அத்தியாயம் 20
சற்று நேரத்தில் அவன் கார் ஒரு சூப்பர் மார்க்கெட் முன்னால் நின்றது...
அவனோ காரை பார்க் செய்து விட்டு இறங்க, அவளும் இறங்கிக் கொண்டாள்.
"உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோ" என்று சொல்லிக் கொண்டே, அவன் சூப்பர் மார்க்கெட்டினுள் நுழைய, அவளும் பின்னாலயே நுழைந்தாள்...
கடல் போல இருந்தது அந்த சூப்பர் மார்க்கெட்...
கிராமத்தில், சந்தையை தவிர வேறு எதையும் அறியாதவளுக்கு பிரமிப்பாக இருந்தது...
"எவ்ளோ பெரிய கடை" என்று வாயை பிளந்தாள்...
எதனை எடுப்பது என்று அவளுக்கு தெரியவே இல்லை...
சர்வஜித் இப்படி எல்லாம் வரமாட்டான்... அவனுக்கு அதற்கு நேரமும் இல்லை...
எல்லாமே அவனுக்கு வீடு தேடி வரும்... இன்று அவளை அழைத்து வர வேண்டும் என்று வந்து இருந்தான்...
அவனுக்கு இப்படி பல சூப்பர் மார்க்கெட்டுகளில் ஷெயார்ஸ் இருக்கின்றது அல்லவா?
அங்கே இருக்கும் ட்ராலியை தள்ளிக் கொண்டே அவள் கையில் கொடுத்தவன், "உனக்கு என்ன வேணுமோ இதுக்குள்ள போட்டு எடுத்து வா" என்றான்...
"நீங்க வரலையா?" என்றாள் அவள்...
"நான் எதுக்கு?" என்று அவன் கேட்க, "எனக்கு பயமா இருக்கு... தொலைஞ்சுட்டேன்னா என்ன பண்ணுறது?" என்று அவள் கேட்க, "தொலையமாட்டே" என்று சொன்னவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை, அவளுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்து இருந்தான்...
அவளுக்கு என்ன வாங்குவது என்று தெரியவே இல்லை... சுற்றி பார்த்து விட்டு கடைசியாக பழங்கள் அருகே வந்து ஒரு மாம்பழத்தை எடுத்து, "எனக்கு இது போதும்" என்றாள்.
அவளை ஆச்சரியமாக பார்த்தவன், "இத வாங்கவா இங்க வந்த?" என்று கேட்க, அவளோ, "எனக்கு எல்லாமே இருக்கே... தேவைக்கு மேல இருக்கு... ஒன்னும் எனக்கு வேணாம்" என்றாள்.
"உனக்குன்னு ஆசை இல்லையா?" என்று கேட்டுக் கொண்டே நடந்தான்...
"குழந்தைங்க நிறைய பெத்துக்கணும்னு ஆசை" என்று சொல்ல, சட்டென அவளை திரும்பி பார்த்தவனது புருவம் சுருங்க, "பீரியட் வர்ற டேட் எப்போ?" என்று கேட்டான்...
"ஐயோ இங்க வச்சு கேக்கிறீங்க" என்று அவள் பதற, "ஹேய், சொல்லுடி" என்றான் அதட்டலாக...
அவளோ, "இன்னும் ஒரு வாரம் இருக்கு" என்று சொல்ல, "ஓகே" என்று சொல்லிக் கொண்டே, வந்ததற்கு மாம்பழம் மட்டும் வாங்க முடியாது என்பதால், தனக்கு தேவையான சில பொருட்களை எடுத்துக் கொண்டே பில் போடச் சென்றான்...
அனைத்தையும் அவள் புதிராக பார்த்துக் கொண்டே இருக்க, அவனோ தன்னுடைய கார்டை கொடுத்தான்...
"பணம் இல்லையா உங்க கிட்ட" என்று கேட்க, அவளை விசித்திரமாக பார்த்தவன், "இங்க எல்லாமே கார்ட் தான்" என்று ஆரம்பித்து அதற்கான விளக்கத்தை சொல்ல, அவளும், "ஓஹோ" என்று சொல்லிக் கொண்டே, அவனுடன் நடந்தாள்...
இருவரும் வெளியே நடந்து வந்ததும் காரில் பொருட்களை ஏற்றியவனோ, "ஒரு வாக் போகலாமா?" என்று கேட்க, "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே, அவனுடன் நடந்தாள்...
அவசரத்தில் அவள் கிளவுஸ் போடவில்லை... கைகள் குளிர் ஏறின... சொன்னால் அவன் திட்டுவான் என்று அடக்கிக் கொண்டு இருந்தாள்...
அங்கே ஒரு பூங்கா அருகே நடந்தார்கள்...
அங்கே நிறைய பேர் புகை பிடித்துக் கொண்டு தான் இருந்தார்கள்... இதெல்லாம் சகஜமாக இருந்தது ஆதிரையாழுக்கு...
ஊரில் கூட பீடி குடிப்பதை பார்த்து இருக்கின்றாள் தானே...
ஆனால் அனைவர்க்கும் முன்னே முத்தங்கள் பரிமாறுவது புதிது...
ஆம் அங்கே ஒரு ஆணும் பெண்ணும் முத்தம் கொடுப்பதை பார்த்தவள், "ஆத்தி, இவங்க என்ன இப்படி பண்ணுறாங்க" என்று சொல்ல, அருகே வந்த சர்வஜித்தோ, "ஷ்ஷ், சத்தமா பேசாதே... இங்க இதெல்லாம் சகஜம்" என்று சொன்னான்...
அவளோ, "ஐயோ, என்னால இத ஏத்துக்கவே முடியாது" என்று சொல்லிக் கொண்டே, சற்று தள்ளி பார்த்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது...
ஆணும் பெண்ணும் முத்தம் கொடுத்தால் கூட பரவாயில்லை... பெண்ணும் பெண்ணும் சிகரெட் புகைத்துக் கொண்டே முத்தம் கொடுத்துக் கொண்டார்கள்...
அவளோ அதிர்ந்து வாயில் கையை வைத்தவளோ, "இது என்ன?" என்று சொல்ல, அந்த திசையில் பார்த்த சர்வஜித்தோ, "உன்னை அழைச்சு வந்தது தப்பா போச்சு" என்றான்...
"ஐயோ பொண்ணும் பொண்ணும்" என்றாள் அவள்...
"சோ வாட்? அவங்க லவ்வர்ஸ்" என்றான்...
அவனை புரியாமல் பார்த்தவள், "பொண்ணும் பொண்ணும் எப்படிங்க?" என்று கேட்டாள்.
அவனுக்கே அவள் கேட்ட தோரணையில் சிரிப்பு வந்து விட்டது...
"இங்க அதெல்லாம் சகஜம் தான்" என்று அவன் சொல்லிக் கொண்டே நகர, "அது தான் எப்படி?" என்று அவள் மறுபடி கேட்டாள்...
"பொண்ணும் பொண்ணும் மட்டும் இல்ல, ஆணும் ஆணும் கூட இருக்காங்க" என்றான்...
அவளோ, "எனக்கு புரியல... குழந்தை எப்படி?" என்றாள் இழுவையாக...
"குழந்தை கஷ்டம் தான்... அடாப்ட் பண்ணிப்பாங்க, இல்லனா வாடகை தாய் மூலம் பெத்துப்பாங்க" என்று சொல்ல, அவளோ, "எனக்கு எதுவுமே புரியல" என்று சொன்னாள்.
"நைட் விளக்கமா சொல்றேன்டி" என்று சொல்லிக் கொண்டே வர, அவளோ முன்னே இருந்த படியை பார்க்காமல் விழ பார்க்க, சட்டென அவள் கையை பற்றி அவள் விழ விடாமல் தடுத்து இருந்தான் சர்வஜித்...
அப்போது தான் அவள் கைகள் குளிர் ஏறி போய் இருந்தது அவனுக்கு தெரிந்தது...
அங்கே இருந்த இருக்கையில், அமர்ந்துக் கொண்டே, அவளை அருகே அமர வைத்தவன், "கிளவுஸ் போடலையா நீ?" என்று கேட்க, அவளோ இல்லை என்று தலையாட்டினாள்...
சட்டென அவள் கைகளை தனது கைக்குள் அடக்கியவன் அவள் முகத்தைப் பார்த்தான்...
மேக்கப் போடவில்லை அவள்... போடும் பழக்கமும் இல்லை...
எத்தனையோ அழகான பெண்கள் மீது தோன்றாத மோகம் அவள் மீது அவனுக்கு வந்தது, வந்துக் கொண்டு இருக்கின்றது...
அவளது காந்த விழிகளில் படிந்து, நாசி தீண்டி இதழ்களில் அவன் பார்வை நிலைத்தது... அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அதற்கு மேல் அவனால் தன்னை தானே கட்டுப்படுத்த முடியவே இல்லை...
சட்டென குனிந்து முத்தமிட்டு விட்டான்...
அவள் எதிர்பாராத முத்தம்...
அனைவர் முன்னிலும் முத்தம்...
அவள் விழிகளோ அதிர்ந்து விரிந்துக் கொண்டன...
அவனோ அவள் இதழ் பூவில் தேனை அருந்தும் வண்டாகி போனான்...
அவனால் தன்னை தானே கட்டுப்படுத்த முடியவே இல்லை...
அவள் தான் ஒரு கட்டத்தில் அவன் மார்பில் கையை வைத்து அவன் இதழில் இருந்து அவள் இதழ்களை பிரித்து எடுத்தவள், "எல்லாரும் பார்க்க போறாங்க" என்றாள் தயக்கமாக...
அவனுக்கு தான் அவள் நிராகரித்தால் கோபம் வருமே... அந்த பயம் வேறு அவளுக்கு...
அவனோ சுற்றி பார்த்து விட்டு, "சரி வீட்டுக்கு வா போகலாம்" என்று சொல்லிக் கொண்டே, அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றான்...
வீட்டுக்கு வந்ததுமே அவளை முத்தமிட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்தவன், அவளை கொள்ளையிட்டது மட்டும் இல்லாமல் அவள் அன்று கேட்ட சந்தேகங்களுக்கு எல்லாமே தீர்வு சொல்ல, "ஐயோ இதெல்லாம் வேணாம்" என்று அவள் காதை பொத்திக் கொண்டாள்.
அடுத்த நாள் அவன் வெற்று மார்பில் கன்னம் வைத்து அவள் படுத்து இருக்க, தூங்கிக் கொண்டு இருந்தவனது தொலைப்பேசி அலறியது...
வாட்ஸ் அப் இல் ஒரு மிஸ்ட் கால்...
எடுத்து பார்த்தான்... விஷ்வா...
'இவன் எதுக்கு எடுத்து இருக்கான்?' என்று நினைத்துக் கொண்டே விஷ்வா அனுப்பிய வாட்ஸ் அப் மெஸேஜைப் பார்த்தவனுக்கு புருவம் இடுங்கியது... நேற்று அவன் ஆதிரையாழை பூங்காவில் வைத்து முத்தமிட்ட புகைப்படம் தான்... அத்துடன் ஒரு வாய்ஸ் மெசேஜும் இருந்தது...
அருகே இருந்த ப்ளூ டூத்தை எடுத்து காதில் போட்டுக் கொண்டே, அதனை ஆன் செய்தான்...
"என்னடா என் வேலைக்காரினு சொல்றேன்னு பார்த்தேன்... இப்போ தானே புரியுது... என்ன சார் வேலைக்காரி கூட ஜல்ஸானு போட்டு இத லீக் பண்ணிடலாமா?" என்று கேட்டு இருந்தான் விஷ்வா...
சர்வஜித்துக்கு சுர்ரென்று கோபம் எகிறியது...
ஆனால் நிதானமாக எழுந்து ஒரு பத்து நிமிடங்கள் யோசித்தான்...
தனக்கு வெட்டும் குழியில் கூட லாபம் பார்க்க நினைக்கும் தந்திரி அவன்...
நன்றாக யோசித்து விட்டு தொலைப்பேசியுடன் பால்கனிக்கு வந்தவனோ, "நீ தைரியமான ஆம்பிளையா இருந்தா இத லீக் பண்ணுடா பார்ப்போம்" என்று வாய்ஸ் நோட்டில் பதில் அனுப்பி இருந்தான்...
அவன் லீக் பண்ணுவான் என்று சர்வஜித்துக்கு நன்றாகவே தெரியும்... அவனிடம் அதற்காக காலில் விழவும் அவன் தயாராக இல்லை...
அடுத்த கணமே, உள்ளே வந்தவன் தனது இருக்கைக்கு கட்டிலுக்கும் இடையான திரைச் சீலையை எடுத்து மறைப்பை உண்டாக்கி விட்டு லேப்டாப் முன்னே அமர்ந்து விட்டான்...
பத்து நிமிடங்களில், "வேலைக்கார பெண்ணுடன் அத்து மீறும் தொழிலதிபர்" என்று விஷ்வா வைத்து இருக்கும் நியூஸ் வெப்சைட்டில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது...
சர்வஜித் எதிர்பார்த்தது தான்... இந்த ஊரில் இதெல்லாம் பெரிய செய்தி இல்லை என்றாலும் அவனுக்கு விஷ்வாவிடம் தோற்க கூடாது... அதற்காகவே மருதநாயகம் வாட்ஸ் அப்பில் அனுப்பி இருந்த தனது திருமண புகைப்படத்தை தனது நியூஸ் சேனலில் வெளியிட்டு இருந்தான்...
இப்போது தூக்கி வாரிப் போட்டது என்னவோ விஷ்வாவுக்கு தான்...
"பொண்டாட்டியா?" என்று அதிர்ந்த விஷ்வாவுக்கு ஒரு வித குற்ற உணர்வு...
ஆனால் சர்வஜித்திடம் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு தைரியம் இல்லை...
கேட்க அவனது ஈகோவும் இடம் கொடுக்கவில்லை...
"பொண்டாட்டினு சொல்லி இருந்தா நான் ஏன் இப்படி பண்ணி இருக்க போறேன்" என்று தன்னை தானே சமாதானம் செய்துக் கொண்டு அடுத்த வேலை பார்க்க கிளம்பி விட்டான்...
சர்வஜித்துக்கோ எண்ணில் அடங்காத அழைப்புகள்...
அனைத்தும் வாழ்த்துக்கள் தான்...
ஜேம்ஸ் கூட எடுத்து வாழ்த்து சொல்லி விட்டு வைத்து விட்டார்...
அவன் எதிர்பார்த்த அழைப்பு இன்னும் வரவில்லை... காத்துக் கொண்டு இருந்தான்...
ஒரு மணி நேரம் கழித்து மருதநாயகம் அழைத்தார்... அவன் எதிர்பார்த்த அழைப்பு...
"டேய் சர்வா, தோட்டத்துக்கு போய் இருந்தேன்டா, இப்போ தான் நியூஸ் கேள்விப்பட்டேன்... என்னை சொல்ல வேணாம்னு சொல்லிட்டு நீயே சொல்லிட்டே போல... ம்ம் அந்த ஃபோட்டோவும் பார்த்தேன்" என்றார் சிரித்தபடி... அவனோ, 'இந்த பெருசுக்கு இந்த வயசில ஒரு கிளு கிளுப்பு' என்று நினைத்துக் கொண்டே, "ம்ம்" என்றான்...
"இதுக்கு மேல என்னடா வேணும்? நீ அவளை நல்ல விதமா பார்த்துக்கிறேன்னு எனக்கு நல்லாவே தெரியுது... சொத்து தானே வேணும்... இப்போவே எழுதி வைக்கிறேன்... அடுத்த வாரமே இந்தியாக்கு நீ பேத்தியை கூப்பிட்டு வா... எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?" என்றார்...
அவன் எதிர்பார்த்தது இது தான்... அவள் கர்ப்பமாகும் வரையோ, மே மாதம் வரையோ அவனுக்கு பொறுமை இல்லை...
மருதநாயகம் தன்னை கட்டிய கட்டில் இருந்து எப்படியாவது வெளியே வர வேண்டும்... அவ்வளவு தான் அவனுக்கு...
"வரேன் தாத்தா" என்று சொல்ல, "பேத்தி எங்க?" என்று அவர் கேட்டார்...
"தூங்குறா" என்று சொல்லி விட்டு வைத்த சர்வஜித்தின் இதழில் வெற்றி கலந்த வன்ம சிரிப்பு...
லேப்டாப்பை மூடி வைத்து விட்டு, அப்படியே திரும்பி திரையை விலக்கி தூங்கிக் கொண்டு இருந்த ஆதிரையாழைப் பார்த்தான்...
அவன் கண்கள் அவளில் மோகமாக படிய, அடுத்த கணமே, கட்டிலில் அவளுடன் போர்வைக்குள் தஞ்சம் புகுந்து விட, "தூக்கமா இருக்கு, என்ன பண்ணுறீங்க..." என்று ஆரம்பித்தவள் முனகலில் முடித்து இருந்தாள்.
அன்று காலையிலேயே, "அடுத்த வாரம் ஊருக்கு போறோம்... ரெடியா இரு" என்று சொல்லி விட்டான் சர்வஜித்...
அவளுக்கோ கொண்டாட்டம்...
"அப்படியா?" என்று கேட்டவளோ ஊருக்கு போகும் குதூகலத்தில் எல்லாமே எடுத்து அடுக்க ஆரம்பித்து விட்டாள்.
இதன் பிறகு நடக்க இருக்கும் விபரீதம் அவளுக்கு தெரிந்து இருந்தால் ஊருக்கு கிளம்பி இருக்க மாட்டாளோ என்னவோ...