ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஒரு மழையோடு தான் வெயில் சேர்ந்ததே

Ammu ramu

New member
Wonderland writer
பகுதி 2

"தேங்க்ஸ் கடவுளே" எனகூறிக் கொண்டு, அறையில் இருந்து வெளியே வந்த நிவேதாவின் முன்.. 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நின்றிருந்தார்.
அவரை பார்த்து திருதிருவென விழித்தவளிடம்.. "என் பெயர் சுதாகர், நான்தான் இங்கே மேனேஜர்" என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர்., " ஆபீஸ் ரூம் அந்த பக்கம் இருக்கு.. வாமா" என்று, அவளுக்கு முன்பே அந்த அறையை நோக்கி சென்றிருந்தார்.
அவரை பின் தொடர்ந்து சென்ற நிவேதா.. அறைக்கு வெளியிலேயே நின்று கொள்ள.. அவளை உள்ளே வருமாறு கையை அசைத்தார் சுதாகர்.
அவள் உள்ளே சென்றதும் அமருமாறு கூறியவர்.. "உன்னோட வேலையை பற்றின விவரத்தை எல்லாம் சொல்றேன். நல்லா கவனிச்சிக்கோமா" எனகூற..
"சரிங்க சார்" என்றாள் நிவேதா.
"உன்னோட முக்கியமான ஒரே வேலை என்னன்னா., மித்ரன் சாரோட குழந்தையை பாத்துக்கனும்" என்று அவர் கூற..
"ஓ!.. இதனால தான் அவரு குழந்தைகளை பத்தின கேள்வியை கேட்டாரா" என எண்ணினாள் நிவேதா.
"குழந்தைக்கு இப்போதான் 6மாசம் ஆகுது. அதனால காலை 8 to நைட் 8 மணிவரை நீ குழந்தைக்கூடவே இருக்கற மாதிரிதான் இருக்கும்" என்றார் அவர்.
6 மாத குழந்தை என அவர் கூறியதும் அதிர்ச்சியானவள், "அவ்வளவு சின்னக் குழந்தையா, அந்த குழந்தையை அவங்க அம்மாவால பாத்துக்க முடியாதா" என்று அவளது மூளை சிந்திக்க.. மீண்டும் சுதாகர் பேசியதால் அவளின் சிந்தனையை விடுத்து, அவரை கவனித்தாள்.
"குழந்தையை 2 டைம் குளிக்க வைக்கனும், டைமுக்கு பால் கலந்து கொடுக்கனும், குழந்தையை அழவிடக்கூடாது" என்று பட்டியலை அடுக்கிக்கொண்டே போக..
"எல்லாமே நாமலே பண்ணிட்ட.. குழந்தையோட அம்மா என்ன பண்ணுவாங்க" என எண்ணினாள் நிவேதா.
அனைத்தையும் கூறி முடித்தவர்., "உன்னோட சம்பளம் 30,000. அப்புறம், ரெண்டு வருஷம் காண்ட்ராக்ட் இருக்கு, அதுல நீ சைன் பண்ணிடனும்" என்றார் அழுத்தமாக.
சம்பளம் 30,000 என்று கூறியதும், தான் எண்ணிக் கொண்டிருந்ததை எல்லாம் மறந்து மகிழ்ச்சியானவள்.. அவர் கூறிய அனைத்திற்க்கும்., "சரிங்க சார்" என்றிட.. காண்ட்ராக்ட் பேப்பரை அவளிடம் நீட்டயிருந்தார் சுதாகர்.
அதில் இரண்டு வருடங்களுக்கு முன்பாக பணியிலிருந்து விலகக் கூடாது என்றும், பணியாளரின் வேலையில் திருப்தியில்லை என்றால் பணி நீக்கம் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டிருக்க, அதை படித்தவளுக்கு சற்று நெருடலாக இருந்தாலும்.. அதில் கையெழுத்திட்டு கொடுத்தாள் நிவேதா.
அதைப் பெற்றுக்கொண்டவர், "குழந்தையை ரொம்ப கவனமா பாத்துக்கணுமா, குழந்தை விஷயத்தில் ஒரு சின்ன தப்பு நடந்தாலும், தண்டனை ரொம்ப பெருசா இருக்கும்" என்று எச்சரித்தார்.
'அதெல்லாம் நான் கவனமாக பாத்துக்குவேன் சார்" என்றவளிடம்..
"சரிமா, நாளையிலிருந்து நீ வேலைக்கு வந்துரு.. கரெக்டா டைமுக்கு வேலைக்கு வந்துடனும்" என்று சுதாகர் கூற..
"ஒகே சார், நாளையிலிருந்து கரெக்ட் டைமுக்கு வந்துடுறேன்.. தேங்க்யூ சார்" என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.
அவள் சென்றதும், மித்ரனை காண, அவனது அறைக்குச் சென்ற சுதாகர், கதவை தட்ட., "கம்மின் சுதாகர்" என்றான் மித்ரன்.
உள்ளே வந்தவர்.. " சார், அந்த பொண்ணுகிட்ட டீடைல்ஸ் எல்லாம் சொல்லிட்டேன், கான்ட்ராக்ட்லயும் சைன் வாங்கிட்டேன் சார்" என்று கூற..
" ஓகே சுதாகர், நீங்க நம்ம கார்மெண்ட்ஸ்க்கு போயி., டெல்லிக்கு எக்ஸ்போர்ட் பண்ண வேண்டியதெல்லாம்., பண்ணிடுங்க" என்றவன், " "எனக்கு ஹோட்டல கொஞ்சம் வேலை இருக்கு.. நான் ஹோட்டலுக்கு போகனும், டிரைவர ரெடியா இருக்க சொல்லுங்க" என்றான்.
" சரி சார் என்ற சுதாகர்.. சார், உங்ககிட்ட ஒன்னு" என்று தயங்கியவாறே தலையை சொறிய..
"சொல்லுங்க சுதாகர்" என்றான் மித்ரன்.
"சார்.. அது வந்து.. அந்த.. பொண்ணு.. ரொம்ப சின்ன பொண்ணா இருக்கு.. குழந்தையை கவனமாக பார்த்துக்குமானு தெரியலை" என்று குனிந்து தரையைப் பார்த்துவாறு, பயந்துகொண்டே கூறினார் சுதாகர்.
பிறகு, மித்ரனின் கோபத்தை பற்றி தெரிந்து கொண்டே அவனிடம் தைரியமாக பேச முடியுமா என்ன?
அவர் கூறியதை கேட்டு., "ஐ நோ, வாட் அயம் டூயிங்" என்று கோபமாக கூறியவன்.. " "டிரைவரை ரெடியா இருக்க சொல்லுங்க" என்றான் அதிகாரமாக.
அவனின் கோபத்தில் மிரண்ட சுதாகர்.. "சாரி சார்" என்று கூறிவிட்டு, வேகமாக அங்கிருந்து வெளியேறினார்.
டிரைவரிடம் சென்று, தயாராக இருக்கக்குமாறு கூறியவர்.. நேராக சிவகாமியின் அறைக்கு சென்றார்.
அறையின் கதவை தட்டுவிட்டு உள்ளே சென்ற சுதாகர்.. குழந்தையை உறங்க வைத்துக் கொண்டிருந்த சிவகாமியிடம்.. "அம்மா, குழந்தையை பார்த்துக்க ஆள் எடுத்தாச்சிமா" என்றார்.
" ம்ம்ம்.. என்று பெருமூச்சை வெளியிட்ட சிவகாமி... இவன் எப்போ தான் மாறபோறானோ தெரியல" என்று கவலையாக கூறினார்.
"அம்மா, குழந்தையை பாத்துக்க செலக்ட் பண்ணி இருக்க பொண்ணு, ரொம்ப சின்ன பொண்ணா இருக்குமா.. அந்த பொண்ணால இவ்வளவு சின்னகுழந்தையை பத்திரமா பாத்துக்க முடியுமான்னு தெரியலை. இதை சார் கிட்ட சொன்னா கோபப்படுறாருங்கம்மா" என்றார் வருத்தமாக.
"அவன் என்னைக்கு தான் நாம சொல்ற பேச்சை கேட்டான்.. இன்னைக்கு கேட்கறதுக்கு.. எல்லாம் அவன் இஷ்டப்படி தான் நடக்கணும்னு நினைப்பான்., என்று புலம்பியவர்.. அந்த பொண்ணை பத்தின விவரத்தை சொல்லுங்க" என்றார் சுதாகரிடம்.
"பொண்ணு பேரு நிவேதா, வயசு 23, வீடு கோவில்பாளையம் என கூறியவர்.. இதுக்கு முன்னாடி வேலை செஞ்சவங்களாவது, கொஞ்சம் வயசுல பெரியவங்க., அதனால ஒரு மாசம் தாக்குபிடிச்சாங்க. ஆனா இந்த பொண்ணு, ஒரு வாரம்கூட தங்காதுன்னு தோணுதுமா" என்றார் சந்தேகமாக.
"நீங்க சொல்ற மாதிரி மட்டும் நடக்கட்டும்.. அவனை அதுக்கப்புறம் நான் பாத்துக்குறேன்" என்றார் சிவகாமி கோபமாக.
" சரிமா, சார் என்னை கார்மெண்ட்ஸ்க்கு போக சொல்லி இருக்காரு., நான் போயிட்டு வரேன்மா" என கூறிவிட்டு சென்றார் சுதாகர்.
"நீ ஏன் மித்ரா இப்படி இருக்க" என்று கலங்கிய குரலில் கூறினார் மித்ரனின் அத்தை சிவகாமி.
*******
வேலை கிடைத்த சந்தோஷத்தில், வீட்டிற்கு வந்து நிவேதா.. "அம்மா, அம்மா" என்று கத்த..
சமையலறையில் இருந்து வெளியே வந்த நிவேதாவின் தாய் சுதா.. "ஏன் நிவி இப்படி கத்துற" என்றார்.
"அம்மா எனக்கு வேலை கிடைச்சிடுச்சு" என்று தாயை கட்டிக்கொண்டு கூறியவளிடம்.. "இப்பவே நீ வேலைக்கு போகணுமா நிவி, உன்னோட உடம்பு, இன்னும் கொஞ்சம் நல்லானதுக்கு அப்புறம் போகலாமே" என்றார் அக்கறையாக.
"அம்மா என் உடம்பு நல்லாதான் இருக்கு" என்றவள், "இப்போ நான் வேலைக்கு போகலைன்னா, நம்ம நிலைமை இன்னும் மோசமாயிடும் ம்மா" என்றாள் தாயிடம்.
மகளின் பதிலில் உண்மையை உணர்ந்த சுதா.. "சரிம்மா.. நீ போ ஆனா, வேலை ரொம்ப கஷ்டமா இருந்தா வேண்டாம்" எனக்கூற..
"கஷ்டமான வேலை எல்லாம் ஒன்னும் இல்லம்மா.. கேர்டேக்கர் வேலைதான் என்றவள், சம்பளம் 30,000 ரூபாய்" என்று புன்னகைத்தாள்.
"முப்பதாயிரம் ரூபாயா" என்று, வாயை பிளந்த சுதா.. "அவ்ளோ சம்பளம்னா வேலை அதிகமாக தானே இருக்கும்" என்றார் அப்பாவியாக.
"அம்மா, ஆறு மாச குழந்தையை பார்த்துக்கணும்மா, அதனாலதான் இவ்வளவு சம்பளம் தராங்க" என்றாள் நிவேதா.
"நிவி, குழந்தையை பாத்துக்குற வேலையா" என சுதா கண் கலங்க...
"அம்மா ப்ளீஸ்" என்றவளின் கண்களில், எதையும் ஞாபகப்படுத்ததே எனஇருக்க.. அதற்கு மேல் சுதா எதுவும் பேசவில்லை.
சிறிதுநேர மௌனத்திற்கு பின்.. "நந்துவும், வினோவும் எங்கம்மா" என்றாள், தாயிடம்.
"வினோத் இப்போதான் அவன் ஃப்ரெண்ட பாக்க போனான். நந்திதா கோவிலுக்கு போய் இருக்கா" என்ற சுதா.. "சரி நீ சாப்பிடு வா".. என்றவர் சமையலறையை நோக்கி சென்றார்.
"ஒழுங்கா படிக்காம ஃப்ரண்ட பாக்க போய்ட்டானா அவன்.. வரட்டும் பேசிகிறேன்" என்ற நிவேதா.. உணவு உண்ண தொடங்கினாள்.
அப்பொழுது கோவிலில் இருந்து வந்த நந்திதா.. "ஹே வந்துட்டியா நிவி, இந்தா குங்குமம் வச்சுக்கோ" என, நிவேதாவிற்கு குங்குமத்தை வைத்து விட்டாள்.
"நிவி இன்டர்வியூக்கு போனியே என்ன ஆச்சி" என, அவளிடம் கேட்க..
"செலக்ட் ஆயிட்டேன் நந்து" என்றாள் நிவேதா.
"ஹேய் சூப்பர் நிவி.. என்ன ஒர்க், எப்போதிலிருந்து ஜாயின் பண்ணனும்" என, கேட்டவளிடம்..
"நாளையிலிருந்து ஜாயின் பண்ணனும் நந்து, காலைல 8 மணிக்கு அங்கே இருக்கணும்" என்றவள், என்ன வேலை என்று கூறினாள்.
நிவி கூறியவற்றை கேட்ட நந்திதா.. "நிவி, நீ ஒகேதானே, ப்ராப்ளம் ஒன்னும் இல்லையே" எனக் கேட்க...
"ஒரு ப்ராப்ளமும் இல்லை நந்து".. என்றாள் நிவி.
இருவரும் பேசிக் கொண்டிருக்க.. சுதா நந்திதாவிடம்.. "நந்து, நீ வேலை செய்ற இடத்துல.. அட்வான்ஸா ஒரு 3000 ரூபாய் கிடைக்குமான்னு கேட்டு பாக்குறியா" என்றார் சங்கடமான குரலில்.
"இப்போ எதுக்குமா பணம்" என நந்திதா கேட்க..
"வினோத் ஸ்கூல்ல, எல்லாரும் பிக்னிக் போறாங்களாம். அவனும் போகணும்னு ஆசைப்படுறான். அதுக்குத்தான் பணம் வேணும்" என்றார் சுதா.
"அம்மா, நானே காலேஜ் முடிச்சுட்டு, ஈவினிங்ல பார்ட் டைம் ஜாப் பார்த்துட்டு இருக்கேன். அதுவும் இன்னும் ஒரு வருஷம் கூட ஆகலை, அதுக்குள்ள எப்படிமா அட்வான்ஸ் எல்லாம் கொடுப்பாங்க" என்றாள் கவலையாக.
"இந்த வருஷம் முடியாது, அடுத்த வருஷம் பாத்துக்கலாம்னு சொல்லிடுங்கம்மா" என நந்து கூற..
"ரொம்ப ஆசையா கேட்கிறான்டி" என்று வருத்தமாக கூறினார் சுதா.
"அவன் சின்ன பையன்.. நம்ம நிலைமை என்னன்னு அவனுக்கு தான் தெரியாது., உங்களுக்கு கூடவா தெரியாது" என்றாள் நந்து.
"ம்ம்.. சரி நந்து, நான் அவன்கிட்ட சொல்றேன்" என்ற சுதா.. "நீயும் வந்து சாப்பிடு நந்து" என்றார்.
தாயும், தங்கையும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த நிவேதா.. "அம்மா.. நீங்க பக்கத்துல யார்கிட்டயாவது, பணம் வாங்கி தம்பிக்கு குடுங்க.. நான் தான் வேலைக்கி போக போறேனே.. அடுத்த மாசம் கொடுத்திடலாம்" என்றாள்.
"வேண்டாம் நிவி, இந்த வருஷம் அவன் பிக்னிக் போகலைன்னா என்ன, அடுத்த வருஷம் போய்க்கட்டும்" எனக் கூறினாள் நந்து.
"நந்து, ஸ்கூல்ல எல்லாரும் போகும்போது அவன் மட்டும் போகலைன்னா., அவன் மனசு கஷ்டபடாதா.. அதுதான் நான் வேலைக்கு போக போறேன்ல, அப்புறம் ஏன் நீ பயப்படுற., பாத்துக்கலாம் விடு நந்து" என்றாள் நிவேதா.
உடனே சுதா. "அப்போ நான் பக்கத்து வீட்டு சுமதி அக்காகிட்ட., பணம் வாங்கி கொடுத்துடட்டுமா" என்றார்.
"அதான், அவ சொல்லிட்டாளே., அப்புறம் என்ன" என்றவள், உணவு உண்ண சென்றுவிட்டாள்.
தங்கையும், தாயும் சென்றுவிட.. தனியாக அமர்ந்திருந்த நிவேதா.. "ஏன்ப்பா எங்களை விட்டு போனீங்க, நீங்க இல்லாம ரொம்ப கஷ்டப்பட்றோம் ப்பா" என எண்ணினாள், கண்களில் நீர் திரையிட.
தொடரும்...
 
Last edited:
Top