அத்தியாயம் 21
ஆத்மன் மூலம் தான் விஷயம் போய் இருக்கும் என்று யூகித்துக் கொண்டாள். அவனை தவிர அவள் யாரிடமும் சொல்லவே இல்லையே...
"மாமா வந்த பிறகு சொலல்லாம்னு இருந்தேன் தேவ்" என்றாள்.
"அப்போ அவன் கிட்ட மட்டும் சொல்லலாமா பத்மா... எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு... அவ்ளோ ஆத்திரம் வருது... என் கோபத்தை எப்படி அடக்கிட்டு பேசிட்டு இருக்கேன் தெரியுமா?" என்று கேட்க, அவள் விழிகள் கலங்கிப் போக, "சாரி" என்றாள்.
"என்னடி சாரி? பண்ணுறதையும் பண்ணிட்டு சாரியா? இது ஒன்னுன்னா, அடுத்து நிரூபன் விஷயம்... எப்போ உனக்கு அண்ணா பாசம் திடீர்னு வந்திச்சு?" என்று கேட்டான்...
"அவங்க அழுதாங்க, அது தான்" என்று ஆரம்பிக்க, "உன் குடும்பத்தை குலைக்க பார்த்து இருக்காங்க, கொஞ்சம் கூட சொரணை இல்லாம இத பண்ணிட்டு வந்து இருக்க?" என்று சீறினான்...
"தேவ், எனக்கு அவங்க விஷயத்தில குற்ற உணர்வு இருக்கு... என் அம்மாவால தான் அவங்க வாழ்க்கை போச்சு... அதனால தான் இத பண்ணுனேன்" என்று நிறுத்தி நிதானமாக அவன் அனல் பொதிந்த நீல விழிகளை பார்த்துக் கொண்டே சொல்ல, அவனோ, நெற்றியை நீவிக் கொண்டே, அருகே இருந்த நீரை அருந்தி தன்னை கட்டுக்குள் கொண்டு வர படாத பாடு பட்டான்...
அவனுக்கு இருந்த கோபத்தை அவள் மீது கொட்டி விட கூடாது என்கின்ற எண்ணம்...
கர்ப்பமாக இருக்கின்றாளே...
ஒரு ஆழ்ந்த மூச்சுடன் அவளைப் பார்த்தவன், "அத விடு, ப்ரெக்னன்ட் ஆஹ் இருக்கிறத என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே பத்மா... பேர்த் கன்ட்ரோல் பில்ஸ் யூஸ் பண்ணுனதும் சொல்லல, இதுவும் சொல்லல, உன் கிட்ட நான் என்னடி மறைச்சு இருக்கேன்? என் பாஸ்ட் ப்ரெசென்ட்ன்னு எல்லாமே சொல்லி இருக்கேன்... ஆனா உனக்கு நம்ம இன்டிமேட் விஷயத்தை கூட என் கிட்ட ஷெயார் பண்ண தோணலைல... உனக்கு என்ன தான் டி பிரச்சனை? உனக்கு என்னை பிடிக்கலையா? ஓபன் ஆஹ் சொல்லிடு" என்று கேட்டான்...
என்ன கேள்வி கேட்டு விட்டான்...
"தேவ் இப்படி எல்லாம் பேசாதீங்க" என்றாள்.
"அப்போ எப்படி பேசுறது?" என்று எகிறினான்...
"சொல்றதுல எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல தேவ்... பேர்த் கன்ட்ரோல் விஷயம் நான் சொல்லாம விட்ட ரீசன், அப்போ நமக்குள்ள நல்ல அன்டர்ஸ்டாண்டிங் இல்லை... உங்கள பத்தி எனக்கு தெரியாது... எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியாம தான் சொல்லாம விட்டேன்... உங்க மேல நம்பிக்கை வந்ததும், நான் பேர்த் கன்ட்ரோல் டேப்லெட்டை ஸ்டாப் பண்ணிட்டேன்" என்றாள்.
"சரி, இதுக்கு ஏதோ ஒரு காரணம் சொல்ற... ஃபைன்... அப்போ ப்ரெக்னன்சி?" என்று கேட்டான்...
"எப்படி சொல்றது தேவ்? நான் பக்கத்துல வந்தாலே, எரிஞ்சு விழுந்தீங்களே... செடியூஸ் பண்ண வர்றியான்னு கேட்கிறீங்களே... இதுவும் தெரிஞ்சா ஏதாவது தப்பா சொல்லிடுவீங்களோன்னு பயந்துட்டேன் தேவ், மத்தபடி உங்க கிட்ட நான் மறைக்கணும்னு நினைச்சதே இல்லை... அன்னைக்கு நான் நித்யா விஷயத்துல பண்ணுனது தப்பு தான்... நான் படுக்க வேண்டிய இடத்துல, உங்களுக்குள்ள என் இடத்துல ஒருத்தியை பார்த்ததும் எப்படி தேவ் என்னால நிதானமா இருக்க முடியும்? நானும் மனுஷி தானே... நீங்க சொன்ன போல நான் விசாரிச்சு இருக்கணும்... வார்த்தையை அதிகமா விட்டுட்டேன்... ஐ ஆம் சாரி, இனி கண்டிப்பா அப்படி உங்கள எந்த சந்தர்ப்பத்துலயும் தப்பா நினைக்க மாட்டேன்... அதுக்கு எத்தனை நாள் எனக்கு தண்டனை கொடுக்க போறீங்க? ரொம்ப வலிக்குது தேவ்... நீங்க செக்ஸ் அடிக்ட் இல்ல, நான் தான் செக்ஸ் அடிக்ட் போதுமா? இவ்ளோ நாள் நான் இல்லாம நீங்க இருக்கீங்க... என்னால அப்படி இருக்க முடியல... நீங்க தான் என்னை கெடுத்து வச்சு இருக்கீங்க…" என்று சொன்னவள், விழிகளில் நிற்காமல் வழிந்த கண்ணீரை மீண்டும் மீண்டும் துடைத்துக் கொண்டாள்.
விம்மி அழுது குழந்தை போல பேசிக் கொண்டு இருப்பவளை பார்த்தவன் விழிகள் மெதுவாக இளகின. அவள் பேசிய பேச்சில் சிரிப்பும் வந்து விட்டது...
"டூ யூ நீட் எ ஹக்?" என்று கேட்டான்...
சட்டென ஏறிட்டுப் பார்த்தவள், "கிடைக்குமா?" என்று கேட்க, அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்...
அவளும், அவன் மார்பில் அழுதுக் கொண்டே அவன் ஷேர்ட்டை நனைத்து இருக்க, அவள் உச்சந்தலையில் முத்தம் பதித்தவன், அப்படியே அவள் அழுகை அடங்கும் வரை நின்று இருந்தான்...
அவளும் நீண்ட அணைப்பின் பின் விலகியவள், "தேங்க்ஸ்" என்று அவன் விழிகளை பார்த்துக் கொண்டே சொல்ல, அவள் நெற்றியை முட்டியவன், "உன் மேல கோபம் தான்... பட் என்ன பண்ணுறது? மன்னிச்சுக்கிறேன்..." என்று சொல்ல, "நீங்க ஒன்னும் இவ்ளோ கஷ்டப்பட்டு மன்னிக்க தேவல" என்று சொல்லிக் கொண்டே, அவள் நடக்க, அவளை இழுத்து, அவள் இதழ் மேல் அழுத்தமாக இதழ் பொருத்தி இருக்க, முதலில் விலக போராடியவள், அதன் பின், முனகலுடன் அவனுடன் ஒன்றிப் போனாள்.
ஆழ்ந்து முத்தமிட்டு அவன் விலகி இருக்க, அவள் விழிகளோ அங்கே இருந்த தொலைக்காட்சியை கண்களால் காட்டி, "டி வி போயிடுச்சு" என்றாள்.
அவனோ சத்தமாக சிரித்துக் கொண்டே, "நாளைக்கு புதுசு வாங்கிடலாம்" என்று சொல்ல, அவளும் மென்மையாக சிரித்துக் கொண்டாள்.
அன்று இரவு தான் இருவரும் அணைத்துக் கொண்டே படுத்து இருந்தார்கள்...
கலவி இல்லாத இரவில் அந்த அணைப்பின் இதத்தை இருவருமே அனுபவித்த தருணம் அது...
மோதலின் பின்னே வரும் காதல் கூட ஒரு வகை போதை தான் என்பதை போல இருந்தது அவர்கள் நெருக்கம்...
அடிக்கடி முத்தமிட்டு, நெற்றி முட்டி, அணைத்துக் கொண்டார்கள்...
அடுத்த நாளே, இருந்ததை விட, பெரிய அளவு டி வி வந்து சேர்ந்தது...
"எவ்ளோ பெரிய டி வி, இது எப்ப உடையுமோ?" என்று கேட்க, "அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை... அப்பாவுக்கு இங்க சண்டை நடந்த தடயமே தெரிய கூடாது" என்று சொல்ல, அவளும் சிரித்துக் கொண்டாள்.
அதன் பிறகு அவனே அலுவலகத்துக்கு ஏற்றிச் சென்றான்.
இரவில் ஒன்றாக சமைத்தார்கள்...
இத்தனை நாட்கள் இழந்த எல்லாம் மீண்டும் பெற்ற உணர்வு...
நாட்களும் நகர, ரத்னமும் வீட்டுக்கு வந்து சேர்ந்து இருந்தார்...
அவர் வீட்டுக்கு வந்ததுமே, "எப்படிப்பா ட்ரிப்?" என்று கேட்டான் தேவ்...
"சூப்பர் டா" என்று சொல்லிக் கொண்டு இருக்க, அவர் கையில் ஒரு பரிசை நீட்டிய பத்மாவோ, "மாமா திறந்து பாருங்க, உங்களுக்காக தான்" என்று சொல்ல, அவரும், "வந்ததும் கிஃப்ட் ஆஹ்?" என்று கேட்டுக் கொண்டே, அவள் கொடுத்த பரிசை திறந்தார்...
அவர் பரிசை திறந்ததுமே, ஒரு குட்டி சிலிக்கன் குழந்தை, "தாத்தா, தாத்தா" என்று மழலை குரலில் அழைத்துக் கொண்டே, அவர் முகத்தில் நீரை பீய்ச்சி அடிக்க, அவரோ சத்தமாக சிரித்துக் கொண்டே முகத்தை துடைத்தவர், "நிஜமாவா?" என்று கேட்டபடி தேவ்வை அணைத்துக் கொண்டார்...
தேவ்வும் பத்மாவும் சேர்ந்து அவருடன் சிரிக்க, "பிறக்க முதலே மூஞ்சுல உச்சா போறானே" என்று ரத்னம் சந்தோஷமாக சொல்லிக் கொண்டார்.
ரத்னம் வந்து ஒரு வாரம் கடந்து இருக்கும், ஜெயாவுக்கு அழைத்து இருந்தவரோ, "எப்படிம்மா இருக்க?" என்று கேட்க, "நல்லா இருக்கேன் அண்ணா" என்றார்.
சண்டை போடுவார் என்று பார்த்தால், நன்றாகவே பேசினார்...
அவருக்கு இடையில் நடந்த எதுவுமே தெரியாது அல்லவா?
"எப்போ வீட்டுக்கு வர்ற? பத்மா ப்ரெக்னன்ட் ஆஹ் இருக்கா" என்று சொல்ல, "ஓஹ் சந்தோஷம் அண்ணா" என்று சொன்னவர், "சீக்கிரம் வர்றேன்" என்று சொல்லி விட்டு வைக்க, அவரோ, முன்னால் அமர்ந்து இருந்த தேவ்வைப் பார்த்தவர், "உங்க அத்தைக்கு என்னடா ஆச்சு? நல்லா பேசுறா" என்று சொன்னார். தேவ், "ம்ம்" என்று மட்டும் சொல்லிக் கொண்டே அலைப்பேசியை பார்க்க, பத்மா, அவனை கடைக்கண்ணால் பார்த்து விட்டு பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டாள்.
இப்படியே நாட்கள் நகர்ந்தன...
ஜெயாவும் அவளை பார்க்க வீட்டுக்கு வந்தார்... தேவ் அறைக்குள் நுழைந்து விட்டான்.
பத்மாவும் ரத்னமும் தான் அவருடன் பேசினார்கள்...
அவருக்கு தேவ்வின் பாராமுகம் வலித்தாலும் மௌனமாகவே இருந்தார்...
பத்மாவோ, "போக போக சரி ஆயிடும்" என்று சொல்ல, "எப்போ தோணுதோ பேசட்டும்" என்று அவர் சொல்லிக் கொண்டார்...
ரத்னமோ, "என்னம்மா பிரச்சனை?" என்று கேட்க, "ஒன்னும் இல்லண்ணா, என் மேல தான் தப்பு, சீக்கிரம் சமாதானம் ஆயிடுவான்" என்று சமாளித்துக் கொண்டார் ஜெயா...
ஐந்து மாத கருக்களை சுமந்துக் கொண்டு இருந்தாள் பத்மா...
ஒன்று அல்ல, இரண்டல்ல, மூன்று குழந்தைகள்...
அதனை கேட்டதில் இருந்தே, தேவ்வை எப்போதும் சீண்டிக் கொண்டே இருப்பாள்...
"உங்க ஹார்ட் வேர்க்கை இதுல தான் காட்டணுமா?" என்று கலாய்த்து தள்ள, அவன் இதழ்களுக்குள் வெட்கப்பட்டு சிரித்தும் கொள்வான்...
அவள் வயிறு பெரிதாக இருக்க, "இங்கேயே இரு பத்மா... ஆஃபீஸ் வந்து எதுக்கு கஷ்டப்படுற?" என்று கேட்டான்...
அவளும், "தனியா இருக்க போர் தேவ்" என்று சிணுங்கிக் கொண்டே, அவனுடன் காரில் ஏறிக் கொள்வாள்...
இப்படியான ஒரு நாள் அலுவலகத்தில் வேலையினை முடித்து விட்டு அமர்ந்து இருந்தவளுக்கு சலிப்பாக இருந்தது...
ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டும் போல இருந்தது...
தேவ் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டே இருக்க, அவளுக்கோ அவனை தொந்தரவு செய்ய சங்கடமாக இருந்தாலும், தனது ஆசையை அடக்க முடியவில்லை...
எழுந்து, தேவ் அறைக்குள் நுழைந்தாள்.
அவனோ லேப்டாப்பில் இருந்து பார்வையை அகற்றி அவளைப் பார்த்தவன், "என்ன விஷயம்?" என்று கேட்க, அவளோ தனது மேடிட்ட வயிற்றை பார்த்துக் கொண்டே, "ஐஸ்க்ரீம் சாப்பிடணும் போல இருக்குன்னு உங்க அப்பா கிட்ட சொல்லுங்க டா" என்றாள்.
அவனுக்கு சிரிப்பும் வந்து விட்டது...
"ஐஸ்க்ரீம் சாப்பிட எப்போவும் என்னை கூப்பிட மாட்டியே... உன் பெஸ்டி கூட போக வேண்டியது தானே" என்று சொல்லிக் கொண்டே, லேப்டாப்பை பார்க்க, "ஒரு புருஷன் பேசுற பேச்சா இது?" என்று கேட்டுக் கொண்டே நாற்காலியில் அமர, சத்தமாக சிரித்தவன், "வேலை இருக்குடி, நீ கால் பண்ணுனாலே, அவன் வந்து பிக்கப் பண்ணிட்டு போவான். அவன் கூடவே போயிட்டு வா ப்ளீஸ்" என்றான்...
அவனை முறைத்தவள், "எனக்கு உங்க கூட தான் சாப்பிடணும் போல இருக்கு" என்றாள்.
இதழ் குவித்து ஊதிக் கொண்டே, அவளை பார்த்தவன், "ஒரு உண்மை சொல்லட்டுமா?" என்று கேட்க, "என்ன உண்மை?" என்று கேட்டாள்.
"எனக்கு ஐஸ்க்ரீமே பிடிக்காது" என்றான்...
அவளோ, "நான் சாப்பிடுறேன், பார்த்துட்டு இருங்க" என்றாள்.
"என்னை ரொம்ப இம்சை பண்ணுற" என்று சொல்லிக் கொண்டே எழுந்தவன், "வா" என்று சொல்லிக் கொண்டே, அருகே வந்து கையை நீட்ட, அவன் கையை பற்றிக் கொண்டே எழுந்தவள், "ரொம்ப தான்" என்று திட்டிக் கொண்டே கூடவே நடந்தாள்.
அவளை அழைத்துக் கொண்டே காரில் ஏறியவன், "எந்த கடைன்னு சொல்லு?" என்று கேட்க, அவளும் கடையை சொல்ல, அங்கே சென்றார்கள்...
ஆனால் அங்கே கூட்டமாக இருக்க, "இப்போ என்ன பண்ணுறது?" என்று கேட்டான்...
"வாங்கிட்டு வாங்க, கார்ல இருந்து சாப்பிடலாம்" என்றாள்.
"ஓகே" என்று சொல்லிக் கொண்டே, அவளுக்கு பிடித்த வெனிலா ஐஸ்க்ரீமை வாங்கி வந்து அவளிடம் நீட்டி இருந்தான்...
அவளும் அதனை சாப்பிட்டுக் கொண்டே, "உண்மையாவே பிடிக்காதா?" என்று கேட்க, "நோ" என்று சொன்னான் அழுத்தமாக...
"நீங்க கொடுத்து வச்சது அவ்ளோ தான்... டேஸ்ட் பண்ணி பார்க்கலாமே" என்றாள்.
அவனோ சுற்றி பார்த்து விட்டு, இப்போது அவளைப் பார்த்தவன், "டேஸ்ட் பண்ணிட்டா போச்சு" என்று சொல்லிக் கொண்டே, அவள் கழுத்தை பற்றி தன்னை நோக்கி இழுத்தவன், அவள் வாய்க்குள் இருந்த ஐஸ்க்ரீமை நாவினால் தனது வாய்க்குள் எடுத்துக் கொண்டே, "ம்ம், நல்லா இருக்கே" என்றான்.
அவளோ அவனை அதிர்ந்து பார்த்துக் கொண்டே, வாயை துடைத்தவள், "என்ன பண்ணுறீங்க? யாராச்சும் பார்த்துட்டா" என்று சொல்ல, "ஆஃபீஸ்ல வச்சு கிஸ் அடிச்ச நீ, இதெல்லாம் பேசலாமா?" என்று கண் சிமிட்டி கேட்டான்.
"இப்போ அத எல்லாம் எதுக்கு ஞாபகப்படுத்துறீங்க?" என்று அவள் சிணுங்கிக் கொண்டே, மீண்டும் ஐஸ்க்ரீமை வாய்க்குள் வைக்க, அதுவும் அவன் வாய்க்குள் இப்போது இடம் மாறியது...
"ஐஸ்க்ரீம் பிடிக்காதுன்னு சொல்லிட்டு என்ன பண்ணுறீங்க தேவ்?" என்றாள்.
அவனும், "ஐஸ்க்ரீம் பிடிக்காது, ஆனா இந்த ஐஸ்க்ரீம் சிலையை ரொம்ப பிடிக்குமே" என்று கண் சிமிட்டி சொல்ல, அவள் இதழ்களும் வெட்கத்துடன் விரிந்துக் கொண்டன...
அடுத்தடுத்த மாதங்களில் அவளுக்கு பிரசவ நாளும் வந்து விட, மூன்று ஆண் குழந்தைகளை ஒன்றாக பெற்று எடுத்தாள். மூவருக்கும் அவனை போலவே நீல நிற விழிகள்...
அதர்வா, அனிருத், ஆரவ் என்று பெயரும் சூட்டி இருக்க, தேவ், அவள் நெற்றியில் முத்தமிட்டுக் கொள்ள, அவளும் அவனை பார்த்து பூரிப்பாக சிரித்துக் கொண்டாள்.
மூன்று குழந்தைகளையும் அள்ளி அணைத்த வள்ளியம்மாவோ, "நீ காரியக்காரன் தான் டா" என்று தேவ்விடம் சொல்ல, அவனுக்கோ கூச்சமாகி விட்டது...
"பாட்டி" என்றான் அதட்டலாக...
அவரோ சிரித்துக் கொண்டே...
"மூணுடா... சும்மாவா" என்று கேட்க, பத்மாவோ, "நீங்க சொல்றது சரி தான் பாட்டி" என்று சிரித்துக் கொண்டே சொல்ல, "நீயும் ஏன் டி?" என்று அவளை சிரிப்புடன் அதட்டி இருந்தான்.
குழந்தையை ஆத்மனும் பூர்விகாவும் பார்க்க வந்து இருக்க, ஆத்மனோ, "எங்களுக்கு சொல்லிட்டு, என்னடி ஒரே நேரத்துல மூணு?" என்று கேட்க, பத்மாவோ, அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே, தேவ்வைப் பார்க்க, அவனோ, "கடவுள் கொடுத்தது மச்சி" என்றான்...
"கடவுள் கொடுத்ததா இல்லை, நீ கொடுத்தியா?" என்று சிரித்தபடி கேட்க, அவனுக்கும் சிரிப்பு வந்து விட்டது... "சரி நான் தான்" என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்...
இப்படியே ஆறு மாதங்கள் கழிய, தேவ் ஒரு குழந்தையை மார்பில் வைத்து தூங்க வைத்துக் கொண்டு இருக்க, வள்ளியம்மா ஒரு குழந்தையை தூங்க வைத்துக் கொண்டு இருந்தார்...
ரத்னம் கையில் ஒரு குழந்தை இருந்தது...
இப்போது ஹாலுக்கு வந்த பத்மாவோ, "மூணு பேரும் தூங்க வச்சுட்டீங்களா?" என்று கேட்டு மூவரும் தூங்கி விட்டார்களா என்று பார்க்க, "டீச்சர் போல எங்களை என்ன பாடு டி படுத்துற?" என்று கேட்டான் தேவ்...
"கஷ்டப்பட்டு மூணு பெத்து கொடுத்தேன்ல... வளர்க்க என்னவாம்" என்று சொல்லிக் கொண்டே, ஒவ்வொரு குழந்தையாக கொண்டு அறைக்குள் கொண்டு சென்று படுக்க வைத்து இருந்தாள்.
ரத்னம் கையில் இருந்த குழந்தையை தூக்கிய சமயம், அங்கே வந்த ஜெயாவோ, "மூணு பேரும் தூங்கிட்டாங்களா?" என்று கேட்டுக் கொண்டே வர, தேவ் எழுந்து அறைக்குள் செல்ல போனான்...
"தேவ்" என்று அழைத்தார்...
நின்றான்...
திரும்பிப் பார்க்கவில்லை...
"நித்யாவுக்கு கல்யாண ஏற்பாடு பண்ண இருக்கேன்" என்று சொல்ல, "அப்பா, நம்ம கடமைய செஞ்சிடுங்க" என்றான்...
ஒரே வார்த்தையில் அவரை நொறுக்கி இருக்க, "நான் பணத்துக்காக வரல தேவ்... நீ முன்னால நின்னு நடத்தி வைக்கணும்" என்று சொல்ல, அவரை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன், இல்லை என்று தலையாட்டி விட்டு உள்ளேச் செல்ல, அவருக்கோ கண்கள் கலங்கி விட்டன...
"நீயாவது சொல்லும்மா" என்றார் பத்மாவிடம்...
"பேசி பார்க்கிறேன்" என்று சொன்னாள்...
அன்று இரவு, குழந்தைகள் தூங்கிய பிறகு, "தேவ்" என்று அழைத்துக் கொண்டே, அவனை நெருங்கி படுக்க, "என்னடி" என்று கேட்டுக் கொண்டே, அவள் தலையை வருடினான்...
"நித்யாவோட கல்யாணம்" என்று ஆரம்பிக்க, "அத பத்தி பேசாதே" என்றான்...
"ப்ளீஸ் தேவ், பாவமா இருக்காங்க" என்று ஆரம்பித்து, கெஞ்சி கூத்தாடி அவனை சம்மதிக்க வைத்து இருக்க, "என்னை படுத்துற பத்மா" என்று சொன்னவனோ மேலும், "நான் ஓகே சொல்லிட்டேன்ல, என்ன தருவ?" என்று அவளை மோகமாக பார்த்துக் கொண்டே கேட்க, "இப்போவா?" என்று அவள் அதிர, "எத்தனை நாள் டி, ஜடம் போல இருக்கிறது? நீ என்னை செக்ஸ் அடிக்ட்னு சொன்னாலும் பரவாயில்லை, எனக்கு வேணும்" என்றான்...
அவளுக்கு சிரிப்பும் வந்து விட, "எனக்கும் வேணும் தான்... ஆனா குழந்தைங்க எந்திரிச்சா?" என்று தொட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்த மூணு குழந்தைகளையும் பார்த்தபடி கேட்க, "அத அப்புறம் பார்த்துக்கலாம்" என்று சொல்லிக் கொண்டே, அவளை கீழே போட்டு, மேலே படர்ந்தவன், அவள் இதழ்களை கவ்விக் கொண்டே, அவள் மேனியில் அத்து மீற ஆரம்பித்து விட்டான்...
நீண்ட கலவிக்கு பிறகு, "நிறைய நாளைக்கு அப்புறம், செம ஃபீல்ல" என்றான்...
அவனை செல்லமாக அடித்தவள், "இப்போ பசிக்கு அழுதா என்ன பண்ணுறது?" என்று செல்லமாக திட்டிக் கொண்டே அவள் எழ, அவன் விழிகள் அவள் மீது குறும்பாக படிந்து மீண்டது...
அதனை தொடர்ந்து நித்யாவின் திருமணத்தை அவன் தான் முன்னால் நின்று நடத்தி வைத்தான்.
ஜெயாவுடன் பேசவில்லை என்றாலும், முதல் போல முகத்தை திருப்பவில்லை...
அந்த உறவு அதுவாக சரி வரும் வரை, பொறுமையாக இருக்க வேண்டிய நிலை தான்...
பத்மாவும் அதற்காகவே அமைதியாக இருந்தாள்.
இப்படியே சில மாதங்கள் நகர, தூங்கிக் கொண்டு இருந்த தேவ்வை எழுப்பிய பத்மாவோ, "ப்ரெக்னன்ட் ஆயிட்டேன் தேவ்" என்றாள்.
"அதுக்குள்ளயா?" என்று கேட்டுக் கொண்டே, தனக்கு அருகே படுத்து இருந்த மூன்று குழந்தைகளையும் பார்த்தான்...
மூவருக்கும் ஒரு வயது சமீபத்தில் தான் முடிந்து இருந்தது...
"எல்லாம் உங்களால தான்" என்று அவள் சிணுங்கிக் கொள்ள, அவனும், "இந்த முறை பொண்ணு... ஓகே யா?" என்று கேட்டான்...
"பொண்ணா இருந்தா சந்தோஷம்" என்றாள் கண்களை சிமிட்டி...
இப்படியே மாதங்கள் நகர, வைத்தியரிடம் பரிசோதனைக்கு வந்து இருந்தார்கள் தேவ் மற்றும் பத்மா...
வைத்தியரோ அவளை ஸ்கான் செய்து விட்டு வெளியே வர, அவர் பின்னே வந்த பத்மாவோ அவனை அதிர்ந்து பார்த்துக் கொண்டே வந்து அருகே அமர்ந்துக் கொண்டாள்.
"என்னடி? ஏன் பேயறைஞ்ச போல இருக்க?" என்று தேவ் கேட்க, "டாக்டர் சொல்வார் கேளுங்க" என்றாள்.
அவனும் வைத்தியரை பார்க்க, அவரோ, "கங்கிராட்ஸ் தேவ்... இட்ஸ் குவாட்ருப்லெட்ஸ்" என்று சொன்னதுமே, அவனுக்கு புரையேறி விட்டது...
தலையில் தட்டிக் கொண்டே, நான்கு விரல்களை காட்டியவன், "யூ மீன் ஃபோர்?" என்று கேட்டான்...
அவரும் ஆம் என்று தலையாட்ட, இப்போது அதிர்ந்து பத்மாவை பார்த்தான்...
அவளோ, "நான் என்ன பண்ணட்டும்?" என்று கேட்க, அவனுக்கு சிரிப்பும் வந்து விட்டது...
"இதுக்கும் நான் தான் காரணம்னு சொல்ல போற, அதானே" என்று கேட்டாள்.
"நீங்க நம்பலைன்னாலும் அதான் நிஜம்" என்று அவள் சொன்னாள் சிரித்தபடி.
இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே, "சரி பார்த்துக்கலாம் விடு" என்று சொல்லிக் கொண்டே, வைத்தியரிடம் விடைபெற்று விட்டு காரில் ஏறியவனோ, அவளை இறுக அணைத்து, இதழ்களில் முத்தம் பதித்து விலகியவன், "நம்ம வீடு வெறிச்சோடி இருக்குன்னு கவலைப்பட்டு இருக்கேன்... நவ் ஐ ஆம் ஹாப்பி" என்று சொல்ல, "அடப்பாவி, ஃபீல் பண்ணுவீங்கன்னு நினைச்சேன்... இவ்ளோ ஜாலியா இருக்கீங்க" என்றாள்.
"நான் எதுக்குடி ஃபீல் பண்ணனும்... வம்சத்தை விருத்தி பண்ணி இருக்கேன்ல" என்று சொல்ல, "ச்சீ" என்று சொல்லி, அவன் தோளில் தட்டிக் கொண்டாள்.
அவன் ஆசைப்பட்ட போலவே, அவள் அடுத்து நான்கு பெண் குழந்தைகளை பெற்று இருந்தாள்.
அவர்களுக்கும் அவனை போலவே நீல கண்கள்... ஆரணி, அனு, அதிதி, அனிக்கா என்று பெயர் சூட்டி இருந்தார்கள்.
இம்முறையும் வள்ளியம்மா, "அப்பு, நீ ஏதும் சிட்டுக்குருவி லேகியம் சாப்பிடுறியா என்ன?" என்று கேட்க, "பாட்டி" என்று வழக்கமான அதட்டல் அவனிடம்...
பத்மாவோ, சத்தமாக சிரிக்க, "மெதுவா சிரிடி, இப்போ தானே ஆபரேஷன் முடிஞ்சு இருக்கு" என்று சொல்ல, அவளும், "ஓகே ஓகே" என்று சொல்லிக் கொண்டே சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.
ரத்னமோ, "குழந்தை வேணும்னு கேட்டதுக்காக, இப்படி என்னை திணற திணற அடிக்கலாமா?" என்று கேட்டுக் கொண்டே, மூன்று பேரன்கள் பின்னே ஓடி திரிய, எல்லோருக்கும் சிரிப்பும் வந்து விட்டது...
வெறிச்சோடி இருந்த அவர்கள் மாளிகை இப்போது, மழலை செல்வங்களால் நிறைந்து இருந்தது...
தேவ் ஆதித்யாவும் அவன் ஐஸ்க்ரீம் சிலையும், வம்சத்தை விருத்தி செய்யும் பணியை மும்முரமாக ஆற்றிக் கொண்டு இருந்தார்கள்...
முற்றும்.