ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அர்ஜுன் பரீக்ஷித்- பாகம் 2

Status
Not open for further replies.

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 1



தூக்கத்தில் இருந்து கண் விழித்த இந்திரஜித்துக்கு தான் எங்கே இருக்கிறேன் என்று புரியவில்லை. கண்களை கசக்கி பார்த்தவனுக்கு தெரிந்தது என்னவோ புது இடம் தான். சுற்றி அனைத்தும் வெண்ணிற புகை மண்டலமாக இருக்க, சுற்றும் முற்றும் பார்த்தான். அவனை சுற்றி பல நவீன கருவிகளும், ஆய்வுகூட உபகரணங்களும் இருக்க, "இது என்ன இடமா இருக்கும்?" என்று யோசித்தவன் எழுந்து இருந்து கொண்டான்.

அவன் எழுந்ததுமே, "சார், அவன் எழுந்துட்டான்" என்று ஒருவன் சொல்ல மறுமுனையில் இருந்து " கொஞ்சம் அவனை ஒப்செர்வ் பண்ணு " என்று பதில் வந்தது. பதின் வயது பாலகன் அவனுக்கு கொஞ்சம் பயமாக இருந்தாலும் அதை வெளிக்காட்டினால் அவன் அர்ஜுன் புதல்வன் இல்லையே.

படுக்கையில் அமர்ந்து அந்த இடத்தை ஆராய்ந்து கொண்டு இருந்தவனை நோக்கி ஒருவன் வந்தான். . வெண்ணிற பளிங்கு தேகம் உடைய அவன் கண்களோ பழுப்பு நிறத்தில் சற்று விலாசமாக இருக்க, கூரிய மூக்கும், சற்று பெரிய காதுகளுமாக இருந்தவன் அவன் இந்த பூமிக்கு உரியவன் இல்லை என்று அடித்துக் கூறியது. பார்க்கவே விசித்திரமாக இருந்தவன் தோற்றத்தில் இந்திரஜித்தும் கொஞ்சம் ஆடி தான் போனான்.

அவனைப் பார்த்ததுமே கொஞ்சம் பதட்டமான இந்திரஜித் "யார் நீ?" என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கேட்டான். தந்தை எட்டடி பாய்ந்தால் பையனவன் பதினாறு அடி பாயும் வல்லமை உடையவன் அல்லவா? அதைக் கேட்டு "ஹா ஹா " என்று அவன் இரு கோர பற்களும் வெளியே தெரிய சிரித்தவன் "என் பெயர் ஜின்" என்று ஆரம்பிக்க " ஏலியன் ரைட்?" என்று கேட்டான் இந்திரஜித்,

"ம்ம் வாவ், அல்டிமேட்" என்ற ஜின் மேலும், "அவன் பையன் இல்லையா? கொஞ்சம் பிரில்லியன்ட் ஆஹ் தான் இருப்ப " என்று சொல்ல, அவனை முறைத்துப் பார்த்தான் இந்திரஜித். உடனே ஜின் "நான் ஏன் உன்னை இங்கே கொண்டு வந்து இருக்கேன்னு தெரியுமா?" என்று கேட்க , "சொன்னா தானே தெரியும்" என்றான் அசட்டையாக..

"அதே திமிர்" என்றவன் "வீ ஆர் கோயிங் டு ரூல் திஸ் வேர்ல்ட் , அதுக்கு தான் இந்த புது புது வைரஸ் எல்லாம் ஸ்ப்ரெட் பண்ணுனோம். பட் உன் அப்பா," என்று தனது பாரிய விழிகளை மேலும் விரித்தவன் " நோ வேர்ட்ஸ் டு செய், எல்லாத்துக்கும் மருந்து கண்டு பிடிச்சுட்டான். சம்திங் உன் அப்பாவோட பிளட் ல இருக்கு, அதனால தான் எந்த வைரஸும் அவனை தாக்கல, ஆனா அவனை வச்சு எங்களால ஆராய்ச்சி பண்ண முடியாது.. இவின் நாங்க இருக்கோம்னு கூட அவனுக்கு தெரியாம இருக்க நிறைய முயற்சி எடுத்து இருக்கோம்... அவனை யோசிக்க விடாம தொடர்ந்து டாஸ்க் கொடுத்துட்டே இருக்கோம்... சோ இப்போ உன்னை அழைக்க காரணம், அவன் பையன் உனக்கும் அதே பிளட் இருக்கா? அப்படி என்ன இருக்கு உன் அப்பா கிட்டன்னு ஆராய்ச்சி பண்ண தான். அப்போ தானே உன் அப்பாவை அழிக்க கூடிய வைரஸை நாங்க உருவாக்க முடியும்.. கொஞ்ச நாளில முடிய வேண்டிய டாஸ்க்.. இப்போ வரைக்கும் இழுத்துட்டு போக உன் அப்பா தான் காரணம் " என்று சொன்னவன் குரலில் அவ்வளவு வன்மம். அதையே அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டு இருந்த இந்திரஜித் "நோ வன் கேன் பீட் மை டாட் " என்றான். அதைக் கேட்டு ஜின்னின் காது மேலும் விரிந்து போனது. கோபம் வந்தால் நமக்கு மூக்கு புடைப்பது போல அவர்களுக்கு காது விரியும்.

கஷ்டப்பட்டு தனது உணர்வுகளை கட்டுப்படுத்திய ஜின் "அதையும் பார்க்கலாம், " என்க, அவனோ "இப்போ என் அப்பா என்னை தேடி வருவார்" என்று சொல்ல, அவனோ "வாய்ப்பில்லை, " என்று கண் சிமிட்ட அதிர்ந்து பார்த்தான் இந்திரஜித்.

உடனே அவன் இந்திரஜித்தின் கன்னத்தில் தட்ட அவன் கையை பார்த்து மிரண்டு விட்டான். எட்டு விரல்களுடன் இருந்த பாரிய கையை பயத்துடன் பார்த்தவனை பார்த்து சத்தமாக சிரித்த ஜின் "எங்க பிளானட் இவொலுஷன், அதாவது கூர்ப்பு., இப்படி தான் எங்க மக்கள் இருப்பாங்க " என்று சொல்ல பெருமூச்சு விட்டான் இந்திரஜித்.

மேலும் தொடர்ந்த ஜின் "வெல், ஏன் தேடி வரமாட்டான்னு சொன்னேன்னா , அங்க உன்னை போல ஒருவன் இருக்கிறான். வி டிட் குளோனிங் " என்று சொல்லி அந்த பாலகனை அதிர வைத்தான் அந்த வேற்றுக் கிரக வாசி..

அதே சமயம் , தூக்கத்தில் இருந்து விழித்தான் இந்திரஜித் உருவில் இருந்த அந்த பாலகன்.. எழுந்ததுமே "சொன்னதெல்லாம் மறக்காம செய்யணும்.." என்று யோசித்தவன் தலையை வருடியது ஒரு கரம் , நிமிர்ந்து பார்க்க அங்கு நின்ற உத்தரா "கண்ணா காபி" என்று கொடுக்க புன் சிரிப்புடன் அதைப் பெற்றுக் கொள்ள அவனை புருவம் இடுக்கி பார்த்தாள் உத்தரா.

ஆம் இந்திரஜித் சிரிப்பதே அதிசயம் அல்லவா? அவன் இறுகிய தோற்றமும் வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக பேசும் குணமும் இந்த பாலகன் இடத்தில் கொஞ்சமும் இல்லையே. குளோனிங் குழந்தை கூட ஒரு ரோபோக்கு சமன் தான். சொன்னது அனைத்தும் பண்ண தெரியும், சுய புத்தி பிடி பட நாள் ஆகும்.

தன்னை சந்தேக கண் கொண்டு பார்ப்பதை உணர்ந்தவன் "ஐயோ சிரிக்க கூடாதுன்னு சொன்னாங்களே, நானும் மறந்து சிரிச்சுட்டேனே" என்று நினைத்தவன் உடனே தனது முக பாவனையை மாற்றி "ம்ம் நல்லா இருக்கு காபி" என்றான் இறுகிய குரலில். அப்போதும் அவனை மேலிருந்து கீழ் பார்த்தவள் "போய் குளிச்சு வாப்பா, ஸ்கூலுக்கு லேட் ஆகுது" என்க, அவனும் குளிக்க ஆயத்தமாக போனான்.

அதே சமயம் ஆய்வுகூடத்தில் இருந்த அர்ஜுன் பரீக்ஷித் மனதில் ஆயிரம் யோசனைகள் .. தினம் தினம் புது புது நோய்கள், அவனுக்கு மருந்து கண்டுபிடிப்பதே வேலையாகி போன நிலை தற்போது. நோயின் அஸ்திவாரத்தினை இது வரை அவனால் பிடிக்கவே முடியவில்லை.

"இந்த நாடு தான் நோயை பரப்பியது"

"அந்த நாடு தான் நோயை வேணுமென்று உருவாக்கியது"

"ரகசிய குழு தான் உருவாக்கியது"

"தவறுதலாக ஆய்வு கூடத்தில் இருந்து வெளியேறிய கிருமி அது"

"மிருகங்களை உண்பதால் பரவியது" என்று ஆயிரம் சந்தேகங்கள். ஆனால் ஒன்றுக்கும் சாட்சி என்பது இல்லை, சாட்சி தேட போகும் சந்தர்ப்பத்தில் முதலாவது நோயாளி பலருக்கு நோயை பரப்பி விட்டு இறந்து போய் இருப்பார். பிறகு எங்கிருந்து நோயின் அடியை தேடி பிடிப்பது என்று புரியாமல் குழம்பி இருந்தான் அவன். அவனது வீர தீரத்தை அறிந்தே, அவன் எதிரிகள் கவனமாக அவனை கையாள்கிறார்கள் என்று அவன் அப்போது அறியவில்லை.

அந்த ஒருவனை பார்த்து வேறு ஒரு கிரகமே அலறும் வல்லமை படைத்தவன் இந்த அர்ஜுன் பரீக்ஷித். அவனுக்கே இந்த விடயம் குழப்பமாக இருக்க, எப்படி இந்த நொய் பரவியது என்று கண்டு பிடிக்க முடியாமல் திண்டாடி போனான். ஆய்வுகூடத்திலேயே நேரம் செல்வழிப்பவனுக்கு கவனத்தை வேறு திசையில் திருப்ப முடியவில்லை. இல்லை என்றால் வேற்றுக் கிரக வாசிகளின் இந்த அத்து மீறிய வருகை அவன் கண்ணில் படாமல் இருக்குமா என்ன?

தலைக்கு மேல் கைகளை வைத்து சோம்பல் முறித்தவன் அங்கிருந்த காபியை குடிக்க, அவனுக்கு தன்னவள் நினைவு வந்து போனது . "என்னை கொல்றாடி மாமி" என்று முணுமுணுத்தவன் மீண்டும் வேலையில் மூழ்கி விட்டான்.

அதே சமயம், உத்தரா தனது அடுத்த இரு குழந்தைகளையும் குளிக்க வைத்து பாடசாலைக்கு ஆயத்தமாக்கிய சமயம், இந்திரஜித் குளித்து விட்டு வந்திருந்தான். அவன் ஸ்கூல் யூனிபோர்மை பார்த்தவள் "இன்னைக்கு புதன் கிழமையோன்னோ , எதுக்கு இந்த கலர் பேட்ச் குத்தி இருக்க?" என்று கேட்க அதை கேட்டு சற்று அதிர்ந்த இந்திரஜித் "மறந்துட்டேன்மா" என்றுபடி "பச்சை கலரா?" என்று கேட்டான்,. அதைக் கேட்டு அவனை முறைத்த உத்தரா "சிவப்பு கலர்டா " என்று சொல்ல, அவனும் "வர வர எல்லாமே மறந்து போகுதும்மா" என்றான். அதைக் கேட்டு இருபக்கமும் தலையாட்டி பெருமூச்சு விட்டவள் "அண்ணா கூட பத்திரமா போயிட்டு வாங்க" என்று தனது ஆண் குழந்தையிடமும் பெண் குழந்தையிடமும் கூற பாடசாலைக்கு இரு வருட இடைவெளியில் செல்லும் அவர்களும் சம்மதமாக தலை ஆடினார்கள்.

அதே சமயம், இந்திரஜித்தும் சில பல சொதப்பல்களிற்கு பின்னர் அவர்களுடன் ஐக்கியமாக ஆரம்பித்து இருந்தான். அவர்கள் சென்றதும், அவர்களுக்கு கை காட்டி விட்டு அறைக்குள் நுழைய, அங்கு அர்ஜுன் வந்து அமர்ந்து இருந்தான். அவனைப் பார்த்தவன் "சித்த நேரம் முன்னாடி வந்து இருக்கலாம்ல, குழந்தைங்க ஏங்கி போறாங்க" என்க, "சாரிடி மாமி, " என்றவன் அவளை இறுக அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பே அவன் இறுக்கம், அழுத்தம் எல்லாம் குறைக்க, அவள் கழுத்தில் நாடியை குற்றியவன் கண்ணில் பட்டது என்னவோ அங்கு கண்ட மேனிக்கு கிடந்த இந்திரஜித்தின் உடைகள் தான். அதைக் காட்டியவன் "என்னடி இது?" என்று கேட்க "ஓஹ் அதுவா? இது இந்து வேலை" என்று உடைகளை அடுக்க ஆரம்பிக்க இறுகிய அவன் முகத்தில் சந்தேகத்தின் சாயல் அப்பட்டமாக தெரிந்தது. அவன் பையன் எப்போதும் நேர்த்தியாக இருப்பவன், எவ்வளவு நேரம் ஆனாலும் அவன் உடைகள் தொடக்கம் எல்லாமே நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று விருப்புவன் இப்படி நடந்தான் என்றால் நம்பவா முடியும்? யோசனையுடன் அங்கிருந்த இருக்கையில் அமர, அவளோ "அவனுக்கு இன்னைக்கு என்ன பேட்ச் குத்துறதுன்னு கூட நினைவில்லை, அப்புறம் நான் தான் " என்று சொல்ல "வாட்? மறந்துட்டானா?" என்று கேட்டவனுக்கு சந்தேகம் இன்னும் வலுத்து போனது.

தந்தை அறியாத பையன் அல்லவே அவன், அவனை பற்றி நன்கு தெரிந்து இருப்பவனுக்கு அவனை நேரில் பார்க்கவில்லை என்றாலும் அவனது நடவடிக்கை சந்தேகத்தை கிளப்ப, புருவம் இடுக்கி யோசித்தான். வழமையாக குழந்தைகள் இருக்கும் நேரம் வரமாட்டான். அவன் வந்தால் அவர்களிடத்தில் பிணைப்பு உண்டாக, அவன் தான் மீண்டும் ஆய்வுகூடத்துக்கு செல்ல முடியாமல் தவித்து போவான். அதனாலேயே அவர்கள் சென்றதுமே வீட்டுக்கு வருபவனுக்கு ஏதோ தவறாக பட்டது.

க்ளோனிங் இந்திரஜித்துக்கு அனைத்தும் மூளையில் பதியப்பட்டு இருந்தாலும் சில பல சங்கடங்கள், மறதிகள் வந்து அவனை கொஞ்சம் நிலை தடுமாற வைத்தது என்னவோ உண்மை தான்.

comments thread

 
Status
Not open for further replies.
Top