ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 23

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 23

அவன் ஏன் தன்னை அணைத்து இருக்கின்றான் என்று அவளுக்கு தெரியவில்லை, ஆனால் அந்த அணைப்பு தேவைப்பட்டது...

அவள் கரங்களோ தன்னை அறியாமல் மேலெழுந்து அவன் முதுகை கட்டிக் கொள்ள, அவனோ சற்று பிரிந்து அவள் தோள்களை பற்றி அவள் முகத்தை இரு கைகளாலும் தாங்கிக் கொண்டான்...

அவர்களின் விழிகள் பேசிக் கொண்டன...

அவன் விழிகள் கலங்கி இருந்தன...

அவள் விழிகளும் கலங்கி இருந்தன...

ஆனால் அவன் கண்ணீர் அவளுக்கு புதிது...

அவனை புரியாமல் பார்த்தாள் பெண்ணவள்...

அவள் விழிகளுடன் விழிகளை கலக்க விட்டவனோ, "என்னை ரொம்ப சுத்தல்ல விட்டுட்டே" என்று சொல்ல, அவளால் அவன் சொல்வதை புரிந்து கொள்ள முடியவில்லை...

அவனை புருவம் சுருக்கிப் பார்த்தாள்...

அவளுக்கு கிரகிக்க அவன் நேரமே கொடுக்கவில்லை...

அடுத்த கணமே, அவள் நெற்றியில் முத்தம் பதித்தான்...

மூச்சடைத்தது அவளுக்கு...

அவன் மீசை தாடியின் குறுகுறுப்பில் சிலையாகிப் போனாள்.

அத்துடன் அவன் நிறுத்தவில்லையே...

அவளை இம்சிக்க வேண்டும் என்று நினைத்து விட்டானோ என்னவோ...

சற்று குனிந்து அவள் வலது கன்னத்தில் இதழ் பதித்தான்...

வாயை பிரித்து காற்றை வெளியேற்றினாள்.

அடுத்து அவன் இதழ்கள் அவளது இடது கன்னத்தில் பதிந்தது...

அவன் என்ன செய்து கொண்டு இருக்கின்றான் என்று அவளுக்கு புரியவே இல்லை...

மேலும் தனது முத்த ஊர்வலத்தை தொடர்ந்தான்...

நாசி தீண்டினான்...

இதழ்களை நெருங்கி விட்டான்...

பெண்ணவளும் சுதாரித்துக் கொண்டாள்.

சட்டென அவன் மார்பில் இரு கைகளையும் வைத்து தள்ளினாள்.

அவனும் அவள் மார்பில் கொடுத்த வேகத்தில் முத்தமிடுவதை நிறுத்தி விட்டு சற்று விலகி நின்றவன், "என்னாச்சு?" என்று கேட்டான்...

இது அவள் கேட்க வேண்டிய கேள்வி அல்லவா?

"ஏன் முத்தமிடுகிறாய்?" என்று அவள் கேட்க முதல், "ஏன் முத்தமிடுவதை தடுத்தாய்?" என்று அவன் கேட்டு விட்டான்...

அவளோ கண்களால் திறந்து இருந்த அறைக் கதவை காட்டினாள்.

"பச்" என்றபடி கண்களை மூடி திறந்தான்...

அவர்களின் நல்ல காலத்துக்கு மகாலக்ஷ்மி சமையலறைக்குள் இருந்தார்...

அவனோ பெருமூச்சுடன், நெற்றியை நீவியவன், "ஐ ஆம் சாரி" என்று சொல்லிக் கொண்டே, அவளை பார்த்தான்...

அவன் பார்வையில் அத்தனை உணர்வுகள்...

காதல், சந்தோஷம் என்று அவன் கண்களே பல உணர்வுகளை கொட்டி இருக்க, தாடி மீசைக்குள் அவன் மெல்லிய சிரிப்பும் இதழ்களில் தேங்கி நின்றது...

அவன் இந்த பார்வை அவளுக்கு புதியது... புரியாமல் பார்த்தாள்...

அவனோ கதவை சென்று தாழிட்டவன், அவள் கரத்தை பற்றிக் கொண்டே, அங்கிருந்த கட்டிலில் அமர வைத்தான்...

அவன் சொன்னதை செய்தாள், ஆனால் எதற்காக சொல்கின்றான் என்று தெரியவில்லை...

அவனும் அருகே இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டே, அவள் முன்னால் அமர்ந்தான்.

அவளைப் பார்த்துக் கொண்டே அவள் கரங்களை பற்றி தனது இரு கரங்களுக்குள் அடக்கிக் கொண்டவன், "தென்றல்" என்றான்...

அந்த அழைப்பில் எத்தனை உணர்வுகள்...

அவள் விழிகள் அதிர்ந்து விரிய, அவள் கரமோ நடுங்க, அவனையே பார்த்து இருந்தாள்.

"கல்யாணம் பண்ணும் போது, எனக்கு ஒரு பொண்ண பிடிக்கும்னு சொன்னேன்ல, அது யார் தெரியுமா?" என்று கேட்டான்...

அவள் இல்லை என்று தலையாட்டினாள்...

"அது நீ தான்... இந்த தென்றல் தான்" என்றான்...

அவளுக்கோ அதிர்ச்சி...

அவன் தன்னை காதலித்து இருக்கின்றானா? தன் மடல்களை வாசித்து இருக்கின்றானா? நம்ப முடியவில்லை...

கண்களை மூடி திறந்தவளோ, புருவத்தை ஏற்றி இறக்கி, "எப்படி?" என்று கண்களால் கேட்டாள்.

அவனோ தனது கையில் இருந்த அவள் கரங்களை வருடிக் கொண்டே, "நீ லெட்டர் போட ஸ்டார்ட் பண்ணுனதுல இருந்தே எனக்கு உன்னை பிடிச்சு போச்சு... எனக்கு முதன் முதல் ல லெட்டர் போட்டது நீ தான்... மாசம் மாசம் உன் லெட்டருக்காக காத்துக் கொண்டு இருக்க ஆரம்பிச்சுட்டேன்... மாசம் வருஷமாக உன்ன காதலிக்கவும் ஆரம்பிச்சுட்டேன்... யார்னு தெரியல, எத்தனை வயசுன்னு தெரியல... ஆனா அந்த எழுத்தின் மேல் அப்படி ஒரு போதை... உன் மேல காதல்... நீயும் கொஞ்ச மாசத்துல உன் லவ்வை சொல்லிட்டே... ஆனா எனக்கு ஆதங்கம்... உன் உணர்வை மட்டுமே சொன்ன நீ எனக்கு ஒரு வாய்ப்பு கூட தரல... உன்னை தேடுனேன்... கண்டே பிடிக்க முடியல... இது தான் கடைசி லெட்டர்ன்னு ஒன்னு எழுதுன தானே அன்னைக்கு மொத்தமா உடைஞ்சு போய்ட்டேன்... அதுல இருந்து வெளி வர ரொம்ப கஷ்டப்பட்டேன்... ஆனா விதி உன்னை என் கிட்ட சேர்த்திடுச்சு... இத்தனை நாள் இந்த தேன்மொழி தான் தென்றல்ன்னு தெரியாம பைத்தியக்கார தனமா சுத்திட்டு இருந்து இருக்கேன்... போன மாசத்துக்கு முதல் மாசம் எனக்கு லெட்டர் எழுதுன தானே... தேன்மொழிக்கு துரோகம் பண்ண கூடாதுன்னு தென்றல் எழுதுன அந்த லெட்டரை டாய்லெட் உள்ளே போட்டு ஃபிளாஷ் பண்ணிட்டேன்... பைத்தியம் போல பண்ணி இருக்கேன் ல, அது மட்டும் இல்லாம எல்லா லெட்டர்ஸ் ஐயும் டாய்லெட் உள்ள போட்டேன்... இப்போ என் கிட்ட உன்னோட ஒரு லெட்டர்ஸ் கூட என் கிட்ட இல்லை... ஆனா நீ என் கிட்ட இருக்க... எனக்கு இது போதும்" என்றான்...

அவளுக்கு இன்னும் அவன் சொன்னதில் இருந்து வெளியே வர முடியவில்லை...

தன்னை இந்தளவு அவன் காதலித்து இருக்கின்றானா? நினைக்கவே மலைப்பாக இருந்தது...

நெஞ்சில் அப்படி ஒரு இதம்... அவனையே பார்த்து இருந்தவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிய, தனது கையை அவன் கையில் இருந்து விலக்கி எடுத்தவளோ, "நிஜமாவா?" என்று சைகையில் கேட்டாள்.

அவளால் இன்னும் நம்ப முடியவே இல்லை...

அவனும் இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே, அவள் கனத்தை ஒற்றைக் கையால் பற்றியவன், "நிஜமா தான்" என்றான் அவள் விழிகளுடன் விழிகளை கலக்க விட்டபடி...

அவளோ, "கடைசி லெட்டர்ல எல்லாமே எழுதுனேன்... ஆனா நீங்க படிக்கவே இல்லை..." என்றாள் கைகளை அசைத்து...

கண்களை மூடி திறந்தவனோ, "படிச்சு இருந்தா இவ்ளோ நாள் வேஸ்ட் பண்ணி இருக்க தேவலைல" என்றான்...

அவளோ கண்ணீர் வழிய சிரித்துக் கொண்டே, ஆம் என்கின்ற ரீதியில் தலையாட்ட, "தட்ஸ் ஓகே, அத விடு, வேற ஏதும் என் கிட்ட கேட்கணுமா?" என்று கேட்டான்.

அவளும், "எதுக்கு சிங்கப்பூர் போகும் போது என் மேல கோபமா இருந்தீங்க?" என்று கேட்க, அவனோ, "உனக்கு வட்டி கடைல வச்சு பணம் தந்த பிரதீப்பை எனக்கு நல்லா தெரிஞ்சவன், அங்கே நடந்ததை சொன்னான்... செம கடுப்பாயிட்டேன்... உனக்கு என்ன வேணும்னாலும் என் கிட்ட கேளு... ஃப்ரீயா கேட்க உனக்கு கஷ்டமா இருந்தா, கடனா கேளு நானே கொடுக்கிறேன்... இன்னொருத்தன் கிட்ட போறது எனக்கு பிடிக்கல" என்றான்...

அவளோ, "எல்லாரும் பணத்துக்காக தான் உங்கள கல்யாணம் பண்ணிகிட்டேன்னு சொல்லும் போது அந்த பணத்தை நான் எப்படி உங்க கிட்ட கேட்க முடியும்?" என்று சைகை மொழியில் கேட்க, "ஊர்ல பேசுறது எல்லாம் கேட்டுட்டு இருந்தா நாம வாழ முடியாது தேன்மொழி... அவங்க ஆயிரம் பேசுவாங்க, அதெல்லாம் உண்மை ஆயிடுமா? இல்லை தானே..." என்று கேட்க, அவளும் பெருமூச்சுடன் ஆமோதிப்பாக தலையாட்டிக் கொண்டாள்.

அவனோ, "சரி அத விடு, உன் கிட்ட நிறைய பேசணும்... வீட்டுக்கு போகலாமா?" என்று கேட்டான்...

அவள் முகம் சட்டென்று இறுகி போனது...

அழுத்தமாக இல்லை என்று தலையாட்டினாள் அவள்...

அவனோ, "நான் அப்பா கிட்ட எல்லாமே பேசிட்டேன்... அவசரப்பட்டு அன்னைக்கு இந்த விஷயம் நடந்து போச்சு... இனி அங்கே பிரச்சனை இல்லை..." என்றான்...

"ஆனா எனக்கு இப்போ வர்ற மனநிலை இல்லை, பணம் நான் எடுக்கலன்னு சொன்னாலும் என் மேல ஒரு சந்தேக பார்வை இருக்கும்ல" என்று சொன்னாள் சைகையில்...

"அப்படி எல்லாம் இல்லம்மா" என்றான் அவன்...

அவன் அம்மா என்று அழைத்தது அவளுக்கு பிடித்து இருந்தது...

அந்த வார்த்தையில் ஏதோ ஒரு இதம்...

அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளோ தன்னை நிலைப்படுத்திக் கொண்டே, "நான் எடுக்கலன்னு ஆதாரத்தோட நிரூபிச்சா தான் என்னால அங்கே வந்து வாழ முடியும்... அதாவது பணம் எங்க போச்சுன்னு தெரியணும்" என்றாள் கைகளை அசைத்து...

அவள் விழிகளில் ஒரு அழுத்தம்...

அவனும் கண்டு கொண்டான்...

தன் மீது பொய்யான பழி விழுந்ததை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று அவனுக்கு புரிந்தது...

"அப்போ யார் பணத்தை எடுத்தாங்கன்னு தெரிஞ்ச அப்புறம் தான் நீ வருவியா?" என்று கேட்டான்...

அவன் ஏக்கம் அவளுக்கு புரிந்தது...

ஆனால் அவளால் இந்த விடயத்தை இலகுவாக கடந்து விட முடியவில்லை...

அவள் நேர்மைக்கு வந்த களங்கத்தை அவள் துடைக்காமல் அந்த வீட்டில் மருமகளாக வாழ விரும்பவில்லை...

ஆம் என்று அழுத்தமாக தலையாட்டினாள்...

சிறிது நேரம் யோசித்தவனோ, "ஓகே ஃபைன், நீ கேட்டத பண்ணுன அப்புறம் உன்னை அழைச்சிட்டு போறேன்... ஆனா யாதவ் பாவம் இல்லையா?" என்று கேட்டான்...

அவளோ மென்மையாக புன்னகைத்தவள், "நாளைல இருந்து க்ளாஸுக்கு மட்டும் வருவேன்..." என்றாள் சைகையில்...

"அப்போ டீச்சரா மட்டும் வீட்டுக்கு வருவ, ரைட்டா?" என்று கேட்க, அவளும் ஆம் என்று சொல்ல, "டைம் சொல்லும்மா அந்த டைம் நான் வீட்ல இருக்கணும்" என்றான்...

அவளுக்கு சட்டென கன்னங்கள் சிவந்து விட்டன...

சாதாரணமாக தான் பேசுகின்றான்...

ஆனால் அவனது ஒவ்வொரு வார்த்தைக்கும் உருகி விடுகின்றாள்...

இதற்கே இப்படி என்றால், இனி அவனுடன் வாழப் போகும் வாழ்க்கையை நினைக்க நினைக்க அவளது அடி வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது...

"ஈவினிங் மூணு மணிக்கு" என்று அவள் கையால் மென் புன்னகையுடன் சைகை செய்ய, அவனோ, "ம்ம், கண்டிப்பா அந்த டைம் வீட்ல இருப்பேன்... உன் கிட்ட இப்போ பேசிட்டே இருக்கணும் போல இருக்கும்மா, ஆனா அத்தை ஏதாவது நினைச்சிடுவாங்களோன்னு தோணுது... எல்லா பிரச்சனையையும் முடிச்சிட்டு, நம்ம வீட்ல வச்சு நிறைய பேசிக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே, எழ அவளும் எழுந்தாள்...

அவனோ அங்கே இருந்த அவள் எழுதிய கடிதத்தை திரும்பிப் பார்த்தவன், "இத நான் எடுத்துக்கவா? இனி மாசம் மாசம் கடிதம் எழுதி நேர்லயே கொடுத்துடு, அத படிக்கும் போது வர்ற உணர்வே தனி தான்" என்று அவள் விழிகளை பார்த்துக் கொண்டே சொன்னவன், அந்த கடிதத்தை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொள்ள, அவள் இதழ்கள் இப்போது தாராளமாக விரிய சம்மதமாக தலையாட்டினாள்...

அதனை தொடர்ந்து இருவரும் வெளியே வந்தார்கள்...

முன்னறையில் நின்று இருந்த மகாலக்ஷ்மியோ, "இப்போவே கிளம்புறியா தேன்மொழி?" என்று கேட்க, வம்சி கிருஷ்ணாவோ, "இல்ல அத்தை, அவ என் கிட்ட ஒண்ணு கேட்டு இருக்கா, நான் அத பண்ணி கொடுத்துட்டு அவளை அழைச்சு போறேன்" என்றான்...

அவரோ இப்போது தேன்மொழியை பார்த்தார்...

முகத்தில் இருந்த சோர்வு காணாமல் போய் இருந்தது...

இதழ்களில் புன்னகை...

அவளது அந்த தோற்றமே அவருடைய மனதில் இருக்கும் பாரத்தை இறக்கி இருக்க, "சரி மாப்பிள்ளை" என்றார். அவனும் ஒரு தலையசைப்புடன் புறப்பட்டு விட்டான்...

வீட்டிற்கு அவன் வந்த நேரம் வேதவல்லியோ சற்று பதட்டமாக தான் அமர்ந்து இருந்தார்...

அவரை பார்த்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தவன், அவர் முன்னே வந்து தன் முழு உயரத்துக்கு நிமிர்ந்து நிற்க, அவரோ இருக்கையில் அமர்ந்தபடி அவனை ஏறிட்டுப் பார்த்தவர், பதட்டத்தை மறைத்துக் கொண்டே, "என்ன விஷயம்? உன் பொண்டாட்டி ஏதும் வசியம் பண்ணி அனுப்புனாளா?" என்று கேட்டார்...

அவனோ, "வசியம் பண்ணனும்னு அவசியம் இல்ல, அவ கிட்ட ஏற்கனவே மயங்கி தான் இருக்கேன்" என்று சொல்ல, அவருக்கு அவன் பதிலில் சப்பென்று ஆகி விட்டது... மேலும் பெருமூச்சுடன் தொடர்ந்தவனோ, "அன்னைக்கு நிஜமா அவ பணம் எடுத்ததை பார்த்தீங்களா?" என்று கேட்டான்...

அவரோ, "என்னையே சந்தேகப்படுறியா? சத்தியமா பார்த்தேன்" என்று பதட்டத்தில் பொய் சத்தியம் பண்ண, அங்கே சத்தம் கேட்டு வந்த குருமூர்த்தியோ, "வம்சி, அத விடுன்னு சொன்னேன்ல, தேன்மொழியை அழைச்சிட்டு வா, அது போதும்" என்றார்.

அவரை பக்கவாட்டாக திரும்பி அழுத்தமாக பார்த்தவன், "அவ வர மாட்டேங்குறா... என்ன பண்ண சொல்றீங்க? பணம் யார் எடுத்தாங்கன்னு தெரிஞ்சா தான் அவ இந்த வீட்டுக்குள்ள மருமகளா வர்றேன்னு சொல்லிட்டு இருக்கா... அவ ஆதங்கமும் நியாயம் தானே... அவ பணத்தை எடுக்கவே இல்லை... ஆனா இவங்க சொன்ன பொய் சாட்சியின் படி எனக்கு இவங்க மேல தான் சந்தேகமா இருக்கு" என்று சொல்ல, வேதவல்லி பதறி விட்டார்...

உண்மை தெரிந்து விடுமோ என்கின்ற பதட்டம்...

"என்னையே சந்தேகப்படுறியா? என்னை பார்த்தா உனக்கு திருடி போல தெரியுதா? நான் ஒண்ணும் உன் பொண்டாட்டி போல பிச்சைக்கார குடும்பத்துல பிறக்கல... பேசுவடா நீ பேசுவ... புதுசா பொண்டாட்டியோட சோக்குல என்ன வேணும்னாலும் பேசுவ..." என்று ஆக்ரோஷமாக எழுந்து நின்று கத்தினார்... அவரை அழுத்தமாக குனிந்து பார்த்த வம்சி கிருஷ்ணாவோ, "நீங்க கத்தி பேசுறதால நீங்க சொல்றது உண்மை ஆகிடாது... அதே சமயம், அவ பேசாம இருக்கிறதால அவ சொல்றது பொய் ஆகிடாது" என்றான்.

வேதவல்லிக்கு அவன் தன்னை நம்பவில்லை என்று புரிந்து விட்டது...

"அவன் பேசிட்டே இருக்கிறான்,... நீ என்னடா பார்த்துட்டே இருக்க..." என்று குருமூர்த்தியிடம் கேட்டவரோ அத்துடன் நிறுத்தாமல், "ஏய் வசந்தி உன் பையன் பேசுறத என்னன்னு கேட்க மாட்டியா?" என்று சத்தமாக கத்தி சமையலறைக்குள் இருந்த வசந்தியையும் வம்புக்கு இழுத்தார்...

வசந்தி பதட்டத்துடன் முன்னறைக்கு ஓடி வந்தவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை...

"வம்சி எதுக்கு இந்த பிரச்சனை, அத விட்ரலாமே" என்றார் தன்மையாக...

மகன் பேசுவது சரியென்று தெரிந்தாலும் மகனை தான் அவர் சமாதானப்படுத்த முயன்றார்... வேதவல்லிக்கு என்ன சொன்னாலும் புரியாது என்று அவருக்கு தெரியும்... வம்சி கிருஷ்ணாவுக்கு தவறு செய்தவரை கண்டு கொள்ளாமல் தன்னையே குற்றம் சொல்வதால் ஆத்திரம் மேலிட்டது...

"நானும் பார்க்கிறேன்... விடு விடுன்னு ஆளாளுக்கு சொல்லிட்டே இருக்கீங்க" என்று கர்ஜித்தவனுக்கு ஆத்திரத்தில் என்ன செய்வது என்று தெரியவே இல்லை...

டீபாயில் இருந்த பூ வாஸ் தான் கையில் கிடைத்தது...

ஓங்கி சுவரில் எறிந்து இருந்தான்... வேதவல்லி தான் தவறு செய்து இருக்கின்றார் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்... எடுக்காத பணத்தை எதற்கு எடுத்ததாக சாட்சி சொல்ல வேண்டும் என்று யோசித்தவனுக்கு உண்மை புலப்பட்டது...

ஆனால் நிரூபிக்க முடியாத இயலாமை...

தவறை செய்த வேதவல்லியோ இன்னும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டே அடுத்தவர்களை குற்றம் சாட்டி பேசுவதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை... அவர் வயதுக்கு அவரிடம் கோபத்தை காட்டவும் முடியவில்லை... இந்த இடத்தில் சற்று வயது குறைந்த ஆண் யாரும் இருந்து இருந்தால் ஓங்கி அறைந்து இருப்பான்...

அந்த அளவு கோபம் அவனுக்கு... அதன் விளைவே இப்படி அவனை நடக்க வைத்து இருந்தது...

குருமூர்த்தி அவன் செயலில் அதிர்ந்து விட்டார்... அவனுக்கு கோபம் வரும் தான்... ஆனால் இப்படி ஆக்ரோஷமாக அவன் நடந்து கொண்டதே இல்லை...

"வம்சி, என்ன இது?" என்றார் சற்று அதிர்ச்சியுடன்...

அவரை சிவந்த கண்களால் திரும்பி பார்த்தவனின் கழுத்து நரம்புகள் ஆத்திரத்தில் புடைத்து இருக்க, "உண்மை என்னவா இருக்கும்னு தெரிஞ்சும் நிரூபிக்க முடியாத இயலாமைப்பா" என்று சொல்லி விட்டு வேகமாக மாடியேறி விட, வாயில் கையை வைத்தபடி அவனைப் பார்த்த வேதவல்லிக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது என்னவோ உண்மை தான்...
 
Pattiya pottuthallidanum Vamsi
 
Top