அத்தியாயம் 21
சாணக்கியன் அடுத்த நாள் வீட்டுக்கு வரும் போது எப்படியாச்சும் மகாலிங்கத்தை நிம்மதியாக இருக்க விட கூடாது என்று நினைத்தவன் கௌதமுக்கு தெரியாமல் அந்த பென்ட்ரைவை எடுத்து வந்து அவருக்கு அவரின் அந்தரங்க லீலைகளை புகைப்படமாக அனுப்ப தொடங்கினான்.
இரு தடவை சாணக்கியனால் மகாலிங்கத்தை கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் கௌதமால் தோற்கடிக்க பட சாணக்கியன் விஷ்வாவின் கல்யாணத்துக்காக பொறுத்துக் கொண்டிருந்தான்.
*************************************************************************************************************
நடந்த அனைத்தையும் யோசித்த கெளதம், தூங்கி எழும்பி தன்னை ஆசுவாசப்படுத்தவும் வெளியில் சென்ற சாணக்கியன் வீடு திரும்பவும் நேரம் சரியாக இருந்தது.
சாணக்கியன் அறைக்குள் நுழைந்த போது அங்கு படுத்திருந்த கௌதம் சாணக்கியனிடம், "டேய் நைட் என்ன டிரஸ் போடுற?" என்று கேட்க அவனோ, "நமக்கு எப்போவும் குர்தா அல்லது வேட்டி சட்டை தான் பா" என்றதும் அவனை முறைத்தவன், "நீ என்ன கிழவனா ? இல்ல எம்.பி ஜீன்ஸ் ஷர்ட் போட கூடாது என்று சட்டமா?" என்று கேட்டவன் மேலும், "இன்னைக்கு நாம ஒரே கலர்ல டிரஸ் பண்றோம் ஓகேயா ?" என்றவன் அவனை கையோடு கடைக்கு அழைத்துச் செல்ல முற்பட முன்னால் இருந்த கயல், "எங்கண்ணா போறீங்க ?" என்று கேட்டாள்.
"நைட் பார்ட்டிக்கு டிரஸ் எடுக்க கயல்" என்றதும், "நானும் வரேன் அண்ணா, விஷ்வா அண்ணா மித்ராவை வீட்டில் விட போயிருக்கான். எனக்கு அலுப்பா இருக்கு" என்றபடி வாகனத்தில் ஏறி இருந்தாள். கௌதமோ சாணக்கியனை பார்க்க அவனை பார்த்து தோளை உலுக்கியவன், "வா போவோம்" என்றபடி அவர்களின் பாதுகாப்பு வாகனத்தோடு கடைக்கு மூவரும் விரைந்தனர் .
அங்கு சென்றதும், "கயல் நீ டிரஸ் எடுக்கலயா?" என்று சாணக்கியன் கேட்க, "இல்ல அண்ணா எல்லாம் எடுத்தாச்சு. நான் சும்மா வந்தேன்" என்றவள் அவர்களுடனேயே சென்றாள். கயல் கூட வருவது கௌதமுக்கு சாணக்கியனுடன் மனம் விட்டு உரிமையாக பேச இடைஞ்சலாய் இருக்க அவனும் பேசாமலே வந்தான்.
ஷர்ட் செக்ஷன் போனதும் சாணக்கியன் எடுக்கும் கெளதம் எடுக்கும் ஷர்ட் எல்லாத்துக்கும் ஏதும் குறை சொல்லி எதையும் எடுக்க விடாமல் செய்துக் கொண்டிருந்தாள் கயல்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த கெளதம், "இப்போ நாங்க ஷர்ட் எடுக்க வேணாமா?" என்று கேட்க, "ஒழுங்கா செலக்ட் பண்ண தெரியாதவங்க நீங்க" என்றவளை கூர்மையாக பார்த்து சிரித்தவன், "நீயும் என் செலெக்ஷன் தான் மறந்திராத" என்றான்.
அதுக்கு அவளோ பதிலடி கொடுக்கும் பொருட்டு, "அது உங்க தேவைக்கு செலக்ட் பண்ணுனீங்க காதலில் இல்லையே" என்றாள். அதுக்கு கெளதம் அவளை முறைக்க, பிரச்சனை பெருசாகாமல் இடையில் புகுந்த சாணக்கியன், "நீயே ஒரே போல ரெண்டு ஷர்ட் எடுத்து கொடும்மா" என்றவன் கெளதம் தோளில் கை போட்டு, "நீ வாடா" என்றபடி கொஞ்சம் தள்ளி அழைத்துச் சென்றான்.
அவள் மெரூன் கலரில் இரு ஷர்ட் எடுத்தவள் இருவருக்கும் அருகில் வந்து, "சைஸ் சரியா என்று போட்டு பாருங்க" என்று கொடுக்க அதை பெற்ற கெளதம் வேணும் என்று அவளை காயப்படுத்தும் பொருட்டு, "இது தானா உன் செலெக்ஷன் ? சுத்தம்." என்றான்.
சாணக்கியனோ, "நல்லா தானேடா இருக்கு" என்று சொல்ல கெளதம் சாணக்கியனை பார்த்து முறைக்க கயலோ கௌதமிடம், "அவமானப்படாதீங்க" என்று கையால் சைகை காட்டிவிட்டு கல கலவென சிரித்தாள். அவளை முறைத்துக் கொண்டே ஷர்ட்டை போட ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றவனுக்கு அவள் எடுத்து கொடுத்த ஷர்ட் கன கட்சிதமாக பொருந்தி இருந்தது. 'சூப்பர் செலெக்ஷன் கயல்' என்று மனதுக்குள் சொன்னவன், உடை மாற்றி வெளியில் வந்து, "ஏதோ போடலாம்" என்று சலிப்பாக சொல்ல அந்நேரம் பார்த்து சாணக்கியன் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருக்க அவர்களை சமாதானப் படுத்த யாரும் அவ்விடத்தில் இருக்கவில்லை.
அவன் கூற்றில் கோபமடைந்த கயல் ஷர்ட்டை அவனிடம் இருந்து பறித்துக் கொண்டு, "இப்படி சலிச்சுக்கிட்டு ஒண்ணும் போட தேவையில்ல" என்றாள்.
அவளிடமிருந்து ஷர்ட்டை மறுபடி பறித்தவன், "சாணக்கியனுக்காக போடுறேன்" என்றான். உடனே அவ்விடத்தில் வந்த சாணக்கியன், "கொஞ்ச நேரம் தானேடா உள்ள போனேன்... அதுக்குள்ள அடிச்சுக்குறீங்க..." என்று நெற்றியில் அடித்தவன், "என்ன பிரச்சனை கயல்?" என்று கேட்க கயலும் நடந்ததை சொன்னாள்.
"கௌதம் பிடிக்கலன்னா போட தேவையில்ல... வா வேற எடுப்போம்" என்று கூற கௌதமோ மனதுக்குள், 'ஒரு பில்ட்அப் பண்ணா அண்ணனும் தங்கச்சியும் விடமாட்டாங்க' என்று நினைத்தவன், "இல்ல பிடிச்சிருக்கு வாடா போவோம்" என்று கயலை பார்க்காமல் உரைத்துவிட்டு முன்னால் நடக்க தொடங்க கயலோ கௌதமுக்கு முன்னால் போய் நின்று, "எங்க அண்ணாவை எப்படி மரியாதை இல்லாம கூப்பிடலாம்?" என்றாள் அவனிடம் வம்பிழுக்கும் பொருட்டு.
அவள் முன்னே கை எடுத்து கும்பிட்டவன் நக்கலாக, "ஐயோ மன்னிச்சுக்கோங்க அம்மணி தெரியாம சொல்லிட்டேன்... ஐயா வாங்க போவோம்" என்றான் சாணக்கியனை திரும்பி பார்த்து...அவன் நக்கலில் கயல்விழி முறைக்க கல கலவென சிரித்த சாணக்கியன் கெளதம் தோளில் கை போட்டு, "எனக்கு இவன் கிருஷ்ணா போல" என்றவன் அவனுடன் முன்னோக்கி நடக்க, கயலோ அடிச்சுக்கிட்டவங்க எப்படி இவ்வளவு நெருக்கமா ஒண்ணு சேர்ந்தாங்க என்று யோசித்தபடியே பின்னால் சென்றாள்.
வீட்டுக்குச் சென்றதும் அனைவரும் வெளியில் கிளம்ப ஆயத்தமானார்கள். கயல் மெரூன் நிற புடவையில் தாலி போட்டு நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டு மிதமான மேக் அப்புடன் கொண்டையும் போட்டு அதில் பெரிய ரோஜா பூவும் வைத்து தேவதை போல அழகாய் ஜொலித்தாள்.
கெளதம் மெரூன் நிற ஷர்ட்டை அணிந்தவன் அதனை முழங்கை வரை மடித்து விட்டு கருப்பு ஜீன்ஸ் கருப்பு ஷூஸ் என போட்டவன் கையில் கரிய நிற மணிக்கூடும் அணிந்து ட்ரிம் செய்யப்பட்ட தாடி மீசையுடன் கம்பீரமாக இருந்தான்.
சாணக்கியனும் அதே போல கெட்டப்பில் அவனுக்கு சளைக்காமல் ஆயத்தமாகி இருந்தான்.
வெளியில் வந்தவர்கள் ஹாலில் கயலை பார்த்து அதிர்ந்து நின்றனர். சாணக்கியன் உடனே, "ஏன் டி நீ இதுக்காக தானா இந்த கலர் செலக்ட் செய்த?" என்று கேட்க, "ஆமா அண்ணா நாம ரெண்டு பேரும் ஒரே நிறத்தில் போக வேணாமா?" என்று கேட்டாள்.
அவளை கூர்ந்து பார்த்தபடி, "நாம ரெண்டு பேரும்? ஒரே நிறத்துல? சரி விடு... ரொம்ப சமாளிக்காத." என்றவன் முன்னால் நடக்க பின்னால் வந்த கெளதம் கொஞ்சமும் தயங்காமல் அவளை மேலிருந்து கீழே பார்த்து ரசித்தவன் முன்னால் திரும்பி சிறிய புன்சிரிப்புடன் அவளை கடந்துச் சென்றான்.
அவனின் பார்வையில் அவள் மேனி சிலிர்க்க கன்னங்கள் சிவக்க, வந்த வெட்கத்தை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தியவள் அவனை கூர்ந்து பார்த்தபடி நின்றாள்.
மகாலிங்கமும் விஷ்வாவும் ஏற்கனவே சென்று விட சில பொருட்கள் எடுக்க வந்த சித்ரா சாணக்கியன் ஆட்களுடன் செல்ல வேண்டி ஏற்பட்டது. முன்னால் சாரதி பக்கத்தில் சாணக்கியன் உட்கார பின்னால் கெளதம் ஏறி மூலையில் இருக்க அவன் பக்கத்தில் ஏற கயல் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தாள்.
அவன் பேசிய பேச்சுக்கு அவன் பக்கத்தில் போவதில்லை என்று முடிவெடுத்து இருந்தாள். அவனோ சங்கடப்பட்டவளை பார்க்காமல் வெளியில் ஜன்னலினால் பார்த்துக் கொண்டிருக்க ஜீப் அருகே வந்த சித்ரா, "ஏறுடி" என்றார்.
"இல்லம்மா நீங்க ஏறுங்க" என்றவளை முறைத்தவர் மெதுவாக, "உனக்கு கொஞ்சமாச்சும் விவஸ்தை இருக்கா? மரியாதையா ஏறு" என்று சொல்ல அவளும் தயங்கி தயங்கி ஏறியவள் பெரிய இடைவெளி விட்டு உட்கார்ந்தாள். பின்னால் ஏறிய சித்ராவின் உடல் பாதி வெளியே இருந்ததால் கதவை அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டவர், "தள்ளி உட்காரேன் டி" என்று சீறினார். கொஞ்சமாக தள்ள அவரும் கஷ்டப்பட்டு உடலை உள்ளே இழுத்து கதவை அடைத்தார்.
கயலோ சித்ராவுக்கு நெருக்கமாக இருக்க ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவர், "மடியில வந்து இருக்க போறியா? அவ்வளவு இடம் இருக்கு எதுக்கு இப்படி என்ன போட்டு நெருக்குற?" என்று கேட்க கொஞ்சம் கௌதமை நெருங்கி இருந்தாள். அப்போதும் இடம் காணாமல் இருக்க சித்ராவோ, "உன் புருஷன் தானேடி... கொஞ்சம் தள்ளி இருந்தா தான் என்ன?" என்று கேட்டார்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த கெளதம் பக்கத்தில் அவளை பார்க்காமல் முன்னால் பார்த்த படியே பக்கத்தில் இருந்தவள் இடையை பின்னால் சுற்றி தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன் வெற்றிடையில் அவன் கைகள் பதிய அவளை தன்னை நோக்கி நெருக்கமாக இழுத்திருந்தான். அவனின் இந்த இழுப்பை எதிர் பாராதவள் அவனுடைய மார்பில் அவள் தோள்கள் பட நெருங்கி இருந்தாள்.
அப்போது தான் இடம் கிடைத்த சந்தோஷத்தில் சித்ரா விசாலமாக இருக்க கயலால் மீண்டும் தள்ளி இருக்க முடியாமல் போய் விட்டது. அதுக்கு அவனின் கை இடையில் அழுந்தி இருந்ததும் அடுத்த காரணம். நெருங்கி இருந்தவள் நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்க அவனோ தனக்கும் நடை பெற்ற சம்பவத்துக்கும் சம்பந்தம் இல்லை என்ற கணக்கில் வெளியே பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவன் நெருக்கம் அவளையும் அவள் நெருக்கம் அவனையும் பாடாய் படுத்தினாலும் இருவரும் அதை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தனர். அவன் அவளது வெற்றிடையில் இருந்து கையை அகற்றாமல் இருக்க சங்கடப்பட்ட கயல் ஒரு கட்டத்தில் கௌதமுக்கு மட்டும் கேட்கும் குரலில், "கையை கொஞ்சம் எடுங்க" என்றாள். திரும்பி நெருக்கமாக இருந்த அவள் முகத்தை உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்தபடி கைகளை எடுத்தவன் அதை நீளமாக சீட்டில் வைத்தான்.
அப்போதும் அவள், "எதுக்கு இங்க கையை வச்சு இருக்கீங்க?" என்று கேட்க அவளை கூர்ந்து பார்த்தவன், "நீ இப்படி நெருங்கி இருப்பதால் எனக்கு கை வைக்க இடமில்லை. நீயே இடம் பார்த்து சொல்லு அங்கேயே வைக்கிறேன்" என்று நக்கலாக உரைத்து விட்டு வெளியில் தலையை திருப்பினான்.
அவன் சொல்வதும் உண்மை என்று அறிந்தவள் அவன் கை வளைவுக்குள்ளேயே இருந்தாள்.
ஹால் வந்ததும் எல்லாரும் இறங்க முதலில் இறங்கிய சாணக்கியனின் கண்கள் வசுந்தராவை தேடியது.
அவளோ மேடிட்ட வயிற்றுடன் சிவப்பு நிற புடவையில் தலை நிறைய பூவும் வைத்து அலங்கார வேலைகளை களைப்புடன் மேற்பார்வை செய்துக் கொண்டிருந்தாள்.
வாசலில் தேடி அவள் இல்லாததால் கெளதம் அருகில் வந்த சாணக்கியன் அவன் காதுக்குள், "நீ போ மச்சி நான் வந்துடுறேன்." என்றவனை பார்த்து கெளதம் சிரிக்க சாணக்கியன் வெட்கப்பட்டு கண்ணடித்தபடி உள்ளேச் சென்றான். கௌதமோ பின்னால் நின்ற கயல்விழியை சட்டை செய்யாது போய் உள்ளே அமர்ந்து விட்டான்.
"நான் ஒருத்தி இருக்கேன்னு நினைப்பிருக்கா?" என்று முணு முணுத்தபடி மித்ராவை தேடிச் சென்றாள் கயல்விழி. அப்போது வசுந்தராவை கண்டுக் கொண்ட சாணக்கியன் அவள் களைப்பை உணர்ந்து ஒரு ஜூஸ் எடுத்தவன் அவளை நோக்கிச் செல்ல, அதை கண்டு சித்ரா ஆச்சரியபட்டு போனார்.
வசுந்தராவின் பின் பக்கம் வந்தவன் அவள் காது நோக்கி குனிந்து, "ரொம்ப அழகா இருக்க" என்று கூற அவளோ திடுக்கிட்டு திரும்பினாள்.
"பார்த்து..." என்று அவள் மேடிட்ட வயிற்றை பார்த்தபடி கூறினான். மெரூன் நிற ஷர்டில் கம்பீரமாக இருந்தவனை அவள் ரசனையுடன் பார்க்க அதை கண்டுக் கொண்டவன், "என்னை பார்த்தது போதும் இதை முதலில் குடி" என்று ஜூஸை நீட்டினான். அவன் தன்னை கண்டு கொண்டதில் வெட்கப்பட்டவள் அதை மறைக்கும் பொருட்டு அவன் பார்வையை தவிர்த்தபடி அதை பருகினாள்.
அவள் பருகியதை கை கட்டி நின்று பார்த்தவன் அவள் இதழ்களின் மேல் பட்டிருந்த ஜூஸை துடைக்க கையை கொண்டு போக அவளோ கையை பிடித்து தனது கைகளால் தடுத்தவள் தானே துடைத்துக் கொண்டாள்.
அவள் செயலில் அவனுக்கு கோபம் வர, "கையால தானேடி துடைக்க வந்தேன். அதுக்கேன் இப்படி?" என்று ஆதங்கமாக கேட்டவன் அவள் குடித்த கப்பை வாங்கி கொண்டு அவளை முறைத்தபடி அங்கிருந்து அகன்றான்.
அவன் செல்வதை வெறித்து பார்த்துவிட்டு பெருமூச்செடுத்தவள் தனது வேலையை தொடர்ந்தாள். ஹாலுக்குள் வந்த சாணக்கியன் கௌதமை கண்டு அவனருகில் போய் இருந்து தனது அரட்டையை தொடங்கினான்.
மித்ராவை தேடி அவள் அறைக்குள் சென்ற கயல்விழி, அங்கே விஷ்வாவுடன் மித்ரா பேசிக் கொண்டிருக்க நாம எதுக்கு இடையில் என்று நினைத்தவள் அங்கிருந்து அகன்று வந்தாள்.
ஹாலில் மித்ராவும் விஷ்வாவும் சேர்ந்திருக்க பெண் வீடு சார்பாக வசுந்தரா வேலையில் மூழ்கி இருக்க கயல்விழி தனித்து விடப்பட்டாள்.
அப்போது மூலையில் உள்ள மேசையில் சாணக்கியனும் கௌதமும் இருந்து பேசிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது.
மெரூன் நிற முழங்கை வரை மடிக்கப்பட்டிருந்த ஷர்டில் கம்பீரமாக இருந்த கௌதமை அவனுக்கே தெரியாமல் சைட் அடித்த படியே அதே மேசையில் போய் இருந்தாள்.
அவள் வந்ததால் முகத்தை மேடையை நோக்கி திருப்பிய கௌதமை, 'இதுக்கு மட்டும் குறைச்சல் இல்ல' என்று மனதுக்குள் திட்டியவள் சாணக்கியனை பார்த்து சிரித்து வைத்தாள். 'இவ எதுக்கு நம்மள பார்த்து லூசு போல இப்படி சிரிக்கிறா?' என்று யோசித்த சாணக்கியன் என்ன என்றும் கண்களால் கேட்டான்.
கிருஷ்ணாவை பற்றி பேசினால் கெளதம் கடுப்பாவான் என்று தவறாக யூகித்தவள் மீராவை பற்றி பேசி தன்னை கோபப்படுத்தியதுக்கு பழி வாங்கும் முகமாக கிருஷ்ணாவை பற்றி பேச தொடங்கினாள்.
"அண்ணா கிருஷ்ணா எப்படி இருப்பானோ தெரியல... இன்னைக்கு அம்மா சொன்னதில் இருந்து பார்க்கணும் போலவே இருக்கு" என்றாள்.
"இவரும் கிருஷ்ணா தான்... அதாவது கெளதம் கிருஷ்ணா." என்று சொல்ல சடாரென திரும்பி சாணக்கியனை முறைத்த கெளதம் எழ போக சாணக்கியனின் கை அவனின் கையை பிடித்து உட்கார வைத்தது.
அவன் செய்கைக்கு மரியாதை கொடுத்து சலித்துக் கொண்டு உட்கார்ந்தவன் கயலை கூர்ந்து பார்க்க அவளோ உதட்டை சுளித்து விட்டு, "அந்த கிருஷ்ணாவும் இதுவும் ஒண்ணா?" என்றாள். கௌதமோ அவளை முறைக்க சாணக்கியனோ, "இதா? ஏன்மா உன் புருஷனுக்கு நீ மரியாதை கொடுக்க மாட்டியா?" என்று கேட்டான்.
அந்த கேள்வியை சட்டை செய்யாதவள் கௌதமுக்கு எப்படியாவது பொறாமையை தூண்ட வேணும் என்றே குறியாய் இருந்தாள்.
"அத விடுங்க அண்ணா... கிருஷ்ணா என்னை தான் கல்யாணம் பண்ணுவேன் என்று இருந்தான்... இப்போ வந்தா நான் என்ன பண்றது?" என்று சோகமாக கேட்க பதில் சொல்ல வந்த சாணக்கியனை பார்த்து பதில் சொல்ல வேணாம் என்ற தோரணையில் தலை ஆட்டியவன், "நான் உனக்கு டிவோர்ஸ் கொடுத்துருவேன். உன் கிருஷ்ணாவையே நீ கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கலாம்" என்றான்.
நண்பனின் பதிலில் வந்த சிரிப்பை சாணக்கியன் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தான். அவன் உதாசீனமான பதிலில் மனம் வலித்தாலும் அதை காட்டாமல் சாணக்கியனிடம் திரும்பி வலுக் கட்டாயமாக சிரித்தவள், "ரொம்ப சந்தோசம் அண்ணா... ஐ லவ் கிருஷ்ணா... அவனை எவ்வளவு மிஸ் பண்றேன் தெரியுமா? இவின் உனக்கு தெரியாம ஒரு தடவை என்ன பார்க்க காலேஜ்க்கு வந்தான். அதே மொசு மொசு கன்னத்தோடு இருக்கான். வீட்டில் வந்து பேச சொல்லி இருக்கேன் இன்னும் வந்து பேசல இப்போ வெளிநாட்டுல இருக்கானாம்." என்று இல்லாத கதைகளை உருவாக்கி கௌதமை எப்படியாவது கோபப் படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கூறினாள்.
அவள் கூறும் போது தண்ணீர் குடித்த கௌதமுக்கு புரையேற சாணக்கியனோ வாய் விட்டு சிரித்தான்.
"இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க?" என்று கயல் சீற, "நம்புற போல பேசுமா..." என்றான் சாணக்கியன். "என்ன நம்பல... உங்க கிட்ட கிருஷ்ணாவை கூட்டி வந்து நிற்பாட்டுறேன்." என்ற கயலை பார்த்து, "லூசாடா இவ?" என்று கெளதம் கேட்டான்.
அவன் கேள்வியில் கோபம் பொத்துக் கொண்டு வர தன் பொய்யை நம்பவில்லை என்றும் ஆத்திரம் வர, "யாரு லூசு? நீங்க ரெண்டு பேரும் தான் லூசு பசங்க" என்றவள் அவ்விடத்தை விட்டு எழுந்துச் செல்ல நண்பர்கள் இருவரும் கை அடித்து சிரித்துக் கொண்டனர்.
தான் சொன்ன பொய்யை நம்பவில்லை என்று கோபப்பட்டவள் மூளைக்கு ஆரம்பத்தில் பார்க்கணும் போல இருக்கு என்றும் கல்லூரியில் பார்த்தேன் என்றும் முரண்பாடாக தான் பேசியது கூட உறைக்கவில்லை...
அங்கிருந்து அகன்று எங்கு செல்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் அல்லாடியவள் கடைசியாக வேறு வழி இல்லாமல் மித்ரா அறைக்குள் வந்து அவள் அருகில் இருந்தாள்.
விஷ்வாவோ மித்ராவிடம் மெஹந்தி போட டிசைன் தேடி கொடுத்துக் கொண்டிருந்தான். அவனிடம் இருந்து புத்தகத்தை பறித்தவள், "எவ்வளவு நேரம் தான் ரெண்டு பேரும் பார்ப்பீங்க?" என்றபடி அதை பார்க்க தொடங்கினாள். அவள் துடுக்குத்தனத்தை பார்த்த விஷ்வாவும் மித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
"மித்ரா இந்த டிசைன் நல்லா இருக்கா பாரு ?" என்று கேட்க அவளோ விஷ்வா சற்று முதல் காட்டிய டிசைனை காட்டி, "இது தான் விச்சுவுக்கு புடிச்சிருக்காம்" என்றாள்.
"ஓ நீ ஜீன்ஸ் போட்ட கண்ணகியா?" என்றவள், "நான் எனக்கு பார்க்கிறேன்" என்றபடி புத்தகத்தை புரட்ட தொடங்கினாள்.
சாணக்கியனுடன் இருந்த கெளதம் மனம் கேட்காமல் சாணாக்கியனிடம் சொல்லி விட்டு கயல்விழியை தேடிச் சென்றான். எல்லா இடமும் தேடியவன் கடைசியாக மித்ரா அறையை தட்ட எழும்பி வந்து கதவை விஷ்வா தான் திறந்தான்.
'ஐயோ இவனா?' என்று மனதுக்குள் யோசித்தவன், "கயல்விழி எங்கே?" என்று கம்பீரமாகவே கேட்டான். விஷ்வாவோ உணர்ச்சி துடைத்த பார்வையுடன் நன்றாக விலகி கதவை நன்றாக திறந்து கயலை காட்டினான்.