அத்தியாயம் 27
சாப்பிடும் வரை மௌனம் தான்...
மருதநாயகம் நிறைவாக சாப்பிட்டார்... பேரன் வந்த திருப்தி அவருக்கு...
"இன்னைக்கு தான் ஐயா இவ்ளோ சந்தோஷமா சாப்பிடுறார்" என்று அங்கே வந்த முத்து சொல்ல, சர்வஜித்திடம் இருந்து ஒரு பெருமூச்சு மட்டுமே...
சாப்பிட்டு விட்டு சர்வஜித் ரணதீரனுடனும் மருதநாயகத்துடனும் தோட்டத்தை சுற்றிப் பார்க்க கிளம்பி விட்டான்...
ஆதிரையாழுக்கு மட்டும் இன்னும் சர்வஜித்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை... அதுவும் அவன் கையில் வைத்துச் சென்ற பணத்தின் நினைவு இன்னுமே மனதில் ஆழமாக இருந்தது...
வீட்டிற்குள் அவள் முடங்கி விட்டாள்...
இதே சமயம் ரணதீரன் சர்வஜித்திடம் நிறைய பேசினான்...
விட்ட கதைகள் எல்லாமே பேசினான்...
அவன் தோளில் ஏறி அமர்ந்துக் கொண்டே, தோட்டத்தை சுற்றி பார்த்தான்...
சர்வஜித்துக்கு ஒரு புது உணர்வு...
ஒரு அப்பாவாக அவன் உணர்வுகள் விசித்திரமாக இருந்தன...
ஆனால் பிடித்து இருந்தது...
நீண்ட நேரம் சுற்றி விட்டு, அங்கே இருந்த தேங்காயை பார்த்த ரணதீரனோ, "தாத்தா எனக்கு இளநீர் ஜூஸ் வேணும்" என்றான்...
மருதநாயகமோ அங்கே வேலை செய்தவனிடம், "ரெண்டு தேங்காயை கொண்டு போய் யாழ் கிட்ட ஜூஸ் போட சொல்லி கொடுப்பா" என்று சொல்ல, "நானும் போறேன் நானும் போறேன்" என்று சொல்லிக் கொண்டே வேலை செய்பவனுடன் தேங்காயை தூக்கிக் கொண்டு ரணதீரன் சென்றான்...
மருதநாயகமோ அவனை சிரித்தபடி பார்த்தவரோ, "சரியான சுட்டிப் பையன்..." என்று சொல்லிக் கொண்டே பக்கவாட்டாக திரும்பி சர்வஜித்தைப் பார்த்தார்...
அவன் விழிகளோ ரணதீரனில் அழுத்தமாக படிந்து இருந்தன...
மருதநாயகத்துக்கு அவன் விட்டுச் சென்றத்துக்கு காரணம் கேட்கவோ, சண்டை போடவோ தோன்றவில்லை...
திரும்பி வந்ததே போதும் என்று இருந்தது...
மீண்டும் அவனுடன் முரண்பட்டு அவனை பிரிய அவருக்கு விருப்பம் இல்லை... அதனாலேயே இந்த மௌனம் அவரிடம்...
சர்வஜித்தோ இப்போது அவரை திரும்பி பார்க்க, பெருமூச்சுடன், "நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன் சர்வா... முதல் போல இப்போ எல்லாம் என்னால நடமாட முடியல... வயசாயிடுச்சுல்ல, ஆனா ஒன்னு நான் சாக முதல் உன்னை பார்த்து உன் கைல உன் பையன ஒப்படைச்சுட்டேன்... இப்போ தான் நிம்மதியா இருக்கு..." என்று சொல்லிக் கொண்டே நடக்க, அவரை இமைக்காமல் பார்த்து இருந்தான் சர்வஜித்...
எத்தனையோ வார்த்தைகள் அவன் தொண்டைக்குழிக்குள் அடங்கி போயின...
பெருமூச்சு மட்டுமே...
இதே சமயம், ரணதீரன் கொண்டு வந்த இளநீரினுள், சீனி மற்றும் எலுமிச்சை கலந்து ஐஸ் கட்டி போட்டு பானம் தயாரித்த ஆதிரையாழோ அதனை அங்கே இருந்தவர்களுக்கு கொடுத்தாள்...
உடனே அங்கிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து இருந்த மருதநாயகம், "சர்வா பின்னாடி நிக்குறான்... அவனுக்கும் கொண்டு கொடு யாழ்" என்றார்...
கடுப்பாகி விட்டது அவளுக்கு...
ஆனால் மறுக்க தோன்றவில்லை...
மறுக்கவும் முடியாது...
"ம்ம்" என்று சொல்லிக் கொண்டே, அதனை கப்பில் ஊற்றிக் கொண்டே, அவனை தேடி நடந்தாள்...
கையில் இளநீர் குவளையை எடுத்துச் சென்ற ஆதிரையாழுக்கு சர்வஜித்தை நினைக்க நினைக்க கோபமாக வந்தது...
'ஜூஸ் ஒன்னு தான் குறைச்சல்... இந்த தாத்தா தொல்லை தாங்கவே முடியல' என்று நினைத்துக் கொண்டே தோப்பின் பின் பக்கம் வர, அங்கே வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டே மரங்களை பார்வையிட்டபடி நின்று இருந்தான் சர்வஜித்.
அவன் அருகே வந்தவளோ குரலை செரும அவனோ திரும்பிப் பார்த்தான்.
அவளுக்கு அவனை பார்க்க கூட பிடிக்கவில்லை போலும்...
கையில் இருந்த குவளையை வேறு எங்கோ பார்த்துக் கொண்டே நீட்டினாள்...
அவன் அவளை புருவம் சுருக்கி பார்த்து விட்டு குவளையை வாங்க முனைய அவன் கை தவறுதலாக அவள் கையில் பட்டுவிட்டது...
வெடுக்கென அவள் கையை உருவ பிடிப்பில்லாமல் அவள் கையில் இருந்த குவளை சட்டென மணலில் விழுந்து விட, அவனோ அவளை புருவம் சுருக்கி பார்த்தான்.
அவனை முறைத்துப் பார்த்த ஆதிரையாழோ, "மேல கை வைக்கிற வேலை வச்சுக்க வேணாம்... அருவருப்பா இருக்கு..." என்றாள்...
சுர்ரென்று ஏறியது அவனுக்கு..
அவன் ஒன்றும் ஆசைப்பட்டு எல்லாம் தொடவில்லை... ஆனால் வந்ததில் இருந்தே அவனை அவமானப்படுத்திக் கொண்டல்லவா இருக்கின்றாள்... சாப்பாட்டு தட்டை கூட வேண்டுமென்று அடித்து வைக்கின்றாள்... அவள் இறுதியாக சொன்ன வார்த்தைகள் இன்னுமே அவன் மனதில் ஆழமாக... அதன் விளைவாக அவள் நிராகரிப்பு அவனுக்கு கோபத்தை தான் கொடுத்தது...
அவளை பதிலுக்கு உறுத்து விழித்தவன், "அப்படி தான் கையை வைப்பேன்... என்னடி பண்ணுவ??" என்றான்.
அவளுக்கோ அவன் பேசியது கோபத்தை கூட்ட, "மரியாதை கெட்டுடும்" என்று ஒற்றை விரல் நீட்டி சொன்னவளோ விறு விறுவென செல்ல, சர்வஜித்தை கேட்கவும் வேண்டுமா...
ஆத்திரம் தலைக்கு மேலே ஏறியது... அவள் வார்த்தைகள் அவனுடன் கூடவே பிறந்து இப்போது தூங்கிக் கொண்டு இருந்த ஈகோவை மறுபடி தட்டி எழுப்பி விட்டது...
சுற்றி யாரும் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டவனோ, அங்கிருந்து நகர்ந்தவளது கையை எட்டி பிடித்து அங்கே இருந்த மாமரத்தில் அவளை சாத்தி அவள் மேல் தனது மொத்த மேனியையும் வைத்து அழுத்தியவனோ, அவள் தாடையை ஒற்றைக் கையால் இறுக பற்றினான்.
அவளுக்கோ வலி உயிர் போனது...
"ஆஹ்" என்று அவள் வாயில் இருந்து முனகல்...
"என்னடி சொன்ன?? மரியாதை கெட்டுடுமா??" என்று அழுத்தமாக கேட்டான்.
அவன் பலத்தை மீறி அவளால் வெளியே வர முடியவே இல்லை...
உடலை கொஞ்சம் கூட அசைக்கவும் முடியவில்லை...
அவன் பிடித்து இருந்த தாடை வேறு வலித்தது...
பதில் சொல்லாமல் அவன் விழிகளை பார்த்தாள்... அவனும் அவள் விழிகளை தான் பார்த்து இருந்தான்.
மேலும் தொடர்ந்த சர்வஜித்தோ, "இப்போ நான் நினைச்சா கூட உன்ன என்ன வேணும்னாலும் பண்ணலாம்... கேட்க யாரும் இல்லை... கை பட்டதுக்கே ரொம்ப பேசுற... என் குழந்தையை சுமக்கும் போது இந்த அருவருப்பு எங்க போச்சு??" என்று கேட்டுக் கொண்டே விலகியவனோ, அவளை அழுந்த பார்த்துக் கொண்டே "இன்னும் நீ கடைசியா பேசுன பேச்சு மனசுல இருக்கு... நான் வந்தது தாத்தாவுக்காகவும் என் பையனுக்காகவும் தான்... உனக்காக இல்லை... புரிஞ்சுதா??" என்றான் கர்ஜனையாக...
அவனுக்கு கொஞ்சமும் சலிக்காமல் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டே நின்றவளோ, "நான் பொறுமையா இருக்கிறதும் தாத்தாவுக்காகவும் பையனுக்காகவும் தான்... நீங்க பணம் கொடுத்துட்டு பேசுன பேச்சும் என் மனசுல அப்படியே தான் இருக்கு..." என்று அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டே சொன்னவள் விறு விறுவென அங்கிருந்து செல்ல அவள் முதுகை வெறித்துப் பார்த்தான் சர்வஜித்...
அவள் அங்கிருந்து சென்றதுமே, பெருமூச்சுடன் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டே தென்னை மரத்தில் சாய்ந்து நின்றான்...
கோபப்படக் கூடாது என்று தான் நினைக்கின்றான்...
ஆனாலும் முடியவில்லை...
அவளது நிராகரிப்பை அவனுக்கு ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை...
அருவருப்பு என்று கூறி விட்டாளே...
அந்த கோபம்...
வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி விட்டான்...
தலையை அழுந்த கோதிக் கொண்டே,
'இனி அவ கூட பேசவே போக கூடாது... நம்மள நிதானமாவே இருக்க விடமாட்டேங்குறா' என்று நினைத்துக் கொண்டான்...
இதே சமயம் வீட்டை நோக்கி நடந்துச் சென்றவள் மனமோ, 'இவ்ளோ பண்ணிட்டு இன்னும் திமிரைப் பாரேன்...' என்று திட்டிக் கொண்டே இருந்தது...
அதன் பிறகு, அவள் தனது வேலையை பார்க்கச் சென்று விட்டாள்.
ரணதீரனும் சர்வஜித்துடன் ஒன்றி விட்டான்...
அன்று இரவு சாப்பிட்டு விட்டு, அங்கே ஹாலில் சர்வஜித் அமர்ந்து இருக்க, அவன் மடியில் ரணதீரன் அமர்ந்து இருந்தான்...
மருதநாயகமோ, "அப்போ நான் தூங்குறேன் பா" என்று சொல்லிக் கொண்டே எழுந்து அறைக்குள் செல்ல, ரணதீரனோ, "நான் அப்பா கூட தூங்க போறேன்" என்றான்...
ஆதிரையாழுக்கு சுர்ரென்று ஒரு வலி...
இத்தனை நாள் அவளுடன் படுத்தவன் ஒரே நாளில், அவனுடன் படுக்க போகின்றான் அல்லவா?
அவள் முகம் சட்டென்று வாடிப் போனாலும், எதுவும் சொல்லாமல் நகர முற்பட, "அம்மா எங்க போறீங்க? நீங்களும் வாங்க" என்றான்...
சர்வஜித் அவளது முக மாற்றத்தை பார்த்துக் கொண்டே தான் அமர்ந்து இருந்தான்...
"இல்ல தீரா" என்று ஆதிரையாழ் ஆரம்பிக்க, ரணதீரன் சர்வஜித்தின் மடியில் இருந்து இறங்கி அவள் அருகே ஓடிச் சென்று அவள் கையை பற்றியவன், "அம்மா வாங்க" என்று இழுத்துக் கொண்டே வர, அவளுக்கு மறுக்கவும் முடியவில்லை...
அவனுக்காக மாடி ஏறிச் செல்ல வேண்டிய கட்டாயம்...
சர்வஜித் இருக்கையில் இருந்து எழுந்து, விறு விறுவென மாடியேறிச் செல்ல, அவனை தொடர்ந்து ஆதிரையாழ் விருப்பமே இல்லாமல் ரணதீரனுடன் நடந்தாள்.
இறுதியாக, 'மகனுக்காக செய்வோம்' என்ற மனநிலைக்கு வந்து விட்டாள்.
அறைக்குள் வந்ததுமே, கட்டிலில் ஏறி அமர்ந்த ரணதீரனோ, சர்வஜித்துடன் அமெரிக்காவைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க, அவனோ வியர்வை தாங்க முடியாமல் ஷேர்ட்டை கழட்டினான்...
ஆதிரையாழோ கட்டிலை சரி செய்துக் கொண்டே, தனக்கு பெட்ஷீட்டை கீழே விரித்துக் கொண்டு இருந்த தருணம் அது... பேசிக் கொண்டே இருந்த ரணதீரனின் விழிகள் விரிய, "வாவ், அம்மா இங்க பாருங்க, அப்பாவுக்கும் ஹீரோஸ் போல சிக்ஸ் பேக் இருக்கு" என்று சொல்ல, ஆதிரையாழோ, இருவரையும் திரும்பி பார்க்காமல், தலையணையை எடுத்து போட்டுக் கொண்டே இருந்தாள்.
ரணதீரன் கட்டிலில் இருந்து இறங்கி சர்வஜித்தை நோக்கி ஓடிச் சென்றவன், அவன் படிக்கட்டு தேகத்தை வருடியபடி, "இது எப்படி இருக்கும்னு எனக்கு தொட்டு பார்க்க ஆசை... தாத்தாவுக்கு எல்லாம் தொப்பை தான் இருக்கு..." என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டே அவன் வயிற்றை வருடினான்...
சர்வஜித் மென் புன்னகையுடன், "வளர்ந்ததும், உனக்கும் எப்படி இத மெயின்டெய்ன் பண்ணனும்னு சொல்லி கொடுக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே இருக்க, "ம்ம்... எனக்கும் இது பிடிக்கும்... அம்மா இத தொட்டு பாருங்க, கட்டி கட்டியா இருக்கு" என்று சொல்ல, ஆதிரையாழுக்கு "ஐயோடா" என்று இருந்தது...
அவளோ எப்படி அவன் வாயை அடைப்பது என்று தெரியாமல் மேசையில் இருக்கும் தூசை தட்ட ஆரம்பித்து விட்டாள்.
ஆதிரையாழ் தன்னை கவனிக்கவில்லை என்று சொன்னதுமே, அவள் அருகே சென்று அவள் கையை பிடித்து இழுத்து வந்தான் ரணதீரன்...
அவளோ, "டேய் விடுடா" என்று சொன்னாலும் அவன் கேட்டால் தானே...
சர்வஜித்துக்கும் அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலை...
அப்படியே அங்கிருந்த மேசையில் சாய்ந்து நின்று இருக்க, "அம்மா இங்க தொட்டு பாருங்க" என்று அவள் கையை இழுத்து சர்வஜித்தின் வயிற்றில் வைக்க போக, அவளோ, "டேய் விடுடா" என்று அவசரமாக கையை உருவி எடுத்தாள்.
சர்வஜித்தோ, "உங்க அம்மா ஏற்கனவே தொட்டு பார்த்து இருக்காங்க... அதனால தேவல" என்று சொன்னான்...
அவன் சொன்னது என்னவோ ரணதீரனை கட்டுக்குள் கொண்டு வர தான்...
முக்கியமாக அவளுக்காக தான்...
ஆனால் அந்த வார்த்தைகளின் அர்த்தமே வேறு அல்லவா... சட்டென ஏறிட்டு அவனை முறைத்துப் பார்த்தாள் பெண்ணவள்...
அவள் முறைத்ததும் தான் அவனுக்கு தான் சொன்னதற்கு வேறு அர்த்தம் இருப்பது புரிய, இதழ் குவித்து ஊதிக் கொண்டே, 'இவளுக்கு நான் என்ன சொன்னாலும் தப்பா தான் தோணும்' என்று நினைத்துக் கொண்டவனுக்கு இதற்கு விளக்கம் சொல்லி தன்னை நிரூபிக்க களைப்பாக இருந்தது... அப்படியே விட்டு விட்டான்...
"பரவாயில்லை இப்போ தொட்டு பாருங்க" என்று சொல்லிக் கொண்டே, அவள் அசந்து இருந்த நேரத்தில் அவள் கரத்தை எடுத்து அவன் வயிற்றில் வைத்து விட்டான் ரணதீரன்...
ஆதிரையாழும் இதனை எதிர்பார்க்கவில்லை... சர்வஜித்தும் எதிர்பார்க்கவில்லை...
அவளோ சட்டென்று கையை உருவிக் கொண்டே, சர்வஜித்தைப் பார்க்காமல் விறு விறுவென சென்று கீழே போட்டு இருந்த தனது படுக்கையை சரி செய்ய, சர்வஜித்தோ, ஷேர்ட்டை ஹங்கேரில் போட்டு விட்டு படுக்கச் செல்ல, ரணதீரனோ, "அம்மா ஏன் கீழ படுக்கிறீங்க... மேல வாங்க" என்றான்...
'இவன் அடங்கவே மாட்டானா?' என்று இருந்தது ஆதிரையாழுக்கு...
அவளோ, "இடம் இல்லையே டா" என்று சொல்ல, "இவ்ளோ இடம் இருக்கே" என்று கட்டிலில் உருண்டு காட்டிக் கொண்டே, கட்டிலில் இருந்து இறங்கி அவள் கையை பற்றி இழுத்து வர, அவளுக்கும் வேறு வழி இல்லை... மேலே படுத்துக் கொண்டாள்.
இருவருக்கும் நடுவே ரணதீரன் படுத்து இருக்க, மூவரும் தூங்கிப் போனார்கள்...
அடுத்த நாள் காலையில் சர்வஜித் எழுந்த நேரம் கட்டில் வெறுமையாக இருந்தது...
ரணதீரனும் ஆதிரையாழும் எழுந்து இருந்தார்கள்...
ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டே வெளியே வந்தவன், கீழே இறங்க, "அப்பா இன்னைக்கு என்ன லேட்டா எந்திரிச்சிட்டீங்க" என்று சொல்லிக் கொண்டே பாடசாலைக்குச் செல்ல ஆயத்தமானான்...
"எழுப்பி இருக்கலாமே" என்று சர்வஜித் கேட்க, "களைப்பா இருப்பீங்களாம்னு அம்மா தான் எழுப்ப விடல, என்னை மதியம் நீங்க தான் ஸ்கூல்ல இருந்து கூட்டி வரணும்... உங்கள எல்லாருக்கும் காட்டணும்... இப்போ நான் முத்து மாமாவோட கிளம்புறேன்" என்று சொன்னவனோ, "பை பை" என்று அனைவரிடமும் சொல்லி விட்டு புறப்பட்டு இருக்க, சிரித்துக் கொண்டே சர்வஜித்தைப் பார்த்த மருதநாயகமோ, "குழந்தைங்க வீட்டுக்கே செல்வம் தான்ல" என்று சொல்லிக் கொள்ள சர்வஜித்தும் ஆமோதிப்பாக தலையாட்டினான்...