அத்தியாயம் 34
ரணதீரனுக்கு எல்லாமே புதிதாக இருந்தது...
பிடித்தும் இருந்தது...
விமானநிலையம் தொடக்கம் எல்லாவற்றையும் பிரமிப்பாக பார்த்தான்...
நிறைய கேள்விகள் கேட்டான்...
நிறைய தெரிந்துக் கொண்டான்...
அவனை ஏற்ற உயர் ரக பென்ஸ் கார் வந்து நிற்க, "அப்பா இது நம்ம காரா? வாவ்... சூப்பரா இருக்குல்ல... படத்துல பார்த்து ஆசைப்பட்டு இருக்கேன்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே ஏற, "இத விட சூப்பர் கார் ஒண்ணு வீட்ல இருக்கு... லம்போர்கினி..." என்றான்...
அதனைக் கேட்டு பூரித்து போனவனோ, "அது இத விட நல்லா இருக்குமா?" என்று கேட்டுக் கொண்டே, அங்கிருக்கும் பாதைகளை பார்த்துக் கொண்டு வந்தான்...
"எல்லாம் நல்லா தான் இருக்கு... ஆனா குளிரா இருக்கு" என்று ரணதீரன் சலித்துக் கொள்ள, "என்னடா இப்போவே இப்படி சொல்ற... வின்டெருக்கு பாரு" என்று மருதநாயகம் சொல்ல, அவனும், "பார்க்கலாம் தாத்தா பார்க்கலாம்" என்று சொல்லிக் கொண்டான்...
பிரம்மாண்ட வீடு...
காரில் இருந்து இறங்கியதுமே, "நம்ம வீடா இது?" என்று கேட்டான் ரணதீரன்...
"ஆமா" என்று சொல்லிக் கொண்டே, அவனை தூக்கிக் கொண்டு சர்வஜித் உள்ளேச் செல்ல, அவனை தொடர்ந்து மருதநாயகமும் ஆதிரையாழும் சென்றார்கள்...
மருதநாயகத்துக்கு தனி அறையை ஏற்பாடு செய்து இருந்தவன், தனக்கும், ஆதிரையாழுக்கு ரணதீரனுக்கும் ஒரே அறையை ஏற்பாடு செய்து இருந்தான்...
ஆதிரையாழுக்கு மறுக்கவும் முடியவில்லை... மறுக்கவும் தோன்றவில்லை...
களைப்பில் எல்லாரும் குளித்து விட்டு தூங்கி விட்டார்கள்...
அடுத்த நாள் காலையில் ரணதீரன் எழுந்த நேரம் சர்வஜித் அருகே இருந்த மேசையில் லேப்டாப்புடன் அமர்ந்து இருந்தான்...
"குட் மார்னிங் அப்பா" என்று சொல்லிக் கொண்டே, அவன் மடியில் வந்து ரணதீரன் அமர்ந்துக் கொள்ள, "குட் மார்னிங் டா" என்று சொல்லிக் கொண்டே, அவனை மடியில் வைத்தபடி வேலையை பார்க்க தொடங்கி விட்டான்.
இதே சமயம், ஹாலில் அமர்ந்து டி வி பார்த்துக் கொண்டு இருந்த மருதநாயகத்துக்கு காஃபியை கொடுத்து விட்டு, சர்வஜித்துக்கு காஃபியும் ரணதீரனுக்கு பாலும் கொடுக்க அறைக்குள் சென்றாள் ஆதிரையாழ்...
சர்வஜித்தோ, தன் முன்னே காஃபி கப்பை நீட்டியவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டே, காஃபியை எடுக்க, அவளோ மென் சிரிப்புடன், பாலை ரணதீரனிடம் நீட்டியவள், "இங்க வந்து இருந்து குடிடா, அப்பாவை வேலை பார்க்க விடு" என்றாள்.
"தட்ஸ் ஓகே, இருக்கட்டும்" என்றான் சர்வஜித்...
அவளும், "ம்ம்" என்று சொல்லி விட்டு வெளியேறி விட்டாள்.
அன்றே மருதநாயகத்துக்கு டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் போட்டு ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றான் சர்வஜித்...
மருத்துவரும் அவரை பரிசோதித்து விட்டு, அவருக்கான மாத்திரைகளை வழங்கி இருந்தார்...
அதனை தொடர்ந்து ரணதீரனை பாடசாலையில் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டவன், தனியாகவே எல்லாமே முடித்து இருந்தான்...
அவனுக்கு தான் அந்த நாட்டின் அடி முதல் நுனி வரை தெரியும் அல்லவா?
ரணதீரனையும் பாடசாலையில் சேர்த்து விட்ட பின்னர் தான் அவனுக்கு திருப்தியாக இருந்தது...
ரணதீரனுக்கு ஆரம்பம் கஷ்டமாக இருந்தாலும், போக போக எல்லாமே பிடித்து இருந்தது...
அவர்கள் வந்து இரு மாதங்கள் கடந்து விட்டன...
எல்லாமே சீராக சென்றாலும் சர்வஜித் மற்றும் ஆதிரையாழின் விலகல் அப்படியே தான் இருந்தது...
தேவைக்கு பேசிக் கொள்வார்கள்...
சர்வஜித்துக்கு அவளை பார்க்கும் போதெல்லாம் உணர்வுகள் ஆர்ப்பரிக்கும்...
ஆனால் கட்டுப்படுத்திக் கொள்வான்...
அவளை விழிகளால் ரகசியமாக ரசித்தும் கொள்வான்...
இப்போதெல்லாம் ஆதிரையாழுக்கு சர்வஜித்தை இன்னுமே பிடித்து போனது...
தான் சொன்னதற்காக இப்படி அவன் உணர்வுகளை அடக்கிக் கொண்டே விலகி இருப்பது பிடித்தது...
அவளுக்காக செய்யும் சின்ன சின்ன விடயங்கள் பிடித்தன...
காதலிக்க ஆரம்பித்து விட்டாள்.
மீண்டும் காதலிக்க ஆரம்பித்து விட்டாள்.
இப்படியான ஒரு நாள் சனிக்கிழமை, வழக்கம் போல ஜிம்முக்குச் செல்ல ஆயத்தமாகி இருந்தான் சர்வஜித்... சட்டென்று கண்களை விழித்த ரணதீரனோ, "நானும் வரேன்பா, போர் அடிக்குது" என்றான்... சட்டென கண்களை விரித்து தன்னைப் பார்த்த ஆதிரையாழைப் பார்த்தான் சர்வஜித்...
அவளோ, "எதுக்கு இப்போ என்னை பார்க்கிறீங்க?" என்று கேட்க, "பையன் ஆசைப்படுறான், நீயும் வா" என்று சொல்ல, அவளோ, "நானா?" என்றாள் சிணுங்கலாக...
"வாடி, ஒரு சேன்ஜ் ஆஹ் இருக்கும்ல" என்றான்...
அவளும் சலிப்பாக எழுந்துக் கொண்டவள், "சரி வரேன்" என்று சொல்லிக் கொண்டே, குளியலறைக்குள் சென்றாள்.
ரணதீரனும் ஆதிரையாழும் ஆயத்தமாகி வந்து விட, இருவரையும் அழைத்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தான்...
இதமான காலை வேளையில் இதமான குளிரில் நடந்தார்கள்...
இருவரின் கையையும் பற்றிக் கொண்டே, நடுவில் தான் ரணதீரன் நடந்து வந்தான்...
"க்ளைமேட் செமயா இருக்குல்ல" என்றாள் ஆதிரையாழ்...
அவளை திரும்பி இதழ்களுக்குள் புன்னகைத்தபடி பார்த்தான் சர்வஜித்...
"ஏன் அப்படி பார்க்கிறீங்க?" என்றாள் அவள்...
அவனோ இல்லை என்று தலையாட்டி விட்டு முன்னால் திரும்பிக் கொண்டாலும் இதழ்களில் அவனது சிரிப்பு தேங்கி தான் நின்றது...
ஜிம்மையும் அடைந்து விட்டார்கள்...
மூவரும் ஜிம்முக்குள் வருவதை பார்த்த கபிலனோ, "குட் மார்னிங் சார்" என்று சொல்லிக் கொண்டே ரணதீரனை புருவம் சுருக்கி பார்த்தவன், "இது" என்று இழுக்க, "என் பையன்" என்று சொல்லிக் கொண்டே, ஆதிரையாழைப் பார்த்தவன் கபிலனைப் பார்த்து, "இது யாருனு தெரியும்ல" என்றான்...
கபிலனோ சிரித்துக் கொண்டே, "நியூஸ், ஃபோட்டோஸ் எல்லாம் பார்த்தேன் சார்" என்று சொல்ல, "ஃபைன், உன் ஃப்ரெண்ட் கூட பேசிட்டு இரு" என்று ஆதிரையாழிடம் சொல்லிக் கொண்டே, தனது ஜெர்க்கினை கழட்டி அங்கே மாட்டியவன் வேர்க் அவுட் செய்ய கிளம்பி விட்டான்...
அவனுடனேயே ரணதீரனும் செல்ல, அங்கே ஆதிரையாழும் கபிலனும் தான் நின்று இருந்தார்கள்...
ஆதிரையாழோ கபிலனை பார்த்தவள், "எப்படி இருக்கீங்க?" என்று மென் சிரிப்புடன் கேட்க, "மேடம், கல்யாணம் பத்தி அன்னைக்கு சொல்லவே இல்லையே" என்றான்...
அவளோ, "அதெல்லாம் இப்போ எதுக்கு? முடிஞ்சு போச்சுல, மேடம்னு கூப்பிடாதீங்க, யாழ்னு கூப்பிடுங்க" என்று சொல்லிக் கொண்டே, அவனுடன் நடந்துச் சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவள், "கல்யாணம் ஆயிடுச்சா?" என்று கேட்க, அவனோ, "ம்ம்... ரெண்டு பசங்க யாழ்" என்று சொல்ல, "வாழ்த்துக்கள்" என்று இதழ் பிரித்து சிரித்தபடி சொல்லிக் கொண்டாள்.
கபிலனும் அவளுடன் பேசி விட்டு, எழுந்து தனது வேலையை பார்க்கச் சென்று விட, இப்போது ஆதிரையாழின் பார்வை சர்வஜித்தில் நிலைத்தது...
ரணதீரனோ, அவனது ஆர்ம்சை தொட்டு பார்த்துக் கொண்டே, "அப்பா இதெல்லாம் பண்ணுனா தான் இப்படி வருமா?" என்று கேட்க, "ம்ம்... ஆமாடா, எப்போவும் ஃபிட் ஆஹ் இருக்கணும்" என்று சொல்லிக் கொண்டே, வேர்க் அவுட்டில் ஈடுபட்டான்...
ஆதிரையாழின் விழிகளோ, அவனது ஹேசல் விழிகளில் முதலில் படிந்தன...
அவளை கவர்ந்து இழுப்பது அந்த விழிகள் தானே...
அதில் தானே அவள் மயங்கி போனாள்.
அப்படியே அவள் விழிகள் அவனது கூரான நாசியை தீண்டி இதழ்களில் நிலைக்க, அவன் முத்தமிட்ட நினைவுகள் வந்து போயின...
அவளை எப்படி எல்லாம் முத்தமிட்டு இருப்பான்...
இதழ்களை எப்படி எல்லாம் காயப்படுத்தி இருப்பான்...
அவன் இதழ்கள் அவள் மேனியை தீண்டாத இடமே இல்லை அல்லவா?
வெட்கத்தில் கன்னங்கள் சிவந்து போக, அவள் விழிகள் இப்போது அவன் படிக்கட்டு தேகத்தை நோக்கி பயணம் செய்தன...
உஷ்ண பெருமூச்சு அவளிடம்...
அவனை அவள் ஆசை தீர ஸ்பரிசித்து இருக்கிறாள். அவன் மேனி எங்கும் முத்தம் பதித்து இருக்கிறாள்...
நினைக்க நினைக்க மனதுக்குள் பட்டாம் பூச்சி பறக்கும் உணர்வு... சட்டென்று பார்வையை வேறு பக்கம் திருப்பி உணர்வுகளை அடக்க முயன்றாள்...
வேர்க் அவுட் முடிந்து வீட்டுக்கு கிளம்பிய போதிலும் அவள் அவளாக இல்லை...
அவன் வேண்டும் என்று மனம் ஆர்ப்பரிக்க, உணர்வுகளை அடக்கிக் கொண்டே நடந்தாள்...
அவன் மீது மீண்டும் எப்படி இப்படி காதல் அரும்பியது என்று அவளுக்கு தெரியவில்லை...
வீட்டுக்கு வந்ததுமே, சமையலில் அவள் நேரம் சென்று விட, மருதநாயகமும் ரணதீரனும் வீடியோ கேம் விளையாட, சர்வஜித் லேப்டாப்பில் வேலை செய்துக் கொண்டு இருந்தான்...
அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை...
வீட்டினுள் இருக்க அலுப்பாக இருக்கின்றது என்று ரணதீரன் அடம் பிடிக்க, அனைவரையும் அழைத்துக் கொண்டே வெளியேச் சென்றான் சர்வஜித்...
அங்கே குழந்தைகளை கண்டதுமே ரணதீரனுக்கு குதூகலம்...
"எவ்ளோ அழகா இருக்கு இந்த பாப்பா" என்று சொல்லிக் கொண்டே இருந்தான்...
அத்துடன் முடித்தால் கூட பரவாயில்லை, "எனக்கும் ஒரு தம்பி பாப்பா, இல்லனா தங்கச்சி பாப்பா வேணும்பா, தரேன்னு அன்னைக்கு சொன்னீங்க தானே" என்று வேறு கேட்டான்...
சர்வஜித்தோ, "அடுத்த வருஷம் தரேன்டா" என்று சொல்லிக் கொண்டே ஆதிரையாழைப் பார்க்க, அவளோ கேட்டும் கேட்காத போல நின்று இருந்தாள்...
"கேட்டாலும் கேட்காத போலவே இருப்பா" என்று முணு முணுத்த சர்வஜித்தும், பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்து விட்டான்...
அடுத்த நாள் காலையில் ரணதீரன் எழுந்து பாடசாலைக்கு கிளம்பி விட்டான்...
மருதநாயகம் தனது அறைக்குள் இருந்து டி வி பார்த்துக் கொண்டு இருந்தார்...
ஆதிரையாழ் குளித்து விட்டு வந்தவள், படுக்கையை சரிப்படுத்திக் கொண்டு இருக்க, லேப்டாப்பில் இருந்த சர்வஜித்தின் கண்கள் அவளில் படிந்தன...
அவளை மேலிருந்து கீழ் அளந்தான்...
முதல் இருந்ததை விட சற்று பூசினால் போல இருந்தாள்...
அது அவள் அழகை இன்னும் கூட்டி தான் காட்டியது...
இப்போவே அவளை இழுத்து அணைத்து முத்தமிட தோன்றியது...
ஆனால் அவள் அனுமதிப்பாளா? என்று யோசனை...
அவன் மனசாட்சியோ, "இப்படியே இருந்தா சாமியாரா தான் போகணும்... பேசுடா" என்று அவனை உசுப்பி விட, லேப்டாப்பை மூடி வைத்து விட்டு, அவளை நோக்கி நடந்து வந்தவன், கட்டிலில் தொய்ந்து அமர்ந்துக் கொண்டே, அவளை ஏறிட்டுப் பார்க்க, "கட்டிலை சரி பண்ணிட்டு இருக்கேன்ல, இப்படி வந்து இருந்தா என்ன அர்த்தம்?" என்று கேட்டாள்.
"உன் கிட்ட ஒரு விஷயம் பேசணும்டி" என்றான்...
"என்ன விஷயம்?" என்றாள் அவள்...
"நேற்று தீரன் கேட்டதை பத்தி என்ன நினைக்கிற?" என்று கேட்டான் அவள் விழிகளை பார்த்துக் கொண்டே... அவளோ, "என்ன கேட்டான்?" என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி கேட்க, அவனோ, "ஆஹ் உனக்கு கேக்கலைனு நான் நம்பணுமாக்கும்" என்றான்...
அவளோ சிரிப்பை அடக்கிக் கொண்டே, "தம்பி பாப்பா, தங்கச்சி பாப்பா கேட்டான்... அதுக்கு என்ன?" என்று கேட்க, "என்னவா? கேட்டதை கொடுக்க வேணாமா?" என்று கேட்டான் சர்வஜித் அவளை விழுங்கி விடுவது போல பார்த்துக் கொண்டே...
"கொடுக்கலாமே, டாக்டரை பாருங்க, நாம செயற்கை முறைல குழந்தை பெத்துக்கலாம்" என்றாள் கஷ்டப்பட்டு சிரிக்காமல்...
"வாட்?" என்றான் அவன்...
அவளோ, "ம்ம்" என்றாள் இரு தோள்களையும் உலுக்கி...
அவனோ, "அதெல்லாம் முடியாது" என்று சொல்ல, அவளோ பெருமூச்சுடன், "அப்போ என் கிட்ட வேற ஒரு ஐடியா இருக்கு..." என்றாள்.
"என்ன ஐடியா?" என்று புருவம் சுருக்கி கேட்டவனிடம், "நீங்க என்னை தொட கூடாது, ஆனா நான் தொடுறேன்" என்று சொன்னாள்.
அவனோ தலையை உலுக்கியவன், "வாட்? கம் அகைன்" என்றான் மீண்டும்...
"ம்ம்... கையை ஆடாம அசையாம வச்சுக்கணும்... நானே எல்லாம் பார்த்துக்கிறேன்" என்றாள்.
"விளையாடுறியா நீ?" என்றபடி எழுந்தான் அவன்...
அவளோ, "இது தான் டீல், ஓகேனா சொல்லுங்க, இல்லனா விட்ரலாம்" என்றாள்.
"ஓஹோ, அப்போ நீ மட்டும் தான் கிஸ் பண்ணுவியா?" என்று கேட்க, அவளும், "ம்ம்" என்றாள் அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே...
"அப்போ மீதி" என்று அவன் இழுக்க, அவளோ, "அதுவும் நான் தான்... நீங்க தான் சொல்லிக் கொடுத்து இருக்கீங்களே" என்று கண் சிமிட்டி சொல்ல, பின்னந்தலையை வருடிக் கொண்டே குரலை செருமிக் கொண்டவன், "இதெல்லாம் டூ மச் டி" என்றான்...
அவளோ, "இது தான் டீல், ஓகேயா இல்லையா?" என்றாள் மீண்டும்...
அவனுக்கு இது கிடைப்பதே அரிதான வாய்ப்பு... விட்டு விடவும் மனம் இல்லை...
"ஓகே" என்று சொல்லிக் கொண்டே, ரிமோர்ட்டை எடுத்து கதவை லாக் பண்ணினான்...
அவளோ மின்விளக்கை அணைத்து விட்டு நைட் லேம்பை போட்டாள்...
முழுதாக மூடிய அறை என்பதால் மின் விளக்கை அணைத்தால் இருளாக தான் இருக்கும்...
சர்வஜித்தோ, "இது தான் உன் முடிவா?" என்று கேட்க, அவனை நெருங்கியவள், இருவருக்கும் இடையான இடைவெளியை பூஜ்ஜியமாக்கிக் கொண்டாள்.