அத்தியாயம்-2
டேய் ரிமோட் கொடு டா"
"போடி தரமாட்டேன் "
"டேய் நாயே .. ரிமோட் கொடு என்னோட சீரியல் மிஸ் ஆகிடும் கொடு டா "
"என்னது சீரியலா ? நீ எங்கேடி அதெல்ல பாக்குற , குழந்தை மாறி கார்ட்டூன் தானே பாக்குறே . நான் தரமாட்டேன் போடி , ஏழு கழுதை வயசாச்சு இன்னும் கார்ட்டூன் பாக்குற "
டேய் நீதாண்டா நாய், பேய், குரங்கு எல்லாமே , கடைசியா கேக்குறேன் இப்போ தரமுடியுமா முடியாத ?
சில்லுனு ஒரு காதல் படத்துல மில்லுக்கு வடிவேலு தன்னோட பெயர் வைக்கச்சொன்னதுக்கு அவங்க மனைவி ஒரு ரியாக்ஷன் கொடுப்பாங்க அதே மாறி மகி , மேலிருந்து கீழ பாத்துட்டு "முடியாது முடியாது போடி "
இதுக்குமேல சும்மா இருக்கக்கூடாது முகில் ,நம்ம வேலைய ஆரம்பிப்போம் . போய் மெயின் போர்டுல இருக்க பியூஸ் எடுத்துட்டு வந்து அமைதியாக வீட்டிற்குள் சென்று படுத்து விட்டாள். வீட்டுல கரண்ட் போய்டுச்சுன்னு நினைத்தனர் .
பக்கத்து வீட்டில் டிவி ஓடும் சத்தம் கேட்டு அங்கே சென்று பார்க்க, அங்கே கரண்ட் இருந்தது. தன்னுடைய வீட்டிற்க்கு வந்து மெயின் போர்டை பார்க்க அங்கே பியூஸ் இல்லாமல் இருந்தது..
ஞாயிறு அன்று கூட ஓய்வு எடுக்காமல் வேலை பார்க்கும் ரதிக்கு இன்று எரிச்சலுடன் கோவம் சேர்ந்துகொள்ள வீட்டில் இருக்கும் இரண்டு தண்டங்களை திட்டி கரண்டியால் அடி வாங்கிகொண்டு இருந்தனர் முகிலும் மகியும்..
வெயிட் வெயிட்...
இதெல்லாம் கற்பனை பண்ணதீங்கோ ..இப்படி எல்லாம் கற்பனை பண்ணியிருந்தா அது தப்பு தப்பு...இதுங்க ரெண்டும் என்ன அராத்து வாலுங்க.. அதுவும் முகில் மற்றும் மகி கூட்டணி நம்பவே கூடாது..
ரதி," முகில் இது உன்னோட வேலையா ஞாயிற்றுக்கிழமை அதுவுமா இப்படி இரண்டு பேரும் அராஜகம் பண்ணுறீஙகளே , இப்போ நான் எப்படி சமைக்குறது ?"
"அம்மில அரைச்சுக்கோ மம்மி, ஹையா அம்மி-மம்மி நல்லருக்குல"
"வர வர உனக்கு கொழுப்பு அதிகம் ஆகிடுச்சு காலையில பொட்டப்புள்ள கொஞ்சம் சீக்கிரமே எழுந்து அம்மாக்கு ஹெல்ப் பன்னாட்டியும் , ப்ரஸ் பன்னிட்டு குளிச்சுட்டு சாப்டுட்டு டிவி பார்க்கலாம்ல , மணி என்ன ஆகுதுன்னு பாத்தியா "
"மணி என்ன ஆகுதுன்னு சொல்லு மம்மி , எனக்கு தான் மணி பார்க்க தெரியாதே "
"அடிக்கழுதை ,1 ஆகப்போகுது இன்னும் கொஞ்சநேரத்துல உங்க அப்பா வந்து பசிக்கிது இவ்ளோ நேரம் என்ன பன்னிட்டு இருந்தானு என்ன திட்டுவாரு , எரும எழுந்தது 12 மணிக்கு ,எழுந்ததும் அவனோட சண்டை எப்போதான் இதெல்லாம் ஓயுமோ "
அதற்குள் கரண்ட் வர ,மகி "அம்மா போய் சமையல் செய் மா , சும்மா அவள திட்டாதீங்க ,
முகில் நீ டிவி பாருடா செல்ல எருமைக்குட்டி "
"டேய் இது எல்லாத்துக்கும் நீதாண்டா காரணம்,பரவாயில்ல பொழைச்சுப்போ"
ரிமோட் வாங்கி shinchan பாக்க ஆரம்பிச்சுட்டா.
"டேய் நீதாண்டா அவளை செல்லம் கொடுத்து கெடுக்குற ,ரிமோட்டா முன்னாடியே குடுத்து இருக்கலாம்ல ,ஏய் முகில் போய் ப்ரஸ் பண்ணுடி அப்புறம் டிவி பாரு "
"ஏய் இப்போ எதுக்குடி என்னோட பொண்ண திட்டுற " சிவா உள்ள வந்துட்டே மனைவியை வம்புக்கு இழுக்குறார் .
"சிவா வர வர உன்னோட பொண்டாட்டிக்கு வாய் நீளமாகிட்டே போகுது.. " என்று முகில் கூற
"அடிசெருப்பால.. அப்பாவை பெயர் சொல்லியா கூப்பிடுற..."
" ஏய் , இப்போ எதுக்கு அவளை திட்டுற.. என்னோட பொண்ணு என்னை கூப்பிடுற.. உனக்கென்ன.. வேணும்னா உங்கப்பன போய் பெயர் சொல்லி கூப்பிடு.. யாரு வேண்டாம்னு சொன்னது.."
" முதல்ல உங்களதான் சொல்லணும்.. எப்போ பாரு இவளுக்கு செல்லம் கொடுக்கிறது..அவ இன்னும் ப்ரஷ் பண்ணவே இல்லை..இன்னும் இரண்டு வருஷத்துல இவளுக்கே ஒரு குழந்தை இருக்கும்.."
மகி," அம்மா விடுங்க மா.. ஆடு மாடு நாய், கோழி, கழுதை, குரங்கு எல்லாம் ப்ரஷ் பண்ணிக்கிட்டா இருக்கு..விடுங்க விடுங்க .. போய் சமையலை பாருங்க.."
ரதி," யாரு நீ.. டேய் நீ ரொம்ப நல்லவன் டா.. பசி வந்துடுச்ச்னு என்னை உள்ள அனுப்பற.. என்னமோ பண்ணுங்க.." என்று உள்ளே செல்ல
"அப்பா .. பாருங்கப்பா அவனை.. " என்று முகில் தனது தந்தையிடம் தோள் மேல் சாய்ந்து கூற
சிவா," முகில் செல்லம்.. கொஞ்சம் ஸ்மெல் வரத்தான் செய்யுது.. போடா... போய் பிரஷ் பண்ணிட்டு வா..'"
"அப்பா நீங்களுமா??" என்று முகில் அழுவது போல் நடிக்க, மகியோ விழுந்து விழுந்து சிரித்துகொண்டு இருந்தான்..
"சரி சரி விடுமா, பசங்களா எல்லாரும் ஊருக்கு போகணும்ல எல்லாத்தையும் பேக் பண்ணுங்க" சொல்லிட்டு மனைவியை சமாதான படுத்த சமையலறையில் உதவி செய்ய ஓடோடி விட்டார்..
*****************************************
பொள்ளாச்சி அருகே உள்ள சிறிய கிராமம் சேத்துமடை , அங்கே நிகிதா " இங்க பாரு இன்னும் பத்து நாள் தான் இருக்கு என்னோட கல்யாணத்துக்கு அதுக்குள்ள எதாவது பண்ணு இல்லேன்னா என்ன உயிரோட பார்க்க முடியாது "
ரமேஷ்" நீ ஒன்னும் கவலைப்படாதே எல்லாம் சரியா நடக்கும் , அவன் கல்யாண மணமேடைல அவமானப்பட்டு சாகணும் . "
"அதுக்குத்தான் நான் இவ்ளோ கஷ்டப்படுறேன் இது எல்லாமே உனக்காக தான் "
"நீ ஒன்னும் கவலைப்படாதேடி நான் இருக்கேன் உன்னோட புருஷன் , அந்த இளமாறன் அவமானத்துல துடிக்குனும் "
சரிடா நீ என்ன திட்டம் வச்சுஇருக்க சொல்லு "
சொல்றேண்டி ரமேஷ் அவனோட திட்டத்தை நிகிதாக்கு விளக்கினான் .
"சூப்பர் டா இதுமட்டும் சரியா நடந்துச்சு இளமாறன் இனி மேல் யாருமுகத்துலேயும் முழிக்க முடியாது"
சரி நீ போ கல்யாண பொண்ணு நீ உன்ன ரொம்ப நேரம் காணோம்னு தேடுவாங்க "
"பிளான் ரெடி பண்ணி வச்சுக்கோ அவங்க எல்லாரும் நாளைக்கு வந்துடுவாங்க"
ரமேஷ் -நிகிதா ரெண்டு பேரும் அவங்க வழில போய்ட்டாங்க .
**********************#********************
முகில் வீட்டில் ..
"டேய் கண்ணுங்களா ! போய் கைகால் அலம்பிட்டு சாப்பிடுங்க" பாட்டி சொல்லிட்டு போய் அவங்க ஊருக்கு போக தேவையான எல்லாத்தையும் பேக் பண்ணிக்கிட்டு இருந்தாங்க.
"கிழவி நம்ம ஊருக்கு போய் எவ்ளோ நாள் ஆச்சு . இப்போ அந்த அரைலூசு கல்யாணம் அதுக்கு நம்ம எதுக்கு 10 நாள் முன்னாடியே போகணும் ?"
"யாரடி அரைலூசுன்னு சொல்ற அவன் என்னோட பேரன் டி ,ஒழுங்க மரியாதையா பேசுடி. அவன் உனக்கு அத்தை பையன் ,இன்னும் சொல்லப்போனா அவனவே உனக்கு கட்டிவச்சுயோருக்கானும் "
"இந்தா கிழவி முறைப்பையனு முறை வச்சு பேசாதே அந்த அரைலூச கட்டிக்கிறதுக்கு நான் பைத்தியமாக பைத்தியக்கார ஹாஸ்பிடல அட்மிட் ஆகிக்குறேன்"
"உனக்கு ரொம்ப வாய் திமுருடி ,இத அடக்குறதுக்குனு ஒருத்தன் வருவான் அப்போ இருக்குடி உனக்கு"
"ஹேய் கிழவி அப்படி எவனாவது வந்து என்ன அடக்குறப்போ இப்படி டக்குனு ஒன்னு குடுத்த போதும் அவன் புஷ்வணமாகிடுவான் " பாட்டி கன்னத்துல முத்தம் குடுத்துட்டு ஓடிவிட்டாள்.
"போடி போ , அப்போ எப்படி சமாளிக்குறேனு நான் பாக்குறேன்"
'டேய் அரைலூசு உனக்கு கல்யாணமாம். பாவம் அந்த நிகிதா உன்னோட என்ன பாடுபடபோறாளோ ,இந்த 10 நாள் நான் உன்னை பண்ணுறதுல நீ என் முன்னாடியே வரக்கூடாது கல்யாணத்துக்கு அப்பறம் தான் என்னோட கண்ணுல படனும். நிறைய இருக்கு டா உனக்கு அனுபவிக்க கொஞ்சம் காத்துஇரு .
"டேய் மகி, ரெண்டு நாள் தான் நமக்கு நேரம் இருக்கு அதுக்குள்ள அவனை முழு பைத்தியமாக்கிடனும் சரியா"
"டன் முகி, நாம பிளான் போடுவோம் "
மகி- முகில் அவங்க திட்டம் என்ன ,ரமேஷ் -நிகிதா திட்டம் என்ன .. ரெண்டு திட்டத்துக்கு நடுவுல மாட்டிட்டு இளமாறன் இனி அவதி மாறனா மாறப்போறானா இல்ல இவங்க ரெண்டு திட்டத்தையும் முறியடிக்க போறான்னு அடுத்த பகுதியில் பார்ப்போம் .