என் கவிதையின் இலக்கண பிழை நீயடா!!! - 4
நடந்ததை கூறி மகிழை நிமிர்ந்து பார்க்க, அவனோ முகத்தில் எதையும் காட்டாது அமைதியாக இருந்தான். இவன் என்ன சொல்ல போகிறானோ என்று அவனையே பார்த்திருந்தாள் ஆத்யா.
கண்ணை இறுக்கி மூடி திறந்தவன், "இங்க பாரு தியா உனக்கு ரெண்டே ஆப்சன் தான், ஒன்னு இந்தர் கூட லிவிங் ரிலேஷனில் இருக்கிறது. இன்னோனு என்ன கல்யாணம் பண்றது. என்னை கல்யாணம் பண்ண போறானு முடிவு பண்ணிட்டா, உன் காதலை இங்கயே பொதச்சுட்டு வந்திரு. நீ நம்ப வீட்டுக்கு என் மனைவியா வரணுமே தவிர இன்னொருத்தனோட காதலியா இல்லை. சினிமாட்டிக்கா இருந்தாலும் ரியாலிட்டியை நீ புரிஞ்சுக்கணும். உன் சாய்ஸ் தான், பேமிலியா லவ்வா நீ தான் டிசைட் பண்ணனும்" தன் பேச வேண்டியதை பேசிவிட்டேன் நீ தான் முடிவு எடுக்க வேண்டும் என்று அமைதியாக இருந்தான்.
"நான் அப்பாகிட்ட பேசணும்" என்றதும் போனை தேட அது வழியில் எங்கோ விழுந்து விட்டது போல். அவளிடம் இல்லை, அவன் போனை அவளிடம் கொடுக்க அவருக்கு அழைத்தாள்.
பதற்றத்துடன் போனை எடுத்தவர், அப்பா நான் ஆத்யா பேசுறேன் என்றவுடன் தான் அவருக்கு நிம்மதியாக இருந்தது. ஆது ரெண்டு பேரும் எங்க போனீங்க என்று அவர் கேட்க என்ன பதில் சொல்வது என யோசிக்கும் போதே கண்ணை கரித்துக்கொண்டு வந்தது அவளுக்கு.
அவளிடம் இருந்து போனை வாங்கியவன், "மாமா நான் தான் தியா கூட பேசணும்னு வெளியில கூட்டிட்டு வந்தேன், சீக்கிரம் வந்திடலாம்னு நினைச்சேன் அதுக்குள்ள கார் பஞ்சர் ஆகிருச்சு, இப்போ தான் மெக்கானிக் வந்து சரி பண்ணாங்க, கிளம்பிட்டோம், இருபது நிமிசத்தில் வந்திருவோம் நீங்க எல்லாம் ரெடி பண்ணுங்க" என்று அவரிடம் பக்குவமாக கூறி போனை வைத்தான்.
இப்போது தான் என் காதல் செத்தது அதற்குள் தனக்கு கல்யாணம் எந்த மாறி இதை ஏற்றுக் கொள்வது என்று தன்னை தானே தாழ்த்திக் கொண்டாள் ஆத்யா.
"தியா உனக்கு விருப்பம் இல்லைனா சொல்லு நான் வீட்டில் பேசுகிறேன்" என்று அவன் கூற, இவன் இல்லை என்றால் இனொருவனை கொண்டு வர தான் போகிறார்கள் என்று அவள் மனம் அவளை இடித்தது.
அவள் பேசியது அவனுக்கு கேட்டு விட்டது போல், "தியா எப்படியும் உன்னை ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி தான் வைக்க போறாங்க, அது ஏன் நானா இருக்க கூடாது. மே பி நான் உன் முதல் காதலா இல்லாமல் போயிருக்கலாம் ஆனால் கடைசி காதலா இருக்கலாம் இல்லை" என்று அவளை பார்த்தான்.
இதற்கு என்ன பதில் சொல்வது என்று அவளுக்கு தெரியவில்லை. எந்த பதில் சொன்னாலும் தன் மனதின் கற்பு கலங்க பட்டதாக தான் இருக்கும். தன்னை ஏன் இவன் கல்யாணம் செய்து கொள்ள நினைக்கிறான் என்று மனதிலேயே உரையாடினாள்.
அதை உணர்ந்தவனாக அவனே பதில் கூறினான், தெரியாத பேய்க்கு தெரிஞ்ச பிசாசே பெட்டர், எனக்கு பிசாசே ஓகே தான். உனக்கு ஓகே தான் நினைக்கிறேன், இல்லைனாலும் கல்யாணம் பண்ணிட்டு ஓகே சொல்லு" என்று படபடவென பேசியவன் வண்டியை ஆத்யாவின் வீட்டிற்கு விட்டான்.
வாசலிலேயே மொத்த குடும்பமும் காத்திருந்தது, இருவரும் காரில் இருந்து இறங்க அவர்களை திட்ட ஆரம்பிக்கும் முன் ஆபத்துபாண்டவனாக அவனை காப்பாற்ற அங்கே வந்தார் அவனது சித்தப்பா நந்தகுமார்.
"மகிழ் எல்லாம் பேசியாச்சா, எவ்வளவு நேரம் தான் எனக்கும் தெரியாதுங்கிற மாறி நடிக்கிறது ஏன் இவ்வளவு லேட், சீக்கிரம் வாங்க முகூர்த்தம் முடிஞ்சுற போகுது. ஆது சீக்கிரம் போய் நகை எல்லாம் போட்டு ரெடி ஆகு, நீயும் போய் வேஷ்டி சட்டை மாத்து. இன்னும் அரைமணி நேரம் தான் இருக்கு முகூர்த்ததுக்கு" அவர் பரபரக்க, அவர்களை விடுத்து மாடிக்கு சென்றனர்.
வீட்டிலேயே கல்யாணம் என்பதால் மேலே அனைவரும் செல்ல, ஆதுவிடம் வந்தார் நந்தகுமார். "ஆது விருப்பப்பட்ட வாழ்க்கை அமையவில்லை என்றால் அமைகிற வாழ்க்கையை விருப்பப்படி மதிக்கணும். அது தான் புத்திசாலி தனம், என் மருமகள் புத்திசாலினு நினைக்கிறேன்" என்று பேசியவர் அவள் தலையை வஞ்சனையாக தடவி கிளம்ப அனுப்பி வைத்தார்.
தன்னை சுற்றி தன் மேல் அன்பு கொள்பவருக்கு இன்று தான் என்ன செய்ய நினைத்தேன். இனி என் வாழ்க்கை மகிழ் வேந்தனோடு தான் என்று முடிவு செய்து நகைப்பூட்டி மேடை ஏறினாள் ஆத்யா.
தான் ஒரு வேளை கனவு காண்கின்றமோ என்று தோன்றாமல் இல்லை மகிழுக்கு. அவளது கடைசி காதல் நான் தான், என்னை விட அவளை யாரும் அதிகம் காதலிக்க மாட்டார்கள் என்று அவளுக்கு புரிய வைப்பேன் என்ற உறுதியோடு அவளுக்கு மங்கள நாணை கட்டி, இனி நீயும் நானும் வேறு வேறு இல்லை என்று மகுடம் சூட்டுவது போல் தாலிக்கட்டி பொட்டு வைத்து, அக்னியை சுற்றி தன் கடமையை காதலாக அவன் செய்தான். இதுதான் தன் வாழ்வோ, இந்த வாழ்வை ஏற்றுக்கொள்ள தான் முயற்சிக்க வேண்டும் என்று மனதில் வேண்டி அவன் தாலிக்கட்ட தலை தாழ்த்தி வாங்கி கொண்டாள் ஆத்யா.
முதலில் ஆத்யாவின் பாட்டி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி விட்டு, மற்ற பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கியதும், "இதற்கு மேல் எந்த சடங்கு சம்பிரதாயமும் செய்ய வேண்டாம், நாங்க மனசால் என்னைக்கு ஒன்னு சேருகிறமோ அன்னைக்கு இது எல்லாம் நடத்துங்க சந்தோசமா கலந்துகிறோம், இப்போ நானும் என் பொண்டாட்டியும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறோம் ரொம்ப டயர்ட்டா இருக்கு" ஆத்யாவின் தோளில் கையை போட்டு அவள் அறைக்கு அழைத்து சென்றான் மகிழ்.
அவளுக்கு தான் மயக்கம் வராத குறை, யார் இவன் நேற்று பார்த்தோம் இன்று கல்யாணம் இதற்கு நடுவே தன் இரண்டு வருடம் காதல் தோல்வி. ஒரே நாளில் எத்தனை இன்னல்கள், தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று யோசித்தவாறு அவன் இழுப்பிற்கு சென்றாள்.
உள்ளே சென்றவன் உடையை கூட மற்ற தோணாது படுக்கையில் விழுந்து நித்ராதேவியின் பிடியில் சிக்கினான்.
எங்கோ ஓடும் பாடல், தனக்காகவே பாடப்பட்டது என்பது போல் இருந்தது அந்த பாட்டை கேட்க, அதை கேட்டவாறு கீழே அவளும் படுத்து தன் மனவலியை குறைக்க பார்த்தாள் ஆத்யா.
இதயத்திலே
தீபிடித்து கனவெல்லாம்
கருகியதே உயிரே நீ
உருகும்முன்னே
கண்ணே காண்பேனோ
இலை மேலே
பனித்துளி போல் இங்கும்
அங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம்
பொன்னே பூந்தேனே
வலியென்றால் காதலின்
வலிதான் வலிகளில் பொிது
அது வாழ்வினும் கொடிது
உன்னை நீங்கியே உயிா் கரைகிறேன்
வான் நீளத்தில் என்னை புதைகிறேன்
நன்றாக தூங்கியவள் எழுந்தது இருட்டிய பிறகு தான். தனக்கு திருமணம் ஆகியதை மறந்த ஆத்யா, எப்பவும் போல் இரவு உடையை போட்டு வெளியே வந்தவள், "அம்மா பசிக்குது காபியும் ஸ்நாக்ஸும் எடுத்துட்டு வாங்க" என்று கத்த அவளை விழி அகலாது பார்த்தான் மகிழ்.
அவனை கண்ட பிறகு தான் காலையில் இருந்து நடந்தது எல்லாம் அவளுக்கு ஞாபகம் வந்தது. ஒரு புறம் வலி ஒரு புறம் இவன் முன்னாடி இப்படி வந்து விட்டோமே என்று வந்த வழியிலேயே சென்று கைக்கு கிடைத்த சுடிதார் ஒன்றை அணிந்து வெளியே வந்தாள்.
என்ன டிரெஸ் போட்டாலும் அழகா இருக்காளே எப்படி என்ற ஆராய்ச்சியில் இறங்கினான் மகிழ். அவனது கண்ணசைவிலேயே பெரியவர்கள் புரிந்து கொண்டனர் அவனது பிடித்ததை.
அவன் சொன்னது போல், இது அவர்கள் வாழ்க்கை. கல்யாணம் செய்து கொண்ட ஒரே காரணத்தால் இன்றே இருவரும் வாழவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என அவர்களும் அதை ஆமோதித்தனர்.
காலையில் இருந்து அபிராமி மட்டும் ஒரு மாதிரி காட்சியளிக்க, அதை அவரிடமே கேட்டான் மகிழ்.
"தம்பி உங்ககிட்ட தனியா பேசணும்" என்று தயங்கி தயங்கி கேட்டவரை பார்த்து லேசாக சிரித்து, "இதுக்கு ஏன் இவ்வளவு தயங்கிட்டு இருக்கீங்க. பேசணும் அவ்வளவு தானே, வாங்க" என்று மாடிக்கு அழைத்து சென்றான் மகிழ்.
"ரொம்ப நன்றி தம்பி" என்று கண்ணீருடன் அவர் நிற்க, "அத்தை என்னாச்சு, எதுக்கு அழுகிறீங்க".
"காலையில் ஆது வீட்டை விட்டு போனப்ப, நீங்க கிளம்பி போனீங்கள, உங்களுக்கு நான் வந்தேன். அவளை நீங்க எப்படியாவது கூட்டிட்டு வந்திருவீங்க என்கிற நம்பிக்கையில் இருந்தேன். நீங்க மட்டும் அவளை கூட்டிட்டு வரலை என்றால், என்ன நடந்து இருக்கும்னு கூட யோசிக்க முடியலை. பாவி பிள்ளை இப்படி பண்ணுவானு எதிர்பார்க்கலை" என்று பேசியவரை கனிவாக பார்த்து.
" அத்தை தியா இப்போ என் பொண்டாட்டி, நீங்க நினைக்கிற மாறி எதுவும் இல்லை நான் தான் அவளை ரோட் சைடுக்கு வர சொன்னேன் பேசணும் என்று நீங்க நினைக்கிற மாறி எதுவும் இல்லை. இந்த கல்யாணத்தை நாங்க முதல் ஏத்துக்கணும் அப்பறம் புரிந்து வாழ்க்கையை ஆரம்பிக்கணும். நீங்க எங்களை பத்தி கவலை படாதீங்க, இனி தியா என் பொறுப்பு" என்று கீழே சென்று விட்டான்.
சற்று முன் தனக்காக அவன் பேசியது எல்லாம் உண்மையா, என்னால் அவ்வளவு சீக்கிரம் இந்தரை மறந்து இவனை ஏற்றுக்கொள்ள முடியாது காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று சமையல் அறைக்கு சென்றாள்.
தேவியும் காஞ்சனாவும் தங்கள் வீடு போல சமைத்து கொண்டிருந்தனர், முன்பு போல ஏனோ உரிமையாக பேச முடியாமல் அவர்கள் இருவரையும் பார்த்தாள்.
அவளை பார்த்த காஞ்சனா, "ஆதும்மா உனக்கு பிடிச்ச பணியாரமும் காரச்சட்னியும் செஞ்சுருக்கேன். போய் மகிழை கூட்டிட்டு வா ரெண்டு பேருக்கும் பரிமாறுறேன். காலையில் இருந்து எதுவுமே சாப்பிடல, அவன் எழுந்ததும் சாப்பிட சொன்னேன். அவன் உன்கூட சாப்பிட்டுகிறதா சொன்னான்" என்றதும், "சரிங்க அத்தை நான் போய் அவங்களை கூட்டிட்டு வறேன்" என்று ஒவ்வொரு வார்த்தையாக பார்த்து பேச தேவி சிரித்து விட்டார்.
"எதுக்கு இப்போ சிரிக்கிறீங்க?" என்று தேவியை முறைத்தவாறு கேட்டாள் ஆத்யா.
"அடியே என் ஆசை மருமகளே, எத்தனை நாளைக்கு இப்படி வார்த்தையை எண்ணி எண்ணி பேச போற. நானும் அக்காவும் உன்னை இத்துணுண்டுல இருந்து பார்க்கிறோம். ஒரு தடவை கூட இப்படி நீ பேசி பார்த்தது இல்லை. என்ன ஆச்சு ஆது உனக்கு?" என்றார் தேவி.
"அது வந்து, நீங்க எம்.வி, எனக்கு மாமியார்" என்று பிச்சு பிச்சு சொல்ல, அவள் கையை பற்றி பேசினார் காஞ்சனா.
"ஆதுக்குட்டி நீ எதுக்கு இவ்வளவு நெர்வ்வஸ் ஆகுற, நீ எங்களை கொடுமை பண்ணுவ என்ஜோய் பண்ணலாம்னு நாங்க பிளான் பண்ணா, நீ என்ன இப்படி முழிக்கிற. எனக்கு என் குட்டிமா தான் வேணும்" என்று பேசிக்கொண்டிருக்கும் போது, "என்ன என் பொண்டாட்டியை ரெண்டு பேரும் வம்பு பண்றிங்களா?" என்று வந்த மகிழ், "தாய் குலங்களா ரொம்ப பசிக்குது கொஞ்சம் கருணை காட்டுங்க" என்று வயிற்றை காட்ட, "நாங்க சாப்பிடும் போதே கூப்பிட்டதுக்கு பெரிய இவன் மாறி ஆதுக்கூட தான் சாப்பிடுவேன்னு சொன்ன இப்போ என்ன டா" என்று காஞ்சனா காலை வாரினார்.
"சோறு போட்டு பேசுங்க" என்று அவன் சொல்ல, அடிமேல் அடிவைத்து சென்று மகிழுக்கு பரிமாற அவளையும் அமர வைத்து அவளை சாப்பிட சொல்ல, தன் வீட்டிலேயே புதியவளாக தோன்றியது ஆத்யாவிற்கு.