இதற்கு மேல் இங்கு நின்று கொண்டிருந்தால் இவர்கள் இருவருக்கும் பஞ்சாயத்து செய்ய முடியாது என்று நைசாக மீண்டும் அடுப்படிக்கு சென்று விட, காவல் தெய்வம் விட்டுப் போனது போல் மீண்டும் அப்பாவியாகி நின்றது அந்த பேதை.
அவனிடம் கெஞ்சினால் வேலைக்காகது என்று 32 பற்களையும் ஒன்றாக காட்ட, அவள் கையைப் பிடித்து அழுத்தமாக ஒரு திருகு திருகி விட்டான் தேவேந்திரன்.
" ஐயோ முட்டாள் குரங்கே கை வலிக்குது விடுடா.. எரும மாடு தடி மாட்டு பயலே இப்படி புடிச்சு கையை முறுக்குரியே பாவம் ஒரு பச்ச பிள்ளை அதுக்கு கை வலிக்குதுன்னு யோசிக்கிறியா! விட்டு தொலைடா பன்னி பயலே.. " என்றவளுக்கு மரியாதை எல்லாம் காற்றில் பறந்து போக, அவள் பேச பேச இன்னும் அழுத்தமாக அவள் கையைப் பிடித்து திருகிவிட்டான் தேவேந்திரன்.
அவள் சத்தம் கேட்டு அழகி மீண்டும் அந்த இடத்திற்கு வந்தவர், மகன் செய்யும் செயலை கண்டு கோபமடைந்தவராக மகனை உக்கிரமாக முறைத்து பார்த்தார்.
" அவள் கையை விடு முதல்ல பாவம் பச்ச பிள்ளை.. உன்னோட இரும்பு கைக்கு அவளோட கையை இந்நேரம் உடைக்காமல் விட்டு இருப்பியா? ஒழுங்கா சொல்றதை கேளு கையை எடு.. " என்றவரை அவன் இப்பொழுது முறைத்து பார்க்க, உனக்கு நான் சலைத்தவள் இல்லை என்பது போல் அவனது அன்னையும் முறைத்து பார்த்தார்.
அவன் பிடித்த பிடியில் அவளுக்கு வலி உயிர் போனாலும் வாய் மட்டும் அடங்காமல் திட்டிக் கொண்டே இருந்தது.
அவனோ பக்கத்தில் நின்று கொண்டிருந்த அன்னையை நிமிர்ந்து ஒரு பார்வை பார்க்க, அவன் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்து கொண்டவர் வாயில் அவனை அரைத்தபடியே முனுமுனு வென்று கோபமாக வெளியில் அமர்ந்திருந்த கணவருக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டார்.
" என்னம்மா இவ்வளவு டென்ஷனா வந்து என் பக்கத்துல உக்கார? உன் பிள்ளை வந்துட்டா உனக்கு தான் யாரையுமே கண்ணுக்குத் தெரியாதே எப்படி அவனை விட்டுட்டு இங்க வந்த? "
" வாயை மூடிட்டு கொஞ்ச நேரம் சும்மா இருங்க நொய் நொய்ன்னு படுத்தாம அப்புறம் சோத்துல உப்பு அள்ளி கொட்டிடுவேன்.. " என்று மகன் மேல் உள்ள கோபத்தை கணவன் மேல் காட்ட, அதற்குப் பிறகும் வாயை திறப்பாரா கணேசன்.
தேவேந்திரன் சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்தவன் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டவன் அவள் கைகளை விடுவிக்க, அவனிடமிருந்து விடுபட்ட கைகளை தேய்த்துக் கொண்டே அவனை முறைத்து பார்த்த செம்பருத்தி " போண்டா வாயா கை பாரு எப்படி சிவந்து போச்சு..உ.. உன்.." என்று அவனை மேற்கொண்டு திட்டப் போனவள் வார்த்தைகள் எல்லாம் அவன் இதழ்களோடு அடங்கிப் போனது.
அவள் முகத்தை தன் கைகளால் பற்றிக் கொண்டவன் அப்படியே பேசிக் கொண்டிருந்தவளுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக அவள் இதழ்களை அழுத்தமாக சிறை செய்ய, அவள் கண்கள் இரண்டும் சாஸர் போல் விரிந்து கொள்ள, கண்கள் இரண்டும் பட்டாம்பூச்சியாய் நொடிக்கு ஒரு முறை சிணுங்கியது.
மூச்சுக்காக அவள் தவிப்பதை கண்டு விடுவித்தவன் " இனிமே மரியாதை இல்லாமல் பேசுன உனக்கு அவ்வளவு தான்.. இனிமே மாமா இப்படி தான் உனக்கு தண்டனை தரப் போறேன்.. " என்றவன் அவளை பார்த்து கண்ணடிக்க,அவளோ இதழ்களை துடைத்தபடி தன் வீட்டை நோக்கி ஓட கணேசன் அவளை அழைத்தது காற்றிலே கரைந்துப் போனது.
தன்னுடைய அறைக்கு வந்து கதவை சாத்திக் கொண்டவள் அதன் மீது சாய்ந்து நிற்க, அவள் இதயம் துடிக்கும் ஓசை நன்றாகவே அவளுக்கு கேட்டது.
" வீணா போன எடுப்பட்ட பய அநியாயமா இப்படி முத்தம் கொடுத்துபுட்டானே.. " கண்ணாடிக்கு முன்பாக சென்று தன் இதழ்களை தொட்டுப் பார்க்க, இதழ்களின் ஓரத்தில் காயம் பட்டு ரத்தம் வந்திருந்தது.
" சரியான காட்டானா இருப்பான் போல இருக்கு.. வீணா போனவன் எப்படி கடிச்சு வச்சிருக்கான் பாரு.." என்று இதழ்களை கைகளால் வருடி கொடுத்தாள்.
" ஏம்பா திருப்பூர் வரைக்கும் நீ போயிட்டு வந்த வேலை என்ன ஆச்சு? " என்றார் கணேசன்.
" எப்படியும் ஓகே ஆயிடும்.. ஓகே ஆகித்தானே ஆகணும்.. " என்றவன் பேச்சில் இருந்த அழுத்தமும் கண்களில் இருந்த கூர்மையும் அவன் நிச்சயம் இதை நடத்தாமல் விடமாட்டான் என்பதை அவருக்கு பறைசாற்றின.
" ஏன்டா நீயும் உங்க அப்பா மாதிரியே இந்த கட்சி அரசியல் இதெல்லாம் தேவைதானா? ஒழுங்கா நீ படிச்ச படிப்புக்கு போலீஸ் வேலை வந்ததை விட்டுட்டு இப்படி உங்க அப்பா மாதிரியே நாட்டை காப்பாத்துறேன் மக்களை திருத்த போறேன்னு அரசியலுக்கு போறேன்னு சொல்லுறியே! உனக்கு யார் நாளைக்கு பொண்ணு கொடுப்பா அதெல்லாம் யோசித்து பாக்குறியா? " என்றவரை இடைவெட்டி அவன் ஒரு பார்வை பார்க்க, அத்தோடு தன் வாயை மூடிக்கொண்டார் அழகி.
" அம்மா இன்னும் என்ன பண்ணிக்கிட்டு இருக்க எனக்கு காலேஜுக்கு டைம் ஆச்சு.. ரொம்ப நாளைக்கப்புறம் இன்னைக்கு தான் காலேஜ் போகிறேன் முதல் நாளே லேட்டா போனா எங்க ப்ரொபசர் வச்சு செய்யும்.. அந்த அம்மாகிட்ட திட்டு வாங்க எல்லாம் என்னால முடியாது உன்கிட்ட வாங்குற திட்டு பத்தாதா இதுல நான் காலேஜ்ல போய் வேற திட்டு வாங்கணுமா?" என்று தன் பைக்குள் நோண்டியப்படியே தன் தாயிடம் ஏவிக் கொண்டிருந்தவளை முறைத்துப் பார்த்தார் தேவி.
பையை நோண்டிக் கொண்டிருந்தவள் எதுவோ தோன்ற தலையை நிமிர்ந்து பார்த்தவள் அங்கு தன் தாய் தன்னை முறைத்து பார்ப்பதை கண்டு பல்லை காட்டினாள்.
" என்ன தாய்க்கிழவி இது? உன் மகள் பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருப்பேன் தான் அது ஊர் அறிஞ்ச ரகசியம் தான்.. அதுக்காக இப்படி தான் நீ என்னை நின்னு சைட் அடிச்சுக்கிட்டு இருக்கனுமா? அதுக்கெல்லாம் இப்ப நேரம் இல்லை நான் போயிட்டு வந்துடறேன் இங்க உன் கண்ணு முன்னாடி உட்கார்ந்து இருக்கேன் எவ்வளவு நேரம் வேணுமோ நீ உட்கார்ந்து என்னை பார்த்து ரசி.." என்றவளை பக்கத்தில் அடிக்க ஏதாவது கிடைக்குமா என்பது போல் தேடி பார்த்தார் தேவி.
அவர் எதற்காக பார்க்கிறார் என்பதை தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு செம்பருத்தி ஒன்றும் குழந்தை அல்லவே..
' அய்யய்யோ தாய் கிழவி பொளந்துகட்ட எதையோ தேடுது அதுக்குள்ள எஸ்கேப் ஆக வேண்டியதுதான்..' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவள் பையை தூக்கிக் கொண்டு ஒரே ஓட்டமாக வெளியில் ஓடி வந்தவள் வழக்கம் போல் தேவேந்திரன் மீது இடித்துக் கொள்ள, தடுமாறி கீழே விழப் போனவளை தாங்கிப் பிடித்துக் கொண்டான்.
இடையில் பதிர்ந்திருந்த அவன் கரம் அழுத்தமாக அவள் இடையை பிடிக்க, கீழே விழுந்து விடுவோமோ என்று பயத்தில் கண்களை மூடிக்கொண்டு இருந்தவள் கைகள் விழாமல் இருப்பதற்காக அவன் சட்டையை கெட்டியாக பிடித்துக் கொள்ள தனக்கு பக்கத்தில் தெரிந்த அவள் முகத்தை ரசித்துப் பார்த்தான் தேவேந்திரன்.
அவள் கண்களை மூடி கொண்டது வேறு அவனுக்கு வசதியாக போக, எப்போதும் அவளை சுட்டு பொசுக்குவது போல் பார்த்துக் கொண்டிருந்தவன் பார்வை முதன்முதலாக மனதில் இருந்த காதலை வெளிப்படுத்த பார்க்க வேண்டியவளோ அதை பார்க்காமல் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு இருந்தாள்.
கீழே விழாமல் இருக்கிறோம் என்பதை உணர்ந்ததும் கண்களை திறந்து பார்த்த செம்பருத்தி தனக்கு அருகாமையில் தெரிந்த தேவேந்திரன் முகத்தைக் கண்டு பதைபதைத்து போனவளாக அவன் பிடியிலிருந்து வெளியில் வர முயற்சிக்க அவளால் ஒரு அணுவும் அசைக்க முடியவில்லை.
அந்த அளவுக்கு அவளை அழுத்தமாக பிடித்திருந்தது அவன் கைகள்.
' அய்யய்யோ இவன் பார்வை சரி இல்லையே.. அன்னைக்கு மாதிரி கடிச்சு கிடிச்சு வச்சுர போறான் அதுக்கப்புறம் காலேஜ்ல என் பிரெண்ட்ஸ் எல்லாம் பாத்துட்டு என்னை சும்மா விட மாட்டாங்களே.. இதுக்கு மேல இருந்தா சேதாரம் நமக்குத்தான் இவன்கிட்ட இருந்து முதல்ல தப்பிச்சு ஓடணும்..' என்று மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டவள் அவனிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்பது போல் பார்க்க அதற்கு உதவியாக வந்து சேர்த்தார் அவ்வளவுதான் அன்னை தேவி.
அங்கு இருவர்கள் இருவரும் நிற்கும் கோலத்தைக் கண்டு பார்க்க முடியாமல் தேவி திரும்பி நின்றவர் " அடியே காலேஜுக்கு டைம் ஆயிருச்சுன்னு இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?" என்று அவளுக்கு கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பது என் நினைவுபடுத்த, இதுதான் வாய்ப்பு என்று அதை கெட்டியாக பிடித்துக் கொண்ட செம்பருத்தி " மாமா என்னை விடுங்க காலேஜுக்கு டைம் ஆகுது நான் போகணும்.. "என தேவி அங்க நிற்பதால் மேற்கொண்டு அவளிடம் எதுவும் பேச முடியாமல் தன் கைகளை விலக்கிக் கொண்டான் தேவேந்திரன்.
அவன் கைகளை விலக்கிக் கொண்டதும் சிட்டாக பறந்து ஓடினாள் பெண்ணவள்.