விலகி சென்றபின் மிச்சம் இருப்பது இந்த வலி மட்டுமே...
ஒரு வருடத்திற்கு முன்பு...
பேச ஆரம்பித்து அவன் நினைவில் பைத்தியமாகி
மூன்றாவது மாதம்...
"ஏன்டா உனக்கு அப்படி தோணுச்சு நாம பழக ஆரம்பிச்சு எவ்வளவு சண்டை எவ்வளவு பிரச்சனை நீ ஏன் அப்படி கேட்ட...?" என்று சூர்யா அன்று வந்த இறுதி மெயில்... உடைந்தாள்
"ஹாய் சூர்யா...நான் நானா இல்லை டி இப்போ எல்லாம் என்னை விட்டு நீ அதிகமா விலகி ஓடற ஏன்டி...? என்னை பிடிக்கலேயா..! என்னை பத்தி முழுசா சொல்லிட்டேன்... உன்கிட்ட அதனால யா..! உன்னை விட யாரும் என்மேல இவ்வளவு அன்பு வச்சதே இல்லைடி முதல் தடவை என் அம்மா இறந்து போனப்ப அழுதது அதுக்கு அப்புறம் அழுதே கிடையாது உன்னால நான் தினம் அழுகறேன்டி என்னால என்னை கட்டுபடுத்திக்க முடியல..."
"இதுக்காக தான்டா நான் உன்கூட பேசல என் அன்பு உன்னை ஒரு வேலையும் செய்ய விடாம தடுக்குது நீ சரியா சாப்பிட மாட்டேங்கிற தூங்க மாட்டேங்கிற 24 மணி நேரமும் என் நினைப்புலேயே கரைஞ்சு இருக்க... எழுது நீ எதுக்காக அமெரிக்கா போனியோ அதை பாரு.. அதை எல்லாம் முடிச்சுட்டு வா உன் சூர்யா உனக்காக இருப்பா...!"
"என்சூர்யா எனக்காக இருப்பா...! ஆனா அவ எனக்கானவளா இருக்கனும் நான் உடனே இந்தியா வரேன்.. இல்லாட்டி நீ அமெரிக்கா வா மத்த விஷயங்களை நாம நேர்ல பேசலாம்...."
"ஆனாலும் உன் அசாத்திய துணிச்சலுக்கு அளவே இல்லைடா எப்படி எல்லாம் கற்பனை பண்ற... ஏன்டா என்னை விட்டு பிரிஞ்சு போக நினைக்கிற.."
"இல்லை கண்ணம்மா உன்னை விட்டு பிரிஞ்சு போக நினைக்கல நான் உன்னை எனதாக்கி கொள்ளதான் துடிக்கிறேன். உனக்கு ஏன் அது புரிய மாட்டேங்குது..."
"புரியாம இல்லைடா உனக்கு எத்தனை தடவை சொல்லி புரிய வைப்பேன்.. நீ உன் வேலையை முடி... நானும்.. படிப்பை முடிச்சிடுவேன் வீட்டுல பேசு வந்து என்னை உன் சூர்யா வா எடுத்துக்கோ..."
"உங்க வீட்டுல ஒத்துக்கலேனா..."
"ஏன்டா இப்படி நெகட்டீவ்வா பேசற...! ஒத்துக்குவாங்க நீ ஒத்துக்க வச்சிடுவ."..
"நான் சொல்லியும்... அவங்க புரிஞ்சுக்கலன்னா என்ன பண்ண சூர்யா..."
"ஒண்ணும் பண்ண மாட்டேன் டா நீ எங்க இருந்தாலும் உன்னை தேடி ஓடி வருவேன் போதுமாடா இப்ப போய் தூங்குடா இந்த நோரம் அங்க இரவுல.".
"சூர்யா...!"
"என்ன டா..!"
"நீ எனக்கு வேணும் டி...! என் நிஜ வாழ்க்கையில இதே மாதிரி அன்பா இருக்க யாருமே இல்லைடி..."
"அடக்கடவுளே.. ! நான் இருக்கேன் டா... ! நான் உனக்கு தான்டா... நீ எனக்கு மட்டும் தான் இதை மாத்த யாராலேயும் முடியாது...!"
"நான் போகவா...! "
"போடா போயி தூங்கிற வழியை பாரு காலையில வேலைக்கு போகனும்ல...! உன்கிட்ட என் அன்பை அதிகமா காட்டினது நாளத்தான் நீ இப்படி மாறி இருக்க.. என் அன்பை நான் எனக்குள்ளே வச்சு இருந்து இருக்கனும்... இப்ப பாரு என்னையே கதின்னு கிடக்கிற..."
"என்ன சொன்ன நீ இப்ப...! அப்புறம் எதுக்கு டி உன் காதலை சொல்ல என்னை தேடி வந்த..!"
"வர்மா..."
"சொல்லுடி இப்படி சொல்லி காட்டவா.. வந்த...."
"வர்மா... அப்படியில்லை வர்மா நான் உன்னை ரொம்பவே கெடுத்து வச்சு இருக்கேன்...!"
"எதுவும் பேசாத... என்னை தேடி இனி வராதா... இப்பவே வரமாதிரி இருந்தா வா இல்லையா நான் தொலைஞ்சுபோயிடறேன்...!"
"இல்லை வர்மா ப்ளீஸ் போகதா நீ இல்லாம என்னால வாழ முடியாது டா.. புரிஞ்சுக்கோடா... வர்மா உன் நம்பர் கூட தெரியாது நீ கருப்பு சிகப்பா அழகா இருப்பியா அது எதுவும் பார்த்து வந்தது இல்லைடா இந்த அன்பு... உன்னை மட்டுமே நினைச்சு உன் எழுத்துக்களை மட்டுமே ரசிச்சு வாழ்ந்தவ டா நான்...! ப்ளீஸ் டா போகாதா.."
"என்னை மன்னிச்சுடுங்க... ! இது தான் நான் உங்களுக்கு எழுதிற கடைசி மெயில்...!"
"என் சூர்யா எனக்கான சூர்யாவா இருந்தா பல நேரம் எனக்கு அம்மாவா என்னை அரவணைச்சா... அவ இல்லாம என்னால வாழவே முடியாதுன்னு தான் இருந்தேன்... அவ அன்பு என்னை எவ்வளவு மாத்திச்சுன்னு அவளுக்கே தெரியாது... யார்க்கிட்டேயும் மனசு விட்டு பேசினது இல்லை... எப்பவுமே தனிமை தான் என் வாழ்க்கை...! இப்போ தீடிர்னு நீ என் வாழ்க்கைக்குள்ள வந்தப்ப நிஜத்தில் தான் மிதந்தேன்...! ஆனா பாரு இப்போ மறுபடியும் தனிமைக்கே போறேன்... நீ எப்பவும் என் கூடவே இருக்கனுமுன்னு...! தான் இப்பவே உன்னை உரிமை கொள்ள மனசு துடிக்குது..."
எவ்வளவு தான் அன்பில் முழ்கி போய் இருந்தாலும் அவங்க நம்பளை விட்டு விலகி போறேன்னு சொன்னாலும்.. நமக்கு அது பயத்தை தான் தரும்...! அதை அவங்க விளையாட்டா கூட சொல்லி இருக்கலாம் ஆனா... மனசு அதை தான் உண்மையின்னு நம்பும் அந்த நிமிஷம் தொடங்கும் பிரிவு... விட்டு போயிடுவாங்கன்னு சொல்லி சொல்லியே.. அவங்களை விட்டு நாம பிரிஞ்சுடுவோம். ஏன்னா அவங்க நம்பளை விட்டு பிரிஞ்சா அந்த வலி...! அது தாங்க முடியாத ஒரே காரணம் தான்... வர்மாவும் அதே நிலையில தான் சூர்யாவை தொலைத்தான்...
சூர்யா இப்பவே தன் கண்ணு முன்னாடி வரனுமுன்னு துடிச்சான்... அவளை விட்டு விலகி இருக்க அவனால முடியல எங்க சூழ்நிலை பிரிஞ்சு வச்சு விளையாடிடுமோன்னு பிதற்ற ஆரம்பித்தவனின் வாழ்வின் முடிவு அவளை விட்டு பிரிந்து போக தான் வைத்தது.
நிஜம்...!
'பிரிஞ்சு ஒரு வருஷம் ஆச்சு டா. ஆனா நீ இல்லை... அதுக்காக என் வாழ்க்கையை என்னால வாழாமா இருக்க முடியாது நீ வருவேன்னு ஓரே காரணத்துக்காகதான் நான் வாழ்றேன்...! நீ கூப்பிட்ட அப்ப என்னால வரமுடியல ஆனா இப்போ நான் உன் கூட வர துடிக்கிறேன் ஆனா இப்போ நீ இல்லை...! இது தான்டா வாழ்க்கை... அன்புக்கு கூட ஓர் எல்லை உண்டுன்னு உன்கிட்ட தான் கத்துக்கிடேன் இந்த வலி இதை விட பெரிய வலி என் வாழ்க்கையில இல்லைடா... உன்னை நினைச்சுட்டே நான் வாழ்ந்திடுவேன் டா...! என்ன நேத்து என் வாழ்க்கையில அவ்வளவு சந்தோஷத்தை உணர்ந்த நாள்...! நீ எவ்வளவு தான்... என்னை விட்டு விலகி போக நினைச்சாலும் நான் போக மாட்டேன் டா.. இப்ப நிரூபிச்சாலும்... அப்போ நான் நிரூபிச்சு இருந்தா நீ என்னை விட்டு போயி இருக்கமாட்ட பரவாயில்லை டா நீயாவது நிம்மதியா வாழு... நான் எதிர்பாக்கிறேன் உன்னை ஆனா உன்கிட்ட இருந்து எந்த பதிலும் வரவே இல்லை... '
'நீ சரியான கல் நெஞ்சங்காரன்டா... சொன்னது மாதிரி தானே நடந்துக்கிற...'
"நான் இனி உன்வாழ்க்கையில வரமாட்டேன் கண்ணம்மா நிம்மதியா இரு... ஆனா உன்னை மறக்கிறது ரொம்பவே கஷ்டம் கண்ணம்மா என் வாழ்க்கையில யாரும் உன்னை விட அன்பு வைச்சதே இல்லை இனி வைக்கவும் மாட்டாங்க டி.! அப்படி என்னை மாத்திட்ட... இனி என் சம்பந்தபட்ட எந்த நினைவுகளும் உன்னை தேடி வராது உன் மனசுல இருந்து என்னை அழிச்சுடு... இப்படி பைத்தியமா இருந்து உன்னை இழந்திடாத... நான் வரமாட்டேன்..." வர்மாவின் இறுதி மெயில்
"நீ வருவடா நான் இல்லாம் உன்னால வாழ முடியாது நீ வர அந்த நாளுக்காக நான் காத்திட்டு இருப்பேன் டா..!" என்று சூர்யா காலை போழுதில் பயங்கர தலைவலியுடன் உணர்ந்தாள்.
அனுவை எழுப்பியவள்... அவள் எழுவதாய் தெரியவில்லை காப்பியும் கையுமாக பேப்பரை எடுத்தவள் சற்று மழை வந்து மண்னை நனைத்திருந்துந்து.
"வர்மா நீ வருவடா ...!" என்ற நம்பிக்கையில் அந்த நாளை தொடங்கினாள்.
மணி 7 என்று அலராம் அடிக்க அனு எழுந்தாள் சூர்யா பால்கனியில் அமர்ந்திருக்க...
"நீ நல்லா இருக்கியாடி?" என்று நெற்றியை தொட்டவள்.
"நல்லா இருக்கேன்....!" என்று சூர்யா கூற உடலும் ஜில் என்று இருந்தது.
"என்னஆச்சு நேத்து ஒரு நாள்..? "
"அது வேண்டாம்... அனு...! நான் வீட்டுக்கு கிளம்பறேன் கயலை ஸ்கூல்ல விடனும்... அப்புறம் அண்ணியை சமாதானப்படுத்தனும் இன்னைக்கு ஆபிஸ்..."
"லீவு அதானே... "
"இல்லை ஆப்டர் நூன் வந்திடுவேன்..." என்று சூர்யா புன்னகைக்க..
"இப்படியே இரு சூர்யா அதான் அழகு..."
"டிரை பண்றேன் அனு " என்று முகத்தை கழுவிக்கொண்டு கிளம்பினாள்.
கால் மணிநேரத்தில் வீட்டிற்கு வந்தவள். வாசலிலேயே...!
சிவராமன் இருக்க..
"குட்மார்னீங் அப்பா..". என்று சூர்யா புன்னகையோடு வர..
"என்னமா ஆபிஸ்ல வேலை அதிகமா ஏன் இவ்வளவு வேலையே இழுத்து போட்டு செய்யற என்று அவர் செல்லமாய் கண்டிக்க..
"அப்பா வொர்க் முடிஞ்சுது..." என்று சூர்யா புன்னகைக்க...
"நீ வேலைக்கு போகனுமுன்னு என்ன அவசியம்..."
"எனக்கு அவசியம் அப்பா... என் சொந்த கால் நிக்கனும்" என்று வழக்கம் போல் சூர்யா கூற..
வாசலில் குரல் கேட்டு கயல்குட்டி எழுந்த வர...
கயல் முகத்தை திருப்பிக்கொண்டு நின்றாள்.
"கயல் கண்ணா ஸாரிடா ஆபிஸ்ல முக்கியமான வேலை அதான் வரமுடியல டா இதோ இப்ப வந்துட்டேன்ல வாடா கண்ணா...! என்று சூர்யா அழைக்க...
"பல்லு கூட விளக்காம என்ன கயல் பண்ற போ" என்று கயலை விரட்டியப்படி பின்னால் நித்திலா வர...
சூர்யாவை கண்டவள்... நித்திலா வேக வேகமா உள்ளே சென்றாள்
"சூர்யா ம்ம்மி உன் மேல ரொம்ப கோபமா இருக்காங்க... நீ செத்த சூர்யா..." என்று கயல் ஓடினாள்.
"அப்படியா சமாதானம் படுத்திடலாம்..." என்று அண்ணியை தேடி சமையல் கட்டில் நுழைந்தவள்.
அண்ணியை பின்னால் இருந்து அணைத்தாள் சூர்யா..
"ப்ளீஸ் அண்ணி இப்படி இருக்காதீங்க உங்க கோபம் எவ்வளவு நேரம் இருக்கும் ...!"
"சூர்யா நீ முன்னை மாதிரி இல்லை...!" என்று நித்திலா உரைக்க...
"அப்படியா முன்ன அழகா இருந்தேன் இப்போ அதை விட அழாகாவா இருக்கேன்..." என்று நித்திலா கட்செய்து கொண்டு இருந்த கேரட்டை எடுத்து வாயில் வைத்து கடித்தவள்..
"சூர்யா நீ இன்னும் சின்னபிள்ளை இல்லை...! "
"உங்களுக்கு சின்ன பிள்ளை தானே அண்ணி நான்...! இல்லை என் அம்மா..!"
"அம்மா தானே நான்... நான் சொன்னா கேட்பியா...? "
"சொல்லுங்க அண்ணி...! நீங்க சொன்னா எதுவேணாலும் கேட்பேன் அண்ணி ஆனா இப்படி கோபமா இருக்காதீங்க ப்ளீஸ்" என்று தனது காதை பிடித்து மன்னிப்பு கேட்டவள்..
"நீ இப்படி வேலை பார்க்கனும் அவசியமா என்ன..? சரி அப்படியே பாரு ஆனா ரொம்ப வேலையை உன் தலையில போட்டுக்காத சூர்யா... ஏற்கனவே...!"
"அப்படியே ஆகட்டும் அண்ணி இனி எந்த வேலையா இருந்தாலும் நைட் தங்கி பண்ண மாட்டேன் ப்ராமிஸ்..." என்று சூர்யா ப்ராமிஸ் செய்ய..
ராஜேஷ் உள்ளே வந்தவன்" எங்க இரண்டு பேரும் சாமதானம் ஆகமாட்டீங்களோன்னு நினைச்சேன்...?" என்று சிரித்தான்.
"இல்லை அண்ணா.. அண்ணியை சாமாதானப் படுத்திட்டேன்...."
"அது எப்படின்னு எனக்கு சொல்லி கொடு சூர்யா.. ரொம்ப கஷ்டமா இருக்கு உங்க அண்ணியை டீல் பண்றது..." என்று ராஜேஷ் கேட்க
"இப்ப இரண்டு பேரும் போய் வேலையா பார்க்கறீங்களா என்ன அண்ணனும் தங்கச்சியும் சேர்ந்து என்னை கிண்டல் பண்றீங்களா...? என்று நித்திலா அதட்ட..
இருவரும் பறந்தனர்.. அவர் அவர் வேலைகளில் மூழ்கி தான் போயினர்
-தொடரும்