அத்தியாயம் 19
அன்றைய நாள் முடிந்து வேலை செய்பவர்களும் வீட்டிற்கு கிளம்பி விட்டார்கள்...
சர்வஜித்தோ அறைக்குள் இருந்து வெளியே வந்து ஆதிரையாழை தேடினான்...
ஹாலில் இல்லை அவள்... சமையலறைக்குள் தனக்கு காஃபி போட்டுக் கொண்டே நின்று இருந்தாள்.
சமையலறை வாசலில் கையை ஊன்றியபடி அவளையே பார்த்தான்...
சுடிதார் தான் அணிந்து இருந்தாள்.
அவளது அங்க வனப்பு அவனுக்கு போதையேற்றியது...
உஷ்ண பெருமூச்சை விட்டான்...
அவனது உஷ்ண பெருமூச்சில் அவள் சட்டென்று திரும்பிப் பார்க்க, "காஃபியா?" என்று கேட்டுக் கொண்டே, அவளை நோக்கி அடி மேல் அடி வைத்து வந்தான்...
அவளுக்கு அவன் பார்வையே அவனது எதிர்பார்ப்பை உணர்த்தியது...
அப்படியே சமையல் கட்டில் சாய்ந்து நின்றவளது இடையை இரு கைகளாலும் பற்றி சமையல் கட்டில் தூக்கி இருத்தினான்...
தன்னை அசால்ட்டாக கையாள்பவனை பார்த்து அவளுக்கு வியப்பு தான்...
அவன் இடையில் ஷார்ட்ஸ் மட்டுமே இருந்தது...
அவள் மேனியும் அவன் மேனியும் உரசும் அளவுக்கு அவளை நெருங்கி நின்று அவளது இரு பக்கமும் இருக்கும் சமையல் கட்டில் கையை ஊன்றிக் கொண்டே, அவளை ஆழ்ந்து பார்த்தான்...
அவளோ அவன் விழிகளை வியப்பாக பார்த்தவள், "காஃபி வேணுமா?" என்று கேட்டாள்.
"கிடைக்குமா?" என்று கேட்டவன் விழிகள் அவள் விழிகளை தாண்டி கீழிறங்கிச் செல்ல, அவளுக்கோ சட்டென்று கன்னங்கள் சிவக்க, "எனக்கு போட்டது இருக்கு" என்றாள் மென்குரலில்...
அவள் கழுத்தை இப்போது அழுந்த பற்றிக் கொண்டவனோ, "உனக்கு போட்ட காஃபி எனக்கு தேவல... நீ தான் இப்போ வேணும்" என்று சொல்லிக் கொண்டே இதழில் அழுந்த இதழ் பதித்தான். அவளோ சட்டென்று அவன் மார்பில் கையை வைத்து தள்ளிக் கொண்டே, சி சி டி வியைப் பார்க்க, அவனோ, "கிஸ் மட்டும் தான் இங்க, மீதி எல்லாம் என் ரூம்ல" என்று சொல்லிக் கொண்டே, மீண்டும் முத்தமிட போனவன், ஏதோ நினைவு வந்தவனாக, "உனக்கு எப்போ பீரியட்ஸ்?" என்று கேட்டான்...
அவளோ, "இன்னும் ஒரு வாரத்துல" என்று சொல்ல, 'இந்த முறை மிஸ் ஆயிடுச்சு... அடுத்த மாதம் பார்த்துக்கலாம்' என்று நினைத்துக் கொண்டே, அவள் இதழில் இதழ் பதித்தவன், அப்படியே அவளை இடுப்பில் வைத்துக் கொண்டே, தன்னறைக்கு தூக்கிச் சென்றான்...
மீண்டும் ஒரு கட்டில் யுத்தம்...
அவளோ கூடல் முடிந்து உடையை தேட, அவனோ, "என்ன தேடுற?" என்று கேட்டான்...
"குளிருது" என்று அவள் சொல்ல, அவளை இழுத்து அணைத்துக் கொண்டே கனமான போர்வைக்குள் தூங்கிப் போனான்...
நேற்று அவனை அணைத்துப் படுக்க தயங்கியவளை இன்று அவனே அணைத்துக் கொண்டு படுத்தான்...
காலையில் அவள் கண் விழித்த போது, அவன் சத்தம் மட்டும் கேட்டது...
திரை ஒன்றுக்கு அந்தப்பக்கம் இருந்து வேலை செய்துக் கொண்டு இருந்தான்... மீட்டிங் நடத்திக் கொண்டு இருக்கின்றான் என்று புரிந்தது...
ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே கட்டிலில் எழுந்து அமர்ந்தாள்.
இப்படி ஒரு நெருக்கம் சர்வஜித்துடன் உண்டாகும் என்று அவள் கனவில் கூட நினைக்கவில்லை...
மொத்தமாக நெருங்கியது மட்டும் அல்லாமல், அவளை விட்டு விலகவும் இல்லை அல்லவா அவன்...
அவள் ஆடைகள் கட்டிலின் நான்கு புறமும் சிதறி கிடந்தன...
அவளை அடைந்து விட வேண்டும் என்ற அவனது வேகத்தின் வெளிப்பாடு அது...
ஒவ்வொன்றாக அதனை தேடி எடுத்து அணிந்துக் கொண்டவளுக்கு எப்படி வெளியேச் செல்வது என்று தெரியவே இல்லை...
அந்த திரையை விலக்கி, அவனை தாண்டி தான் செல்ல வேண்டும்...
இங்கயே இருக்கவும் முடியாது... பசி வேறு வயிற்றைக் கிள்ளியது...
நேற்று உடல் பசியை தீர்ப்பதில் இருவரும் மும்முரமாக இருந்ததனால் வயிற்றுப் பசியை மொத்தமாகவே மறந்து போனார்கள் அல்லவா?
அடிமேல் அடி வைத்து, திரையை விலக்கி தலையை மட்டும் வெளியே விட்டாள்.
லேப்டாப் முன்னே இருந்து தனது சிரேஷ்ட ஊழியர்களிடம் பேசிக் கொண்டு இருந்த சர்வஜித்தின் விழிகளோ தனக்கு பின்னால் தெரிந்த ஆதிரையாழின் முகத்தை கண்டதுமே விரிந்துக் கொள்ள, அங்கே மீட்டிங்கில் இருந்த ஊழியர்கள் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்தார்கள்...
அவர்களது முக பாவனையிலேயே அவனுக்கு எல்லாமே புரிந்து விட்டது...
"வாட் தெ ஃப" என்று ஆரம்பித்தவன் மீதி வார்த்தைகளை விழுங்கிக் கொண்டே, பெருமூச்சுடன், "ஹோல்ட் ஆன்" என்று அங்கே இருந்தவர்களிடம் சொல்லி விட்டு, வீடியோ மற்றும் ஆடியோவை அணைத்து விட்டு, ரோலிங் செயாரில் சுழன்று அவளை திரும்பி பார்த்தவன், "வாட் இஸ் திஸ் ஆதிரா?" என்று இரு கைகளையும் விரித்தபடி கேட்டான்.
அவளோ, "வெளியே போகணும்" என்று தயங்கி தயங்கி சொல்ல, அவனோ இதழ் குவித்து ஊதிக் கொண்டே அவளை நோக்கி சொடக்கிட்டவன், "அவுட்" என்று சொல்லி விட்டு, மீண்டும் லேப்டாப்பை நோக்கி திரும்பிக் கொள்ள, அவளோ குடு குடுவென ஓடிச் சென்றாள்.
அவள் சென்றதுமே, வீடியோ மற்றும் ஆடியோவை ஆன் செய்தவன், "ஓகே வீ வில் கன்டினியூ" என்று சொல்லி ஊழியர்களுடன் பேச ஆரம்பித்து விட்டான்...
வெளியே வந்த ஆதிரையாழோ, "இப்போ நான் என்ன பண்ணிட்டேன்னு திட்டினார்? எனக்கு என்ன தெரியும்? அவரை யாரு அவர் ரூமுக்குள்ள என்ன தூக்கிட்டு போக சொன்னது?" என்று ஆதங்கம் தீரும் வரை அவனுக்கு மனதுக்குள் திட்டிக் கொண்டே, குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டாள்...
குளித்துக் கொண்டு இருந்த சமயம், கதவு தட்டாமலே திறக்கப்பட்டது...
பதறி விட்டாள்...
"ஐயோ" என்றபடி ஷவரின் கீழே நின்றுக் கொண்டே தன்னை மறைக்க அவள் போராட, உள்ளே நுழைந்தது என்னவோ சர்வஜித் தான்...
"ஹேய் நான் தான் டி" என்று சொல்லிக் கொண்டே, ஷேர்ட்டை கழட்டி ஹங்கேரில் போட்டான்... அவளோ, "மூடி இருந்த கதவை திறந்துட்டு எப்படி வந்தீங்க?" என்று கேட்க, "இது என் வீடு, எனக்கு எப்படி உள்ளே வரணும்னு தெரியாதா?" என்று கேட்டுக் கொண்டே குளிக்க ஆயத்தமாக, அவளோ அவனை விழி விரித்து பார்த்தாள்.
"மார்னிங் லேட் ஆய்டுச்சுன்னு குளிக்காமலே மீட்டிங் அட்டென்ட் பண்ண வேண்டியதா போச்சு, சேர்ந்து குளிக்கலாம்" என்று சொல்லிக் கொண்டே, அவளை நோக்கி வர, அவள் மனமோ, 'குளிக்க மட்டுமா செய்வீங்க' என்று தனக்குள் கேட்டுக் கொண்டது...
வெளியே கேட்கும் அளவுக்கு அவளுக்கு தைரியம் இல்லை...
அவள் அருகே வந்தவன், ஷவரின் கீழே நின்றுக் கொண்டே, இரு கைகளாலும் தலையை அழுந்த கோதியபடி அவளை பார்த்தான்...
குளிரின் நடுவே வெதுவெதுப்பான நீர் இதமாக இருந்தது...
நீரோ, அவன் படிக்கட்டு மேனியை தீண்டி அவன் முன்னே நின்றவள் மீது தெறிக்க, அவள் கூச்சத்தில் விழிகளை தாழ்த்திக் கொண்டாள்.
அவனோ அவளை மேலிருந்து கீழ் பார்த்து உஷ்ண பெருமூச்சு விட்டபடி அவள் வெற்றிடையில் இரு கைகளையும் பதித்து தன்னுடன் மொத்தமாக நெருக்கிக் கொண்டான்...
அவன் மேனி தீண்டிய நீர்த் துளிகள் அவளையும் இப்போது தீண்டிச் செல்ல, அவளோ வெட்கத்தில் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
அதன் பிறகு கேட்கவும் வேண்டுமா?
அவனுக்கு காதல் என்பதை தாண்டி, அவளது பெண்ணுடல் மீது மோகம்... கட்டுக்கடங்காத மோகம்...
புதிதாக அனுபவித்த இன்பத்தை அவன் மீண்டும் மீண்டும் நாட ஆரம்பித்து விட்டான்...
அவளை கர்ப்பமாக்கி மொத்த சொத்தையும் தன்னுடையாக்குவது தான் அவன் குறிக்கோள்... அதில் அவனுக்கு இனாமாக கிடைத்தது தான் இந்த பெண் தேகம்...
ஆசை தீரும் வரை அனுபவிக்க நினைத்து விட்டான்...
இதனை அறியாத பெண்ணவளுக்கு அவன் மீது காதல் அரும்பி ஆழமாக வேர் விட ஆரம்பித்து விட்டது...
அவனது ஒவ்வொரு நடவடிக்கையையும் ரசிக்க ஆரம்பித்து விட்டாள்.
அவன் முத்தத்தை ரசித்தாள்...
அவன் ஆளுமையை ரசித்தாள்...
அவனது ஹேசல் விழிகளை ரசித்தாள்...
அவனது படிக்கட்டு தேகத்தை ரசித்தது மட்டும் அல்லாமல், ஸ்பரிசித்து அனுபவித்தாள்...
அவனது கலைந்தாடும் சிகையை ரசித்தாள்...
அவன் ஒற்றைக் கையால் சிகையை அடிக்கடி கோதுவதையும் இமைக்காமல் பார்த்து இருந்தாள்.
மொத்தத்தில் அவனை அகமும் புறமும் மொத்தமாக ரசிக்க, காதலிக்க தொடங்கி விட்டாள்.
ஆனால் அவனோ அவளிடம் காட்டும் இந்த மென்மை அவன் தேவைக்காக மட்டும் என்று அவளுக்கு அப்போது புரியவே இல்லை...
அடுத்த மாதமும் அவர்களுக்கு முத்தமும், அணைப்பும் மஞ்சமுமாக தான் சென்றது... மாதவிடாய் நாட்களில் மட்டும் முத்தத்துடன் நிறுத்தி இருந்தான்...
ஒரு கட்டத்தில் வீட்டுக்குள் இருந்து இருந்தே ஆதிரையாழுக்கு அலுத்து விட்டது... சர்வஜித் சில நாட்களில் வேலை என்று வெளியேச் சென்று வருவான்... காலையில் ஜிம்முக்குச் செல்வான்... அதனால் அவனுக்கு அந்த சலிப்பு தெரியவே இல்லை...
ஆதிரையாழோ ஓரிரெண்டு நாட்கள் பனிபொழிவில் விளையாடினாள்... அதனை தவிர அவளுக்கு சலிப்பு தான்...
தொலைக்காட்சியில் பெரிதாக நாட்டமும் இல்லை அவளுக்கு...
அன்று வேலை முடித்து விட்டு வந்த சர்வஜித்தோ அவளை பார்த்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தான்...
அந்த பார்வையின் அர்த்தம் அவளுக்கும் தெரியும்...
தினமும் இதே வாடிக்கை தானே...
கன்னங்கள் அவளையும் மீறி சூடேறிய போதிலும், இன்று வெளியேச் சென்று சுற்றி பார்த்து விட வேண்டும் என்று மனதில் இருக்கும் ஆசையை அவனிடம் கூற வேண்டும் என்று நினைத்து இருந்தாள்.
குளித்து விட்டு சர்வஜித் அறைக்குள் இருந்து வெளியே வந்ததுமே, அவள் சோஃபாவில் இருந்து எழுந்து நின்றாள். அவனோ நேரே அவள் அருகே வந்து, அவள் இடையை பிடித்து தன்னை நோக்கி நெருக்கியவன், அவள் இதழில் இதழ் பதிக்க போக, சட்டென தனது கையை எடுத்து இரு இதழ்களுக்கும் நடுவே வைத்தாள் பெண்ணவள்...
அவனோ அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, மெதுவாக விலகியவன், "வாட்?" என்றான்...
கேள்வியில் மெல்லிய கோபம் எட்டிப் பார்த்தது...
அவள் நிராகரிப்பால் உண்டான கோபம் அது...
"வீட்டுக்குள்ள இருந்து இருந்து எனக்கு பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்கு" என்றாள் அவனை தயக்கமாக ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே...
அவனோ சற்று விலகி நின்று மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், "சோ உனக்கு இப்போ வெளிய போகணும் ரைட்?" என்று கேட்டான்...
"ம்ம்" என்றாள் ஒரு வித தயக்கத்துடன்...
"உன்னை நான் கிஸ் பண்ணனும்னா, இப்போ உன்னை வெளிய அழைச்சிட்டு போகணும்... ரைட்?" என்றான் அவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டே...
பதறி விட்டாள் பெண்ணவள்...
"ஐயோ அப்படி இல்ல" என்றாள் அவள் அவசரமாக...
"நீ சொன்னதுக்கு அது தானே அர்த்தம்" என்றான்...
வெற்று மார்புடன் நின்றவனது கழுத்தெலும்பு கோபத்தில் புடைத்து எழுவது அவளுக்கு வெளிப்படையாக தெரிந்தது...
அவன் கோபத்தைக் கண்டு பயந்து விட்டாள் அவள்...
"நிஜமா அப்படி இல்ல" என்று சொன்னவள் அழுது விடுவாள் போல இருந்தது...
"எனக்கு நம்பிக்கை இல்ல" என்றான் அவன்...
"நம்பணும்னா என்ன பண்ணனும்" என்று கேட்க, "எனக்கு தெரியாது" என்று சொன்னவனது விழிகள் அவள் இதழ்களை நோக்கி அவளுக்கு குறிப்புணர்த்தியது...
அவனை நெருங்கியவளோ, அவனை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே, "ரொம்ப உயரமா இருக்கீங்க" என்றாள்.
"என்ன பண்ணுறது? என் ஜீன் அப்படி" என்றான் ஒற்றைப் புருவம் உயர்த்தி... அவளோ ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே அவனுடன் இடைவெளி இல்லாமல் நெருங்கியவள், கால் பெருவிரலில் எம்பினாள்...
அவளால் அவன் கழுத்தை கூட தொட முடியவில்லை...
நடுவில் அவன் கைகளை வேறு மார்புக்கு குறுக்கே கட்டி இருந்தான்...
"கையை எடுங்க, எனக்கு கஷ்டமா இருக்கு" என்றாள்.
கையை எடுத்து தனது ஷார்ட்ஸ் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்...
இப்போது எம்பினாள்...
இப்போது அவள் இதழ்கள் அவன் கழுத்து வரை தான் சென்றது...
அவன் பாதம் மேல் பாதம் வைத்தும் அவளால் முடியவில்லை...
அவன் தோள்களை பற்றி எம்பி பார்த்தாள்...
அவன் இதழ்களை நெருங்கவே முடியவில்லை...
விடாக்கண்டன் கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் அப்படியே நின்று இருந்தான்...
அதற்கு மேல் அவளுக்கு பொறுமை இல்லை...
அவன் இதழ்களைக் காட்டி, "இங்க தான் பண்ணனும்னு இல்ல, இங்க பண்ணிக்கிறேன்" என்று சொன்ன அடுத்த கணமே, அவன் இடது திண்ணிய மார்பில் அவள் இதழ்களைப் பதித்தாள்...
அவள் இதழ்களில் முத்தம் பதித்து இருந்தால் கூட அவனுக்கு இப்படி மோக உணர்வு கிளர்ந்து இருக்காது என்று தோன்றும் அளவுக்கு ஆழமான முத்தம்...
சட்டென அவள் கழுத்தை பற்றி விலக்கியவன், "போதும்... ரெடி ஆகி வா, வெளியே போகலாம்" என்றான்...
"கூட்டிட்டு போய்ட்டு வந்து இப்படி எல்லாம் பேச மாட்டீங்களே" என்று தழுதழுத்த குரலில் கேட்க, "மாட்டேன்" என்று சொன்னவனோ, "சீக்கிரம் ரெடி ஆகு" என்று சொல்லிக் கொண்டே தனது அறைக்குள் சென்று விட்டான்.
அவளும் அறைக்குள் சென்று சற்று நேரத்தில் ஆயத்தமாகி வெளியே வந்தாள்.
அவன் ஜெர்க்கின் அணிந்து, ஷூ அணிந்து ஆயத்தமாக இருந்தான்...
அவளும் சுடிதாருக்கு மேல் ஜெர்க்கின் அணிந்து இருந்தாள்.
பாதம் வரை இருக்கும் ஜெர்க்கினை இம்முறை அணிந்ததால் சுடிதார் தெரியவே இல்லை...
ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே, "வா" என்று சொல்லிக் கொண்டே, தனது காரை நோக்கி அழைத்துச் சென்றான்...
வரிசையாக நின்ற கார்களில் பி எம் டபிள்யூ காரை பார்த்தவன், "அதுல போகலாம்" என்று சொல்லிக் கொண்டே, அதனுடைய சாவியை வீட்டிற்குள் சென்று எடுத்து வந்தான்...
ஆதிரையாழோ, 'ஒவ்வொரு காரும் ஒவ்வொரு மாதிரி திறக்கணும்... இது எப்படி திறக்கணுமோ?' என்று யோசித்துக் கொண்டாள்.
அது அவளுக்கு திறக்க இலகுவாக தான் இருந்தது...
அவன் ட்ரைவர் சீட்டில் ஏறிக் கொள்ள, அவள் பக்கத்தில் ஏறிக் கொண்டாள்.
காரில் ஏறியதும், "நான் ஒன்னு கேட்கட்டுமா?" என்றாள்.
"ம்ம்" என்றான்...
"நீங்க ஒருத்தர் தானே... எதுக்கு இத்தனை கார்?" என்று கேட்க, அவனோ, "எனக்கு கார்ஸ் பிடிக்கும்... அதனால இஷ்டப்பட்டது எல்லாம் வாங்கி வச்சு இருக்கேன்" என்று சொல்லிக் கொண்டே காரைக் கிளப்ப, அவளும் பெருமூச்சுடன் வெளியே பார்த்துக் கொண்டு வந்தாள்...
ஜனவரி மாதம் அது...
மரங்கள் எல்லாம் இலைகளை உதிர்த்து விட்டு நிர்வாணமாக நின்று இருக்க, அவற்றுக்கு போர்வையாகி மானம் காத்தன பனித்துளிகள்...
பார்க்கவே ரம்மியமான காட்சி...
மேகங்கள் கீழிறங்கி அங்கும் இங்கும் சிதறிக் கிடப்பது போல, பனி படர்ந்து இருக்கும் காட்சி...
அவற்றைப் பார்த்தவள் இதழ்கள் தாமாக விரிந்துக் கொண்டன...
இதே சமயம் பாட்டை கேட்டுக் கொண்டே காரை ஓட்டியவன் கண்கள் அவளிலும் படிந்தது...