ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிர் கொள்கிறேன் உன்னால்

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உயிர் - 1

" அன்பே நான் உயிர் வாழ
ஓர் இடம் வேண்டும்...!
உந்தன் இதயத்தில் இடம் தருவாயா…? "

என்ன‌ ஒரு‌ அழகான வரிகள்… மக்களே…அழகான‌ கார்கால பொழுது…! வெளியில மழைக் கொட்டித்தீர்த்தாலும்…! மனசுக்குள்ள என்னவோ இந்த காதல் தான் பெருக்கெடுத்து ஓடுது... இளையராஜாவுடைய‌ பாடல்கள் தான்‌ எல்லோருடைய‌ மனசுலேயும் ஒலிச்சுக்கிட்டே இருக்கும்…. எப்படியோ காதல் பாட்டா நீங்க போடுங்க அப்படின்னாலும் இதோ வரிசை கட்டி பாட்டு நிற்குது. இந்த மழையில எங்கடா வேலைக்கு போறது ஸ்கூலுக்கு போறதுன்னு சலிப்போடு கேட்டுக்கிட்டு இருக்கிற மக்களே எனக்கு புரியிது…

என்ன பண்ண நானும்… ! இன்னைக்கு சண்டேவா இருந்து இருக்க கூடாதா? மழையை ரசிச்சுக்கிட்டே காபி குடிச்சு இருக்க கூடாதா… இப்படின்னு எனக்குள்ளயும் ஏக்கங்கள் பல இருந்தாலும்.. இதோ உங்க எல்லோரையும்‌ காதல் மழையில நனைய வைக்க நான் வந்துட்டேன்… உங்க முன்னாடி அடுத்த பாடல் உங்களுக்குகாக மட்டும்…..!

"என் இனிய‌ பொன்‌ நிலவே …!
என்‌ நினைவில் உன் கனவாவே… நினைவிலே புது சுகம் தரதந்திடா..! "

சத்ததை குறைத்து…எப்‌எம்‌ என்ற உலகத்தில் இருந்து நிஜ உலகத்திற்குள் நுழைந்தாள்! மெதுவாக போர்வையை விலக்கியது ஓர்‌ கை... மழையின் சாரலின் தூரல்… போர்வை இன்னும் இறுக்கம் கொள்ள தான் செய்தது அவளை..! ஆனால் மேலும் போர்வையை இழுத்து வெளியே தள்ளியது இரு கைகள்..

"அண்ணி ப்ளீஸ்….! இரண்டு நிமிஷம்… ! " என்று சலிப்பாக கூறினாள் அவள்..

"நேரமாகிடுச்சு எழுந்திரி… வேலைக்கு போகனும் கயல் குட்டியை ஸ்கூல் விடனும் எழுந்திரி " என்று கயலை எழுப்ப முயன்றவள்… கயல் குட்டி அழகாய் அவளை விட சோம்பேறியாக இருந்தாள்.

"மம்மு...! ‌ப்ளீஸ் அத்தை எழுந்திரிச்சா தான் நானும்‌ எழுந்திரிப்பேன்...! ‌என்று குட்டி பிஞ்சின் ‌கைகள் அவளை இன்னும் இறுக்கமாக பற்றியது தூக்கத்தில் சினுங்கல்கள் கொண்டனர் இருவரும்..

தினமும் இருவரிடம் இந்த வார்த்தையை கேட்க தவறியது இல்லை… நித்திலா…! செல்ல சிரிப்போடும்‌கோபத்தோடும்

" இப்போ இரண்டு பேரும்‌எழுந்திரிக்க போறீங்களா‌என்ன..? "என்று அதட்ட.. நித்திலாவின் கோபம் பொய்யானது தான் என்றாலும் எழுந்திரித்தார்கள் இருவருமே..

மீன் கண்கள் அவள்…! மோகம்‌ கொள்ளாமல் தாபம் மட்டுமே கொள்ளும் அவள் விழி பார்வை காண… ஒரு‌வன் வருவானோ என்ற ஏக்கத்தோடு நித்திலா… அவளை பார்க்க...

குட் மார்னிங் அண்ணி என்று... தனது சோம்பலை முறித்தவள்...

சிரித்தவள்.... எப்படியோ இரண்டு பேரும்‌ எழுந்ததில் சந்தோஷம் அடைந்தவள் சமையலறைக்குள் செல்ல…

அருகில் இன்னும் சோம்பல் முறியாமல் படுத்திருந்த கயல் குட்டியை பார்த்தவள்… குழந்தையை நெருங்க அந்த சிறு குழந்தை பெட்டில் இருந்து குதித்து ஓடியது…

" கயல் வேண்டாம்..? இன்னைக்கு ஓடவிடாத என்னை…? ஆபிஸ்ல மீட்டிங் இருக்கு ப்ளீஸ் டா வந்திடு..? " என்று அவள் கயல் குட்டியிடம் கெஞ்ச...

அவளை இன்னும் கெஞ்ச வைக்க வேண்டும் ஹான் அசுக்கு அசுக்கு என்று கையை அசைத்து காட்டி இன்னும் அதிகமாய் ஓடியது....அவளை விட்டு...

கயல்குட்டி என்று எழுந்து ஹாலிற்குள் வந்தார்.

"குட்‌மார்னீங் தாத்தா " என்ற தனது தாத்தாவின் பின் ஒளிய முற்பட்டாள். அதை பார்த்த அவள்..

"கயல் தாத்தா பின்னாடி ஒளிஞ்சா மட்டும்‌ நான் விட்டுவிடுவேணா என்ன…? ஒழுங்கா ஸ்கூல் கிளம்பனும் வா " என்று‌அதட்டினாள் அவள்.

"தாத்தா இந்த மழையில குளிக்கிறதா முடியாது ப்ளீஸ் நாளைக்கு குளிக்கிறேன் இல்லாட்டி ஜீரம் வந்திடும்‌...." என்று மழலை குரலில் கயல் குட்டி கெஞ்ச..

"ஆமாம் மா…கயல் குட்டி சொல்லறது ரொம்ப கரெக்ட்டு " என்று செல்ல தாத்தாவும் ஆம்‌ என்று உரைக்க…

"முடியாது இப்படியே சொல்லி சொல்லி தான் நேத்து என்னை இரண்டு பேரும் ஏமாத்தினிங்க இன்னைக்கு ஸ்கூல் பர்ஸ்ட் டே ஒழுங்கா வா ....!" என்று.. அவள் பணிந்து செல்ல..

"ஹான் நேத்து சண்டே ஸ்கூலுக்கு லீவ் விடும் போது குளியலுக்கு லீவ் விட்டா என்ன தாத்தா " என்று… கயல் தனது தாத்தாவிடமும் தனது அத்தையிடம் கெஞ்ச..

"முடியாது " என்று ஓர்‌புறம் சண்டை போய் கெண்டு இருக்க டி.வியில் தலைப்பு செய்தியாக…

" இன்று ஒருநாள்‌ மட்டும் ‌பள்ளி கல்லூரிக்களுக்கு விடுமுறை‌..." என்ற அறிவிப்பு வர… கயல் குட்டித் துள்ளி குத்திதாள்

" ஹான் இன்னைக்கு உங்க அம்மா உன்னை வச்சு என்ன‌பாடு பட போறாளோ தெரியலேயே " என்று ராஜேஷ் செய்திகளில் முழ்கி இருக்க…

நித்திலா சமையல் அறையில் இருந்து வெளியே வந்தாள்… " கயல் போய்‌பிரஸ் பணணு நீ கிளம்பு ஆபிஸ் நேரமாச்சு " என்று அவளை விலக்கிவிட…

'நாம ஏன் இன்னும் சின்ன ஸ்கூல் போற குழந்தையாவே இருந்து இருக்க கூடாது ....!' என்று அவளும் வேண்டா வெறுப்பாய் கிளம்ப சென்றாள்.

டெல்லி...!

காதலும் காதல் கொள்ள ஆசைபடும்‌ அவனை பார்த்து ரசித்திட துடிக்கும்....‌அவனது கண்கள் கவிப்பாடும்... அவனது கேசமாய் மாறி வாழ்ந்திட தோணும்.... அவனது கன்னத்தில் விழும் குழியில் முத்தமிட துடிக்கும் உதடுகள் அவனது இதழ்களில் தவழும் புன்னைகயை பற்றிக் கொள்ள துடிக்கும் ஆசைகள் அவனுள் பல இருப்பினும்... பெண்‌ என்றால் தண்ணிரில் ஓட்டாத‌ எண்ணெய்‌போல்.... இதுவரை எந்த பெண்ணையும் ‌ஏறெடுத்து பார்த்தது கிடையாது. பெண்களே வரிசைகட்டி நின்றாலும் ஒதுங்கி போக வைக்கும்‌ அவனது ஆண்மை...‌என்ற திமிர்..!

" ஆதி…" என்று குரல் கேட்க...

நிமிர்ந்தவன்... அறையின் வாசலிலேயே நின்ற தனது நண்பனை கண்டவன்... "சொல்லுடா..என்ன‌வேணும்…? "

"நீ செய்யறது கரெக்ட்‌தானா..? "

"கரெக்டா இருந்தா என்ன தப்பா இருந்தா என்ன..? நான்‌ போறதை யாராலுயும் தடுக்க முடியாது… டா..? "

"போடா டேய்…நான் ‌உன்‌ நல்லதுக்காக தான் சொல்லறேன்..! "

புரியுதுடா...‌அதுக்காக எவ்வளவு நாள்‌... போனா யாரும் ‌என்னை அந்த வீட்டில மதிக்க மாட்டாங்க ஆனா ‌எனக்கு கவலை இல்லை நான்…போய் தான்‌ ஆகனும் டா…? "

"நீ அடங்கமாட்டடா…? " என்று சஞ்சீவ் கூற…

"சஞ்சு…! நீ என் நண்பனா இல்லை எனக்கு அம்மாவா… இப்படி மிரட்டிறியே டா..? "

"இரண்டும் தான்டா…ஆனா ‌நீ போக கூடாது… சென்னைக்கு ..."

"சரிடா நான் அந்த வீட்டுக்கு போகல ஹோட்டல்ல தங்கி வேலையை முடிச்சுட்டு வரேன் சரியா …" என்று தனது நண்பனிடம் ஆதி கெஞ்ச...

" என்னமோ செய் ஆனா அந்த வீட்டுக்கு நீ இன்னொரு தடவை போக கூடாது …. இது தான்‌ என் கடைசி முடிவு.." என்று சஞ்சீவ் உறுதியாக கூற..

"சரி டா நான்‌ போக மாட்டேன்… ! உன் விருப்பத்தை தாண்டி நான்‌ என்ன‌ செஞ்சு இருக்கேன்… சொல்லு… நான் வரவரைக்கும் பார்த்துக்கோக்கோடா… ஒன்வீக் தான் வந்திடுவேன் ஓகேவா..? "

"ஓகே டா டேக்கேர்… நான்‌ ஏர்போர்ட் வரவா..."

"வேண்டாம் டா…சஞ்சு பீல் பண்றேங்கிற பேர்ல் அட்வைஸ் பண்ணுவ ஓன் வீக் தான்‌டா அப்புறம் உன் கண்ணு முன்னாடி வந்து இருப்பேன் சரியா...? "

"ஹான் ‌ஹான் ‌சரி சரி…உன் மனைவி வர வரைக்கும் உன்னை பத்திரமா பார்த்துக்கு வேண்டியது என் கடமை டா மறந்துட்டியா உனக்குன்னு ஒருத்தி வந்திட்டா…"

"சரி சரி" என்று ஏர்போர்ட்‌ கிளம்பினான்.

‘மனைவி என்றதும்‌ ஏன்‌ இப்படி தெறித்து ஓடுறானோ…?' என்ற‌ எண்ண‌ ஓட்டத்திலேயே‌ சஞ்சீவ் செல்ல…

ஆதியின் ‌மனதிலோ...." எத்தனை வருட கனவு…! சென்னை வாழ்க்கை பிஸியாக இருக்கும் மக்கள்‌ வெள்ளத்தில் நடுவே தானும் ‌ஓர்‌ ஆளாய்…! அப்பாவின் செல்ல மகனாய்..! நண்பர்களுடன் ஷாப்பிங் மால் என்று சுற்றி திரிய நினைத்தவனின் வாழ்க்கை தலைகீழாக மாறி போனது… பிடித்த விஷயங்களைச் செய்வதே அரிதாகிவிட்டது… இப்போது தான்‌ பிடித்த ஒரு விஷயததை தேடி செல்கிறான் ‌தான் சிறுவயதில் தொலைத்த அந்த வாழ்ககையை வாழ வருகிறான் ‌பல கனவுகளோடு…!

மழையோடு‌ காதல் செய்யும்…! அழகே தனி… கார்காலம்‌ என்றாலும் ‌ஏன்‌ ஊடல் கொள்ள‌மனம் அலைக்கிறது அவனை… அவன் அழைப்பில் நான் கரைத்து போகிட‌ ஏன்‌ இத்தனை துடிப்பு… ! காலங்கள் முழுவதும்‌ அவளிற்காக காத்திருக்கவே மனம் அலை பாய்ந்தது அவனது ஒர் அழைப்பு என்றால் அது அவனோடு வாழ்ந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு சமம்…! வாழ்க்கை வாழ்வதே அவனிற்காகவே என்று சூர்யாவின் ‌மனம்‌ ஏங்கியது… நினைவுகளில் தன்னை தொலைத்தவள்… ஓர்‌முறையேனும் அவனை காண வேண்டும்‌ அவன் ‌விழிகளை காணும் நாள்‌ நான்‌ உயிர்தெழ வேண்டும்‌ அதுவரை அவன் நினைவில் நான் ‌கரைந்து போக வேண்டும்.. என்னை மீட்டு எடுக்க அவன் ‌வர வேண்டும்.. இல்லையேல் இப்படியே என் பொழுதுகள் அனைத்தும் அவன் நினைவில் களவாட வேண்டும் என்‌ கள்வனிற்காக என்ற எண்ணத்திலேயே ஆபிஸ் கிளம்பினாள்.

வீட்டினுள் இருந்து ஸ்கூட்டியை எடுத்தவளை... கயல் குட்டி வாசலில் இருந்து எட்டி பார்த்தாள்.

" சூர்யா.. எனக்காக என்ன வாங்கிட்டு வருவ? " என்று கயல் குட்டி கேட்க…

நீ தான்‌ என்‌ பேச்சையே‌ கேட்க மாட்டேங்கிறியே…! நான்‌எதுக்கு உனக்கு வாங்கிட்டு வரனும்‌...! " என்று சூர்யா பொய்யாய்‌ கோபம் காட்ட…

சூர்யாவின் அருகில் வந்தவள் ஸ்கூட்டியின் முன் ஏறி சூர்யாவின் ‌கைகுள் ‌நுழைந்தாள். கயல் குட்டி கையை பிடித்து இழுக்க.. குனிந்தவள் அவளது காதோரம் மெதுவாக கூறினாள்.. சுற்றும்‌முற்றும் தனது அம்மா வருகிறார்களா என்று நோட்டமிட்டபடி தனது ஆசையை கூறினாள்.

"சூர்யா… எனக்கு சாக்லேட் வேணும்‌ இன்னைக்கு ஸ்கூல் வேற இல்லையே எப்படி சாப்பிடுவேன்.. சாயந்தரம் வரும் போது வாங்கிட்டு வரீயா ‌அம்மாக்கிட்ட சொல்ல கூடாது" என்று கயல் குட்டி கெஞ்ச…

கயல் குட்டியை வாரி அணைத்தவள்…" என் கயல்குட்டிக்கு இல்லாததா சாக்லேட் உனக்கு எனக்கு …? என்று சூர்யா கண்ணடிக்க.." தனது இதழ் முத்தத்தினால் சூர்யாவின் கன்னத்தை நனைத்தாள்.

" இப்படியே ஜஸ் வச்சு வச்சு என்னை ஏமாத்திடற டி கயல்...! என்று அவளை இறுக்க அணைத்தவள் தனது முத்தத்தை பரிசளித்தவள். கைகுழந்தையாய்... தன் கையில் தவழ்ந்தவள்...‌ அந்த நொடி‌ பிஞ்சு கைகளை‌அவள் ‌தழுவியது அன்று‌ பிடித்த அந்த விரல்களை இன்றளவும்‌ விடவில்லை. தனது ‌அம்மா அப்பாவிடம் இருப்பதை விட சூர்யாவிடமே அதிக பாசம்‌ கொண்டு இருந்தாள்... கயல் குட்டி..

இதுவரை கயல் குட்டி‌ கேட்டு சூர்யா‌ மறுத்தது இல்லை... ! ஓர்‌நாளும் ‌அவள்‌ அணைப்பில் இருந்து விலகியது இல்லை...! காந்தமாய் இருவரும்‌ ஒன்றிபோய் ‌தான் இருந்தார்கள் அன்பு‌ என்னும்‌ வார்த்தையிலும்‌ உறவிலும்..

" சூர்யா வாங்கிட்டு வந்திடு‌..." என்று அவளது மறு முத்ததிற்கு காத்திராது வீட்டினுள்‌ ஓடிச் சென்றாள்‌ கயல்குட்டி.

ஸ்கூட்டியை ‌எடுத்தவள் தன்னவனின் நினைவில் தன்னை தொலைத்து தான் ‌போனாள்.
- தொடரும்
 

Attachments

  • eiJH58S19927.jpg
    eiJH58S19927.jpg
    202.5 KB · Views: 8
Top