அத்தியாயம் 36
அன்று முழுதும் அவனை சீண்டிக் கொண்டே இருந்தாள் பெண்ணவள்...
ஹாலுக்குள் மகனுடன் அமர்ந்து கார்ட்டூன் பார்த்துக் கொண்டு இருந்தவனோ அந்த வழியால் சென்ற ஆதிரையாழை ஏறிட்டுப் பார்க்க, அவளோ, அவனை பார்த்து ஒற்றைக் கண்ணை சிமிட்டி, இதழ் குவித்து முத்தமிடுவது போல சைகை செய்து விட்டுச் சென்றாள்.
அவனோ அவளை முறைத்துப் பார்த்து விட்டு ஆழ்ந்த மூச்சை எடுத்தபடி மீண்டும் தொலைக்காட்சியைப் பார்த்தான்.
இரவு உணவு பரிமாறுகிறேன் என்று சொல்லிக் கொண்டே, அவள் இடையை அவன் முகத்துக்கு அருகே அடிக்கடி கொண்டுச் சென்று அவனை இம்சித்தாள்...
பொறுமை இழந்து விட்டான் அவன்...
அறைக்குள் நுழைந்ததுமே ரணதீரன் சென்று கட்டிலில் படுத்து தூங்கி விட, அவன் அருகே படுத்து இருந்தாள் ஆதிரையாழ்...
சர்வஜித் இன்னுமே லேப்டாப்புடன் அமர்ந்து இருக்க, அவனை இமைக்காமல் ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் பெண்ணவள்...
சர்வஜித்தும் சட்டென்று அவளை திரும்பிப் பார்த்தபடி, "என்னடி? டெம்ப்ட் பண்ணுறியா?" என்று கேட்டான்...
"இல்லையே" என்றாள் அவள் அடக்கப்பட்ட சிரிப்புடன்...
அவளை முறைத்துக் கொண்டே லேப்டாப்பை மூடி விட்டு எழுந்தவன், குளியலறைக்குள் சென்று வந்தான்... அவள் சொன்ன போல ட்ரிம் செய்து இருந்தான்...
அவளோ அவனை ரசனையாக பார்த்துக் கொண்டே, "தேங்க்ஸ்" என்று சொல்ல, "உனக்காக ஒன்னும் பண்ணல" என்று சொல்லிக் கொண்டே,கழுத்தில் கையை வைத்து நெட்டி முறித்துக் கொண்டே, கட்டிலில் வந்து படுத்தான்...
அவளை பார்த்தபடி தான் படுத்தான்...
அவன் விழிகளோ தன்னையும் மீறி அவள் இடையில் பதிய, ஒரு பெருமூச்சுடன் அவள் விழிகளைப் பார்த்தவன், "இனி சாரி கட்டாதே... சுடிதார் போடு" என்றான்.
அவன் சொல்ல வருவது புரிந்தாலும், "ஏன்?" என்றாள் வேண்டுமென்றே...
"ஏன்னு உனக்கு தெரியாதா?" என்றான்...
"இல்லையே" என்றாள் இதழ்களை பிதுக்கி...
"புடவைல பார்க்கும் போது என்ன என்னவோ தோணுது... போதுமா?" என்று கேட்டான்...
அவளும் இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே, "நாளைக்கு நீங்க ஃப்ரீ தானே" என்று கேட்க, அவனுக்கு அடுத்த நாள் பெரிதாக வேலை இல்லை என்றாலும், "இல்ல பிசி" என்றான் வேண்டுமென்றே...
"சரி நான் அத நாளைக்கே பார்த்துக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டாள், மென் புன்னகையுடன் கண்களை மூடிக் கொண்டே, 'ராட்சஷி, நாளைக்கு என்ன வச்சு செய்ய போறா' என்று நினைத்துக் கொண்டான்...
அடுத்த நாள் ரணதீரன் நர்சரி செல்லும் வரை தான் சர்வஜித்துக்கு நிம்மதி...
ரணதீரனை நர்சரியில் விட்ட பின்னர், வீட்டுக்கு வந்தவனோ அணிந்து இருந்த ஷேர்ட்டை கழட்டி ஹேங்கேரில் போட்டு விட்டு, டீ ஷேர்ட்டை எடுத்த நேரம், குளியலறையை திறந்துக் கொண்டே வெளியே வந்தாள் ஆதிரையாழ்...
மார்பில் பூந்தூவலை...
'ஆரம்பிச்சுட்டா' என்று நினைத்தவனோ அவளை பார்க்காமல் டீ ஷேர்ட்டை அணிய முற்பட, அவன் பின்னால் இருந்து அவனை இறுக அணைத்து இருந்தாள் பெண்ணவள்...
அவள் கரமோ அவன் படிக்கட்டு தேகத்தை வருட, கண்களை மூடி திறந்துக் கொண்டே, கையில் இருந்த டீ ஷேர்ட்டை மீண்டும் ஹேங்கரில் போட்டு விட்டு, அவள் இரு கைகளையும் பிடித்து விலக்கிக் கொண்டே, அவளை திரும்பிப் பார்த்தான்...
"என்னடி இப்போ?" என்று கேட்டான்...
அவளோ கண்களால் கட்டிலைக் காட்ட, அவனோ ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே, கண்களை மூடி திறந்தவன், "ஓபன் ஆஹ் சொல்றேன், என்னால முடியல, நீ என் பக்கத்துல வர்றத விட இது எனக்கு பெரிய தண்டனையா இருக்கு... எனக்கு தண்டனை கொடுக்கணும்னு ஆசைப்படுற தானே... சரி வா" என்று சொல்லிக் கொண்டே, கட்டிலை நோக்கி நகர போக, அவன் கையை பிடித்து இருந்தாள் ஆதிரையாழ்...
அவனும் அவளை திரும்பி புருவம் சுருக்கி பார்த்தவன், "இப்போ என்ன?" என்று கேட்டான்.
அவன் கையை அப்படியே தூக்கி தனது கன்னத்தில் வைக்க, அவனோ அவளை விசித்திரமாக பார்த்தான்...
அப்படியே அவன் கையை பிடித்து கீழிறக்கி, அவள் கழுத்தில் பதித்தாள்...
அவன் விழிகள் ஆச்சரியமாக விரிய, அவன் விழிகளைப் பார்த்தவளோ, "உங்களுக்கு என்ன தோணுதோ பண்ணுங்க" என்று முடிக்கவில்லை, அடுத்த கணமே, அவள் இடையை பிடித்து அவளை கட்டிலில் தூக்கி போட்டு இருந்தான்...
அவளுக்கோ கன்னங்கள் வெட்கத்தில் சிவந்து போக, அவன் கரமோ, அவள் பூந்தூவலையில் படிந்து அதற்கு விடுதலை அளிக்க, அவள் வெட்கத்தில் கண்களை மூடிக் கொண்டாள்.
அவனுக்கோ வேகம்...
இத்தனை நாட்கள் அடக்கி இருந்த மோகத்தின் வேகம்...
அவள் இதழ்களில் முத்தமிட்டு சரசமாட ஆரம்பித்து இருந்தான்...
ஆசை தீர அவளை முத்தமிட்டு, வருடி, அவளுக்குள் மூழ்கி எழுந்தான்...
அவளோ அவன் அழுத்தமான கை தடங்களையும் இதழ் தடங்களையும் தாங்க முடியாமல், வலியும் உணர்வும் சேர்ந்த குரலில், "ப்ளீஸ் மெதுவா" என்றாள்.
அவனுக்கு தன்னை தானே கட்டுப்படுத்த முடியவில்லை...
கையில் கிடைத்தவளை வேட்டையாடி விட்டே விலகி படுத்தான்...
இருவருக்கும் எங்கோ சென்று வந்த உணர்வு...
கைகளை பற்றி இருந்தார்கள்...
விட்டத்தைப் பார்த்து இருந்தார்கள்...
தான் பற்றி இருந்த அவள் கையை அப்படியே தூக்கி அதில் இதழ் பதித்துக் கொண்டே, அவளை திரும்பிப் பார்த்தவன், "தேங்க்ஸ் டி" என்றான்...
அவளோ கழுத்தில் இருந்த அவன் பற்தடத்தை வருடிக் கொண்டே, "என்ன பண்ணி இருக்கீங்க?" என்று கேட்க, அவள் பக்கம் சரிந்து படுத்து அதனை ஆராய்ந்தவன், "ரொம்ப ஆழமா பல் பதிஞ்சு இருக்குல்ல, டாக்டர் கிட்ட போகலாமா?" என்று கேட்டான்...
அவளோ, "அங்க போய் என்ன சொல்றது?" என்று அவள் அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க, "இங்க இதெல்லாம் சகஜம்... லவ் பைட்ஸ்னு சொல்வாங்க" என்று சொல்லிக் கொண்டே, அவள் தாடையை பிடித்து அவள் இதழ்களில் இதழ் பதித்தான்...
நீண்ட நாட்கள் கழித்து இருவருக்குமே ஒரு பரவச உணர்வு...
சர்வஜித்துக்கு போட்டு இருந்த கை விலங்கை அவள் கழட்டி விட்ட பின்னர் அவனைக் கேட்க வேண்டுமா?
பார்க்கும் போதெல்லாம் சில்மிஷம் செய்ய ஆரம்பித்து விட்டான். அடுத்த அடுத்த நாட்களும் இப்படியே நகர்ந்தன...
ரணதீரனை நர்சரியில் விட்டு வந்தவனோ, ஆதிரையாழை தேடி சமையலறைக்குள் சென்றான்...
சமைத்துக் கொண்டு இருந்தாள் பெண்ணவள்...
அவள் பின்னால் சென்று, அவள் இடையை அணைத்து கழுத்தில் முகம் புதைத்துக் கொள்ள, அவளோ, "ஐயோ யாராவது பார்த்துட போறாங்க" என்று சொல்லிக் கொண்டே திரும்பியவளது இதழில் இதழ் பதித்து இருந்தான்...
அவள் விழிகளோ அதிர்ந்து விரிந்துக் கொள்ள, அவன் மார்பில் கையை வைத்து தள்ளியவள், "யாரும் பார்த்துட போறாங்க" என்றாள்...
அவனோ அவளை விழுங்கி விடுவது போல பார்த்துக் கொண்டே, "ரூமுக்குள்ள வா" என்று தலையை கோதிக் கொண்டே சொன்னவன், விறு விறுவென செல்ல, அவளோ கன்னங்கள் சிவக்க, அவன் பாதசுவட்டை பின் தொடர்ந்துச் சென்றாள்.
அவர்கள் வாழ்க்கையும் சீராக நகர ஆரம்பித்த கணம் அது...
ஒரு நாள் பாடசாலையில் இருந்து வந்த ரணதீரனோ, "அம்மா அடுத்த வாரம் வேலண்டைன்ஸ் டே கொண்டாட போறாங்களாம், ரெட் கலர் ட்ரெஸ் பண்ணி வரட்டுமாம், கார்ட் கொண்டு வரட்டுமாம்..." என்றான்...
ஆதிரையாழோ, "என்னது வாலெண்டைன்ஸ் டே ஆஹ்?" என்று அதிர, சர்வஜித்தோ சிரித்துக் கொண்டே, "ம்ம்... மெயில் பண்ணி இருக்காங்க, இன்னைக்கு ஈவினிங் ஷாப்பிங் போகலாம்" என்றான்...
அதனைக் கேட்ட ஆதிரையாழ், "இந்த வயசுல வேலண்டைன்ஸ் டே ஆஹ்? இது என்ன அநியாயமா இருக்கு?" என்று சொல்ல, மருதநாயகமோ சத்தமாக சிரித்துக் கொண்டே, "அது இங்க இப்படி தான் மா, அன்பை பகிர்ந்துக்க சொல்லி கொடுப்பாங்க, உன் புருஷனும் அந்த காலத்துல கொண்டாடுனான்" என்று சொல்ல, ஆதிரையாழோ, "நீங்களும் யாருக்கும் கார்ட் கொடுத்து இருக்கீங்களா?" என்று கேட்க, அவனோ இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே, "ஹா ஹா அதுக்கு வாய்ப்பே இல்ல" என்றான்...
மருதநாயகமோ, "க்கும் உன் புருஷன் கொடுத்துட்டாலும், கார்ட் கொடுத்து விட்டா குப்பை தொட்டிக்குள்ள போட்டுட்டு தான் கிளாஸ் ரூமுக்குள்ள போவான், அவனுக்கு வர்ற கார்ட் எல்லாமும் அங்க தான் போகும்" என்று சொன்னார் சிரித்துக் கொண்டே...
ஆதிரையாழோ வாயில் கையை வைத்துக் கொண்டே, "அவ்ளோ மோசமானவரா நீங்க? உங்களுக்கு கார்ட் கொடுத்தவங்க எவ்ளோ கவலைப்பட்டு இருப்பாங்க" என்று கேட்க, சர்வஜித்தோ, "அது அப்போடி" என்று கண் சிமிட்டி சொன்னான்...
நாட்கள் நகர்ந்து காதலர் தினமும் வந்து சேர்ந்தது...
ரணதீரனுக்கு கார்ட் வாங்கி கொடுத்து பாடசாலைக்கு அனுப்பி விட்டு வீட்டுக்கு வந்தான் சர்வஜித்...
ஆதிரையாழோ குளித்து விட்டு வந்து தலையை துவட்டிக் கொண்டு இருந்த சமயம் அது...
அவளுக்கு பின்னே வந்து நின்றான் சர்வஜித்...
அவளோ அவன் விம்பத்தை கண்ணாடியில் பார்த்துக் கொண்டே ஒற்றைப் புருவம் உயர்த்தி என்ன என்கின்ற தோரணையில் கேட்க, அவனோ அவள் பின்னால் இருந்து அணைத்தபடி, முதுகில் சொருகி வைத்து இருந்த கார்டை எடுத்தவன், "இதுவரைக்கும் யாருக்கும் கார்ட் கொடுத்தது இல்ல, உனக்கு தான் முதல் தடவையா கொடுக்குறேன்... பீ மை வேலண்டைன்" என்று அவள் கன்னத்தில் கன்னம் உரசிக் கொண்டே சொன்னான்.
அவளோ, பக்கவாட்டாக திரும்பி அவன் கன்னத்தில் முத்தம் பதித்துக் கொண்டே, அவன் கொடுத்த கார்டை வாங்கி திறந்து பார்த்தாள்...
ஆங்கிலத்தில் கவிதை இருந்தது...
"இது என்ன இங்கிலிஷ்ல இருக்கு?" என்று கேட்க, "தமிழ்ல சொல்லவா?" என்று கேட்டான்...
அவளை தன்னை நோக்கி திருப்பியவன் அவள் விழிகளை பார்த்துக் கொண்டே, "என் காதல் புத்தகத்தின் முதல் அத்தியாயமும் நீயே, இறுதி அத்தியாயமும் நீயே" என்று சொல்ல, அவள் விழிகளை உயர்த்தி அவனை மெச்சுதலாக பார்த்தவள், "நல்லா இருக்கே" என்றாள்.
அவனும் இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே, பாக்கெட்டில் இருந்து வைர மோதிரத்தை எடுத்து, அவள் கையை பற்றி அதில் போட்டு விட்டவன், அவள் கையில் முத்தம் பதித்து விட்டு, "உண்மையாவே லவ் அப்படினா என்னனு இந்த வயசுல தான் உணருறேன்... டீனேஜ் போல ஃபீல் பண்ணுறேன்... எல்லாத்துக்கும் நீ தான் காரணம் ஆதிரா" என்று சொல்ல, அவளோ அவனை இறுக்க கட்டி அணைத்து விடுவித்தவள், மேசையில் இருந்த கார்டை எடுத்து நீட்டினாள்...
அவனோ மென் சிரிப்புடன் அவளை பார்த்துக் கொண்டே, கார்டை பிரிக்க, அதற்குள் ஒரு கடித உறை...
கார்டில், "என் மனதை கொள்ளை கொண்டவருக்கு என்னால் கொடுக்க முடிந்த பெறுமதியான காதல் பரிசு" என்று இருந்தது...
"அப்படி என்னடி வாங்கி இருக்க?" என்று ஆர்வத்துடன் திறந்தான்...
ப்ரெக்னன்சி ஸ்டிக்...
இரு சிவப்பு கோடுகளுடன்...
அதனைக் கண்டு விழி விரித்தவனோ, "நிஜமாவா?" என்று கேட்க, "ம்ம்" என்று கலங்கிய கண்களும் புன்னகையுமாக சொல்ல, அவளை இழுத்து அணைத்து இதழில் இதழ் பதித்தவனோ, "இட்ஸ் எ ப்ரீஷியஸ் கிஃப்ட்" என்றான்...
அடுத்த கணமே, அவளை அழைத்துக் கொண்டே ஹாலுக்குள் சென்றவன், மருதநாயகத்திடம் விடயத்தை சொல்ல, அவருக்கோ சந்தோஷம்...
"ரொம்ப சந்தோஷம்பா" என்று சொல்லிக் கொண்டே, கண்களில் கசிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டார்...
அன்று பாடசாலை விட்டு வந்த ரணதீரனிடம், "விளையாட பாப்பா கேட்ட தானே... அடுத்த வருஷம் வந்திடும், இப்போ அம்மாவோட வயித்துல இருக்கு" என்று சொல்ல, அவனுக்கு தலை கால் புரியவில்லை...
"எஸ் எஸ்" என்று வானுக்கும் பூமிக்குள் குதிக்க ஆரம்பிக்க, அவன் சுட்டித் தனத்தை ரசித்துக் கொண்டே, தன்னவன் மார்பில் சாய்ந்துக் கொண்டாள் ஆதிரையாழ்...
சர்வஜித்தின் ஆதிரையாழ்...
அவனோ அவள் இடையை பற்றி தன்னுடன் அணைத்துக் கொள்ள, அவர்களை கடைக்கண்ணால் பார்த்த மருதநாயகத்துக்கோ இதழில் திருப்தியான சிரிப்பு...
அவர் நினைத்ததை சாதித்து விட்டார்... காதல் என்றால் என்ன என்று ஆதிரையாழ் மூலம் அவனுக்கு கற்றும் கொடுத்து விட்டார்...