அதிக எதிர்பார்ப்போடு வந்தவனுக்கு... ஏமாற்றமே மிஞ்சியது... கயலோடு சிறிது நேரம் விளையாண்டு விட்டு... அனைவரோடும் உட்கார்ந்து சாப்பிட்டு முடித்தவன் வீடு திரும்பினான்.
"ஏன் சூர்யா... உன்னை நான் நெருங்கனுமுன்னு நினைக்கும் போது எல்லாம் விலகியே ஓடற...? நான் என்ன பண்ணுவேன்... என் காதலை நான் உனக்கு எப்படி புரிய வைப்பேன்..." என்று புலம்பியவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவனது மொபைல் அடிக்க எடுத்தவன் புதிய நம்பராக இருந்தது.
"ஹலோ" என்று ஆதி கூற...
"ஹலோ நான் சூர்யா பேசறேன் ...!" என்று கூற...
ஆதிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை... பெட்டில் இருந்து எழுந்து குதித்தான்..
"ஹான் சொல்லுங்க... " என்று ஆதி கூற..
"இன்னைக்கு ஈவினிக் மீட் பண்ணலாமா..?" என்று சூர்யா கேட்க..
"யா அப்கோர்ஸ் எங்கேன்னு மட்டும் சொல்லுங்க நான் வரேன்.." என்று ஆதி சந்தோஷமாக கூற..
சந்திக்க வேண்டிய இடத்தை சூர்யா கூறிவிட்டு... போனை வைத்தாள். ஆதிக்கு நிலைகொள்ளா சந்தோஷம்...' ஓஓஓ கண்மணி இந்த ஒரு வாய்ப்பு போதும் உன்னை நான் எனதாக்கி கொள்ள...' என்று ஆறு மணிக்கு கிளம்ப வேண்டியதற்கு அப்போதிலிருந்தே ரெடியாகத் தொடங்கினான்.
மழை மேகங்கள் விடாது மழையை கொட்டி தீர்க்க... காப்பி ஷாப்பின் உள்ளே இருவருக்குமிடையே அமைதி நிலவிக் கொண்டு இருந்தது. யார் முதலில் பேசுவது என்பதை விட.... இருவரின் மனதிலும் ஆயிரம் முறை பேசிக்கொண்டனர்.
"சூர்யா" என்று தனது தொண்டையை சொருமியப்படி ஆதி அழைக்க...
சற்று நிமிர்த்தவள்..." எப்படி பேசறது தெரியல...?" என்று சூர்யா சற்றி கையை பிசைய...
"வாயாலேயே பேசலாம் முடிச்சா உங்க கண்ணால பேசுங்க... நான் புரிஞ்சுக்குவேன் "என்று ஆதி காதலோடு கூற..
"ப்ளீஸ் இப்படி பேசாதீங்க நார்மலாவே பேசுங்க..." என்று சூர்யா எச்சரிக்க...
"சரி எதுக்காக என்னை பார்க்கனுமுன்னு போன் பண்ணி இருந்தீங்க... சொல்லுங்க" என்று ஆதி சூர்யாவின் பார்வையை தவிர்த்தான்.
"ம்ம்ம்...." என்று பெருமூச்சை இழுத்துவிட்டவள்...." கயல் எங்களுக்கு ரொம்ப முக்கியம் அவ தான் எங்களுடைய உலகம்...! கயல் இல்லைனா... நாங்க யாருமே இல்லை... அண்ணி புதுசா கல்யாணம் ஆகி வந்தப்ப... நிறையா கனவுகளோட தான் வந்தாங்க ஆனா அவங்க கனவுகளுக்கு எல்லாம் முட்டுகட்டை போடற மாதிரி...!" சூர்யா ஒர் நிமிடம் நிறுத்தியவள்...
பின் தொடர்ந்தாள்.." குழந்தை பாக்கியம் இல்லைன்னு சொல்லவும் உடைஞ்சிட்டாங்க போகாத இடம் இல்லை, பார்க்காத மருத்துவம் இல்லை...!" என்று சூர்யா சொல்லும் போதே அவள் தொண்டை கம்மியது..
அவளது வார்த்தைகளில் தெரிந்த வலியிலேயே அவள் அனுபவித்த துயரத்தை உணர்ந்தவன் டேபிளின் மீது இருந்த சூர்யாவின் கைகளை அழுத்தினான்... சிறிது நேரம் மட்டுமே... தனது கையை விலக்கி கொண்டான்.
"ப்ளீஸ் " என்று சூர்யா ஓர் நிமிடம்... எடுத்தவள்...
"அம்மா அவங்களை இழந்து நாங்க தவிச்சோம்...சோகத்தோட சோகமா அந்த வலியை தாங்கிட்டோம்... அம்மா இல்லாம அப்பா இல்லை..." என்று கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவள்.
"எங்களுக்கு கயல் வந்துக்கு அப்புறம் எங்க உலகமே மொத்தமா மாறிடுச்சு... என் அம்மா திரும்ப வந்துட்டாங்கன்னு கயல் குட்டியை நாங்க கொண்டாட ஆரம்பிச்சோம்... அவ வளர்ற ஒவ்வொரு கட்டத்தையும் பார்த்து நாங்க பேராசை வச்சு இருந்தோம் கயல் குட்டி மேல... இப்ப கூட அண்ணி ரொம்ப பயப்புடுவாங்க.. கயலை வெளியில அனுப்ப.. கயலும் வெளியில போக விரும்ப மாட்டா என் கூட மட்டும் தான் வருவா... தீடிர்ன்னு கயல் இல்லை அப்படிங்கிற ஒரு நிலமை வருன்னு நாங்க நினைச்சே பார்க்கல..."
"அதுவும் வந்துச்சு.." என்று ஜன்னலின் வழியே வழிந்த மழை நீரை பார்த்தவளுக்கு தன் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைக்க தோன்றவில்லை...
அதற்குள் பேரர் வர... காப்பி கோப்பையோடு வர சூர்யா முகம் திரும்பாமலே... அமர்ந்திருந்தாள்... பேரர் வைத்துவிட்டு செல்ல.. "தேங்ஸ்" என்று ஆதி புன்னகையோடு காப்பியை சூர்யாவிடம் நீட்டியவன்..
சூர்யா திரும்பவில்லை... காப்பி கோப்பையை அவளது கை பக்கம் நகர்த்தியவன்... சூடா இருந்தது அதை சுகமா உணரந்தவள்... அசையாமலே இருந்தாள். மேலும் காப்பி கோப்பையை அவளது தோளில் உரச செய்தவன்...
"போதும் போதும் போதும் நான் ஓகே தான் " என்று சூர்யா சிரித்தாள்.
"ஹான் இந்த சிரிப்பு தான்...! எனக்கு உங்கிட்ட பிடிச்சதே... மேடம்" என்று ஆதியும் அவனது அழகிய புன்னைகை மொழியால் அவளை வசிகரிக்க... அதை ரசித்தும் ரசியாமல் தவிர்த்தாள்.
"குடிங்க சூடு ஆறிட போகுது" என்று காப்பி கோப்பயை எடுத்து சூர்யாவிடம் நீட்டியவன்... வாங்கி பருகியவள்.
"நடந்து முடிச்சதை பேசி எந்த யூசும் இல்லை.... உங்க கண்ணுல இருந்து கண்ணீர் வரும் போதே என்னால உணர முடிஞ்சுது உங்களுக்கு கயல் எவ்வளவு முக்கியம் அப்படின்னு... அதனால தான்..."
"ஹான் நீங்க வேற சொல்ல வேண்டாம் அதான் உடைஞ்ச மைக் செட்டு மாதிரி கயல் சொல்லிட்டே இருக்க மாமா வந்தாங்க காப்பாத்தினாங்க அப்படி இப்படின்னு பெரிய பில்டப் எல்லாம் கொடுத்து அவ சொல்லறதை கேட்டு கேட்டு சலிச்சு போச்சு" என்று சூர்யா தனது காதை அடைத்தாள்.
அவள் கைகைளில் சைகை செய்து கூறிய விதத்தை இமைக் கொண்டாமல் அவளையே பார்த்து ரசித்தவன்..
சூர்யாவும் அவனது கண்களை பார்த்தவள்.. இரண்டு நிமிடம் இருவருக்கும் எந்த அசையவும் இல்லை உதடுகள் பேசும் மொழியை விட அவர்களுக்கிடையில் கண்களே ஆயிரம் மொழி பேசியது...
"ஆதி இது பப்ளிக்" என்று முதலில் தன்னிலைக்கு வந்தாள் சூர்யா பார்வையை ஜன்னல் பக்கம் திரும்பியவள்..
நினைவிற்கு வந்தவன் "என்ன சொன்னீங்க...?" என்று ஆச்சரியமாக ஆதி கேட்க...
"அதான் சொன்னேன்னே பப்ளீக்குன்னு அப்புறம் என்ன....? என்று சூர்யா சலிப்பானாள்.
"இல்லை அதுக்கு முன்னாடி " என்று உற்சாகத்தோடு கேட்க...
"ஆதின்னு சொன்னேன்..!" என்று சூர்யா அசால்டாய் கூற..
"ஆதி முதல் தடவை என் பேரை சொல்லி கூப்பிடறீங்க..." என்று ஆதியின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை கட்டுபடுத்த முடியாமல் தவித்தான்.
"வெயிட் வெயிட்.... இப்போ எதுக்கு இவ்வளவு சந்தோஷப்படறீங்க... முக்கியமான ஒரு விஷயத்துக்காக தான் வர சொன்னேன்... கயலை காப்பாத்தி கொடுத்துக்கு ரொம்ப தேங்ஸ் அவ இல்லாம...." என்று சூர்யா கூறுவதற்கு முன் இடையில் குறுக்கே புகுந்தான் ஆதி.
"நாங்க இல்லை நாங்க இல்லாம அவ இல்லை இது தானே சூர்யா சொல்ல வந்தீங்க ப்ளீஸ் வேற ஏதாவது பேசுங்க..." என்று ஆதி கெஞ்சினான்...
"வேற என்ன பேச..." என்று சூர்யா கேட்க
"ஏதாவது.... உங்கிட்ட இப்படியே பேசிட்டு இருக்கனும் போல தோணிட்டே இருக்கு" என்று ஆதி வெளிப்படையாய் சூர்யாவின் மீது உள்ள அன்பை வெளிப்படுத்த...
"ஆதி... ப்ளீஸ் நமக்குள்ள என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியாது ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இல்லை தேவையில்லாம கற்பனை பண்ணி உங்க மனசை கொடுத்துகாதீங்க... கயலை எதுக்கு காப்பாதுனீங்க அது உங்க வேலை இல்லை அப்படின்னு எல்லாம் என்னால கேட்க முடியாது... யாராச்சும் ஒருத்தவங்க என் கயலை தூக்கிட்டு என்கிட்ட ஓடி வரமாட்டாங்களா அப்படின்னு தேடி தேடி அலைச்சவங்க நாங்க.... நீங்க கூட்டி வந்தப்ப... உங்களுக்கு எப்படி நன்றி சொல்லறதுன்னு தெரியாம கண்ணுல கண்ணீர் தான் வந்துச்சு சரி அந்த டைம்ல எதுவும் பேச வேண்டாம் அப்படின்னு தான் விட்டேன்... அதுக்காகதான் உங்களை இப்ப வர சொன்னேன்.. ஆதி எனக்கு நீங்க இரண்டாவது ஹெல்ப் பண்ணி இருக்கீங்க...! இதுக்கு நன்றியை மட்டும் தான் சொல்ல முடியும் வேற எதுவும் தரமுடியாது" என்று தனது ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு... எழுந்தவளை...
"ப்ளீஸ் சூர்யா ஒரு ஐந்து நிமிஷமாவது பேசிட்டு போலாம்... ல" என்று ஆதி ஏக்கமாய் கேட்க...
"ஆதி ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க...! இன்னும் கொஞ்ச நேரம் நான் இருந்தா சத்தியமா மெண்டல் ஆகிடுவேன்... நீங்க பேசற பேச்சு எல்லாம் எனக்கு புதுசா இருக்கு முதல் தடவை மாதிரி உங்க மேல கோப படவும் முடியல...! நீங்க எனக்கு செஞ்ச உதவிக்கு... என்னையே தர என்னால முடியாது மன்னிச்சுடுங்க..." என்று அவனது கையை விடுவித்து வெளியே வந்தாள்...
ஆதியின் நிலையோ அடைமழை பெய்தப் பின்னும் நிலவிய அமைதி போல் ஆழ் மனம் முழுவதும் சூர்யாவின் எண்ணங்கள் மட்டும் பரவி இருந்தது சற்று நேரத்திற்கு முன்.. தன்னிடம் சிரித்த சூர்யாவின் அழகான முகம் தான் கண் முன் வந்தது.
ஒரு வருடத்திற்கு முன்பு
பேரழகியாய் அவள் இல்லாமல் இருந்திருந்தாள் நான் கவிஞனாய் மாறி இருப்பேனா என்பது சந்தேகமே... வர்மாவின் உள்ளுள் காதல் ஊற்று எடுக்க தான் செய்தது அது அவனது அடுத்த புத்தகத்திற்காக..
"ஸார் ஏன் இப்படி உங்களை வருத்திக்கறீங்க...? இப்ப தான் உங்க புக் ரிலிஸ் ஆகி இருக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருந்துட்டு உங்களுடைய அடுத்த கதையை தொடரலாமே ...?" என்று வர்மாவின் பி.ஏ கூற...
சிரித்தவன்..." அப்படி ஒவ்வொரு கதைக்கும் நான்... பிரேக் எடுத்து எடுத்து எழுதி இருந்தா.. இத்தனை கதைகளையும் கட்டுரையும் என்னால கொடுத்து இருக்க முடியாது.... கவிஞனுடைய மனசுக்கு எப்பவும் ஓய்வுங்கிற ஒண்ணு கிடையாது நடு சாமத்தில கூட வார்த்தைகள் கோர்வையா வரும்" என்று வர்மா கதையை எடுத்து வைத்தவன்..
"ஸார் உங்கிட்ட ஒண்ணு கேட்கவா" என்று பி.ஏ கேட்க...
"முதல்ல வந்து உட்காருங்க...! என்ன இது புதுசா... கேட்கறீங்க எதுவேணாலும் கேளுங்க அண்ணா..." என்று வர்மா பெட்டில் அமரந்தான்.
"இவ்வளவு பரிசு பாராட்டு ரசிகர்கள் உங்களை பார்க்க காத்திட்டு இருக்கும் போது எதுக்காக இருட்டுலேயே வாழ நினைக்கறீங்க வர்மா ஸார்..?"
"மூன்னு வருஷம் என் கூட இருக்கீங்க என்னை புரிஞ்சு வச்சுக்கிட்டது அவ்வளவு தானா அண்ணா..!" என்று சற்று வேதனையோடு கூறியவன்..
"அப்படி இல்லை ஸார்... உங்களுக்கு வாழ்க்கை இருக்கு இன்னும்... நீங்க வாழவே தொடங்கல... ஒரு பொண்ணு வந்து உங்க வாழ்க்கைய மாத்தனும்... மாத்தனும் ஸார் இப்படியே ஒத்தையா கடைசி வரைக்கும் இருக்கு முடியாதுல..." என்று பி.ஏ கூற...
"கரெக்ட் தான்... அண்ணா என்னை அவளுக்கு பிடிக்கனும் அவளுக்கு என்னை பிடிக்கனும் என்னுடைய கதைகள்ல வரமாதிரி அவளை துரத்தி துரத்தி காதலிக்கனும் ஆனா அண்ணா இது ரியல் லைப்புல நடக்காது... ஒரு பொண்ணுடைய மனசை வெல்லறது ரொம்பவே கஷ்டம்..." என்று வர்மா நெட்டி முறித்தவன்.
"அப்படி ஒரு பொண்ணு உங்க வாழ்க்கையில வந்தா..." என்று பி.ஏ கேட்க
சிரித்தவன்" என்கதைகள்ல வரமாதிரி தான் அண்ணா காதல் பயணத்தை தொடங்கிடுவேன்" என்று உறங்கச் சென்றான்.
"உங்களுடைய இந்த தனிமையை போக்க ஒரு பொண்ணு வருவா ஸார் வரனும்... எந்த ஒரு உறவும் இல்லாம் இந்த உலகத்தில தனியா இருக்கிறது ரொம்பவே கொடுமையான ஒரு விஷயம் இவ்வளவு புகழ் பணம் இருந்து எதுக்கு உங்க மனசு சந்தோஷமா இல்லையே.. உங்க வாழ்க்கை நிச்சயமா மாறனும்..." என்று வர்மாவின் பி.ஏ மனதில் பிராத்தணை செய்து கொண்டார்.
"வர்மா.. உன்னை விட்டு என்னால இருக்க முடியாது...! நீ சென்னை வந்து இருக்க ஆனா பாரு என்னால உன் குரலை மட்டும் தான் கேட்க முடியுது... நாளைக்காவது உன்னை எப்படியாச்சும் சந்திக்கனும்" என்று காதலிக்க வருவாயா என்ற நாவலை மீண்டும் படிக்க தொடங்கி வர்மாவின் காதல் வலையில் சிக்க தவித்துபோனாள் சூர்யா..!
இந்த மூவருக்குள்ளும் நடக்கும்... காதல் போராடங்களை பொறுத்திருந்து பார்ப்போம்..!
-தொடரும்