ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 19

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 19

அன்று வீட்டுக்கு வந்ததுமே, "நானும் கெளதம் கிருஷ்ணாவும் நாளைக்கு ஒரு கான்செர்ட்காக சிங்கப்பூர் போறோம், தெரியும் தானே" என்றான்...

அவன் போன வாரமே சொல்லி இருந்தான் தான்.

ஆனால் இவ்வளவு சீக்கிரமாக இந்த வாரம் வந்துவிடும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை...

ஒரு வாரத்தில் திரும்பி விடுவான், என்றாலும் அவளுக்கு அவன் போகின்றான் என்று சொன்னதும் கண்கள் கரித்துக் கொண்டு வந்தன...

அழுதால் சின்ன பிள்ளை தனமாக இருக்கும் என்று அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டே, "தெரியும்" என்கின்ற ரீதியில் தலையாட்டினாள்.

அவனோ, "ஒரு வாரத்துல வந்திடுவேன்... எதுன்னாலும் அம்மா கிட்ட சொல்லிடு... எனக்கும் மெசேஜ் பண்ணிடு... புரியுதா?" என்று கேட்க, அவளும் சம்மதமாக தலையாட்டினாள்... அவன் வேதவல்லியையும் கல்யாணியையும் பற்றி தான் சொல்கின்றான் என்று அவளுக்கும் புரிந்தது...

அன்றிரவு படுத்தவளுக்கு மறுபடியும் மனதில் ஒரு வெறுமை...

அதுவரை இருந்த சந்தோஷம் மறைந்து, மனதில் அழுத்தம் ஆரம்பமாகி விட்டது...

ஒரு வாரம் அவனை விட்டு இருக்க வேண்டுமே என்கின்ற தவிப்புடன் சேர்த்து மூன்று லட்சத்துக்கு எங்கே போவது என்கின்ற யோசனை வேறு...

அவள் புரண்டு புரண்டு படுக்க, "இன்னும் தூங்கலையா?" என்று ஒரு சத்தம்...

வம்சி கிருஷ்ணா தான் அவளை திரும்பி பார்த்துக் கொண்டே கேட்க, அவளோ பட்டென்று கண்களை மூடிக் கொண்டாள்.

ஆனாலும் அவளுக்கு தூக்கம் வரவே இல்லை...

அவனும் மென் சிரிப்புடன் கண்களை மூடி இருந்தான்...

அடுத்த நாள் காலையில் ஸ்கூலுக்கு சென்றவள், நேரே சென்றது என்னவோ தனது நண்பி மீராவிடம் தான்...

அவளும் விஷேட தேவையுடைய மாணவர்களுக்கு தான் கற்பிக்கின்றாள்...

ஆனால் அவளால் பேச முடியும்...

சைகை மொழியும் தெரியும்...

அவளிடம் நேரே வந்த தேன்மொழியோ, "நேற்று நான் கேட்டது என்னாச்சு?" என்று சைகையில் கேட்க, அவளோ, "உன் புருஷன் கிட்ட ஒரு தடவை கேட்டு பார்க்கலாமே தேன்மொழி, எதுக்கு அடுத்தவங்க கிட்ட கையெந்தேணும்?" என்று கேட்டாள்.

தேன்மொழியோ, அழுத்தமாக இல்லை என்று தலையாட்ட, "ரொம்ப பிடிவாதம் உனக்கு தேன்மொழி, எனக்கு தெரிஞ்ச வட்டிக்கு கொடுக்கிற அண்ணன் ஒருத்தர் இருக்கார்... அவர் கிட்ட தான் கேக்கணும்" என்றாள்.

தேன்மொழியோ, "என்னால உடனே எல்லாம் பணம் திரும்ப கொடுக்க முடியாது... கொஞ்சம் கொஞ்சமா தான் கொடுப்பேன்..." என்று கையசைத்து சொல்ல, "எனக்கு தெரிஞ்சவர் தான்... இரும்புக் கடை வச்சு இருக்கார்... அதோட இந்த வேலையும் பண்ணிட்டு இருக்கார்... பேசிப் பார்க்கலாம்" என்று சொல்ல, அவளுக்கும் வேறு வழி தெரியவில்லை...

சம்மதமாக தலையாட்டினாள்...

அன்று ஸ்கூல் முடிய, வசந்திக்கு தாமதமாக வருவதாக குறுஞ்செய்தி அனுப்பி விட்டு மீராவுடன் வட்டிக் கடையை நோக்கி சென்றாள்.

கடை முதலாளி ஜெயராஜ், கந்து வட்டிக்கு கொடுப்பவன்... பார்க்கவே பயம் வரும் தோற்றம்...

கடையின் கல்லாபெட்டியின் முன்னே அமர்ந்து கொண்டே, தனக்கு முன்னே நின்றவனிடம் பேசிக் கொண்டு இருந்தான்...

தேன்மொழிக்கு அவனை பார்த்ததுமே கொஞ்சம் பயமாக இருந்தது...

தயக்கமாக மீராவை பார்த்தாள்.

ஆனால் இவ்வளவு தூரம் வந்து விட்டாள்.

திரும்பிப் போகவும் முடியாது...

மீராவோ, "பேசி பார்க்கலாம்" என்று சொல்லிக் கொண்டே, "அண்ணா எப்படி இருக்கீங்க?" என்று கேட்டாள்.

அவனும், "வாம்மா மீரா, நல்லா இருக்கேன்... நீ எப்படி இருக்க?" என்று கேட்டுக் கொண்டே தேன்மொழியை புருவம் சுருக்கி பார்த்தான்...

மீராவோ, "இது என் ஃப்ரெண்ட் அண்ணா, தேன்மொழி... என் கூட தான் ஸ்கூல் ல டீச் பண்ணுறா... வாய் பேச முடியாது" என்று சொல்ல, "ஓஹோ என்ன விஷயம்??" என்று கேட்டான் ஜெயராஜ்.

இதே சமயம் ஜெயராஜ்ஜுடன் பேசிக் கொண்டு இருந்தவனோ, சட்டென இருவரையும் திரும்பி பார்த்தான்...

அவன் பெயர் பிரதீப்...

அவன் மகனும் இந்த பாடசாலையில் தான் கல்வி கற்கின்றான்...

‘இது நம்ம மீரா டீச்சரும், தேன்மொழி டீச்சரும் தானே’ என்று அவன் யோசித்துக் கொண்டே, அவர்களை பார்க்க, ஜெயராஜ்ஜுடன் பேசிக் கொண்டு இருந்த தேன்மொழியும் மீராவும் அவனை கவனிக்கவே இல்லை...

மீராவோ, "இவளுக்கு அவசரமா மூணு லட்சம் தேவைப்படுது அண்ணா" என்றாள்.

உடனே அவன், "வட்டி சம்பந்தமா எல்லாம் சொல்லிட்டியா? நேரத்துக்கு பணம் தரலைன்னா நான் பொல்லாதவன் ஆயிடுவேன்" என்று ஆரம்பத்திலேயே தேன்மொழியை பயம் காட்ட, "அது சம்பந்தமா தான் அண்ணா நான் பேச வந்து இருக்கேன்... அவளுக்கு உடனே எல்லாம் பணம் கொடுக்க முடியாது, கொஞ்சம் கொஞ்சமா தான் கொடுப்பா, அதனால கை மாத்தா பணம் கிடைக்குமா?" என்று அவள் முடிக்கவில்லை, "என்னம்மா விளையாடுறியா? நான் என்ன உன் சொந்தக்காரனா கை மாத்தா கொடுக்கிறதுக்கு? தெரிஞ்ச பொண்ணாச்சே, பாவம்னு நிற்க வச்சு பேசிட்டு இருந்தா ரொம்ப ஓவரா தான் போற" என்று அதட்டினான்...

அவன் குரலோ மிகவும் பெரிது...

சுற்றி நின்றவர்கள் திரும்பிப் பார்த்தார்கள்...

அவன் சத்தம் போட்டதால் தேன்மொழிக்கு அசிங்கமாகி விட்டது...

மீராவை சுரண்டியவள், "போகலாம்" என்று சைகை செய்தாள்.

ஜெயராஜ் திட்டுவதை நிறுத்திய பாடும் இல்லை, "சீக்கிரம் இடத்தை காலி பண்ணுங்க, இல்லன்னா அசிங்கமாய்டும்" என்று சொன்னான்...

மீராவுக்கும் சங்கடமாகி விட்டது...

ஒன்றும் சொல்லாமல் அங்கே இருந்த நகர முற்பட, "கொஞ்சம் சும்மா இரு ஜெயராஜ், எனக்கு தெரிஞ்சவங்க தான்" என்று சொன்ன பிரதீப்போ, "டீச்சர்" என்று அழைத்தான்...

தேன்மொழியும் மீராவும் ஒன்றாக திரும்பி பார்த்தார்கள்...

அவனை முதலில் அடையாளம் கண்டு கொண்ட மீராவோ, "சார் நீங்க ரிதேஷோட அப்பா தானே" என்று கேட்க, ஆம் என்கின்ற ரீதியில் தலையாட்டியவனோ தேன்மொழியை பார்த்து, "மூணு லட்சத்துக்கு இங்க வரணும்னு இல்லையே... வம்சி சார் கிட்ட இல்லாத பணமா?" என்று கேட்டு விட்டான்...

அவள் எந்த கேள்வியை வெறுக்கின்றாளோ அதே கேள்வி...

உடனே மீரா, "நானும் அது தான் சார் சொன்னேன், அவர் கிட்ட கேட்க முடியாதுன்னு சொல்லிட்டு இருக்கா" என்றாள்.

அவனோ, "சரி விடுங்க, நான் கொடுக்கிறேன்... எனக்கு நீங்க எப்போ முடியுமோ அப்போ கொடுங்க" என்று சொல்ல, தேன்மொழி அவசரமாக வேண்டாம் என்கின்ற ரீதியில் தலையாட்டினாள்...

உடனே பிரதீப், "என் கிட்ட வாங்க தயக்கமா இருந்தா ஜெயராஜ் கிட்ட சொல்லியே கொடுக்க சொல்றேன்" என்று சொல்லிக் கொண்டே ஜெயராஜ்ஜை பார்க்க, "சரி தான்" என்று அவன் முணு முணுத்துக் கொண்டே, மூன்று லட்சத்தை பணம் என்னும் இயந்திரத்தில் எண்ணி அவளிடம் நீட்டினான்...

அவளும் அதனை யோசனையுடன் பார்த்துக் கொண்டே நிற்க, மீராவோ, "வாங்கு தேன்மொழி, வேற வழி இல்ல" என்று சொன்னவளோ பிரதீப்பை பார்த்து, "திரும்ப கொடுக்க லேட் ஆகும், பரவலையா சார்?" என்று கேட்டாள்.

தேன்மொழியும் பிரதீப்பின் பதிலை எதிர்பார்த்து நிற்க, அவனோ, "அது ஒண்ணும் பிரச்சனை இல்லை... எப்போவுமே எனக்கு உங்க மேல நம்பிக்கையும் மரியாதையும் இருக்கு... என் பையன போல எத்தனையோ பேர் வாழ்க்கைல நல்ல வழியை காட்டி இருக்கீங்க... அதோட ஒப்பிடும் போது நான் பண்ணுறது எல்லாம் ஒன்னுமே இல்ல" என்று சொல்ல, தேன்மொழியும் பணத்தை வாங்கி பையில் வைத்தவள், பிரதீப்பிடம் சைகையால் நன்றி சொல்லி விட்டு மீராவுடன் நடக்க தொடங்கி விட்டாள்.

தேன்மொழியை பிரதீப் யோசனையுடன் பார்த்துக் கொண்டே நிற்க, "என்னப்பா, மூணு லட்சத்தை அப்படியே தூக்கி கொடுக்க சொல்லிட்டே... திரும்ப வரும்னு நம்புறியா?" என்று கேட்க, அவனோ, "திரும்ப வந்தாலும் வரலைன்னாலும் எனக்கு அத பத்தி கவலை இல்லை... வம்சி சார் எனக்கு பண்ணுன உதவிகளோட ஒப்பிடும் போது இது ஒண்ணும் இல்ல, நான் இப்போ கச்சேரி எல்லாம் போய் நல்லா வாழ காரணமே வம்சி கிருஷ்ணா சார் தான்" என்றான்...

ஆம் அவன் வேறு யாருமல்ல, வம்சி கிருஷ்ணாவுக்கு நெருங்கிய இசையமைப்பாளரிடம் வேலை பார்க்கும் மிருதங்க வித்துவான் தான்...

அவனுக்கு வாய்ப்பு எடுத்து கொடுத்ததே வம்சி கிருஷ்ணா தான்...

அந்த நன்றி இப்போது வரைக்கும் பிரதீப்புக்கு இருக்கின்றது...

அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்த ஜெயராஜ்ஜோ, "வம்சி கிருஷ்ணான்னா பாட்டு பாடுவாரே அவரா?" என்று கேட்டான்.

பிரதீப் ஆமோதிக்க தலையாட்ட, "அவருக்கும் இந்த பொண்ணுங்களுக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டான்.

"வாய் பேச முடியாத பொண்ணு தான் அவரோட சம்சாரம்" என்று அவன் தலையில் குண்டை தூக்கி போட, "என்னப்பா சொல்ற, நான் வேற அந்த பொண்ணுக்கு தாறு மாறா திட்டிட்டேனே... ஒன்னும் பிரச்சனை ஆய்டாதே" என்றான் ஜெயராஜ் பதட்டமாக...

"அத திட்ட முதல் யோசிச்சு இருக்கணும்" என்று பிரதீப் சொல்ல, "நான் என்னப்பா பண்ணுறது? இந்த சினிமா டி வி எல்லாம் பார்க்கிறதே இல்லை... கடன் கொடுத்தவனுங்க பின்னாடி செல்லவே நேரம் சரியா இருக்கு... ஒரு தடவை ரேடியோல குரல் நல்லா இருக்குதே யார்னு நம்ம பசங்க கிட்ட விசாரிச்சேன்... அப்படி தான் வம்சி கிருஷ்ணா என்கிற பெயரே எனக்கு தெரிய வந்தது..." என்று சொல்ல, பிரதீப்போ பெருமூச்சுடன் தனது தொலைபேசியை எடுத்துக் கொண்டே சற்று தள்ளி நடந்து போனான்...

அடுத்து அவன் அழைத்தது என்னவோ வம்சி கிருஷ்ணாவுக்கு தான்...

வம்சி கிருஷ்ணா சிங்கப்பூருக்கு புறப்பட தயாராக இருந்த சமயம் அது...

அலைபேசியை எடுத்து காதில் வைத்தவன், "சொல்லு பிரதீப்" என்று சொல்ல, அவனோ, "சார் ஒரு முக்கியமான விஷயம்" என்றான்...

"ம்ம் சொல்லு" என்றான் வம்சி கிருஷ்ணா...

"உங்க வைஃப் கூட ஏதும் பிரச்சனையா சார்?" என்று தயங்கி தயங்கி கேட்டான் பிரதீப்...

வம்சி கிருஷ்ணாவோ புருவம் சுருக்கி யோசித்தவன், "தேன்மொழி கூட ஒரு பிரச்சனையும் இல்லையே... என்னாச்சு?" என்று கேட்க, பிரதீப் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான்...

வம்சி கிருஷ்ணாவின் முகம் இறுகியது...

யாரோ ஒருவனிடம் பணம் கேட்டு அவமானப்பட்டு இருக்கின்றாள்... தன்னிடம் ஒரு வார்த்தை பணத்தை பற்றி பேசவில்லை என்கின்ற ஆத்திரம்...

நேற்று தன்னிடம் ஏதும் சொல்ல வேண்டுமா? என்று அத்தனை தடவை கேட்டான்...

வாயையே அவள் திறக்கவில்லையே... கை பற்றி தோள் சாய்ந்து நிற்கும் அளவுக்கு உரிமை எடுத்துக் கொண்டவளுக்கு இதனை சொல்ல என்ன தயக்கம் என்கின்ற கடுப்பு...

தேன்மொழி மேல் அடக்க முடியாத கோபம் உண்டானது... ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே, "உன்னோட பேங்க் டீடெய்ல்ஸ்க்கு மூணு லட்சம் போட்டு விடுறேன்... செட்டில் பண்ண வேண்டியவனுக்கு செட்டில் பண்ணிடு... அவளுக்கு கொடுத்தது என்னோட பணமாவே இருக்கட்டும்" என்று சொல்லி விட்டு அலைபேசியை வைத்தவனுக்கு ஆத்திரம் மட்டும் அடங்கவே இல்லை...

அங்கிருந்த நீர் பாட்டிலில் இருந்த நீரை அருந்தி ஆத்திரத்தை அடக்கிக் கொண்டான்...

இதே சமயம் தேன்மொழியோ நேரத்தைப் பார்த்தாள்.

மணி நான்கை நெருங்கி இருந்தது...

பணத்தை மகாலக்ஷ்மியிடம் கொடுத்து விட்டு வருவதற்கு நேரம் போதவில்லை...

வம்சி கிருஷ்ணா சற்று நேரத்தில் ஃப்லைட்டுக்கு கிளம்பி விடுவான்...

பணத்தை அடுத்த நாள் மகாலக்ஷ்மியிடம் கொடுத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டே, வேகமாக வம்சி கிருஷ்ணாவை வழியனுப்ப வீட்டை நோக்கி நடந்தாள்.

வம்சி கிருஷ்ணாவின் உடைமைகளும் கெளதம் கிருஷ்ணாவின் உடமைகளும் காரில் ஏற்றுப் பட்டுக் கொண்டு இருந்தன...

வேகமாக வீட்டினுள் நுழைந்தாள்.

"புருஷன் வெளியூர் போக போறான்... ஆடி திரிஞ்சிட்டு வர்ற நேரத்தைப் பாரு" என்று வேதவல்லி வழக்கம் போல தனது வசைவை தொடங்க, அவளோ அவர் கதையை காதில் வாங்காமல் வேகமாக மாடி ஏறினாள்.

குருமூர்த்திக்கு அலுவலகத்தில் முக்கிய சந்திப்பு இருப்பதால், அலைபேசியில் தான் கெளதம் கிருஷ்ணாவிடமும் வம்சி கிருஷ்ணாவிடமும் பேசி இருந்தார்...

அவர்கள் வெளிநாடு செல்வது ஒன்றும் முதல் தடவை அல்லவே...

ஆனாலும் வழக்கமாக முடிந்தவரை வழியனுப்ப வந்து விடுவார்... ஓரிரெண்டு நாட்கள் அவரால் வர முடியாமல் போய் இருக்கின்றது...

அந்த ஓரிரெண்டு நாட்களில் இதுவும் ஒன்று...

யாதவ் கிருஷ்ணாவோ வசந்தியின் அருகே வாசலில் நின்று இருக்க, வேதவல்லியும் கல்யாணியும் கூட நின்று இருந்தார்கள்...

ஆனால் இன்னும் வம்சி கிருஷ்ணாவும் கெளதம் கிருஷ்ணாவும் கீழிறங்கி வரவில்லை...

அதே சமயம் வம்சி கிருஷ்ணாவுடன் பேசுவதற்காக அறைக்குள் வேகமாக நுழைந்தாள் தேன்மொழி...

அவள் அறைக்குள் நுழையும் சமயம் கெளதம் கிருஷ்ணா தனது அறைக்குள் இருந்து வெளியேறி படியிறங்கி இருக்க, வம்சி கிருஷ்ணாவோ தனது அறைக்குள் நின்று ஹாண்ட் லக்கேஜ்ஜை தோள்களில் போட்டுக் கொண்டே, தலையை கோதிக் கொண்டு வெளியேற ஆயத்தமானான்...

அவளை ஏன் என்றும் கவனிக்கவில்லை...

மனம் உலையாக கொதித்துக் கொண்டு இருந்தது அவனுக்கு...

முன்னே நின்றவளை பார்க்காமல் அவளை தாண்டி செல்ல முயல, அவளோ வளையல்களை அசைத்து தான் வந்து இருப்பதை உணர்த்த முயன்றாள்...

சத்தம் கேட்டது... ஆனாலும் அவன் திரும்பிப் பார்க்கவில்லை...

கதவை திறந்து கொண்டே வெளியேறி இருந்தான்...

அவன் நடவடிக்கையில் தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு...

'நான் லேட்டா வந்ததுக்கு கோச்சுட்டாரோ' என்று நினைத்தவள், சட்டென வெளியேறியவனின் கையை எட்டி பற்றிப் பிடிக்க, அவளை பார்க்காமலே, "கையை எடு" என்று அவன் சீறினான்...

அதிர்ந்து விட்டாள் பெண்ணவள்... சட்டென்று அவன் கையில் இருந்து கையை எடுத்தவளோ அவன் முதுகை அதிர்ந்து பார்க்க, அவன் கர்ஜித்த சத்தம் கீழே நின்று இருந்தவர்களுக்கும் கேட்டது...

சட்டென்று அனைவரும் மேலே ஏறிட்டுப் பார்த்தார்கள்...

அவனுக்கோ தன் மீதே எரிச்சல்...

"பச்" என்று தலையை கோதிக் கொண்டே விறு விறுவென வேகமாக கீழே இறங்கினான்...

அவள் மீது கோபத்தை காட்ட கூடாது என்பதற்காக தான் அவளை தவிர்த்தான்...

ஆனால் முடியவில்லை... வெடித்து விட்டான்...

பெண்ணவளுக்கோ அதிர்ச்சி...

கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது...

எதற்காக அவன் தன் மேல் கோபமாக இருக்கின்றான் என்றும் தெரியவில்லை... விஷயத்தை சொல்லி விட்டு சண்டை போட்டு இருந்தால் கூட அவள் நிம்மதியாக இருந்து இருப்பாள்...

எதற்கென்று தெரியாமல் தவித்தவள் வேகமாக அவனை தொடர்ந்து கீழே இறங்கினாள்.

வம்சி கிருஷ்ணாவுக்கு அருகே வந்த கெளதம் கிருஷ்ணாவோ, "டேய் என்னடா ஆச்சு? அது தான் நாம கிளம்ப முதல் வந்துட்டாங்களே" என்று கேட்க, அவனோ, கெளதம் கிருஷ்ணாவை அழுத்தமாக பார்த்தவன், "அது எல்லாம் காரணம் இல்ல, வழியனுப்ப வரல்லன்னா கூட நான் கோபப்பட மாட்டேன்..." என்று சொல்லிக் கொண்டே நடந்தான்...

சத்தமாகவே சொன்னான்...

தேன்மொழி காதில் விழட்டும் என்று சொன்னான்...

அவளுக்கும் அவன் எதிர்பார்த்த போல அது கேட்டது...

'நான் லேட்டா வந்ததுக்கு அவர் கோபப்படலயா? அப்போ எதுக்கு கோபப்பட்டார்?' என்று புரியாமல் தவித்துக் கொண்டே, அவர்களை பின் தொடர்ந்து வாசல் வரை வந்து விட்டாள்.

"போற நேரத்துல அவனை கடுப்பாக்குறத பாரு" என்று வேதவல்லி மீண்டும் ஆரம்பிக்க, அவரை ஆழ்ந்து பார்த்த வம்சி கிருஷ்ணாவோ, "நீங்களும் தான் பேசி பேசியே கடுப்பாக்கிட்டு இருக்கீங்க" என்று சொன்னான்...

சட்டென வாயை இறுக மூடிக் கொண்டார் வேதவல்லி...

வசந்தியை பார்த்து தலையசைத்து விட்டு யாதவ் கிருஷ்ணாவை பார்த்தவன், "என்ன வேணும்னு மெசேஜ் பண்ணு" என்றான் சைகை மொழியில்...

அவனும் தலையாட்டி சிரித்துக் கொண்டே, வம்சி கிருஷ்ணாவையும் கெளதம் கிருஷ்ணாவையும் அணைத்து வழி அனுப்ப, அவர்களும் வேதவல்லி, கல்யாணி மற்றும் அங்கே நின்ற வேலைக்காரர்கள் என்று அனைவரிடமும் சொல்லி விட்டு புறப்பட ஆயத்தமானார்கள்...

கெளதம் கிருஷ்ணாவோ, "வர்றோம் அண்ணி" என்று தேன்மொழியை பார்த்து சொல்ல, அவளோ கலங்கிய கண்களுடன் தலையாட்டி விடை கொடுத்தாலும், அவள் விழிகள் என்னவோ தன்னை நோக்காத வம்சி கிருஷ்ணாவில் தான் படிந்தது...

அவளை திரும்பி கூட பார்க்கவில்லை...

காரில் ஏறிக் கொண்டான்...

இந்த கோபம் எதற்கென்று தெரியாமல் தவித்துப் போனாள்...

ஒரு தடவையாவது தன்னை பார்க்கமாட்டானா? என்கின்ற ஏக்கம் அவளுக்கு... கதவு நிலையில் சாய்ந்து அவனையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.

விம்மலுடன் அழுகை வந்தது...

அடக்கிக் கொண்டாள்.

அவன் முகம் இறுக்கமாக இருந்தது...

முன்னால் பார்த்தபடி அமர்ந்து இருந்தான்...

இரக்கம் இல்லாதவன்... அவளை கொஞ்சம் கூட திரும்பி பார்க்கவில்லை...

அவன் ஒற்றை பார்வை வீச்சு அவளை இதமாக்கி இருக்கும்... உன்னை இதமாக்க நான் தயாராக இல்லை என்கின்ற தோரணையில் தான் அமர்ந்து இருந்தான்...

காரும் புறப்பட்டு விட்டது...

உடைந்து விட்டாள்.

மொத்தமாக உடைந்து விட்டாள்.

அதற்கு மேல் அங்கே அவளால் நிற்கவே முடியவில்லை...

இன்று காலை வரை நன்றாக இருந்தவனுக்கு இப்போது என்ன ஆனது என்று தான் அவளுக்கு தெரியவில்லை...

அவள் இசையை ரசித்து இருக்கின்றாள்...

அவன் அக்கறையை உணர்ந்து இருக்கின்றாள்...

அவனது உறுதியான ஆளுமையை மனதுக்குள் சிலாகித்து இருகின்றாள்...

முதல் முறை அவன் கோபத்தை எதிர் கொள்கின்றாள்...

தாங்கிக் கொள்ளவே முடியவில்லை...

அனலாக தகிப்பவனை எப்படி குளிர்விப்பது என்றும் தெரியவே இல்லை...

அவன் நேசம் எந்த அளவுக்கு மென்மையானதோ அவன் கோபம் அதே அளவுக்கு வன்மையானது...

இதே சமயம் கல்யாணிக்கும் வேதவல்லிக்கும் உள்ளுக்குள் குதூகலம்...

"பார்த்தியா ஏதோ உள் நாட்டு பிரச்சனை போல" என்று வேதவல்லி சொல்ல, கல்யாணியோ, "ஆமா பாட்டி, என்னை பார்த்தே வம்சி மாமா தலையாட்டினார்... ஆனா அவளை பார்க்கவே இல்லை" என்று சிரித்தபடி சொல்ல, "இது தான் சந்தர்ப்பம்னு நாம போட்ட திட்டங்களில ஒண்ண நிறைவேத்துறோம்" என்று சொல்ல, "டன் பாட்டி" என்றாள் கல்யாணி...

இதே சமயம் நொறுங்கிய மனதுடன் அறைக்குள் அமர்ந்து இருந்த தேன்மொழியோ, கையில் இருந்த தொலைபேசியில் அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்...

"என்ன தப்பு பண்ணுனேன்னு தெரியல... எந்த தப்பு பண்ணி இருந்தாலும் மன்னிச்சுக்கோங்க" என்று அனுப்ப, அதனை பார்த்தவனோ, பதில் அனுப்பாமல் அலைபேசியை பாக்கெட்டில் போட்டான்...

அவளோ கட்டிலில் படுத்து அலைபேசியில் அவன் பதிலை எதிர்பார்த்து காத்துக் கொண்டே இருந்தவள் அப்படியே தூங்கிப் போனாள். அவனும் விமானம் ஏறி தனது பயணத்தை தொடங்கி இருந்தான்...
 
ஏன் தேனு வம்சி உன் புருஷன் தானே அவன் கிட்ட கேக்க வேண்டியது தானே 🥲 இப்போ உனக்கு தான் கஷடமா இருக்கு பாரு
 
கணவன் மனைவி ஒன்னா சேர்ந்து நல்லா வாழ்ந்தால் கூட மனைவி வீட்டில் ஏதாவது பிரச்சனைனா கணவன் கிட்ட பைசா கேட்கிறதுக்கு அவ்வளவு யோசிப்பாங்க இவங்க ரெண்டு பேரும் இன்னும் வாழவே ஆரம்பிக்கல அப்படி இருக்கும் போது அவன்கிட்ட போய் எப்படி காசு கேட்க முடியும் 😭😭😭😭
 

CRVS2797

Active member
உன் மௌனமே என்
இசையாக...!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 19)


நான் அப்பவே சொன்னேன்..
கேட்டாத்தானே...? தன் மானம், சுய மரியாதைன்னு என் வாயை அடைச்சுப்போட்டு... இப்ப அவஸ்தைப்படறது யாரு...
நீ தானே..? இது உனக்கு தேவையா...? அவனாத்தானே
உன்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டான். நீயா போய் அவனோட பணத்துக்காக மேல விழலைத்தானே...?
அப்புறம் எதுக்காக அவசரத்துக்கு வேண்டிய பணத்துக்காக, ஊரு முழுக்க கேட்டியே... அவன் கிட்ட கேட்டியா...? இப்ப அவன் கிட்ட கேட்காததால, உனக்கு என்ன கிடைச்சது...? உன் வம்சியோட மானத்தை நீயே ஏலம் போட்ட மாதிரியாயிடுச்சா இல்லையா..?
இது அவனுக்கு மட்டுமில்லை,
உனக்கும் தலையிறக்கம் தானே..? தன்னடக்கம் இருக்கலாம், ஆனா தலையிறக்கம் பண்ணக் கூடாது தானே...????


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top