ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 6

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 6

அடுத்த நாள் அலுவலகம் சென்றவள், அவன் பக்கம் திரும்பவே இல்லை.

ஏதாவது அழைத்து பேசினால் கூட முகம் பாராமல் பதில் சொன்னாள்... ராது என்று உரிமையாக தான் அழைத்தான்... அழைக்க வேண்டாம் என்று சொன்னால் கேட்கவும் மாட்டான் என்று அவளும் எதுவும் சொல்லவில்லை...

அவன் அவளை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவன். அதன் பிறகு அவளை தொந்தரவு செய்யவில்லை...

இரு வாரங்கள் கடந்து இருக்கும், "ராது சைட் போகணும்" என்றான்.

அவளும் கைப்பையை எடுத்துக் கொண்டே ஜீப் அருகே வந்தாள்...

தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு... சுராஜ் அங்கே இல்லை, அவன் தான் டிரைவர் சீட்டில் அமர்ந்து இருந்தான்...

பின்னால் ஏறப் போனாள்.

"முன்னால ஏறு" என்றான்...

மறுக்க முடியாத நிலை...

மௌனமாக ஏறிக் கொண்டே, "சுராஜ்?" என்றாள் கேள்வியாக...

"லீவு" என்று சொல்லிக் கொண்டே வண்டியினை எடுத்தான்...

அன்று போல பெரிதாக பேசவில்லை அவளுடன்...

அவள் மிகவும் அசௌகரிகமாக இருக்கின்றாள் என்று புரிந்தது...

குறைவாகவே பேசினான்...

ஆனாலும் அடிக்கடி ரசித்துக் கொண்டான்...

கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரப் பயணம்...

பாட்டு மட்டுமே ஓடிக் கொண்டு இருந்தது...

பேசவில்லை இருவருமே...

அவர்கள் பார்க்க வேண்டிய இடமும் வந்து விட்டது...

நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டும்.

அவன் முதலில் இறங்கிக் கொண்டே, கண்ணில் சன்க்ளாசை போட்டுக் கொண்டே நடக்க, அவளும் அருகே நடந்து சென்றாள்...

விறு விறுவென தான் எப்போதுமே நடப்பான்...

இன்று அவளுக்காக மெதுவாக நடந்தான்...

ஒரு பெரிய பள்ளமான இடத்தில் இறங்க வேண்டும்...

அவன் இறங்கி விட்டான்...

அவளுக்கோ பயம்...

ஃபைலை நீட்டினாள்...

அவனும் அதனை வாங்கி முதுகில் சொருகிக் கொண்டே, "ஹெல்ப் வேணுமா?" என்று கையை நீட்டினான்...

இல்லை என்று தலையை ஆட்டினாள்.

"விழாம இறங்கு, கையை தர ஏலா எண்டு சொல்லிட்டு, மொத்தமா தூக்கிட்டு போக வச்சுடாதே" என்றான் மென் சிரிப்புடன்...

"நான் விழ மாட்டன்" என்று சொல்லிக் கொண்டே தட்டு தடுமாறி இறங்கி விட்டாள்...

அவனுடன் சேர்ந்து செய்த வேலையை பார்க்க, அவனும், "

வேர்க் ஓகே, நம்ம போற வழியில சாப்பிட்டுட்டு வெளிக்கிடுவோம்" என்று சொல்லிக் கொண்டே ஏறிச் செல்ல, அவளும் ஏறினாள்...

ஒரு கட்டத்துக்கு மேல் அவளால் ஏற முடியவில்லை... களைத்தது.

திரும்பிப் பார்த்தான்...

மூச்சு வாங்கிக் கொண்டே நின்று இருந்தாள்...

கையை நீட்டினான்...

"நான் ஏறுவன்" என்றான்.

"அப்பிடி என்ன பிடிவாதம் உனக்கு?" என்று கேட்டான்.

கொஞ்சம் அதிகப்படியாக செய்கின்றோமோ என்று அவளுக்கே தோன்றியது.

கையை நீட்டி அவன் கையை பற்றிக் கொண்டாள்...

அழுத்தமாக அவனும் அவள் கையை பற்றிக் கொள்ள, அவளுக்குள் ஒரு இனம் புரியாத உணர்வு...

அவன் உதவியுடன் ஏறி முடித்து விட்டாள்...

இருவரும் ஒன்றாக நடந்து கார் ஜீப்பில் ஏறிக் கொண்டார்கள்...

"கை ரொம்ப சொஃப்ட் ஆஹ் இருக்கு" என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்...

"இதுக்கு தான் நான் கை தர மாட்டன் எண்டு சொன்னனான்" என்று சொல்லிக் கொண்டே முகத்தை திருப்பிக் கொண்டாள்...

வண்டியும் நகர்ந்தது...

ஒரு மணி நேரம் பயணம் செய்து இருப்பார்கள்...

அவளுக்கோ உடலில் ஒரு மாற்றம்... அசௌகரிகமாக இருந்தது...

அலைபேசியை எடுத்து தேதிதியைப் பார்த்தாள்...

இரு நாட்களின் பின்னர் வர வேண்டிய மாதவிடாய் இன்றே வந்து விட்ட உணர்வு..

நெஞ்சே அடைத்து விட்டது...

கைப்பையினுள் சானிட்டரி நேப்கின்னை தேடினாள்...

காணவில்லை...

'எடுத்து வைக்க வேண்டியது தானே, மொக்கு மாதிரி இருந்து இருக்கா' என்று தனக்கு தானே மனதுக்குள் திட்டியவளுக்கு அப்படியே இருக்கவும் முடியாது. வண்டி வேறு மேடு பள்ளம் என்று பாய்ந்து பாய்ந்து ஓடியது...

வேறு வழி இல்லை...

"ஏதாவது வீட்ல நிப்பாட்டுறீங்களா? பாத்ரூம் போகணும்" என்றாள் வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்த பிரியந்தவிடம்...

"இன்னும் ஒரு மணித்தியலத்துல சாப்பாட்டு கடை வந்திடும்" என்றான்...

"அவசரம் எண்டு சொல்றன் எல்லா" என்றாள்...

அவளை புருவம் சுருக்கிப் பார்த்து விட்டு, அங்கே இருந்த வீட்டின் அருகே நிறுத்தினாள்.

சற்று ஏழ்மையான வீடு தான்...

அவளும் அவசரமாக இறங்கிக் கொள்ள, அவனோ, ஜீப்பில் இருந்து இறங்கிக் கொண்டே, அவளை தாண்டி முன்னே சென்றவன், அங்கே நின்ற மூதாட்டியிடம் சிங்களத்தில் பேச, அவரும், கழிப்பறையை காட்டினார்.

"அங்கே இருக்கு" என்றான் அவன்...

அவளும் அவசரமாக உள்ளே சென்றாள்...

நினைத்த போலவே மாதவிடாய் வந்து விட்டது...

என்ன செய்வது என்று தெரியாது...

அந்த வீட்டில் தான் உதவி கேட்க வேண்டும்...

தயங்கி தயங்கி வெளியே வந்தாள்.

அங்கே இடையில் கையை வைத்துக் கொண்டே, அந்த இடத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்த பிரியந்தவோ, "வெளிக்கிடுவமா?" என்று கேட்க, "என்ன அவசரம்?" என்று அவனுக்கு கடுப்பில் திட்டினாள்...

"அப்ப இங்க நித்திரை கொண்டு எழும்பி வரப் போறியா?" என்று கேட்டான்...

"கொஞ்சம் சும்மா இருக்கீங்களா?" என்று கேட்டுக் கொண்டே, அவனை கடந்து சென்று மூதாட்டி அருகே சென்றவளோ, "பேட் தியனவத" (பேட் இருக்கா?) என்று கேட்டாள். அவருக்கு புரிந்தால் தானே, "மொக்கத??" (என்ன?) என்று சத்தமாக கேட்டார்...

அவளும் தனக்கு தெரிந்த சிங்களத்தில் எல்லாம் விளக்கம் கொடுத்தாள்...

அவருக்கு புரியவே இல்லை...

தள்ளி நின்று பார்த்த பிரியந்தவுக்கு இருவரும் பேசிக் கொள்வதைப் பார்க்க சிரிப்பும் வந்து விட்டது, அடக்கிக் கொண்டே, "ராது" என்றபடி அவள் அருகே வர, "நீங்க போங்க நான் அவங்களோட கதைச்சிட்டு வாறன்" என்றாள்...

"நீ கதைக்கிறது அவங்களுக்கு விளங்கல, அவங்க கதைக்கிறது உனக்கு விளங்கல, பிறகு என்ன?" என்று கேட்டான்.

"அதுக்காக உங்கள்ட்ட கதைக்க ஏலுமா?" என்று கேட்டாள்...

"சரி நீ கதைச்சிட்டு வா, நான் வெளியே நிக்கிறேன்" என்று சொல்லி விட்டு வெளியேறி விட, அவளோ, அந்த மூதாட்டியுடன் மல்லுகட்ட ஆரம்பித்து விட்டாள்...

அவளோ, 'பேசாம அவர்ட்டயே கேட்டு இருக்கலாம், எனக்கு இதுல இன்னும் டயர்ட் ஆகுது' என்று நினைத்தவளோ, "ஆச்சி" என்று ஆரம்பிக்க, அவர் என்னென்னவோ பேசினார்...

'தெரியாம வந்து சிக்கிட்டேன்' என்று சொல்லிக் கொண்டு இருந்தவள் முன்னே சானிட்டரி நாப்கின் பக்கெட்டை நீட்டி இருந்தான் பிரியந்த...

அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது...

விழிகள் அதிர, அவனைப் பார்த்தவள், "உங்களுக்கு எப்பிடி தெரியும்?" என்று கேட்டாள்...

"அவங்களுக்கு தான் காது கேட்காது, எனக்கு நல்லாவே கேட்கும்... நீ கேட்டது நாலு வீட்டுக்கு கேட்டு இருக்கும், அவங்க வயசுக்கு அவங்கள்ட்ட இது இருக்குமா? நான் பக்கத்துக்கு வீட்ல கேட்டு வாங்கி வந்தேன்" என்றான்...

இதனை எல்லாம் அவள் யோசிக்கவே இல்லை...

"ஓம் எல்லா" என்று சங்கடத்துடன் சொன்னவள் அவனிடம் இருந்து அதனை வாங்கிக் கொண்டே கழிப்பறைக்குள் நுழைந்தாள்...

மீண்டும் திரும்பி வந்தவளோ, அங்கே நின்ற மூதாட்டியிடம் சொல்லி விட்டு புறப்பட்டு விட்டாள்...

அவனுடன் ஜீப்பில் ஏறிக் கொண்டதுமே, "தேங்க்ஸ்" என்றாள்...

"அவங்கள்ட்ட கேட்டதுக்கு என்னட்டையே கேட்டு இருக்கலாம்" என்றான்...

"உங்கள்ட்ட எப்பிடி கேக்கிறது?" என்று கேட்க, "வாயல தான்" என்றான்.

"எனக்கு அந்திரமா இருக்கும் எல்லா" என்றாள்...

"என்னட்ட அதெல்லாம் பார்க்கோணும் எண்டு இல்ல" என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்லிக் கொண்டே வண்டியை செலுத்த, அவனை அதிர்ந்து திரும்பிப் பார்த்தவளோ, "இப்பிடி கதைக்காதீங்க" என்றாள்...

அவனும், "பார்க்கலாம்" என்றான்.

அவனை முறைத்து விட்டு திரும்பிக் கொண்டாள்...

சற்று நேரத்தில் சாப்பிடும் இடம் வந்து விட்டது...

"என்ன சாப்பிடுறா?" என்று கேட்டான்...

"கோழி இறைச்சி ல கோழி தானே இருக்கும்?" என்று கேட்க, சத்தமாக சிரித்துக் கொண்டே, "ம்ம் கடைல சரியா தான் இருக்கும்" என்று சொன்னவனும் கோழிப் பார்சல் வாங்கிக் கொண்டு அங்கே அவளுடன் ஒரே மேசையில் அமர்ந்து சாப்பிட தொடங்கினான்.

"நீங்க எல்லாமே சாப்பிடுவீங்களா?" என்று கேட்டாள்...

அவனோ அவளை ஏறிட்டுப் பார்த்தவன், "நீ என்ன எல்லாம் சாப்பிட மாட்டா எண்டு சொல்லு, சாப்பிடாம இருக்கிறன்" என்றான்.

"எனக்காக எதுக்கு நீங்க இருக்கணும்?" என்று கேட்டபடி அவள் சாப்பிட, "பக்கத்துல வாற நேரம் உனக்கு தானே அரியண்டமா இருக்கும்" என்றான்...

விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள்...

அவன் பேசியதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்கின்ற தோரணையில் சாப்பிட்டுக் கொண்டு இருக்க, "இப்ப நீங்க என்ன சொன்னீங்க?" என்று கேட்டாள்.

"திரும்ப சொல்லோணுமா?" என்று கேட்டான்...

"இப்பிடி கதைக்கிறது பிழை இல்லையா?" என்று கேட்டாள்...

"எனக்கு இல்ல" என்று சொல்ல, "நமக்கு சரி வராது எண்டு தெரிஞ்சும் ஏன் இப்பிடி செய்யுறீங்க?" என்று கேட்டான்.

இதழ்களை பிதுக்கியவன், "நானும் தள்ளி போக தான் நினைக்கிறேன், ஆனா முடியல, உன்ன சரியா பிடிச்சு இருக்கு போல" என்றான்...

அவனை முறைத்தவள், "கொஞ்சம் நாம நடக்கிறத கதைக்கலாமே" என்றாள்...

அவனும் பெருமூச்சுடன், "ஒன்டே ஒண்டு கேக்கிறேன், என்னை உனக்கு பிடிக்குமா இல்லையா?" என்று கேட்டான்...

இல்லை என்று தலையாட்டினாள்...

"அப்ப எதுக்கு சைட் அடிக்கிறா?" என்று கேட்டான்...

அவளை அவதானித்து இருக்கின்றான் என்று புரிந்தது...

"நான் ஒண்டும் உங்களை சைட் அடிக்கல" என்றாள்.

"பொறு கியன்ன எப்பா" (பொய் சொல்லாதே) என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டான்...

அவளோ பெருமூச்சுடன், "ஹான்ட்சம் ஆஹ் இருக்கீங்க, அதான் சைட் அடிக்கிறேன், வடிவா இருந்தா எல்லாரையும் சைட் அடிப்பேன், அதுக்காக எல்லாரையும் கல்யாணம் கட்ட ஏலுமா?" என்று கேட்டாள்...

"ஆனா எனக்கு உன்னை பிடிச்சதால தான் நான் சைட் அடிக்கிறேன்" என்றான்.

"இது சரி வராது" என்றாள் சலிப்பாக...

"அப்ப இது தான் உன்ட முடிவா?" என்று அவள் விழிகளை பார்த்துக் கொண்டே அழுத்தமாக கேட்டான்...

ஆம் என்று தலையாட்டினாள்...

"சரி, இனி நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்" என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டான்.

"தேங்க்ஸ்" என்றபடி அவள் சாப்பிட, "ஓகே நங்கி" (ஒகே தங்கச்சி) என்றானே பார்க்கலாம்...

அவளுக்கோ சட்டென புரையேறியது...

தலையில் தட்டிக் கொண்டே, அவனை ஏறிட்டுப் பார்த்தவள், "என்னது? நங்கியா?" என்று கேட்டாள்...

நீரை அவளுக்கு நீட்டிக் கொண்டே, "அப்ப தான் கொஞ்சம் விலகி இருக்கலாம், நான் கதைச்சது எல்லாம் மறந்துடு" என்று சொன்னான்.

நீரை அவள் வாங்கிக் குடித்துக் கொண்டே, "ம்ம்" என்று நான்கு பக்கமும் தலையாட்ட, அவனோ அடக்கப்பட்ட சிரிப்புடன் சாப்பிட்டு முடித்தவன், பணத்தை கொடுத்து விட்டு செல்ல, "என்ட சாப்பாட்டு காசு" என்று பணத்தை அவனிடம் நீட்டினாள்...

"தங்கச்சிட்ட எல்லாம் காசு வாங்குறது இல்ல" என்று சொல்லிக் கொண்டே வண்டியில் ஏறிக் கொள்ள, அவளுக்கோ அவன் அப்படி அழைப்பது அசௌகரிகமாக இருந்தது...

'உண்மையாவே தங்கச்சியா நினைக்க தொடங்கிட்டரோ' என்று நினைத்துக் கொண்டவளுக்கு ஒரு வித அழுத்தம்...

அவளுக்கும் அவனை பிடித்து இருக்கின்றது தானே... ஆண்களை பின்னால் சுற்ற வைத்து ரசிப்பதில் பெண்களுக்கு அலாதி இன்பம் ஆயிற்றே...

அவள் மட்டும் என்ன விதிவிலக்கா...

சற்று நேரம் அமைதியாகவே இருந்தவள், "நீங்க இதுக்கு முதல் யாரையாவது லவ் பண்ணி இருக்கீங்களா?" என்று கேட்டாள்...

"ஓம் உன்னை தான் பண்ணுனேன்" என்றான் அவளைப் பார்க்காமலே...

தாடி மீசைக்கு நடுவே சிரிப்பும் ஒளிந்து கொண்டது...

"ஐயோ எனக்கு முதல்?" என்று கேட்டாள்...

"யாரும் பிடிக்கிற அளவுக்கு இருக்கல" என்று சொன்னான்...

"பொய்" என்றாள்...

"உண்மையா தான் சொல்றேன், உன்னை லவ் பண்ணுறன் எண்டு எல்லாம் சொல்ல ஏலாது" என்று அவன் சொல்ல, "அப்ப?" என்று அவள் கேட்க, "கல்யாணம் கட்ட விரும்புனேன்" என்றான்...

அந்த வார்த்தை என்னவோ போல உணர்வை கொடுக்க, "உங்கட அப்பா விடுவாரா?" என்று கேட்டாள்...

"அது தான் இப்ப ஒண்டும் இல்லையே, நீ என்ட தங்கச்சி மாதிரி" என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டே...

அவளுக்கு அவன் தங்கை என்று சொல்வது பிடிக்கவே இல்லை.

"தங்கச்சி எண்டு சொல்லாதீங்க" என்று சொல்லிக் கொண்டே முகத்தை திருப்பிக் கொண்டாள்...

"நீ தானே வேணாம் எண்டு சொல்ற" என்று சொல்லிக் கொண்டே வண்டியை ஓட்ட, "அதுக்காக தங்கச்சி எண்டா சொல்றது?" என்று கேட்டாள்.

"அப்ப தானே விலகி இருக்கலாம்" என்றான் அவன்...

அவனை மேலிருந்து கீழ் பார்த்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்...

அவர்கள் கொழும்பினுள் நுழையவே இரவாகி விட்டது...

"வீட்ல விட்டுட்டு போறேன், ஒஃபிஸ் போனா லேட் ஆயிடும்" என்றான்...

அவளும், "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே என்ன நினைத்தாளோ தெரியவில்லை, "உண்மையாவே என்னை பிடிக்குமா?" என்று கேட்டாள்...

அவனும், "ஓம் என்ட தங்கச்சியை பிடிக்காம இருக்குமா?" என்று கேட்டான்...

'நாசமா போச்சு' என்று வாய்க்குள் முணுமுணுத்தவளோ, "நான் ஒண்டும் உங்கட தங்கச்சி இல்ல" என்றாள்...

"அப்ப?" என்று கேட்டான் அவன்...

"கூட வேலை செய்யுற பிள்ள அவ்வளவு தான்" என்றாள்...

"அவ்வளவு தானா?" என்று கேட்டான் கரகரத்த குரலில்...

இதற்கு மேல் மறைக்க முடியாது...

"எனக்கு பயமா இருக்கு" என்றாள்...

"என்ன பயம்?" என்று கேட்டான்...

"என்ட வீட்லயும் சரி எண்டு சொல்ல மாட்டாங்க, உங்கட வீட்லயும் சரி எண்டு சொல்ல மாட்டாங்க" என்றாள்...

அவள் வீடும் வந்து விட்டது. வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு அவளை ஆழ்ந்து பார்த்தவன், "உனக்கு என்ன பிடிக்குமா இல்லையா?" என்று அவள் விழிகளை பார்த்துக் கொண்டே கேட்டான்...

அவள் விழிகள் கலங்கி விட்டன...

"பிடிக்கும்" என்றாள் தட்டு தடுமாறி...

"ஆனா லவ் வேணாம்... அப்பிடி தானே" என்று கேட்டான்... ஆம் என்று தலையாட்டினாள்...

"சரி போ" என்றான்...

"ஏதாவது சொல்லுங்க" என்றாள்...

"என்ன சொல்லணும்?" என்று கேட்டான்...

"இப்ப என்ன செய்யுறது?" என்று அவள் கேட்க, "நீ தானே என்ன செய்யணும் எண்டு சொல்லிட்டா, பிறகு என்ன?" என்று கேட்டான்.

"அப்ப அப்படியே விட்ருவீங்களா?" என்று கேட்டாள்...

முகத்தை இரு கைகளாலும் அழுந்த தேய்த்தவனோ, அவளை சலிப்பாக பார்த்துக் கொண்டே, "இங்க பாரு ராது, எனக்கு நீ வேணும்... கல்யாணம் கட்டி கூடவே இருக்க ஆசைப்படுறேன்... பிரச்சனை வரும் தான்... எல்லாம் சமாளிக்கலாம் எண்டு நம்பிக்கை இருக்கு... ஆனா நீ இவ்வளவு பயப்படுற நேரம் உன்னை கட்டாயப்படுத்த எனக்கு விருப்பம் இல்லை." என்றான்...

நிதானமாக பேசினான்...

"ஆனா எனக்கு குழப்பமா இருக்கே" என்றாள்...

"என்ன குழப்பம்?" என்று கேட்டான்...

"நீங்க வேண்டும் எண்டு தோணுது, அதே நேரம் பயமாவும் இருக்கு" என்றாள்...

"அதுக்கு நான் இப்ப என்ன செய்யலாம்?" என்று கேட்டான்...

"நீங்க ஒண்டும் செய்ய வேணாம், நான் வெளிக்கிடுறேன்" என்று சொல்லிக் கொண்டே, அவள் இறங்கப் போக, அவளை வெறித்துப் பார்த்தவனோ, "மகே லஸ்ஸன யக்ஷணி" என்றான் இதழ்களுக்குள்...

"இப்ப என்ன சொன்னீங்க?" என்று கேட்டாள்...

"ஆஹ் என்ட வடிவான ராட்சஷி எண்டு சொன்னன்" என்றான்...

"நானா?" என்று அவள் கேட்க, அவனோ, "வேற யாரு இங்க இருக்காங்களா?" என்று மென் சிரிப்புடன் கேட்க, அவள் இதழ்களுக்குள்ளும் மென் சிரிப்பு குடி கொள்ள, "குட் நைட்" என்றாள்...

"குட் நைட்" என்று அவனும் கண் சிமிட்டி சொல்லி, அவளை வாரி சுருட்டிக் கொள்ள, அவளோ ஒரு வெட்க புன்னகையுடன் இறங்கிக் கொண்டாள்...
 

CRVS2797

Member
மகே காதலே...!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 6)


இந்த ராது ... சரியான கிறுக்குப் புடிச்சவ. ரெட்டை நாக்குக்காரி !
முன்னால போனா கடிக்குறா, பின்னாடி வந்தா உதைக்குறா.
இப்படியா இருப்பாங்க,..?
தனக்கு வேணுமா...? வேணாமா ?ங்கறதுலயே இத்தனை குழப்பம்ன்னா...
இவளை கட்டிக்கிட்டு அந்த பிரியந்த எங்க காதல்ல ஜெயிக்கப் போறான்...?
ஸ்டெடி மனசே கிடையாது..
ரொம்ப கஷ்டம் அவன் பாடு.
பாதியிலயே கழட்டி விட்டுடறதோட ஆம்பிளை பாவத்தையும் சேர்த்து
கட்டிக்கப் போறா...!
😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top