ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிர் -20

T 24

Well-known member
Staff member
Wonderland writer
கல்யாணம் அனைத்தும் சொர்க்கத்தில் அல்லவா முடிவு செய்யபடுகிறது ஆனால் ஆதி சூர்யாவின் திருமணம் ஒரு மனம் தவிப்பிலும் இன்னொரு மனம் காதலின் ஆழத்திலும் அல்லவா தவிக்கிறது...!

வீட்டில் குதூகலம் நிறைந்திருக்க...! சூர்யா தன் மனதில் தெளிவான முடிவை எடுத்துவிட்டாள் இனி வாழ்ந்தாலும் இறந்தாலும் வர்மாவை பற்றி நினைக்க போவதில்லை. ஆதி அவன் மட்டும் இனி தன் வாழ்வின் மிச்சம் என வாழ ஆரம்பித்து விட்டாள்.

விடிந்தால் முகூர்த்தம்...! மாலை நான்கு மணிக்கு கோவிலுக்கு செல்ல...! அனைவரும் பரபரப்பாகி கொண்டு இருந்தனர்.

"என்னப்பா இப்ப வந்து தீடிர்ன்னு சொல்லற...?" என்று சிவராமன் கூற..

"அங்கிள் நான் சொல்லறதை கேளுங்க... ஒரு நிமிஷம்... அண்ணியை நான் பத்திரமா கூட்டி வந்திடறேன்..." என்று சஞ்சு கூற..

"அப்படி எங்க தான் கூட்டி போறீங்க..." என்று கோபமாய்.. ராஜேஷ் கேட்க..

"அண்ணா இது சர்பரைஸ் பிளான் அண்ணியை தேடட்டும்‌ ஆதி... ‌கூடவே நித்திலா அக்கா வராங்க வேற‌ என்ன வேணும் சொல்லுங்க..." என்று சஞ்சய் இருவரையும் சமாதனம்படுத்த...

"ஏன்டி நம்ப கல்யாணத்துக்கு எல்லாம் இப்படி யாரும் யோசிச்சதே கிடையாது அப்படி யோசிச்சு பண்ணி இருந்தா..." என்று ஏக பெருமூச்சு விட்டான் ராஜேஷ்

"அப்படியே தப்பிச்சு ஓடி இருக்லான்னு பார்த்தீங்களா... அவ்வளவு தான் உங்க விதி விடுங்க..." என்று நித்திலா ராஜேஷ்ஷின் காதை கடிக்க...

"இந்த விளையாட்டு எல்லாம் வேணுமாப்பா..." என்று சிவராமன் மீண்டும் நம்பிக்கை இல்லாமல் கேட்க..

"அப்பா இது எல்லாம் ரொம்ப சாதாரணம் இப்ப...! இது மாதிரி எல்லாம் செய்யறது இரண்டு பேருக்கும் நடுவுல இருக்கிற அன்பை உணர தான்பா... சூர்யாவை நாம ஒளிச்சு வச்சா ஆதி எவ்வளவு தவிப்பாருன்னு பார்க்க வேண்டாமா..?" என்று ராஜேஷ் கூற..

"மாமா நான் கூட போறேன்ல கவலையை விடுங்க மூகூர்த்துக்கு முன்னாடி...! சூர்யா அங்க இருப்பா..." என்று நித்தலா கூற..

"அப்போ நான்னு" என்று கயல்குட்டி குதிக்க...

"ச்சூ அமைதியா இரு கயல்...! சூர்யாவுக்கும் தெரிய கூடாது.." ‌என்று நித்திலா கயலை சமாதானப்படுத்தினாள்..

கயல் முகம் சுருங்க... அதை தாங்காத சஞ்சய்.... "அச்சோ நீ வந்தேன்னா செல்லம் ...! பிளான் சொதப்பல் ஆகிடும்... நீ என்ன பண்ற அப்பாக்கூட போ நானும் சூர்யா அண்ணியும் ‌வந்திடறோம்...‌! ஆதி மாமாவை நீ தான் சமாளிக்கனும்..." என்று சஞ்சய் பெரியபொறுப்பை ஒப்படைப்பது போல் கயலிடம் கூற..

"சரி மாமா ஆனா கொஞ்சநேரம் தான் சமாளிக்க முடியும் அப்புறம் சூர்யா எங்க எங்கன்னு‌ மாமா என்னை தொல்லை பண்ண ஆரம்பிச்சுடுவாரு...? " என்று கயல் குட்டி கூற..

"அச்சோ அழகி...!" என்று சஞ்சய் அவளது கன்னத்தில் முத்தமிட..

" சூர்யாவ நான் கூட்டி வரேன் நீங்க கிளம்புங்க முன்னாடி" என்று ராஜேஷ் அனைவரையும் முன்னே அழைத்து செல்ல..

சூர்யா பட்டுபுடவையில் மின்னினாள்... தலையதலைய மல்லிகை பூவிட்டு மணப்பெண்ணிற்கே உரிய அழகாய் இருந்தவள் இப்போது பேரழகியாய் தோன்றினாள்.

"அனுவோ அழகிடி நீ...!" என்று அவளிற்கு மை பொட்டு இட...

"அனு ரெடியாகிட்டீங்களா ...?" என்று நித்திலா வர...

"ரெடி அண்ணி..!" என்று இருவரும்‌ நிற்க... அனுவை மறந்தே விட்டோமே என்று நித்திலா நினைக்க..

"அண்ணி எல்லோரும் கிளம்பியாச்சா...?" என்று சூர்யா கேட்க..

"கிளம்பியாச்சு சூர்யா..! நாம நாலு பேரும் கிளம்ப வேண்டியது தான் பாக்கி" என்று‌ நித்திலா நல்ல நேரத்தை பார்த்தாள். நேரம் சரியாக இருந்து நால்வரும் கிளம்பினர்.

சூர்யாவின்‌ மனதில் ஆயிரம் ஓட்டங்கள்... அனைத்தும்... வர்மா ஆதி என்ற இருவரை பற்றியே இருந்தது மனம் திருமணத்திற்கு பழகவில்லை ஆனால்...! வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு சென்று தானே ஆக வேண்டும் என்று மனதை தேற்றியப்படி இருந்தாலும்... தான் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் அவளை சூழ்ந்திருந்தது. மனதில் போராட்டம் வலுக்க வெளியே அமைதி தான் நிலவியது.

சஞ்சயின்‌ கண்கள் அனுவிடமே இருக்க... ஓரக் கண்ணால்... ரசித்தான். "டிரைவர் ஸார்..! கொஞ்சம் ரோட்டை பார்த்தும் ஓட்டறீங்களா..?" என்று அனு கோபமாக முறைக்க..

"சரி..." ‌என்று காரை ஓட்டியவன்... தீடிரென‌ ஓர் இடத்தில் நிறுத்தினான்.

"யார் வீடு இது இங்க எதுக்கு நாம் வந்திருக்தோம் சஞ்சய் தம்பி" என்று நித்திலா புரியாமல் கேட்க...

மனதின் குழப்பத்தில் இருந்து வெளியே வந்தாள் சூர்யா.

"என்னை மன்னிச்சுடுங்க அக்கா... ஆதி தான் இந்த ஏற்பாட்டை பண்ணதே அண்ணிக்கிட்ட ஏதோ பேசனுமுன்னு சொன்னான்... வீட்டுல சொன்ன விடமாட்டாங்க அதான் இந்த ஏற்பாடு...!" என்று கவலையோடு கூறியவன்..

"இல்லை சஞ்சய் இது சரிபட்டு வராது எல்லோரும் தேடுவாங்க" என்று சூர்யா கூற..

நித்தாலாவே நன்கு யோசித்தவள்..

"சூர்யா போய்பேசிட்டு வா " என்று கூற..

"அண்ணி நீங்களும் மா ஏன் இப்படி பண்றீங்க அண்ணி இன்னும் கொஞ்ச நேரத்தில கல்யாணத்தை வச்சுக்கிட்டு அப்புறம் பேசிக்கலாமே..." என்று சூர்யா கூற..

"சூர்யா‌வாழ்க்கையில சில தருணங்களை நாம எதுக்காகவும் இழந்திட கூடாது... போ போயிட்டு சீக்கிரம்‌ வா ஆதி கூப்பிடறானா‌ ஏதாவது முக்கியமான விஷயமா இருக்கலாம்" என்று நித்திலா நம்பிக்கையோடு கூற

சூர்யா அனுவை பார்க்க அனுவோ வேண்டா வெறுப்பாய் "சூர்யா போ.." என்று கூறினாள். மனதினுள்‌ ஆதியை கருவிக் கொண்டே‌ சென்றாள்.

"ஆதி உள்ளதான் இருக்கான் " என்று சஞ்சய் காலீங் பெல்லை அழுத்த

பட்டு வேஷ்டி பட்டு சட்டையில் கல்யாணத்திற்கு தயாராகி நின்றான் ஆதி...

கதவை திறந்தவன் சூர்யவை உள்ளே இழுத்தான்.

"உனக்கு என்ன ஆச்சு...?" என்று சூர்யா கோபமாக கேட்க...

"ஒண்ணும்‌ ஆகல...! உனக்கு பிடிக்காத இந்த வாழ்க்கை வாழ எனக்கு விரும்பம் இல்லை...!" என்று ஆதி கூற

"என்னடா இப்ப வந்து இப்படி சொல்லற‌ எல்லா ஏற்பாடும் நடந்திருச்சே...!" என்று ‌சூர்யாவின் கண்களில் கண்ணீர் வர காத்திருந்தது.

"சூர்யா அழாதா இனி நீ சந்தோஷமா வாழனும்.." என்று ஆதி சூர்யாவின் கண்ணீரை துடைத்தவன்.

அவளது கையைப்பிடித்து... அழைத்து சென்றான்.

"நீ ஆசைப்பட்ட அந்த வாழ்க்கை...! உன்‌ சந்தோஷம் உன்‌ உயிர் எல்லாமே அந்த ரூம்குள்ள இருக்கு..." ‌என்று ஆதி கூற...

"என்ன சொல்லற நீ முட்டாளா நீ முகூர்த்துக்கு நேரமாகிடுச்சு எந்த விளையாட்டையும்‌ பண்ணி என்ன டென்ஷன்‌ பண்ணாத" என்று சூர்யா பொறுமை இழந்தவளாக கூற...

"உன்‌காதல் அங்க இருக்கு சூர்யா நீ சொன்னியே ஒரு‌வாரத்தில எப்படின்னு...? ஒரே நாள் தான் தூக்கிட்டேன்.. உன்னையே ‌உருகி உருகி காதலிச்ச... உன் காதல்" என்று ஆதி கூற..

"பளார் " என்று ஆதியின் கன்னத்தில் அறைந்தாள் சூர்யா...

அவனது சட்டையை‌பிடித்து "நீ என்ன‌ உருகி உருகி காதலிக்கலேயா.. முட்டாள்‌ முட்டாள்...‌ இப்படி ஏதவாது முட்டாள் தனமா பண்ணி வைப்பேன்னு தான்‌ உன்கிட்ட இருந்து எல்லாத்தையும்‌ மறைச்சேன்...‌ உனக்கு எப்படி தெரிஞ்சுது கடவுளே...!" என்று சூர்யா தலையை பிடித்தப்படி சோபாவில் உட்கார்ந்து கொண்டாள்.

அவளின் அருகில் சென்றவன்..." சூர்யா உன்னை இப்படி பார்க்கவே முடியலடி...? உன் டைரி அதை நான் திருடுனேன்...‌ அவனை பத்தி நீ‌ எழுதி இருந்தேல அதை வச்சு அவனை தேடி கண்டுபிடிச்சு...?" என்று ஆதி கூறிக்கொண்டே போக

"கண்டுபிடிச்சு என்ன டா யூஸ்...! என்னை வேண்டாம் ன்னு வேற ஒரு‌ பொண்ணை தேடி போனவனை எதுக்குடா நீ கொண்டு வர அவனை இறந்துட்டான்‌ என்ன பொறுத்த வரைக்கும்... எப்போ என் வாழ்க்கையில நீ கல்யாணம்‌ பண்ணிகிறேன்னு வந்தியோ அப்பவே அது எல்லாத்தேயும் நான்‌ தூக்கி போட்டேன்..." என்று சூர்யா கூற

"உன்‌ மனசை தொட்டு சொல்லு சூர்யா நீ மறந்திட்டியா..?"

"மறக்க முடியாது தான்டா... ஆனா..? அவன் இல்லாம வாழ முடியும்..." என்று சூர்யா கூற..

"என்‌ சூர்யா அப்படி மத்த பொண்ணுங்க மாதிரி வாழ கூடாது..‌! என் சூர்யா‌ ஆசைப்பட்ட எல்லாமே அவளுக்கு கிடைக்கனும்‌...." என்று ஆதி எழுந்தான்.

கதவை திறக்க சென்றவனை..

"கடத்திட்டு வந்தியா" என்று‌சூர்யா கேட்க..

"ஆமா..‌!" என்று ஆதி கூற..

"பைத்தியாமாடா நீ...! "

"சூர்யா ‌நீ ஆசைப்பட்டேனா அது என்‌ உயிரா இருந்தாலும் உனக்காக தருவேன்...! "

"போதும்டா...‌ அவன் யாருன்னு ‌எனக்கு தேவை இல்லை...! அவனை விட்டுடா..! உன் கூடவே நான்‌ வாழ்றேன்..." என்று சூர்யா கூற..

"ஆனா‌ சூர்யா ...!" என்று ஆதி கூற..

"என்னை விட்டு போனவனை‌பத்தி நினைக்கவே மாட்டேன்...! ஆதி கல்யாணத்துக்கு அப்புறம் சரி இப்பவும் சரி உன்‌மேல சத்தியம் இதுக்கு மேல உன் சூர்யா உனக்கு வேண்டாம்னா அப்புறம் ‌உன்‌ இஷ்டம்..." என்று சூர்யா‌ சோபாவில் அமர

"சூர்யா‌..." என்று உட்கார்ந்தவளது மடி தேடி வந்தவன்.." நீ எனக்கு வேணும்டி ஆனா அதுக்கு முன்னாடி உன் சந்தோஷம் எனக்கு முக்கியம்" என்று சூர்யாவின் கைகளை கோர்த்தப்படி கண்ணீர்‌ சிந்தயவனை தலையை கோதியவள்.."அவனை விட்டுவா ஆதி...! அவனை நம்பி ஒரு பொண்ணு இருக்கா வழுக்கட்டாயமா யாரையும் எதையும் செய்ய வைக்க முடியாது முதல்ல நீ கிளம்பு மூகூர்த்தம்‌ முடியறதுக்குள்ள போகனும்..." என்றுசூர்யா கூற

"சூர்யா..!"

"பேசிக்கலாம் ஆதி கல்யாணம் நல்லபடியா முடியட்டும்‌ உனக்காக நான் ‌காத்திட்டு இருப்பேன்...!" என்று கண்களை துடைத்தப்படி சூர்யா கதவை திறந்து வெளியே வந்தாள்.

சஞ்சயை நோக்கி வர...‌
"என்ன‌ ஆச்சு அண்ணி ஏதாவது...?"

"ஒண்ணும்மில்லை..! சஞ்சய்... இனி‌ எல்லாம் நல்லதாவே நடக்கும் "என்றபடி காரில் அமரந்தாள் முன்பு இருந்த அந்த குழப்பம் அனைத்தும் தகர்ந்து அவள் மனதினுள் முழுதாய் ஆதி குடி புகுந்தான்.

கோவிலிற்கு அனைவருக்கும் முன்பே ஆதி வந்திருந்தான்... சூர்யா அவனை பார்த்து புன்னகைக்க...

"என்னமா‌ இவ்வளவு லேட்டு ஆதியை பதற ‌வைக்கறீங்கன்னு எங்களை எல்லாம் பதற வச்சுட்டீங்களே ...?" என்று சிவராமன் சற்றே மனம்‌ கசந்தார்.

"விடுங்கப்பா" என்று ராஜேஷ் மூகூர்த்திற்கு தேவையானவற்றை செய்ய...

கயல் சூர்யாவிடம் ஒட்டிக் கொண்டாள். முகூர்த்த நேரம் முடிவதற்குள்.. சூர்யாவும் ஆதியும் மாலையும் கழுத்துமாக நிற்க... அம்பாளின் முன் வணங்கியப்படி இருவரும் மாலையை மாற்றிக் கொண்டார்கள்.

ஐயர் தாலியை எடுத்து தர...! ஆதி சூர்யாவின் கழுத்தில் மூன்று முடிச்சு இட்டான்.

அப்போது சூர்யாவின் காதில்...! "ஐ லவ்யூ சூர்யா..! இனி நான் வாழ்ற‌ ஒவ்வெரு நொடியும் உனக்கானது மட்டும் தான்...!"என்று ஆதி கூற..

சூர்யாவின் மனதில் புத்தம் புதிய காதல் மலர தான் தொடங்கியது.

இருவரும் பெரியவர்களின் காலில் விழுந்து வணங்க..

சூர்யாவும் ஆதியும் நித்திலா ராஜேஷ்யின் காலில் விழ நித்திலாவை காலில் விழ சென்றவளை அணைத்துக் கொண்டாள் நித்திலா..

ஆதியையோ சஞ்சய் ‌தழுவிக் கொண்டான் "வாழ்த்துக்கள் டா" என்று சஞ்சயின் கண்களில் சந்தோஷம் மின்னியது.

"அண்ணி" என்று இறுக்க தழுவினாள்.

"அழ கூடாது...! சூர்யா இனி உன் வாழ்க்கை உனக்கு பிடிச்ச மாதிரி நீ ஆசைப்பட்ட மாதிரியே நடக்கும் ..." என்று நித்திலா கூற..

"ரொம்ப தேங்ஸ் அண்ணி " என்று சூர்யா கூற...

அனைவரின் மனதிலும் திருப்தி உண்டாயிற்று ....!

ஆதியின் மனதில் கலக்கம் தான் உண்டாகியது 'சூர்யாவை இனி இப்படி அந்த காதலின் நினைவுகளில் இருந்து மீண்டு எடுப்பது' என்று தெரியாமல் குழப்பி தவித்தான்.

சூர்யாவை ஓரக்கண்ணால் பார்த்தவன்... அவளை அனு அனுவாக ரசிக்கத்தான் தொடங்கினான்...

கல்யாண சடங்குகள் அனைத்தும் நல்லபடியாய் நடந்து முடிக்க... மாலையே சூர்யா பிரிந்து செல்ல வேண்டிய தருணத்தில் நின்றாள்.

'தனது அறையை விட்டு எப்படி செல்வது ஆசை ஆசையாய் வாங்கிய அனைத்து பொருட்கள்... புத்தகங்கள் அழுகையையும் துக்கத்தையும்‌ பார்த்த இந்த வீட்டை விட்டு எப்படி செல்வது என்று நினைக்கும் போதே சூர்யாவின்‌ மனம் ‌வேதனை கொண்டது...

'முதலில் காதல் தோல்வி இப்போது நேசித்த அனைவரையும் ‌விட்டு வேறு எங்கோ செல்கிறேன் என்ன வாழ்க்கையடா இது ...!' என்று வேதனையில் மூழ்கியவள்..

கழுத்தில் ஆதி கட்டிய மாங்கலம் ஏதோ புதியதாய் தொடங்க போகிறோம் என்று நினைத்தவள்...' இந்த உலகத்தில் எதுவும் நிரந்திரமில்லையே..! அடுத்தது வாழ்க்கையில் செல்ல வேண்டும் அல்லவா' என்று பெட்டியில் தேவையானவற்றை எடுத்துவைத்துக்கொண்டு இருந்தாள் சூர்யா...!

கயல் மெல்ல சூர்யாவின் அறையை எட்டி பார்த்து விட்டு ஓடினாள்.

சூர்யாவே "கயல் குட்டி இங்க வாடா..!" என்று‌ சூர்யா அழைக்க அழைக்க பிஞ்சு உள்ளம் ‌ஓடியது.

'கயலை நினைத்தால் தான் பெரும் கவலையாக உள்ளது எப்படி தாங்குவாளோ சின்ன‌பிள்ளை 'என்று வேதனை அடைந்தாள்.

ஆனால் கயலிற்கு சிறு துளி அழுகையோ வரவில்லை...!

அனைவரிடமும் விடைப் பெற்றவள் இறுதியாக கயலிடம் வந்தவள்
கயலிடம் குனிந்தவள்...!

சூர்யாவிற்கு மாறி‌மாறி இரு கன்னங்களிலும் ‌முத்ததை பரிசளித்தவள்..." கயல் கண்ணா" என்று‌வாரி அணைத்துக் கொண்டாள் சூர்யா...

"நான் போறேன்னு‌ உனக்கு கவலையா இல்லையாடா...?" என்று‌சூர்யா கேட்க...

"நீ அழுவாத சூர்யா நான் ‌அழல பார்த்தியா ...? "

"அதான் ‌ஏன்டா இந்த அத்தையை உனக்கு பிடிக்கலேயா...?"

"அச்சோ சூர்யா..." என்று‌ மெதுவாக அழைத்தவள்... அவளின்‌ காதோரம் . "ஆதி மாமா உன்னை பத்திரமா பார்த்துக்கவாரு.. போயிட்டு வா... அடுத்த தடவை வரும்போது " என்று தனது அம்மாவை பார்த்தவள்...

"சாக்லேட் ஐஸ் கீர்ம் எல்லாம் வாங்கிட்டு வா" என்று கன்னத்தில் முத்தமிட்டவள் சூர்யா கயலை இறுக்க அணைத்தாள்.

ஆதியோ சூர்யாவின் தோள் ‌மீது ஆதரவாய் கைவைக்க...

"கயல் கண்ணா...! உனக்கு தெரியிது ஆனா பாரு இந்த சூர்யாவுக்கு தெரியல... பாரேன்... ! " என்று கயலை வாங்கியவன்...

"மாமா ப்ராமிஸ் பண்ணி இருக்கீங்க மறந்திடாதீங்க...?" என்று கயல் ஆதியை மிரட்ட..

"கண்டிப்பா கயல் குட்டி... ப்ராமீஸை மீறவே மாட்டேன்..." என்று மறுபடியும் பிங்கி பிராமிஸ் செய்துவிட்டு விடைப் பெற்றார்கள்.
-தொடரும்
 
Top