ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிர் கொள்கிறேன் உன்னால் -2

T 24

Well-known member
Staff member
Wonderland writer
சென்னை...!

இந்த உலகத்தை ரசிச்சு ரசிச்சு வாழ்றவங்களும் இருக்கறாங்க அதே சமயம் ‌வெறுப்பா வெறுத்து வாழ்றவங்களும் இருக்கத்தான் செய்யறாங்க. ஆனா நான் இந்த இரண்டுக்கும் நடுவுல ...? அந்த சைடும்‌ போக முடியாம இந்த சைடும் போக முடியாம நடுவுல இருந்து தவிச்சுகிட்டு இருக்கேன்...

நினைவுகள்‌அலையாய்‌ ஒதுக்க ஒருமணி நேர பயணத்தில்... ! ஏர்போர்ட் வந்து இறங்கினான்...

"ஹாய்‌ஆதி ஸார்‌...! " என்று கம்பெனியின் ஒருங்கிணைப்பாளர் வசந்தன் கை உயர்த்தி அழைத்தார்.

"ஹாய்‌ ஸார் ‌எப்படி இருக்கீங்க...?" என்று அருகில் வந்தவர்

"யா பைன் வசந்த் ஸார்...‌எல்லாம் தயாரா இருக்கா " என்று கேட்டபடி... தனது லக்கேஜை எடுத்தவன்..

"எல்லாம் தயார் ஆதி ஸார்... நீங்க வருவீங்க ன்னு தான் ‌எல்லோரும் வெயிட் பண்றாங்க.... "

"ரொம்ப தேங்ஸ் ஸார் நீங்க இல்லைனா இது நடக்குமாங்கிறதே டவுட் தான்.... " என்று ‌ஆதி கூறிகொண்டே ஏர்போர்ட்டை விட்டு வெளியே வர..

"ஸார் நீங்க எவ்வளவு பெரிய ஆளு... ! என்கிட்ட போய் இப்படி சொல்லறீங்க நீங்க சொன்னா‌ எது வேணாலும் நடக்கும்‌ உங்க பவர் உங்களுக்கே தெரியல ஆதி ஸார்‌அதான் பிரச்சனையே.." ‌என்று வசந்த் ஆதியை உச்சி குளிர வைக்க நினைத்தவர்

இதற்கு எல்லாம் மசியாதவன்... "என்னை உச்சாணி கொம்புல வைக்காதீங்க ஸார்... நான் ரொம்ப சாதாரணமானவன்.. சரிங்களா... வேலையை பார்க்கலாமா...? "

"பார்க்கலாம் ஸார் இந்த சிமிபிளிசிட்டி தான்‌..." என்று வசந்த் மேலும் தூபம்மிட...

"வேண்டாம் ஸார் ப்ளீஸ் " என்று ஆதி அவரிடம் இருந்து விலகியே இருந்தான்.

மதியவேளை...

"சூர்யா சூர்யா‌ " என்று ‌கயல்குட்டி அழைத்த அழைப்பிலேயே...!

சூர்யா நன்றாக புரிந்துக கொண்டாள்..‌ ஏதோ பெரிய விஷயமாக தான் இருக்கும்... ‌என்று...

"சொல்லுங்க கயல் மேடம்...! சாக்லேட் தானே வாங்கிட்டு வரேன் ஈவினிங்...‌" என்று லன்ஜின் நடுவே சூர்யா பதில் அளிக்க...

" இல்லை இல்லை சூர்யா இன்னைக்கு ஈவினிங் சீக்கிரம் வர முடியுமா ப்ளீஸ்...! " என்று கயல் குட்டி கெஞ்சினாள்..

"என்ன‌ ஆச்சு என் கயல் குட்டிக்கு என்னை பார்க்காம இருக்க முடியலையா என்ன...? " என்று சூர்யா கேட்க...

" உன்னை பார்க்காம இல்லை சூர்யா.. ஈவினிங் மால்ல புக்ஸ் பார்க்க போகனும் மறந்துட்டியா...? நானும் ‌மறந்தே போயிட்டேன் எனக்கு ப்ராமிஸ் பண்ணியே கூட்டிட்டு போறேன்னு" என்று கயல்குட்டி கூற..

" ஓஓஓ மை காட் நான் மறந்தே போயிட்டேன் கயல் மா...! "என்று சூர்யா பதற்றமானாள்.. 'மீட்டிங் அது இது என்று இருக்கிறது‌ எப்படி கயலை அழைத்து செல்வது' என்று சிந்தனையில் இருந்தவள்..

'எனக்கு தெரியாது காரணம் சொல்லாத சூர்யா...! நான் அழுதிடுவேன்.." என்று கயலின் ‌அழுகை பெரிதாக வெடிக்கும் ‌முன்பே

" இல்லை இல்லை கயல் மா நான் வரேன் சரியா...? புக்ஸ் தானே உனக்கு என்ன‌ என்ன வேணுமோ வாங்கிகோ கூட்டிபோறேன் ப்ளீஸ் அழாதா..." ‌என்று சூர்யா கெஞ்சினாள்..

"இச்‌" என்று முத்ததை இட்டுவிட்டு பறந்துவிட்டாள்.. இல்லை வைத்துவிட்டாள். சூர்யாவின் நிலையோ.... மதிற்மேல் பூனை என்றாகி விட்டது..

மனதினுள் என்ன செய்வது என்ற எண்ண‌ ஓட்டத்தில் சாப்பாடு இறங்க மறுத்தது.

' ராஜேஷ் அண்ணாவ அனுப்பலாம்னா சரியான கஞ்சம் போகவே மாட்டாரு அப்பா... அவருக்கு வயது எங்கும் வெளியில் அதிகம் செல்வது கிடையாது அண்ணி... சொல்லவே வேண்டாம் படு பிஸி...! என்று யாரை அழைத்தாலும் ‌கயல் குட்டி முரண்டு தான்‌ பிடிப்பாள் ‌என்ன செய்வது' என்ற சிந்தனையில் இருந்தவளை உலுக்கினாள் அவளது செல்ல தோழி... அனு..

நினைவிற்கு வந்தவள்...அனுவை பார்த்தது சூர்யாவின் முகத்தில் அத்தி பூத்தது.

" அனுமா‌ எனக்கு ஒரு பிரச்சனைனா நீ எப்படி கரெக்டா வந்திடற..?" என்று சூர்யா கூற அருகில் சாப்பிட கூட அமர்ந்தவளோ...

பேக்கை எடுத்துக்கொண்டு வேறு டேபிளிற்கு செல்ல எத்தனித்தவளை..

"ஓய்‌அனு‌மா...‌எங்க ஓடற ஒழுங்கா வந்திடு " என்று சூர்யா அழைக்க...

"எனக்கு பயமா இருக்கு டீ நீ அனு மா ன்னாலே கைகால் எல்லாம் உதறுது...." என்று நடுங்கிய படியே அருகில் அமர்ந்தாள்.

" உயிர்‌தோழி என்ன பார்த்து இப்படி சொன்னா‌ எப்படி...?" என்று ‌சூர்யா சினுங்க....

"நீ உயிர்தோழியா... ‌என்‌ உயிரை‌ எடுக்க வந்தவளே நீ தான்...டி".. என்று‌ ஆற்றில் நழுவும் மீன் போல் நழுவினாள் அனு.

"என்‌செல்லம் ல... இந்த ஒரு தடவை மட்டும்...‌ப்ளீஸ்" என்று சூர்யா‌ கெஞ்ச..

"முடியாது டி...! போன‌தடவை அந்த ஹெட்‌கிட்ட ‌ நான்‌ பட்ட பாடு போதாதா... நைட் பத்து மணி ஆச்சு எல்லா வேலையும் முடிச்சு ஓகே சொல்ல.. ‌நீ வந்தா தான் சரி ... ‌நான்‌ என்ன‌ தான்‌ பண்ணாலும்... சரியில்லை சரியில்லைன்னு சவாடிச்சுடுவான்..ஹெட்..." என்று‌ அனு பயந்தாள்.

"அனு அனு ப்ளீஸ் கயல் குட்டி பாவம் வெளியில கூட்டி போறேன்னு ப்ராமிஸ் கூட பண்ணிட்டேன்...! இப்ப கூட்டி போகலேன்னா அவ்வளவு தான்‌ அழுக ஆரம்பிச்சுடுவா அவளை சமாதானம் படுத்திறது ரொம்பவே கஷ்டம் உனக்கே தெரியும்ல..."

"கயல் குட்டியையும் தெரியும் உன்னையும் தெரியும்... கயல் அழுதா உன்னால தாங்க முடியாதுன்னு...! மூனு நாள் உம்முன்னு தானே இருப்ப... சரி சரி இப்பவே மூஞ்சியை இப்படி வச்சிக்காத சூர்யா..." என்று அனு ஒத்துக்கொண்டாள்.

"தேங்ஸ் அனு மா...! "

"பரவாயில்லை டி இன்னும்‌‌ எத்தனை நாளைக்கு இந்த கயல் குட்டி அண்ணன்‌ அண்ணி அப்படின்னு இந்த உலகத்திலேயே இருப்ப கடைசி வரைக்கும்.. இப்படியே இருக்க முடியாது தெரியும்ல... உனக்குன்னு ஒருத்தன் வேணும்.."‌ என்று அனு வழக்கம் போல் தனது அட்வைஸ் மழையை பொழிய ஆரம்பித்து விட்டாள்.

'எனக்குன்னு ‌ஒருத்தன் இருக்கான்‌' என்று சூர்யாவின் மனம் முழுவதும் அவனது நினைவில் கரைந்து போனது.

அனு அட்வைஸை பொழிந்துக் கொண்டே போக சூர்யா அவன் நினைவில் கரைந்து கொண்டே போக...

" சூர்யா சூர்யா...! நான் சொன்னது புரியிதுல்ல...! ஒண்ணு லவ் பண்ணு இல்லையா வீட்டுல பார்க்கிற பையனை கல்யாணம் பண்ணிட்டு வாழ்க்கையில செட்டில் ஆகு சூர்யா. நீ சந்தோஷமா இருக்கனும் நான்‌ அதை பார்க்கனும் இப்படி நீயும் கயல் மாதிரி சின்ன பிள்ளையாவே இருக்காதா சரியா‌....? "என்று நினைவிற்கு கொண்டு வந்தாள் அனு.

"சரி சரி‌அனு...! நீ சொல்லறதை எல்லும் செய்யறேன் இன்னைக்கு ஈவினிங் மட்டும்.. எப்படியாவது சமாளிச்ச்கோ நான் வந்திடறேன்..."என்று சூர்யா சாப்பிட மனதினுள்...

நினைவுகள்...!

'எப்படா வருவ என்னை தேடி‌ என் ‌மனசு முழுக்க உன்‌ நினைவுகளால தான் நிறைஞ்சு இருக்கு.... அனு சொல்லற மாதிரி என் உலகம் ஒரு பக்கம் போயிட்டு இருந்தாலும்... இன்னொரு ‌பக்கம்‌ உன் கூட நான் வாழ்ந்திட்டு தானே இருக்கேன்... ! நினைவுகளில இருந்து நிஜத்துக்கு சீக்கிரம் வரீயாடா ப்ளீஸ் ...!என்று அவள் மனம் அவனிடம் இரைஞ்சியது...!

பீச்சின் அருகே இருந்த உயர்ந்த கட்டிடனத்தின் உள்ளே மனம்‌ முழுதும் ‌வஞ்சனையில் தான் ‌நிறைந்து இருந்தது.

அகிலாண்டேஸ்வரி... ராம் குரூப்‌ ஆப் கம்பெனியின் ஹெட்... வெளியிலும் மட்டுமில்லை வீட்டுனுள்ளும்... அவளது ஆட்சி தான்... தனது கணவனை கோபபார்வையால் எரித்துவிடுவது போல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

"உங்க பையன் ‌என்ன‌ நினைச்சுட்டு இருக்கான்...! ஹான்‌ என்னை‌ அசிங்கப்படுத்தறதே வேலையா வச்சுட்டு இருக்கான்... கிளப்புல தலைகாட்ட முடியல... ‌எப்பேயே போனவனை பத்தி இப்ப நியாபகப்படுத்தி கிண்டல் பண்றாங்க..." என்று கோபத்தின் உச்சகட்டத்தில் இருந்தாள் அகிலா

"அவன் எப்படியோ வாழ்றான் அகி நமக்கு என்ன நாம்‌ ஏன் அவனை நினைச்சு கவலைபடனும" ‌என்று ராம் கூற..

" அவனை ‌நினைச்சு நான்‌கவலை படறேனா.... அவனால எனக்கு அசிங்கம் தான்... இந்த வாழ்க்கையே வேண்டாமுன்னு பாதிலேயே விட்டு ஓடுனவன் தானே உங்க பையன்...! ஆனா‌ என் ‌பையனை பாருங்க சிங்கம் ‌மாதிரி.. நான் சொன்ன‌பேச்சுக்கு மறுபேச்சு பேசுவானா..! ம்ம்ம் இப்ப கேள்வி அது இல்லை..? ".

" கிளப்புல பேச்சு வர ஆரம்பிச்சுடுச்சு...‌! உங்களுக்கு அப்புறம் பிஸினஸ் அது யாருக்கு போகும்... அதை சொல்லுங்க இன்னொரு ‌பையன் இருக்கும் போது எப்படி என்‌ பையனுக்கு கிடைக்குமுன்னு கண்ணு முன்னாடியே குத்தி காட்டாறாங்க..."

ராமநாதன் சற்றே சிந்தனையில் ஆழ்ந்தவர்..". கிளப்பில பேசறவங்க பேச்சு எல்லாம்.. நமக்கு எதுக்கு அழகான குடும்பம் இருக்கு அழகான பையன் இருக்கான்‌ வேற‌ என்ன‌ வேணும் அகி..."

"ராம் நீங்க சொல்லறது எந்த பையனை‌ என் பையனையா உங்க பையனையா...?"

"நம்ப பையன் முகில் தான் அகி சரியா...? என்னை பாதியில தவிக்க விட்டு போனவன பத்தி கிடையாது... என் சொத்து பாசம் அன்பு எல்லாம் ‌ஒருவனுக்கு தான்‌ அது முகிலுக்கு தான்... வேணா இப்பவோ எழுதி தரட்டுமா " என்று ராம் சற்று கோபத்துடன் கேட்க..

"வேண்டாம் ராம்‌ எனக்கு புரியிது இந்த குடும்பம் கடைசி வரைக்கும் இப்படியே இருக்கனும்... " என்று‌ அகிலா ராமின்‌ கையைப் ‌பற்றியவள்...

"என்னையும்‌ பையனையும்‌ விட்டு போகமாட்டீங்களே" என்று அவரின் தோளில் சாய்ந்தவள்...

"போக மாட்டேன் அகி நீயும் முகிலும் இல்லாம‌ எனக்கு வாழ்க்கையே கிடையாது... நீங்க மட்டும் ‌தான்‌ என் வாழ்க்கை என் உயிரு சரியா ‌என்ன தான் நீ கம்பிரமா இருந்தாலும்... இப்படி அழறது நல்லாவா இருக்கு... கண்ணம்மா..."

"உங்கிட்ட நான் எப்பவும் அதே அகி தாங்க என்னதான் ‌பிஸினஸ் வுமனா இருந்தாலும் எல்லா கணவனுக்கும் அவ மனைவி மட்டும் தான்‌ வேற‌ எதுவும் கிடையாது என் ‌உயிரு‌ என்‌ உலகம் இது எல்லாம் உங்களையும் நம்ப பையனையும் சுத்தி தான் இருக்கும்...‌" என்று‌ கண்களில் துளிர்ந்த கண்ணீரை... ராமநாதன்துடைத்துவிட...

தான்‌ தேடி‌ய ஆசை மனைவியை காதலோடு ஆழமாய் ‌நோக்கி கரைந்து தான்‌ போனார்கள் இருவரும்.

மாலை வேளை

தூரல் மழை தூபமிட... மழையை ரசித்தப்படி... வீட்டினுள் நுழைந்தாள் சூர்யா...

"ம்ம்மு‌ அத்தை வந்தாச்சு " என்று கிளம்ப ரெடியாக காத்திருந்தாள் கயல் குட்டி...

'கள்ளி அத்தையா... சூர்யா சூர்யான்னு உருகுவ அவ்வளவு பயம் அண்ணி மேல' என்று ஸ்கூட்டி சாவியை எடுத்தவள் உள்ளே சென்றாள்.

சூடாக பஜ்ஜியும்... டீயும் சகிதமாக அண்ணி நித்திலா காட்சி தர உற்சாகமாக வந்தவளிற்கு இன்னும் உற்சாக மூட்டியது டீயின் சுவையும் சூடான பஜ்ஜியின் சுவையும்...!

"என்ன ருசிச்சு ருசிச்சு குடிக்கிறியாம்மா, ‌எப்படி தான் ‌உங்க அண்ணி டீயை குடிக்கிறியோ தெரியல..?" என்று ராஜேஷ் வந்து அமர...

உள்ளே இருந்து கோபமாக வார்த்தைகள்‌ வந்தது.

"தெரிச்சுதானே கட்டிடு வந்தீங்க அப்புறம்‌ என்ன‌ அங்க முனகலு " என்று நித்திலாவின் குரல் கேட்க...

அடங்கிதான்‌ போனான் ராஜேஷ்

"அண்ணா அண்ணியை சீண்டாம இருக்க மாட்டீங்களா...? " என்று சூர்யா இருவருக்குள்ளும் வர

"இதை விடுமா... ஏன் இன்னைக்கு ஆபிஸ்ல இருந்து சீக்கிரமா வந்தாச்சு." .

"கயல் குட்டிக்காக அண்ணா.... வெளியில கூட்டி போறதா சொல்லி இருந்தே அதான்... "

"சரி பார்த்து போயிட்டு வாங்க... நித்திலா" என்று தனது காதல் மனைவியை‌ அன்போடு அழைக்க. ...

கோபத்தோடு... சமையலறையில் இருந்து எட்டி பார்த்தவள்." .ஒரு கப் காப்பி தாம்மா தலைவலிக்குது" என்று அவர் கெஞ்ச...

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னவோ சொன்னீங்க... ? "

"அது சும்மா மா உன்‌ காப்பியை அடிச்சுக்கு யார் இருக்கா..." என்று தனது மனைவிடம் சரண்புகுந்தான்.

"அண்ணா நீங்க நல்லா பொழைச்சுக்குவீங்க போங்க அண்ணிக்கூட‌" என்று சூர்யா தனது அறைக்குள் வந்து ரெடியாகினாள். கயலோடு வெளியே செல்ல...

- தொடரும்
 
Top