ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிர் -22

T 24

Well-known member
Staff member
Wonderland writer
மறுநாள் விலகி செல்ல நினைத்தவன் நெருங்கி தான் சென்றான். ஆனால்...., விதியோ வலியது ஆகிற்றே விலக்கியே வைத்தது சூர்யாவையும் ஆதியையும்..

காலை பொழுதில்.... வேதனை தான் மிஞ்சியது ஆதிக்கு தனது அன்பு முழுவதையும் சூர்யாவிடம் மட்டுமே காட்ட வேண்டும்‌ அவளை இந்த உலகத்தில் யாரும் நேசிக்காத அளவிற்கு நேசிக்க வேண்டும் என்ற சிந்தனையில் துளிர்ந்தவன் ஆசையோடு அவளது கழுத்தில் மூன்று முடிச்சு இட்டவன்... பல வண்ண கனவுகளோடு அவளை தாங்கிட நினைத்தவன் இன்று ஏன்டா அவளை பார்த்தாய் நேசித்தாய் என்று அவன் மனம்...! சூர்யா படும் பாட்டை பார்த்து மெளனமாய் கண்ணீர் வடித்தது.

மெல்ல எழுந்தவன் இதற்கு ஏதாவது ஒரு வழி செய்தாக வேண்டும் சூர்யாவை இனி இப்படி விட கூடாது.. என்று முடிவு எடுத்தவன். சூர்யாவின் அறைக்கு சென்றான்.

அவளை கண்ட நாள் முதல்... துயில் கொள்ளும் போதும் சரி தூயில் எழும் போதும் தான் காணும் கடைசி முகம் முதல் முகம் அவளுடையதாக தான் இருக்க வேண்டும்‌ என்று அவள் இல்லாத நாட்களில் அவளது புகைப்படத்தை ரசித்தவன் இப்போது அவளே நேரில் இருந்தும் ரசிக்க தோன்றவில்லை.... நேற்று இரவு நடந்த நிகழ்வுகள் சூர்யா தன்னை விட்டு பிரிந்து செல்ல காரணத்தை அறிந்தவனுக்கு அதிலிருந்து சூர்யாவை எப்படி மீண்டு எடுக்க வேண்டும் ‌என்ற சிந்தனை தான் அதிகமாகியது.

அறை கதவை திறக்க முயன்றவன் லாக் ஆகி இருந்தது இன்னும் எழுந்திரிக்க வில்லையோ...! என்று மனதில் தோன்ற... ஓர்முறை கதவை ஆழமாக பார்த்தவன்...

'சூர்யா நீ அழுது அழுது வீங்கிய இருக்கிற உன்னுடைய கண்ணை பார்க்க எனக்கு பிடிக்கல' என்று தனது மொபைலை எடுத்து அதன் ஸ்கிரினில் தெரிந்த சூர்யாவின் முகத்தை பார்த்தவன் மெய் மறந்தான்..

'இப்படி நீ சிரிக்கும் போது விழுகிற உன் கன்னக் குழியில என் முத்ததை பதிக்க எவ்வளவு நாள் கனவு கண்டு இருப்பேன்...!' என்று ஆதி அன்றைய வேலைகளை தொடங்கினான்.

தனது வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு... அறையை விட்டு வெளியே வந்தவன் மணி 8 என்று இருந்தது 'இந்த நேரம் வரை சூர்யா உறங்கியது இல்லையே...!' என்று எண்ண ஓட்டத்தில் அறையின் கதவை திறக்க முயன்றவன் தட்டிவிட்டு செல்லாம் என்று தட்டியவன் கதவு திறந்தது.

தயக்கத்தோடு கதவின் அருகே நின்று எட்டி பார்த்தவன்.. சூர்யா சோர்வடைந்து பெட்டில் உட்கார்ந்திருந்தாள் முகம் எல்லாம் வாட்டமாய் கண்கள் எல்லாம் சிவப்பாய் மாறி... மிகவும் களைப்போடு இருப்பதை கண்டவன்... சூர்யாவை நெருங்கினான் ஆதி...

அவன் ‌வருவதை கண்டவள் "ப்ளீஸ் என்னை தொடாத...!" என்று சூர்யா கூற கூற..

ஆனால் ஆதியோ சூர்யாவின் அருகில் சென்று அவளது நெற்றியை தொட்டவன் நெருப்பாய் கொதித்து‌. அவளை தன்னோடு சேர்த்து அணைத்தான். அவளது கண்கள் நெருப்பாய் கொதிக்க... உடல் முழுவதும் சோர்வாய் தெரிந்தாள்.

சூர்யாவின் காதோரம்..." புரியிது அம்மு...! நீ முதல்ல பிரஸ் ஆகிட்டு வா...!" என்று கூறிவிட்டு எழுந்தான்‌‌.

பாத்ரூம் உள்ளே சென்றவன் ஹீட்டரை ஆன் செய்தான். தண்ணீர் சூடாக வெளியே வர.." எழுந்திரி" என்று ஆதி சைகை செய்ய சூர்யா குளிப்பதற்கு தேவையானவற்றை கொடுத்துவிட்டு வெளியே வந்துவிட்டான்.

'நான் ‌சொல்லாமலே என்னுடைய வலியை புரிந்துக்கொள்கிறாயே நான் ‌தான்னடா பாவி...! உனக்கான அன்பை என்னால தர முடியல' என்று உடல் முழுவதும் வேதனையின் உச்சத்தில் இருந்து சூடா தண்ணீர் மேல் பட்டவுடன் ஒரு புத்துணர்வை பெற்றவள். குளித்து முடித்து வெளியே வந்தவளுக்கு தனக்கு என்ன தேவையோ அது அவள் கண்முன் இருந்தது.

'நான் கேட்காமலேயே செய்கிறாயே....? எதற்கு இன்னும் எனக்குள் இவ்வளவு குழப்பங்கள் இதற்கு ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும் இன்றோடு' என்று மனதில் நினைத்த சூர்யா ஹாலிற்கு வர ஆதி... காலை உணவை தயார் செய்து இருந்தான்.

"இப்போ ப்ரியா பீல் பண்றியா...?" என்று கேட்டவன்...

மெளனமாகவே இருந்தாள்‌. "ஹலோ சூர்யா ‌மேடம்‌ உங்களை தான்..?" என்று சூர்யாவின் முன் ‌வந்து அமர்ந்தவன்.

சூர்யா ‌எழுந்தாள்... அவளது கையைப் பிடித்து நிறுத்தினான்... "எதுக்காக இப்ப ஒதுங்கிற..."

"இந்த நேரத்தில் ஒதுங்கி இருக்கிறது தான் நல்லது " என்று சூர்யா கூற...

"இந்த நேரத்தில் ஒதுங்கி இருக்க கூடாது நெருங்கி இருக்கனும்...!" என்று ஆதி கூற

"உனக்கு என்ன தெரியும் முதல்ல என் கையை விடு...?" என்று ஆதியிடம் பொய்யாய் சூர்யா கோபத்தை காட்ட...

ஆதி கையை விடுவித்தவன் "உன்‌ முகத்தை பார்த்தே எதுவா இருக்குன்னு கண்டுபிடிச்சேன் அப்போ அது கூடவா தெரியாம இருக்கும் எனக்கு....?" என்று ஆதி கூற...

"என்னை ஏன் இப்படி அன்புங்கிற‌ பேர்ல கொல்லற...? இந்த நேரத்தில் உன்கூட சண்டை போடற அளவுக்கு எனக்கு தெம்பு இல்லை ப்ளீஸ் என்னை விடு..." என்று ஆதியிடம் கெஞ்சினாள் சூர்யா.

"பேசி முடிச்சாச்சா... முதல்ல உட்கார்ந்து சாப்பிடு மத்த விஷயங்களை அப்புறம் பேசலாம்..." என்று ஆதி எடுத்து வந்த பிளேட்டை சூர்யாவின் கையில் கொடுத்தான்.

சூர்யாவும் மறுக்காமல் வாங்கி உண்டாள். ஆதி சூர்யாவை பார்த்த வண்ணம் இருந்தான்" என்னை விடவே மாட்டியா..?" என்று சூர்யா கேட்க...

"ஒரு நிமிஷம் ஒரு நொடி உன்னை என் கண்ணுல இருந்து விலக்கவே மாட்டேன் அம்மு...!" என்று ஆதி பதில் அளித்துவிட்டு கிச்சனிற்கு செல்ல ஆதியின் மொபைல் அடித்தது...

"பிக் அப் பண்ணு" என்று ஆதி கூற..

போனை எடுத்தாள்... "ஏய் ஆதி என்னடா ஆச்சு ஏன் ஆபிஸ் வரலேன்னு சொல்லற...? இப்போ தான் மெஜேஸ் பார்த்தேன்...?" என்று சஞ்சு கேட்க...

"உடம்பு சரியில்லை டா... நைட்டுல இருந்து ஒரு மாதிரியா இருக்கு...!" என்று ஆதி தன் வாயிற்கு வந்த பொய்யை அள்ளி தெளிக்க... இதை அனைத்தும் சூர்யா கேட்டுக்கொண்டு இருந்தாள்.

"நேத்து நைட் நாம பேசுனோமே அது நாள வந்த பீவரா இல்லை...!" என்று சஞ்சு இழுக்க..வேக வேகமாக வந்து மொபைலை அணைத்தான் ஆதி..

சூர்யா ஆதியை உற்று பார்க்க... "ஒண்ணுமில்லை நீ சாப்பிடு" என்று சொன்னவனை பார்த்தவள்

"எதுக்காக இப்போ ஆபிஸ் லீவ் போட்ட..? நேத்து நைட் என்ன நடந்துச்சு சஞ்சய் கிட்ட என்ன சொன்ன..?" என்று சூர்யா கண்கள் உயர...

"அம்மு திரும்ப ஆரம்பிக்காத இது ஆபிஸ் விஷயம் அது மட்டுமில்லாம என் வாழ்க்கையில நடக்கிற பர்ஸ்னல் விஷயங்களை நான்‌ யாரோடும் பகிர்ந்துக்க மாட்டேன் எனக்கு ஹை பீவர் போதுமா... உனக்கு நம்பிக்கை இல்லைன்னா தொட்டு பார்த்துக்கோ...!" என்று சூர்யாவின் கையை பிடித்தவன் கையை உதறினாள்.

"பொய் வாயை திறந்தாலே...!" என்று சூர்யா அவளது ரூமிற்குள் சென்று தாழிட்டு கொண்டாள்.

"ஏய் ராஸ்கல்...! என் வாய்ஸ் தூரத்தில இருந்து கேட்கும் போதோ புரிஞ்சு இருக்க வேண்டாம் இடியட் இப்போ உன்னால எனக்கும் சூர்யாவுக்கும் சண்டை... உன்னை ஆபிஸ் வந்து வச்சுக்கிறேன்...!" என்று‌ஆதி கோபமாக போனை வைத்துவிட்டு..

ஐந்து நிமிடம் கூட இல்லை.. சூர்யாவின் ரூமின் கதைவை தட்டியவன்..." ஒரு ஐந்து நிமிஷம் கூட தனியா விட மாட்டியா‌ என்னை...?" என்று சூர்யா உடல் வலியை தாண்டிலும் மனவலியை தான் அதிகமாக உணர்ந்தாள்.

"டேபிளட் அப்புறம் இந்தா வாட்டர் குடிச்சு படு" என்று சூர்யாவின் கையில் பாட்டிலையும் மருந்தையும் கொடுத்துவிட்டு... ஹாலில் இருந்த தனது சோபாவில் அமர்ந்து தனது அலுவலக வேலையை பார்க்க தொடங்கி விட்டான்.

சூர்யாவும் ஆதி அப்படி பாரா முகமாக செல்வது வேதனை அளித்தாலும்... மாத்திரை போட்டதும் எங்கிருந்து தூக்கம் வந்தது என்று தெரியவில்லை அசந்து தூங்கி போனாள்.

வேலையில் முழ்கியவன்.. இடையிடையே..‌ கதவை திறந்து சூர்யா என்ன செய்கிறாள் ...! என்று பார்த்துக் கொண்டே இருந்தான்.

'அழகு ராட்சசி கோபத்தில கதவை சாத்த மறந்துட்டா...! அம்மு உன் மனசு எனக்காக இருக்கு...' என்று திருப்தியோடு அன்று முழுவதும் சூர்யாவை தாங்கி கொண்டான்.

இரவு ..

உடல் சோர்வு சற்று களைய... ஹாலிற்கு வந்தவள். சோபாவில் அமர்ந்தாள்.. டிவியை பார்ப்பது போல் ஆதி செய்யும் சின்ன சின்ன விஷயங்களையும் சமையலையும் ரசித்தாள்.

கத்தியை வைத்து சிறு பிள்ளையாய் விளையாடிக் கொண்டும் தக்காளியை தூக்கி போட்டு பிடித்து விளையாடுவதுமாக ஆதியின் சமையல் அரங்கேற... அரைமணி நேரத்தில் சமையலை முடித்து சோபாவில் அமர்ந்தான்.

டிவியை ஓடவிட்டு அதை தீவிரமாக பார்ப்பவள் போல் ஆதியை ஓர கண்ணால் பார்க்க...

"என்ன" என்று ஆதி பார்வையிலேயே சூர்யாவை கொத்திவிடுவது போல் பார்க்க....

'எப்படி பார்க்கிறான் பாரு... விட்டா முழுசா பார்வையில தின்றுவான் ‌போல ' என்று மனதில் ஆதியை கருவிக் கொண்டவள்..

அப்போது பார்த்து போன் அடிக்க... ஆதியின் முகம் இருண்டது.

" சரி நான் வரேன்... நாம் பேசிக்கலாம்" என்று ஆதி போனை வைத்தான்.

'யாராய் இருக்கும் ஏன் ஆதியிடம் முகம் இப்படி வாடி இருக்கிறது...' என்று யோசனையில் சூர்யா தன்னை தொலைத்தவள்.

மொபைலை சோபாவில் வீசியவன் சோர்வாய்.. கண்களை மூடி தலையில் கைவைத்தப்படி அமர்ந்திருந்தான்' அடுத்து தான் என்ன செய்ய வேண்டும்...' என்று மனதில் திட்டத்தை வகுத்தான்.

தனது போனை எடுத்தவன்..." சஞ்சு... நான் சென்னை போறேன்.. பிளைட் எதுவும் இருக்கான்னு‌ பாரு டா..!' என்று பிளைட் புக் செய்ய செய்தான் எல்லாவற்றையும் வேக வேகமா முடிவு செய்துவிட்டு சூர்யாவிடம் தெளிவாக கூறினான்.

"எனக்கு முக்கியமான பிரச்சனை...? சூர்யா நான் ‌உடனே சென்னை போகனும்...நீயும் வரீயா..." என்று ஆதி கேட்க...

"வரேன்" என்று சூர்யா ஒற்றை வார்த்தையில் பதில் அளிக்க...

"ஆனா என் கூட இருக்க முடியாது நீ உங்க வீட்டுல இரு நான் பிரச்சனை முடிச்சதும் உன்னை வந்து கூட்டி வந்திடறேன்..." என்று ஆதி கூற...

பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்தவள்.." ரொம்ப பெரிய பிரச்சனையா...?" என்று சூர்யா கவலை தோய்ந்து கூற...

"என்னால சமாளிக்க முடியும் நான் பார்த்துக்கிறேன் வா வந்து சாப்பிடு..." என்று நம்பிக்கையோடு கூறிவிட்டு இரவு உணவை உண்டு முடித்தனர்.

இருவரும் எதுவும் பேசமால் அவர் அவர் அறைக்குள்ள சொல்ல...!

"ஆதி..." என்று சூர்யா அழைக்க..

ஒரு நிமிடம் நின்றவன்... "என்ன..." என்பது போல் சூர்யாவை பார்க்க...

"நம்ப விஷயத்துக்கு என்ன செய்யறது அதை பத்தி இன்னைக்கு பேசலான்னு நான் நினைச்சேன்.." என்று சூர்யா கூற...

"முடிவு எடுக்கலாம் சூர்யா இன்னும் பத்து நாள் ‌போகட்டும் உனக்கு சாதகமான முடிவையே நான் சொல்லறேன்...!" என்று ஆதி அவனது அறைக்குள் செல்ல...

விக்கித்துப் போய் நின்றாள் சூர்யா...
தொடரும்
 
Top