ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 17

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 17

இப்படியே அவர்கள் வாழ்க்கை நகர ஆரம்பிக்க, மதுபாலாக்கு இடியாக வந்து விழுந்தது விருதாச்சலத்தின் இறப்பு. அவர் இறப்பின் பின்னர் கட்சி தலைமைக்கு இரு பிரிவுகளாக பிரிந்து அடிதடி வந்து விட, மதுபாலாவுக்கு இப்போது கரிகாலனை அடைவதை விட கட்சியை கைப் பற்றுவதே முக்கியமாகி இருக்க, அந்த டாஸ்கை ஒத்தி வைத்து விட்டு அரசியல் டாஸ்கில் இறங்கி இருந்தாள்.

அடுத்தடுத்து நாட்கள் மாதங்களாக, கரிகாலனும் மதுபாலா தனது விடயத்தில் தலை இடாத காரணத்தினால் அமைதியாகவே இருந்தான். மாதவிக்கோ கட்சி தலைமை ஒரு பக்கம் எம் எல் ஏ எலக்ஷன் இன்னொரு பக்கம் என்று வேலைப்பளு தலையை அழுத்தியது. இதன் போது தான், கரிகாலனிடம் ஒரு நாள் மலையில் வந்த மாதவி , அவன் கையில் இருந்த போனை பறித்து விட்டு "நீங்க என்ன பண்ணி இருக்கீங்க தெரியுமா?" என்று கேட்க அவனோ "நான் என்னடி பண்ணுனேன்?" என்று கேட்டான். அவளும் அவனை முறைத்து பார்த்தவள் " எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம், இப்போ போய் இப்படி பண்ணிடீங்களே? நான் படிக்கணும்" என்று சொன்னபடி அவன் அருகே அமர அவனோ "இப்போ நீ என்னன்னு சொல்லிட்டு திட்டு" என்றான்.

அவளோ "பண்ணுறதையும் பண்ணிட்டு ஒண்ணுமே தெரியாத போல பேசுறீங்களே" என்று சொல்ல அவனுக்கோ எங்கேயாவது சென்று முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.

"ஷப்பா, எனக்கு இந்த கலெக்டர் வேலை பார்க்கிறது கூட அவ்ளோ கஷ்டமா இல்ல, ஆனா பொண்டாட்டி சொல்றத புரிஞ்சுகிறது பெரிய கஷ்டமா இருக்கே" என்று புலம்ப, "பேசுவீங்க பேசுவீங்க, நான் கர்ப்பமா இருக்கேன் தெரியுமா?" என்று சொல்ல அவன் விழிகளோ விரிந்து கொள்ள மனதிலோ அவனுக்கு பட்டாம் பூச்சி பறந்தது...

ஆனால் வெளியே சொன்னால் எங்கே அவள் கொதித்து விடுவாள் என்று முகத்தை கடினமாக வைத்து இருந்தவன் " அதுக்கு வாய்ப்பே இல்லையே,, எல்லாம் முன்னெச்சரிக்கையுடன் தானே நடந்திச்சு " என்று சொல்ல அவளோ "க்கும் , நடிக்காதீங்க கண்ணா, எனக்கு எல்லாமே தெரியும்.. நானும் டாக்டருக்கு தான் படிக்கிறேன்.. வேணும்னு தானே அன்னைக்கு" என்று ஆரம்பிக்க அவனோ அவளை அழுத்தமாக பார்த்து "ஆமா வேணும்னு தான்.. ஆதித்துக்கு சகோதரன் வேணாமா? ஆனாலும் உன் கிட்ட படிச்சு முடிக்கும் வரை குழந்தை வேணாம்னு சொல்லிட்டு திரும்ப கேட்க சங்கடமா இருந்திச்சு, சாரி... ஒரு வருஷம் தாண்டி படிப்பு ஸ்கிப் ஆகும். எனக்காக ப்ளீஸ்,, எனக்கும் வயசாகுது " என்று கெஞ்சுதலாக கேட்டவன் ஒரு கணம் நிறுத்தி "அது சரி நீ கருத்தடை மாத்திரை யூஸ் பண்ற தானே,, அப்புறம் எப்படி?" என்று கேட்க இப்போது திரு திருவென விழிப்பது அவள் முறையாகி போனது.

"அது அது" என்று முதலில் தடுமாற, அவனோ "எது?" என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டான். ஒருவாறு சுதாகரித்தவள் "அதெல்லாம் இப்போ எதுக்கு." என்று கேட்டபடி எழ முற்பட அவன் கரமோ அவளை நெருக்கி இருக்க "சொல்லிட்டு போ" என்றான். அவளும் "நான் அத விட்டு மூணு மாசத்துக்கு மேல ஆச்சு, " என்று அவன் முகத்தை பாராமல் சொல்ல "அடிப்பாவி" என்றவன் அவள் இதழில் அழுந்த முத்தமிட்டான்.

இப்படியே நாட்கள் நகர, மதுபாலாவுக்கு கட்சி தலைமை பல தில்லு முள்ளுகள் , பல படுக்கை பகிர்வுகள் மூலம் கிடைத்து இருந்தது...

எம் எல் ஏ யாக நிற்க அவள் முடிவெடுத்து இருக்க, இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் என்னும் நிலைமை வந்து சேர்ந்தது. அப்போது அவளுக்கோ பல அபிவிருத்திகளை செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் இருக்க, கரிகாலன் மூலம் அப்ரூவ் பண்ணி இருந்த பாலமானது முடியும் தருவாயில் இருந்தது. அவளும் அந்த பாலத்தை இந்த நேரத்தில் திறந்து வைத்தால் வாக்குகளை அள்ளலாம் என்று நினைத்தவள் பாலத்தை நோக்கி வந்து சேர்ந்தாள். உடனே அவள் கூட வந்தவர்கள் "இது கலெக்டர் அப்ரூவ் பண்ணுன பிரிட்ஜ் மேடம், எப்போ முடியும்னு அவர் பிங்கர் டிப்ஸ் ல வச்சு இருப்பார்" என்று சொல்ல அவளோ "கரிகாலனை இங்க வர சொல்லுங்க" என்று உத்தரவு இட்டாள்.

அப்போது தான் மாதவியை கல்லூரியில் இருந்து ஏற்றிக் கொண்டு வந்த கரிகாலனின் போன் அலற, அதை எடுத்து காதில் வைத்தான். மறுமுனையில் மதுபாலாவின் செக்ரீட்டரியோ " மதுபாலா மேடம், *** பிரிட்ஜ் ஐ பார்க்க வந்து இருக்காங்க, உங்கள சைட்டுக்கு வர சொன்னாங்க" என்று சொல்ல அவனோ "ம்ம்" என்றபடி வைத்தவன் திரும்பி மாதவியை பார்த்து "மேயர் அம்மா வர சொல்றாங்க"என்று சொன்னான். அவளோ "எங்க வீட்டயா ?" என்று அதட்டலாக கேட்க வாய்விட்டு சிரித்தவன் "இல்லடி சைட்டுக்கு தான். போற வழியில பொய்ட்டு போய்டலாம்" என்று சொல்ல அவளும் "சரி சரி போங்க" என்று வேண்டா வெறுப்பாக சொன்னாள்.

அவனோ காரை ஓரமாக நிறுத்தி விட்டு "இப்படி நீ கோபப்பட்டாலே எனக்கு என்னவோ எல்லாம் தோணுது" என்று சொன்னவன் தோன்றியதை எல்லாம் செய்து விட்டே நிமிர்ந்தான். அவளோ அவனை வெட்கமும் செல்ல கோபமும் கலந்து பார்த்தவள் "இங்க வச்சு பண்ணுற காரியமா?" என்று சிணுங்க , அதற்கும் பதிலை அவன் இதழ் கொண்டு உணர்த்தியவன் கார் பாலத்தை நோக்கி விரைந்தது. மதுபாலாவும் பாலத்தை சுற்றி பார்த்து விட்டு, அங்கே நிற்க கரிகாலன் காரை தள்ளி நிறுத்தியவன் "நீ உள்ளேயே இரு, என்னன்னு கேட்டுட்டு வந்திடுறேன்" என்றபடி கார் கதவை திறந்தபடி இறங்கினான்.

அவனை நீண்ட நாள் கழித்து சந்தித்த மதுபாலாவுக்கோ மீண்டும் அவன் கம்பீரமான தோற்றத்தை பார்த்ததும் என்னவோ எல்லாம் தோன்ற ஆரம்பித்தது.

அவள் மனமோ "இந்த எம் எல் ஏ எலெக்ஷன் முடியட்டும்,, விட்ட வேலைய திரும்ப ஆரம்பிக்கலாம்.. " என்று அவன் கம்பீரமான நடையை பார்த்து ஏக்க பெருமூச்சு விட்டவள் அவன் அருகே வந்ததும் கண்ணில் இருந்த சன் கிளாஸை கழட்டியபடி "இது எப்போ முடியும் கலெக்டர் சார்?"என்று கேட்டாள் . அவனோ "ம்ம் , இன்னும் ரெண்டு மாசம் ஆகும் மேடம்" என்று சொல்ல அதைக் கேட்டவள் "வாட்? ரெண்டு மாசமா? இன்னும் ரெண்டு வாரத்தில முடிஞ்சாகணும். இத நான் ஓபன் பண்ணி வைக்கணும்" என்று சொல்ல அவனோ அவளை லூசா என்ற தோரணையில் மேலிருந்து கீழ் பார்த்தவன் "உங்க இஷ்டத்துக்கு எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது மேடம், முடியுற நேரம் தான் அது முடியும்.. அவசரப்பட்டு அரை குறை வேலை பார்க்க வைக்க எனக்கு விருப்பம் இல்ல., தட்ஸ் இட்" என்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக பேச மதுபாலாவின் அருகே இருந்தவனோ "யோவ் கலெக்டர்" என்று சொல்ல அவனை அனல் தெறிக்க பார்த்தவன் "கலெக்டர் சார்" என்றான் அழுத்தமாக..

அவன் அனல் கக்கும் விழிகளை பார்த்து எச்சிலை விழுங்கிக் கொண்டவன் "கலெக்டர் , இவங்க எங்க கட்சி தலைவி, அடுத்த எம் எல் ஏ , யார்னு தெரியாம பேச வேணாம்."என்று சொல்ல அவனோ "எந்த டேஷ் ஆஹ் இருந்தாலும் எனக்கு கவலை இல்ல, அது முடிய வேண்டிய நேரத்துக்கு கரெக்ட்டா முடியும்" என்று சொன்னான். உடனே மதுபாலா அவனை கோபமாக பார்த்தவள் "என்ன சார், வாயெல்லாம் நீளுது, ரொம்ப தலைக்கனம் கூடி போச்சோ, என் கையில உங்களோட பல குடுமிகள் இருக்கு. மறந்துடீங்களா? கொஞ்ச நாள் என்னோட கட்சி பிரச்சனைல கண்டுக்காம விட்டு இருந்தேன்.. இந்த எலெக்ஷன் முடியட்டும் வைக்கிறேன் ஆப்பு" என்று சொல்ல, "என்ன ஆப்பு மேடம் வைக்க போறீங்க?" என்று கேட்டான் சற்றும் பதறாமல்..

அவளோ "உங்க பிரென்ட் ஒன்றும் சொல்லலையா " என்று சொன்னபடி அவன் முகத்தை தனக்கு எல்லாம் தெரியும் என்ற ரீதியில் சொல்லி விட்டு பார்க்க அவனோ பின்னங் கழுத்தை வருடியவன் " பிரெண்டா? ஓஹ் மாதவியை சொல்றீங்களா? ஒண்ணுமே சொல்லலியே.. என் கூட தான் வந்து இருக்கா.. கேட்டு பார்த்துடலாமா?" என்றவன் காரை பார்த்து வரும்படி சைகை செய்ய, காரில் இருந்து இறங்கி அவனை நோக்கி நடந்து வந்த மாதவியை பார்த்து விழி விரித்து அதிர்ந்து நின்றாள் மதுபாலா..

நண்பர்கள் என்று சொல்லி விட்டு ஆறு மாத கர்ப்பிணியாக மேடிட்ட வயிற்றுடன் வந்தால் அந்த அதிர்ச்சி இருக்காதா என்ன ?

விழி விரித்து நின்றவள் முன்னே சொடக்கிட்டவன் "என்ன மேடம் அப்படியே நின்னுட்டிங்க?" என்று கேட்க அவளோ அவனை ஆழ்ந்த மூச்செடுத்து கோபத்தை அடக்கியபடி பார்க்க கரிகாலன் அருகே வந்த மாதவி அவன் கழுத்தில் ஒட்டி இருந்த தனது பொட்டை கண்டு கொண்டவள் அதை எடுக்க அவனோ "என்னடி?" என்று அவளை பார்த்து கேட்டான். அவளோ "பொட்டு " என்று சொல்லி அதனை தூக்கி காட்ட, அவனும் "ஓஹ் , " என்று அவள் இதழ்களை பார்த்தபடி சொன்னவன் அவள் கையில் இருந்த பொட்டை வாங்கி அவனே அவள் நெற்றியில் வைத்து விட்டு மதுபாலாவின் வயிற்றெரிச்சலை இருமடங்காக்கினான்.

மாதவியை நோக்கி திரும்பியவன் "இவங்க உன் கிட்ட ஏதும் சொன்னாங்களா? " என்று மதுபாலாவை காட்டி கேட்க அவளோ இதழ்களை பிதுக்கினாள். அதைக் கேட்ட மதுபாலாவுக்கு உடல் இறுகிப் போக, கஷ்டப்பட்டு உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்து வன்மமாக சிரித்தவள் "கொஞ்சம் தனியா ஆதித் பற்றி பேசலாமா கலெக்டர் சார்? " என்று கண்களால் தள்ளி இருந்த மறைவான இடத்தை காட்ட அவனோ "தாராளமா பேசலாம் மேடம், ஆனா என் மனைவி என் கூட தான் இருப்பா' என்று சொல்ல அவனை மேலிருந்து கீழ் பார்த்தவள் "ம்ம் " என்று வன்மமாக சொல்லி விட்டு முன்னே செல்ல மீதி இருவரும் அவளை பின் தொடர்ந்தார்கள்.

அங்கே சென்றதுமே "ரெண்டு பேரும் ஆதித் பத்தி மறந்து பேசுறீங்கன்னு நினைக்கிறேன் .. ஒரே கேஸ் அவன் என் கிட்ட வந்திடுவான். அப்புறம்" என்று சொல்லி இதழ்களை பிதுக்கியவள் மனமோ "புது குழந்தை வர போகுது. ஆதித் பத்தி கவலை படுவானோ இல்லையோ" என்று கொஞ்சம் தளும்பி தான் இருந்தது. அவள் சொன்னதை கேட்டு சத்தமாக சிரித்தவன் " தாராளமா கேஸ் போடுங்க மேடம். அத எனக்கு பார்த்துக்க தெரியும்.. ஆனா நீங்க தான் கொஞ்சம் பாவமா இருக்கீங்க, விஜிதன் நினைவில் இருக்கானா என்ன? அது சரி ஒன்னு ரெண்டு பேருன்னா நினைவுல வச்சு இருக்கலாம். ஆனா லிஸ்ட் பெருசா இருக்கே,, அந்த எல்லா எவிடென்ஸ் உம் என் கிட்ட தான் இருக்கு. இப்போ ரிலீஸ் ஆனா போதும், உன்னோட மொத்த வாக்கும் காலி, என்ன பண்ணலாம் மேடம்?" என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க அவள் மேனியோ முதல் முறை பயத்தில் வியர்த்து வழிய தொடங்கியது..

ஆனாலும் சுதாகரித்தவளுக்கு சார்பாக அவ்விடத்தில் வேலை செய்பவர்கள் மூவருக்கும் குளிர்பானம் கொண்டு வந்து கொடுக்க "குடிங்க மேடம், சைட்டுக்கு வந்தவங்களை வெறும் கையோட அனுப்பி வச்சு எங்களுக்கு பழக்கம் இல்ல, நீங்க வேற பதட்டமா இருக்கீங்க" என்று சொல்ல அவளோ கூல் ட்ரின்கை குடித்தபடி அங்கு அவர்களுக்காக போடப்பட்ட இருக்கையில் அமர்ந்தாலும் அந்த பானம் தொண்டை குழியில் இறங்கினால் தானே. உடனே போனில் ஒரு மெசேஜை உதவியாளனுக்கு தட்டி விட்டவள் மிக மிக மெதுவாக பானத்தை அருந்தலானாள். கிட்டத்தட்ட குடித்து முடித்து விட்டு பத்து நிமிடங்களாக இருந்த கரிகாலனோ "என்ன மேடம் ஸ்ட்ரா அடைச்சுக்கிச்சா?" என்று கேட்க அவனை முறைத்தவள் "உனக்கு தான் மொத்தமா அடச்சுக்க போகுது.. என்னையே மிரட்டுறாயா?" என்று மனதுக்குள் கேட்டபடி போனை ஒரு கணம் பார்த்து விட்டு "போகலாம்" என்று சொன்னாள். அவனும் எழுந்தபடி மாதவியையும் எழுப்பி விட "ரொம்ப தான், " என்று மனதுக்குள் முணுமுணுத்து மதுபாலா மறைவான இடத்தில் இருந்து வெளியே வந்தவள் புருவம் உயர்த்தி சைகையில் உதவியாளனிடம் கேட்க அவனோ கண்களை மூடி திறந்து சொன்ன வேலையை முடித்து விட்டதாக சைகை செய்தான்.


மதுபாலாவும் வன்மமாக சிரித்தபடி ஜீப்பில் ஏறிக் கொள்ள, கரிகாலனோ தனது காரில் மாதவியை ஏற்றி விட்டு தானும் ஏறிக் கொண்டான். அவனும் காரை ஸ்டார்ட் பண்ணி முன்னே செல்ல மதுபாலாவின் ஜீப் அவனை சற்று தூரத்தில் பின் தொடர்ந்தது. கார் ஓட்டிக் கொண்டு இருந்தவனின் போன் அலற, அவனும் ப்ளூ டூத்தை ஆன் பண்ணியவன் "என்னடா?" என்று சைட்டில் நின்று எடுத்த அவன் விசுவாசியிடம் கேட்க அவனோ "சார், நான் வேலை முடிச்சு வரும் போது , மேயர் மேடத்தோட ட்ரைவர் உங்க கார் கீழ இருந்து எழுந்தான். அத சொல்ல முதல் நீங்க காரை எடுத்துடீங்க அது தான் அவசரமா போன் பண்ணினேன்" என்று சொல்ல "வாட்?" என்றவன் கால்கள் பிரேக்கில் அழுத்து பட கார் நின்றால் தானே. அவனுக்கு மதுபாலாவின் நரித்தனமான செயல் தெளிவாக விளங்க, மாதவிக்கு சொல்லி அவளை பதட்டப்பட வைக்காமல் மெதுவாக ஓட்டினான். உடனே அவனை பின் தொடர்ந்த மதுபாலா "என்னடா மெதுவா ஓட்டுறான். ஸ்பீடா போனா தானே விளைவு பயங்கரமா இருக்கும்" என்று ஆர்வமாக சொன்னாள்.

அவனும் காரை ஓட்டியபடி திரும்பி மாதவி சீட் பெல்ட் எல்லாம் போட்டு இருகிறாளா என்று ஆராய்ந்தவனுக்கு அவளுக்கும் குழந்தைக்கும் எதுவும் ஆகாமல் காப்பாற்றி விட வேண்டும் என்ற முனைப்பே இருந்தது.. மெது மெதுவாக வேகத்தை குறைக்க அவர்கள் பின்ன வந்த மதுபாலாவோ " என்னங்கடா இது?? " என்று இயலாமையில் சீறினாள்..அவன் நல்ல நேரத்துக்கு அந்த இடம் ஆளில்லா இடமாகி போனது சாதகமாகி போக அவன் கண்ணுக்கு பக்க வாட்டு பக்கத்தில் இருந்து வந்த லாரி தென்பட்டது. அந்த லாரியும் நிலை இல்லாமல் வர, அவன் மனமோ "ஒன்னு அந்த லாரி ட்ரைவர் தூக்க கலகத்தில இருக்கனும்.. இல்லன்னா குடிச்சிருக்கணும்" என்று யூகம் பிறந்தது. அதைக் கண்டவனுக்கோ இது வரை காரை நிதானமாக ஓட்டியது போல ஓட்ட முடியாது என்றே தோன்ற பின்னால் இருந்த தலையணையை எடுத்து மாதவி மடியில் ஒன்றும் அவள் முன்னே தலை அடிபடாமல் ஒன்றும் வைத்தவன் தன்னை அதிர்ந்து புரியாமல் பார்த்தவளிடம் " பீ சேப் மாதவி " என்று சொன்னபடி காரை பக்கத்தில் இருந்த மரத்தில் மொத அவள் தலை அடிபாடாமல் தப்பினாலும் அவன் தலை ஸ்டேரிங் வெயிலில் பலமாக மொத நெற்றி வெடித்து ரத்தம் கசிந்தது.

அதைக் கண்ட மாதவியோ " ஐயோ ரத்தம்" என்றபடி அங்கிருந்த டிஸ்ஸுவை எடுத்து அவன் நெற்றியில் வைக்க அவனோ "இட்ஸ் ஓகே ம்மா சின்ன காயம் தான். உனக்கு ஒன்னும் அடிப்படலையே " என்று கேட்டான். அவளோ இல்லை என்று தலையாட்டியவள் "என்னாச்சு திடீர்னு?" என்று கேட்க அவன் கண்களோ பக்கவாட்டாக இருந்த சைட் மிரரில் பின்னால் வந்த ஜீப்பை பார்த்த கணமே அந்த ஜீப் பக்கவாட்டாக வந்த லாரி வேகமாக மோதியதில் பறந்து போய் நொறுங்கியது. அதை கண்டவன் "ஷீட் " என்றபடி பதறி இறங்க, லாரியும் ஒரு ஓரமாக போய் மரத்தில் மோதி கொள்ள, மதுபாலாவின் வாகனம் மொத்தமாக சிதைந்து போனது.


எதிரியாக இருந்தால் கூட அந்த கணத்தில் அம்பியூலன்சுக்கு போன் பண்ணியது என்னவோ கரி காலன் தான். உடனே ஜீப்பை நோக்கி செல்ல, மதுபாலாவோ ரத்த வெள்ளத்தில் கிடைக்க அவள் கூட இருந்தவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்து போய் இருந்தார்கள்.
 
Last edited:

CRVS2797

Active member
அந்தாதி நீ தானே...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 17)


சூப்பர்...! எதிரியே ஆனாலும் சந்தோஷப்படக் கூடாது தான். ஆனா, மதுபாலா எதிரியில்லையே... துரோகியாச்சே. புருசனுக்கு துரோகம் செய்தவ துரோகி தானே..?


இதைத்தான் வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்னு சொன்னாஙகளோ..?


இனி வீட்டுக்குள்ளயே முடிஞ்சிட வேண்டியது தான் வாழ்க்கை.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top