம்முணு இருக்கேன்.. வரதன் மாமா பேசின பேச்சுக்கு அவர நாலுவார்த்தை வெடுக்குனு கேட்டு புடுவேன் என்று மீசையை முறுக்கினான்..
வாணியும் தேன்நிலாவும் மூவரின் அருகில் வந்தனர்.. சக்ரவர்த்தியின் முகத்தை வைத்தே வாணி கண்டிபிடித்து விட்டார் என்ன நடந்திருக்கும் என யூகித்து.. தன் தாயின் முகத்தை பார்க்க அவர் ஆம் என்பது போல தலையசைத்தார்.

தேன்நிலா அனைவரின் கோபத்தை குறைக்கும் விதமாக சக்ரவர்த்தியின் அருகில் அமர்ந்து மாமா எனக்கு திருவிழாக்கு பட்டு சேலை எடுத்து தாங்க.. மகிழன் இவ வேற நேரம் காலம் தெரியாமா பேசுறா என்று அவளை செல்லமாக மனதிற்குள் அர்ச்சித்தான்.

உனக்கு எத்தனை பட்டுபுடவை வேணாலும் அத்தைய கூட்டி போயி எடுத்துக்க.. இல்ல காஞ்சிபுரத்துலயிருந்து புடவைகாரர வரச்சொன்னா இங்கயே வந்துடுவாங்க.. உனக்கு எது விரும்பம்னு சொல்லு தாயி அதுபடி செஞ்சுடலாம் என்றார் சக்ரவர்த்தி.

இவர்கள் பேச்சுக்களை கேட்டபடியே அனைவருக்கும் சாந்தி காபியை கொண்டுவந்தார். என்னங்க காஞ்சிபுரத்துலயிருந்து புடவைக்காரர வரச்சொல்லிருங்க.. திருவிழாவுக்கும், நிச்சயத்துக்கும், கல்யாணத்துக்கும் சேர்த்தே எடுத்துப் புடலாம்..
பொன்னியம்மா சாந்தி சொல்லுற மாறியே செய்துடலாம் என்றார்.

நிலாவுக்கு ஒரு புடவை கேட்டதுக்கு நிறைய பட்டுப்புடவை கிடைக்க போகுது என மனதில் சந்தோசப்பட்டாள். மகிழன் அவளின் முகத்தில் இருந்த சந்தோசத்தை பார்த்து.. என்னடி ஓசில நிறைய புடவை கிடைக்குது ரொம்ப ஆடாதே.. ம்ம்.. நீங்க ஒண்ணும் எடுத்து கொடுக்க போறதில்ல.. சக்ரவர்த்தி மாமா கொடுக்கறாங்க உங்களுக்கு என்னனு உதட்டை சுளித்தாள்.. பார்த்துடி இழுத்துக்கு போகுது.. ஆத்தா நீங்க வயலுக்கு போகணும் சொன்னீங்கள்ள போகலாம் வாங்க என்று பொன்னியம்மா அழைத்து கிளம்பினான்.
சென்னையில் வரதன் சக்ரவர்த்தியிடம் போனில் பேசிவிட்டு அறைக்குச் சென்று குளித்து ஆபிஸ் செல்ல ஆயத்தமானார்.. ஜானகி என்று சற்று குரலை உயர்த்தி மனைவியை அழைத்தார்.
என்னங்க கூப்பிட்டிங்களா என அறைக்குள் வந்தார்.. எப்போதும் புன்னகை முகத்துடன் இருக்கும் மனைவி இன்று முகம் வாடியிருப்பதை கண்டு.. ஜானகியின் கன்னத்தை பிடித்து, என்ன மேடம் உங்க தம்பிகிட்ட நான் அப்படி பேசினது கோபமா.. பின்ன கோபம் இருக்காதா.. என் தம்பி திருவிழாவுக்கும், மகிழன் கல்யாணத்திற்கும் தானே கூப்பிட்டான்.. நீங்க அங்க வரலைனா கூட பரவாயில்லை.. உன் அக்காவை அனுப்பி வைக்கிறேன்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்காலம்ல.. இத்தனை நாளா நான் உங்ககிட்ட எதுவுமே கேட்டதில்லை.. இப்ப கேட்கிறேன்… நான் திருவிழாவுக்கு போகணும்.. சரி போய்ட்டு வா என்று ஒற்றை மட்டும் உதித்தார்.

கதவை தட்டும் சத்தம் கேட்டு இருவரும் பிரிந்து நின்றனர்.. சாரி டாட் உங்க ரொமான்ஸை கெடுத்துட்டேனா என்று உள்ளே வந்தாள் நிலா.. சக்ரவர்த்தி இல்லடா சொல்லு என்ன பேசனும்.. டாட் நாளையோட எனக்கு எக்ஸாம் முடியதுல்ல.. எனக்கும் கிராமத்துல நடக்கிற திருவிழாவை பார்க்கணும்னு ஆசையா இருக்கு.. பொன்னியம்மா பாட்டியையும் பார்த்து ரொம்ப வருசம் ஆச்சு. நானும் மாமும், அண்ணியும் கிளம்புறோம்.

வரதன் ஒரு நிமிடம் யோசித்து சரிடா போய்டு வா என்றார். நிலா வெளியே சென்றதும்.. இங்கபாருடி நீ ஊருக்கு போனதும் உன் அண்ணன் மகன் மகிழனிடம் நம்ம பொண்ணு பொன்நிலாகிட்ட அளவா பேச சொல்லு.. என் பொண்ணு என்னை மாதிரி அவங்களெல்லாம் கண்டா கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்ட் பண்ணுவா.. அத விட்டு அத்த பொண்ணு.. மாமன் பையன் என்று உரிமையெல்லாம் கொண்டாட கூடாது.. எனக்கு என்னமோ நம்ம பொண்ண.. உன் அண்ணன் வீட்டுக்கு அனுப்ப மனசு இல்ல. என ஆபிஸ் கிளம்பினார்.
நிலா மகிழன் சென்றவுடன் அம்மா நானும் வயற்காட்டுக்கு போறேன்.. வாணி வூட்டுல வேலை நிறைய கிடக்குது அத விட்டு இப்ப வயலுக்கு எதுக்கு போறவ ..ம். எனக்கும் அங்க வேலை இருக்குனு சிட்டாக பறந்து விட்டாள் .. எப்படியும் பொழுதோட வூட்டுக்கு வந்து தானே ஆகணும்.. அப்ப இருக்கு உனக்கு..

மகிழன் பொன்னியம்மாவை வயலில் இறக்கி விட்டு .. ஆத்தா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு .. மதியம் நான் வந்து உங்கள கூட்டிட்டு போறேன் என் நிலாவை காண சென்றான்.

இருவரும் சந்திக்கும் இடத்தில் நிலா கோவமாக அமர்ந்திருந்தாள்.. மாமா நான் ஆசையா ஒரு பட்டுப்புடவை கேட்டேன்.. நீ என்ன சொல்லுற .. ஓசில புடவை கிடைக்குதுனு சொல்லுற என் மனசு எவ்ளோ கஷ்டப்பட்டுச்சு தெரியுமா என தனியாக புலம்பிக்கொண்டிருந்தாள்.

மகிழன் அவள் பின்னாலிருந்து பச்சை நிற பட்டுப்புடவையை அவள் தோளில் போட்டு பின்னிருந்தவாறே கட்டிக்கொண்டான்..
பட்டு என அவள் கழுத்தில் முக பதிக்க.. ம்ம்.. என சிணுங்கி அவன் புறம் திரும்ப.. இப்ப எதுக்கு பட்டுப்புடவை எடுத்து வந்திருக்க .. என்ன சமாதானப்படுத்தவா.. என மகிழனை முறைத்தாள்.. சும்மா விளையாண்டேண்டி .. உன்கிட்ட விளையாடாம யாருகிட்ட விளையாடுவேன்னு அவள் கன்னம் பற்றி முத்தம் பதித்தான்.

நிலா தன் பர்ஸை தந்தையின் அறையில் விட்ட ஞாபகம் வந்து அறையின் உள்ளே செல்லும் முன்பு இருவரும் பேசியது கண்டு குழப்பமுற்றாள்.. ஏன் டாட் மகிழன் மாமாகிட்ட பேச வேணாம் என்கிறார் என்ற யோசனையுடன் தன் அறைக்கு சென்று கப்போர்ட்டில் இருந்த ஆல்பம் ஒன்றை எடுத்தாள்.. அதில் மகிழன் தேன்நிலா பொன்நிலா மூவரும் சேர்ந்திருந்த போட்டோவை எடுத்து பார்த்தாள்..பக்கத்திலிருந்த கத்தரியை எடுத்து தேன்நிலாவை மட்டும் வெட்டி எடுத்துவிட்டு மகிழனும் தன்னையும் கம் எடுத்து ஒட்டி பார்த்தாள்.. மகிழன் ஐ.எம் கம்மிங் ..

தொடரும்​
 

suriakala saravanan

Member
Wonderland writer
அத்தியாயம் 4

பொன்நிலாவும் தேன்நிலாவும் தோட்டத்தில் மாமரத்தின் கீழ் நின்று குச்சியை வைத்து மாம்பழங்களை அடிக்க பார்க்க.. ஒரு மாம்பழம் கூட விழவில்லை.. பொன் நிலா “ஏய் நீ மரத்துல ஏறி பறிச்சு போடு நான் கீழிருந்து பொறுக்கி வைக்கிறேன்.. ம்ம். என்னடி கொழுப்பா.. நான் மரத்துல ஏறி மாம்பழ பறிச்சு போடணும்.. அம்மா மகாராணி கீழ இருந்து மாங்கா பொறுக்குவாங்களாம்.. என்னை பார்த்தா கேன சிறுக்கி மாறி இருக்கானு” அவள் சடையை பிடித்தாள்.

பொன்நிலாவும் என்னடி அப்ட்ரால் கிராமத்துல இருக்கறவ என் சடையை பிடிக்கிறயானு அவளும் நிலாவின் சடையை இழுக்க இருவரும் மண்ணில் கட்டிபிரண்டனர்.

சந்தைக்கு மாங்காய் கொண்டு போக ட்ராக்டரில் மகிழனும், ராசுக்குட்டியும், அங்கு வந்தனர்.. இருவரும் சண்டை போடுவதை பார்த்த ராசுக்குட்டி.. டேய் மாப்பி அங்க பாரு உன் மாமன் பொண்ணுங்க ரெண்டு பேரும் குடுமி சண்டை போடுறாங்க.

ஆமாடா பெருசா ஏதும் ஆகும் முன்ன போய் தடுக்கோணுமடா. வரதன் மாமா பார்த்தா பிரச்சனையை பெருசாக்கிருவாரு.. மகிழன் இருவரின் அருகே சென்று ஏதுக்குடி சண்டை போடுறீங்க..அவர்கள் இருவரும் அவன் பேசுவதை காது கொடுத்து கேட்பதாக தெரியவில்லை.. இருவரும் பிரித்து ரெண்டு கன்னத்திலும் அறை வைக்க..கன்னத்தை பிடித்துக்கொண்டு கண்ணீரிருடன் மகிழனை ஏன் எங்களை அடித்தீங்க என்பது போல இருவரும் அவனை பார்த்திருந்தனர்.

இப்ப சொல்லுங்கடி எதுக்கு சண்டை போடுறீங்க.. பொன்நிலா மாமா நான் இவளை மரத்துல ஏறி மாங்கா பறிச்சு போடச் சொன்ன.. அதுக்கு அவ என்கிட்ட சண்டைக்கு வரா.. தேன்நிலா ஏன் மாமா நான் இவளுக்கு மரத்துல ஏறி மாங்காய் பொறிச்சு போடணும்.. மகாராணி ஒய்யார கீழ நின்னுப்பாங்களாம் என அவனிடமும் கோபமாக பேசினாள்.
பொன்நிலா ஆமாடி நீ தான் பொறிச்சு போடணும்.. நாங்க பெரிய பணக்காரங்க.. எங்களுக்கு நிறைய பேக்டரி இருக்கு.. உனக்கு என்னயிருக்க.. அதுவுமில்லாம உனக்கு அப்பாவும் இல்ல எனக் கூறியதும்.. அதுவரை கோபம் கொண்டு சண்டை போட்டவள்.. அவள் சொன்னவார்த்தையால் மனம் சோர்ந்து மகிழனை பார்த்தாள் தேன்நிலா.

மகிழன் ஏன்னடி என்ன வார்த்தை பேசுற.. இதுவர நாங்க யாரும் தேன்நிலாவ பார்த்து ஒருநாள் கூட இந்த வார்த்தை சொல்லியிருக்க மாட்டோம்னு. அழுது கொண்டிருந்த நிலாவை தன் தோளோடு அணைத்து நான் இருக்கேன் பட்டு அவளுக்கு ஆறுதல் கூறினான்.

மகிழன் பொன்நிலாவை பார்த்து இனியொரு தடவை என் பட்டுவ பார்த்து அப்பா இல்லாதவனு சொன்ன செவினிய பேத்துருவேன்.. நீ உங்கப்பாகிட்ட போய் சொன்னாலும் சரி.. வேற யாருகிட்ட போய் சொல்லுவியோ சொல்லு என பொன்நிலாவை எச்சரித்து மிரட்டினான்.

என்ன மாமா தேன்நிலா மேலே ரொம்ப பாசம் வழியுது.. ரெண்டு பேரும் லவ் பண்ணுறீங்களா என பட்டு கத்தரித்தாற் போல கேட்டாள்..

மகிழன் ஆமாடி நான் என் பட்டுவ தான் லவ் பண்ணுறேன் அவளை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்..உன்ன மாறி திமிரு புடிச்சவலயா நான் லவ் பண்ண முடியும்.. ஆமா இவரு பெரிய மன்மதரு இந்த பட்டிக்காட்டுல யாரு வந்து இருப்பாங்க.. அதுவுமில்லாம உன்ன எனக்கு பிடிக்காது என்று பேசினாள்..

மாமா இவகிட்ட என்ன பேச்சு வேண்டி கிடக்கு நாம போலாம்.
மகிழன் தேனுவின் கன்னத்தை பிடித்து பட்டு நான் அடிச்சது உனக்கு வலிச்சுதா என அவள் கன்னத்தில் ஊதினான்.. இவர்கள் பின்னால் வந்த ராசுக்குட்டி கன்னத்துல அடிச்சுபுட்டு வலிக்குதானு கேட்குறான்.. ராசண்ணா எங்க மாமா என்ன அடிக்கும், அணைக்கும் அதை நீங்க கேட்க கூடாது.. ராசு அய்யோ தாயி என்ன மன்னிசுக்க ஆத்தா தெரியமா கேட்டுபுட்டேன் என அவள் முன்னே கையெடுத்து கும்பிட நிலாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

மகிழன் தேனுவை அணைத்துகொண்டே செல்வதை பார்த்த பொன்நிலா.. நானும் தான் மாமா உன்னை லவ் பண்ணுற.. ஆனா நீ தேன்நிலாவா லவ் பண்ணுறனு சொல்லுற.. நீ என்னை லவ் பண்ணலனாலும் பரவால.. தேன் நிலாவை கல்யாணம் பண்ண விட மாட்டேன்.. துருவ் அத்தை என அழைத்து அவளறைக்குள் நுழைய துருவ் சத்தம் கேட்டு சுயத்துக்கு வந்தாள்.

துருவ் பொன்நிலாவின் மடியில் ஏறி அமர்ந்து.. அத்தை நாம எல்லாரும் மகிழன் மாமா வீட்டுக்கு போறோமா அம்மா சொன்னாங்க.. ஆமாடா தங்கம்.. நாம மகிழன் மாமா வீட்டுக்கு போறோம்.. ஐய் அங்க விளையாட நிறைய இடம் இருக்கும் என்று கையை தட்டிச் சிரித்தது.. அப்புறம் தாத்தா, பாட்டி, தேன் அத்தை எல்லாரும் இருப்பாங்க.. துருவ் என சுகந்தி அழைப்பதை கேட்டு அத்தை அம்மா கூப்பிடறாங்க.. நான் போய் ஊருக்கு கிளம்ப ரெடியாகறேன்.. நீங்களும் ரெடியாகுங்க என்று வெளியே ஓடினான்.

வரதனும், சுகனும் ஆபிஸிலிருந்து வீட்டுக்குள் வந்தனர்.. அங்கே ஜானகி அம்மாவீட்டுக்கு போவதற்கு ரெடியாகி இருந்தார்.. சுகந்தியும் ரெடியாகியிருந்தாள்.. அவளும் எத்தனை நாட்கள் ஆகியது தன் தாய்வீட்டுக்கு சென்று அவளும் சந்தோசமாக புறப்பட்டு நின்றாள்.

சுகன் என்ன மாமியாரும், மருமகளும் அம்மா வீட்டுக்கு போக ரெடியாகிட்டிங்க போல.. ஜானகி ஆமாண்டா அப்பாவும்,நீயும் வந்ததும் கிளம்பலாம்னு இருந்தோம்.. வரதன் டிரைவரை வரச்சொல்லியிருக்கேன் ஊருக்கு போனதும் போன் போட்டுங்க.. சரிங்க என்றார்.

சுகன் சுகந்தியை ஒரு நிமிசம் நம்ம ரூமுக்கு வந்துட்ட போ என அறைக்குள் சென்றான்.. சுகந்தி அவன் பின்னே சென்றாள்.. வரதன் சிரித்து பார்த்தயா உன் பையன் பொண்டாட்டிய ஒருநாள் விட்டு இருக்கமுடியல.. நீங்க என்னை விட்டு இருப்பீங்களா.. நான் நாளைக்கு காலைல வந்துருவேன்டி என ஜானகியின் பக்கத்தில் போனார்.

துருவ் தாத்தா என ஓடி வந்து காலை பிடித்தான்.. மை லிட்டில் பாய் என துருவை தூக்கி கன்னத்தில் முத்தம் வைத்தார்.
சுகந்தி அறைக்குள் சென்றவுடன்.. சுகன் கதவை சாத்தி அவளை கட்டியணைத்து கழுத்துவளைவில் முகம் பதித்து.. ஒருநாள் மை ஸ்வீட் பொண்டாட்டியை விட்டு இருக்கணுமே என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

என்னங்க நான் ஊருக்கு போகணும்.. என் புடவையெல்லாம் கசங்குது என சிணுங்கினாள்.. சிணுங்கல்களை எல்லாம் அவன் கருத்தில் கொள்ளாது அவள் இதழில் முத்தமிட தொடங்கினான்.. அவளும் இயந்து நின்றாள்..

ஜானகி சுகந்தி என சத்தம் இட இருவரும் தன்னிலை வந்தனர்.. சுகந்தி தலை சேலையை சரி செய்து கசங்கிய புடவையையும் சரிசெய்து சரிங்க நான் கிளம்புறேன்.. நாளைக்கு நீங்க வந்துருங்க என்று இருவரும் ஹாலுக்குள் வந்தனர்..

சுகன் அம்மா பொன்நிலா இன்னும் கிளம்பி வரலையா என்றான்.. நான் வந்துட்டேன் அண்ணா என்று ஒயிட் டாப் பிளாக் லெக்கின்ஸ் போட்டு கையில் பேக்குடன் இறங்கினாள்.. ஜானகி நாம போறது கிராமத்துக்கு சுடிதார் இருந்தா போட்டு வா.. அம்மா எனக்கு இந்த டிரஸ்தான் கம்படபுள்.. நான் இந்த டிரஸ்லதான் வருவேன் என்றாள் பிடிவாதமாக..வரதன் விடு ஜானகி அவளுக்கு என்ன விருப்பமோ அந்த டிரஸ்தான் போடுவா.. ம்ம். இப்படியே உங்க பொண்ணுக்கு செல்லம் கொடுங்க.. நாளைக்கு போற இடத்துல என்ன பொண்ணு வளர்த்து வைச்சிருக்காங்கனு என்னை தான் திட்டுவாங்க என்று கணவனை முறைத்தார்.

சரி சரி நேரமாச்சு கிளம்புங்க என அனைவரும் காரை நோக்கி சென்றனர்.. பொன்நிலா காரின் முன் சீட்டில் அமர்ந்தாள். துருவ் நான் அத்தை மடியில தான் உட்காருவேன் என்று பொன்நிலாவுடன் அமர்ந்தான்.

ஜானகியும், சுகந்தியும் பின் சீட்டில் அமர்ந்தனர். துருவ் பை டாட்.. பை தாத்தா என்று கையசைத்தான்.. இவர்களும் துருவுக்கு கையசைத்து வழியனுப்பினர்.. கார் எட்டுக்குடி கிராமத்தை நோக்கி சென்றது.

ஜானகி சுகந்தி, துருவ், பொன்நிலா நால்வரும் வருகிறார்கள் என்று சுகன் சக்ரவர்த்திக்கு போன் செய்து தகவலை தெரிவித்தான்.

சக்ரவர்த்தி இவர்களின் வரைவை எதிர்நோக்கியிருந்தார்.. பொன்னியம்மா ஏய்யா ஊருலிருந்து எல்லாரும் எத்தனை மணிக்கு வராங்க.. அம்மா பொழுதிறங்குவதற்குள்ள வந்திருவாங்க.. சாந்திகிட்ட சொல்லி சாப்பிடு ரெடிபண்ண சொல்லுங்க.. சரிய்யா நான் சொல்லிறேன்.

மகிழன் என்ன ரெண்டு பேரும் ரகசியம் பேசுறீங்க என அவர்களிடம் வந்தான்.. உங்க அத்தை குடும்பத்தோடு வராங்க என்றார் சக்ரவர்த்தி.. என்ன எல்லாருமா.. இல்ல ராசா உன் அத்தை, அக்கா, துருவ், பொன்நிலா மட்டும் வராங்க.. வரதன் மாமாவும், சுகன் மாப்பிள்ளையும் நாளைக்கு வருவதாக சொல்லியிருக்காங்க.. பொன் நிலாவும் வருகிறாள் என்று சொன்னவுடன் மகிழன் அன்று தோப்பில் நடந்த சண்டைக்கு பிறகு இப்போது தான் அவளை பார்க்க போகிறோம்..என யோசனையிலிருந்தான்..

பொன்னியம்மா என்னய்யா யோசனை பலமாயிருக்கு.. இல்லீங்க ஆத்தா.. பொன்நிலா வந்தா.. அவளோடு திமிருதனத்தை காட்டுவா..தேன் நிலாவ சீண்டிட்டுயிருப்பா.. அதான் யோசனையா இருந்தேன் ஆத்தா.. நாம எல்லாம் இருக்கும்போது அவ நிலாவ ஒண்ணும் சொல்ல முடியாது.. அவள நான் பேசவிடமாட்டேன்.. நான் பார்த்துக்குறேன் ராசா என்றார்.

அதே நேரம் தேன் நிலா அம்மச்சி என்று அவரை இடித்துக்கொண்டு பக்கத்தில் அமர்ந்தாள்.. மகிழன் ஏன்டி இவ்ளோ இடம் கிடக்குது ஆத்தாவ இடிச்சிட்டுதான் உட்காரணுமா என்று கேலியாக கேட்டான்.

ஆமா நான் அம்மச்சிய இடித்துதான் உட்காருவேன்.. இப்படி மடியிலயும் படுத்துக்குவேன் அவர் மடியில் படுத்தாள்.. ஏய் எழுந்திருடி நான் ஆத்தா மடியில படுப்பேன் அவளை கையை பிடித்து இழுக்க ..அவள் நான் எழும்ப மாட்டேன் அடம்பிடித்தாள்.

சக்ரவர்த்தி மகிழா அவகிட்ட சண்டை போடுறத விட்டு வரவுங்ககளுக்கு அறையெல்லாம் சரியா இருக்கானு பாருப்பா.. சரிங்கப்பா என உள்ளே சென்றான்.. தேன்நிலா என்ன சமையல் வாசைன மூக்கை துளைக்குது என்று அவர் மடியிலிருந்து எழுந்து சமையலறை சென்றாள்..

சாந்தி கோமதியின் உதவியுடன் சமைலயலை கவனித்துக்கொண்டிருந்தார்.. அத்தை என்ன இன்னிக்கு சமையல் தடபுடலாக நடக்குது.. ஊருலிருந்து இன்னிக்கு வராங்களா.. ஆமாடி தேனு ஜானகி அத்தை, சுகந்தி துருவ், பொன்நிலா எல்லாரும் வராங்க... சரிங்கத்த நான் ஏதாவது உதவி செய்யணுமா..நீ ஒண்ணும் உதவியெல்லாம் செய்ய வேணாம்.. மகிழன் காபி கேட்டான் அதை மட்டும் கொண்டு போய் கொடுத்துட்டு வா.. காபியை எடுத்துக்கொண்டு மகிழனின் அறைக்கு சென்றாள்.
மாமா என கதவை தட்டிக்கொண்டு உள்ளே போக மகிழன் குளியலறையிருந்து துண்டுடன் வெளியே வந்தான்.. நா எதுவும் பாக்கல.. பாக்கல என்று காபியை டேபிளிலில் வைத்துவிட்டு திரும்பி நின்று கொண்டாள்.. மகிழன் சத்தம் போட்டு சிரித்து.. என்னைக்கும் இருந்தாலும் இந்த கோலத்துல பார்க்கத்தானே போற.. இப்பவே பாரு என்று அவளை தன் புறம் திரும்ப.. போங்க மாமா என்று கண்ணை இறுக முடிக்கொண்டாள்.

கார் சத்தம் கேட்டு பொன்னியம்மாவும், சக்ரவர்த்தியும் புன்னகை முகத்துடன் நின்றிருந்தனர்.. முதலில் ஜானகியும், சுகந்தியும் இறங்கினர்.. துருவ் தாத்தா என்று ஓட சக்ரவர்த்தி பேரனை வாடா என் சிங்க குட்டி என அவனை தூங்கிக்கொண்டார்.

பொன்நிலா கண்ணில் ஸ்கூலருடன் இறங்கினாள்.. சாந்தியும் சமையலை முடித்து வாசலுக்கு வந்தார்.. பொன்னியம்மா ஜானகி அருகில் வந்ததும் நல்லாயிருக்கியாத்தா என்று அவர கட்டியணைத்தார்.

சாந்தி சுகந்தியை எப்படி இருக்க கண்ணு என்று அனைவரும் நலம் விசாரித்துக்கொண்டனர்.. பொன்நிலா நான் இங்க ஒருத்தி நிற்கறது யார் கண்ணுக்கும் தெரியலயா என்று சத்தம் போட..பொன்னியம்மா என்னடி ஆத்தா இப்படி சொல்லிபுட்ட.. நீ என் ஆசை பேத்திஅல்லவா.. இத்தனை நாளா இந்த அம்மச்சிய பார்க்கறதுக்கு வரல அதன் உன் மேல கோவம்..நான் உன்ன அம்மச்சினு கூப்பிட மாட்டேன். அந்த தேன் நிலா தான் உன்னை அம்மச்சினு கூப்பிடுவா.. நான் பாட்டினுதான் சொல்லுவேன் என்று முறுக்கிக்கொண்டு நின்றாள்..

சக்ரவர்த்தி பொன்நிலாவின் அருகே சென்று அவள் தலையை வருடி இங்கபாருமா எல்லாரும் உன் மேல உசிர வைச்சிருக்கோம்.. தேன்நிலாவும், நீயும் ஒண்ணுதான் எங்களுக்கு.. அப்படியானு நக்கலாக சிரிந்தாள்.. ஜானகி பொன்நிலாவை பெரியவங்கிட்ட மரியாதை இல்லாம பேச கூடாதுன்னு சொல்லி தானே கூட்டி வந்தேன்.. சரி சரி நான் எதுவும் பேசல.. என் ரூமுக்கு போறேன் என்று லக்கேஜை எடுத்துச்சென்றாள்.

வாணி கார் சத்தம் கேட்டு சக்ரவர்த்தியின் வீட்டுக்கு வந்தார்.. அக்கா நல்லாயிருக்கிங்களா ஊருல மாமா சுகன் எல்லாரும் எப்படி இருக்காங்க என ஜானகி விசாரித்தார்.. உள்ளே போய் பேசலாம் வாங்க என்று அனைவரையும் அழைத்து சென்றார்.

பொன்நிலர் தன் அறைக்குச் செல்லும் வழியில் மகிழனும் தேன்நிலாவும் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டு அறைக்கு வெளியே நின்று ஒட்டுக்கேட்டிருந்தாள்.

மாமா விடு எல்லாரும் வந்துருவாங்க.. ஏய் இருடி மாமூல வாங்காம நான் உன்ன விடமாட்டேன் என்று அவள் இதழில் கவி பாடிக்கொண்டிருந்தான். பொன்நிலா சடாரென கதவை திறந்து உள்ளே வந்தாள்.. அவர்கள் இருக்கும் கோலத்தை கண்டு என்ன கல்யாணம் தானே பேசுறதா சொன்னாங்க.. இங்க பர்ஸ்ட் நைட்டே நடக்கும் போல என்று நக்கல் பார்வை பார்த்துக்கொண்டே இருவரின் அருகே சென்றாள்.. இவள் பேசிய வார்த்தையை கேட்டு மகிழன் கண்கள் சிவந்து தன் கையை முறுக்கினான்.

தொடரும்​
 

suriakala saravanan

Member
Wonderland writer
அத்தியாயம் 5

பொன்நிலா பேசிய வார்த்தையை கேட்டு.. தேன்நிலா தன் காதை பொத்திக் கொண்டாள்.. அவள் காதை பொத்துவதை பார்த்தவள்.. பூனை கண்ணை முடுனா உலகம் இருண்டிருமா என்ன.. அதுமாறி நீ காதை பொத்தினா நீ ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு முன்னாலேயே முத ராத்திரி ட்ரெய்ல்ல் என்று வார்த்தையை சொல்லி முடிக்கும் மகிழன் அடித்த அடியில் பொன்நிலா கீழே நிலத்தில் சுருண்டு விழுந்து கிடந்தாள்..

கன்னத்தை பிடித்துக்கொண்டே எழுந்தவள்.. உனக்கு இப்ப குளு குளுன்னு இருக்குமேடி என தேனுவை பார்த்து முறைத்தாள்.

இதுக்கு மேல ஒரு வார்த்தை “என் பட்டுவ தப்பா பேசினே பல்லை ஒடச்சு கையில குடுத்துடுவேன் பார்த்துக்க” என்றான் மகிழன்
.
மேலே போன தேன்நிலா இன்னும் வராதது கண்டு.. பொன்நிலா பற்றி அறிந்தவர் மகிழனின் அறைக்கு சென்றார் சாந்தி.

அங்கு கன்னத்தை பிடித்து நிற்கும் தேன்நிலாவிடம் என்ன கண்ணு இன்னும் குளிக்காம இங்க என்ன பண்ணுறவ.. மகிழன் அது ஒண்ணுமில்லிங்கம்மா என்னையும் பட்டுவயும் பார்த்து ரொம்ம்ப நாளாச்சுல்ல.. நாங்க ரெண்டு பேரும் பேசற சத்தம் கேட்டு என் அறைக்கு வந்துட்ட இல்ல பொன்நிலா.. “ஆமாங்க அத்த.. ரெண்டு பேரையும் பார்க்க வந்தேன்” என்று யாரையும் பார்க்காமல் அவளறைக்கு சென்றுவிட்டாள்.

அமைதியாக நின்றிருக்கும் தேன்நிலாவை பார்த்த சாந்தி "என்னடி இப்படி பித்து புடிச்சவ மாறி இருக்குறவ.. கீழே நிறைய வேல கிடக்கு வா போகலாம்" என்றார்.

"ம்ம் வரேன் அத்த" என்று மகிழனை பார்த்துக் கொண்டே சாந்தியின் பின்னே சென்றாள் நிலா..
ஒரு முத்தம் கூட கொடுக்க விடாம பண்ணிட்டா என்று தன் முத்தம் பாதியில் நின்று விட்டத்தை எண்ணி பொன்நிலாவை திட்டி தீர்த்தான் மகிழன்.

பொன்நிலா குளித்துவிட்டு நைட் டிரஸ்சுடன் வர.. அந்நேரம் அறைக்குள் நுழைந்த ஜானகி.. ஏய் என்னடி மனசுல நினைச்சுட்டிருக்க.. முத இந்த டிரஸ கழட்டிட்டு சுடிதார போடு.. அவர் கூறுவதை காதில் வாங்காமல் கண்ணாடி முன்நின்று தலையை துவட்டிக்கொண்டிருந்தாள்.

நான் பேசுறது காதுல விழுதாடி.. நான் ஒண்ணும் செவிடி கிடையாது நீங்க பேசுறது என் காதுல நல்லா கேட்குது என முடியை இருபக்கமும் கேட்ச் கிளிப் போட்டு அடக்கி கொண்டே அவரை பார்த்தாள்.

அவள் கன்னம் சிவந்திருப்பதை பார்த்த ஜானகி “என்னடி ஆச்சு.. மகிழன் கிட்ட போய் வம்பு பண்ணியா” என்று அவளை பற்றி தெரிந்து கேட்டாள்.

“ஆமா உங்க தம்பி பையன்கிட்ட நான் தான் வேணும்னே சண்டைக்கு போனேன்.. இப்ப என்ன பண்ணுவீங்க.. எனக்கு பசிக்குது நான் சாப்பிட கீழே போறேன்” என அவரை தள்ளி செல்ல பார்க்க.. சாந்தி பதறிஅடித்து அடியேய் இந்த குடும்பத்துக்குனு ஒரு கௌரவம் இருக்கு.. அத கெட்டுத்துடாதா.. இந்த டிரஸ்ஸோட போகாத.. கீழ போய் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன்.. ம்ம்.அந்த பயம் இருக்கட்டும் என்பது சாந்தியை ஏளனமாக பார்த்தாள்.

அடி போடி இதே டிரஸ்ஸோட போனா நீ மறுபடியும் மகிழன்கிட்ட அடிவாங்கணும் அதுக்குத்தான் உன்ன போக வேண்டாம் என மகளுக்கு பதிலடி கொடுத்து கீழே சென்றார் ஜானகி.

சுகந்தி அவளுடைய அறையில் சென்று குளித்துவிட்டு துருவையும் குளிக்க வைத்து சாப்பாட்டு மேசைக்கு வந்தனர்.. தேன்நிலா சக்ரவர்த்தி மகிழன் இருவருக்கும் உணவை பரிமாறிக் கொண்டிருந்தாள்.

சுகந்தி வருவதை பார்த்த தேன்நிலா வாங்க அண்ணி வந்து உட்காருங்க உங்களுக்கு சாப்பாடு போடுறேன் என தட்டை எடுத்து உணவை போட்டாள்.. சுகந்தி துருவ்க்கு ஊட்டிவிட்டு நான் அப்புறும் சாப்புடுறேன் தேனு.. அண்ணி நீங்க சாப்புடுங்க நான் துருவ்க்கு சாப்பாடு ஊட்டுறேனு.. துருவ்வை பார்த்து அத்தை உனக்கு சாப்பாடு ஊட்டுறேன் வரியா என்று அவனை தூக்க.. அவனும் தேன்நிலாவிடம் தாவிக் கொண்டான்.

சுகந்தி சாப்பிட அமர்ந்தாள்.. தேன்நிலா துருவ்க்கு சாப்பாட்டை ஊட்ட ஆரம்பித்தாள்.. அவன் வெளியே கூட்டிபோக சொல்லி அடம்பிடிக்க வீட்டின் வாசலுக்கு துருவ்வை தூக்கி சென்றாள்..அங்கே நிலாவை காட்டி சோறு ஊட்டினாள்.. துருவ்வும் சமத்தாக அவளிடம் பேசிக்கொண்டே சாப்பிட்டது.

மகிழன் சாப்பிட்டு விட்டு வாசலுக்கு வந்தான்.. அங்கு நிலா துருவ்வுக்கு சாப்பாடு ஊட்டுவதை பார்த்தவன்.. ஏய் இப்பவே நல்லா ட்ரெயின்ங் எடுத்துக்கடி.. அப்பதான் நம்ம புள்ளைக்கு சோறு ஊட்ட முடியும் என நிலாவின் பக்கத்தில் வந்தமர்ந்தான்.

மகிழனும், தேன்நிலாவும் நெருங்கி நின்று பேசுவதை பால்கனியில் நின்று பார்த்த பொன்நிலாவுக்கு பற்றிக்கொண்டு வந்தது.. நாம எதுக்கு இவங்கள பார்த்து பொறாமை படணும் என்பதை தனக்குள்ளே கேட்டுக்கொண்டாள். அதற்கான விடை அவளிடம் இல்லை.. தானும் மகிழனை விரும்புகிறோம் என்பதை மறந்திருந்தாள் பேதை.

மகிழன் தங்களை யாரோ பார்ப்பதை போல தெரிய மேலே அண்ணார்ந்து பார்த்தான்..அங்கே பொன்நிலா நின்றிருப்பதை பார்த்து.. தேன்நிலாவிடம் இன்னும் நெருங்கி அவளை அணைப்பது போல உட்கார்ந்தான்.. பொன்நிலா தலையிலடித்துக்கொண்டு உள்ளே சென்றாள்.. இதுதான் எனக்கு வேணும்டி என்று தேன்நிலாவின் கன்னத்தில் முத்தமிட்டு உள்ளே சென்று விட்டான்..

துருவ் அச்சோ மகிழன் மாமா தேன் அத்தைக்கு முத்தம் கொடுக்குறாங்க என்று சத்தம் போட.. அவன் வாயை பொத்தினாள் தேன்நிலா.. இந்த மாமாவுக்கு விவஸ்தையே இல்லை என மகிழனை திட்டினாள்..

ஜானகி தனியாக வருவதை பார்த்த பொன்னியம்மா.. என்ன ஜானகி நீ மட்டும் வர பொன்நிலா எங்கே..அவளுக்கு தலைவலிக்குதுனு சொன்னா அம்மா.. நான் சாப்பிட்டு அவளுக்கு எடுத்துட்டு போறேன்..நீ சாப்பிடு நான் என்ற பேத்திக்கு சாப்பாட்டை கொண்டு போறேன் என் சாப்பாட்டை தட்டில் போட்டுக்கொண்டு மேலே சென்றார்.

ஏன் மாமா நானும் உன்னை விரும்புறேன்.. அது உனக்கு தெரியலையா என்று கட்டிலில் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள்.. அம்மாடி ராசாத்தி என்று பொன்னியம்மாவின் சத்தம் கேட்டு கண்களை துடைத்துக்கொண்டு பழைய படி விறைப்பாக அமர்ந்து கொண்டாள்.

என்ன தான் விறைப்பாக காட்டிக்கொண்டாலும்.. அவளின் கண்கள் ஒளியிழந்து இருந்ததை பொன்னியம்மா கண்டு கொண்டார்.. சாப்பாட்டை பொன்நிலா வாயருகே கொண்டு செல்ல..அவள் மறுக்காது உணவை வாங்கிக்கொண்டாள்.

என்ன பொண்ணு மனசுல என்ன நினைக்கா என்று பொன்னியம்மா நிலாவை பார்த்து கேட்டார்.. அவள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு பாட்டி நான் ஒண்ணு கேட்பேன்.. கேளுத்தா என்றார் பொன்னியம்மா.

மகிழன் மாமாவ எனக்கு கல்யாணம் பண்ணி வைப்பீங்களா என்று கேட்க.. பொன்னியம்மாவுக்கு பூமி நழுவுவது போல இருந்தது.. என்ன தாயி இப்படி கேட்டுபுட்ட.. புள்ளைங்க ரெண்டும் விரும்புது அதுதான் நாங்களே கல்யாணத்துக்கு நாள் குறிச்சோம்.. உம்மனசுல இப்படியொரு ஆசையை வளர்க்காத தாயி.. உனக்குனு ஒரு ராஜ குமாரன் பொறந்திருப்பான் என்றார்.

நினைச்சேன் இதைதான் சொல்லுவிங்கனு.. எனக்கு சாப்பாடு போதும் நீங்க போகலாம் பாட்டி என்று அருகிலிருந்த வாஷ்பேசனில் வாயை கழுவினாள்.. தாயி என்று பொன்னியம்மா பேச ஆரம்பிக்க ம்ம்.. இதற்கு மேல நீங்க பேச வேணாம் என்பது போல கையை உயர்த்தினாள்.. பொன்னியம்மா எதுவும் பேச முடியாமல் மனம் வெதும்பி கீழே சென்றார்.

கலங்கிய முகத்துடன் பொன்னியம்மாவை பார்த்து.. அம்மா என்ன நடந்தது உங்க முகம் வாடிபோயிருக்கு.. அவர் பொன்நிலா பேசியதை ஒன்றுவிடாமல் சக்ரவர்த்தியிடம் கூறினார்..
அம்மா திருவிழா முடித்தவுடன் மகிழன் தேன் நிலாவுக்கு கல்யாணத்தை முடித்துவிடலாம் என்றார். அனைவரும் சாப்பிட்டு விட்டு அறைக்கு சென்று படுத்தனர்.

பொன்னியம்மாவிற்கு பொன்நிலா பேசியதே காதில் ரிங்காரமாக கேட்டுக்கொண்டிருந்தது.. ரெண்டு பேத்திகளும் இரண்டு கண்கள் போல.. ஆனால் மகிழனும், தேனுவும் தானே விரும்புறாங்க.. அவங்க ரெண்டு பேரும் சேருவதுதான் நியாயம் என்று கடவுளிடம் தன் பேரப்பிள்ளைகளை சந்தோசமாக வைத்திருக்க வேண்டுமென்று கையெடுத்து கும்பிட்டார்.

காப்புகட்டி கோலாகலமாக திருவிழா ஆரம்பம் ஆனது.. முளைப்பாரியிடும் சடங்கும் ஆரம்பமானது.. பொன்னியம்மா தங்கள் வீட்டில் முளைபாரி வைத்திருக்கிறோம் என்பதை வெளியிலிருந்து வருபவர் தெரிந்து கொள்ளட்டும் என்று வீட்டின் முன்பு வேப்பிலை தோரணம் கட்டிவிட்டார்.

இரு பேத்திகளையும் அழைத்திருந்தார்.. இருவரும் பொன்னியம்மாவின் அருகில் வந்தனர்.. ரெண்டு பேரும் நான் சொல்றத காது கொடுத்து கேளுங்க என்று ஒரு பாத்திரத்தை கொடுத்து எல்லார் வீட்டிலும் சென்று நெல், சோளம், கம்பு, கேழ்வரகு, போன்ற தானியங்கள். கடலை,உளுந்து உள்ளிட்ட பயறு வகைகளை விதையாக கொண்டு வாங்க.. பொன் நிலா என்னது நான் வீடு வீடா போகணுமா நா மாட்டேன்.. தேன் நிலா நா போறேன் அம்மச்சி.. ரெண்டு பேருக்கும் சேர்ந்து நானே வாங்கிட்டு வாரேன்.. யாரு போய் தானியங்கள கொண்டு வராங்களோ அவங்க நினைச்ச மாறியே புருசன் கிடைப்பாங்கனு பொன்னியம்மா சொன்னவுடன் பாத்திரத்தை கையெலெடுத்துக்கொண்டாள் பொன்நிலா.. பொன்னியம்மா தந்திரம் தெரிந்து சிரித்தாள் தேன் நிலா.. என்னடி சிரிக்கற வா போகலாம் என இருவரும் வீடு வீடாக சென்று தானியங்களை வாங்கி வந்து பொன்னியம்மாவிடம் கொடுத்தனர்.

முளைப்பாரி வளர்வதற்கு மண்பானையில் வண்டல் மண், காய்ந்த பசு சாணம், ஆட்டு உரத்தை பரப்பி சாணிப்பால், பஞ்சகாவ்யத்தை தோய்த்து விதை பரப்பினார்.. இரண்டு மண்பானையில் உரக்கலவையை நிரப்பி வைத்தார். அதன்பிறகு விதைகளையும் தானியங்களையும் ஈரமான மணலில் கலந்து மண் பானையில் பரப்பினார்.

பொன்நிலா இந்த முளைப்பாரி வைக்கறதுக்கு இத்தனை செய்யணுமா என சலித்துக்கொண்டாள்.
பொன்னியம்மா என்ன ராசாத்தி அப்படி சொல்லி புட்ட இந்த மண்பானையை பத்திரமா பாதுகாப்பாக வைத்திருக்கோணும்.. ஒரு பானையில் உன்பேரும் இன்னொரு பானையில் தேன்நிலா பேரும் எழுதி வைச்சிருங்க.. உங்களுக்கு கல்யாணமாகி புகுந்த வீட்டுக்கு போனாலும் ஞாபகமாக வைச்சு அடுத்தவருசம் முளைப்பாரி அதை பயன்படுத்திக்கலாம் என்றும் முளைப்பாரி வளர்வதற்கு பாட்டும் இருக்கு என்று பாட ஆரம்பித்தார்

ஓண்ணாம்நாள் ஓட்டு முளை
ஓங்கி வளர்வதைப் பாருங்கடி
இரண்டாம் நாள் இரட்டை முளை
இணைந்து வளர்வதைப்பாருங்கடி
மூன்றாம் நாள் மொட்டு முளை
முளைத்து வளர்வதைப்பாருங்கடி
முத்து முத்தாய் மழை பொழிய
முளையெடுக்க வாரிங்களா
முத்தான்பெண்டுகளா முளைவளர
கும்மி கொட்டி ஆடுங்கடி"

என்று முளைப்பாரி பாட்டே அந்தகாலத்துல ஒருத்தர் பாட்டு பாட மத்தவங்க கும்மி கொட்டி ஆடுவாங்க என்றார். பொன்நிலாவிடம். அவ்ளோதானே நான் போலமா என்று கேட்டாள்.

ஹா..நான் மறந்துட்டேன் முளைபாரி வளர்க்குறவங்க விரதம் இருக்கோணும்.. காலையில் நேரமே எழுந்து பச்ச தண்ணீல குளிக்கோணும்.. முகத்துக்கு பவுடர், கண் மை, உதட்டுசாயம் எதுவும் பயன்படுத்தக் கூடாது.. உப்பு புளி சேர்க்க கூடாது.. அவல், பயறு வகைகள், பழங்கள் தான் சாப்பிடனும்.. ஒரு வேளை மட்டும் பச்சரியை கொண்டு சம்மச்சு சாப்பிடலாம்.. இரவு பாலும் பழமும் மட்டும் சாப்பிடணும்.. சரிங்க பாட்டி நீங்க சொன்ன மாதிரியே நான் நடத்துக்குறேன்..
பொன்நிலா இவ்வளவு செய்யணுமா என்றாள்.. ஆமாண்டி உனக்கு புடிச்ச புருசன், நல்ல குழந்தை கிடைக்கணும்னா இந்த விரதம் இரு.. இல்லண்ணா சுகந்திகிட்ட விரதம் இருக்க சொல்லுறேன் என்றார்.. இல்ல இல்ல நானே விரதம் இருக்குறேன் என்று வீட்டுக்குள் சென்றாள்..

இதையெல்லாம் பார்த்துகொண்டிருந்த மகிழன் பொன்னியம்மாவின் அருகில் வந்து என்ன அப்பத்தா உங்க மூத்த பேத்தியை மனசுக்கு புடிச்ச புருசன் கிடைப்பான் என்று அவளை விரதம் இருக்க வைச்சீட்டீங்க போல என்றான்.. என்னடா பண்ணுவது ஆடுற மாட்ட ஆடிக்கறக்கோணும் பாடுற மாட்ட பாடிக்கறக்கோணும் என்றார்.. பக்கத்தில் நின்ற தேன்நிலாவின் தாவணி விலகி அவள் இடைதெரிய பொன்னியம்மா கவனிக்கிறார என்று பார்க்க அவர் வேறு எங்கோ வேடிக்கை பார்த்திருப்பதை கண்டு தேன் நிலாவின் இடுப்பை கிள்ளினான்.. அச்சோ அம்மா என்ற அவள் அலற.. பொன்னியம்மா என்னடி எதுக்கு இப்ப கத்துவற.. தேன்நிலா மகிழனை பார்க்க.. பொன்னியம்மா அவள் கத்தியற்கான காரணத்தை அறிந்து.. மகிழு இனி திருவிழா முடியும் வரை தேன்நிலா பக்கத்தில போக கூடாது என்று அவன் தலையில் குண்டை தூக்கிப்போட்டார்.​
 
Status
Not open for further replies.
Top