ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அனு ஜெய்யின் "காதல் கனவே தள்ளிப்போகாதே" கதைத் திரி

T22

Well-known member
Wonderland writer
ஹாய் நட்பூஸ் 😍🙏

Title Reserved: #காதல்_கனவே_தள்ளிப்போகாதே


என்னுடைய கதைகள் இதுவரைப் படித்தவர்களுக்குக் கண்டிப்பாக இது மாறுப்பட்டதாய்த் தான் இருக்கும்.


டீசர்:


இன்று அவர்களின் வீட்டில் பேரனுக்கும் பேத்திக்கும் நிச்சயதார்த்தம். அதாவது பிரபுவிற்கும் சுமிதாவிற்கும் தான் நிச்சயம். இது பெரியவர்களால் பேசப்பட்ட கல்யாணம். அதனால் குடும்பமே சந்தோஷமாக இருந்தது.


அன்று காலை அஜய்யின் வரவிற்குக் காத்துக் கொண்டு இருந்த உஷாவிடம் "அவன் வருவான் நீ ஏன் பதற்றமாக இருக்க" என்று கந்தசாமி ஆறுதலாகப் பேசினார்.


"அது தெரியும்ங்க அவன் சொன்னால் வாக்கு மாற மாட்டான் ஆனால் இன்று அவனுக்கும் பூர்ணாவிற்கும் சம்மந்தம் பேச வேண்டும் என்று உங்கள் அப்பா சொல்றாங்களே அதற்கு அவன் என்ன சொல்லப் போகிறானோ அதை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது"என்று கவலையாகக் கூறினார்.


"எனக்கும் அந்த கவலை இருக்கிறது உஷா.. அஜய் வேற யார் என்று கூட பார்க்காமல் முகத்திற்கு நேராக பேசிவிடுவான் சரி பார்ப்போம் இப்போது சுமியுடன் இரு"என்று சென்றுவிட்டார்.


அப்போது அங்கே வந்த அந்த வீட்டின் கடைக்குட்டிகள் அனீஷ் மற்றும் ஆராதனா "என்ன இன்னும் ஹிட்லர் வரவில்லையா"என்று கேலியாகச் சிரித்தனர்.


அவர்களைப் பொய்யாக முறைத்த உஷா" இருங்க அவன் வந்ததும் உங்களை மாட்டி விடுறேன்" என்க" அனீஷ் வா எஸ்கேப்பு" என்று அவனை அழைத்துக்கொண்டு ஓடினாள் ஆராதனா.


ஆராதனா அந்த வீட்டின் கடைக்குட்டி செம சுட்டி, இவள் பார்க்க மாநிறத்தில் தோற்றம் அளித்தாலும் ரொம்ப அழகாகவே இருப்பாள்.


நிச்சயதார்த்ததிற்கு எல்லா ஏற்பாடுகளும் நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் தன்னுடைய கியா காரில் வந்து இறங்கினான் அஜய் விக்ரம். எப்போதும் இறுக்கமாய் இருக்கும் அவனின் முகம் இன்று சாதாரணவே இருந்தது. ஏனெனில் இன்று அவனின் தங்கையின் நிச்சயம் என்பதால். சுமிதாவுடன் சிரித்து பேசும் அண்ணன் இவன் இல்லை என்றாலும் அவள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பான்.


அஜய்யிடம் அவன் வீட்டில் இருக்கும் தற்போதைய இள வட்டாரங்கள் எல்லாரும் அவனிடம் பேசவே பயப்படுவர். அதற்கு இங்கே நேர் எதிர்மறையான குணத்தைக் கொண்டவன் தான் பிரபு. அவன் இருக்கும் இடம் கலகலவென இருக்கும். சுமிதாவும் பூர்ணாவும் கிட்டத்தட்ட ஒரே வயது ஒத்தவர்கள் என்பதால் நண்பர்களைப் போல் தான் பழகுவார்கள்.


அஜய் வந்ததுமே வீடே ஒன்று கூடி அவனை வரவேற்றது. தன் பாட்டி மற்றும் தாத்தாவிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவன் நேராகத் தன் அறைக்குள் குளிக்கச் சென்று விட்டான்.


"வந்தாரு வந்தாரு யார் வந்தாரு
உர்ரென்னு மூஞ்ச வெச்சிகிட்டு ஹிட்லர் வந்தாரு" என்று முனுமுனுத்தனர் அனீஷ் மற்றும் ஆராதனா.


இவர்கள் இருவருமே வீட்டிற்கு கடைக்குட்டிகள் அதுவும் இல்லாமல் இவர்கள் இருவரும் அத்தை மகள், மாமா மகன் உறவைத் தாண்டி நெருங்கிய நண்பர்கள்.


இருவரும் ஓரே கல்லூரியில் படிப்பதால் காலையிலும் அனீஷூடன் வண்டியிலேயே சென்று மாலையிலும் அவனுடனே திரும்பி வருவாள் ஆராதனா.


"பூர்ணா அக்கா.. பூர்ணா அக்கா" என்று பூர்ணாவின் காதோரம் மெல்ல அழைத்தாள் ஆராதனா.


சுமிதாவுடன் சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தவள் ஆராதனாவின் கையைப் பிடித்து "என்ன ஆச்சு ஆரு!" என்று கேட்டாள்.


"அக்கா கொஞ்சம் அங்க வரீங்களா" என்று சுமிதாவின் காதில் விழாதபடி பூர்ணாவிடம் கெஞ்சினாள்.


" சுமி.. இரு நான் வந்திடுறேன்" என்று ஆராதனாவுடன் சென்றவள் "என்ன ஆச்சு ஆரு.. ஏன் தனியா வரச் சொன்ன டீ"


"அக்கா அது வந்து அந்த ஹிட்லருக்கும் உங்களுக்கும் கல்யாணம் பேசப் போறாங்களாம்.. அனீஷ் சொன்னான்"


"ம்ம்.. ஆமா ஆரு.. இன்னிக்கு காலையில தான் அம்மா அப்பா இதைப் பத்தி பேசுனாங்க"


" அக்கா!அந்த ஹிட்லரைக் கல்யாணம் பண்ணிக்காதீங்க அக்கா. பிரபு அண்ணா மாதிரி அவர் கிடையாது சரியான சிடு சிடு மூஞ்சு"என்று முகத்தைத் திருப்பினாள்.
 
Top