ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஒரு மழையோடு தான் வெயில் சேர்ந்ததே - கதைத்திரி

Status
Not open for further replies.

Ammu ramu

New member
Wonderland writer
பகுதி 1



காலை நேர பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் இருந்தது அந்த சாலை. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்லும் பணியாளர்கள் என மக்கள் கூட்டம் நிரம்பியிருந்த, அந்த பேருந்து நிறுத்ததில்.



அரசு பேருந்து ஒன்று வந்து நிற்க, "கோவில்பாளையம் எல்லாம் இறங்குங்க" என்ற நடத்துனர்.. "இறங்கறவங்களுக்கு முதல்ல வழி விடுங்க.. பொறுமையா ஏறுங்கம்மா" என கூச்சலிட்டார்.



ஏற வேண்டியவர்கள் எல்லாம் ஏறியிருக்க, "கோவில்பாளையம் ஸ்டாப் எல்லாம் இறங்கியாச்சா" என்றவர், "போலாம் ரைட்" என கூற.. ஓட்டுநர் பேருந்தை இயக்கியிருந்தார்.



அப்போது "ஸ்டாப், ஸ்டாப்., ஸ்டாப், பஸ்ஸ நிறுத்துங்க" என கத்தியவாறு ஓடி வந்தாள் 23 வயதுடைய ஒரு இளம்பெண்.



சற்று ஒல்லியான தேகம், பால் போன்ற நிறம், 5 அடி உயரம், இடையை தொடும் கூந்தல், சிறிய நெற்றி, வில்போல் வலைந்த புருவம், மீன் போன்ற விழிகள், மென்மையான கன்னம், இயற்கையாகவே சிவந்த இதழ்கள், இதழ்களுக்கு கீழே இருந்திருக்கலாம் என எண்ணத் தோன்றும், தாடையோர மச்சம், சற்று நீள்வட்டமான முகம், என பார்ப்பவர்கள் யாரும் பேரழகி என்று எண்ணும் தோற்றம்.



இப்படி ஒரு பேரழகி ஓடி வருவதை பார்த்து., பேருந்தின் பின்புறம் நின்றிருந்த சில இளவட்டங்கள், விசிலடித்து பேருந்தை நிறுத்தியிருக்க.. அவர்களைத் தாண்டிச் சென்றவள்., "தேங்க்ஸ்" என்று கூறிவிட்டு, பேருந்தின் முன்புறம் வந்து ஏறியிருந்தாள்.



மீண்டும், "போலாம் ரைட்" என்று நடத்துனர் கூற.. வேகமாக பேருந்தை ஓட்டினார் ஓட்டுநர்.



அனைவரிடமும் "டிக்கெட், டிக்கெட் என கேட்டுக் கொண்டே வந்தவர்., அந்த இளம்பெண்ணை நோக்கி.. எங்கம்மா போகணும்" என்றார் சத்தமாக.



"ஆர் எஸ் புரத்துக்கு ஒரு டிக்கெட்" என்றவள், தன் கை கடிகாரத்தை பார்க்க, நேரம் 8.45ஐ., காட்டியது.



"ஐயையோ, பத்து மணிக்கு இன்டர்வியூ., டிராபிக் இல்லாம இங்கிருந்தாலே 40 நிமிஷம் ஆகிடுமே. கடவுளே நடுவுல எந்த டிராபிக்கும் இருக்க கூடாது" என்று கடவுளிடம் மனு போட்டவாறு நின்றிருந்தாள்.



ஆனால், அவளின் மனு., கடவுளுக்கு சற்று தாமதமாக கிடைத்திருந்ததால்., சிறிதாக ஒரு போக்குவரத்து நெரிசலை உருவாக்கி இருந்தார் அவர்.



"அடச்சே.. என்ன கடவுளே இப்படி பண்ணிட்டே" என்று கடவுளிடம் சலித்துக் கொண்டாள் அவள்.



அப்போது.. "உன் வாழ்க்கையில் இவ்வளவு துன்பங்களை அனுபவித்தும், இன்னும் நீ அவரை நம்பி கொண்டிருக்கிறாயே" என்றது அவளின் மனசாட்சி.



உடனே "கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா, என்று அதனை அடக்கியவள்.. சீக்கிரமா இந்த டிராபிக்கை கிளியர் பண்ணிடு கடவுளே" என மற்றொரு மனுவை போட்டிருந்தாள்.



இந்த மனு சரியான நேரத்தில் அவரை அடைந்துவிட, 10 நிமிடத்தில் அந்த போக்குவரத்து நெரிசலை நீங்கியிருந்தார் அவர்.



"ஹப்பாடா, ரொம்ப தேங்க்ஸ் கடவுளே" என்று அவருக்கு நன்றி கூறியவள்.. "அப்படியே, இந்த வேலையும் எனக்கு கிடைச்சிடனும் கடவுளே" என இன்னொரு மனுவையும் அவருக்கு அனுப்பியிருந்தாள்.



"அட என்னம்மா நீ, இப்படி மனு மேல மனு போட்டுட்டு இருந்தா.. நான் என்னதான் பண்றது" என கடவுளே சலித்துக் கொள்ளும் அளவிற்கு செய்து கொண்டிருந்தாள் அவள்.



நேரம் 9.40ஐ நெருங்கியிருக்க, ஒரு வழியாக ஆர்.எஸ் புரம் வந்து சேர்ந்திருந்தாள்.



பேருந்தில் இருந்து இறங்கியவள்., அருகில் இருந்த ஒருவரிடம், "அண்ணா பொன்னுசாமி நகருக்கு எப்படி போகணும் என்றாள். அவரும் அந்த தெருவிற்கான வழியை கூற.. ரொம்ப தேங்க்ஸ் அண்ணா" என்றவள், வேக வேகமாக ஓடினாள்.



சரியாக 9.55திற்கு லட்சுமி இல்லம் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்த அந்த வீட்டு கேட்டின் முன் சென்றவள்., "அண்ணா நான் இன்டர்வியூக்கு வந்து இருக்கேன்" என்றாள், காவலாளியிடம்.



"என்னம்மா இவ்வளவு லேட்டா வந்திருக்க, முதலாளி ஐயாவுக்கு லேட்டா வர்றவங்களை கண்டாலே பிடிக்காது" என அவர் கூற..



"அண்ணா, பஸ்ல தான் வந்தேன்., சிக்னல்னால கொஞ்சம் லேட் ஆயிடுச்சுங்க ண்ணா" என்றாள் அவள்.



"சரி, சரி இன்னும் இன்டர்வியூ ஆரம்பிச்சிருக்காது., நீ டக்குனு உள்ள போய் உக்காந்துருமா", என பக்கவாட்டில் இருந்த சிறிய கேட்டினை திறந்து விட்டார், அந்த காவலாளி.



உடனே உள்ளே நுழைந்தவள் கடகடவென சென்று நேர்முகத் தேர்வு நடைபெறும் இடத்தில் அமர்ந்து கொண்டாள்.



25 பெண்களுக்கு மேல் நேர்முகத் தேர்வுக்கு வந்திருக்க., அவர்களைப் பார்த்தவள்.. "ஒரே ஒரு வேக்கன்ட்க்கு இத்தனை பேரு வந்திருக்கோம். யாருக்கு இந்த வேலை கிடைக்கப் போகுதுன்னு தெரியலையே" கடவுளே என்றாள்.



சரியாக பத்து மணிக்கு நேர்முகத் தேர்வு துவங்கியிருந்தது.



ஒவ்வொருவராக உள்ளே சென்று இருக்க.. வெளியே வரும் ஒருவரின் முகத்திலும் ஒளியே இல்லை.



அனைவரும் வெறுப்புடன் வெளியேறிக் கொண்டிருக்க.. "என்ன எல்லோரும் ஒரு மாதிரியா போறாங்க.. உள்ள என்ன கேட்கிறாங்கனு தெரியலையே" என எண்ணியவள், பதட்டமாகவே அமர்ந்திருந்தாள்.



கிட்டதட்ட அனைவரும் வெளியேறியிருக்க., அவள் மட்டுமே எஞ்சியிருந்தாள்.



"மேடம், நீங்க உள்ள போகலாம்" என்று பணியாள் ஒருவன் வந்து கூற.. படபடக்கும் இதயத்தை அழுத்திக் கொடுத்தவள்.. "கடவுளே நீ தான் காப்பாத்தணும்" என்றவாறு அந்த அறைக்குள் நுழைந்தாள்.



அங்கு சுழல்நாற்காலியின் பின்புறமும், ஒரு மனிதனின் தலையும் தெரிய.. அறையில் நுழைந்தவள், கதவின் அருகே அசையாமல் நிற்க., "வந்து உட்காரு", என்று அதிகாரக் குரலில் கூறினான் அவன்.



அவன் குரலை கேட்டு மிரண்டவள்.. தடுமாறியபடியே வந்து இருக்கையில் அமர...



அவள் புறம் திரும்பாமலே "இன்டர்வியூக்கே லேட்டா வரியே., உன்னை நம்பி எப்படி வேலை கொடுக்கிறது" என்றான் கோபமாக.



அவன் கோபத்தில் பயந்தவள்., "ப..ப.. பஸ் சி.. சி..சிக்னல்ல.. என தடுமாற.., உனக்கு என்ன திக்குவாயா" என்றான் சூடாக.



"அச்சச்சோ, அப்படி எல்லாம் இல்ல சார்.. நான் நல்லாவே பேசுவேன் என்றவள்., வரண்டிருந்த தொண்டைக் குழிக்குள் எச்சில் விழுங்கி கொண்டு.. பஸ் சிக்னல்ல மாட்டிகிட்டதால லேட் ஆயிடுச்சு சார்" என்றாள் வேகமாக.



"மனமோ, எப்படி இவருக்கு நான் லேட்டா வந்தது தெரிஞ்சிருக்கும்" என எண்ணிக்கொண்டிருக்க.. அவள் மனதைப் படித்தவன் போல்..



"என்னை சுற்றி எது நடந்தாலும், அது எனக்கு தெரியாமல் இருக்காது" எனக்கூற..



"ஆத்தாடி., நான் மனசுல நினைச்சது கூட இவருக்கு தெரிஞ்சிருச்சா.. என அதிர்ந்தவள்.. எதையும் யோசிக்காத டி" என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.



உடனே, "உனக்கு இந்த வேலை கிடைக்கலைன்னா, என்ன பண்ணுவ என அவன் கேட்க..



"போச்சு., அப்போ இந்த வேலை நமக்கு கிடையாது என்று எண்ணியவள்.. வேற ஏதாவது வேலை தேடுவேன் சார்" என்றாள் வருத்தமாக.



"ஓ! என்றவன் இன்னும் அவள் புறம் திரும்பாமலேயே., அப்போ உனக்கு இந்த வேலை கிடைச்சா என்ன பண்ணுவ" என்றான்.



உடனே மகிழ்ந்தவள்., என்னோட பெஸ்ட்டையும், சின்சியாரிட்டியையும் இந்த வேலையில காமிப்பேன் சார்" என்றாள் உற்சாகமாக.



"ம்ம் என்றவன்.. தெரியாத ஒரு குழந்தை திடீர்னு உன் முகத்திலேயே வாமிட் பண்ணிட்டான். நீ என்ன பண்ணுவ" என கேட்டான் அவன்.



"என்னை கிளீன் பண்ணிக்கிட்டு, குழந்தையையும் கிளீன் பண்ணி விட்டுடுவேன் சார்" என்றாள் அவள்.



பிறகு குழந்தை பராமரிப்பு பற்றிய மேலும் சில கேள்விகளை அவன் கேட்டிருக்க.. அனைத்து கேள்விகளுக்கும் முகம் சுளிக்காமல் பதிலளித்தாள் அவள்.



கேள்விகள் அனைத்தையும் கேட்டு முடித்தவன், சிறிது நேரம் அமைதியாகவே இருக்க..



"என்ன குழந்தைகளை பற்றி கேள்வியாவே இருக்கு, ஒருவேளை ப்ளே ஸ்குள் நடத்தறாரோ.. ஸ்கூலுக்கு ஆள் வேணும்னு தான் இந்த இன்டர்வியூவா இருக்குமோ.. என்ன மாதிரி வேலைன்னு தெரியாமலே., ஆட்கள் தேவைன்னு பார்த்ததும், உடனே கிளம்பி வந்துட்டோமே" என, அவள் யோசித்துக் கொண்டிருந்தாள்.



ஆம்., என்ன மாதிரியான வேலை என்ற எந்த விவரமும் அந்த செய்தித்தாளில் இல்லை. வேலைக்கு ஆட்கள் தேவை, பெண்கள் மட்டும் என்ற விளம்பரத்தில் முகவரியும், அலைபேசி எண்ணும் மட்டுமே இருக்க., அதைப் பார்த்ததும் உள்ளூரிலே வேலை கிடைத்தால் நல்லது என்ற மனநிலையில் இருந்தவள் உடனே இங்கு வந்து விட்டாள்.



அவளது பதில்களில் திருப்தியுற்றிவன்.. திடீரென நாற்காலியை சுழற்றி முன்புறம் திரும்பியிருக்க..



அவனின் இந்த திடீர் செயலில் மிரண்டவள்., உடனே எழுந்து நின்றாள்.
"சிட்.. மிஸ் நிவேதா" என்றவனின், அதிகார தொனியில்.. அப்படியே அமர்ந்து விட்டாள்.



சில நிமிடம் அவளை ஆராய்ச்சியாக பார்த்தவனின் கண்களுக்கு, அவளின் அழகு தெரிந்திருக்கவேயில்லை.



"சர்டிஃபிகெட்ஸ்" என கேட்டவனிடம்.. தன் கையில் இருந்த., அந்த கோப்புகளை கொடுத்தவள்., அதை வாங்கி புறட்டியவனை.. சிலநொடிகள் உற்றுநோக்கினாள்.
"
உட்கார்ந்திருக்கும்போதே நல்ல உயரமா தெரியிறார்., எப்படியும் 6 அடிக்கு மேலேயே இருப்பார் போல" என்று எண்ணியவள்., முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இறுக்கமாக இருந்தவனுக்கு, 30 வயது இருக்கலாம் என சரியாக கணித்திருந்தாள்.



மாநிறத்திற்கும் சற்று கூடுதல் நிறம், தினமும் உடற்பயிற்சி செய்பவன் என கூறும் சிக்ஸ்பேக் உடர்கட்டு.. தீட்சண்யமான விழிகள், அழுத்தமான உதடுகள், ஆளுமையான தோற்றம் என அனைவரையும் கவர்ந்துவிடும் ஆணழகனை அவளும் ஆராய்ச்சியாகவே பார்த்தாள்.



"ஏன் படிப்பை பாதியிலே நிறுத்திட்ட" என்றவனின் கேள்விக்கு..



"


அப்பாவுக்கு திடீர்னு உடம்பு சரி இல்லாம ஆயிடுச்சு., பணம் கட்டி படிக்க வைக்க முடியல. அதனால படிப்பினை நிறுத்திட்டேன்" என்று பதிலலித்தாள் அவள்.



அவளின் பதிலுக்கு சிறு பார்வையை மட்டும் அவளிடம் செலுத்தியவன்.. "யுவர் அப்பாயிண்டட்., வேலைய பத்தின டீடெயில்ஸ் எல்லாம் மேனேஜர் உனக்கு எக்ஸ்ப்ளைன் பண்ணுவாரு, அண்ட் லேட்டா வந்தா எனக்கு சுத்தமா பிடிக்காது., இதுதான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்டா இருக்கணும்., நவ் யூ கேன் கோ" என்றான், கடினமான குரலில்.



தனக்கு வேலை கிடைத்த மகிழ்ச்சியில்., "ரொம்ப தேங்க்ஸ் சார், இனிமே லேட்டா வரமாட்டேன் சார்" என்று கூறியவள், அங்கிருந்து வெளியேற கதவை திறக்க..

"


ஒன் மினிட்" என்று நிறுத்தியிருந்தான் மித்ரன்.
அவன் அவ்வாறு கூறியதும், சட்டென திரும்பி நின்றவள், "சார்" எனக்கூற..

"


டீடைல்ஸ் எல்லாம் தெரிஞ்சுகிட்ட பிறகு, எனக்கு வேலை வேண்டாம், நான் வரமாட்டேன்னு சொல்லக்கூடாது. அப்புறம் டூ இயர் காண்ட்ராக்ட் இருக்கு, அதுலயும் சைன் பண்ணிடனும்" என்றான் திட்டவட்டமாக.







தான் இருக்கும் நிலைமைக்கு, வேலை கிடைத்தால் போதும் என்று எண்ணியிருந்தவள்., "சரி சார், தேங்க்யூ சார்" என்று கூறிவிட்டு அறையிலிருந்து வெளியேறினாள்.



தொடரும் ...
 

Attachments

  • IMG_20260109_232112.jpg
    IMG_20260109_232112.jpg
    731.8 KB · Views: 0
Status
Not open for further replies.
Top