" ஏய்....! வேகமாக
அவனைஅடிச்சுட்டு காரை எடுடா..." என்று அடியாள் கூற..
" கார் சாவியை காணோம் அண்ணா..." என்று டிரைவர் கூற..அவனது கன்னத்தில் அறைந்தவன்…
வெளியே ஆதி...! தனது கையில் கார் சாவியை காட்ட
"உன்னை இருடா வந்து வச்சுக்கிறேன்..." என்று காரை விட்டு இறங்கியவன்.
"ஏய் முதல்ல சாவியை கொடுடா" என்று அந்த அடியாள் ஆதியை மிரட்ட
"ஒழுங்கா கயலை கொடுத்துட்டு போறீங்களா இல்லை அடிவாங்கி சாகப் போறீங்களா..? "என்று ஆதி கேட்க..
"யாரு சாகபோறான்னு இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிஞ்சுடும்..?" என்று அந்த அடியாள் துப்பாக்கியோடு ஆதியை நெருங்கினான்.
"அண்ணு இப்போ எதுக்கு துப்பாக்கியை எல்லாம் எடுக்கறீங்க... ஏதோ சின்னபொண்ணு வெளியில எட்டி பார்த்துச்சுன்னு தான் பின்னாடியே வந்தேன்... ஸாரி நண்பா... நீங்க வேலை பாருங்க என் பைக் பின்னாடி இருக்கு" என்று ஆதி நழுவினான்.
"அந்த பயம் இருக்கட்டும் ஒழுங்கா உன் வழியில போ" என்று அடியாள் மிரட்ட...
கயலிற்கோ அழுகை தான் வந்தது "ஆதி அங்கிள்" என்று கயல் கூப்பிட...
"பாய் கயல்" என்று ஆதி டாட்டா காட்ட காரின் பின்னால் கையை தூங்கி கொண்டே வந்தவன்... ஆதியின் காலில் ஏதோ இடர...
"ஏய் எங்க ஓடற சாவியை கொடுத்துட்டு போடா..." என அந்த அடியாள் மிரட்ட...
"ஐய்யோ நான் இல்லைங்க அவங்க தான்" என்று சாவியைஅவர்களிடம் தூக்கி போட்டவன்... ஓர் நிமிடம் தான் யாரென்று திரும்பி பார்க்கும் அந்த நேரத்தில்... அவனின் மூக்கில் ஓங்கி குத்த நிலை தடுமாறி கீழே விழுந்தான்.
டிரைவரோ பயத்தில் நடுங்க... வெளியே கார் கதவின் வழியே..." ஏய் நீயும் அடிவாங்கிட்டே ஓட போறியா என்ன..? " என்று ஆதி கேட்க...
அழுது கொண்டே இருந்த கயலை தூங்கியவன்.... "மாமா" என்று விம்மலோடு ஆதியை இறுக்க தழுவிக்கொண்டாள் கயல் குட்டி
"என்னை விட்டு போகிடுவீங்களோன்னு ரொம்பவே பயந்துட்டேன்" என்று கயல் விம்மலோடு கூற..
"உன் அங்கிள் உன்னை விட்டு போயிடுவேனா கயல்... சும்மா விளையாட்டு காட்டுனேன்.. " என்று ஆதி கூற...
"அப்படியா அங்கிள் " என்று கயல் கூற...
"மாமான்னு கூப்பிட்டா தான் இனி கயல் குட்டி கூட பேசுவேன்..." என்று ஆதி முகத்தை வேறு பக்கம் திரும்பி கொள்ள...
அந்த சமயம் பார்த்து அடி வாங்கியவன் மீண்டும் எழுந்து நின்றான்.
"மாமா அங்க பாருங்க" என்று கயலை முகத்தை திருப்ப...
"கயல் இவனுங்க அடங்கமாட்டானுங்க போலேயே.." என்று கயலை தாங்கியப்படி அவனது வயிற்றில் எட்டி உதைத்ததவன்.. கீழே சுருண்டு விழுந்தான்.
அப்போது அந்த அடியாளின் போன் ரீங் ஆக...! ஆதி எடுத்தான்.
"டேய் எத்தனை தடவை டா உங்களுக்கு போன் பண்றது ...? ஏன்டா எடுக்க மாட்டறீங்க...? " என்று அந்த ரெளவுடி கோபபட..
"கோபம் உடலுக்கு நல்லது இல்லை சார்.. " என்று ஆதி கூற..
"ஏய் யாருடா நீ...?" என்று அந்த ரெளவுடி கேட்க...
"நீ யாருடா உனக்கும் கயலுக்கும் என்ன சம்மந்தம்" என்று ஆதி கேட்க...
"அந்த குழந்தைக்கும் எனக்கும் என்னடா சம்மந்தம் இருக்க போகுது... அவளுடைய அப்பாவுக்கும்... எனக்கும் தான் டா” என்று அந்த ரெளவுடி கோபமாகக் கூற..
"ஓஓ... படத்தில வர வில்லன் மாதிரியே பேசறீங்க... "
"படத்தில மட்டும் இல்லை நேர்லேயும் வில்லன் வில்லன் தான்டா... ஒழுங்கா குழந்தையை அவன்கிட்ட கொடுத்து ஓடிரு இல்லை...! "
"இல்லைன்னா என்ன பண்ணுவ...? "
"உன்னை உயிரோடையே விடமாட்டேன்..." என்று ரெளவுடி கூற..
"உன்னால அது முடியாது " என்று போனை தூங்கி எறிந்து கயலை தனது பைக்கில் உட்கார வைத்தான்.
"கயல்... நாம ஒரு விளையாட்டு விளையாடலாமா..?" என்று ஆதி கேட்க..
"விளையாடலாம் மாமா..?" என்று கயல் கையை நீட்ட..
"ஹபைவ்... ஓகே வா கேம் ஸ்டார்ட் பண்ணலாம்..." என்று பைக்கை எடுத்து கொண்டு புறப்பட்டான்.
போகும் வழியில்
"மாமா இப்ப நாம எங்க போறோம்...?"
"இப்பவே சொல்லிட்டா கேம் சுவாரசியமா இருக்காது..கயல்..!"
"ஹான் மாமா இப்படி சஸ்பென்ஸ் வைக்காதீங்க சூர்யா மாதிரி... " என்று கயல் குட்டி கெஞ்ச
"ஓஓஓ உங்க சூர்யா சஸ்பென்ஸ் எல்லாம் அதிகமா வைப்பாங்களா என்ன..?"
"ஆமா மாமா ரொம்பவே வைப்பா..? சாக்லேட் வாங்கிட்டு வரலேன்னு ஏமாத்துவா ஆனா பின்னாடி ஒளிச்சு வச்சு விளையாட்டு காட்டுவா.." என்று கயல் கூற..
சிரித்தவன்.." ஹான் மாமா அப்படி கிடையாது சஸ்பென்ஸ் முடிஞ்சிடுச்சு..." என்று வீட்டின் முன் பைக்கை நிறுத்திவிட்டு கயலை உள்ளே அழைத்து சென்றான்.
"மாமா யார் இவங்க இவங்க எல்லாரையும் பார்த்தா பயமா இருக்கு.." . என்று கயல் ஆதியின் கழுத்தை சுற்றி இறுக்கப்பற்றிக் கொண்டாள்.
"பயப்படாத கயல் இவங்க எல்லாம் நம்ப பிரண்ஸ் தான்... சரியா.. ?" என்று ஆதி அந்த ரெளவுடியின் முன் நின்று இருந்தான்.
"பலே பலே... ஆதி நான் கொக்கா..?" என்று அந்த ரெளவுடி சிரிக்க..
"தெரிஞ்சா சரி ரெளவுடி சாரே" என்று ஆதி சிரிக்க...
"சிரிஞ்சது போதும்... விஷயத்துக்கு வருவோம்... இப்ப எதுக்காக என் விஷயத்தில குறுக்க வர..."
"இப்ப என்ன பிரச்சனை சின்னபிள்ளை கடத்திறதுக்கு டீல் போட்டு இருங்க..." என்று ஆதி கோபமாக கேட்க...
"ஆதி உனக்கு இதை பத்தி தெரியாது...? பெரிய கை ஆள்... உனக்கு தெரியாதா..?" என்று அந்த ரெளவுடி கூற..
"என்ன ரெளவுடி சாரே நான் பார்க்காத பெரிய கையா நரசிம்மன் தானே நான் பார்த்துக்கிறேன்.. அந்த இடத்தை விட்டுரு.. .ராஜேஷ்யையும் விட்டுரு சரியா.. "என்று ஆதி எச்சரித்தான்.
"சரி... விட்டறேன் ஆனா ...?"
"பணம் தானே எவ்வளவு வேணுமோ சொல்லு... தரேன் ஆனா இனி ஒருதடவை... நீ அவங்க வழியில குறுக்க போக கூடாது..."
"பிஸினஸ் மேன் பிஸினஸ் மேன் தான் எவ்வளவு கச்சிதமா புரிஞ்சுக்கிட்ட ஆதி..."
"ம்ம்ம்...! பிஸினஸ் மேன் தான் ஆனா உன்கூட டீல் வச்சு இருக்கிற அளவுக்கு நான் மட்டமானவன் கிடையாது கொஞ்சம் நியாயமா நடந்துக்க நினைக்கிறவன்... உன்கிட்ட உசாரா இல்லேன்னா உன்னை மாதிரி இருக்கிறவங்கிட்ட உயிரை இல்லை கொடுத்துட்டு நிற்கனும்..." என்று ஆதி கூற..
"சபாஷ் ஆதி நல்ல பேச கத்துக்கிட்ட..." என்று அந்த ரெளவுடி சிரிக்க...
"போதும்... நான்சொன்னதை மறந்திடாத.. அப்புறம்இந்த ஆதி கெட்டவனா மாற ஆரம்பிச்சா நீ தாங்க மாட்ட..."
"ம்ம்ம்" என்று ரெளவுடி இருவரையும் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தான்.
"ஏன் அண்ணா யாருன்னே தெரியல அவன்கிட்ட போயி... இப்படி நடுங்கறீங்க....?" என்று அடியாள் கேட்க...
"நமக்கு எல்லாம் டீல் கொடுக்கிற பெரிய பெரிய பிஸினஸ் மேன்ல ஒருத்தரு... ஆதின்னா மத்த பிஸினஸ் மேன்ஸே அலறுவாங்க நரசிம்மா எல்லாம் எம்மாத்திரம் இனி டீல் கிடைச்சா ஆதியுடைய உறவுகள்ல யாராவது இருக்காங்களான்னு அடிமட்டம் வரை விசாரிங்க டா ஒரு நேரம் போல இருக்கமாட்டான் இவன்..." என்று ரெளவுடி சற்று பயத்துடன் தான் காணப்பட்டான்.
"யாரு மாமா அவங்க...?" என்று கயல் எதுவும் தெரியாமல் விழிக்க...
"பிரண்டு கயல்.. அவ்வளவு தான். தப்பு பண்ணான் சொல்லி திருத்துனேன்...
புரிஞ்சுக்கிட்டான்..." என்றுஆதி கூற..
"ஆதி மாமா சொன்னா யாரு வேணாலும் கேட்டுக்கு வாங்க...!" என்று கயல் குட்டி கூற
"ஆமா ஆமா....! என்று வெளியில் சிரித்தவன்.... மனதினுள்ளே.., 'ஆனா உங்க சூர்யா மட்டும் கேட்கவே மாட்டாங்கிறாங்களே...!' என்றுமனதில் நினைத்தவன்..." வா நாம வீட்டுக்கு போகலாம்" என்று ஆதி பைக்கை எடுத்தான்.
வீட்டிற்கு சென்றால்... வீடு பூட்டி இருந்தது. "என்ன கயல் வீடு பூட்டி இருக்கு...!"
"தெரியல மாமா நான் காணாம போயிட்டேன்ல அதான் என்னைத் தேடி எல்லோரும் போயி இருப்பாங்க மாமா...! என்று கயல் களைப்பானவள்.
"கயல் உங்க வீட்டுல இருக்கிறவங்க நம்பர் சொல்லு" என்று தனது மொபைலை எடுத்தவன்..
"ஹான் அப்புறம் மேல் தான் நான் வந்து உங்களை பிக் அப் பண்ணிட்டு ஹாஸ்பிட்டல் வந்தேன் ..." என்று ராஜேஷ் சிரிக்க...
"சரி உங்களுக்கும் அந்த ரெளவுடிக்கும் என்ன சம்பந்தம்... நீங்களும்...?" என்று ராஜேஷ் சற்று பயத்துடன் கேட்க...
"அச்சோ அவனை எங்களை மாதிரி இருக்கிற பிஸினஸ் மேன்க்கு எல்லாம் நல்லா தெரியும்... ஏதாவது இடம் வேணுமுன்னா பிரச்சனைனா ஆட்களுக்கு அவனை தான் கூப்பிட்டு விடுவாங்க..." என்று ஆதி விளக்கமாக புரிய வைக்க...
"நீங்களும் அப்படி தானா மிஸ்டர் ஆதி..." என்று ராஜேஷ் கேட்க..
"என்னை பார்த்தா அப்படியா தெரியிது... உங்களுக்கு" என்று ஆதி ராஜேஷ்யை பார்க்க.
"இல்லை இல்லை சும்மா தான் கேட்டேன்... எப்படியோ ஒரு பெரிய பிரச்சனை எங்களை விட்டு விலகி போயிடுச்சு... உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தவே பத்தாது..." என்று ராஜேஷ் கூற..
"போதும் உங்க நன்றி எல்லாம் எனக்குன்னு யாருமில்லை உங்க குடும்பத்தை பார்த்துக்கு அப்புறம் தான் எனக்குன்னு ஒரு குடும்பம் இல்லையேன்னு வருத்தமாவும் ஏக்கமாவும் இருக்கு..." என்றுஆதி வருத்தப்பட...
"இதுவும் உங்க குடும்பம் தான்... எப்ப வேணா எங்க வீட்டுக்கு வாங்க மிஸ்டர் ஆதி கயல் கூட இருங்க எல்லோரும் நட்போட இருப்போம்... நாங்க இருக்கோம்..." என்று ராஜேஷ் கூற
"ரொம்ப நன்றி ஸார்" என்று ஆதி கூற..
"ராஜேஷ்னே கூப்பிடுங்க "
"நீங்களும் என்னை ஆதின்னே கூப்பிடலாம்" என்று ஆதி சிரிக்க...
காப்பியை பருகியவர்கள்..." நாளைக்கு உங்களுக்கு எவ்வளவு வேலை இருந்தாலும் சரி... நித்திலா உடைய கட்டளை நாளைக்கு நீங்க வீட்டுக்கு வந்தே தீரனும்... விருந்து" என்று ராஜேஷ் அன்பு கட்டளை இட மறுக்க முடியாமல் தனது வேலைகளை முன்பே முடித்து வைத்திட திட்டமிட்டான்.
நாளை தன் காதலை சொல்லிவிட வேண்டும் சூர்யாவிடம் என்று நினைத்தவன்...
எப்படி சொல்ல வேண்டும் என்று பலநூறு முறை பயிற்சி எடுத்தான் இரவில்... விடிந்ததும் தான் எப்படி தூங்கினோம் என்று கூட தெரியாமல் தூங்கி போனான்.
காலையில்...
"அண்ணி இன்னைக்கு ஆபிஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு ஏற்கனவே இரண்டு நாள் லீவு வேலை தலைக்கு மேல இருக்கு டிபன் இல்லையா சரி நான் கேன்டின்ல பார்த்துக்கிறேன் நான் இல்லைன்னு டேபிளட் போடாம இருக்காதீங்க..." தனது பையில்களில் கவனம் செலுத்த..
நித்திலாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை...
"என்ன அண்ணி ஆச்சு...?" என்று நித்திலாவின் நெற்றியை பற்றியவள்... கையை உதறிவிட்டாள் நித்திலா...
"விருந்துக்கு ஒருத்தவங்க வரதா சொல்லி இருக்காங்க சூர்யா நாம குடும்பத்தோட இருக்க வேண்டாம்மா..?"
"ஆமா அண்ணி ஆனா வேலை இருக்கு என்ன பண்ண சொல்லறீங்க...? இதுக்கு மேல லீவ் போட்டா அனு அவ்வளவு தான் ஹெட்டை கூட சாமளிச்சுடுவேன் அவளை சாமாளிக்கிறது கஷ்டம்" என்று சூர்யா கெஞ்ச...
ராஜேஷ் உள்ளே வந்தவன்..." விடு நித்திலா... சூர்யா போகட்டும் அவ இருந்து என்னபண்ண போறா...? சூர்யா நீ கிளம்பு டா" என்று ராஜேஷ் அனுப்பி வைக்க...
நித்திலாவின் மனதில் இருந்த யோசனை உடைந்து போய் இருந்தது.
-தொடரும்