அத்தியாயம் 32
அவளை உறுத்து விழித்தவனோ, அவளுக்கும் குறையாத ஆக்ரோஷத்துடன், "ஆமாடி தெரியாம தான் சொல்லிட்டேன்... நீ குப்பை இல்ல, நான் தான் குப்பைனு அன்னைக்கு தெரியாம தான் சொல்லிட்டேன்" என்றான்...
அவளோ அவனை அதிர்ந்து பார்க்க, "நீ நினைக்கிற போல நான் ஒன்னும் இந்த சொத்துக்கு உரிய வாரிசு இல்லை... எனக்கே அந்த உண்மை போன மாசம் தான் தெரிஞ்சுது... உனக்கு தாத்தா எப்படியோ எனக்கும் தாத்தா அப்படி தான்... குப்பைல கிடந்தவன கோபுரத்துல ஏத்தி வச்சு இருக்கார்... ஆனா என் கிட்ட ஒரு வார்த்தை கூட அவர் அத பத்தி சொல்லல" என்று சொல்லிக் கொண்டே தொய்ந்து கட்டிலில் அமர்ந்தான்...
அவளுக்கோ அதிர்ச்சி...
எதுவுமே புரியவில்லை...
"எனக்கு புரியல" என்றாள் விழிகளை விரித்துக் கொண்டே...
அவளை ஏறிட்டுப் பார்த்தான்...
விழிகளில் ஏமாற்றம், விரக்தி, வலி...
"தாத்தாவோட பையன், மருமக, பேரன்னு எல்லாருமே ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க... எனக்கும் யாரும் இல்லாம இந்த ஊர்ல அனாதையா இருந்து இருக்கேன்... என்னை அமெரிக்காவுக்கு தூக்கிட்டு போய் வாழ வச்சவர் தான் தாத்தா" என்று சொல்லும் போதே அவன் குரல் தழுதழுத்தது...
"என்ன?" என்றாள் அவள் அதிர்ச்சியாக...
மேலும் ஒரு பெருமூச்சுடன் தொடர்ந்தவனோ, "உனக்காவது அம்மா யாருனு தெரியும்... அப்பா யாருனு தெரியும்... எனக்கு எதுவுமே தெரியாது... என் உண்மையான பேர் கூட தெரியாது... இந்த அடையாளமே என்னோடது இல்ல... கேங்க் ரேப்ல யார் அப்பான்னு கூட தெரியாம உருவானவன் நான்... எவனோ ஒரு பொறுக்கியோட ரத்தம் என் உடம்புல ஓடுறதால தான் உன்னை அவ்ளோ அசிங்கப்படுத்தி இருக்கேன்... மனசாட்சியே இல்லாம நடந்து இருக்கேன்... தாத்தாவை கஷ்டப்படுத்தி இருக்கேன், எனக்கு பையன் இருக்கிறது கூட இத்தனை வருஷம் தெரியாம இருந்து இருக்கேன்... எப்படி திடீர்னு மாறினேன்னு கேட்ட தானே... இந்த உண்மை தெரிஞ்ச அப்புறம் தான் மாறினேன்... நான் தூக்கி வச்சுக்கிற இந்த ஸ்டேட்டஸ் எதுவுமே என்னோடது இல்லனு தெரிஞ்ச அப்புறம் தான் மாறினேன்... எனக்கு உரிமை இல்லாத சொத்துக்காக எவ்ளோ தரம் இறங்கி இருக்கேன்னு அப்போ தான் புரிஞ்சுது... தாத்தாவுக்கு எனக்கு உண்மை தெரிஞ்சிடுச்சுனு தெரிஞ்சா நொறுங்கிடுவார்... அதுக்காக தான் இன்னுமே அவரோட பேரன் போல திமிரா இருக்கேன்... ஆனா நான் உள்ளுக்குள்ள எப்போவோ உடைஞ்சுட்டேன் ஆதிரா... ஆறு வருஷத்துக்கு முதல் இருந்த சர்வஜித் இல்ல நான்... இப்போ சொல்லு நான் தானே குப்பை... இங்க வரும் போது கூட நீ கடைசியா சொன்ன வார்த்தையால உன் மேல கோபம் இருந்திச்சு... ஆனா இப்போ இல்லை... நான் பேசுனதுக்கு முன்னால நீ பேசுனது ஒண்ணுமே இல்லனு புரிஞ்சிடுச்சு..." என்று சொல்லிக் கொண்டே அவளை பார்த்தவன் கண்கள் கலங்கி போயின...
அவன் கண்கள் கலங்கி விட்டனவா? நம்ப முடியவில்லை அவளுக்கு...
முதலில் அவன் சொன்னதையே இன்னும் கிரகிக்க முடியவில்லை...
"நீங்க சொல்றதெல்லாம் உண்மையா?" என்று மறுபடி கேட்டாள்.
"ம்ம்... தாத்தாவுக்கு தெரிய வேணாம்" என்றான் அவன்...
"நான் சொல்ல மாட்டேன்" என்று சொன்னவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை, அவன் அருகே வந்து அமர்ந்துக் கொண்டே, "அப்போ இந்த உண்மை தெரியலனா வந்து இருக்க மாட்டீங்கல்ல" என்றாள்.
சுர்ரென்று தைத்தது அவனுக்கு...
அவளை பக்கவாட்டாக திரும்பி பார்த்தவனோ, ஆமோதிப்பாக குற்ற உணர்வுடன் தலையை அசைக்க, அவளிடம் ஒரு விரக்தி புன்னகை...
உடனே அவன், "ஏதாவது ஒரு பாய்ண்ட்ல மனுஷனா மாற எனக்கு வாய்ப்பு கிடைச்சுது" என்றான்...
அவளோ, "நீங்க எவ்ளோ கஷ்டப்படுறீங்கனு எனக்கு புரியுது... உங்க மேல இப்போ நம்பிக்கையும் இருக்கு... ஆனா என்னால உங்கள ஏத்துக்க முடியல... ஏத்துக்கவே மாட்டேன்னு சொல்லல, ஆனா இப்போ ஏத்துக்க முடியல" என்றாள்.
ஏமாற்றம் தான் அவனுக்கு...
"சரி விடு, என் கூட அமெரிக்கா வருவியா?" என்று கேட்டான்...
"ம்ம் வரேன்... ஆனா என் மேல என் அனுமதி இல்லாம உங்க நுனி விரல் கூட பட கூடாது" என்றாள்.
அவனுக்கு தூக்கி வாரிப் போட்டாலும் அவள் கேட்டதற்கு சம்மதிக்க வேண்டிய நிலை...
"ஹேய் எப்படி டி?" என்றான்...
அவளோ, "அது அப்படி தான்" என்று சொல்லிக் கொண்டே கையை நீட்ட, அவனோ, "கொஞ்சம் கன்சிடர் பண்ணு, உனக்கு தான் என்னை பத்தி தெரியுமே, இப்போவே உன்னை கிஸ் அடிக்கணும் போல இருக்கு" என்றான்.
அவளோ அழுத்தமாக இல்லை என்று தலையாட்டியவள், "என்னால நீங்க சொன்னதுல இருந்து வெளியே வர முடியல... உங்க கதையை கேட்கும் போது எனக்கு கஷ்டமா இருக்கு... ஆனா அதுக்காக எல்லாத்தையும் மறந்துட்டு பின்னாடி வர்ற மனநிலை எனக்கு இல்லை... என்னோட ஆறு வருஷ வலி இது… உங்களோட உடல் தேவைக்கு நடுவுல உங்க மனசுல காதல் இருக்கா இல்லையான்னு என்னால கண்டுபிடிக்க முடியல... கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தாலே அது காதல்னு நினைச்சிடுறேன்... ஏன்னா நான் காதலோட தான் எல்லாமே பண்ணுனேன்... ஆனா அதெல்லாம் காதல் இல்லனு நீங்க சொன்னதுமே எனக்கு செருப்பால அடிச்ச போல இருந்திச்சு... நீங்க உண்மையாவே என்னை காதலிக்கிறீங்கன்னா அத உணர ஆசைப்படுறேன்..." என்று சொன்னவள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிய, சட்டென்று அவன் கை அதனை துடைக்க போனது...
நூலளவு இடைவெளியில் நின்றவனோ அதே கரத்தை அவள் நீட்டி இருந்த கையில் வைத்து, "கண்டிப்பா உன் பெர்மிஷன் இல்லாம உன் மேல என் கை படாது..." என்றான்...
அவளும், "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே எழுந்தவள் அறைக்குள் இருந்து வெளியேறி விட்டாள்.
அவளுக்கு அவன் கதையை கேட்டு, அவன் கலங்கிய விழிகளைப் பார்த்து கஷ்டமாக இருந்தது...
காதல் கொண்ட மனம் அவனுக்காக பதறியது...
ஆனால் அவனை மன்னித்து பழைய படி வாழும் நிலைக்கு அவள் மனம் இன்னும் வரவில்லை...
அவனை இப்போது நம்புகிறாள்... அவன் மாற்றத்தை நம்புகிறாள்... ஆனால் ஒரு கணவனாக இன்னும் அவளுக்கு நம்பிக்கை வரவில்லை... அவன் காதலை அவள் உணர ஆசைப்படுகிறாள்...
உணர வைப்பானா? இல்லையா?