ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஏன் நுழைந்தாய் இதயத்தில்-கதை திரி

Status
Not open for further replies.

Tripura

New member
Wonderland writer
ஹாய் பிரெண்ட்ஸ்

நான் திரிபுரா...எழுத்துலகிற்கு புதுவரவு இது என் முதல் கதை இதற்கு உங்க கருத்துக்களை பகிர்ந்து உற்சாகப்படுத்துவீங்க நம்பறேன்...கதையோட சின்ன இன்ட்ரோ

ஹீரோ கிருஷ்ணாமிருதன்

ஃபுல் ஜாலி டைப்...பப் பார்ட்டி பிரெண்ட்ஸ் இப்படி... குடும்பத்துக்கு அவன் கொடுக்கற நேரம் ரொம்ப கம்மி...பொறுப்புங்கறது மருந்துக்கும் கிடையாது...பிரவீணா இவன் கேர்ள் பிரெண்ட்...ஒரே சீரியஸான விஷயம் அதான்


ஹீரோயின் ருக்மிணி

ரதியெல்லாம் கிடையாது மூக்கு முழியுமா அழகிதான்(நம்ம கிருஷ் பாஷைல சொல்றதானா சப்பை ஃபிகர்)...கடின உழைப்பாளி குடும்பம் தான் அவளுக்கு எல்லாம்...தன்மானமே அவள் சொத்து...

வேற வேற பாதைல பயணக்கிற இவங்க விதியால ஒரே நேர்க்கோட்டில சந்திக்கும் போது அங்கே காதல் மலருமா?
 

Tripura

New member
Wonderland writer
ஹாய் பிரெண்ட்ஸ் கதையிலிருந்து சின்ன டீசர்... படிச்சிட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க ???


மாடியில் தன் அறையில் இருந்து ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த கிருஷ்ணா வீட்டின் பின்புறத்தில் யாருமில்லாததை உறுதிப்படுத்திக் கொண்டவன் நிம்மதிப் பெருமூச்சுவிட்டவனாக பைக் சாவியைச் சுழற்றியபடி தடதடவென பின்புற படிகளில் இறங்கி தோட்டத்தில் இருந்த சின்னஞ்சிறு வாயிலை நெருங்கிய சமயம் அவன் பின்னிருந்து,


"ஏன்டா அமிர்தா பின்வழியா எஸ்கேப் ஆகப் பாக்கறீயா!"என்று தாத்தனின் குரலில் தூக்கிவாரிப் போட திரும்பியவன்,


"சார்லஸ் நீங்க என்னை கிருஷ்ணா கிருஷ் கிரு இல்ல கிட்டின்னு வேணும்னாலும் கூப்பிடுங்கோ! தயவுசெஞ்சு அமிர்தான்னு லேடி நேம்ல கூப்புட்டு வெறுப்பேத்தாதேள்!...என் பிரெண்ட்ஸ் முன்னாடி கூப்பிட்டு அவாள்ளாம் அம்முன்னு என்னைக் கூப்பிட்டுக் கேலி பண்றா!"


"ஏன்டா நான் ஆத்துல உங்க அப்பா பண்ற நவகிரக ஹோம்மத்துக்கு இல்லாம வெளியேப் போறியேன்னு கேக்க வந்தா... பேச்சை மாத்தி நான் என் அப்பன் ஈசன் பேரான அமிர்தன்னு கூப்பிட்டத தப்புன்னு சொல்றியா?"என்று வம்பு வளர்க்க வெளியே ரோட்டில் தங்கள் பைக்கில் காத்திருக்கும் நண்பர்களை எண்ணி பல்லைக் கடித்த கிருஷ்,


"தாத்தா!சும்மா வம்பு வளர்க்காதேள்... எனக்கு நாழியாயிடுத்து!என் பிரெண்ட்ஸ் காத்திண்டு இருப்பா! ஹிட்லர் கண்ணுல பட்றதுக்குள்ள நான் போகனும்"என்று படபடத்தவன் கேட்டைத் திறந்துக் கொண்டு வெளியேறி விட்டான்.


தூரத்தில் அவன் பைக் அருகே தங்கள் பைக்கோடுக் காத்திருந்த நண்பர்களில் ஒருவனான தினேஷ் இவன் அருகே வந்ததும்,


"கிருஷ்!என்னடா இவ்ளோ லேட் பண்ணிட்ட?அங்கே ஏற்கனவே நம்ம செட்டெல்லாம் போயாச்சு...லேட்டானா தீர்த்தம் காலியாயிடும் தெரியுமோன்னோ"என்று கையை முழம் போட்டு அது என்ன வகையானத் தீர்த்தம் என்று காட்ட எல்லோரும் கொல்லென்றுச் சிரிக்க தானும் சிரித்த கிருஷ்,


"வீட்ல ஹோமம்டா வீடுப் பூரா சொந்தக்காரா நிரம்பி இருக்கா எப்படியோ தப்பிச்சு பின்வழியா வந்தா நம்ம சார்லஸ் புடுச்சிண்டிட்டார்...அவரை சரிக்கட்டி வர லேட்டாயிடுத்து..சரி சரி விடு ஜுட் லெட்ஸ் என்ஜாய் த பிக்னிக்"என்று பைக்கை உதைத்துக் கிளப்ப அவனைப் பின் தொடர்ந்தனர் அவனின் தோழர்கள்.


????????????


சைக்கிள்களை வேகவேகமாக வியர்வை வழிய மிதித்தாள் ருக்மிணி.வீட்டிற்குத் தேவையான மாத சாமான் முடிந்துவிட்டதால் ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருந்த டவுனில் தேவையானதை வாங்கிக் கொண்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தாள். சாமானை வீட்டில் கொடுத்துவிட்டு வயல் வேலைக்கு வேறு அவள் செல்ல வேண்டும்.நேரமானால் இன்றைய ஆள்யெடுப்பு முடிந்து விடும்.


ரோட்டின் சிறிய பாலத்தில் சிகரெட்டை இழுத்துப் புகைத்த பரந்தாமன் தூரத்தில் இழுத்து சொறுகிய பாவாடை தாவணியில் சைக்கிளில் வரும் பருப்பெண்ணைக் கண்டதும் வாயில் இருந்த பல் அனைத்தும் வெளியேத் தெரிய இளித்தவன்,


"டேய் மச்சான்!யாருடா இந்த குட்டி சும்மா தளதளன்னு இருக்காளே!"என்று தன் பக்கத்தில் அவனிடம் ஓசி தம்மைப் புகைத்துக் கொண்டிருந்த தன் சகாவிடம் கேட்க அதற்கு அவன் மறுபுறத்தில் அமர்ந்திருந்த மற்றொருவன்,


"ஓ அவளா!அவ கிழக்குவயல் பொன்னையா இல்ல அவன் பொண்ணு ருக்மிணி!நீ பட்டணம் போயி ரொம்ப வருசம் ஆச்சு இல்ல அதான் உனக்கு அவளை அடையாளம் தெரியல"என்று விலாவாரியாக விளக்க அதில் உற்சாகமானவன் ருக்மிணியின் சைக்கிள் அவர்களைத் தாண்டிய நேரம்,


"சின்ன மணிக் குயிலே!மெல்ல வரும் மயிலே!எங்கே உன் ஜோடி இல்லாம கேட்டால்தான் பதிலும் சொல்லாம போவதேனடி ருக்மிணி ருக்மிணி பதில் சொல்லு நீ!சொல்லு நீ!"என்று தன் நாராசக் குரலில் பாட சைக்கிள் பேர்க் போட்டு நிறுத்திய ருக்மிணி பையில் கைவிட்டு எதையோ கைகளில் எடுத்துக் கொண்டவள் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு விட்டு கைகளை பின்னே காட்டியவாறு பரந்தாமன் அருகில் வந்தவள்,


"என்ன பாடின சின்ன மணி குயிலா!மெல்ல வரும் மயிலா!என்னைப் பார்த்தா பாடின!"என்று சாதாரணக் குரலில் கேட்க அதன் உள்குத்துப் புரியாத அவனோ உற்சாகமாக,


"ஆமா ஆமா உன்னைப் பார்த்துத்தான் பாடினேன்...ருக்கு!"என்று வழிய


"யாருடா ருக்கு!"என்று பல்லைக் கடித்தபடி கேட்டவள் கையில் மறைத்து வைத்திருந்ததை அவன் முகத்தில் வீசி விட்டாள்.


"ஐயோ கண்ணு எரியுதே!....ஐயோ மிளகாய் தூளு!ஏரியுதே....ஆ....."என்று அவன் அலற,


"ஆமாடா மிளகா தூளே தான்....உன்னை மாதிரி அப்பன் பணத்துல திமிரெடுத்து ஊர் திரியுர மைனருக்கெல்லாம் இந்த ருக்மிணி பதில் இதுதான்..!"என்று கைத்தட்டியவாறு சென்று தன் சைக்கிளில் ஏறிப் பறந்து விட்டாள்.
 
Status
Not open for further replies.
Top