அத்தியாயம் 23
அவன் காரும் வேகமாக கிளம்பி இருந்தது...
காரில் பயணம் செய்தவனுக்கு இன்னும் அவள் பேசிய பேச்சை ஜீரணிக்க முடியவில்லை...
ஒரே வார்த்தையில் அவனை மொத்தமாக அசிங்கப்படுத்தி விட்டாள் அல்லவா?
ஆழ்ந்த மூச்சை எடுத்து தன்னை அடக்கிக் கொள்ள முனைந்தான்...
இதே சமயம் வீட்டினுள் வந்த ஆதிரையாழுக்கு நிலை கொள்ள முடியவே இல்லை...
தலை சுற்றியது...
சுவற்றை பிடித்து தன்னை நிலைப்படுத்த முயன்றாள்...
ஆனாலும் முடியவில்லை...
அப்படியே சுவற்றை பிடித்துக் கொண்டே கீழே அமர்ந்தவள், அடுத்த கணமே மயங்கி சரிந்து இருந்தாள்.
அங்கே வேலை செய்யும் பெண்ணோ, "ஐயோ யாழ்" என்று சொல்லிக் கொண்டே ஓட, வாசலில் நின்ற மருதநாயகமோ, "என்னாச்சு?" என்று பதறியபடி உள்ளே நுழைந்தார்...
மயங்கி இருந்தவளை அதிர்ந்து பார்த்தவரோ, "யாழ் யாழ்" என்று அவள் கன்னத்தில் தட்டிய போதும் அவள் எழவில்லை...
"டேய் முத்து இங்க வாடா, யாழை ஹாஸ்பிடல் கொண்டு போகலாம்" என்று அவர் கத்த அங்கே வேலை செய்தவர்கள் ஓடி வர, அவளை தூக்கி காரில் ஏற்றியவர்கள் ஹாஸ்பிடலுக்கு விரைந்தார்கள்...
ஒரு விஷயத்தை ஜீரணிக்க முதலே அடுத்தடுத்த பிரச்சனைகள்...
மருதநாயகமோ காரில் பயணம் செய்துக் கொண்டே விஷயத்தை சொல்வதற்காக சர்வஜித்துக்கு அழைத்தார்...
அவனோ அவர் அழைப்பை துண்டித்தது மட்டும் அல்லாமல், அவரை ப்ளாக்கும் செய்து இருந்தான்...
அவரோ மீண்டும் மீண்டும் அழைத்து தோற்றுப் போனவருக்கு மனதில் ஆணி அடித்த போல வலி...
"யாழ் எந்திரிம்மா" என்று அவள் கன்னத்தை தட்டி எழுப்ப முயன்றார்...
இதே சமயம் சர்வஜித்தும் விமான நிலையத்தை அடைந்து இருந்தான்...
முதல் நாளே அவன் எல்லாம் திட்டம் போட்டு தான் தனது டிக்கெட்டையும் போட்டு இருந்தான்...
அடுத்த சில மணி நேரங்களில் அவன் ஏறிய விமானமும் புறப்பட்டது...
இதே சமயம் மருத்துவமனை கட்டிலில் அமர்ந்து எங்கேயோ வெறித்தபடி இருந்தாள் ஆதிரையாழ்...
அவள் கட்டிலின் அருகே இருந்த நாற்காலியில் மருதநாயகம் அமர்ந்து இருக்க, அங்கே நின்ற வைத்தியரோ, "ஸ்ட்ரெஸ்ல மயங்கி விழுந்து இருக்காங்க, கர்ப்பமா வேற இருக்காங்க" என்று ஒரு குண்டை தூக்கி போட்டார்...
மருதநாயகத்திடம் பெருமூச்சு மட்டுமே... அப்படியே திரும்பி ஆதிரையாழைப் பார்த்தவர், "என்னை மன்னிச்சுடும்மா" என்று ஆரம்பிக்க, "ஐயோ தாத்தா, உங்க மேல தப்பு இல்லை... எனக்கு நீங்க இருக்கீங்க, என் குழந்தை இருக்கு.... அவ்வளவும் போதும்" என்று சொன்னாலும் அவள் ஆழ் மனதில் இருக்கும் வலி மருதநாயகத்துக்கு புரியாமல் இல்லை...
"எனக்கு மனசே ஆறல யாழ்... எல்லாத்துக்கும் நான் தான் காரணம்" என்று அவர் தலையில் அடித்துக் கொண்டே கதற, "ஐயோ ஐயா" என்று அருகே நின்ற முத்து அவரை பிடித்துக் கொள்ள, "பாவி பய... இப்படி பண்ணிட்டானே" என்று சொல்லிக் கொண்டே குலுங்கி குலுங்கி அழுதார்...
ஆதிரையாழ் அழவே இல்லை... அழக் கூடாது என்று வைராக்கியமாக இருந்தாள்.
மருதநாயகம் அருகே எழுந்து வந்து அவர் தோளில் கையை வைத்தவளோ, "நீங்க அழுதா நான் எப்படி தெம்பா இருப்பேன்... அழாதீங்க தாத்தா" என்றாள்.
அவர் அழுகையை இப்படி தான் அடக்க முடியும் என்று அவளுக்கு தெரியும்...
அவரும், கண்களை துடைத்துக் கொண்டே, "சரிம்மா நான் அழ மாட்டேன்... சர்வா கிட்ட ஜேம்ஸ் கிட்ட சொல்லி பேசி" என்று அவர் ஆரம்பிக்க, "வேணாம் தாத்தா, அவரா உணரும் வரைக்கும் எதுவும் நடக்காது... உங்க பேரனை பத்தி உங்களுக்கு தெரியாதா?" என்று கேட்க, அவரும் ஆமோதிப்பாக தலையாட்டினார்...
அன்று வீட்டுக்குச் சென்றாலும் மனம் எல்லாம் வெறுமை...
வீடே மயான அமைதி...
ஆளுக்கொரு மூலையில் யோசனையுடன் இருந்தார்கள்...
இதே சமயம் அமெரிக்கா வந்து இறங்கிய சர்வஜித்தோ, குளித்து சாப்பிட்டு விட்டு கட்டிலில் வந்து படுத்தான்...
இன்னுமே கட்டிலில் அவள் வாசனை...
சட்டென எழுந்தவன், படுத்து இருந்த பெட்ஷீட் தொடக்கம் எல்லாவற்றையும் கழுவ போட்டு விட்டு புதிதாக விரித்தான்...
அவள் வாசனையை அவனால் தவிர்க்க முடிந்தாலும் மனதில் பதிந்து இருந்த அவளுடனான நினைவுகளை மறக்க முடியவில்லை...
சட்டென எழுந்து அமர்ந்து தலையை இறுக பற்றிக் கொண்டவனோ, 'இப்போ எதுக்கு அவளை பற்றி யோசிச்சிட்டு இருக்கேன்' என்று நினைத்துக் கொண்டே, லேப்டாப்பை திறந்தான்...
அவள் நினைவுகளை அவனால் தவிர்க்க முடியவே இல்லை...
உணர்வுகள் வேறு பேயாட்டம் ஆடின...
அவன் மேனி அவளை நாடியது...
தீயாக வேலை பார்த்தான்...
அவள் நினைவு வராமல் இருக்கும் அளவுக்கு வேலை பார்த்தான்...
அவனுக்கு அவள் தேவைப்பட்டாலும் கீழிறங்கி அவளை தேடிச் செல்லும் அளவுக்கு அவன் ஈகோ விடவில்லை... அதுவும் கடைசியாக அவள் பேசிய வார்த்தைகளில் இருந்து அவள் மீது கொலைவெறி ஆத்திரம் அவனுக்கு...
இப்படியே அவர்கள் நாட்கள் கழிய, ஜடமாக நடமாடி திரியும் ஆதிரையாழைப் பார்க்க முடியாமல், ஜேம்ஸுக்கு அழைத்து விடயத்தை சொன்னார் மருதநாயகம்...
ஜேம்ஸோ, "ஓஹ் மை காட், அப்படியா பண்ணுனான்? நான் என்னனு கேக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே, சர்வஜித்துக்கு அழைத்தார்...
அவனும் மீட்டிங் ஒன்றை முடித்து விட்டு தொலைப்பேசியை காதில் வைக்க, "சர்வா, எப்படி இருக்க?" என்றார்...
"ஃபைன் ஜேம்ஸ்" என்றான் அவன்...
"உன் தாத்தா கூட பேசுனேன்" என்று அவர் ஆரம்பிக்க, "ஜேம்ஸ் இத பத்தி பேச நான் ரெடி இல்ல... ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட்" என்று ஒற்றை வரியில் அவர் பேச்சை கத்தரிக்க, அவர் சற்று அதிர்ந்து தான் போனார்...
"லெட் மீ டாக்" என்று அவர் ஆரம்பிக்க, "ஐ ஆம் சாரி ஜேம்ஸ்" என்று அவன் தொலைப்பேசியை துண்டித்து இருக்க, அவருக்கோ செருப்பால் அடித்த உணர்வு...
அதன் பிறகு அவனுக்கு அழைக்கவே இல்லை...
மருதநாயகத்திடம் அழைத்து விடயத்தை சொல்ல, அவரோ பெருமூச்சுடன், "ம்ம்" என்று சொல்லி விட்டு தொலைப்பேசியை வைத்தார்...
அவர் முன்னே வந்து நின்ற ஆதிரையாழோ, "தாத்தா மறுபடியும் சொல்றேன் கேளுங்க, எனக்கு தனியா வாழ முடியும், திரும்ப திரும்ப பேச முயற்சி பண்ணி அவமானப்படாதீங்க... கம்பீரமான என் தாத்தா எங்க போனாருனு எனக்கு தெரியல" என்று சொன்னவள் குரல் தழுதழுக்க, "இனி பேசலம்மா" என்று சொல்லிக் கொண்டே நடந்தவரது நடை தளர்ந்து தான் இருந்தது...
ஆதிரையாழின் கருவில் சர்வஜித்தின் குழந்தை வளர ஆரம்பித்து விட்டது...
ஆனால் உரியவன் அறியவில்லை...
பிசினஸில் இன்னும் தீவிரமாக உழைக்க ஆரம்பித்து விட்டான்...
அவளை மறக்க வேண்டும் என்று உழைத்த உழைப்பு தான் அது...
நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகின...
ஆதிரையாழ் அப்போது கர்ப்பமாகி நிறை மாதத்தில் இருந்தாள்.
கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையுடன் பேசிக் கொண்டே நாட்களை கடத்தினாள்...
ஆனால் எதுவுமே சர்வஜித்துக்கு தெரியவில்லை... அவன் தெரிந்துக் கொள்ளவும் விரும்பவில்லை...
காலையில் சாமிக்கு பூ வைப்பதற்காக பூக்களை பறித்தவளுக்கு இடையில் சுள் என்கின்ற வலி தோன்ற, "ஆஹ்" என்று சொல்லிக் கொண்டே இடையை பிடித்தவள், அப்படியே நிலத்தில் அமர்ந்து விட, அங்கே வேலை செய்பவர்கள் ஓடி வந்து அவளை தூக்கிக் கொண்டார்கள்... மருதநாயகமோ, "பிரசவ வலி வந்திடுச்சு... சீக்கிரம் ஹாஸ்பிடல் போகலாம்" என்று சொல்லிக் கொண்டே, அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
அங்கே பிரசவ வலியில் துடித்துக் கொண்டே இருந்த சமயம், பார்ட்டி ஒன்றில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் அமர்ந்து சர்வஜித் குடித்துக் கொண்டு இருந்தான்...
இதுவரை தனது வாழ்க்கையில் அவன் ஸ்பரிசித்த ஒரே பெண் ஆதிரையாழ் தான்...
அவள் நினைவில் இருந்தே அவனால் இன்னும் மீள முடியவில்லை... வேலை செய்யும் போது மறந்து இருந்தாலும் இப்படியான நேரம் அவள் நினைவுகள் வந்து அவனை இம்சிக்கும்...
அவளுக்கு முத்தமிட்டது, அவளுடன் கலந்தது என்று எல்லாமே நினைவுக்கு வந்து அவன் உணர்வுகளை தூண்டி விட்டுக் கொண்டு இருந்தன...
"அவ மட்டும் தானா உலகத்துல பொம்பிளை... அவ நினைப்பு எதுக்கு திரும்ப திரும்ப வருது?" என்று கடுப்பாக மனதுக்குள் கேட்டுக் கொண்டே அமர்ந்து இருந்தவன் அருகே நெருங்கி அமர்ந்தாள் ஒரு மேற்கத்தேய பெண்...
வழக்கமாக இப்படியான நடவடிக்கைகளை அவன் ஆதரிப்பது இல்லை... நிராகரிப்பது தான் வழக்கம்...
ஆனால் இன்று அவனுக்கு தன் மீதே கோபம்...
ஆதிரையாழை மறக்க முடியவில்லை என்ற கோபம்...
அப்படியே பக்கவாட்டாக திரும்பி அந்த பெண்ணை பார்த்தவன், "ஹாய் பேபி" என்றான்...
அந்த பெண்ணும் கையில் இருக்கும் மதுவை அருந்திக் கொண்டே, "ஹாய் ஹாண்ட்ஸம்" என்று சொல்லிக் கொண்டே, அவனில் மொத்தமாக சாய்ந்துக் கொள்ள, அவனோ அவள் இடையில் கையை விட்டு தன்னுடன் நெருக்கிக் கொள்ள, அவளும், எம்பி அவன் கன்னத்தில் முத்தம் பதித்தாள்...
அவனுக்கு அந்த முத்தம் இனிக்கவில்லை, அருவருப்பாக இருந்தது...
ஆனால் மனதை அடக்கிக் கொண்டான்...
அவளோ அப்படியே அவன் ஷேர்ட்டினுள் கையை விட்டு மார்பை வருடிக் கொண்டே, "சோ ஹாட்" என்றாள்.
அவளுடன் ஒன்ற முயல்கிறான்... முடியவில்லை... ஏதோ தடுத்துக் கொண்டே இருந்தது...
இதே சமயம், பிரசவ வலியில் துடித்துக் கொண்டு இருந்தாள் ஆதிரையாழ்...
சர்வஜித்துக்கோ தனக்கு குழந்தை பிறக்க இருக்கின்றது என்று கூட தெரியாமல் அந்த பெண்ணுடன் இழைய முயன்றான்...
முடியவில்லை... அந்த பெண் அவன் இதழில் முத்தமிட வந்த நேரம், அவனுக்கோ ஆதிரையாழின் இதழில் அவன் பதித்த முத்தங்கள் நினைவு வர, மனம் பிசைய ஆரம்பித்தது...
இதே கணம், "அம்மா" என்கின்ற ஆதிரையாழின் பெரிய சத்தத்துடன் ஆண் குழந்தை பிறந்து இருக்க, தன்னிதழை தீண்ட வந்த பெண்ணின் இதழில் கை வைத்து அந்த பெண்ணை விலக்கிய சர்வஜித்தோ, "ஐ ஆம் சாரி" என்று சொல்லிக் கொண்டே விறு விறுவென ஹோட்டலில் இருந்து வெளியேறி தனது காரில் ஏறிக் கொண்டான்...
அவனால் இன்னுமே நிதானத்துக்கு வர முடியவில்லை... மனதில் ஏதோ ஒரு அழுத்தம்... புது வித உணர்வு... என்னவென்று சொல்ல தெரியவில்லை...
அவனது உயிர்நீரில் ஜனித்த குழந்தையால் உண்டான உணர்வை அவனால் கணிக்கவும் முடியவில்லை...
"லெட்ஸ் கோ" என்று சாரதியிடம் சொன்னவன் இருக்கையில் கண்களை மூடி இருந்தான்....
வீட்டுக்கு வந்த பின்னரும் மனதிலும் உடம்பிலும் ஒரு வித வித்தியாசமான உணர்வு...
அன்றைய தூக்கம் அவனுக்கு தொலைந்து போனது...
தூக்க மாத்திரையை போட்டான்...
அப்போதும் தூக்கம் வரவில்லை...
ஆனால் அவன் குழந்தை ஆதிரையாழின் கரத்தில் நிம்மதியாக தூங்கிக் கொண்டு இருந்தது...
அவள் இதழ்களில் இத்தனை மாதங்கள் கழித்து புன்னகை...
மனதில் இருந்த அனைத்து ரணங்களுக்கு தீர்வாக வந்து இறங்கியவனுக்கு "ரணதீரன்" என்று பெயர் வைத்து இருந்தார் மருதநாயகம்...
குழந்தையை புன்னகையுடன் பார்த்துக் கொண்டே அருகே அமர்ந்து இருந்த மருதநாயகமோ, "ரணதீரன் என் பையன் பேர்" என்றார்...
"அவரோட அப்பா பேர் ஆஹ்?" என்று கேட்டாள்.
அவரிடம் சிறிய மௌனம்...
ஒரு பெருமூச்சுடன், "ம்ம்" என்று சொன்னார்...
அவளும், மென் புன்னகையுடன் குழந்தையின் நெற்றியில் முத்தம் பதித்தாள்...
அவள் வாழ்க்கையை மாற்றி எழுத வந்தவன் இந்த ரணதீரன்...
அவள் வலிகளுக்கு எல்லாம் மருந்தாக வந்தவன் இந்த ரணதீரன்...
இதே சமயம், சர்வஜித் வேலை வேலை என்று மீண்டும் இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்து விட்டான்...
அவனது ஈகோவுக்கும் மனதுக்கும் இடையிலான போராட்டம் அது...
ஈகோ தான் இறுதியில் வென்றது...
தன்னிலை விட்டு அவன் இறங்க விரும்பவில்லை...
தேவைக்காக முதல் எல்லாம் நடித்தான்...
இப்போது அந்த சொத்து தேவையும் இல்லை...
ஆஃபீஸில் இருந்தவனது அலைப்பேசிக்கு நீண்ட நாள் கழித்து ஜேம்ஸ் எடுத்து இருந்தார்...
அலைப்பேசியை எடுத்து காதில் வைத்தான்...
"ஒரு முக்கியமான விஷயம் பேசணும் சர்வா" என்றார் அவர்...
குழந்தை பிறந்த விடயத்தை சொல்ல தான் எடுத்தார்...
அவர் அப்படி சொன்னதுமே ஆதிரையாழ் பற்றி என்று அவனுக்கு புரிந்தது...
"என் பர்சனல் விஷயத்தை தவிர எது வேணும்னாலும் பேசலாம் ஜேம்ஸ்" என்றான்...
மௌனித்து போனவரோ, "ஓகே, உன் பர்சனல் விஷயம் தான் பேசலாம்னு நினைச்சேன்... எனக்கு உன்னை ஃபோர்ஸ் பண்ணி பேச விருப்பம் இல்லை... சோ வச்சிடுறேன்" என்று சொல்லி, வைக்க, அவனோ பெருமூச்சுடன் அலைப்பேசியை பார்த்து விட்டு வேலையில் மூழ்கி விட்டான்.
நாட்களும் நகர்ந்தன...
தந்தையின் அரவணைப்பு இல்லாமலே வளர்ந்தான் ரணதீரன்...
ஆனால் தாத்தாவின் அரவணைப்பு இருந்தது...
"இவன் வளர்ந்து உன்னை பார்த்துக்கிற வரைக்கும் என் உயிர் இருக்கணும்" என்று மருதநாயகம் ஆதிரையாழிடம் சொல்லிக் கொண்டே இருப்பார்...
அவளோ, "இப்படி பேசாதீங்க தாத்தா" என்று திட்டி விடுவாள்...
ஒரு குழந்தை குடும்பத்தில் சந்தோஷத்தை நிலைக்க செய்யுமா என்று கேட்டால் ஆம் என்கின்ற பதில் தான்...
அவர்கள் குடும்பத்தில் சந்தோஷத்தை நிலைக்க வைத்து இருந்தான் ரணதீரன்...
"அம்மா" என்று கூப்பிட்டு ஆதிரையாழை நெகிழ வைத்து இருந்தான்...
கருகி இருந்த அவள் மனதில் ரணதீரனால் பூக்கள் பூக்க ஆரம்பித்து விட்டன...
மருதநாயகமோ இருப்பு கொள்ள முடியாமல் சர்வஜித்தின் எண்ணுக்கு ஆதிரையாழுக்கு தெரியாமல் அழைத்து பார்ப்பார்... ஆனால் இன்னுமே அவரை ப்ளாக்கில் தான் அவன் வைத்து இருந்தான்...
ஏமாற்றத்துடன் அலைப்பேசியை வைத்து விடுவார்...
கிட்டத்தட்ட ஆறு வருடங்கள்...
இதே போல வாழ்க்கை...
பசுமையான வாழ்க்கை...
சர்வஜித் மேல் அவளுக்கு காதலை மீறிய கோபம்...
தனது விஷயத்தை விட, மருதநாயகத்தை இந்த வயதான காலத்தில் ஏமாற்றிய கோபம்...
அவனை எந்த நிலையிலும் நாடிச் செல்லக் கூடாது என்று முடிவெடுத்து விட்டாள்.
அவளின் தோற்றத்தில் மாற்றம் இல்லை... அதே தோற்றம்... ஐந்து வயது பையனுக்கு அம்மா என்று சொன்னால் நம்பவே முடியாத தோற்றம்...
மருதநாயகம் இருந்ததால் அவளிடம் யாரும் வம்பு செய்யவில்லை...
"நான் டைவர்ஸ் எடுத்து தரேன்... இன்னொரு கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழு மா, உன்னை விட்டுட்டு நான் செத்து போனா என்ன பண்ணுவ?" என்று மருதநாயகம் கேட்டு பார்த்தார்...
"என் வாழ்க்கைல இனி கல்யாணம் என்கிற அத்தியாயம் இல்ல தாத்தா, இனி அத பத்தி பேசாதீங்க" என்று சொல்லி விட்டாள்.
அதில் இருந்து திருமண பேச்சு வார்த்தையும் நின்று போனது...
பையனுக்கும் ஐந்து வயதை தொட்டு விட்டது...
இனி ஒரு கல்யாணம் பற்றி பேச முடியாது என்று மருதநாயகத்துக்கும் புரிந்து விட்டது...
சர்வஜித் திரும்ப வரமாட்டானா? என்கின்ற ஏக்கம் இன்னுமே அவர் மனதில் ஆழமாக இருந்தது...
ஒவ்வொரு வருடமும் மே மாதம் எதிர்பார்த்து இருப்பார்...
அவன் வரவே மாட்டான்...
அவர் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் ஆதிரையாழுக்கு புரியாமல் இல்லை...
அவரை பரிதாபமாக பார்த்துக் கொண்டே இருப்பாள்...
அவர் சர்வஜித் மீது கண்டிப்பாக இருந்தாலும் அவன் மீது உயிரையே வைத்து இருந்தார்... அது அவனுக்கு இப்போது வரை தெரியாது...
ரணதீரனிடம், "இது தான் உன் அப்பா" என்று ஆதிரையாழ் சொல்லவில்லை, அவள் சொல்லவும் விரும்பவில்லை...
ஆனால் மருதநாயகம் சொல்லிக் கொடுத்தார்... தன்னிடம் இருந்த புகைப்படத்தைக் காட்டி சொல்லிக் கொடுத்தார்...
ஆதிரையாழுக்கு பிடிக்கவில்லை என்றாலும் மருதநாயகத்துக்காக மௌனமாக இருந்தாள்...
நர்சரி போகும் வரை அவர்களுக்கு பிரச்சனை இல்லை...
ஆனால் அவன் நர்சரி போக ஆரம்பித்த பின்னர் பிரச்சனை ஆரம்பித்தது...