ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 30

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 30

அவளுடன் பேசிவிட்டு வீட்டுக்குள் வந்த கெளதம் தனது வீட்டுக்கு புறப்படுவதாக சொல்லி புறப்பட்டான். அனைவரும் தடுத்தும் அவன் யார் பேச்சும் கேட்கவில்லை.

மனதில் பாரத்துடனும் கயல் நினைப்புடனும் தனது வீட்டை அடைந்தவன் தூக்கம் இல்லாமல் தவித்தான். கயல்விழியோ இரவு முழுக்க தனக்கு தானே தண்டனை கொடுத்துக் கொண்டு அழுகையில் கரைந்தாள்.

சாணக்கியனும் வசுந்தராவும் நீண்ட நாட்களின் பின் மனம் விட்டு பேசினர். சாணக்கியனிடம் வசுந்தரா,

"நான் ஒன்று கேட்பேன் எனக்கு பதில் சொல்வீங்களா?" என்று கேட்க அவனோ அவள் அருகில் நெருங்கி உட்கார்ந்து, "இப்படி நெருங்கி இருந்தா கண்டிப்பா சொல்லுவேன்" என்று கண்ணடித்தான்.

"இந்த குசும்பெல்லாம் வேணாம்... கல்யாணம் என்னை பிடிக்காமலா பண்ணிக்கிட்டீங்க?" என்று நறுக்கென்று கேட்டாள். அவளை பார்த்து சிரித்தபடி, "கல்யாணமே பிடிக்காமல் தான் பண்ணிக்கிட்டேன்" என்ற அவனின் பதிலில் அவள் கண்கள் கலங்க அவன் இதயம் வலித்தது.

'இது தான் காதலா?' என்று நினைத்தவன், "அழாதே வசு... அப்போ நான் பண்ணின கொலைகளை நினைச்சா கல்யாணம் பண்ணவே இஷ்டமில்லை. ஆனா கட்டாயத்துல பண்ணினாலும் உன்னை நான் வெறுக்கல... கடமைக்கு உன் கூட குடும்பம் நடத்தினாலும் வெறுப்போடு குடும்பம் நடத்தல...என்னை சுத்தி நிறைய பேர் இருந்ததால உன் மேல எனக்கு இருந்த காதலை நான் உணரவே இல்ல. ஆனா எப்போ எங்கப்பா பற்றி உண்மை தெரிஞ்சு என்னை நானே தனிமை படுத்திக் கொண்டேனோ அன்றிலிருந்து உன் நினைவு மட்டும் தான். யாரோடயும் பேச எனக்கு பிடிக்காம இருந்தது உன்னையும் கௌதமையும் தவிர..." என்று கலங்கிய கண்களுடன் கூறியவனை பதறி அணைத்தவள் அவன் நெற்றியில் முத்தமிட்டு, "உங்க போட்டோ பார்த்ததிலிருந்தே உங்கள காதலிக்க ஆரம்பிச்சேன்" என்றாள் வெட்கத்துடன். "உண்மையாவா வசு ? நான் தான் டைம் வேஸ்ட் பண்ணிட்டேனா?" என்றவன் அவள் மேடிட்ட வயிற்றை தடவினான்.

தடவியவாறே அவளை கூர்ந்து பார்த்தவன், "நான் யாருக்காகவும் என் கொள்கையை விட்டு கொடுத்ததில்லை. முதல் முறை உனக்காகவும் நமக்கு பிறக்க போகும் என் பையனுக்காகவும் நான் மாற முடிவெடுத்திட்டேன். உங்க ரெண்டு பேர் மேலயும் சத்தியமாக நான் இனி யாரையும் கொலை பண்ண மாட்டேன்" என்ற கணவனை நெகிழ்ந்து பார்த்தவள் அடுத்த நொடி அவன் மார்பில் தஞ்சம் புகுந்துக் கொண்டாள். வாழ்கையில் மனைவிக்காக தன்னை மாற்றிய உத்தம புருஷனானான் சாணக்கியவர்மன்.

அதே சமயம் தனது அறைக்குள் வந்ததும் மன உளைச்சலுடனேயே கட்டிலில் இருந்த விஷ்வா அருகில் சென்ற மித்ரா அவன் கேசத்தை வருடி, " விஷ்வா... கவலை படாதடா..." என்றாள்.

அவனுக்கும் அந்த அரவணைப்பு தேவைப்பட அவள் இடையை கட்டி அணைத்து அவள் வயிற்றில் கன்னம் வைத்தவன், "எப்படிடி கவலைப் படாம இருக்க முடியும்? எங்கப்பன் பண்ணின வேலைக்கு சாணக்கியன் அண்ணா சரியா தண்டனை கொடுத்திட்டார். ஆனா நான் அவரையும் புரிஞ்சுக்கல உன்னையும் புரிஞ்சுக்கல... நம்ம கௌதமையும் புரிஞ்சுக்கல... எல்லாரையும் காய படுத்திட்டேன்." என்றவன் குலுங்கி குலுங்கி அழ அவனை அப்படியே வைத்து அணைத்தவள், "விடு விஷ்வா... தனியா இரவில போய் கெளதம் அண்ணா கதவை தட்டினா உன் இடத்துல நான் இருந்திருந்தாலும் உன்னை போல தான் யோசிச்சிருப்பேன். உண்மை தெரியாம தானே சாணக்கியன் அத்தான் கிட்ட அப்படி பேசுன..." என்று ஆறுதல் கூறியவள் அவன் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தி அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

மேலும் அவன் கண்ணீரை இரு பெரு விரல்களாலும் துடைத்தவள், "இப்படியே அழுது அழுது எத்தனை நாளா என்னை காக்க வைக்கிற உத்தேசம்..? ஏற்கனவே கல்யாணம் பண்ணி ஒரு மாசம் முடிஞ்சுதே" என்று கண்ணடித்து சொல்ல அவளை அப்படியே அள்ளி கட்டிலில் போட்டவன் அவள் மேல் படர்ந்தபடி, "ஒரு மாசத்தை இன்னைக்கே ஈடு கட்டுறேன்" என்று உரைத்தவாறு அவள் நெற்றியில் முத்தமிட ஆரம்பித்தவன் நாசி இதழ்கள் என முன்னேறி கடைசியில் மொத்தமாக அவளை ஆட்கொண்டான்.

இப்படியே இரு ஜோடிகள் இணைந்துவிட தனிமையில் ஒரு ஜோடி தவித்து இருந்தன. இரவு முழுவதும் அழுதழுது யோசித்த கயல்விழி அடுத்தநாள் கெளதம் ஆபீஸ்க்கு வந்திருந்தாள்.

ஒரு கேஸ் பைலை பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் உள்ளே வர கடினமாக முகத்தை வைத்துக் கொண்டு, "இருங்க" என்றான்.

அவள் இருந்ததும் அவளை கூர்ந்து பார்க்க அவளோ அவனை பார்த்து, "கிருஷ்ணா..." என்றாள் நெகிழ்ச்சியாக. அவள் வார்த்தை அவனை சிலிர்க்க வைக்க, "ம்ம்... சொல்லுங்க" என்றான். கண்ணிலிருந்து உடைப்பெடுத்துக் கொண்டு வெளியே வரவிருந்த கண்ணீரை கட்டுப்படுத்தியவள், "நாம பிரியலாம்" என்றாள்.

அவள் கூற்றினால் வந்த எரிச்சலை மறைத்தவன், "அது தான் நேற்றே சொல்லியாச்சே... உங்க அப்பா இறந்ததுக்கு நான் காரணம்னு என் மேல் கோபம்... அப்படி தானே?" என்றான் சினம் தெறிக்கும் குரலில்.

அவன் பேச்சு அவளுக்கும் சினத்தை உருவாக்க, "புரியாம பேச வேணாம் கெளதம்." என்றதும் மனதுக்குள், 'ஒரு நேரம் கிருஷ்ணா இன்னொரு நேரம் கௌதமா?' என்று நினைத்தவன் அவளை பார்க்க அவள் மேலும், "இந்த விஷயம் எனக்கு ஏற்கனவே தெரிஞ்சிருந்தா நானே அந்த ஆள கொன்று இருப்பேன்... இப்போ எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு உங்க கூட வாழ...அதனால நாம பிரியலாம்" என்றாள்.

அவள் வார்த்தைகளை கேட்டதும் அவன் மனதில் ஆயிரம் பட்டம் பூச்சிகள் பறந்தன.

'அடி கள்ளி! இது தான் காரணமா? உன் குற்ற உணர்ச்சியை நான் போக்குறேன் டி' என்று மனதுக்குள் நினைத்தவன், அவளிடம், "இதே போல உங்க அண்ணா நினைச்சிருந்தா உன்னை போல குற்ற உணர்ச்சியில் என் கூட பழகமாட்டானே?" என்றான் கேலியாக...

அவன் கேலியை உணர்ந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல், "நீங்க ரெண்டு பேரும் நண்பர்கள் ஆனா நாம அப்படி இல்ல." என்றாள். 'நல்லா லாஜிக் பேசுறா... சுத்தம்' என்று நினைத்தவன், "அப்போ நாமளும் பிரெண்ட்ஸ் ஆஹ் இருக்கலாம்" என்றதும் அவனை நிமிர்ந்து அதிர்ச்சியுடன் பார்த்தவள், "அது வந்து..." என்று தயங்கினாள்.

"என்ன வந்து? பிரெண்ட்ஸ் ஆஹ் இருப்போம் ஓகேயா?" என்று கறாராக கேட்க வேறு வழி இல்லாமல் சரி என்று தலை ஆட்டினாள்.

அவள் தலை ஆட்டும் அழகை பார்த்து வந்த சிரிப்பை அடக்கியவன், "சரி இப்போ நீ போ... கொஞ்சம் வேலை இருக்கு...பிரெண்ட் கூட பேசி பழக வேலை முடிஞ்சதும் உன் வீட்டுக்கு வர்றேன்" என்று அவன் குதூகலமாக சொல்ல அவளும் யோசனையுடன் எழுந்து அவ்வறையை விட்டு வெளியேறினாள்.

அவள் வெளியேறியதும், "இன்னைக்கு உன் பிரெண்ட் என்ன எல்லாம் பண்ணுவான் பாருடி" என்றவன் சந்தோஷமாக வேலையில் ஈடுபட்டான்.

கயல் வேலை விட்டு வந்ததும் கெளதம் வருகையை நினைத்து ஆவலும் படப்படப்புமாய் இருந்தாள்.

அவள் மனசாட்சியோ, 'நீ தான் பிரிய போற... எதுக்கு இந்த ஆவல்?' என்று அவளை கேள்வி கேட்க அதை ஒதுக்கி கெளதம் வருகைக்காக குளித்து ஆயத்தமாகி காத்திருந்தாள். ஹாலில் இருந்தவள் நான்கு, ஐந்து தடவைகள் வாசலுக்கு சென்று பார்த்ததை கவனித்த மித்ரா, "என்ன கயல் யாரை அடிக்கடி போய் பார்க்கிற?" என்று கேட்க முதலில் தடுமாறியவள், "பிரெண்ட் மித்ரா பிரெண்ட்" என்று வாய்க்கு வந்ததை உளறினாள்.

அங்கிருந்த விஷ்வா, "பிரெண்ட் ஆஹ் யாருடி அது புதுசா ?" என்று கேட்க, 'ஐயோ இப்போ என்ன சொல்லுவேன்?' என்று அவள் பதிலுக்காக காத்திருந்த அனைவரையும் ஒரு தடவை பார்த்தவள் திரு திரு என முழிக்க தொடங்கினாள். அந்நேரம் உள்ளே நுழைந்த கெளதம், "நான் தான் டா அந்த பிரெண்ட்" என்றபடி வாசலுக்கு முதுகு காட்டி நின்றவளை நோக்கி நடந்தான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.

'ஐயோ என் மானம் போகுதே...!' என்று தயங்கியவள் அனைவரையும் நோட்டமிட சாணக்கியனோ, "என்னடி இது?" என்று அவளிடம் கேட்டான். அவளுக்கு பதில் வராமல் காற்று தான் வாயிலிருந்து வந்தது.

அவளருகில் வந்து நின்ற கெளதம் அனைவரையும் பார்த்து, "அம்மணிக்கு டிவோர்ஸ் வேணுமாம்..." என்றான். அவளோ அதிர்ச்சியுடன் கௌதமை முறைக்க அவன் மனதுக்குள், 'மாட்டினியா?' என்றபடி அவளை கேலியாக பார்த்தான்.

அதை கேட்டு கொதித்த அனைவரும் ஆளாளுக்கு அட்வைஸ் என்ற பெயரில் அவளை வாட்டி எடுத்து விட்டனர்.

அனைத்தையும் தலை குனிந்து கேட்டவளுக்கு கெளதம் மேல் எரிச்சலாக இருந்தது. அவனோ சோபாவில் கால் மேல் கால் போட்டு இருந்த படி அவள் அவஸ்தையை ரசித்தான். ஒரு கட்டத்தில் அவளை பார்த்து பாவமாக இருக்க, "விடுங்க அத்தை நான் பார்த்துக்கிறேன்... இப்போ ரொம்ப பசிக்குது" என்றபடி சாப்பாட்டு மேசையில் எழுந்துச் சென்று உட்கார்ந்தான்.

மற்றவர்களும் வந்து சாப்பிட உட்கார, அனைவரும் சாப்பிட்டு முடிந்த பின்னர் பூந்தி லட்டுடன் வந்தார் சித்ரா.

அதை அவர் கௌதமிடம் கொடுக்க கௌதமோ, "கயலுக்கு கொடுங்க அத்தை இல்லாவிட்டால் என் பாடு திண்டாட்டம் ஆகி விடும்" என்றான். அவனை முறைத்த கயல், "எனக்கு வேணாம்" என்றபடி எழ போக சாணக்கியனோ அவள் கையை பிடித்து, "எங்கே போற ? கொஞ்சம் பேசிட்டு இருக்கலாம்" என்று சொல்ல அதை மறுத்தவள், "நீங்க பேசுங்க அண்ணா" என்றபடி தனது அறைக்குள் சென்றாள்.

சாப்பிட்டு முடிந்த கெளதம் வீட்டுக்குச் செல்லாமல் கயல் அறைக்குள் செல்ல அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

கெளதம் கயல்விழியை தேடி அவள் அறை வாசலுக்குச் சென்று கதவை தட்டினான். கதவை திறந்தவளது மனம் அவனை கண்டு சந்தோஷப்பட்டாலும் அவனை தவிர்க்கும் போட்டு, "என்ன விஷயம் ? வீட்டுக்கு போகலயா ?" என்று கடினமாகவே கேட்க,

"என் பிரெண்ட் கூட பேச வந்தேன்" என்று சொன்னவன் அடுத்த கணம் அவளை உள்ளே தள்ளி அவனும் உள்ளே நுழைந்து கதவை சாத்தினான்.

"இப்போ எதுக்கு கதவை சாத்துறீங்க ? எல்லாரும் என்ன நினைப்பாங்க?" என்று கேட்க கைகளை கட்டி கதவில் சாய்ந்து நின்றவன் புருவத்தை தூக்கி, "என்ன நினைப்பாங்க ?" என்று கேட்டான்.

அவன் ஆளை விழுங்கும் பார்வையில் தடுமாறியவள் மனம் அலைபாய்வதை தடுக்க தலையை குனிந்தபடி, "தப்பா நினைப்பாங்க" என்றாள்.

"தப்பாவா? அப்படி எனக்கு தோணலையே...பிரெண்ட்ஸ் பேச வந்திருக்கோம்னு நினைக்கலாம்" என்று கூற அவனை விலுக்கெனெ நிமிர்ந்து பார்த்தாள். அவனோ அடக்கப்பட்ட சிரிப்புடன் ஒற்றை காலை கதவில் குற்றி கைகளை கட்டி அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவன் ஒற்றை பார்வையில் தடுமாறியவள், "வெளிய போய் பேசலாம்" என்றாள். "உனக்கு உன் மேல நம்பிக்கை இல்ல என்றால் வெளிய போகலாம்" என்றவனை முறைத்தவள், "எனக்கு என் மேல நம்பிக்கை இருக்கு. உங்க மேல தான் நம்பிக்கை இல்ல" என்றதும் முத்து பற்கள் தெரிய சத்தமாக சிரித்தவன், "ஆஹா அப்புறம்..." என்று கேட்க அவளோ, "நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன். வெளிய போவோம் வாங்க" என்று அழைத்தாள்.

"எனக்கு உன் மேல தான் நம்பிக்கை இல்லை... அன்றைக்கு கூட..." என்று அவன் தொடங்க போக தன் காதை பொத்தியபடி, "தப்பா பேசாதீங்க" என்றாள்.

"நான் தப்பா பேசலம்மா...நீ நடந்துக்கிட்டத தான் சொன்னேன். அன்றைக்கு என்ன உசுப்பி விட்டிட்டு... இப்போ என் மேல நம்பிக்கையில்லைனு அப்பட்டமாக பொய் சொல்றியே" என்று கேட்டான்.

அவன் பேசியதன் அர்த்தம் விளங்கினாலும் அதை காட்டிக் கொள்ள விரும்பாதவள், "எதுக்கு வெட்டி பேச்சு வாங்க வெளிய போவோம்" என்றாள் அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல்.

"நீ போ... நான் பின்னால வர்றேன்" என்றவனிடம், "இப்படி மறிச்சிட்டு நின்றால் எப்படி போறதாம்?" என்று அவனை நிமிர்ந்து பார்த்து கேட்க அவளை பார்த்தபடியே அவளருகில் நெருங்கி ஒவ்வொரு அடியாய் அவளை நோக்கி எடுத்து வைக்க அவளோ அவன் பார்வையின் அர்த்தம் விளங்கி ஒவ்வொரு அடியாய் பின்னால் எடுத்து வைத்தாள்.

பின்னால் கட்டிலில் தடுக்கி விழ போனவளின் இடையை எட்டி பிடித்தவன், "இப்போ எதுக்கு பின்னால போற? உன்ன பார்த்து நான் தான் பின்னால போகணும்... ஏன் என்றால்..." என்று கூற வந்தவனின் வாயை தன் விரல்களால் பொத்தியவள் சொல்ல வேணாம் என்று கண்களால் கெஞ்சியபடி தலையை இருபக்கமும் ஆட்டினாள்.

அதை பார்த்து கொடுப்புக்குள் சிரித்தவன் அவளை அணைத்தபடியே, "இப்படியே நிக்கிறதா உத்தேசமா?" என்று கேட்க அவனை விட்டு விலகி நின்றவள் முன்னால் செல்ல, "எங்கயாச்சும் வெளிய போவோமா ?" என்று கேட்டான் பின்னால் வந்த படியே.

அவன் கேட்டதில் ஒரு கணம் நின்றவள் அவனை திரும்பி பார்த்து, "இந்த நேரத்திலயா?" என்று கேட்க ஆம் என்று தலையாட்டியவன், "பிரெண்ட் கூட அவுட்டிங்" என்றான் ஒற்றை கண்ணை சிமிட்டி

அவன் கூட செல்ல மனம் பரபரத்தாலும் அதை காட்டாதவள், "பிரெண்ட் என்ற ஒற்றை வார்த்தைக்காக உங்க கூட வரேன்... என்ன எப்படி கொண்டு போறீங்களோ அப்படியே கொண்டு வந்து விடணும்" என்றாள்.

அவள் கூற்றில் சிரித்தவன், "சரி... அதே தான் உனக்கும். என்ன எப்படி கொண்டு போறியோ அப்படியே என் கற்பு பறி போகாம திரும்ப கொண்டு விடணும்" என்றான்.

அவன் கூற்றில் வெட்கமும் எரிச்சலும் ஒருங்கே வர அவனை முறைத்தவள், "இப்படி பேசினா நான் வரமாட்டேன்" என்றாள்.

"சரி பேசல" என்றவன் குனிந்து அவள் எதிர் பார்க்காத வண்ணம் அவள் கன்னத்தில் முத்தமிட, "என்ன இது?" என்று முறைத்தவளிடம், "பிரெண்ட்மா கன்னத்தில் முத்தம் கொடுக்கிறது தப்பா தெரியல" என்று சிரித்தபடி சொன்னவன், "வா போவோம்" என்று அவன் அவள் கையை பிடிக்க அவளோ அவன் கையை முறைத்து பார்த்தாள். அவள் பார்வையை அறிந்தவன், "பிரெண்ட்ஸ் கையையும் பிடிக்கலாம் வாடி" என்று அவளை இழுத்தபடி அறையை விட்டு வெளியேறினான்.

வெளியே வந்தவன் ஹாலில் உள்ள அனைவரிடமும், "பிரெண்ட் கூட வெளிய போய் பேசிட்டு வரேன்" என்று கண்ணடித்து சொன்னபடி அவளை இழுத்துச் செல்ல கயல்விழியோ சங்கடத்துடன் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் அவனுடன் சென்றாள்.

வெளியில் வந்த கௌதமுக்கு அப்போது தான் நண்பனுடன் சாணக்கியன் வீட்டுக்கு தற்போது வந்திறங்கியது நினைவு வர, "உன் கார் கீயை எடு" என்றான். உள்ளேச் சென்று யாரையும் பார்க்காமல் கார் கீயை எடுத்தவள் அதை கொண்டு வந்து கௌதமிடம் கொடுக்க அவன் ட்ரைவர் சீட்டில் ஏறி இருந்து காரை ஓட்ட தொடங்க அவன் பக்கத்தில் அவள் ஏறி உட்கார்ந்தாள்.

ஒருவரோடு ஒருவர் பேசாமலே இருக்க நீண்ட மௌனத்துக்கு பிறகு பெருமூச்சு விட்டவன், "ஏன் டி என்ன விட்டு விலகி போற ?" என்று பொறுமையிழந்து அவளிடம் கேட்டான். அவளோ தலையை குனிந்தபடி, "அது தான் சொன்னேனே எனக்கு ரொம்ப குற்ற உணர்வா இருக்கு கிருஷ்ணா... எங்க அப்பாவால தானே..." என்றவள் மேலும் பேச முடியாமல் விம்ம தொடங்கினாள்.

அவள் அழுவதை பொறுக்க முடியாதவன் காரை ஓரமாக நிறுத்தி விட்டு அவளை இறுக்கி அணைத்தான். அணைத்தபடியே, "இங்கே பார் கயல் அதுக்கு நீ பொறுப்பாக முடியாது. செய்யாத தப்புக்கு உனக்கு நீயே தண்டனை கொடுக்காதே...அது எனக்கும் தான் டி தண்டனை" என்றவனை விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள். 'ஆம் அதை எப்படி மறந்தேன்? என்னுடைய விலகல் அவனுக்கும் தானே தண்டனை' என்று யோசித்தவள் அவன் மார்பில் சிறிது நேரம் அப்படியே ஒன்றி இருந்தாள். அந்த ஆறுதல் அவளுக்கும் அதே சமயம் அவனுக்கும் தேவைப்பட்டது.

அப்படியே இருவரும் காமம் இன்றிய ஆறுதலுடனான அணைவுடன் இருந்தார்கள். சிறிது நேரத்தில் அவளை விட்டு விலகிய கெளதம், "பீச்சுக்கு போவோமா?" என்று கேட்க, "இப்போவா? நேரம் 10 மணி ஆயிடுச்சு" என்றாள்.

"இன்று பௌர்ணமி... இப்போ போனா அழகா இருக்கும்." என்றவன் காரை கடற்கரைக்கு செலுத்தினான். இரவு நேரத்தில் ரேடியோவை உயிர்ப்பிக்க அதில், "ஒன்றா இரண்டா ஆசைகள்..." என்ற பாடல் ஒலிபரப்பானது.

அது கௌதமுக்கு வெவ்வேறு எண்ணங்களை உருவாக்க ரேடியோவை அணைத்து விட்டான். "இப்போ எதுக்கு ஆப் பண்ணுறீங்க? நல்ல பாட்டு" என்றவள் திரும்ப ரேடியோவை போட, 'மனுஷனை கொல்றாளே' என்று நினைத்தவன் மௌனமாகவே வந்தான். சிறிது நேரத்தில் அவளை அவன் திரும்பி பார்க்க அவளோ கண்கள் மூடி பாட்டை ரசித்துக் கொண்டிருந்தாள்.

பைஜாமாவும் டிஷர்ட்டும் போட்டு இருந்தவள் அவள் அழகில் தன்னை இழந்தவன் அவளை உச்சி முதல் பாதம் வரை அணுவணுவாக ரசித்தான்.

கண் மூடி பாடலை ரசித்தவளை அணைத்து சரசமாட தோன்றிய உணர்வுகளை கட்டுப் படுத்த முடியாமல் தவித்தவன், தலையை உலுக்கி தன்னை சமநிலைப் படுத்திய பின் காரை வேகமாக செலுத்தி சிறிது நேரத்தில் கடற்கரையை அடைந்து விட்டான்.

அப்போதும் அவள் கண் மூடி பாடலில் லயித்திருக்க, "கயல்" என்று காற்றுக்கும் வலிக்காத குரலில் அழைக்க கண்களை திறந்தவள், "கடற்கரை வந்துடுச்சா?" என்றபடி இறங்கினாள்.

இருவரும் இறங்கினாலும் இந்த தடவை கெளதம் அவளை நெருங்க தயங்கினான். அதற்கு காரணம் அவனுள் தாப உணர்வு கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருந்தது.

அவன் தள்ளி வருவதை விரும்பாதவள் அவனுடன் நெருங்கி அவன் கையை பிடித்து நடக்க அவனுக்கோ அது சங்கடமாகி போனது. கால் புதைய ஓரிருவரை தவிர ஆளரவமில்லா கடற்கரை மணலில் நடந்தவர்கள் கடல் நீரை நெருங்கியதும் அங்கு நின்று பௌர்ணமி நிலவை ரசிக்க தொடங்கினார்கள். அழகான பௌர்ணமி நிலவை பார்த்த கயல், "வாவ்" என்றபடி அவன் கையை விட்டு முன்னால் கண்களை விரித்தபடி ரெண்டடி நடந்துச் சென்றாள்.

அன்று பௌர்ணமி ஆதலால் நிலவு ஒளி கடல் நீரில் பட்டு அவ்விடத்தையே ஒளிர செய்தது. அவனை திரும்பி பார்த்தவள், "அழகா இருக்கு கெளதம்" என்றபடி நிலவை ரசித்து பார்க்க தொடங்கினாள். அவள் முகம் இருளில் தெளிவாக தெரியா விட்டாலும் நிலவொளியில் தெரிந்த அவளின் வரி வடிவம் அவனை பித்து பிடிக்க செய்தது.

பொறுமை இழந்தவன் அவள் பின்னால் அவளை நெருங்கி பைஜாமாவுக்கும் டிஷர்ட்டுக்கும் இடையில் இருந்த வெற்றிடையில் கைகளை வைத்து அதில் கோலம் போட்ட படி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

நிலவை ரசித்தவளுக்கு தன்னவனின் நடவடிக்கை சிலிர்ப்பை உண்டாக்க அவனை நோக்கி முற்றாக திரும்பினாள்.

அவனோ, "இதுக்கு மேல முடியாதுடி" என்றபடி அவள் கழுத்தை பிடித்து முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தி அவள் இதழ்களை அழுத்தமாக கவ்விக் கொண்டான்.

காதல் கொண்ட அவள் மனதும் குற்ற உணர்வை தூக்கி எறிந்து விட்டு அவன் செய்கைக்கு சளைக்காமல் உடன்பட்டது.

நீண்ட நெடிய முத்தத்தின் பின் அவனை தன்னிடம் இருந்து பிரித்தவள் அங்கங்கே தென்பட்ட இருவரை காட்டி, "யாரும் பார்க்க போறாங்க" என்றவளிடம், "அவ்வளவு தெளிவா தெரியாதுனாலும் வா போவோம்" என்று சிரித்தபடி சொன்னவன் அவளிடையை அணைத்தபடி காரை நோக்கி நடக்க தொடங்க அவளோ தன்னவன் மார்பில் சாய்ந்து நடக்க தொடங்கினாள்.

காரை அடைந்ததும் பின் கதவை திறந்து விட்டவன், "கயல் ஏறு" என்றான். "எதுக்கு பின்னுக்கு ? முன்னால் இருக்கிறேனே ப்ளீஸ்" என்றவளிடம், "தொண தொண என்று பேசாம ஏறுடி... இல்லாட்டி இங்க வச்சே கிஸ் பண்ணுவேன்" என்றபடி அவள் முகம் நோக்கி குனிய, "செஞ்சாலும் செய்வீங்க" என்றபடி அவனை தள்ளி விட்டு அவள் உள்ளே ஏறினாள்.

அவள் பின்னால் அவன் ஏற அதிர்ந்தவள், "நீங்க டிரைவ் பண்ணலையா?" என்று கேட்டாள்.

"எனக்கு இதுக்கு மேல பொறுமை இல்லடி" என்றவன் அவள் இதழ்களை தன் இதழ்களுக்குள் புதைத்துக் கொண்டான்.

அவன் இதழ்களும் கைகளும் மேனியில் அத்து மீற அவளும் அதற்கு ஏற்ப நெகிழ தொடங்கினாள்.

கார் சீட் மஞ்சமாக அங்கே அழகான இல்லறம் மலர்ந்தது.

சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு புறப்பட்டவர்கள் மேலும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. வெட்கத்தில் கன்னங்கள் சிவந்த கயல் அவன் புறம் மறந்தும் தலையை திருப்பவில்லை.

அவனும் அவள் வெட்கத்தை உணர்ந்து அவளிடம் எதுவும் பேசாமல் சிரித்தபடியே வண்டி ஓட்டினான். அவன் சிரிப்பதன் காரணம் அறிந்தவளுக்கு வெட்கம் பிடிங்கி தின்றது.

சிறிது நேரத்தில் வண்டி கௌதமின் கெஸ்ட் ஹவுஸை அடைந்தது.

அவள் ஒரே ஒரு முறை விஷ்வாவுடன் வந்த இடம். அவள் அவனை அதிர்ச்சியுடன் பார்க்க அந்த அதிர்ச்சிக்கான காரணம் அறிந்தவன், "உங்க வீட்ல நிறைய தொந்தரவு" என்றான் கண்ணடித்தபடி.அவன் பதிலின் காரணம் அறிந்தவள், 'நம்மள சங்கட படுத்துறதே வேலையா போச்சு' என்று நினைத்தபடி அவன் அறைக்குள் அவன் பின்னால் குனிந்தபடி சென்றாள்.

கதவை திறந்து மின் விளக்கை போட்டதும் இன்பமாக அதிர்ந்தாள் கயல்விழி. அறை முழுதும் நிறைந்திருந்த அவளின் புகைப்படம் பறைசாற்றியது அவள் மேல் அவன் கொண்ட எல்லையில்லாத அன்பை. எதிரியின் மகளாயினும் அவள் மேல் அவன் வைத்திருந்தது மாசற்ற அன்பு.

இதற்கு என்ன கைமாறு செய்வதென்று அறியாமல் தவித்தவள் கண்களில் சந்தோஷத்தில் கண்ணீர் வழிய அவனை திரும்பி பார்த்தாள். அவனோ சாத்திய கதவில் சாய்ந்து அவளையே சிரித்தப்படி பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனை நோக்கி வேகமாக வந்தவள் அவன் ஷர்ட் காலரை பிடித்து அவன் முகத்தை தன்னை நோக்கி இழுத்தவள் அவன் முகம் முழுவதும் முத்த மழை பொழிந்தாள்.

அவளின் எதிர் பார்க்காத ஆக்ரோஷமான முத்த தாக்குதலில் அதிர்ந்தவன் அதிலேயே மூழ்கி போனான்.

அவர்களின் காதல் விளையாட்டு மீண்டும் ஆரம்பமானது. 14 வயதிலிருந்து ஆரம்பித்த காதலையும் திருமணம் முடித்தும் பிரிந்திருந்த ஏக்கத்தையும் ஒரே நாளில் ஈடு கட்டும் முகமாக அன்று முழுதும் கெளதம் அவளை விடவில்லை. மீண்டும் மீண்டும் அவளை நாடியவன் அவளாக வாய் திறந்து, "தூங்கலாமா ? ப்ளீஸ்" என்று கேட்ட பிறகே அவளிடமிருந்து விலகினான்.

விலகியவன் சிரித்தபடி, "இப்போவும் நான் ஒர்த் இல்லாதவனா?" என்று கண் சிமிட்டி குறும்பாக கேட்க அவளோ அவன் மார்பில் படுத்தபடி, "அப்படி கனவுல கூட நினைக்க மாட்டேன்" என்று வெட்கத்துடன் சொன்னாள். அன்று முழுதும் அங்கேயே தூங்கி அடுத்த நாள் தாமதமாக எழுந்தவர்கள் சாணக்கியன் வீட்டுக்குச் செல்ல புறப்பட்டனர்.

"எனக்கு சங்கடமா இருக்கு கெளதம்... ஏன் நேற்று வரல என்று கேட்பாங்களே... நான் என்ன சொல்றது?" என்று தயங்கியவளிடம், "நானும் நீயும் புருஷன் பொண்டாட்டி...யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க. நான் உன் அண்ணாவிடம் வரமாட்டோம்னு மெசேஜ் போட்டுட்டேன்." என்றதும் கொஞ்சம் நிம்மதி அடைந்தாள்.

இருவரும் அங்கே சென்றதும் ஹாலில் இருந்த மித்ரா, "என்னம்மா பிரெண்ட் கூட நேற்று போய் இன்னைக்கு தான் வர்ற போல இருக்கு" என்று கிண்டலாக சொல்ல, கயலோ கௌதமை பார்க்க அவனோ தனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லாத போல சாணக்கியனிடம் சென்று கதைக்க தொடங்கினான். 'அடப்பாவி இப்படி மாட்டி விட்டுட்டியேடா' என்று மனதுக்குள் நினைத்தவள், "என் புருஷன் கூட தானே போனேன்." என்றதும் கௌதமின் பார்வை மெச்சுதலாக அவள் மேல் பட்டு மீண்டது.

அவள் கதையை கேட்டு அனைவரும் சிரிக்க அவளோ, "இப்போ என்ன சொல்லிட்டேன்னு சிரிக்கிறீங்க? உண்மையை தானே சொன்னேன்" என்றாள்.

இவ்வாறே சந்தோஷத்துடன் நாட்கள் செல்ல வசுந்தராவின் பிரசவ நாளும் வந்தது. அன்று சாணக்கியன் இறந்து பிறந்தான். அருகிலிருந்து பிரசவம் பார்த்தவன், "வசு நமக்கு ஒரு பையன் போதும்" என்று கறாராக சொல்ல அவளும் அதை அரை மனதாக ஏற்றுக் கொண்டாள். மகனுக்கு இருவரும் சர்வேஷ் என்று பெயர் சூட்டினர்.

மற்றைய இரு ஜோடிகளும் வாழ்க்கையை அனுபவிப்போம் பேர்வழி என்று இரு வருடங்கள் கடத்தி இருந்தனர். ஒரு நாள் சித்ரா இரு ஜோடிகளையும் திட்டிய பின்னர் தான் குழந்தை பெற முடிவெடுத்தனர்.

ஒரு நாள் அறைக்குள் வந்த கெளதம் பூந்தி லட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த கயலிடம், "எனக்கும் தா டி" என்று கேட்க கடைசியாக இருந்த லட்டை வாய்க்குள் போட்டு விட்டு அவனை பார்த்து கண்ணடித்தாள்.

"எப்படி சாப்பிட்டு காட்டுறேன் பாரு" என்றபடி அவளை இழுத்து அவள் இதழ் நோக்கி குனிந்து சிறிது நேரத்தில் பூந்தி லட்டு அவன் வாய்க்குள் இடம் மாறி இருந்தது.

அவன் செயலில், "ச்சீ... போங்க" என்று வெட்கப்பட்டவள் அவனுடனேயே ஒன்றி போனாள். அவனும் சிரித்தபடியே அவளை அணைத்துக் கொண்டான்.

இப்படியே நாட்கள் நகர,

ஒரு நாள் காலையில் கயல்விழி தனது தாயிடம், "அம்மா ஒரு குட் நியூஸ்..." என்றவள் கையிலிருந்த ப்ரக்னன்சி ஸ்டிக்கை காட்ட பக்கத்தில் இருந்த விஷ்வா அதிர்ச்சியுடன் தன் கையிலிருந்த ஸ்டிக்கை கயலிடம் காட்டினான்.

ஒரே நேரத்தில் ரெட்டை சந்தோஷத்தில் திளைத்தவர்கள் விஷ்வாவை கலாய்க்கும் பொருட்டு, "நீ ஏன் டா ஸ்டிக்குடன் நிக்குற? நீ ப்ரெக்னன்ட்டா? இல்ல மித்ரா ப்ரக்னன்ட்டா?" என்று கயல் கலாய்க்க, "போடி" என்று வெட்கப்பட்டான் விஷ்வா.

மித்ராவிடம் வேலையை விட சொல்லி விஷ்வா எவ்வளவோ கெஞ்சியும் மித்ரா வேலை செய்ய ஆசைப்பட வேறு வழி இல்லாமல் விருதாச்சலத்தை பிடித்த விஷ்வா அவளுக்கு போலீஸ் நிலைய அலுவலக வேலை வாங்கி கொடுத்திருந்தான்.

நாட்கள் செல்ல இரு வீட்டார் ஆசிர்வாதத்தோடு ஒரே நாளில் இருவருக்கும் வளைகாப்பு வெகு விமரிசையாக நடந்தது.

சொல்லி வைத்தது போல் ஒரே நாளில் இருவருக்கும் பிரசவ வலி ஏற்பட டாக்டர் ஆன விஷ்வா தான் அதிகம் தவித்து போனான். மித்ராவின் கணவனாகவும் கயலின் அண்ணனாகவும் பொறுப்புள்ள டாக்டராகவும் இருந்த அவனுக்கு இருவருக்கும் பிரசவம் முடியும் வரை நிம்மதியே இருக்கவில்லை.

இருவரும் ஒருவாறு தத்தமது குழந்தைகளை பெற்று எடுக்க, மித்ரா தனது மகளுக்கு, "மதுரா" என்ற பெயரை சூட்டினாள். கயல்விழி, "விதுரன்" என்ற பெயரில் ஆண் ஒன்றும் "இலக்கியா" என்ற பெயரில் பெண் ஒன்றுமாக ரெட்டை குழந்தைகளை அதே நாளில் பெற்றெடுத்தாள்.

தன் தந்தையால் இரு உயிர்களை இழந்த கௌதமுக்கு ஒரே நேரத்தில் இரு குழந்தைகளை பரிசளித்து தன் கைமாறை செய்திருந்தாள் கயல்விழி.

சர்வேஷ் சாணக்கியனின் அச்சு வார்ப்பாக சிறந்த அரசியல்வாதியாகவும், இலக்கியா தந்தை கௌதமின் திறமையையும் அத்தையான மித்ராவின் நேர்மையும் ஒருங்கே கொண்ட போலீசாகவும் திகழ்ந்து சாணக்கியனும் கெளதமும் இந்த கதையில் எழுதிய நட்பு சாசனத்தை அவர்களின் புத்திரர்கள் காதல் சாசனமாக அடுத்த கதையில் எழுதுவார்கள்.



முற்றும்..


 
Top