ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிர் -7

T 24

Well-known member
Staff member
Wonderland writer
சூர்யா நிலை குலைந்து தான் போனாள் ஒரே நாளில் எவ்வளவு வலி...! கயல் நீ வந்தா தான் இங்க எல்லாம் சரியாகும் என் சமத்து பிள்ளைல எப்படியாவது வந்திடுடி கண்ணம்மா' என்று கயலை தூக்கி கொஞ்ச சூர்யாவின் மனம் துடித்தது.

டாக்டர்கள் நித்திலாவை...! பரிசோதித்துவிட்டு" இப்ப அவங்களுக்கு தேவை ரெஸ்ட் மயக்க மருந்து கலந்து கொடுத்து இருக்கோம்...! நீங்க கவலை பட வேண்டாம் " என்று சூர்யாவிடம் கூற...

தனது அப்பாவை ஓர் பார்வை பார்த்தவள்..." சூர்யா மா நீ கலங்காத... கயல் வந்திடுவா... பாரு நித்திலாவுக்கு சரியாகிடுச்சு" என்று ஆதரவாய்‌ அவளது தலையை வருடி விட்டவர்.

‘தாயை இழந்த பிள்ளை...! எத்தனை சோகங்களை தனக்குள்ளே வைத்து தாங்குவாள். வலி என்று‌ ஒரு போதும்‌ வெளியில் சொல்லாதவள்...' என்று சூர்யாவிற்கு ஆதரவாக அவர் மாறினான்.

எங்கிருந்தோ "சூர்யா ‌" என்று‌கயலின் குரல்... ! ஹாஸ்பிட்டல் வரண்டாவில் இருந்து வந்தவள் ராஜேஷ் கைகளில் இருந்து தாவி சூர்யாவை தேடி ஓடி வந்தது.

"கயல் குட்டி‌" என்று சூர்யாவை தாங்கினாள் அவளது கன்னங்கள் நெற்றி என்று முத்தமிட்டவள்.

"என்னை விட்டு எங்க கயல் போன நீ .? ஓர் நாள் நான்‌ உன் ‌பக்கத்தில இல்லை என்னை விட்டு போயிடுவியா நீ..." என்று சூர்யா அந்த பிஞ்சை நெருக்கமாக அணைத்தாள்.

"ஸாரி சூர்யா இனி ‌உன்னை விட்டு போக மாட்டேன்...!" என்று சூர்யாவை தழுவிக் கொண்டாள் கயல்.

கண்களை துடைத்தவள்... சிறிது நேரம்‌ ஆகிற்று... அவர்கள் இருவரும் நார்மல் நிலைக்கு வர... சூர்யா தனது அண்ணாவை பார்த்தவள்.

"என்ன சொன்ன‌ மாதிரியே கூட்டி வந்திட்டீங்க அண்ணா...?" என்று சூர்யா கண்களை துடைத்தப்படி கூற...

"தாத்தா" என்று சிவராமனிடம் கயல் தாவ" என் கண்ணே எங்களை எல்லாம் தவிக்க விட்டு எங்கடா போன நீ" என்று அவர் குழந்தையை கொஞ்ச....

"அண்ணிக்கு இப்போ எப்படி டா இருக்கு...?" என்று ராஜேஷிற்கு தனது மனைவியை காண உள்ளம் துடித்தது.

"இப்போ பரவாயில்லை அண்ணா.." சூர்யா கூற...

"சூர்யா‌ இவர் தான் கயலை கூட்டி வந்தாரு" என்று... ஆதியை கையோடு கூட்டிக் கொண்டு வந்தான் ராஜேஷ்.

"என்ன அண்ணா சொல்லறீங்க இவரா..." என்று சூர்யா ஆதியை ஆச்சரியமாக பார்க்க ...

"ஆமா சூர்யா ஆதி மாமா தான்... அந்த ரெளவுடி பாய்ஸ் கிட்ட இருந்து டிஷ்யூம் டிஸ்யூம் போட்டு என்னை காப்பாத்தினாரு..." என்று கயல் ஆதியிடம் தாவியவள்.

ஆதி அவளை தூக்க அவனது கன்னத்தில் முத்தத்தைக் கொடுத்தாள்.

"தேங்ஸ் மாமா என்னை என் வீட்டுல கொண்டு வந்துவிட்டது நான் இல்லைனா யாரும் ஹேப்பியா இருக்க மாட்டாங்க" என்று‌ கயல் தனது குரலில் தலையை அசைத்து அசைத்து கூற...

"பராவாயில்லை கண்ணா... எனக்கும் கயல் குட்டி னா ரொம்ப பிடிக்கும்.. என் ‌கயல் குட்டிக்கு ஒண்ணுனா‌ எனக்கும் ‌தான்‌" என்று ஆதி கூற...

அவனது கழுத்தை இறுக்கப் பற்றிக் கொண்டது கயலின் கைகள்.. இதை சூர்யாவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை... எங்கு கயலை தன்னிடமிருந்து பிரித்துவிடுவானோ என்று ஏக்கத்தில் இருந்தவள்.

"கயல் தங்கம் ‌வா போய் அம்மாவை பார்க்கலாம்" என்று சூர்யா அழைக்க...

"மாமா....! நான்‌போய்‌ அம்மாவை பார்த்திட்டு வந்திடறேன்..." என்று ‌சூர்யாவிடம்‌ குழந்தை தாவ... அவளை நித்திலா இருந்த அறைக்கு கூட்டி சென்றாள்.

"தம்பி...! எங்களுக்கு இப்போ தான் சந்தோஷமே திரும்ப கிடைச்சு இருக்கு..." என்று சூர்யாவின் அப்பா கையெடுத்து கும்பிட...

"ஐய்யோ...! என்ன நீங்க ரொம்ப பெரியவங்க நீங்க போய்‌ என்கிட்ட" என்று‌ ஆதி அவரது கைகளை கீழே தாழ்த்தினான்.

"அப்பா...! போலீஸ்ஸால கூட முடியல இவர் தான் அவங்கிட்ட இருந்து போராடி காப்பத்தினாரு‌...!" என்று ராஜேஷ் கூற...

"உங்களுக்கு எதுவும் ஆகலேயே தம்பி.‌.." என்று ஆதியின் ‌கையை‌ப் பற்றியவர்..

"இல்லை இல்லை அங்கிள் நான்‌ ரொம்பவே நல்லா இருக்கேன்...!" என்று ஆதி கூற...

"சூர்யா வெளியே வருகிறாளா" என்று ஏக்கத்தோடு பார்வையை வீசினான் ‌ஆதி...

ஆனால் சூர்யா வரவில்லை...! மனம்‌ தோய்ந்து போனவன்...‌" சரிங்க நான் வரேன் ரொம்பவே லேட்டாகிடுச்சு..." என்று... ஹாஸ்பிட்டலை விட்டு வெளியே வந்தவன்... தனது பைக்கை எடுத்துக் கொண்டு‌ புறப்பட்டான்.

"இந்த தம்பி நமக்கு ஏன்பா ‌இவ்வளவு உதவி செய்யறான்னு‌ தெரியல...?" என்று சிவராமன்‌ சற்றே யோசித்தவர்.

"அப்பா கடவுள் ‌எல்லா நேரத்திலேயும்‌ வந்து உதவ மாட்டாரு ‌இது மாதிரி சில நல்ல மனிதர்களை தான் அனுப்புவாரு…" ‌என்று ராஜேஷ் நன்றியோடு ஆதியை ‌பார்த்தவன்.

"நம்ப கயலை யாருடா‌ கடத்தினது எப்படி நடந்திச்சு அவனுங்களை சும்மாவே விடகூடாது" என்று சிவராமன்கோபமானவர்.

"ஹான் அப்பா அது எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்...! நான் போய்‌ நித்திலாவை பார்த்துட்டு வரேன்..." என்று ராஜேஷ் நழுவினான்.

நித்திலாவின் நிலையை கண்டு கயலுக்கு அழுகையாக வந்தது" மம்மி ம்ம்மி" என்று அழுதவளிற்கு ஆறுதலாய்.. சூர்யா கயலை அணைத்துக் கொண்டாள்.

"சூர்யா... அம்மா எப்ப கண்ணு திறப்பாங்க நான் அம்மாவை பார்க்கனும்‌...." என்று கயல் கூற..

"கண்ணா அம்மாவுக்கு ஒண்ணுமில்லை டா... தூக்கத்தில தான் இருக்காங்க சரியா சீக்கிரமா சரியாகி வந்திடுவாங்க... ‌நாளைக்கு கயல் கூட விளையாடுவாங்க பாரேன் என்று.." ராஜேஷ் கயலை வாங்கியவர்...

"அப்பா அம்மா வந்திடுவாங்கள... ? "

"வந்திடுவாங்க கண்ணா...! காலையில இப்போ நீயும் அத்தையும் போயி...‌ வீட்டுல இருங்க நான் அம்மாவை கூட்டிட்டு... வீட்டுக்கு வருவேனா…" என்று ராஜேஷ் கூற..

"இல்லை அண்ணா பரவாயில்லை ஹாஸ்பிட்டலேயே இருக்கோம்...! அண்ணி எழுந்திரிச்சா கயலை தான் தேடுவாங்க...! "என்று சூர்யா கூற...

"நான் இருக்கேன்ல சூர்யா நான் பார்த்துக்கிறேன்.... அப்பாவுக்கும் உடம்பு சரியில்லை அவரை அலைகழிக்க கூடாது நீங்க மூனு பேரும் வீட்டுக்கு கிளம்புங்க நான்... நித்திலா கூட இருந்து பார்த்துக்கிறேன் காலையில வாங்க..." என்று ராஜேஷ் கூற..

"டாடி நான் ம்ம்மி" என்று கயல் பெட்டில் படுத்திருந்த தனது அம்மாவிடம் சென்றவள்.

"ம்ம்மி சீக்கிரமா வாங்க" என்று நெற்றி கன்னத்தில் முத்தத்தையிட்டு விட்டு பெட்டில் இருந்து கீழே குதித்தாள்.

மணி 2 எனக் காட்ட சென்னையே அமைதிக் கடலில் முழ்கி இருக்க... கால்டாக்ஸி முலம் வீடு வந்து சேர்ந்தனர்.. மூவரும்...

"அப்பா ஏதாவது சாப்பிடறீங்களா...?" என்று சூர்யா கேட்க...

"வேண்டாம்‌மா மனசு முழுக்க ஒரு மாதிரியா இருக்கு தூங்கி எழுந்திரிச்சா தான் சரியா இருக்கும்..." என்று அவர் தூங்க செல்ல...

கயலும் சூர்யாவும் தங்கள் ரூமிற்குள் தஞ்சமடைந்தனர்... உடைமாற்றி விட்டு பெட்டில் சரிந்தவளின் மேல் கயல் சரிந்தாள்..

"சூர்யா அம்மாவுக்கு எதுவும் ஆகாதுல..." என்று கயல் அதுவரை அடைக்கி வைத்திருந்த அழுகையை சூர்யவின் மீது காட்டினாள்.

"கயல் குட்டி அம்மாவுக்கு எதுவும்‌ ஆகாது கண்ணா... அம்மாவுக்கு பீவர்டா அதான் நல்லா அம்மா ரெஸ்ட் எடுக்கனுமுன்னு டாக்டர்ஸ் ஊசி போட்டு இருக்காங்க வேற‌ எதுவுமில்லை காலையில நாம போய் அம்மாவை கூட்டிட்டு வந்திடலாம்‌..." என்று சூர்யா சமாதானப்படுத்த...

"சரி சூர்யா" என்று‌ சூர்யாவின் மீது உறங்கிபோனாள் கயல்.

மனம்‌ முழுவதும் சோர்ந்து போய் தான் இருந்தாள் சூர்யா…" வர்மா நீ இல்லாம‌ என் ‌வாழ்க்கையே இப்படி ஆகிருச்சே டா... உன்‌ பேரை கேட்டாலே முன்னை ‌எல்லாம் எவ்வளவு சந்தோஷமா இருக்கும்...! ஆனா இப்போ மனசுல வலி தான் மிஞ்சி இருக்கு நீ ஏன்டா என்னை விட்டு போன...‌ நீ இல்லாத நாட்களை உன்னையே நினைச்சு வாழ்றேனே, நீ என்‌கூட இப்போ இருந்து இருந்தா நான் எவ்வளவு தைரியமான இந்த கஷ்டங்களை கடந்து வந்திருப்பேன்...‌" என்று வர்மாவின் நினைவில் இரவில் பொழுதை கழித்தால் தூங்காமல் நித்தமும் அவன்‌ நினைவில்...

போன் ரீங் ஆகி கொண்டே இருக்க...! ஆதியோ சூர்யாவை காண முடியவில்லையே என்ற‌ ஏக்கத்தில் தன்னை தொலைத்தான்.

சோகமாக இருந்த ஆதி...! மீண்டும்‌போன் அடிக்க திரையில் பார்த்தவன் சஞ்சய் ‌தான் அழைத்திருந்தான் மறுபடியும் வர... எடுத்தவன்

"ஏன்டா எங்க போயி இருந்த உன்னை நான் மெயில் தானே பண்ண சொன்னேன்... டீலர்ஸ் எல்லாம்‌ பைல் கேட்கறாங்க...! " என்று சஞ்சய் கோபமாக கூற...

ஆதியிடம் அமைதி மட்டுமே மிச்சமாகி இருந்தது.

"இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்...டா ஆதி என்ன‌ ஆச்சு...?" என்று சஞ்சய் கேட்க

மறுபடியும்‌ மெளனம்‌ தான் அவனது மொழியாகிற்று...

பொறுமை இழந்தவன்...
" மணி நாலுடா.. இந்த நேரத்தில் நான் உனக்கு போன் பண்றேன்னா அது என்ன காரணமா இருக்குன்னு ‌உனக்கு தெரியாது எட்டு‌ மணிக்கு பிரசண்டேஷ்சன் இருக்கு ஆபிஸ்ல நான்‌ போகனுமா வேண்டாமா..? முக்கியமான டீல் இதை விட்டா நம்ப கம்பெனிக்கு லாஸ் தான் டா..." என்று சஞ்சய் கேட்க...

"அனுப்பறேன்" என்று உடனே போனை வைத்து விட்டு தனது லேப்டாப்பில் வேலையைத் தொடர்ந்தான்.. வேண்டா வெறுப்பாய்.

மணி ஆறைத் தொட... சஞ்சய் க்கு கால் செய்தான்..

"என்னடா ஆதி " என்று சஞ்சய் போனை எடுத்தவன்...

"மெயில் பாரு" என்று உடனே போனை வைத்துவிட்டான்.

சிறிது நேரத்தில் மீண்டும் ஆதிக்கு டயல் சொய்தான் சஞ்சய்...!

மெளனமாய் இருந்தவன்... சஞ்சையே பேச தொடங்கினான்.

"அந்தபொண்ணு ஓகே சொல்லேனா‌ என்ன ஊர்‌ உலகத்தில பொண்ணா இல்லை விடுடா...! ஆதி உனக்குன்னுபொறந்தவ உன்னை தேடி வருவா" என்று சஞ்சய் வருத்ததுடன் ‌கூற...

"அவ எனக்குன்னு பொறந்தவ தான்டா... ஏன்னு தெரியல விலகியே போற...! என்னை பார்க்க கூட மாட்டேங்கறாடா" என்று ஆதியின் அழுகை முனகலாய் தோன்ற...

சஞ்சயின் மனமோ வேதனை கொண்டது..‌." ஆதி அவங்கிட்ட உன் காதலை சொன்னியா இல்லையா...? என்ன நடந்துச்சு" என்று சஞ்சய் கேட்க...

"காதலை சொல்லடா...!" என்று முடித்துக் கொண்டான்‌. நடந்ததை சொன்னால் சஞ்சய் உடனே‌ கிளம்பி வா என்று அடம் பிடிப்பான். என்று ‌நினைத்தவன்‌ மறைத்தான்.

"அப்புறம் ‌எப்படிடா நீயே முடிவு பண்ணிக்கிற...‌ எல்லாத்தையும்... ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோடா...‌ இந்த காதல்ல மட்டும எப்பவும் மெளனம்‌ டாது உனக்கு அவங்க வேணுமுன்னா நீ தான் பேசனும்... போய்‌ முதல்ல பேசுடா‌ இன்னைக்கு... உன் மனசுல இருக்கிற‌ காதலை சொல்லு...‌ அவங்க புரிஞ்சுக்குவாங்க அதை விட்டு காதலை சொல்லாம அவங்களுக்கு புடிக்கல அது இதுன்னு பொழம்பிட்டு இருக்காத டா... நான் மீட்டிங் கிளம்பறேன்...!"

"சஞ்சய்...!"

"சொல்லுடா..! "

"என்னை சூர்யா ‌புரிஞ்சுக்குவாளாடா....! "

"அப்ப்பா முதல்ல உன் காதலை சொல்லுடா... அப்படி இல்லையா அவங்களுக்கு புரிய மாதிரி புரிஞ்சுக்க வை... புரியுதா அதை விட்டு நீயே கற்பனை பண்ணிட்டு மனசை குழப்பிக்காதடா..."

"சரிடா" என்று ஆதி போனை வைக்க...

"சூர்யா...‌ நான்‌ ‌ஏன் பைத்தியமா இருக்கேன் சத்தியமா தெரியல காரணமும் தெரிய வேண்டாம்....! எனக்கு இது புடிச்சு இருக்கு சூர்யா... உன் குடும்பம் நீ எல்லார்க்கிட்டேயும்‌ பேசற விதம்...‌ அன்பா நடந்துக்கிற விதம் இது எல்லாமே எனக்கும் வேணுமுன்னு‌ தோணுது உன் கூட கடைசி வரைக்கும் வாழனும் சூர்யா...! என்கிட்ட இருக்கிற மொத்த காதலையும் உனக்கு மட்டும் கொடுக்கனும் அதை மாதிரி உன்னுடைய‌ மொத்த காதலும் எனக்கு மட்டுமானதா தான் இருக்கனும்..." என்று ஆதியின் மனதில் கனவுகள் பல தோன்ற

அது நடக்குமா...? சூர்யாவின் மனதிலும் வர்மா குடியிருக்க... ஆதி எப்படி சூர்யாவின் மனதினுள் நுழைவான்.
-தொடரும்
 
Top