"அன்று பேசிய பொழுதுகள்
அனைத்தும்
நினைவில் மட்டுமே...!
காலம் மீண்டும் திரும்ப
தந்திடாத ஒரு பரிசு..
கடந்த காலம்...!
உந்தன் குரலில்
என்னை மறந்த நிமிடங்கள்...!
உந்தன் அன்பு மட்டுமே...!
நான்கொள்ளும் மருந்தடா.
காலங்கள்மாறினாலும்...!
நீ மாறினாலும்..!
மாறாதது ஒன்று உண்டு எனில்..!
நான் உன் மீது
கொண்ட அன்பு மட்டுமே..!"
ஏன் டா என் நினைவுகள்ல நீயே குடியிருந்து என்னை ஆள்ற நான் எப்படி மாற கூடாதுன்னு நினைச்சேனோ அப்படி எல்லாம் இப்போ ஆகி இருக்கேன்... அதீத அன்பு போதை தானே டா...! சந்தோஷமா அதை பருகறதுல என்னை பிரச்சனை உனக்கு...! எதுக்காக என்னை விட்டு போனா...! என்று நினைவுகளில் சூர்யா தன்னை தொலைத்தால் பித்து பிடித்தது போல் "வர்மா வர்மா " என்று அவளை தொலைத்தாள்.
ஒரு வடருத்திற்கு முன்பு..
"பாரதியின் காதலி கண்ணம்மா
எனில்
எனது காதலி நீ தானம்மா..!
பாரதியின் எழுத்துக்கள் கண்ணம்மாவிற்காக என்றால்...!
என்எழுத்துக்கள்
உனக்கானது கண்ணம்மா..! "
என்று வழக்கம் போல் தன் எழுத்துக்களினால் அவளை பித்து பிடிக்க வைத்தான் வர்மா.
"அப்படியாடா..! உன்எழுத்துக்கள் எனக்கானதா...!"
"நானே உனக்கானவனா இருக்கும் போது என் எழுத்துக்களும் உனக்கானது கண்ணம்மா..! "
"தேங்ஸ் டா ரவுடி...!"
"ஏய் யாரு டி ரவுடி..!"
"நீ தான் நீ மட்டும் தான் டா...!"
"என் மேல இவ்வளவு அன்பு வைக்காதடி...!"
"ஏன்டா என்ன ஆச்சு ஏன் இப்படி திடீர் திடீர்னு என்ன என்னவோ பேசற நான் தான் டெய்லியும் உனக்கிட்ட பேசிட்டு தானே இருக்கேன்...!"
"அதுக்கில்லை டி என் மேல நீ இவ்வளவு அன்பு வச்சு இருக்கிறது எனக்கு பயமா இருக்கு இந்த இரண்டு மாசத்தில உன் மேல நான் பைத்தியமாகி போய் இருக்கேன் உன்னை உடனே பார்க்கனும் உன்னை எனக்கானவளா ஆக்கிகொள்ள துடிக்கிறேன் டி..."
"பயம் எதுக்கு டா நீயே விட்டு விலகி போனாலும் நான் போக மாட்டேன் உனக்காக நான் காத்திட்டு தான் இருப்பேன் டா...!"
"நான் தீடிர்னு உன்கண்ணு முன்னாடி வந்து நின்னா என்ன பண்ணுவ...!"
"உன்னை ஓடி வந்து இறுக்கமா கட்டி பிடிச்சுக்குவேன் டா என்னை விட்டு உன்னை விலகி போக கூடாதுன்னு... அன்னைக்கு மட்டும் உன்னை நான் பார்த்திருந்தேனா.. இப்படி எல்லாம் நடந்திருக்காது" என்று சூர்யா வருத்ததுடன் கூற...
"அப்ப என்கிட்ட பேசறது புடிக்கலையா..?"
"அப்படி இல்லைடா நீ என் பக்கத்தில இருந்தும் உன்னை முழுசா கண்டு ரசிக்க மீடியல அதை சொன்னேன்... எப்படி இருப்பேன்னு எனக்குள்ள ஒரு கற்பனை இருக்கு அது நிஜத்திலேயும் இருந்தா நான் எவ்வளவு சந்தோஷப்படுவேன் தெரியுமா...? "
"சூர்யா... என்னை மன்னிச்சுடு.. என்னால என்னோடை போட்டைவை எல்லாம் அனுப்ப முடியாது கண்டிப்பா உன்னை தேடி நான் வருவேன் வந்து என் தங்கத்தை நான் என் கையோடை கூட்டி வந்திடுவேன்.. "
"என்னது உன்கூட கூட்டி போயிடுவியா அப்போ கயல் அண்ணி அண்ணா அப்பா..." என்று சூர்யா அடுக்கி கொண்டே போக...
ஹலோ மேடம் அப்போ உங்களுக்கு நான் வேண்டாமா...? என்கூட வரமாட்டிங்களா...?
"வருவேன்டா... வீட்டுல சம்மதம் வாங்கி கூட்டி போ உன் சூர்யா அளவில்லாத சந்தோஷத்தோட வருவா..!"
"வரேன் டி வந்து என் கண்ணம்மாவை தூக்கிட்டு வந்திடறேன்..."
"சரிடா... அப்புறம்..."
"கண்ணம்மா..."
"சொல்லுடா கூடவே தான் இருக்கேன்.."
"நிமிஷத்துக்கு நிமிஷம் உன்னையே நினைக்கிறேன் டி..."
"நானும் தான்டா என் அன்பு உனக்கு புரியிதுல..."
"ஏன்டி தீடிர்னு கேட்கற உன் அன்பு புரியாம தான் இவ்வளவு அன்பு காட்டறேனா உன் மேல.."
"உன்னை ஒருதடவை நான் பார்த்துட்டேனா... எனக்கு அது போதும் டா உன் மேல ஏன் இப்படி இருக்கேன்னு தெரியல டா..."
"போன ஜென்ம உறவு டி... நீ எனக்கு அதான் இப்படி ஆகி இருக்க... நானும் இப்போ அப்படியாகிட்டேன்..."
"அப்படியாடா..."
"ஆமாண்டி என் கண்ணம்மா.."
"வர்மா ஸார் என்னை நினைச்சுட்டு இருக்காம போய் தூங்குங்க நான் காலேஜ் கிளம்பறேன்...!"
"போய்தான் ஆகனுமாடி.."
"ஆமாண்டா... போகனும்... பிராஜெக்ட் இருக்கு டா..."
"சரி போ ஆனா...! "
"என்னடா..."
"வேண்டாம் கண்ணம்மா நான் கேட்டா அது கிடைக்காது...!"
"உன் கண்ணம்மாகிட்ட மறைப்பியா என்ன...?"
"இல்லை கண்ணம்மா... அது வந்து.."
"என்கிட்ட தயங்க கூடாது சொல்லு டா உனக்கு என்னவேணும்..."
"நீ தான் கண்ணம்மா வேணும்... கனவுல கூட எனக்கு உன் நியாபகம் தான்..."
"நான் எப்பவுமே உனக்கு தான்டா இது மாறாது... "
நிஜம்...!
'ஆமாண்டா இப்பவும் உனக்கு மட்டும்தான்... நான் உனக்காக காத்திட்டு இருக்கேன் எப்படியாவது என்னை தேடி நீ வந்திடுவியான்னு ஆனா நீ வர மாதிரி தெரியல நானும் உன்னை தேடி வரலான்னு நினைச்சா... அதுக்கான வழி கூட தெரியல... என்ன பண்றது டா ஒண்ணுமே புரியாம குழம்பி தான் தவிக்கிறேன்...!'
'ஒரே ஒரு தடவை என் கண்ணு முன்னாடி நீ வந்திடு உன்னை வேற யாருக்கும் கொடுக்காம உன்னை எனதாக்கிக்குவேன் டா...'
"சூர்யா...! "
"சூர்யா..!" என்று நான்கு முறை கதவை தட்டியும்... சூர்யா திறக்கவே இல்லை...நினைவிற்கு வந்தவள்.
"வரேன் அனு "என்று சூர்யா கதவை திறந்தாள்.
அவளது முகத்தை மறைந்து பெட்டில் படுத்தாள்.
"சூர்யா..." என்று அவளது அருகில் சென்றவள்..." என்ன தான் வேணும் உனக்கு வீட்டுல எதுவும் சொன்னாங்களா...?" என்று அனு கேட்க
'எனக்கு அவன் தான் வேணும் அனு ஆனா அது சொன்னா உங்களுக்கு புரியாது...' என்று மனதில் நினைத்தவள் "நான் நினைக்கிறதை எல்லாம் நிஜத்தில கொண்டு வர முடியாது அனு. "
"சூர்யா... இப்படி இருக்காதடி எனக்கு பயமா இருக்கு" என்று அனு வேதனைப்பட்டாள்.
"அனு மார்னீங் வரைக்கும் என்னை தனியா விடு நான் மாறனும்..."
"என்ன மாறனும் என் சூர்யாவுக்கு என்ன ஆச்சு...?" என்று அவளது நெற்றியை தொட்டு பார்த்தவள் அனலாய் கொதித்தது.
"என்ன சூர்யா உடம்பு இப்படி கொதிக்குது...?"என்று தனது போனை எடுத்தவள்.
"வோண்டாம் அனு ரொம்ப பயப்புடுவாங்க நான் தூங்கினா சரியாகிடுவேன்... ப்ளீஸ்" என்று சூர்யா கூற..
"சரி தூங்கு சூர்யா...!" என்று அவளிற்கு போர்வை போர்த்தி விட்டு வெளியே வந்துவிட்டாள்.
'சூர்யா உன் மனசுல என்ன இருக்குன்னு தெரியல டி ஆனா எதுவுனாலும் உன் மனசுல இருக்கிறப்படியே தான் நடக்குனும்...! கடவுளே சூர்யாவுக்கு அவ கேட்கிறதை கொடுங்களேன்" என்று அனு வேண்டிய படியே...! பக்கத்து அறையில் படுக்க சென்றாள்.
அந்த நேரம்... ஆதி சூர்யாவிற்கு போன் செய்தான்.
அழைப்பு போக போக சூர்யாவுக்கு... தூக்கத்தில் இருந்து மீண்டு வர முடியவில்லை...
ஓயாமல் போன் அடித்துக்கொண்டே இருக்க...!
எடுத்தவள்... "ஹலோ"என்று சூர்யா கூற...
"சூர்யா மேடம் மார்னீங்கல இருந்து பிஸிங்களா போன் பண்ணா கூட எடுக்க மாட்டறீங்க..." என்றுஆதி சந்தோஷமாக கூற..
அவனிடம் என்ன சொல்லறது கோபத்தை காட்ட கூடாது என்று பொறுமையாக...
"ஆதி நான் பிஸியா இருக்கேன் நானே கூப்பிடறேன்" என்று போனை வைத்து விட்டாள் பதிலுக்கு காத்திராமல்..
அவளது குரலில் தெரிந்த மாற்றத்தை அறிந்தவன். மறுபடியும் போன் செய்தான்.. அழைப்பு வந்தவள் கட் செய்தாள்... 'சரியான இம்சையா இருப்பான் போலேயே' என்று கட் செய்ய செய்ய போன் வந்து கொண்டே இருந்தது.
போனை போட்டு உடைத்துவிடலாம் என்ற அளவிற்கு கோபம் தலைக்கு ஏற...எழுத்தவள் போனை... எடுத்தாள்
"உனக்கு இப்போ என்னதான் வேணும்...? ஏன் இப்படி என்னை போட்டு டார்ச்சர் பண்ற... உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா... ஓயாம போன் பண்ணிட்டே இருக்க...! "
"நான் நாளைக்கு ஊருக்கு போறேன் சூர்யா...!"
"நீ எங்கேயோ போ என் கிட்ட ஏன் சொல்லற...?" என்று கோபத்தின் உச்சத்தில் இருந்தாள் சூர்யா..
"இப்போ எதுவும் பேச வேண்டாம்... நான் காலையில பண்றேன்..."
"ஏய் எதுவானாலும் இப்பவே பேசி வச்சிடு மார்னீங் பேசி மறுபடியும் தொல்லை பண்ணாத..."
"உங்களுக்கு என்ன ஆச்சு ஏன் தீடிர்னு இப்படி கோபபடறீங்க...? "
"ஒருதவங்க அமைதியா பதில் சொல்லும் போதே தெரிஞ்சுக்கனும் அவங்க என்ன மன நிலமையில இருக்காங்கன்னு அதைவிட்டு ஓயாம தொல்லை பண்ணி இருக்காதீங்க ப்ளீஸ்... ஊருக்கு போறீங்கன்னா நிம்மதியா போங்க.... எங்களுக்கு ஹெல்ப் பண்ணதுக்கு ரொம்ப நன்றி அதை தவிர நீங்க என்கிட்ட இருந்து எதையும் எதிர்பாக்காதீங்க..." என்றுசூ ர்யாவை போனைவை ஸ்சூவிட்ச் ஆப் செய்து போட்டுவிட்டாள்.
"இவன் வேற... பெரிய சுமையா இருக்கானே சொல்லறதையே புரிஞ்சுக்காம பேசின என்ன பண்ண...? நான் வர்மாவை தேடி போவேனா இல்லை இவனை மாத்துவேனா" என்று மண்டை குழப்பி தவித்தாள் சூர்யா...
ஆதியோ 'இவள் என் காதலி இல்லை இனி ஒரு நிமிடம் கூட அவள் கண்முன் செல்ல கூடாது.. .நாளைக்கே ஊருக்கு கிளம்ப வேண்டும்....' என்று முடிவெடுத்தான் ஆதி..
'என்னை நீ புரிஞ்சுக்கல ஆனா நான் உன்னை புரிஞ்சுக்கேவேன் சூர்யா..! நீ எப்பவும் உன் வாழ்க்கையில கஷ்டத்தை அனுபவிக்க கூடாது... நான் இருக்கிறது தான் உனக்கு கஷ்டம்ல சூர்யா நான் இனி உன் வாழ்க்கையில வரமாட்டேன் உன்னை நினைச்சுக்கிட்டே என் மிச்ச இருக்கிற வாழ்க்கையை வாழ்ந்திடுவேன்... ஐ லவ் யூ சூர்யா உன்மேல வச்ச அன்பை நான் தொலைக்க மாட்டேன் என் வாழ்க்கையில ஒரு பொண்ணா அது நீ மட்டும் தான்...' என்று ஆதி உடைந்துபோனான்.
அப்போது... சஞ்சய் கால் செய்ய... முதல் ரிங்கிலேயே எடுத்தான்.
"என்னடா எப்பவும் ரொம்ப ரிங் போனதுக்கு அப்புறம் தான் எடுப்ப...! இப்ப உடனே பிக் பண்ற அப்போ நீ சரியில்லை.. என்னடா ஆச்சு ஆதி...?"
"நிறுத்துடா... நான் நல்லா இருக்கேன்... நாளைக்கு ஊருக்கு வரேன்" என்று ஆதி கூற..
"என்னடா ஆச்சு..?" என்று சஞ்சய் நம்பாதவனாய் கேட்க
"ஒண்ணுமில்லை டா...?"
"எதுக்கு என்கிட்ட மறைக்கிற ஆதி..."
"நீ ரொம்ப கஷ்டப்படுவ டா அதான்..."
"என்னடா புதுசா என்னை விலக்கி வச்சு பேசற...சின்ன வயசுல இருந்து உன் கூட இருக்கேன் உன் சந்தோஷத்திலேயும் தூக்கத்திலேயும்... உன்னுடைய ஒவ்வொரு அசைவும் எனக்கு தெரியும்... டா நீயா சொல்லுவேன்னு எதிர்பார்த்தேன் ஆனா நீ சொல்லாம நான் கேட்க கூடாதுன்னு தான் விட்டேன்..."
"நீ எதுவுமே சொல்ல வேண்டாம்டா அந்த பொண்ணு தான் உன்னை மிஸ் பண்ணிட்டா விடுடா உன்னை பத்தி தெரிஞ்சா பழகுன்னா நீ உயிரா இருப்பேன்னு அந்த பொண்ணுக்கு புரியல விடுடா..."
ஆதி மெளனமாய் இருந்தான்.
"இனி நீ மெட்ராஸ் போகவே கூடாது... எந்த ஒரு காரணத்துக்கும்... முதல் ஒரு தடவை வெறுத்துட்டு வந்தேல அது மாதிரி இப்பவும் வெறுத்து வந்திடு..." என்று சஞ்சய்கூற..
"சரி டா... வந்திடறேன்..." என்று போனை வைத்தான் ஆதி..
இருவருமே காதலின் வலையில் சிக்கி தவிக்கின்றனார்கள் அதை கரை ஏறபோவது யார்...?
-தொடரும்