ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிர் கொள்கிறேன் உன்னால் -3

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஒரு வருடத்திற்கு முன்பு...

"கயல் கும்பல்ல தொலைசஞ்சிடாதா... ‌கையைப்பிடி‌ ஓடாத...! " என்று சூர்யாவின் குரல்கள் கயலை சுற்றியே இருந்தது..

"ஹான் சூர்யா அதோ பாரு... ஜஸ்கீர்ம் வாங்கி தா ப்ளீஸ் " என்று கயல் கெஞ்ச...

"நோ நோ நோ மம்மிக்கிட்ட நீ ப்ராமிஸ் பண்ணி தானே வெளியில வந்த நோ ஜஸ்கீர்ம்ஸ் ஒன்லீ புக்ஸ் " என்று சூர்யா கூற...

"ஓன்னே ஒன்னு சூர்யா ப்ளீஸ்....!" என்று கயல் குட்டி சூர்யாவின் கன்னத்தையை பிடித்து கேட்க...

"அச்சோ அழகி... வாங்கி தரேன் ஆனா‌ஒண்ணே ஒண்ணு தான்.." என்று அவளிற்கு பிடித்த சாக்லேட் ப்ளேவரில் வாங்கி கொடுத்தாள் சூர்யா

புக்ஸ் ஸ்டாலுக்குள் ஒவ்வொன்றாக நடந்தனர்... " ஐ சூர்யா அங்கபாரு... டிராயிங் புக் .... வாங்கி தா..."

"உனக்கு என்ன புக் வேணுமோ...! நீ வாங்கிக்கோ... கயல் ஆனா என்னை விட்டு அதிக தூரம் போக கூடாது..." என்று தான் தேடி வந்த பொக்கிஷத்தை தேடினாள்...

சூர்யாவின் ‌கண்களுக்கு சரியாக தென்பட்டது. அவள் ரசித்து ரசித்து காத்திருந்த அந்த புத்தகம்... அவளின் கண்‌முன்னே "காதலிக்க வருவாயே...!" அதன் கீழே வர்மா என்று இருந்தது அதனை விட்டு கண்கள் அகல மறுத்தது.

'வர்மா என் ‌காதலே உன்னை காதலிக்க தானே உயிர் கொண்டு வாழ்கிறேன்.. ஏன்டா இப்படி எல்லாம் எழுதுவ...‌?' என்ற ஏக்கத்தோடு அந்த புத்தகத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

சூர்யாவை பார்த்த கடையின் உரிமையாளர்..." நீங்களும் வர்மா ஸார் பேன்னா..?" என்று கேட்க...

'இல்லை அவனுடைய காதலி' என்று அவள் மனம் சொல்லியது. சிறு‌புன்னகையோடு... உள்ளே நுழைந்தவள்... அந்த அறையின் முழுவதும் வர்மா ரசித்து ரசித்து எழுதிய அத்தனை புத்தங்களின் தொகுப்பு... எத்தனை வருட ஏக்கங்கள் எந்த புத்தகத்தில் நீ எந்த இடத்தில் எந்த வரியை கேட்டாலும் எனக்கு அத்துபடி ஆயிற்றே... ‌உன்‌மீது பைத்தியமாகியதாலோ என்னவோ... உன்மீது காதல் வந்துவிட்டது உன் எழுத்துகளின் மீது பேராசை வந்துவிட்டது டா... என்று எண்ணம் முழுவதும்... சிந்தனையில் நிறைந்து நின்றான் வர்மா...

காத்திருக்கிறேன் கண்ணமா..., நெஞ்சில் நீயே.., பேரன்பு..., என்று ‌புத்தகங்கள் அடுக்கிக் கொண்டே செல்ல.... அடுத்து நீ என்ன எழுதப்போறேன்னு ஆவலா காத்திட்டு இருந்தேன் டா... என்று அதற்கு மேலும் அவளால் ஆர்வம் தாங்க முடியாதலால்... அந்த புத்தகத்தை கையில் எடுத்தவள் வர்மா ‌என்று இருந்த அந்த பெயரை ஒரு‌முறை தடவிப் பார்த்தாள் மனதில் காதல் வெள்ளம் வர தான் செய்தது.

இன்னும்‌ இந்த புத்தகத்துக்குள்ள எவ்வளவு புயலை டா ஒலிச்சு வச்சு இருக்க போற ஆர்வம் தாங்க மாட்டாதவளாய்...‌ இந்த புத்தகத்தை தன் உரிமையாக்கி கொள்ள... கவுண்டர்க்கு வந்தாள்... அதற்கு முன்‌கயல் அங்கு இருந்தாள்.. கயலிற்கு தெரியாமல் இந்த புத்தகத்தை வாங்க வேண்டுமே என்று... தன் பின்னால் ஒளித்துக் கொண்டாள்..

கயலிடம் நெருங்கியவள்..." கயல் இவ்வளவு தான் ‌புக்ஸ் வாங்கி வச்சி இருக்கியா... போதுமா... வேற எதுவும் வேண்டாமா...! என்று கயலை அனுப்ப கயல் மீண்டும் அந்த புத்தகத்தில் கண்காட்சியில் தொலைந்தாள்.

"ஹான் அண்ணா இந்த புத்தகத்தை பில் போட்டு தாங்க ப்ர்ஸ்ட்" என்று தன் பின் ‌மறைத்து வைத்திருந்ததை.. எடுத்து அவனிடம் நீட்டினாள்.

"குடுங்க மேடம் நேம் சொல்லுங்க…" என்று கூற பில்லை போட்டு முதலில் அந்த புத்தகத்தை தனக்கு உரிமையாக்கி கொண்டாள்... இதேபோல் வர்மாவையும்‌ எப்போது என் உரிமையாகிக் கொள்வேன்...! ‌என்று நினைவலைகள்... உறுத்த...

அந்த ஷாப்பிங் மாலில்... சவுண்ட் சிஸ்டம்‌ எங்கும் கரகர ஒலி எழுப்பியது.

“ஹாய்‌பிரண்ட்ஸ்...! இந்த ஷாப்பிங் மால் இன்னைக்கு வந்து இருக்கிறவங்க ரொம்பவே அதிர்ஷட சாலின்னு நினைக்கிறேன்.. ஏன்னா இன்னைக்கு நம்ப கூட இருக்கிறது யாருன்னு தெரியுமா..?" என்று குரல் ஒலிக்க...

நினைவலைகளில் இருந்து வெளியே வந்தவள்... இந்த புக்கை படிச்சே ஆகனும் ‌என்று வேகத்தோடு கயல் மேலும் நான்கு புத்தகத்தை தூக்கி கொண்டு வர... அதற்கும் சேர்த்து பில் போட்டு கொண்டு நின்று இருந்தாள்.

"மிஸ்டர் ...? ஏதாவது கேசிங்ஸ்..." என்று மீண்டும் அதே குரல்...

இரண்டு மூன்று செலிபரிட்டி பெயர்கள் வர சூர்யாவின் மனம் முழுவதும்... வர்மாவே நிறைந்து இருந்தான் இந்த புத்தகத்தில இன்னும் எவ்வளவு காதலடா ஒலிச்சு வச்சு இருக்க...படிக்கனும் படிக்கனும் என்று மனதில் சிந்தனையில் ஓடியது..

"நோ நோ இது வரைக்கும் நீங்க யாருமே பார்க்காதா செலிபிரட்டி தான்... எல்லோரும்... ஆசையா இவரை பார்க்கவே முடியாதா அப்படின்னு ஏங்கி தவிச்ச தவிக்க வச்சவரு தான் இப்ப உங்க கண்ணு முன்னாடி வெல்கம் மிஸ்டர் வர்மா ஸார்..." என்று மைக்கில் ஒலி வர..

சூர்யா சந்தோஷத்தில் உறைந்து போனாள்.

"உங்க முன்னாடி மிஸ்டர் வர்மா‌ இது கனவா நனவா.. இவ்வளவு வருடங்கள் ரசிகர்கள் முன் வராத ஒருவர் இப்போ..திடீர்ன்னு வந்து நிற்கறாருன்னா... என்னவா இருக்கும்... அந்த விஷயத்தை வர்மா சாரே சொல்லுவாரு.." என்று மைக்கை வர்மாவிடம் நீட்டினார்.

மைக்கை வாங்கிய வர்மா...! "ம்ம்ம்‌...! சொருமியப்படியே பேச தொடங்கினான்.

சூர்யா தொலைந்து தான் ‌போனாள்.

"எல்லோரும் எப்படி இருக்கீங்க எஸ் நான் தான் வர்மா‌..." என்று தன் குரலால் அனைவரையும் தன் பக்கம் இழுத்தவன் சூர்யா மட்டும் விதி விலக்கா என்ன நினைவிற்கு வந்தவள் வர்மாவை தேடி ஓடினாள் என்று தான் கூற வேண்டும்... இல்லை இல்லை, கயலையும் இழுத்துக்கொண்டு ஓடினாள்..

ரசிகர்கள் அனைவரும் வர்மா வர்மா ‌என்று கத்துவது கூட சூர்யாவின் காதில் விழுந்தது.... அவர்கள் கத்திய கத்திலேயே வர்மா பேரானந்தம் கொண்டான். வர்மாவை காணலை பேச்சு மட்டுமே தான் ‌ஒலித்துக் கொண்டு இருந்தது..

ஆனால் அந்த இடம்‌ எங்கு என்று சூர்யாவால் கண்டறிய இயலவில்லை நான்காவது மாடியில் இருந்தவளிற்கு... கீழே நடந்துக்கொண்டு இருப்பது அறியாமலா இருப்பாள்...

ஆனால் வர்மா ‌என்றதும்... அந்த மாலில் இருந்த நூற்றிக்கு எழுபது சதவீதம் பேர்... அவனது ரசிகர்கள் ஆயிற்றே... கூட்ட நெரிசல் அவர்களை நசுக்கியது திடீர் என்று கூடிய கூட்டத்தினால் சூர்யா கயலை கெட்டியாக தூக்கி கொண்டாள்.
மனதிலோ ' வர்மா உன்னை ஒரு தடவை பார்க்க முடியாதா' என்ற‌ஏக்கம் எப்படியாவது அவனை காண வேண்டும்‌ என்ற வெறி வர...

கூட்டத்தில் இருந்து வெளியே வந்தாள்.. படியில் இறங்கினாள்…" சூர்யா‌ என்ன‌ஆச்சு...?" என்ற கயலின் குரல் அவளது காதில் விழ வில்லை... வர்மாவின் குரல் மட்டுமே அவளது செவிகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது அந்த குரல் அந்த குரல் அவளை இன்னும் அசைத்து பார்க்க தான் வைத்தது.

"நான்‌ ஏன் இப்போ உங்க முன்னடி எல்லாம் வந்திருக்கேனா... ஓர் ஆசை தான் உங்க எல்லாரையும் பார்க்கனும் பேசனும் ‌அப்படிங்கிற‌ ஆவல்லா தான்‌ வந்திருக்கேன்..." காதலிக்க வருவாயா... என்னுடைய அடுத்த புத்தகம்‌ இப்போ விற்பனைக்கு வந்து இருக்கு... இது ரொம்பவே ஸ்பெஷல் இது என்னுடைய இருபத்தி ஐந்தாவது நாவல்..." என்று வர்மா கூற

அந்த மாலில் இருந்த அனைவரும்...! கைதட்டுகள் அவனிற்கு பரிசாக கொடுக்க... அவன் உச்சி குளிர்ந்து தான் போனான்.

"உங்களை எல்லாம் பார்க்கும் போது எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்குன்னு வார்த்தைகளால சொல்ல முடியல.... நான் யாருன்னுனே தெரியாம என் மேல இவ்வளவு அன்பு வச்சுதுக்கு நான் ‌என்ன பண்ண போறேன்...!" என்று ஓர்நிமிடம் கண் கலங்கியவன்...

ஏனோ சூர்யாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

"நீங்க ஒண்ணும் பண்ண வேணாம் ஸார்... சில ரசிகர்கள் உங்கிட்ட பேச ஆசைப்படறாங்க ...? " என்று அந்த ஆங்கர் கூற..

"ப்ளீஸ்" என்று வர்மா அவர்களை அழைத்தான்.

"ஸார் நாங்க உங்களுடைய பிக் பேன் தான் சொல்லனும் உங்களுடைய ஆனந்தம் நாவல் தான் என்னுடைய வாழ்க்கையை மாத்திச்சு...‌வயசானதால தனிமை தவிப்பில இருந்து மீள நாவலை தேடி போனேன்... அப்படி படிக்கிறது உங்களுடைய நாவலை தான்... எப்படி ஸார் இப்படி எழுத முடியுது உங்களால...?

மேடம் அது எனக்கு கடவுள் கொடுத்த ஒரு கிப்ட்... இவ்வளவு வயசாகியும் நீங்க என் நாவலை படிக்கறீங்கன்னா...? அதுக்கு நான்தான்‌ கொடுத்து வச்சு இருக்கனும் என்று வர்மா புன்னைகயோடு கூற இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்..

இது போதும் ஸார் என் வாழ்நாள்ல நான் நினைச்ச ஒரு விஷயம் திடீர்ன்னு கிடைக்கும்ன்னு நான் நினைச்சு பார்க்கல...

ஆனா நான் நினைச்சது நடக்கலேயே என் வர்மாவை யார் யாரோ பார்க்கறாங்க ஆனா என்னால பார்க்கவே முடியலையே‌ என்ற வேதனையிலேயே எப்படியோ போராடி மூன்றாவது தளத்திற்கு வந்தார்கள்... !

அப்போது மாடியில் இருந்து பார்த்தவளின் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை... எங்கு நடக்கிறது... என்ன என்று புரியாமல் தவித்தாள்...

பிறகே தெரிந்தது அது ரகசியமாக எடுத்த ஒரு பதிவு என்று அது டி.வியில் ஒளிப்பரபாகி கொண்டு இருக்கிறது என்று சரி டி.வியைவாது தேடி பார்ப்போம்‌ என்றால் அதுவும் கீழ் தளத்தில் தான் ஒலிப்பரப்பாகி கொண்டு இருக்கிறது வேதனையோடு அட்லீஸ்ட் குரலையாவது கேட்போம் என்று கயலோடு அமர்ந்து விட்டாள். ..

வர்மா உங்கிட்ட சில கேள்வி கேட்கலாமா... ?

கேளுங்க ஸார்... !

நீங்க காதலிக்கறீங்களா யாரையாவது ...?

சிரித்தவளின் கன்னத்தில் கன்னக்குழியை ரசித்தவர்கள் பல...
அவனது பதிலிற்காக சூர்யா மட்டு்ல்ல எல்லா ரசிகர்களும் காத்திருந்தனர்...

காதல் இருக்கு ஆனா அது எனது எழுத்துக்கள் மீது தான்‌என்று வர்மா கூற...

சூர்யாவிற்கு அப்போதுதான் உயிரே வந்தது.

வாவ் சூப்பர் வர்மா ஸாரி காதலை பற்றிய இவ்வளவு புரிதல் உங்களுக்கு எப்படி எங்கிருந்து ஸார் கிடைச்சது... ?

ஸார் இங்க தோணும் என்று அவனது இதயத்தை காட்டியவன்.. மனசு என்று சிம்பிளாக முடித்துக் கொண்டான்.

எப்படி இவ்வளவு சிம்பிளா இருக்கீங்க ...? உங்களுடைய புத்தகங்கள் எல்லாம் விருதுகள் பல வாங்கி குவிச்சு இருக்கு குறிப்பா “ஆசையாகி காதலே” நாவல் உங்கள் ரசிகர்களுடைய மனதை பெரியதா தான் வருடி இருக்கு... இன்னும் அந்த கதையை உண்மையின்னு நினைச்சுண்டு இருக்காங்க...

ரொம்ப தேங்கஸ் பட் அது கற்பனை கதை தான்‌ ஆசையாகி காதலே எனக்கு ரொம்ப பிடிச்ச கதை நான் ரசிச்சு ரசிச்சு எழுதின நாவல்... அதுக்கு ரீசண்டா விருது கிடைச்சது ரொம்பவே சந்தோஷம்...

ஸார் இன்னும் சில கேள்வி இருக்கு கேட்கலாமா.. கேளுங்க என்று அனைவரும் கேட்க அத்தனை கேள்விகளுக்கு சலிக்காமல் பதில் அளித்தவன்...

அங்கிருந்து வர்மா விடைபெற அவனை ரசிகர்கள் சூழ்ந்துக்கொள்ள.. மாலில் இருந்த கூட்டம் படிப்படியாக குறைந்து வெளியே வர...

சூர்யா தன் நினைவிற்கு திரும்பினாள்.. கயலே தூங்கிவிட்டாள். அவளது மார்பிலேயே.. அவளை தூக்கிகொண்டு... கீழே ஓடி வந்தவள்... அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழக்கியவரை கண்டவள்... அவனிடம் ஓடினாள்..

ஸார் வர்மா ஸார் எங்க தங்கி இருக்காருன்னு தெரியுமா..? ப்ளீஸ் சொல்லறீங்களா என்று அவள் கெஞ்ச...

திடீரென்று ஒரு பெண் இப்படி கேட்கவும்... தெரியலைங்க மேடம் ஸார் ‌உடனே கிளம்பிடுவாரு... ன்னு நினைக்கிறேன் நாளைக்கு அவருக்கு அவார்ட்டு கொடுக்க போறாங்க சும்மா ஷாப்பிங்க மாலுக்கு வந்தவரை நாங்க இண்டர்வீயூ மாறி எடுத்தோம் அவ்வளவு தான் எங்களுங்கு தெரியும் என்று... அவர்கள் கூற...

ஒரு வருடத்திற்கு முன்பு பைத்தியாமாய் அவனை சுற்றி தேடியது தான்‌ அதிகம்... மனம் மட்டும் அல்ல உடலும் சோர்ந்து போனாள்...
- தொடரும்
 
Top