எபிலாக்
இரு வருடங்கள் கழிந்து இருக்கும், ஆதிரையாழ் மற்றும் சர்வஜித்தின் இரண்டாவது குழந்தைக்கு ஒரு வயது கடந்து இருந்தது... பெண் குழந்தை தான் அவர்களுக்கு...
சர்வயாழினி என்று பெயர் சூட்டி இருந்தார்கள்...
இருவரது பெயரையும் இணைத்த பெயர்...
கோடை கால விடுமுறைக்கு ஊருக்கு அனைவரும் வந்து இருந்தார்கள்...
ஊருக்கு வந்ததுமே மருதநாயகத்துக்கு அப்படி ஒரு உற்சாகம், தோட்டத்தில் அமர்ந்து சுற்றி இருப்பவர்களுடன் கதை பேச ஆரம்பித்து விட்டார்...
ரணதீரனோ தன்னை தேடி வந்த நண்பர்களுக்கு நிறைய விளையாட்டு பொருட்களை கொடுத்து அவர்களுடன் விளையாடிக் கொண்டு இருந்தான்...
சர்வயாழினியை அவர்கள் வீட்டில் வேலை பார்க்கும் கனகம்மா தூக்கி கொஞ்சிக் கொண்டு இருக்க, அவளை சுற்றி பலர்...
"கொழு கொழுன்னு அழகான குட்டி" என்று எல்லாரும் சர்வயாழினியை முத்தமிட்டே தள்ளி விட்டார்கள்...
இவ்வளவு நடந்துக் கொண்டு இருக்கும் போது, மாடியில் இருக்கும் குளியலறைக்குள் இருந்து முத்த சத்தங்களும் முனகல் சத்தங்களும் தான் வந்துக் கொண்டு இருந்தன...
ஷவரின் கீழே, அவனை மட்டும் ஆடையாக கொண்டு, அவனை அணைத்துக் கொண்டே அவன் முத்தத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தாள் ஆதிரையாழ்...
ஒரு கட்டத்தில் தனக்குள் மூழ்கி இருந்தவனை பிரித்து எடுத்தவள், அவன் விழிகளுடன் விழிகளை கலக்க விட்டவாறு, "இங்கேயுமா?" என்று கேட்டாள்.
அவள் என்ன தான் கேட்டாலும் அவள் மேனி அவனுடன் பிணைந்தபடி தான் இருந்தது...
அவனோ இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே, "முடியலடி" என்று சொல்லிக் கொண்டே, மீண்டும் முத்தமிட முயல, சட்டென அவன் வாயில் கையை வைத்தவள், "இப்போ தானே ஒரு ரவுண்ட் முடிஞ்சுது... மறுபடியுமா? யாழினி என்னை தேட போறா" என்றாள்.
அவனோ அவளை விழுங்கி விடுவது போல பார்த்துக் கொண்டே விலகியவன், "என் பெண்ணுக்காக உன்னை விடுறேன்" என்றான் கண்களை சிமிட்டி...
அவளோ, "ரொம்ப தான்" என்று சொல்லிக் கொண்டே, டவலை எடுத்து மார்பில் முடிந்த நேரம், கீழே யாழினி அழும் சத்தம் கேட்டது...
அவளோ, "ஐயோ அழ ஆரம்பிச்சுட்டா, பால் கொடுக்கிற நேரம், சீக்கிரம் ட்ரெஸ் மாத்திட்டு அவளுக்கு பால் கொடுக்கணும்" என்று சொல்லிக் கொண்டே குளியலறைக் கதவை நோக்கிச் செல்ல, குரலை செருமிய சர்வஜித்தோ, "புரிஞ்சு தான் பேசுறியா?" என்றான்...
அவளோ அதிர்ந்து அவனை திரும்பி பார்த்தவளுக்கு ஏதோ உறைக்க, "எல்லாம் உங்களால தான்" என்றாள் நெற்றியை பிடித்துக் கொண்டே...
"நான் என்னடி பண்ணட்டும்? டைம் டிஃபெரன்ஸ்ல கன்ஃபியூஸ் ஆயிட்டேன், அங்க நைட்ல தானே ஃபீட் பண்ணுவ" என்று சொல்லிக் கொண்டே தலையை அழுந்த கோதியவன், "பாக்கெட் மில்க் கொண்டு வந்த தானே" என்றான்...
"ம்ம் இருக்கு" என்று சொல்லிக் கொண்டே வெளியேறிச் சென்றவள் சீக்கிரமாக ஆயத்தமாகி கீழே இறங்க, அங்கே சர்வயாழினியை தூக்கி வைத்து இருந்த கனகம்மாவோ, "அழுதுட்டே இருக்காம்மா, பால் கொடு" என்று குழந்தையை நீட்ட, "கொஞ்சம் வச்சுக்கோங்க அக்கா, இதோ வரேன்" என்று சொல்லிக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள்.
கனகம்மாவோ அவள் முதுகை யோசனையுடன் பார்க்க, சிறிது நேரத்தில் புட்டிப்பாலை எடுத்துக் கொண்டு வந்தாள் ஆதிரையாழ்.
அவள் கையில் இருந்த பால் புட்டியை பார்த்த கனகம்மாவோ, "நேற்று தாய்ப்பால் தானே கொடுத்தம்மா, இன்னைக்கு ஏன் புட்டிப்பால்?" என்றார்...
அவளுக்கோ என்ன பதில் சொல்வது என்று தெரியவே இல்லை...
திரு திருவென விழிக்க ஆரம்பித்து விட்டாள்.
அந்த நேரம் சர்வஜித்தும் வேஷ்டி சட்டையுடன் மாடியில் இருந்து இறங்கி வர, கனகம்மாவோ, "இப்படி பால் அடிக்கடி மாத்தி கொடுக்கிறது சரி இல்லம்மா" என்றார்...
ஆதிரையாழோ தலையை கோதிக் கொண்டே தன்னை தாண்டிச் சென்ற சர்வஜித்தை முறைத்துப் பார்க்க, அவனோ அவளை ஒரு கணம் பார்த்து விட்டு, தலையை கோதிக் கொண்டே விறு விறுவென வெளியேறி விட்டான்.
இப்போது பதில் சொல்ல முடியாமல் தடுமாறியது என்னவோ ஆதிரையாழ் தான்...
"ஹி ஹி அக்கா, அவ ரெண்டும் குடிப்பா" என்று சொல்லிக் கொண்டே, அவரிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டே, ஓரமாக அமர்ந்தவள் புட்டிப்பாலை புகட்ட ஆரம்பித்து விட்டாள்.
இதே சமயம் வெளியே வந்த சர்வஜித் அருகே வந்த ரணதீரனோ, "அப்பா என்னை தூக்குங்க, எனக்கு மாங்கா வேணும்" என்று சொல்ல, அவனை தூக்கி தோளில் வைத்தான் சர்வஜித்...
ரணதீரனும் அவன் தோளில் அமர்ந்துக் கொண்டே மாங்காய் பறிக்க ஆரம்பித்து விட்டான்.
இதே சமயம், குழந்தைக்கு பால் கொடுத்து முடிய, குழந்தையை கனகம்மா வாங்கி எடுத்து விட்டார்...
ஆதிரையாழோ, "பண்ணுறதையும் பண்ணிட்டு, ஓடுறத பாரேன்" என்று வாய்க்குள் சர்வஜித்துக்கு திட்டிக் கொண்டே, அவனை தேடிச் செல்ல, அவனோ மகனுடன் மாங்காய் பறிப்பதில் குறியாக இருந்தான்...
மாங்காய் பறித்து முடிந்ததுமே, "இத உப்பு, மிளகாய் தூள் போட்டு எடுத்து வரேன்... அம்மாவுக்கு பிடிக்கும்" என்று சொல்லிக் கொண்டே, ரணதீரன் இரு மாங்காய்களை தூக்கிக் கொண்டே ஓடிச் சென்றான்.
அவன் செல்லும் வரை சர்வஜித் அருகே அமைதியாக நின்று இருந்த ஆதிரையாழோ, "பண்ணுறதையும் பண்ணிட்டு எஸ்கேப் ஆகி ஓடி வந்துட்டீங்களே" என்றாள்...
அவளை பக்கவாட்டாக திரும்பி பார்த்த சர்வஜித்தோ, "என்னடி பண்ணுனேன்?" என்று இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டே ஒற்றைப் புருவம் உயர்த்தி கேட்டவன் கண்களோ அவள் இதழ்களில் படிந்து மீள, "நான் என்ன கேக்கிறேன்... நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" என்று கேட்டாள்.
அவனோ, அவளை பார்க்காமல் நேரே பார்த்துக் கொண்டே, அவள் பின்னால் கையை கொண்டு வந்து புடவையூடு தெரிந்த அவள் வெற்றிடையில் தனது கையை வைத்து தன்னை நோக்கி நெருக்கிக் கொள்ள, அவள் தோள் அவன் மார்பில் பதிந்தது...
அவளோ சட்டென்று ஏறிட்டுப் பார்த்தவள், "யாரும் பார்த்திட போறாங்க" என்றாள்...
"பார்க்கட்டுமே, என் பொண்டாட்டி தானே" என்று சொல்லிக் கொண்டே அவள் அருகாமையில் கிறங்கி போனவன், சற்று குனிந்து அவள் செவியில் மெலிதாக இதழ்களை வைத்து உரசியவன், "இன்னும் வேணும்னு தோணுதுடி" என்றான்...
ஆதிரையாழோ, அவன் முகத்தை பார்த்து "அடங்கவே மாட்டீங்களா?" என்று கேட்க, இருவரின் இதழ்களும் மெலிதாக உரசிக் கொண்ட சமயம், "அம்மா" என்று சொல்லிக் கொண்டே வெட்டிய மாங்காய்களை கொண்டு ஓடி வந்தான் ரணதீரன்...
சட்டென அவனில் இருந்து அவள் மெதுவாக விலகிக் கொள்ள, "நைட் பார்த்துக்கிறேன்டி" என்றான்... அவளோ, "உங்க பசங்க விட்டா தானே" என்று சிரித்தபடி சொல்ல, அவனோ பெருமூச்சுடன் "சரி தான்" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே ரணதீரன் அருகே வந்து விட்டான்...
ஆதிரையாழோ, மாங்காய்களை ஆசையாக எடுத்து சாப்பிடுவதை மென் சிரிப்புடன் பார்த்துக் கொண்டே தானும் ஒரு மாங்காய் துண்டை எடுத்தான் சர்வஜித்...
அன்று மாலையே அனைவரும் ஆயத்தமாகி கோவில் திருவிழாவுக்குச் சென்றார்கள்...
அன்று சர்வயாழினிக்கு மொட்டை போட்டு இருந்தார்கள்...
கனகம்மா சர்வயாழினியை வைத்துக் கொண்டு இருக்க, அங்கே மணலில் அமர்ந்த மருதநாயகமோ, "யாழையும் தீரனையும் அழைச்சிட்டு கடை தெருவுக்கு போயிட்டு வாப்பா" என்றார் சர்வஜித்திடம்...
"அப்போ தங்கச்சி" என்றான் ரணதீரன்...
"சின்ன குழந்தைல அவ... அதனால நான் பார்த்துக்கிறேன்" என்று கனகம்மா சொல்ல, "சரி" என்று சற்று கோபமாக சொல்லிக் கொண்டே, சர்வஜித் மற்றும் ஆதிரையாழின் கையை பிடித்துக் கொண்டே நடந்தான்...
இருவரும் அவனை சிரிப்புடன் பார்த்துக் கொண்டே நடக்க, மருதநாயகமோ, "போன முறை போல சண்டை இழுத்துட்டு வந்துடாதடா" என்றார்...
அவனோ சட்டென அவரை திரும்பி பார்த்தவன், "என் பொண்டாட்டி மேல கையை வச்சா கண்டிப்பா அவன் முகத்தை உடைப்பேன்" என்று சிரித்தபடி சொல்ல, ஆதிரையாழோ பக்கவாட்டாக திரும்பி அவனை காதலுடன் பார்த்தாள்...
மருதநாயகமோ, "விளையாட்டு பிள்ளை" என்று சொல்லி சத்தமாக சிரிக்க, அவனும் சிரித்துக் கொண்டே, ஆதிரையாழை பார்த்து புருவத்தை ஏற்றி இறக்கினான்...
அவளோ ஒன்றும் இல்லை என்கின்ற ரீதியில் கண் சிமிட்டி தலையை ஆட்டி விட்டு ஒரு வெட்க புன்னகையுடனேயே நடந்தாள்...
ரணதீரன் ஆசைப்பட்ட எல்லாமே வாங்கி கொடுத்த சர்வஜித்தோ, ஆதிரையாழ் அருகே வந்து, "உனக்கென்ன வேணும்?" என்று கேட்டான்...
"எதுவுமே வாங்க தோணலையே" என்றாள்.
"ஏதாவது கேளுடி" என்று அவன் வற்புறுத்த, அவளோ அங்கிருந்த ஒரு குழந்தைகள் படத்தை தூக்க, "ம்ம்...புரிஞ்சு போச்சு, நான் ரெடி தான்" என்றான்...
அவளோ அவனை செல்லமாக முறைத்தவள், "கோவிலுக்கு வந்தும் இதே நினைப்பு தானா? இந்த படம் அழகா இருக்குல்ல" என்று சொல்ல, அவனோ, "வாங்கிடலாம்" என்று சொல்லிக் கொண்டே, அதனை வாங்கி கொடுத்தான்...
அவர்களுக்கு பின்னால் வந்த முத்துவுடன் ரணதீரன் சேர்ந்து கடையை சுற்றி பார்க்க ஆரம்பித்து விட, சர்வஜித்தை நெருங்கி நடந்த ஆதிரையாழோ, கையில் இருக்கும் குழந்தையின் படத்தை பார்த்துக் கொண்டே, "நம்ம யாழி குட்டிக்கு ரெண்டு வயசாகட்டும்" என்றாள்.
சர்வஜித்தும், "ஓகே, அதுக்கு அப்புறம்?" என்றான்...
அவளோ, அவனை திரும்பி அவன் விழிகளுடன் விழிகளை கலக்க விட்டபடி நடந்தவள், "உங்களுக்கு எத்தனை குழந்தைங்க வேணும்?" என்று கேட்க, அவனோ, "ஒரு அஞ்சு" என்று சொல்லும் போதே கோவில் மணி அடித்தது...
இருவரும் ஒன்றாக கோவில் மணியை திரும்பி பார்க்க, ஆதிரையாழோ, "மணியே அடிச்சுடுச்சு... உங்க ஆசைப்படியே அஞ்சு குழந்தைங்க பெத்துக்கலாம்... அப்போ தான் வீடு இன்னும் கல கலன்னு இருக்கும்" என்று சொல்ல, அவள் கையுடன் தனது கையை கோர்த்துக் கொண்ட சர்வஜித்தோ, "அப்படியே எல்லாருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டு, வயசான அப்புறம் நீயும் நானும் நம்ம தோட்டத்துல தனியா லவ் பண்ணிட்டு இருக்கலாம்" என்று சொல்ல, அவளோ சத்தமாக சிரித்துக் கொண்டே, "இப்போ மட்டும் என்ன இளமை துள்ளுதா?" என்று கேட்டுக் கொண்டே அவன் தாடியில் இருந்த ஒரு நரை முடியை இழுத்து விட, "ஆஹ்" என்று சொல்லிக் கொண்டே, அவளை பார்த்தவன், "வலிக்குதுடி" என்றான்...
அவளோ கையில் இருந்த நரை முடியை காட்ட, அவனோ, "இள நரை டி அது... இன்னும் எனக்கு நாற்பதுக்கு கிட்ட கூட வயசு வரல..." என்று சொல்ல, அவளோ, "இவ்வளவு பெரிய பையன் இருந்தா நீங்க கிழவன் தான்" என்றாள் கண் சிமிட்டி...
"அவனுக்கு ஏழு வயசு தான் ஆகுது... அவன் பெரிய பையனா?" என்று கேட்க, அவளோ, "அதெல்லாம் தெரியாது. நீங்க கிழவன் தான்" என்று சொல்ல, "அப்போ நீயும் கிழவி தான்" என்று பதிலுக்கு சொன்னவனோ மேலும், அவளை நோக்கி குனிந்தவன், "கிழவன் தான் விடிய விடிய ம்ம்ம்ம் பண்ணுவானா?" என்று சொல்ல, சட்டென அவள் கையை அவன் வாயில் தூக்கி வைத்தவள், "இது கோவில் சார், உங்க ஏ ஜோக்ஸ் எல்லாம் தனியா வீட்ல சொல்லிக்கோங்க" என்று சொல்ல, அவனோ, "சரி தனியாவே சொல்றேன்" என்று சொல்லிக் கொண்டே, தனது வாயை மூடி இருந்த அவள் கையை அகற்ற, அவளோ இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே நடந்தாள்.
அவர்கள் மருதநாயகம் அருகே வந்ததுமே, "மொட்டை குட்டியோட ஃபோட்டோ எடுத்துக்கலாம்" என்று சொல்லிக் கொண்டே, மகளை தூக்கி அணைத்துப் பிடித்துக் கொண்டான் சர்வஜித்... அவளும் பொக்கை வாயை திறந்து சிரிக்க, அவன் அடுத்த கரமோ மருதநாயகத்தை அணைத்து பிடிக்க, ஆதிரையாழ் ரணதீரனை தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டே, சர்வஜித்தின் மார்பில் தனது தோள்கள் உரச நின்று இருக்க, அனைவரின் இதழ்களும் புன்னகைத்த கணத்தை புகைப்படமாக சர்வஜித்தின் ஐ ஃபோனில் சேமித்து இருந்தான் முத்து...
முற்றும்...