அத்தியாயம் 14
கிட்டத்தட்ட பல மாதங்கள் கழித்து இருவரையும் பார்க்கின்றாள் மதுபாலா .. ஆனால் இந்த நெருக்கம் அவள் மனதில் ஊசியால் குத்துவது போன்று வலிக்க, "நான் தனிமையில இருக்கும் போது அவன் சந்தோஷமா இருக்கணுமா?" என்று ஒரு எண்ணத்தை வளர்க்க அவள் தூக்கம் அன்று இரவு தொலைந்து போனது. விருத்தாச்சலம் நோய் வாய்ப்பட்ட பின்னர் அவளுக்கு வேலைப்பளுவும் அதிகரித்து இருக்க, அடுத்த எம் எல் ஏ எலெக்ஷனில் நிற்க மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டு இருந்தாள். விருதாச்சலத்துக்கு மகன் இறப்பின் பின்னர் அவருக்கு ஒரு தளர்வு உருவாகி இருந்தது. அதனாலேயே அனைத்தையும் மதுபாலாவிடம் ஒப்படைத்து விட்டு பொம்மை தலைவராகி இருந்தார். அவருக்கு ஒரே நம்பிக்கைக்கு உரியவள் மதுபாலா மட்டுமே, ஆனால் அவள் கூட இருக்கும் பாம்பு என்று அவருக்கு தெரியவில்லை. கட்சியில் பல மூத்த தொண்டர்கள், எம் எல் ஏக்கல் இருந்த போதிலும், கட்சியின் அடுத்த தலைவர் போல மதுபாலா நடந்து கொண்டது அனைவரிடமும் சல சலப்பை ஏற்படுத்திய போதிலும் விருதாச்சலத்தின் முடிவை மீறி பேச யாருக்கும் தைரியம் இருக்கவில்லை. மதுபாலாவும் இது தான் சந்தர்ப்பம் என்று தலைமை பதவியினை கெட்டியாக பிடித்துக் கொண்டே, பல அங்கத்தவர்களை பேசியே தன் பக்கம் இழுத்துக் கொண்டவள் அரசியலில் என்னவோ பழம் தின்று கொட்டை போட்ட அளவு முதிர்ச்சியுடன் தான் காய்களை நகர்த்த ஆரம்பித்தாள். பெயருக்கு தான் விருத்தாச்சலம் இருந்தாரே தவிர, அனைத்து விடயங்களும் இப்போது மதுபாலா கைக்கு வந்து இருந்தது. ஆனாலும் ஒரு தனிமை அவளை வதைக்க தான் செய்தது.
அன்று இரவு கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தவளுக்கு கண் முன்னே வந்தது என்னவோ கரிகாலனினதும் மாதவியினதும் முகங்கள் மட்டுமே.. அவர்கள் சந்தோஷமாக இருப்பதை பார்க்க முடியாமல் இருந்தவளுக்கு இப்போது கரிகாலனின் அருகாமை அவன் இதழ் அணைப்பு தொடக்கம் எல்லாமே தேவைப்பட்டது. அருகில் இருக்கும் போது எந்த வைரத்தை எட்டி உதைத்தாளோ இப்போது அந்த வைரத்தை நெருங்கவும் தன்னுடைமை ஆக்கவும் ஆசைப்பட்டாள்.
தாம்பத்தியத்தில் வரைமுறை இல்லாமல் இருந்தவளுக்கு இந்த கற்பனை எல்லாம் சகஜமாக தானே இருக்கும்.. அடுத்தவர் கணவன் கரிகாலன் என்ற எண்ணம் கூட அவளுக்கு வரவில்லை. ஆரம்பித்த புள்ளியிலேயே வந்து நின்றவளுக்கு அவன் மொத்தமாக தேவைப்பட்டான். அவள் மேனி கூட அவன் தொடுகையை எண்ணி ஏங்க அடுத்த நாளே அவனை அடைய ஸ்கெட்ச் போட ஆரம்பித்தாள். இவ்வளவு நடந்தும் அவள் தனது மகனை கொஞ்சமும் நினைத்துப் பார்க்காதது வேதனை தான்.
அடுத்த நாள் தனது அலுவலகத்துக்கு கரிகாலனை அழைத்து இருக்க, அவனும் அவள் பதவியின் மரியாதையின் நிமித்தம் அவளை தேடிச் சென்றான். உள்ளே நுழைந்தவனை மேலிருந்து கீழ் பார்த்தவள் பெருமூச்சோடு இருக்க சொல்லி இருக்கையை காட்டினாள்.. ட்ரிம் செய்யப்பட்ட தாடி, முட்டி வரை மடிக்கப்பட்ட இன் பண்ணிய ஷேர்ட் என்று வந்தவனை ரசனையாக பார்த்தவள் "எப்படி இருக்கீங்க?"என்று கேட்க அவளது அடக்கமான குரலில் அவளை புருவம் சுருக்கி பார்த்தவன் "நல்லா இருக்கேன் மேடம்" என்று சொன்னான். அவளும் " நம்ம பையன் எப்படி இருக்கான்" என்று கேட்டதுமே அவளை அழுத்தமாக பார்த்தவன் "என் பையன் ரொம்ப நல்லா இருக்கான்" என்று இருவருக்கும் இடையே ஒரு விலகலை பதிலில் சொன்னவன் புருவமோ அவள் பேச்சை கேட்டு இடுங்கி போனது.
அவளோ அதை எல்லாம் கண்டும் காணாமல் "என்ன சாப்பிடுறீங்க?" என்று கேட்க அவனோ "எதுவும் வேணாம் மேடம், என்னை எதுக்கு கூப்பிட்டிங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?" என்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக கேட்க அவளோ "இவனை வழிக்கு கொண்டு வர்றது பெரிய கஷ்டம்" என்று நினைத்தவள் மனமோ " என்னில் மயங்காத ஆம்பிள இருக்கா என்ன? ஏற்கனவே மயங்கி இருந்தவன் தானே" என்று நினைத்தபடி "மிஸ்டர் கரிகாலன், எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, ஒரு முக்கியமான விஷயம் பேச தான் வர சொன்னேன்.,. என்னோட வீட்ட ஈவினிங் வாங்க பேசலாம்" என்று சொல்ல அவனோ "அலுவலக விஷயம் ஏன் வீட்ட பேசணும்?, இங்கேயே பேசலாமே, நான் நாளைக்கு வரேன்" என்று சொல்ல அவளோ "அது அலுவலக விஷயம் மட்டும் இல்ல, தனிப்பட்ட விஷயமும் கூட" என்றாள். அவனோ "நமக்குள்ள என்ன தனிப்பட்ட விஷயம் இருக்க போகுது?" என்று கேட்க, பேப்பர் வெயிட்டை உருட்டியபடி அவனை பார்த்தவள் "ஆதித்" என்று சொல்ல அவன் முகமோ இறுகி போனது.
அவளை அழுத்தமாக பார்த்தவனை கேலியாக பார்த்தவள் " சாருக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்ல" என்று சொல்லவே அவள் சொல்ல வருவதை உணர்ந்தவன் "எனக்கு ஈவினிங் ஒரு மீட்டிங் இருக்கு, " என்று சொல்ல அவளோ "ஒண்ணும் அவசரம் இல்ல, எட்டு மணி போல வாங்க, நிதானமா பேசலாம்" என்று புன்னகையுடன் சொல்ல அவனோ இறுகிய முகத்துடன் வெளியேறினான்.
அவசர அவசரமாக வீட்டுக்கு வந்தவள் குளித்து விட்டு அழகான சில்க் புடவையை எடுத்து உடுக்க ஆயத்தமானவள் மனமோ " அவன் புடவைய பார்த்து மயங்கிற ஆள் இல்லையே " என்று யோசித்து விட்டு அங்க வனப்புகளை அப்பட்டமாக கட்ட கூடிய இரவு உடையை அணிந்து கொண்டவள் அவனுக்காக கேண்டில் லைட் டின்னர் வேறு ஆயத்தப்படுத்தி விட்டு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் காத்திருந்தாள் ... அவனோ அன்று ஒரு முக்கிய மக்கள் சந்திப்பை முடித்துவிட்டு தனது அலுவலக இருக்கையில் சாய்ந்து இருந்தவன் நேரத்தை பார்க்க அது மணி எட்டை நெருங்கியது..
அவனுக்கோ அவள் கூறிய ஆதித் என்ற பெயரே காதில் ஒலிக்க அவன் இதயம் நின்று துடித்தது. அவன் அறியாத சட்டமா? அவள் கோர்ட் படி ஏறினால் மகன் அவளிடம் தான் வளர வேண்டும் என்று சட்டம் தீர்ப்பளித்து விடும்... ஆனால் அவனால் ஆதித்தை பிரிவது லேசான காரியமா என்ன ??
இன்று அதனால் தான் மகன் பெயரை சொல்லி மிரட்டியதுமே கொஞ்சமும் யோசிக்காமல் அவள் இல்லத்துக்கு போக நினைத்து இருந்தான் அல்லவா?
பெருமூச்செடுத்தவன் ட்ரைவரை போக சொல்லி விட்டு அவனே ஜீப்பை எடுத்துக் கொண்டு மதுபாலாவின் இல்லத்தை நோக்கி விரைந்தான்.
அந்த சந்தர்ப்பத்தில் தான் அவளும் கவர்ச்சி உடையில் வேலைக்காரர்களை கூட அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு காத்துக் கொண்டு இருக்க அவன் கார் சத்தம் கேட்டு பூரிப்புடன் கதவை திறந்தாள்.
கதவருகே நின்றவன் அவள் உடையை பார்த்ததும் புருவ முடிச்சுடன் அசையாமல் நின்றிருக்க " உள்ள வாங்க " என்று ஏக்கமாக அவள் அழைத்ததும் அவனுக்கு அடியில் இருந்து முடி வரை புரிய ஆரம்பித்தது. .
அதே யோசனையுடன் உள்ளே சென்றவன் அந்த கேண்டில் லைட் டின்னர் மேசையை கண்டதுமே அனைத்தையும் புரிந்து கொள்ள அவளோ " இங்க இருங்க " என்று சோபாவை காட்டியவள் அவன் அருகே நெருங்கி அமர்ந்து கொண்டாள்.. அவனோ சற்று விலகி இருந்தவன் " ஆதித் " என்று ஆரம்பிக்க அவளும் " அவனை பத்தி ஒன்னும் இல்ல... அவன் உருவானது பத்தி பேசலாமா " என்று மெல்லிய சிரிப்புடன் சொல்ல அவனோ " வாட்?? " என்று கோபமாக அவளை பார்த்து கேட்டான். அவளும் இதற்கு மேல் மறைமுகமா பேசி பயன் இல்லை என்று அறிந்தவள் " என்னோட மனசு புரிலயா கரிகாலன்.. மாதவி உங்களுக்கு பொருத்தம் இல்ல... நான் இருக்கேன் ...என் மனச தொட்டு பாருங்க ." என்று அவன் கையை பற்றி தனது மார்பில் வைக்க போக , அடுத்த கணமே சுதாகரித்தவன் தனது கையை உருவிக் கொண்டு அவள் கன்னத்தில் ஓங்கி அடுத்த கையினால் அறைந்தான். .
அவளோ கன்னத்தை பொத்தியப்படி அவனை அதிர்ந்து பார்க்க " நிறுத்துடி " என்று சீறியபடி தனது முழு உயரத்துக்கும் எழுந்து நின்றவன் தன் முன்னே இருந்தவளை அனல் தெறிக்க பார்த்துக் கொண்டே " என்னை பற்றி என்ன நினைச்சிட்டு இருக்க?? ஒரு பொண்ணோட உடம்பை பார்த்ததுமே உணர்ச்சியாகி போற மிருகம் இல்லடி நான். என்னோட உணர்வும் மனசுல காதலும் ஒன்றோடொன்று பிணைஞ்சு தான் இருக்கும்... நீ என் முன்னாடி எப்படி நின்னாலும் என் நுனி விரல் கூட உன் மேல படாது...ஆனா மாதவியோட கண்ணசைவே போதும் என்னோட மொத்தத்தையும் அவளுக்கே கொடுத்துடுவேன்.. உன்னோட நான் வாழ்ந்தது காதலோடு மட்டும் தான்.. ஆனா இப்போ என் மனசில முழுக்க முழுக்க அவ மட்டும் தான் இருக்கா.. அவளை மனசுல நினைச்சது எந்த விபச்சாரி கூடவும் நான் இருக்க தயாரா இல்ல .. " என்றவன் விறு விறுவென வெளியேற அவள் முகமோ கறுத்து போக அவன் முதுகை வன்மமாக பார்த்தபடி நின்று இருந்தாள்.
தனது ஜீப்பில் ஏறி ஸ்டேரிங் வீலில் கையை அழுந்த பற்றியபடி சாய்ந்து இருந்தவனுக்கு மனம் எல்லாம் ரணமாக இருந்தது.. எவ்வளவு தரம் இறங்கி நடந்து விட்டாள் என்று நினைத்தவனுக்கு தனது மகனை நினைத்து இதயம் படபடக்க தொடங்கியது.. அவன் அறிவான் அவள் அடிபட்ட பாம்பு என்றும் .இந்த விஷயத்தை அவள் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடமாட்டாள் என்று அறிந்தவன் நேரே வீட்டுக்கு ஜீப்பை விட்டான்.. அவனுக்கோ நடந்ததை விட இனி நடக்க போறதை நினைத்து தான் பதட்டமாகி போனான். வீட்டுக்குள் அவன் நுழைந்த போது மாதவி அவனுக்காக காத்துக் கொண்டு இருக்க " பசிக்கல மாதவி " என்றவன் அறைக்குள் நுழைந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டான். அவன் முகத்திலேயே கலவரத்தை அறிந்தவளும் சாப்பிட பிடிக்காமல் ஆதித்துக்கு மட்டும் சாப்பாட்டை கொடுத்து விட்டு அறைக்குள் நுழைந்து அவனை தூங்கவைத்துக் கொண்டு இருந்த சமயம் குளித்து விட்டு வெளியே வந்தவன் அவள் மடியில் தூங்கி கொண்டு இருந்த ஆதித்தின் தலையை வருடி விட்டு பின்னறை கதவை திறந்து கொண்டு வெளியே போய் நின்றான்.
வெளியே நின்று இருளை வெறித்து பார்த்தவன் மனமோ உலையாக கொதிக்க தொடங்கியது.. அனைத்து விடயங்களையும் அசால்டாக சமாளிப்பவனுக்கு முதல் முதல் வாழ்வில் முடிவெடுக்க முடியாத தயக்கம் இருக்க அடுத்து மதுபாலா என்ன செய்வாள் என்றே யோசிக்க தொடங்கி இருந்தான்.
மாதவியும் குழந்தையை வளர்த்தி விட்டு அவனை தேடி வந்தவள் " சார் " என்று அழைக்க அவனோ பெருமூச்சுடன் திரும்பி பார்த்தவன் " ம்ம் " என்றான்.
அவளும் " ஏதும் பிரச்சனையா சார் ?.. ஏன் ரொம்ப அழுத்தமா இருக்கீங்க? " என்று கேட்க ஒரு கணம் அவளை திரும்பி பார்த்தவன் " ஆதித் அவன் அம்மா கிட்டயே பொய்யிட்டான்னா என்ன பண்ணுவ?? " என்று கேட்க அவளோ சற்றும் யோசிக்காது " நான் தானே அவன் அம்மா " என்று சொல்ல அவனோ மொத்தமாக நொறுங்கி போனவன் அவளை பரிதாபமாக பார்த்தான்... அதன் பிறகே அவனது கேள்வியை கிரகித்தவள் " என்ன சொல்றீங்க சார் ? " என்று பதட்டமாக கேட்க குரலை செறுமியவன் " அப்படி நடந்தா என்ன பண்ணுவ? " என்று மறுபடி கேட்டான். அவளோ " இல்ல சார் அப்படி நடக்கிறத என்னால யோசிக்கவே முடில... " என்று சொன்னவள் அவனை நெருங்கி இருந்தாள்.
எதற்கும் தளராதவனுக்கோ இப்போது தனது வலியை போக்க ஒரு அணைப்பு தேவைப்பட அவளை தன்னை நோக்கி இழுத்து காற்றுப் புக முடியாத நெருக்கத்தில் இறுக அணைத்தவன் " அப்படி நடந்திடுமோன்னு பயமா இருக்குடி... " என்று சொல்லும் போதே அவன் கண்ணீர் அவளது தோள் வளைவை நனைத்தது.. மகனுக்காக அவன் விடும் கண்ணீர் அது... முதன் முறை இயலாமையாக உணர்ந்தவனை மகனின் மீதான பாசப் பிணைப்பானது கட்டி இறுக்கி இருந்தது.. எதற்கும் தளராத அந்த ஆண்மகனின் அழுகை அவளுக்கே அதிர்ச்சியாக அவன் வலியை குறைக்க நினைத்தவளது கைகளும் அவன் முதுகை வருட அவள் மனமோ " நாளைக்கு மதுபாலா மேடத்தை சந்திக்கணும் " என்று முடிவெடுத்துக் கொள்ள தான் செய்து கொண்டு இருக்கும் செயலை அறிந்து பதறி விலகியவன் " ஐ அம் சாரி " என்றபடி அவளை பார்க்காமலே உள்ளே நுழைந்து கொண்டான்.
அன்று இருவருக்கும் தூக்கம் தொலைந்து போக, மாதவி அடுத்த நாள் நேரே சென்றது மதுபாலாவை சந்திக்கவே ஆகும். அன்று மக்களை சந்திக்கும் நாளாக இருக்க, அவளும் வரிசையில் மதுபாலாவை சந்திக்க அமர்ந்து இருந்தாள். ஒவ்வொருவராக உள்ளே சென்று அவளை சந்தித்து விட்டு வர, சி சி டி வி யில் பார்த்த மதுபாலா "ஓஹ் அவளே வந்து இருக்காளா?" என்று யோசித்தவளுக்கு அவள் விடயமே முக்கியமாக பட அவளை உள்ளே அழைத்து இருந்தாள்.
உள்ளே வந்தவளை மேலிருந்து கீழ் பார்த்தவள் "என் இடத்துல ரொம்ப சொகுசா தான் இருக்கா போல" என்று நினைத்தபடி "என்ன விஷயம்" என்று இறுகிய குரலில் கேட்டாள். மாதவியும் "கொஞ்சம் ஆதித் பத்தி பேசணும்" என்று இழுக்க, "என்ன பேச போறா? நம்மளையே வளர்க்க சொல்லிடுவாளோ" என்று நினைத்தவளுக்கு புத்திர பாசம் கொஞ்சமும் இருக்கவில்லை. பெருமூச்சுடன் முன்னே இருந்த இருக்கையை காட்டியவள் "இருந்து சொல்லு" என்று சொல்ல அவளும் அங்கு அமர்ந்து "ஆதித்தை நீங்க எடுத்துக்க போறீங்களா?" என்று அவளே மதுபாலாவுக்கு பாய்ண்ட் எடுத்து கொடுத்தாள்.
உடனே அவளும் "ஒஹ் அப்படி நினைச்சுட்டு வந்து இருக்காளா?" என்று நினைத்தவள் "அதுல தப்பில்லையே" என்று சொல்ல அவளோ "கரிகாலன் சார் நொறுங்கி போயிடுவார், அப்படி மட்டும் பண்ணிடாதீங்க ப்ளீஸ்" என்று சொல்ல "சாரா?" என்று அவள் அழைப்பை நினைத்து சற்று குழம்பியவள் ஒருவாறு சுதாகரித்துக் கொண்டு " அவன் எனக்கும் தானே பையன்" என்றாள்.
மாதவியோ "உங்க தவிப்பு புரியுது,,, ஆனா அவரும் பாவமே" என்று நெகிழ்ந்த குரலில் சொல்ல "தவிப்பா? சரியா போச்சு" என்று நினைத்தவளுக்கு கண நேரத்தில் யோசனை உதிக்க முகத்தை பாவமாக மாற்றிக் கொண்டவள் " எனக்கு கரிகாலன் கூடவும் குழந்தை கூடவும் வாழ ஆச தான் மாதவி. ஆனா கரிகாலன் திருமணம் செய்த பிறகு உங்கள பிரிக்கிற அளவுக்கு நான் ராட்சசி இல்ல, உங்களுக்கு வயசு இருக்கு, இளமை இருக்கு, இப்போ சந்தோஷமா இருக்கீங்க, ஆனா எனக்கு யார் இருக்கா? இந்த பணம் பதவி எல்லாமே வெறுத்து போச்சு,,, எனக்குன்னு இருக்கிற ஒரே சொந்தம் என் பையன் ஆதித் தான்,, கரிகாலன் அவனை விட்டு பிரியவும் மாட்டார், அவருக்கு நீயும் வேணும்னா என்ன பண்ண முடியும்? வாழ்க்கையில ஒரு முடிவு ஒரு இடத்தை எடுத்து தான் ஆகணும். ஒன்னு என் கூடவும் பையன் கூடவும் இருக்கனும்..இல்ல உன் கூட இருந்து புதுசா புள்ள குட்டி பெத்துக்கணும், நீ என்ன சொல்ற? நான் அறிந்த வரைக்கும் அவர் உன் கூட இருக்கிறத விட பையன் கூட இருக்கிறத தான் அதிகம் விரும்புவார். அப்போ என் கூட அவர் இருந்து ஆகணும்,.. அவர் சந்தோஷத்துக்கு நீ முட்டுக்கட்டையா இருக்க மாட்டேன்னு நினைக்கேன்.. என் கிட்ட நேற்று கூட பேசுனார் ..என் கூட வாழ உன் தாலி தான் தடையா இருக்காம்.. உன்னை கை விட மனசு இல்லையாம்ன்னு சொன்னார். ஆனா நீயா பிரிஞ்சா அவர் பிரச்சனைக்கு தீர்வாகும்னு எனக்கு தோணுது " என்று வாழை மரத்தில் ஊசி ஏற்றுவது போல நாசூக்காக சொல்ல மாதவிக்கோ தூக்கி வாரிப் போட்டது. கரிகாலனை அவள் பிரிந்தால் தான் அவன் சந்தோஷமாக இருப்பானா? என்று யோசித்தவளுக்கு ஒரு பக்கம் மனம் ரணமாக வலிக்க, மறுபக்கமோ அவன் சந்தோஷம்தான் அவளுக்கு முக்கியமாக பட்டது. அவன் நேற்று ஆதித்துக்காக வடித்த கண்ணீர் வேறு அவளை இம்சித்தது..
சுயநலம் கொஞ்சமும் இல்லாதவள் மனமோ அவன் நலனை மட்டுமே வேண்ட தான் மட்டுமே அவன் சந்தோஷத்துக்கு காரணம் என்ற விடயத்தை மறந்தவள் அவனை பிரிந்து சென்றால் என்ன என்று கூட யோசித்தாள். கலங்கிய கண்களுடன் மதுபாலாவை ஏறிட்டு பார்த்தவள் " இது தான் ஒரே வழியா?" என்று இயலாமையுடன் கேட்கும் போதே அவள் கண்ணில் இருந்த கண்ணீர் உருண்டு விழுந்தது.உடனே மதுபாலா, "சரியான வாட்டர் டேங்க் " என்று நினைத்துக் கொண்டே " ஏன் நீ கன்சீவ் ஆஹ் இருக்கியா?" என்று அவர்கள் அந்தரங்கத்தை அறியும் முனைப்புடன் கேட்க அவளோ வெகுளியாக "நாங்க நண்பர்களா தான் இருக்கோம்" என்று உளறி விட, மதுபாலாவின் மனமோ குத்தாட்டம் போட்டது.. முகத்தில் சந்தோஷத்தை காட்டாமல் இருக்க அரும் பாடு பட்டவள் " அப்போ பிரச்சனை இல்லையே " என்று சொல்ல அவளும் விரக்தியாக புன்னகைத்தபடி எழுந்தவள் "அவர் சந்தோஷத்துக்கு குறுக்க நிற்க மாட்டேன் மேடம்" என்று சொல்ல அவளோ "நாம பேசுனது அவருக்கு தெரிய வேணாம். உன் கிட்ட அவருக்கு என்னோட வாழ விருப்பம்னு சொல்ல வேணாம்னு சொன்னார்.. நீ வருத்தப்படுவியாம்னு சொன்னார்.. நான் தான் உளறிட்டேன்.." என்று கரிகாலன் குணத்தை வைத்தே அவன் சொன்ன போல டயலாக்கை சொல்ல அவளோ "நான் அவர் கிட்ட உங்கள சந்திச்ச விஷயத்தை சொல்லவே மாட்டேன் மேடம் " என்றபடி வலுக்கட்டாயமாக புன்னகைத்துக் கொண்டே வெளியேறினாள்.