ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 29

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 29

இப்படியே ஒரு வாரம் கடந்து இருக்கும், இன்னுமே ஆதிரையாழ் மற்றும் சர்வஜித்தின் ஊடல் அப்படியே தான் இருந்தது...

அது மருதநாயகம் கண்ணிலும் பட தவறவே இல்லை...

அன்று அவர்கள் ஊர்க் கோவிலில் திருவிழா...

முதல் நாளே, "நாளைக்கு கோவில் திருவிழாக்கு போகணும்பா" என்று சொல்லி விட்டார் மருதநாயகம்...

சர்வஜித்தும் அடுத்த நாள் காலையில் எழுந்து ரணதீரனுடன் ஆயத்தமாகி இருந்தான்...

இருவரும் வேஷ்டி கட்டி, ஒரே நிற நீல நிற ஷேர்ட் அணிந்து இருந்தார்கள்...

சர்வஜித் கண்ணாடி முன்னே நின்று ஷேர்ட்டை முட்டி வரை மடித்துக் கொண்டிருக்க, அவன் முன்னே நின்ற ரணதீரனோ, "எனக்கு எதுக்கு குட்டி கை ஷேர்ட், உங்கள போல மடிக்க முடியல பாருங்களேன்பா" என்றான்...

"நீ சின்ன பையன்டா, கொஞ்சம் வளர்ந்ததும் ஃபுல் ஸ்லீவ் போட்டுக்கலாம்" என்று சொல்லிக் கொண்டே, தலையை கையால் கோதிக் கொள்ள, முன்னே நின்ற ரணதீரனும் தலையை கையால் கோதிக் கொண்டான்...

சர்வஜித்தோ சிரித்துக் கொண்டே, தனது மீசையை முறுக்கிக் கொள்ள, அவனை கண்ணாடியூடு முறைத்த ரணதீரனோ, "நானும் வளர்ந்து மீசையை முறுக்கி விடுறேன்" என்று சொல்லிக் கொண்டான்...

இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டே இருந்த சமயம், அறைக்குள் நுழைந்தாள் ஆதிரையாழ்...

ரணதீரனைப் பார்த்து, "தாத்தா வர சொன்னார்டா" என்று சொல்ல, அவனும், சர்வஜித்தின் கையை பிடித்துக் கொண்டே நடந்து வந்தான்...

அவர்கள் வரும் வரை அவள் காத்து நிற்கவில்லை...

கீழே இறங்கி விட்டாள்.

அவளை தொடர்ந்து தான் சர்வஜித்தும் ரணதீரனும் நடந்து வந்தார்கள்...

கீழே ஊன்றுகோலுடன் நின்று இருந்த மருதநாயகமோ புன்னகையுடன், "சீக்கிரம் வாங்க, திருவிழா தொடங்க போகுது" என்று சொல்லி அழைத்துச் சென்றார்...

காரை முத்து ஓட்டிக் கொண்டே செல்ல, மருதநாயகம் முன்னால் அமர்ந்து விட்டார்...

ஜன்னல் ஓரத்தில் இருக்க போவதாக கூறி ரணதீரன் சர்வஜித்தின் மடியில் அமர்ந்து விட, அவன் அருகே அமர்ந்தாள் ஆதிரையாழ்...

இடைவெளி விட்டு தான் அமர்ந்து இருந்தாள்.

ரணதீரனோ, "அம்மா பக்கத்துல வாங்க" என்று அழைத்த போதும், அவளோ, "இல்லடா நான் வெளியே பார்த்துட்டு வரேன்" என்று சொல்லி விட்டு அமர்ந்து விட்டாள்.

சர்வஜித் பக்கவாட்டாக திரும்பி இருவருக்கும் இடையான இடைவெளியை பார்த்து விட்டு, கார் ஜன்னலினூடு வெளியே பார்க்க ஆரம்பித்து விட்டான்...

போகும் வழியில், "முத்து காரை நிறுத்து... இது நம்ம நல்லம்மா தானே... கோவிலுக்கு கைக்குழந்தையோட நடந்து போறானு நினைக்கிறேன்" என்று மருதநாயகம் சொல்ல, முத்துவும் காரை நிறுத்தினான்...

மருதநாயகமோ தலையை வெளியே விட்டு கோவிலுக்கு நடந்து போன நல்லம்மாவை பார்த்தவர், "கோவிலுக்கு தானே புள்ள போற... இந்த வெயில்ல குழந்தைக்கு தலைல துண்டு கூட போடாம தூக்கிட்டு போற... வண்டில ஏறு" என்று சொன்னவரின் குரலில், கண்டிப்பும் கரிசனையும் சேர்ந்து எதிரொலித்தது...

"நன்றிங்க ஐயா" என்று அவள் சொல்லிக் கொண்டே, காரின் பின் பக்கம் பார்க்க, அதற்குள் இருந்த ஆதிரையாழோ காரின் கதவை திறந்து விட்டவள், "குழந்தையை கொடுங்க அக்கா" என்று சொல்லிக் கொண்டே குழந்தையை வாங்கியபடி நகர்ந்து இருக்க, நல்லம்மாவும் உள்ளே ஏறிக் கொண்டாள்...

மூவரும் சீட்டில் இருக்க வேண்டும் என்றால் நெருங்கி தான் இருக்க வேண்டும்...

இந்த நேரத்தில் சர்வஜித் அருகே இருக்க முடியாது என்று ஆதிரையாழினால் அடம் பிடிக்கவும் முடியாது...

வேறு வழி இல்லாமல் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டே, அவனை நெருங்கி இருந்தாள்.

அவன் கையை மடியில் வைத்து இருந்தது இடத்தை குறைத்து இருக்க, அவனோ கையை தூக்கி சீட்டில் வைத்துக் கொள்ள, இப்போது அவன் மார்பில் அவள் தோள்கள் பட அமர வேண்டிய நிலை...

ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே நெருங்கி இருந்தாள்.

கடுப்பாக தான் இருந்தது...

காட்டிக் கொள்ள முடியவில்லை...

சர்வஜித்தோ குரலை செருமிக் கொண்டே, ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டான்...

அவள் அருகாமையில் அவனது உணர்வுகளின் ஆர்ப்பரிப்பு மீண்டும்...

அவள் தலையில் இருந்த மல்லிகைப்பூ வாசம் அவனை ஈர்த்தது...

ஏதேதோ நினைவுகள்...

அவளை ஆட்கொண்ட நினைவுகள்...

இரவு பகல் பாராது பிணைந்து இருந்த நினைவுகள்...

அவள் இதழில் தேன் பருகிய நினைவுகள்...

அப்பப்பப்பா எத்தனை நினைவுகள், அதற்குள் எத்தனை உணர்வுகள்...

நிலை கொள்ள முடியவில்லை அவனால்...

கஷ்டப்பட்டு தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தான்...

'கோவிலுக்கு போகும் போது வர்ற நினைப்பை பாரு' என்று அவன் மனசாட்சியே அவனுக்கு காறித் துப்பியது...

ஆதிரையாழுக்கோ அவனுடன் நெருங்கி இருப்பது தவிப்பாக இருந்தது...

எப்போது கோவில் வரும் என்கின்ற மனநிலை தான்...

அவள் மடியில் இருந்த குழந்தையோ அவளை திரும்பி பார்த்து சிரிக்க, அவள் கவனமும் குழந்தை மீது இடம் மாறியது...

தனது மடியில் இருந்த பெண் குழந்தையை ஆதிரையாழ் கொஞ்ச அவளுக்கு அருகே இருந்த நல்லம்மாவோ, "அது தான் உன் மாமா வந்துட்டாருல்ல... அடுத்து ஒரு பொட்ட புள்ளய பெத்துக்கலாமே" என்றாள்.

ரணதீரனோ சர்வஜித்தின் மடியில் இருந்தவாறே உடலை வளைத்து பெண் குழந்தையை முத்தமிட்டவன், "அம்மா எனக்கும் ஒரு தங்கச்சி பாப்பா வேணும்... என் கூட படிக்கிறவங்க எல்லாருக்கும் தங்கச்சி பாப்பா இருக்கு" என்றான்.

ஒரே நேரத்தில் இருவரிடம் இருந்து ஒரே கருத்துக்கள்.. கடுப்பாக இருந்தது ஆதிரையாழுக்கு... ஆனால் பதில் பேச முடியாத நிலைமை.

மௌனமாக இருந்தாள்... காரில் முன்னால் அமர்ந்து இருந்த மருதநாயகமோ, "அப்படி கேளுடா தீரா..." என்று உசுப்பேத்தி விட அவனோ, "நான் அப்பா கிட்ட கேக்கிறேன்... அவர் தான் எல்லாமே வாங்கி கொடுக்கிறார்" என்று சொல்லிக் கொண்டே சர்வஜித்தை திரும்பி பார்த்தவன், "அப்பா எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா" என்றான்.

சர்வஜித்தோ குரலை செருமியவன், "நீ கேட்டு நான் இல்லனு சொல்லுவேனா??" என்று முடிக்கவில்லை, அவனை பக்கவாட்டாக திரும்பி முறைத்து இருந்தாள் ஆதிரையாழ்...

அசரவில்லை அவன்... அவளை அழுத்தமாக பார்க்க, "அப்புறம் என்ன யாழ்? சட்டு புட்டுனு அடுத்த குழந்தையை பெத்துக்கோங்க" என்றாள் நல்லம்மா...

"இல்லக்கா இப்போ வேணாம்" என்று அவள் முடிக்கவில்லை... "ஏன்" என்கின்ற கேள்வி...

கேட்டது என்னவோ சர்வஜித் தான்... மறைமுகமாக தனது எதிர்பார்ப்பை கூறி விட்டான்... அவனும் எத்தனை நாட்கள் தான் அவளை சட்டை செய்யாதது போலவே நடிக்க முடியும்?

அவனை முறைத்து பார்த்துக் கொண்டே அவனை நெருங்கி சீட்டில் சாய்ந்து இருந்த ஆதிரையாழோ, "குழந்தையை கொடுத்துட்டு நீங்க ஓடி போயிடுவீங்க... நான் என்ன பண்ணுறது..?" என்று கேட்டாள் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்...

ஓடி போனான் என்கின்ற வார்த்தை அவனை வலிக்க வலிக்க அடித்தது...

அவள் மேல் கோபமும் வந்தது... ஆனால் கோபத்தை காட்டவும் முடியாது... குரலை உயர்த்தி பேசவும் முடியாது...

"நான் ஒன்னும் ஓடி போகல..." என்றான் அழுத்தமாக ரகசிய குரலில்...

"நீங்க ஒத்துக்கலைனாலும் அதான் நிஜம்" என்றாள் சற்றும் அசராமல்...

"என்னடி கடுப்பேத்துறியா??" என்று கேட்டான்...

"உண்மையை தான் சொன்னேன்" என்றாள்...

எப்படி எல்லாம் பேசுகிறாள்...

இப்படி எல்லாம் அவளுக்கு பேச வருமா என்று இருந்தது அவனுக்கு...

ஒரு வார்த்தை திருப்பி பேச யோசிப்பவள், இன்று அவன் வாயை அடைக்கும் அளவுக்கு பேசிக் கொண்டு இருக்கிறாள் அல்லவா? சுற்றி ஆட்கள் இல்லை என்றால் இன்னும் ஆழமாக பேசி இருப்பாள்...

அவள் வடு அவ்வளவு ஆழமானது...

அவளுக்கு பதில் பேச அவனிடம் பதிலும் இல்லை...

அவன் பக்கம் நியாயமும் இல்லை

மௌனியாகி விட்டான்.

அவளை அழுத்தமாக பார்த்து விட்டு ஜன்னலினூடு வெளியே பார்க்க ஆரம்பித்து விட்டான்.

சற்று முன்னர் அவள் மேல் தோன்றிய உணர்வுகள் எல்லாம் இப்போது வடிந்து இருக்க, மனதில் பாரம் ஏறியது...

அவன் மனமாற்றத்தை அவள் புரிந்துக் கொள்ள போவதும் இல்லை... புரிந்துக் கொள்ளும் அளவுக்கு அவன் இதுவரை நடந்துக் கொள்ளவும் இல்லை...

மருதநாயகம் தன்னை ஏற்றுக் கொண்டாலும் அவள் ஏற்றுக் கொள்ள வாய்ப்பில்லை என்று புரிந்தது...

முகத்தில் ஒரு இறுக்கம்...

அப்படியே அமர்ந்து இருந்தான்...

சிறிது நேரத்தில் கோவிலும் வந்து விட எல்லாருமே இறங்கிக் கொண்டார்கள்...

ரணதீரன் சர்வஜித்தின் கையை விடவே இல்லை...

"அப்பா அப்பா" என்று ஒன்றியபடி இருந்தான்...

அவன் எவ்வளவு தூரம் தனக்காக ஏங்கி இருக்கின்றான் என்று சர்வஜித்துக்கு தினமும் புரிய வைத்து அவன் குற்ற உணர்வை கூட்டிக் கொண்டு தான் இருந்தான்...

இப்படியே அனைவரும் சேர்ந்து சாமி கும்பிட்டு விட்டு, அங்கே இருந்த மர நிழலில் அமர்ந்துக் கொண்டார்கள்...

மருதநாயகம் நிறைய பேருக்கு உதவி செய்வதால் அவரை தேடி வந்து பேசினார்கள்...

வந்தவர்களிடம் எல்லாம், "என் பேரன் வந்துட்டான், என் பேரன் வந்துட்டான்" என்று சர்வஜித்தைக் காட்டி சொல்லிக் கொண்டே இருந்தார்...

ரணதீரனுக்கு இருக்கும் அதே உணர்வு தான் அவருக்கும்...

என்ன ஒன்று வயது தான் வித்தியாசம்...

இதே சமயம் ரணதீரனோ, "அப்பா, கடை தெருவுக்கு போகலாம்பா" என்றான்...

சர்வஜித்தோ, "சரி வா" என்று சொல்லிக் கொண்டே எழுந்துக் கொள்ள, மருதநாயகமோ, "யாழையும் கூட்டிட்டு போப்பா, அவளும் ஏதாவது வாங்குவா" என்று சொன்னார்...

"இல்ல தாத்தா நான் இங்கேயே இருக்கிறேன்" என்றாள் ஆதிரையாழ்...

"அம்மா வாங்க" என்று ரணதீரன் ஆரம்பித்து விட்டான்...

வேறு வழி இல்லை... போய் தான் ஆக வேண்டும்...

ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டே எழுந்துக் கொண்டாள்.

ரணதீரனை சர்வஜித் தூக்கிக் கொண்டே செல்ல, அவன் அருகே தான் ஆதிரையாழ் நடந்து வந்தாள்.

விலகி விலகி நடந்தாலும் சன நெரிசலில் இருவரின் தோள்களும் தங்களையும் மீறி உரசிக் கொண்டன...

அப்படியே அங்கே இருந்த ஐஸ்க்ரீம் கடைக்குச் சென்ற சர்வஜித்தோ ரணதீரனுக்கு ஐஸ்க்ரீமை வாங்கி கொடுத்து விட்டு, ஆதிரையாழை பார்த்தவன், "உனக்கும் வேணுமா?" என்று கேட்டான்...

அவளோ இல்லை என்று சொல்லி விட்டு வேறு எங்கோ பார்க்க, அவனும் ரணதீரனை தூக்கிக் கொண்டே நடக்க ஆரம்பித்து விட்டான்...

கடைகளில் அவன் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தான்...

அவர்கள் இருவரும் விளையாட்டு பொருள் ஒன்று வாங்கிக் கொண்டு இருக்க, ஆதிரையாழ் அருகே இருந்த கடையில் கொலுசு ஒன்றைப் பார்த்துக் கொண்டே நின்று இருந்தாள்...

அழகாக இருந்தது... அவளுக்கு பிடித்தும் இருந்தது...

விலையை கேட்டவளோ கையில் இருந்த தனது பர்ஸை திறந்து பார்த்தாள்...

பணம் பெரிதாக எடுத்து வரவில்லை அவள்...

"அப்புறம் வாங்கிக்கிறேன்" என்று சொல்லி விட, சற்று தள்ளி அவளை பார்த்துக் கொண்டு நின்ற சர்வஜித்தோ, "நான் பணம் கொடுக்கிறேன், நீ வாங்கிக்கோ" என்றான்...

அவளோ அவனை திரும்பி அழுத்தமாக பார்த்தவள், "பணம் கொடுத்தா நீங்க என் கிட்ட இருந்து வேற ஒன்னு எதிர்பார்ப்பீங்களே" என்றாள்.

அவனுக்கு புரிந்து விட்டது...

அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, "பணம் கொடுக்கலனாலும் உன் கிட்ட எதிர்பார்ப்பேன்" என்றான்...

தனது மனதை சொல்லி விட்டான்...

அவளிடம் முறைப்பு மட்டுமே...

அங்கிருந்து விறு விறுவென நடந்துச் சென்றாள்.

சர்வஜித்தோ பெருமூச்சுடன் ரணதீரனை தூக்கிக் கொண்டே, அவளை பின் தொடர்ந்துச் சென்றான்...

இதே சமயம் ஆதிரையாழுக்கு முன்னே வந்த சில பையன்களில் ஒருவன், தனது கரத்தை நீட்டி ஆதிரையாழின் கையில் சன நெரிசலின் மத்தியில் கிள்ளி விட்டான்... அவள் தனியே வந்த எண்ணத்தில் தான் அத்து மீறி விட்டார்கள்...

ஆதிரையாழுக்கோ தூக்கி வாரிப் போட்டது... சட்டென அந்த கூட்டத்தை திரும்பி அனல் தெறிக்க பார்க்க, அதில் இருந்த ஒருவனோ, "இங்க பாருடா கண்ணகி" என்றான்...

இந்த காட்சியோ ஆதிரையாழுக்கு பின்னால் சில அடிகள் இடைவெளி விட்டு வந்த சர்வஜித்தின் கண்ணில் இருந்து தப்பவில்லை...

தன் முன்னாலேயே தனது மனைவியிடம் அத்து மீறினால், எந்த கணவனால் பொறுத்துக் கொள்ள முடியும்...

"ஆதிரா" என்று அழைத்தான்...

அவளும் அந்த கூட்டத்தை முறைத்து விட்டு சர்வஜித்தை திரும்பிப் பார்க்க, அவள் அருகே சென்று ரணதீரனை இறக்கி விட்டவன், "பார்த்துக்கோ" என்று சொல்லிக் கொண்டே, ஷேர்ட் கையை மடித்தவாறு நடந்துச் சென்ற கூட்டத்தினரை நோக்கிச் சென்றான்...

கிள்ளியவனை நன்றாக கவனித்து இருந்தான் சர்வஜித்...

அவன் விறு விறுவென செல்வதை பார்த்த ஆதிரையாழோ, 'எங்க போறார்?' என்று யோசித்து முடிக்கவில்லை, கிள்ளியவனின் ஷேர்ட்டை பிடித்து இழுத்த சர்வஜித், அவனுக்கு ஓங்கி ஒரு அறை விட்டான்...

விட்ட அறையில் தடுமாறி அவன் கீழே விழுந்து விட, அவன் ஷேர்ட்டை பிடித்து எழ வைத்த சர்வஜித்தோ, "என் முன்னாடியே என் பொண்டாட்டி மேல கையை வைக்கிறியா?" என்று கேட்டு மீண்டும் ஒரு அறை...

அவன் கன்னம் பழுத்து விட்டது...

ஆஜானுபாகுவாக இருந்தவனை கண்டு அவனும் பயந்து தான் போனான்...

"ஐயோ அண்ணா உங்க பொண்டாட்டியா? என்னை மன்னிச்சிடுங்க, தெரியாம பண்ணிட்டேன்" என்று சொன்னவன் கண்ணில் இருந்து கண்ணீர் விழ, "தெரியாம பண்ணிட்டியா?" என்று கேட்டுக் கொண்டே, அடுத்த அடி அடிக்க போனவன் முன்னே வந்து நின்ற ஆதிரையாழோ, "எதுக்கு இப்படி சண்டை போட்டுட்டு இருக்கீங்க?" என்று பதட்டமாக கேட்டாள்.

"உன் மேல கையை வைக்கிறான்... பார்த்துட்டு இருக்க சொல்றியா?" என்று அவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டே சீறினான் சர்வஜித்...

"ஆறு வருஷமா வராத அக்கறை இப்போ மட்டும் என்ன?" என்று கேட்ட ஆதிரையாழை முறைத்துப் பார்த்தவன், "ஆமாடி, ஆறு வருஷமா அக்கறை இல்ல தான்... அதுக்கு இப்போவும் இருக்க கூடாதுனு அவசியம் இல்லையே" என்று சொல்ல, அடி வாங்கியவனோ, "என்னை விட்ரு ண்ணா" என்று சர்வஜித்தின் காலிலேயே விழுந்து விட்டான்...

கூட்டமும் மெதுவாக அவ்விடம் கூடி விட, "போடா" என்று அவனுக்கு திட்டி விட்டு ஆதிரையாழை முறைத்தவனோ, அவள் அருகே நின்று இருந்த ரணதீரனை தூக்கியவன், "இப்போ சொல்றேன் கேட்டுக்கோ, உன் மேல என்னை தவிர கையை வைக்க எவனுக்கும் உரிமை இல்லை... வச்சா அவன் தலையை சீவிடுவேன்... நீ என்ன பேசுனாலும் ஐ டோன்ட் கெயார்" என்று ஆதிரையாழிடம் சொல்லி விட்டு விறு விறுவென நடந்து விட, ஆதிரையாழோ சுற்றி இருந்த கூட்டத்தை சங்கடமாக பார்த்துக் கொண்டே, சர்வஜித்தின் பின்னால் சென்றாள்.
 
CRVS2797

Active member
உனக்குள் உறையும் அனல் நானடி...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 29)

அடேயப்பா...! ரொம்பத்தான் பொண்டாட்டி மேல அக்கறை, ஆனா வார்த்தையில இல்லை சக்கரை. என்னவொரு தெனாவெட்டு இருந்தா அடுத்த குழந்தைக்கு நூல் விடுவான்...?
முதல் குழந்தை உண்டானதையே கண்டுக்கலை, இதுல ரெண்டாவது குழந்தைக்கு அஸ்திவாரம் போடறான். அதுவும் " குச்சி குச்சி ராக்கம்மா
பொண்ணு வேணும்ன்னுட்டு "
இவன் குழந்தையா இருந்தா
பொண்ணை மதிப்பானாம்..
அதே அடுத்தவங்க பெத்த பொண்ணா இருந்தா ஏறி மிதிப்பானாம், படுத்ததுக்கும்
வாழ்க்கையை கெடுத்ததுக்கும்
பணத்தை அள்ளித் தெறிப்பானாம். இவன் கம்ன்னா... கம்முன்னு வரணும்,
நாட்ன்னா.... நட்டுக்கிட்டு நிக்கணுமாக்கும்.... போடா போடா... வெங்காயத் தலையா...!

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Super sis
 
Top