ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இணைவேனடி உன்னை உயிர் காதலால்-கதை திரி

Status
Not open for further replies.

danooshiya

New member
Wonderland writer
நாயகன் -; மஹாம்ருத்யுஞ்ஜெயன்
நாயகி -; செந்தூர தேவி

"ஷஷ்டியை நோக்க சரவணபவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் பாதமிரண்டில் பன்மணி சதங்கைகீதம்பாட கிங்கிணியாட " என்று தன்னை சூழவுள்ள சுற்று புறத்தையே தனது குரல் வளத்தால் கட்டிபோட்டிருந்தாள் நம் கதையின் நாயகி செந்தூரா முன் இருபதுகளில் இருக்கும் இறை பக்தி கொண்ட அமைதியும் அறிவும் கொண்ட நவயுக நங்கை., என்ன தான் நவ நாகரீக நங்கை என்ற போதும் இறைவனிடத்தும் பிற உயிர்களிடத்தும் அதிக அன்பு பூண்டவள் ஆனால் அவளுடைய வாசத்தையே சுவாசித்து வாழ்ந்து வஞ்சம் தீர்க்க காத்திருக்கிறான். வஞ்சக காதலன் ஜென்மங்கள் பல கடந்தாலும் காத்திருப்பான் அவன் அவனின் சந்திப்பு செந்தூராவின் வாழ்வையே தீர்மானிக்கும்.என்பதை அவளும் அவள் அன்பு சொந்தங்களும் எங்கனம் அறிவர்

****************************************************************************************************************************
"இறைவா ஆதிசிவா பாம்புகளின் அரசன் உன் சேவகன் செய்யும் பூஜையை ஏற்று கொள் என்னவளுடன் இணையும் காலம் இன்னும் வெகு தொலைவில் இல்லை என்பதை என் மனம் கூறுகிறது உண்மையா அதே போல் அவளையும் அவள் குடும்பத்தையும் ஆட்டுவிக்கும் காலமும் தொலைவில் இல்லை என மனம் கூறுகிறது உண்மையா ? நீதான் விடை கூற வேண்டும்" பழியுணர்ச்சி காதல் ஏக்கம் என்று கலவையான
உணர்வுகளுடன் நின்றிருந்தான் நாகராசன்., "நாகராஜ்" என்று கம்பீீரமும் வயதின் முதிர்ச்சியும் கலந்த குரலில் அழைத்தார் நாக சித்தர் காளிங்க வம்சத்தின் வாரிசுகளுக்கு வழி வழியாய் நாகராஜ குருவாக ஆலோசனை வழங்கி வருபவர் .," நாகராஜ் அவள் வருகிறாள் வந்து கொண்டே இருக்கிறாள் உன் காதலை பெற அவள் சாபத்தை போக்க வருபவள் திரும்பும் போது உன் காதலியாக மனைவியாக தான் திரும்ப வேண்டும்" என்று சிந்தனையுடன் கூறினார் நாகராஜ குரு

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எனக்கு அவங்க சைட் ல எழுத கொடுத்த பொம்மு அக்காவுக்கு ரொம்ப நன்றி எல்லா விஷயமும் சொல்லி கொடுத்தாங்க எந்த டைம் க்கு msg பண்ணாலும் ரிப்ளை பண்ணி கடைசியா நான் 10 th ல தான் கதை எழுதினேனு சொன்னப்ப ட்ரை பண்ணுங்கமானு சொல்லி encourage பண்ணதுக்கும் ரொம்ப தேங்க்ஸ் அக்கா ட்ரை தான் பிழைகள் இருந்தால் சொல்லுங்க திருத்தி கொள்கிறேன் friends

இப்போதைக்கு இவ்ளோ தான் எழுதிருக்கேன் முதல் அத்தியாயம் நாளைக்கு தரேன் pls சப்போர்ட் me
 
Last edited:
Status
Not open for further replies.
Top