அத்தியாயம் 3:
அவர்கள் இருவரும் தங்கள் அறையில் இருந்தாலும், அவர்கள் நினைவுகள் பின்னோக்கி சென்றன. வாருங்கள் நாமும் அவர்களோடு பயணிப்போம்.
**** பள்ளி என்று பெயர் தாங்கிய அந்த கட்டிடத்தில் வசதி படைத்தவர்கள் மட்டுமின்றி எளிய மாணவர்களும் சேர்த்து படிக்கும் ஒரு நடுத்தர பள்ளி தான் அது.
அந்த பள்ளியில் ஒருவனை சேர்க்க தான் அவன் பெற்றோர்கள் அவனிடம் அங்கு போராடி கொண்டிருந்தனர்.
அவன் அழவில்லை... கதறவில்லை..
நான் இங்க படிக்க மாட்டேன், எனக்கு படிக்கவே பிடிக்கல... நான் உங்களோடு தான் இருப்பேன்.. திரும்ப திரும்ப அதையே கூறினான்.
அதை கேட்ட ஆசிரியர் தான், நான் பார்த்து கொள்வதாக கூறி அவர்களை அனுப்பி வைத்தார். அவனை நான்காவது வகுப்புக்கு அழைத்து சென்று அவனை அமர வைத்துவிட்டு வந்துவிட்டார்.
அங்கிருக்கும் அனைவரும் இந்த புதிய மாணவனை தான் பார்த்தனர். அவன் யாரோடும் பேசாமல் தனியாக சென்று உட்கார்ந்து கொண்டான். அனைவரும் வித்தியாசமாக அவனை பார்க்க, ஒருவன் மட்டும் கனிவோடு பார்த்தான். அவனோ எதுவும் கண்டு கொள்ளவில்லை.
ஆசிரியர் வந்து சமூக அறிவியல் பாடம் எடுக்க, சில மணி நேரங்களுக்கு பின் அந்த பள்ளியின் அன்றைய நாள் முடிவடைய, அவன் ஹாஸ்டலை நோக்கி சென்றான்.
எப்போதும் வீட்டுக்கு சென்றவுடன் பாசமாக சிற்றுண்டி தரும் அம்மா இல்லை. சண்டை போடும் தங்கை இல்லை.. அவனுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அதனை துடைத்து அன்றைய நாளை அவ்வாறே கடந்தான்..
ஒரு வாரமும் இப்படி தனிமையில் தான் கழிந்தது அவனுக்கு. அவனும் யாருடனும் பேச மாட்டான்.. அப்படி யாராவது பேச வந்தால் அவர்களையும் அடித்து விரட்டி விடுவான். அன்றைய விளையாட்டு வேளையில் இவன் தனியாக மரத்தடியில் அமர்ந்து இருந்தான். அங்கு ஒருவன் கையில் பந்தோடு வந்தான்.
"என்னோடு விளையாட வரியா"
" "
உனக்கு இது பிடிக்காத, சரி உனக்கு பிடித்ததை சொல்லு.. அதை நாம விளையாடலாம்..
" "
"உனக்கு விளையாடவே பிடிக்காத... அப்போ நாம எதாச்சும் பேசிட்டு இருக்கலாமா"
அவன் பேச பேச இவனுக்கு கோபம் வந்துவிட்டது. அவனை பிடித்து கிழே தள்ளி விட்டான். அந்த பக்கம் வந்த சமூக ஆசிரியை தான் இதை பார்த்து அவனை திட்ட வர, கீழே விழுந்தவன் உடனே அவசரமாக எழுந்து,
மிஸ் நாங்க விளையாடிட்டு தான் இருந்தோம். நான் தான் தவறுதலா கீழே விழுந்துட்டேன் என்று அவனை காப்பாற்றினான். அவர் சென்ற பின்பும் இவன் அமைதியாகவே இருந்தான்.
சில நிமிடங்களுக்கு பிறகு,
"சாரி"
"எதுக்கு"
"உன்னை தள்ளி விட்டதுக்கு"
"அப்போ நீ three டைம்ஸ் சாரி கேக்கனும்"
இவன் நிமிர்ந்து பார்க்க, நீ ஏற்கனவே உன்னோடு பேச வந்த அப்போ 2 டைம்ஸ் தள்ளி விட்ட..
அவன் கேட்டான்,
"அப்போ நீ ஏன் திரும்பவும் என்னோடு பேச வந்த"
இவனும் சொன்னான்,
"நீ என் பிரண்ட்"
"ஆனா நீ எனக்கு பிரண்ட் இல்லயே"
"அப்போ பிரண்ட்ஸ்", என்று கை கொடுக்க
அவனும் பிரெண்ட்ஸ் என்று கூறி தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான்.
"நான் எழில் வேந்தன்"
"நான் ருத்ர தீரன்"
அங்கே ஒரு அழகிய நட்பு மலர்ந்தது. தாய் தந்தை கூட இரத்த சொந்தம் தான்.. அப்படி எந்த சொந்தமும் இல்லாமல் தோன்றுவதே நட்பு... அத்தகைய நட்பு வைத்துக் கொள்ள காரணம் வேண்டுமா என்ன ? இவன் முழு மனதோடு நான் உன் நண்பன் என்றான்... அவனும் அதை ஏற்றுக் கொண்டான்.. காதலில் மட்டும் தான் பார்த்தவுடன் காதல் தோன்றுமா என்ன.. நட்பிலும் அது தோன்றும். அது தானே இங்கே நிகழ்ந்தது...
அவர்கள் நட்பு தோன்றிய நாளை பற்றி நினைத்தால் இன்றும் அவர்களின் மனதில் ஓர் இதம்... இது தான் நட்பின் மகிமையோ...
???????
பறவைகள் கீச், கீச் என்று சத்தத்தை கானமாக பாட, ஆதவனோ வானில் இளித்து கொண்டு இருக்க.. அந்த காலை நேரம் நன்றாகவே புலர்ந்தது.. அந்த திறந்த வீட்டின் அழைப்பொலியை யாரோ அழுத்திக் கொண்டே இருக்க, வீட்டில் இருப்பவர்கள் உள்ளேயிருந்து எட்டி பார்த்தனர்...
அங்கு ஒருவனோ...
"நான் வந்துட்டேனு சொல்லு..
இரண்டு நாளைக்கு முன்னாடி எப்படி போனேனோ...
திரும்பி அப்படியே வந்துட்டேனு சொல்லு.."
என்ற டைலாக்கை ரஜினி மாதிரி அவன் பேசிக் கொண்டே ஸ்டைலாக நடந்து வர....டமால்ல்ல்... என்று சத்தம்... இப்போ ஸ்டைல நடக்கிறேன் என்று நடந்தானே, அவன் தான் தரையில் பரப்பி கொண்டு விழுந்தான்...அச்சோ பாவம் கிழே இருந்த தண்ணீரை கவனிக்கல போல...?
"டேய் வினு கிழே என்னடா தேடுறா..." என்று ருத்ராவும்...
"டையர்டா இருந்தா ரூமில் போய் தூங்குடா"
என்று எழிலும் கூற...
"அடேய்ஸ் நான் விழுந்துட்டேன் டா ... இந்த பச்ச குழந்தையை தூக்குங்கடா" என்று அவர்களை உதவிக்கு அழைக்க...
இருவரும் கோரசாக...
" உன்னால் முடியும், கமான் டா" என்று அவனை உற்சாக படுத்த.. ஆமா நான்
இப்போ ஓட்ட பந்தையத்தில் ஓடுறேன்.. அப்படியே கமான், கமான் கூப்பிட.. அடச்சீ தூக்குங்கடா எனச் சொல்ல.. அவர்கள் இவனுக்கு கையைக் கொடுக்க, வினுவோ தட்டு தடுமாறி அவர்கள் கை பற்றி எப்படியோ எழுந்து விட்டான்.
"இங்க யாருடா தண்ணீர் உத்துனது"
அதை கேட்டு உள்ளே இருந்து வேகமாக வந்த தேனு... அண்ணா that's me...கீழே தண்ணீர் கொட்டிடுச்சு அதை துடைக்க மறந்துட்டேன்...
நல்லா மறந்த போ...
இவளோ ருத்ரா, எழிலிடம்... அண்ணா உங்களுக்கு ஏதாவது ஆச்சானா என்று கேட்க... அடிப்பட்டது இங்க விசாரிப்பது அங்கேயா என்று அவளை ஏகத்துக்கும் முறைத்து சரியான கொலைகார குடும்பம் டா இது... என்று வாய்க்குள்ளே முனுமுனுத்தான்...
ருத்ரா, எழில் புறம் திரும்பியவன்...
" அது எப்படி டா.. இரண்டு பேரும் எவ்ளோ சண்டை போட்டாலும் என்னை கலாய்க்க மட்டும் சேர்ந்திடுறிங்க"
மறுபடியும் கோரசாக இளித்து கொண்டே..
"உன் முகராசி அப்படி மச்சான்" என சொல்ல..
"நம்ம மூஞ்சு என்ன அவ்வளவு நல்லவா இருக்கு" மைண்ட் வாய்ஸ் என நினைத்து வாயை விட்டே பேச...
"கலாய்க்க பத்து பொருத்தமும் பக்கவா இருக்கு" என்றனர் இருவரும்.
டேய் வினு எப்படா வந்த, வா வந்து முதலில் சாப்பிடு, அப்றம் பேசலாம் என பாரிஜாதம் கூற, இதுக்கு தான் டா அம்மா வேனும் என்று சொல்லறது... ஒருத்தனாவது சாப்பிட கூப்பிட்டிங்களா டா.. நான் கோவமா போறேன் என்று அனைவரையும் முந்தி கொண்டு போய் சாப்பிட அமர்ந்தான்...
"ஏன் குட்டிமா ஒருத்தன் கோவமா போறேன் சொன்ன அந்த மானஸ்தன பார்த்த என்று", ருத்ரா கூற, தேனும் எழிலும் சிரித்தனர்.
என்னங்கடா அங்க வெட்டி பேச்சு வந்து சாப்பிடுங்க டா... என்று வினு அழைக்க
"அது எப்படி டா இப்போ நாங்க எதுவுமே பேசாத மாதிரி நீ வந்து சாப்பிட்டு இருக்க.." - எழில்
டேய் நான்லாம் சோறா, மானமா என்று வந்த சோத்தை தான்டா choose பண்ணுவேன் என்று சாப்பாட்டை முழுங்கி கொண்டே பேசினான்...
இவ்வாறு தான் இருக்கும் இடத்தையே கலகலப்பாக மாற்றுபவன் தான் வினு என்கிற வினோத். இவர்கள் இருவருக்கும் உயிர் நண்பன். எழில் ACP ஆக இருக்கும் அதே போலீஸ் ஸ்டேஷன் தான் இவனும் இன்ஸ்பெக்டராக இருக்கான். இவனுக்கு எல்லாம் இந்த குடும்பம் தான்... சிறு வயதிலிருந்து ஆசிரமத்தில் வளர்ந்தவன். கல்லூரியில் இவர்கள் நண்பனாக மாற, அவன் வாழ்க்கையே மாறிவிட்டது. அவர்கள் எவ்வளவு சொல்லியும் இந்த வீட்டில் தங்கமாட்டேன் என்று மறுக்க, இறுதி ஆயுதமாக பேசமாட்டோம் என்று சொல்ல, பின் அவன் ஒத்துக்கொண்டான். அப்போ, நான் தான் தேனுவிற்கு அனைத்தும் செய்வேன் என்று சொல்ல இவர்களும் ஒப்புக் கொண்டனர்...
அனைவரும் சாப்பிட்டு கொண்டு இருக்க, தேனு தனக்கு நேரம் ஆகிவிட்டதால் விரைவாக சாப்பிட்டு கிளம்பிவிட்டாள்.
அங்கே வந்த கணபதி ராம் இவனை கண்டு முறைக்க, அவனோ கருமமே கண்ணாக உணவிலே கண்ணை பதித்து கொண்டு இருந்தான். அவர் நாற்காலியை இழுத்து போட்டு அமர, அந்த சத்ததில் நிமர்ந்தவன் அவரை பார்க்க, அச்சோ இந்த வக்கீல் எப்போ வந்தாரு என்று நினைத்து அவரை பார்த்து...
"அப்பா எப்படி இருக்கிங்க" என்று கேட்க..
"அவரோ இன்னும் அவனை முறைத்து இவங்க செய்யறதுக்கு எப்படி இருக்க முடியும் என்று பதில் கேள்வி எழுப்ப.."
அச்சோ இவனுங்க எதோ பஞ்சாயத்து இழுத்துட்டாங்க போலவே..என்று நினைத்து அவன் அப்பாவியாக அவரை பார்க்க.. அவரோ எதுவும் பேசாமல் சாப்பிட்டு சென்று விட்டார். எழில், ருத்ரன் இருவருக்கும் அவருடைய பேச்சு வருத்தம் அளித்தாலும், இருவருமே தங்களை மாற்றிக் கொள்ள முயலவில்லை..
டேய் எருமைஸ் என்று இருவரையும் அழைக்க.. அவர்களோ அவனை ஒரே மாதிரி முறைக்க.. இதுக்கு ஒன்னும் இரண்டு பேருக்கும் குறைச்சல் இல்ல என்று நொந்து கொண்டு...
என்னடா செஞ்சிங்க.. இந்த அளவுக்கு அந்த வக்கீல் காண்டாகிட்டு போறாரு.. என்று வினு கேட்க..
"வேந்தனும், தீரனும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டனர்"
இவர்களை பார்த்தவன் தலையில் அடித்து கொண்டு,
" டேய் ருத்ரா கண்டிப்பா உன் மேல தான் தப்பு இருக்கும் என்று சொல்ல, எழில் அவனை முறைத்தான்"
" அப்போ நீ தான் தப்பு பண்ணயா என்று எழிலை பார்த்து கேட்க, இப்போது ருத்ரன் முறைத்தான்"
அடப்போங்டா என்று அவன் மறுபடியும் சாப்பிட ஆரம்பித்துவிட்டான். இவன் செயலை பார்த்து இருவரும் சிரித்துக் கொண்டனர். பாரிஜாதமோ இவையனைத்தையும் ஒரு புன்னகையுடன் பார்த்து கொண்டே கடவுளிடம், இவர்கள் எப்போதும் இதே மாதிரி மகிழ்ச்சியோடு இருக்கனும் என்று தன் வேண்டுதலை வைத்தார்.. அனைவரும் சாப்பிட்டு அவரவர் பணிக்கு செல்ல ஆய்த்தமாயினர்...
???????
அந்த இடமே கலவரமாக இருந்தது.. அதற்கு காரணம் முதல்வரை பற்றி தவறாக எதோ புரளி கிளம்பி விட்டதாம்.. அனைவரும் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு இருந்தனர்.பேருந்துக்களை வழி மறைத்து அதை உடைக்க, பாதி வழியிலேயே அனைத்து பேருந்தும் நிறுத்தும் செய்யபட இதில் பொது மக்கள் தான் பாதிப்படைந்தனர்.. அனைவரும் அவர்கள் சொந்தங்களை போன் மூலம் அழைத்து அவர்களோடு சென்று கொண்டு இருந்தனர்.
அந்த வழியாக வந்த ருத்ரன், அதையெல்லாம் கண்டு கோபம் கொண்டு அக்கலவரத்தை தடுக்க அங்கே செல்ல முயன்ற போது.. அவனை தடுத்தது ஒரு கரம்..
"கோபத்துடனே திரும்பி பார்த்தான்"
"பெண்னவள் நின்றிருந்தாள்"
என்னவென்று" கேட்டான் "
"அந்த பக்கம் போறிங்களா" மென்மையாக வந்தது வார்த்தை...
இவளுக்கு என்ன நான் எந்த பக்கம் போன... என்று மனதில் கோபம் மூன்டாலும்..ஆமாம் அங்க தான் போறேன்..
"அங்க போகதீங்க", சொன்னாள் அவள்.
இவளுக்கு என்ன நான் அங்க போனால் என்று அவள் கையை எடுத்து விட்டு, அந்த பக்கம் மறுபடியும் செல்ல.. மீண்டும் அவன் கரம் பற்றினால்..
"ருத்ரனுக்கோ அதிகமாக கோபம் வந்தது. இப்ப நான் அங்கே போன உனக்கு என்ன" என்று குரலில் ஒரு வித எரிச்சலோடு கேட்க...
மென்மையாக சொன்னாள்...
"எனக்கு எதுவும் இல்லைங்க..அங்கே கலவரம் நடக்குது. அங்க போன உங்களை அடிச்சிடுவாங்க" என்று கண்ணில் மிரட்சியோடு கூறினாள்.
இவனுக்கு சிரிப்பு தான் வந்தது.. நானே ஒரு ரெளடி, இவ என்னவென்றால் நான் அங்கே போன என்னை அடிச்சிடுவாங்களாம் என்று தான் நினைத்தான்.
"என்ன அடிச்சா உனக்கு என்ன?" ஒருவித ஆர்வத்தோடே கேட்டான்.
அடிப்படுங்க... அப்புறம் இரத்தம் வருங்க.. அது வலிக்கும் தானே... அவங்க பெரிய பெரிய கத்தியெல்லாம் வைச்சு இருக்காங்க. அதுல சும்மா சின்ன கீறல் போட்டாலே ரத்தம் நிறைய வரும். நான் டாக்டர், நாங்க உயிரை காப்பாற்ற ஆப்ரேஷன் செய்யவே சின்ன கத்தி தான் எடுப்போம். அவங்க வைச்சிட்டு இருக்க மாதிரி பெரிய கத்தியெல்லாம் நானே பார்த்தது இல்லை... என்று தலையையும், கையையும் மேலும் கீழுமாக ஆட்டி, கண்களை உருட்டி ஏதோ பேய் கதை சொல்லி குழந்தையை பயப்படச் செய்வாங்களே அதுப்போல் சொல்ல, இவன் அவளையே தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.
உண்மையாக அவனுக்கு வார்த்தையே வரவில்லை... நான் யார் என்றே தெரியாது... இருந்தாலும் அவள் ஏன் என் மேல் அக்கரை படனும்.. ஒருவேளை மனிதாபிமானமாக இருக்குமோ.. இங்கே எத்தனை பேர் இருக்கிறார்கள் பின் ஏன் இவளுக்கு மட்டும் இது தோன்றியது என்று சிந்தனையில் உழன்று கொண்டு இருந்தான். அவளுடைய இனிய குரலின் மூலம், மீண்டும் அங்க போகக் கூடாது சரியா... என்று குழந்தையிடம் சொல்வது போல் சொல்ல அவனால் அதை மீற முடியவில்லை. அது ஏன் என்று அவனுக்கு தெரியவில்லை.. எப்போதும் தன் வேந்தன் சொன்னால் மட்டுமே கேட்பவன்... ஆனால் அவன் எப்போதும் இவனை கட்டுப்படுத்த மாட்டான். இந்த குழந்தை மனதுக்காரியோ அவளுடைய பேச்சாலே அவனை கட்டிப் போட்டு விட்டாள்...
அங்கே கலவரம் எனத் தெரிந்து எழிலும் அவ்விடம் வந்துவிட.. அந்த கலவரம் சற்று மட்டுபட்டது. எழில் ருத்ரனை கண்டுவிட்டான். அவனுக்கு ஆச்சரியம்..
எப்போதும் சண்டைக்கு முதல் ஆளாக நிற்பவன் இன்றோ ஓரமாக நின்று இருந்தான். அதுவும் ஒரு பெண்ணோடு.
இங்கு கிளம்பியவனுக்கு முதலில் தோன்றியதே தீரன் என்ன செய்து வைத்திருக்கிறனோ என நினைத்து கொண்டு இருக்க... ஆனால் அவனோ ஒரு பெண்ணோடு பேசிக் கொண்டு இருந்தான். எப்போதும் தங்கை தேனுவை தவிர மற்ற இளம் பெண்களிடம் பேசாதவனை இப்படி பார்த்தால் ஆச்சர்யமாகமல் என் செய்வான்... ஒரு மெல்லிய புன்னகையுடனே கலவரத்தை சரி செய்துவிட்டு சென்று விட்டான். அதிகமாக பெண்களோடு பேசாத ருத்ரனே, இன்னும் விடாமல் அவளோடு பேசிக்கொண்டே இருந்தான்.
"உன் பெயர் என்ன" தயக்கத்தோடு தான், ஆனால் கேட்டுவிட்டான்.
பெண்ணவள் தன் வாய் மொழியால் சொன்னாள்... "சிற்பிகா தேவி "
"பாவையவள் பேச்சால்
சொக்கித்தான் போனான்
அவளின் மன்னவன்.."
அங்கிருந்து தன்னுடைய பைக்கில் கிளம்பிய எழில் வேந்தனோ, மீனலோசனாவிடம் சிக்கி கொண்டு இருந்தான்...
இணைவார்களா?...
???????
ஹாய் டியர்ஸ்,கதையின் போக்கு எப்படி இருக்கு.. இந்தக் கதையில் நகைச்சுவை, நட்பு, சமூகம், அப்பறம் காதலும் கண்டிப்பாக இருக்கும்??... ஆதலால் கதையை படித்து விட்டு கருத்தை சொல்லிட்டு போங்க...
plzz comment chlms????...
இருவர் ஒன்றானால் கதைக்கான கருத்துகளை இந்த திரியில் பதிவிடவும்..நன்றி டியரிஸ்..??
pommutamilnovels.com
- சரண்யா?