ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 9

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 9

அன்று ஒரு வழியாக நீலாம்பரியிடம் இருந்து தப்பி விட்டாள்.

அவளுக்காக சிம்மன் அலுவலகம் கூட செல்லவில்லை...

அடுத்த நாள் கிளம்பும் போதே, "கண்ட கருமத்தை குடிச்சு தொலைச்சிடாதே" என்று சொல்லி விட்டு தான் கிளம்பி இருந்தான்...

இப்படியே அவள் நாட்கள் நகர, அன்று காந்தினி வழக்கம் போல முறுக்குகளை திருடிக் கொண்டே, வீட்டின் பின் பக்கம் இருக்கும் கட்டில் வந்து அமர்ந்தாள்.

'நிம்மதியா இந்த வீட்ல சாப்பிட கூட முடியல' என்று முணுமுணுத்துக் கொண்டே, முறுக்கை வாயில் வைத்தவளுக்கு, அங்கே தன்னையே பார்த்தபடி நின்ற ஷாருக்கானை பார்த்ததும் தூக்கி வாரிப் போட்டது...

அவளையே வெறித்தபடி பார்த்துக் கொண்டே நடந்து வந்தான்...

"சார், இத யார் கிட்டயும் சொல்லாதீங்க, அது வந்து" என்று இழுக்க, அவனோ கையை நீட்டியவன், "எனக்கும் கொஞ்சம் குடேன்" என்றான்...

"அட நீங்க நம்ம ஆளா?" என்று சிரித்தபடி கேட்டவளோ முறுக்கை நீட்ட, அவனும், "தேங்க்ஸ்" என்று சொல்லிக் கொண்டே அருகே அமர்ந்து சாப்பிட தொடங்கி விட்டான்...

அவளும், "அப்புறம் அங்கிள்?" என்று கேட்க, "அங்கிள் எல்லாம் இல்லை, கால் மீ ஷாருக்" என்றான்...

"என்ன ஷாருக் ஆஹ்? அப்போ நீங்க சதாசிவம் இல்லையா?" என்று கேட்டாள்.

தடுமாறிக் கொண்டே, "அது ஷார்ட் ஃபோர்ம்" என்றவனை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டே, "சரி கூப்பிடுறேன்" என்றாள்.

இருவரும் பேசி சிரித்து சாப்பிட்ட சமயம், அந்த இடத்தை ஒரு மணம் ஆக்கிரமித்தது.

ஷாருக்கானோ கஷ்டப்பட்டு சிரித்துக் கொண்டே, "சாரி நான் தான்" என்று ஆரம்பிக்க, அவளும், "சாரி" என்றாள்.

"அப்போ நீயும் பாம் போட்டியா?" என்று அவன் கேட்க, "அப்போ நீங்களும் போட்டீங்களா?" என்று அவள் கேட்க, இருவரும் கையடித்துக் கொண்டார்கள்...

காந்தினியோ, "உங்கள மெலிய சொல்லி யாரும் சொல்லலையா?" என்று கேட்க, "சொல்வாங்க தான், ஆனா சாப்பிடாம இருக்க முடியாதே" என்றான்...

"என்னை தான் டாச்சர் பண்ணுறாங்க, மாப்ள பார்க்கணுமாம்ன்னு... எனக்கு என்னை இப்படியே ஓகே பண்ணுற மாப்பிளை தான் வேணும்" என்றாள் சிணுங்களாக...

"உன் மாமாவை கட்டிக்க ஆசைப்பட்ட தானே" என்று ஷாருக்கான் கேட்க, "ஐயே, எனக்கு ஒன்னும் இஷ்டம் இல்லை... அவரை கட்டிக்கிட்டா இப்படி லாம் சாப்பிட முடியாது, அம்மா அப்பா தான் வீட்ல தொந்தரவு செய்து, நானும் பிடிச்ச போலவே நடிச்சிக்கிட்டேன்" என்றான்.

"ஐ அப்படியா?" என்று அவன் சந்தோஷமாக கேட்க, "ம்ம், உங்கள உங்க பொண்டாட்டி இப்படியே ஏத்துக்கிட்ட போல, எனக்கு ஒரு புருஷன் வர மாட்டானான்னு வெயிட்டிங்" என்றாள்.

"கண்டிப்பா வருவான்" என்றான் ஷாருக்கான் கண்களை சிமிட்டி.

ஒரே நாளில் இருவரும் பேசி சிரித்துக் கொள்ள, அங்கே வந்த முருகனோ, 'இவன் என்ன ஒரே நாளுல செட் ஆயிட்டான்?' என்று நினைத்துக் கொண்டே, அவனை நோக்கி கையசைத்தான்.

"வந்துட்டேன்" என்று சொல்லிக் கொண்டு எழுந்த ஷாருக்கானும், "நாளைக்கு பேசலாம்" என்று காந்தினியிடம் சொல்லி விட்டு கிளம்பி விட்டான்...

முருகனோ, "என்னடா இது?" என்று கேட்க, "ஃப்ரெண்ட்ஷிப் டா" என்று சொன்னான் அவன்...

"இது எங்க போயி முடிய போகுதோ" என்று அவன் புலம்பிக் கொண்டான்.

அவர்கள் நிலை இப்படி இருக்க, தினேஷுக்கோ பூங்கோடி மேல் கண்...

தூர இருந்து பார்த்தது போதும் என்று நினைத்தவன், அன்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டே பூமாலை கட்டிக் கொண்டு இருந்தவளை தேடி வந்தான்...

அங்கே பூக்களை கோர்த்தபடி இருந்த பூங்கோடியை பார்த்த தினேஷோ ரோஜாப்பூ ஒன்றை பறித்துக் கொண்டு அவளிடம் தயங்கி தயங்கி நீட்டினான்.

அவள் அவனை ஏறிட்டு பார்த்தபடி அதனை வாங்கி பூக்களுடன் பூக்களாக சேர்த்து மாலையாக கோர்த்தாள்.

அவனோ, "ஐயோ அது உங்களுக்கு" என்க, "எல்லாமே அன்னலட்சுமி அம்மாவுக்கு தான்... மானிடர்களுக்கு அல்ல" என்றாள்.

'இவ என்ன ஒரு மார்க்கமா பேசுறா?' என்று நினைத்தபடி, "காதலை பத்தி என்ன நினைக்கிறீங்க?" என்று கேட்டான்.

"காதல் உயிர்களிடத்தில் காட்டும் அன்பு" என்றாள்.

'இவ இப்படி தானா இல்ல பிராங்க் பண்ணுறாளான்னு தெர்லயே' என்று நினைத்தவன் அறியவில்லை மற்ற நேரங்களில் அவள் சாதாரணமாக இருந்தாலும் பூமாலை கட்டும் போது இப்படி ஆகி விடுவாள்.

"பூமாலை யாருக்கு ??" என்று அவனே ஆரம்பித்தான்.

"அன்னலட்சுமி அம்மாவுக்கு... இந்த பிரபஞ்சத்தை உருவாக்குன ஆத்தா" என்றாள்.

"அன்னலலஷ்மி அம்மாவா?? எங்கேயோ கேள்விப்பட்ட பேரா இருக்கே" என்றான்.

"அம்மாவின் புகழ் பிரபஞ்சம் எல்லாம் பரவி இருக்கு..." என்றவளோ அலைபேசியை எடுத்து, "இது தான் ஆத்தாவின் அவதாரம்" என்று காட்டினாள்.

அதனை பார்த்தவனோ, "அடிப்பாவி இவளா??" என்று ஆரம்பிக்க, "ம்ம் மரியாதை" என்றாள் அவனை முறைத்தபடி.

'இவளுக்கு மரியாதை ஒன்னு தான் கேடு.. நம்ம ஊர்ல கள்ள சாராயம் வித்த அன்னம் தானே இவ... இங்க ஆத்தா ஆயிட்டாளா? எங்கடா ஆளையே காணோம்னு நினச்சேன். இவளுக்கு பண்ணி கொடுத்த வேலைக்கு பணமும் கொடுக்கல... அத வாங்கிடணும்' என்று நினைத்தவனோ, "நானும் ஆத்தாவை தரிசிக்க வரலாமா? " என்று கேட்டான். அவளும், "தாராளமா" என்று சொல்லி இருந்தாள்

இப்படியே ஒரு வாரம் நகர்ந்து இருக்கும், தினமும் ஷாருக்கானும் காந்தினியும் வீட்டின் பின் புறம் சந்திக்கும் விஷயத்தை பழக்கமாக்கி கொண்டார்கள்...

ஷாரூக்கானுக்கோ ஓட்டை வாய்...

மூன்றாவது சந்திப்பிலேயே, "நான் கிழவன் லாம் இல்ல காந்தா" என்று சொல்லி விட்டான்...

அவளோ அதிர்ந்து விட, மனதில் உள்ள எல்லாவற்றையும் கொட்டியவனோ, "எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சு இருக்கு" என்றும் சொல்லி விட்டான்...

அவளுக்கு கொஞ்சம் தடுமாற்றமாக இருந்தாலும் தனக்கு ஏற்றவன், தன்னை அப்படியே ஏற்றுக் கொள்பவன், தன்னை மாற சொல்லி வற்புறுத்தாதவன்...

"யோசிச்சு சொல்றேன் ஷாருக்" என்று சொன்னவளோ, அடுத்த நாளே, "எனக்கும் உங்கள பிடிச்சு இருக்கு" என்று சொல்லி விட்டாள்.

இப்படி தனது காதலுக்கு உடனே சம்மதம் கிடைக்கும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.

பெரிதாக சந்தேகம் யாருக்கும் தோன்றாத போல காதலிக்கவும் ஆரம்பித்து விட்டார்கள்...

"அவர் ஆம்பிளையா? நம்பவே முடியல" என்று முருகனை பற்றி சொல்லியும் இருந்தாள்.

இப்படியான ஒரு நாள், ஷாருக்கானோ, "எத்தனை நாள் காந்தா லவ் பண்ணிட்டே இருக்கிறது? ஒரு கிஸ்" என்று கேட்டான்...

அவனை முறைத்தவள், "ஐயோ யாரும் பார்த்தா என்ன பண்ணுறது?" என்று கேட்டாள்.

"அங்கே ஒரு ஓரமாக வைக்கோல் போர் இருக்குல்ல, அங்கே போவோமா, மறைவா இருக்கும்" என்றான்...

அவளும், "எனக்கு பயம்" என்றாள்.

"ப்ளீஸ் ப்ளீஸ்" என்று கெஞ்சி கூத்தாடி அழைத்து சென்று விட்டான்...

ஆனால் முத்தத்துடன் நின்று விடவில்லை என்பது தான் வருத்தத்துக்கு உரிய விஷயம்...

இல்லை இல்லை ஷாருக்கானுக்கு சந்தோஷமான விஷயம் தான்.

சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குபவன், இப்போதெல்லாம் மும்முரமாக வேர்க் அவுட் செய்ய ஆரம்பித்து விட்டான்...

என்ன காந்தினி தான் உடற்பயிற்சி இயந்திரமாகி போனாள்.

சோம்பறி அவனை சுறுசுறுப்பாக்கிய பெருமை காந்தினியையே சேரும்...

இரவு நேரங்களில் கூட வைக்கோர் போர் பக்கம் ஒதுங்க ஆரம்பித்து விட்டார்கள்...

அவர்கள் காதல் மின்னல் வேகத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று இருக்க, தினேஷ் இப்போது தான் ஆத்தாவை தரிசிக்க டைம் டேபிள் போட்டு இருந்தான்...

அன்று வெள்ளிக்கிழமை, "இன்னைக்கு ஆத்தாவை தரிசிக்க போகலாம்" என்று சொன்னாள் பூங்கோடி...

அவனும், "வந்திடுறேன்" என்று சொல்லி விட்டு, ராகினியை தேடி தான் சென்றான்...

சந்தேகம் வந்து விட கூடாது என்று பெரிதாக தங்கள் விஷயங்களை அவர்கள் அங்கே பேசிக் கொள்வது இல்லை.

ஆனால் இதனை சொல்லி ஆக வேண்டுமே...

சமையலறைக்குள் தேடினான்...

காணவில்லை...

எல்லா பக்கமும் தேடி, கடைசியாக, நாய்க்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டு இருந்த ராகினியை கண்டு கொண்டான்...

"அக்கா எப்படி இருந்த நீ, இப்படி ஆயிட்டியே" என்று சொல்ல, ஏறிட்டு அவனை முறைத்தவள், "பொத்திட்டு மேட்டரை சொல்லு" என்றாள்.

"நம்ம அன்னம் தெரியுமா?" என்று கேட்டான்.

"கள்ள சாராய அன்னமா?" என்று கேட்க, "ம்ம் அவ தான்... அவளை காணோம்னு நம்ம தேடிட்டு இருந்தா இங்க பெரிய பொம்பிளை சாமியார் ஆயிட்டாள்" என்றான்.

"என்னடா சொல்ற? அது நல்ல பிசினஸ் ஆஹ்? அப்போ அத நம்ம ட்ரை பண்ணி இருக்கலாமே, இப்படி நாயோட நாயா சேர்ந்து படாத பாடு படுறேன்" என்று சலித்துக் கொண்டாள்.

"இப்போ யோசுச்சு என்ன பண்ணுறது? மிஸ் பண்ணிட்டோம், பூங்கோடி, அவ பக்தை தானாம், இன்னைக்கு அவ கூட போய், நமக்கு வர வேண்டிய பணத்தை வாங்கிட்டு வந்திடுறேன்" என்றான்.

"ஓஹோ, அந்த பூங்கோடிக்கு ஏன் புத்தி இப்படி போகுது? சரி சரி, வாங்கிட்டு வா" என்று அவள் அனுப்பி விட, அவனும் பூங்கோடியுடன் வேஷ்டி சட்டை சகிதம் கிளம்பி விட்டான்.

பூங்கொடி தனது காரில் தான் அவனை அழைத்து சென்றாள்.

சாமி கும்பிட சென்றதால் யாரும் சந்தேகப்பட்டு கேள்வி கேட்கவில்லை...

தினேஷோ, "ரொம்ப அழகா கார் ட்ரைவ் பண்ணுறீங்க" என்றான்.

"எல்லாம் ஆத்தாவோட மகிமை" என்றாள்.

'இவ திருந்த மாட்டா' என்று நினைத்துக் கொண்டே, அமர்ந்து இருக்க, அன்னலக்ஷ்மியின் மடமும் வந்தது...

வரிசையாக ஆத்தாவிடம் ஆசீர்வாதம் வாங்க பக்தர்கள் குவிந்து நின்று இருந்தார்கள்...

'பெரிய பிசினஸ் ஆஹ் தான் பில்ட் அப் பண்ணி இருக்கா' என்று நினைத்துக் கொண்டே இறங்கிக் கொண்டான்.

பூங்கோடியோ, "ஆத்தா" என்று கையை தலைக்கு மேல் கூப்பியபடி ஓடி செல்ல, 'ஐயோ இது குணமாகாத பைத்தியம் போல' என்று நினைத்தபடி கூட சென்றான்.

மெதுவாக எட்டிப் பார்த்தான்...

அன்னலக்ஷ்மியோ இருக்கையில் எழுந்து எழுந்து அமர்ந்து கொண்டு இருந்தாள்.

கடவுள் அவளுக்குள் புகுந்து விட்டாராம்...

அப்படி தான் சொல்லிக் கொள்ள, அதையும் நம்பிக் கொண்டே ஒரு கூட்டம் நின்று இருந்தது...

'உங்கள போல ஆட்களால் தான் டா இதுங்க பிழைச்சிட்டு இருக்குதுங்க' என்று மனதுக்குள் திட்டிய தினேஷ், பூங்கோடியை தேட, அவளோ நிலத்தில் விழுந்து உருண்டு கொண்டு இருந்தாள்.

'அடியேய் பைத்தியம்' என்று மனதிற்குள் திட்டிக் கொண்டே, மெதுவாக கூட்டத்தினரை விலக்கி உள்ளே சென்றான்.

அதுவரை விழிகளை விரித்து ஆடிக் கொண்டு இருந்த அன்னலக்ஷ்மிக்கு தினேஷைக் கண்டதுமே உடல் உண்மையாகவே உதற ஆரம்பித்து விட்டது.

"ஐயோ இவனா? இவன் எங்க இங்க?" என்று நினைத்துக் கொண்டே, அவனை தவிர எல்லா பக்கமும் பார்த்து உடலை உதற தொடங்கி விட்டாள்...

அவனோ மார்புக்கு குறுக்கே கையை கட்டிக் கொண்டு அவளையே பார்த்தப்படி நின்று இருக்க, "ஆத்தா கொஞ்ச நேரத்துல வர்றேன்" என்று சொல்லிக் கொண்டே, அப்படியே நழுவி செல்ல, "ஆத்தா, ஆத்தா" என்று சத்தம் ஒரு பக்கம்.

'எங்கடி ஓடுற, இதோ வர்றேன்' என்றபடி, அவனும் அப்படியே அவளை பின் தொடர்ந்து செல்ல அங்கே நின்றவர்கள் அவனை மறித்தார்கள்.

"அவனை விடுப்பா" என்று அன்னலக்ஷ்மியே சொல்லி விட்டாள்.

அவனுடன் சண்டைக்கு செல்வதை விட காலில் விழலாம் என்று நினைத்து விட்டாள் போலும்...

அவன் தான் விட மாட்டான் என்று அவளுக்கு தெரிந்து விட்டதே...

அதன் பிறகே அவனை அங்கே நின்றவர்கள் விட, அவனும், அவளது அறைக்குள் சென்றான்...

அடுத்த கணமே, அவன் காலில் அவள் விழுந்தே விட்டாள்.

"தினேஷு, கஷ்டப்பட்டு இந்த முட்டாள் ஜனங்களை ஏமாத்திட்டு இருக்கேன், உனக்கு ஒரு பங்கு தர்றேன், என்னை சிக்க வச்சுடாதே" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, "அட ச்சே, இதெல்லாம் நடிப்பா" என்றபடி உள்ளே வந்து பத்திரகாளியாக நின்று இருந்தாள் பூங்கோடி.


தினேஷோ, 'அட நமக்கு வேலை மிச்சம், அவளே பார்த்துட்டா' என்று குஷியாக நினைத்துக் கொண்டான்.
 
Last edited:

CRVS2797

Active member
வில்லாதி வில்லி...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 9)


அய்யோ...! அய்யோ....! இப்படி மொத்த பேருமே அயோக்கியனா இருக்காங்களே...? தான் திருடி பிறரை நம்பார்ன்னு இதைத் தான் சொல்றாங்களோ...?
ஒருவழியா, பூங்கொடி தெளிஞ்சிட்டான்னு தோணுது..
இனி தினேஷ்க்கு ஆள் கிடைச்சுட்டா.


இந்த ஷாருக், காந்தாகினியை தாலி கட்டறதுக்கு முன்னாடியே மாசமாக்காம விடமாட்டான் போலவே...? ஃபுல் டைமும் எரி வர்க்கவுட்ல பிசியா சுத்தறான் போலவே...?


புரிசன் பொண்டாட்டின்னு பொய் சொல்லி கூட்டி வந்தது சிம்மா & ராகினி... ஆனா, அவங்களைத் தவிர மத்த எல்லாரும் ஜோடியா செட்டாகி பிசியா இருக்கிறாங்க. அப்படியே இந்த முருகனுக்கும் ஒரு ஆளை செட் பண்ணிட்டா நல்லா இருக்கும்.


ஆனா, இந்த சிம்மா & ராகினி மட்டும் அதுக்கெல்லாம் வர்த் கிடையாதோ என்னவோ...?


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top