அத்தியாயம் -01
சென்னையின் மையத்தில் அமைந்திருக்கும் மக்கள் முன்னேற்றக் கழகம் அன்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.எங்கும் கரை வேட்டிகளாகவே சுற்றிக்கொண்டிருக்க கழகத்தின் மூத்த உறுப்பினரான சதாசிவம் " ஐயா வர நேரமாச்சு எல்லாத்தையும் சரியா ஏற்பாடு பண்ணுங்க இல்லனா வந்ததும் கத்துவார் "என்ற கட்டளை இட்டுக் கொண்டு இருக்க அதை பார்த்துக் கொண்டிருந்த அவரின் மகனான நடராஜனுக்கு அவ்வளவு கடுப்பு.
கழகத்தில் கிட்டத்தட்ட 35 வருடங்களாக தன் தந்தை இருக்க இப்பொழுது வரை கழகத்தின் செயலாளர் என்ற பதவியை தவிர வேறு எந்த பதவியும் அவர் பெற்றதில்லை.அதுவும் வெறும் பெயரளவிலானது தான் முடிவுகள் அனைத்தும் தலைவரின் கையில் தான் உள்ளது.தந்தையின் வழி கொண்டு அரசியலில் நுழைந்தாலும் பதவி வெறியில் எவ்வளவோ தகிடுதத்தம் பண்ணி கட்சியின் தலைவரின் இடது கையாக மாறி அவருக்கு பல இல்லீகள் வேலைகளை செய்து கொடுத்து பதவிக்காக காத்திருக்க அவரோ இரண்டு வருடங்களுக்கு முன் வெளிநாட்டில் இருந்த வந்த மகனுக்கு தூக்கி பதவியை கொடுத்து விட கொதித்துப் போனாலும் அவர்களை மீறி எதுவும் செய்ய முடியாது என அமைதிக்காத்தான்.
இரண்டு வருடங்களில் தந்தையால் ஐயா என்று அழைக்கப்படும் 28 வயதான சாணக்கிய சக்ரவர்த்தியால் பல குடைச்சல்கள். அவனை வீழ்த்தி அந்த பதவியில் ஏறுவதற்காக நரி போல் காத்துக் கொண்டிருக்கிறான்.
அங்குள்ளவர்களுக்கு அவனை எண்ணி பெரும் வன்மம் பொறாமை ஏமாற்றம் என்று பல எதிர்மறையான எண்ணைகள் உண்டு. அதனை உள்வாங்கிக் கொண்டப்படி தனது ஜிப்பில் இருந்து கதிர்வேட்டி சட்டை அணிந்து வந்த சாணக்கிய சக்ரவர்த்தியோ தங்கக்காப்பை மேலே ஏற்றி விட்டுக் கொண்ட படியே தனது வேட்டி நுனியை பிடித்தவாறு வேக நடையுடன் முன்னேறினான். அவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கிட்டத்தட்ட ஓடி பின் தொடர்ந்து வந்தான் அவனின் பி ஏ வினோத்.
ஆறரை அடி உயரம் உடற்பயிற்சியினால் இறுகிய தசை கோளங்கள் வட இந்திய தாய்க்கு பிறந்ததால் அவர்களுக்கே உரிய பளிச்சென்று பால் போன்ற வெண்மை சென்னை வெயிலில் சிறிது மங்கினாலும் அதுவே அவனுக்கு இன்னும் அழகையும் கம்பீரத்தையும் கொடுத்தது.
ட்ரிம் செய்யப்பட்ட மீசை தாடியில் கண்களில் கூலருடன் வந்திற ங்கியவனை கண்டவர்கள் மனதில் கூட தவறாக எதையும் நினைக்க முடியாது அந்த அளவு பெயருக்கு ஏற்றது போலவே சாணக்கியன். மனதில் நினைப்பதை கூட அறிந்து விடுவான்.
"வினோத் கொடுத்த ஒர்க் எல்லாம் முடிஞ்சிடுச்சா" என்று தனது பி ஐ விடம் பேசிக்கொண்டே தனக்கு வணக்கம் தெரிவித்தவர்களுக்கு ஒரு தலையசைப்பை அளித்தவாறு வேக நடையுடன் முன்னேறி தனது இருக்கையில் அமர்ந்து கொண்டவன். சதாசிவம் கட்சி சம்பந்தப்பட்ட பைலை எடுத்து வைக்கவும் அனைத்தையும் பார்த்து ஆரம்பித்தான்.ஒரு இடத்தில் விழிகள் கூர்மை பெற்றது.
" என்ன இது சதாசிவம்.கட்சி ஆளுங்களுக்கு அடிச்ச டி-ஷர்ட் ரேட் ஓவரா போட்டு இருக்கீங்க ஒருத்தருக்கு 350 ரூபாய் தானே கணக்கு யார் இதை பண்ணது "என்று அதட்ட சதாசிவத்திற்கு ஒன்றும் கூற முடியாத நிலை. நடராஜன் இடம் தான் அந்த பொறுப்பை ஒப்படைத்து இருந்தார்.
தன் மகன் இவ்வாறான திருட்டுத்தனத்தை பண்ணுவான் என்று கனவா கண்டார் அவர் பேசாமல் மௌனம் காக்க ஐந்து லட்சங்களுக்கு மேல் இடித்த கணக்கை புள்ளி வாரியாக கூறி உடனே சரி செய்து வைக்கமாறு கூறிவிட்டு செல்ல தலையில் கை வைத்து அமர்ந்தவர் உடனே மகனை வெளுத்து வாங்கி விட்டார்.
நடராஜனுக்கு அவமானம் தாங்க முடியவில்லை. பல கோடிகளுக்கு அதிபதியான அவர்கள் என்ன இதை கண்டு கொள்ளவா போகிறார்கள் என மெத்தனத்தில் தன் தேவைக்கு எடுத்ததை கவனித்து கேட்டுள்ளானே என்று ஒரு பக்கம் ஆத்திரமும் இன்னொரு பக்கம் வன்மமும் கூடிக் கொண்டே போனது.பிறகு என்ன சேர்த்து வைத்த பணத்தோடு கை காசு போட்டு தான் அந்த கணக்கை சரிகட்டினர்.
இதுதான் சாணக்கியன் அவனிடமிருந்து எதையும் மறைக்க முடியாது ஆழ்ந்த அறிவை உடையவன். எம்பிஏ லண்டனில் முடித்து மூன்று வருடங்களுக்கு முன் சென்னை வந்தவன் தனது பிசினஸை ஆரம்பித்து கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தத பொழுது அது.
அவனின் தந்தை சங்கரராஜன், சக்கரவர்த்தி கட்சியின் தலைவராக இருக்க கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலிலும் தோல்விதான். ஆனாலும் பெரும்பான்மை பெற்ற எதிர்க்கட்சியாக கடந்த எட்டு வருடங்களாக உள்ளனர். இரண்டாவது தோல்வியை சங்கரராஜனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அவ்வளவு பணத்தை மானவரியாக செலவழித்த போதிலும் தோல்வி கிட்டியதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
ஏதாவது செய்து தனது பெரும்பான்மையை காட்ட வேண்டும் என்று சுயேட்சியாக நின்று வெற்றி பெற்ற எம்எல்ஏக்களை பல கோடி கொடுத்து தன் கட்சியில் இணைத்த போதிலும் அவரால் தேசிய மக்கள் கழகத்தை ஜெயிக்க முடியவில்லை. அதில் பெரிதும் உடைந்து போனானாலும் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று கண் கொத்தி பாம்பாக காத்திருந்தார்.
அவர் காத்திருப்புக்கு பலன் கிடைத்தது. பிரதான தொகுதியில் ஆளும் கட்சி எம்எல்ஏ ஊழல் வழக்கில் உள்ளே சென்று விட இதுதான் நேரம் என நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த தொகுதியில் மட்டும் மீண்டும் இடைத்தேர்தல் வைக்கப்பட்டது. பிரதான தொகுதி அதில் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று இருக்கும்போது அந்த தொகுதி இளைஞர் அணியில் இருப்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டது. அதனால் அப்போதுதான் வந்த மகனிடம் பொறுப்பை கொடுக்க பிசினஸில் கவனத்தை செலுத்தியவன் கடுப்புடனே வேறு வழி இல்லாமல் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.
பிசினஸிலும் கவனத்தை செலுத்தி தேர்தலிலும் தன் பங்கை ஆற்றி காத்திருக்க பல கோடி ரூபாய் கொடுத்த போதிலும் மீண்டும் ஆளும் கட்சியே வெற்றிபெற அதிர்ச்சி தான். ஊழல் வழக்கில் அவர்கள் ஆள் உள்ளே சென்று இருந்த போதிலும் மீண்டும் வெற்றி பெற்று விட்டார்களே என்று சிறிது பயந்து தான் போனார்.
வரும் தேர்தலில் எவ்வாறு ஜெயிப்பது என யோசனையில் உழல தன் வாழ்க்கையில் ஈட்டிய முதல் தோல்வியில் அடிபட்ட வேங்கை என இருந்தவனும் இனிமேல் தான் கட்சியை கவனித்துக் கொள்வதாக கூறி அரசியலில் உள் இறங்கியவன். இந்த இரண்டரை வருடத்தில் நிகழ்த்தியது ஏராளம்.
பலவிதமான சலுகைகளை அளித்து கட்சியில் திறமையாக வேலை பார்க்கும் ஆட்களை சேர்த்தான். ஊடகங்களின் பார்வை தன் மீது இருக்கும் படி பார்த்துக்கொண்டான். அதற்கு பல கோடிகள் செலவானது பற்றி அவன் கருத்திலே கொள்ளவில்லை.இன்றைய இளைஞர்களின் முக்கிய கவனசிதறலாக கருதும் சோசியல் மீடியாக்களில் தனது கட்சியை பற்றி இலை மர காயாக புகழ்ந்து பேச பல ஆட்களை நியமித்தான்.
அதுவும் பலனைத் தர சோசியல் மீடியாவில் அதிக பின் தொடர்பவர்களை கொண்ட அரசியல்வாதியாக திகழ்கிறான் அனைத்தும் இரண்டரை வருடத்தில் உருவான மாற்றம் அனைத்திற்கும் முழுமுதற் காரணம் அவன் அடைந்த தோல்வி.அதை வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றியின் மூலம் துடைக்க காத்துக் கொண்டிருக்கிறான்.
மாதம் இரண்டு முறை ஜெயித்த தொகுதிகளை சென்று பார்வையிட்டு சோசியல் மீடியா, செய்தி சேனல்களில் ஒளிபரப்புவது வழக்கம் என்பதால் அதற்காக சென்று கொண்டிருந்தவன்.தனது பிசினஸையும் மறுபுறம் கவனித்துக் கொண்டான். எஸ் ஏ எஸ் (SAS) கன்ஸ்டிரக்சன்ஸ்.குடும்பத் தொழிலை திறம்பட நடத்திக் கொண்டிருக்கிறான்.
தன்னுடைய கிளைன்ட்ஸ்க்கு அனுப்ப வேண்டிய மெயில்கள் அனைத்திற்கும் பதிலளித்துக் கொண்டிருந்தவன். " ஆமா சரண் ஒன் வீக்கா ஆளையே காணோம் என்னான்னு விசாரிச்சு வை" என்று தன் தம்பியை பற்றியும் கூற வினோத்தோ எப்படி இவரால் அனைத்திலும் ஒரு சேர சரியாக கவனிக்க முடிகிறது என்று எப்போதும் போல் ஆச்சரியப்பட்டவன் அவன் கூறிய வேலையும் நடுவில் முடித்தான்.
வண்டியை விட்டு இறங்கும் போது கூலரை அணிந்து கொண்டவன் வினோத்தை கேள்வியாக பார்க்க "வருண் கிட்ட சொல்லிட்டேன் சார் இன்னும் ஆப் ஹவர்ல தகவல் தெரிஞ்சுவிடும். (வருண் சரணின் மெய்காப்பாளன்). "தொகுதிக்கு வந்ததும் அவனின் முக பாவமே முற்றிலும் மாறியது கண்களில் கம்பீரம் இருந்தாலும் முகத்தில் காருண்யமும் அன்பும் பொங்க அவன் உரையாடிக் கொண்டிருப்பதை கண்டு வினோத்திற்கு தான் தலை சுற்றி போனது.
**************
எங்கும் அச்சு இயந்திரத்தின் சத்தம் ஒலித்துக் கொண்டிருக்க ஏதோ இன்னிசையை கேட்பது போல் ரசிப்புடன் உள் நுழைந்த தோழியை கண்ட வனிதா "எனக்கு எப்படா ஹெட் போன் மாட்டிக்கலாம்னு தோணுது நீ என்னன்னா ஏதோ ஏ ஆர் ரகுமான் கான்செப்ட்க்கு வந்தவள் மாறி இந்த சவுண்டை ரசிச்சிட்டு இருக்க என்ன ரசனையோ உனக்கு "என சலித்தபடி இயர் போனை மாட்டிக்கொள்ள தோளை குலுக்கிக்கொண்டு எடிட்டர் அறைக்கு செல்ல அவளின் தோழி வனிதாவோ தனது வேலைகளை கவனிக்க சென்றாள்.
நீதி பத்திரிக்கை அலுவலகம்...
நீதி என்ற பெயருக்கு ஏற்றது போல் சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் பல முன்னணி பத்திரிகைகள் வெளியிடும் பொய்யான செய்திகளை துகிலுரித்து உண்மைகளை மட்டும் எழுதும் பத்திரிக்கை ஆபீஸ் ஆகும்.
உண்மைகளை மட்டும் கூறினால் அதனால் பாதிக்கப்படும் முதலைகள் என்ன செய்வார்களோ அது தவறாமல் இந்த நீதி பத்திரிக்கைக்கும் கிடைக்க போடும் லாபத்திற்கு நஷ்டம் இல்லாமல் ஏதோ நடுத்தரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 25 வருடங்களுக்கு முன்பு வாங்கிய பழைய அச்சு இயந்திரத்தில் தான் இப்போது வரை அவர்களின் பத்திரிக்கை அச்சிடப்படுகிறது அதனால் ஏற்படும் சத்தம் காதை அடைக்கும்.
சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்கு வகித்த பலராமன் என்பவரால் 1950 களில் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிக்கை வருடம் ஏற ஏற சுருங்கி தற்போது நகரத்தை விட்டு ஒதுக்கு புறமான மூலையில் இரண்டடு கட்டடங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஏதோ நல்ல உள்ளங்களால் ஓரளவு போய்க்கொண்டிருக்கும் பத்திரிக்கை கடந்த ஒரு வருடங்களாக சூடு பிடிக்க காரணம் இன்வெஸ்ட்டிகேட் ஜேர்னலிஸ்ட் ரூத்ரசக்தி. பெயருக்கேற்றது போல் கோபத்தில் அக்னியாக தகிப்பவள்.நம் நாயகி ஐந்தரை அடி உயரம் மாநிறம் ஓடிசலான தேகம், வேலை செய்ய ஏதுவாக அணியும் ஜீன்ஸ் பேண்ட் குர்தி நீண்ட முடியை அல்லி ஒற்றை பேண்டில் அடக்கி இருப்பாள். ஒப்பனை இல்லா பலிச்சென்ற முகம் ஒரு கருப்பு பொட்டால் மட்டும் ஒளிரும். குதிரைவால் ஆட நடந்து வருவதிலும் ஒரு கம்பீரமும் அழகும் மின்னும்.
குட் மார்னிங் சக்தி என ஆர்ப்பாட்டமாக வரவேற்ற எடிட்டர் அவள் கொடுத்த பைலில் இருந்த தகவல்களை கண்டு முகம் இருண்டு போனார். நேர்மையானவர் என்றாலும் இருபது ஆண்டு காலம் இந்த பத்திரிகையில் வேலை செய்து பலதரப்பட்ட அடிகளை வாங்கியதால் அவள் கொடுத்த பைலை அப்படியே திருப்பி தர "என்ன ஆச்சு சார் " என்று அழுத்தத்துடன் கேட்டவளை சாந்தப்படுத்தும் வழி தெரியாமல் திணறி தான் போனார்.
" இது சரிபட்ட வராது அவங்க இப்ப எதிர்க்கட்சியாக இருந்தாலும் இன்னும் ஆறு மாசத்தில் வர தேர்தலில் கண்டிப்பாக ஜெயிப்பாங்க அந்த அளவு தூணா ஒருத்தன் அங்கே தாங்கிட்டு இருக்கான். அவன் தம்பியை பத்தியே நம்ம பத்திரிகையில் போட்டால் நம்ம பத்திரிகை இருந்ததற்கான தடம் கூட தெரியாமல் போய்விடும் ருத்ரா கொஞ்சம் புரிஞ்சுக்கோ "என்றதும் கோவத்தில் அவளின் மூக்கு நுனி சிவந்தது.
"அந்த பிளடி *** பண்ணது தெரிஞ்சும் பயப்படுறீங்களா. 17 வயசு சின்ன பொண்ணை ராகிங் என்ற பெயரில் கடத்திட்டு போய் இருக்கான் அவனை அப்படியே விட சொல்றீங்களா கண்டிப்பா இதை போட்டே ஆகணும். மக்களுக்கு நடந்த அநியாயம் கண்டிப்பா தெரிஞ்சே ஆகணும்.அதிலிலும் நியூஸ் தந்தது இந்த ருத்ர சக்தினு கொட்டை எழுத்தில் போடுங்க வர எதுவா இருந்தாலும் நான் ஃபேஸ் பண்ணிக்கிறேன். உண்மை எப்பயும் ஜெயிக்கணும்னு போர்டில் மட்டும் தான் எழுதுவீங்களா அதற்கான முயற்சி எதுவுமே எடுக்க மாட்டீங்களா" என்று காட்டமாக கூறியவளை கண்டவருக்கு பயம்தான் பிடித்துக் கொண்டது.
அவள் எதிர்க்க நினைப்பது சாணக்கியனை அல்லவா உள்ளுக்குள் நடந்த அவலம் எண்ணி கோபம் வந்தாலும் "வேண்டாம்மா சாணக்கியன தாண்டி எதுவுமே பண்ண முடியாது" என்று சிறு தடுமாற்றத்துடன் கூற அவளின் கண்களோ பெயருக்கு ஏற்றது போல் தீ என சிவந்தது.
" அவனை எதிர்க்க இந்த சக்தி இருக்காள்.அந்த சாணக்கியனால் அப்படி என்ன பண்ண முடியுதுன்னு நானும் பாத்துக்குறேன் இதை பப்ளிஷ் பண்ணி தான் ஆகணும். இல்லைன்னா என் யூடுயுப் சேனலில் நாளைக்கு லைவ் டெலிகாஸ்ட் பண்ணுவேன் " என்று உறுதியுடன் கூறிவிட்டு அங்கிருந்து செல்ல சங்கரும் அரை மனதாக அதை அச்சடிக்க அனுப்பினார். பத்திரிகையே அதில் சிறு பரபரப்பானாலும் சக்தியின் முடிவு என்றதும் அவர்களாலும் மறுத்து பேச முடியவில்லை.
நாளை நடக்கும் போகும் ருத்ரதாண்டத்தை அறிந்தது போல் வெளியில் மழை வெளுத்து வாங்கி மண்ணை குளிர்வித்துக் கொண்டிருக்க அச்சகத்திற்குள்ளோ பெரும்பான்மை பெற்ற எதிர்க்கட்சியான மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் சந்திரராஜனின் இரண்டாம் மகனின் அநீதி செயல்கள் என்ற சுட சுட பத்திரிக்கை வந்து விழ அதை எடுத்தவளின் விழிகள் ரத்த சிவப்பில் மாறி இருந்தது.