ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 13

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 13

தேன்மொழியை தனது அறைக்குள் அழைத்து சென்றான் வம்சி கிருஷ்ணா...

அங்கே ஏற்கனவே அவள் உடை பெட்டி வைக்கப்பட்டு இருக்க, அவனோ அங்கே இருந்த அலுமாரியை திறந்து காட்டியவன், "இதுல உன் ட்ரெஸ் எல்லாம் வச்சுக்கோ" என்றான்...

அவள் சம்மதமாக தலையாட்டினாள்...

அப்படியே அங்கே இருந்த குளியலறையை திறந்து காட்டியவன், "பாத்ரூம் யூஸ் பண்ணிக்கோ" என்றான்...

அதற்கும் தலையாட்டினாள்...

ஒரு ஓரமாக நின்றபடி அறையை சுற்றிப் பார்த்தாள்...

சுவர் எல்லாம் ஓவியங்கள்...

கலை ரசனை மிக்கவன் என்று எடுத்துக் காட்டியது...

ஓவியங்கள் அனைத்துமே இசைக் கருவிகள் தான்...

வீணை , தம்புறா, கிட்டார் என்று அழகாக வரையப்பட்டு இருந்தன...

பார்க்கவே ரம்மியமாக இருந்தது...

இசையிலேயே லயிக்கின்றான் என்று புரிந்தது...

அவனை போல தானே அவளும் இசை ரசனை மிக்கவள்...

அனைத்தையும் பார்க்க அவள் இதழ்கள் மெதுவாக விரிந்தன...

அவள் முக மாற்றத்தை பார்த்தவன், "மியூசிக்ல இன்டெரெஸ்ட் இருக்கா?" என்று கேட்டான்...

ஆம் என்று தலையாட்டினாள்...

"ம்ம் ஃபைன், உட்காரு, நான் கொஞ்சம் பேசணும்" என்றபடி அங்கே இருந்த சோஃபாவை கைகளால் காட்டினான்...

அவளும் சென்று அமர்ந்தாள்.

அவள் இருந்த இருக்கையிலேயே ஒரு இடம் விட்டு தள்ளி அமர்ந்தான் வம்சி கிருஷ்ணா... அவளோ அவனை கேள்வியாக பார்க்க, "நிறைய மனசு விட்டு பேசிடலாம் இப்போவே" என்றான்...

அவளும் சம்மதமாக தலையாட்டினாள்...

"நீ எதுக்காக என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்னு எனக்கு தெரியல... நான் தெரிஞ்சுக்கவும் விரும்பல... நான் என் தம்பிக்காக தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... அவன் என் கிட்ட லைஃப் ல எதுவும் கேட்டது இல்லை... அவன் கேட்ட முதலாவது விஷயம் நீ தான்... சோ அவனை நீ நல்லா பார்த்துக்கணும்... அவனுக்கு நிறைய கத்துக்கொடுக்கணும்... ஒரு நல்ல ஃப்ரெண்ட் ஆஹ் இருக்கணும்... இருப்பன்னு நம்புறேன்" என்றான்...

அவளும் ஆமோதிப்பாக தலையாட்டினாள்...

"ம்ம் குட்... நான் அதிகமா ஸ்டூடியோல தான் இருப்பேன்... இல்லன்னா ரெக்கார்டிங் போய்டுவேன்... வாரத்துல ரெண்டு நாள் அப்பாவோட ஆஃபீஸுக்கும் போவேன்... சோ வீட்ல வீகென்ட்ஸ் ல தான் இருப்பேன்... பட் வெளிய தங்குற பழக்கம் இல்ல... சோ நைட் எப்படியும் வீட்டுக்கு வந்திடுவேன்... உனக்கு எதுன்னாலும் நைட் என் கிட்ட சொல்லிக்கலாம்" என்றான்...

அவள் அதற்கும் சம்மதமாக தலையாட்டினாள்...

அவனோ பெருமூச்சுடன், "கல்யாணம் பண்ண முதல் என்ன வாக்கு கொடுத்து கல்யாணம் பண்ணினேனோ அதே வாக்கு தான் இப்போவும் கொடுக்கிறேன்... நீ தாராளமா வேலைக்கு போகலாம்... ட்ரைவர் கிட்ட சொல்லி வைக்கிறேன், உன்னை அவனே ட்ராப் பண்ணி பிக் அப் பண்ணுவான்" என்றான்...

அவசரமாக இல்லை என்று தலையாட்டியவளோ, நடந்து போவது போல சைகை செய்ய, அவனோ, தோள்களை உலுக்கியவன், "ஓகே உன் இஷ்டம்..." என்றான்...

மேலும் தொடர்ந்தவனோ, "இந்த வீட்ல இருக்கிறவங்கள நீ தான் ஹாண்டில் பண்ணிக்கணும்... இந்த வீட்ல லைஃப் லோங் வாழ போற... சோ அதுக்கு ஏத்த போல உன்னை நீ ப்ரிபெயார் பண்ணிக்கணும்... எல்லாத்துக்கும் மேல எனக்கு சைன் லாங்குவேஜ் சொல்லி கொடுக்கணும்" என்றான்...

அவள் மெதுவாக புன்னகைத்தபடி தலையாட்டினாள்...

அவன் இசையை ரசித்து இருக்கிறாள்.

அவன் தோற்றத்தை ரசித்து இருக்கிறாள்...

இப்போது அவன் குணத்தையும் அவன் ஆளுமையையும் சேர்த்து ரசிக்கின்றாள்...

திருமணம் செய்து விட்டேன், என்னவோ போ என்று அவன் விடவில்லை...

அவளுக்காக எல்லாமே சொல்லிக் கொடுக்கின்றான்...

அவனை இமைக்காமல் பார்த்து இருந்தாள்.

"இனி நம்மள பத்தி பேசலாமா?" என்றான்...

அதற்கும் அவள் சம்மதமாக தலையாட்ட, "வெல், நான் ஆல்ரெடி சொன்ன போல என் மனசுல ஒருத்தி இருக்கா, அவளை மனசுல வச்சிட்டு என்னால உன் கூட வாழ்க்கையை தொடங்க முடியாது... புரியும்னு நினைக்கிறன்" என்றான்...

அவளும் ஆம் என்ற ரீதியில் தலையாட்ட, "எனக்கு கொஞ்சம் டைம் கொடு, எப்படியும் என்னை நான் இந்த பெயின்ல இருந்து மீட்டு எடுத்துடுவேன்... டைம் ஹீல்ஸ் எவெரிதிங்..." என்று சொல்ல, அவளிடம் அதற்கும் சம்மதம் தான்...

'மனசால ரொம்ப கஷ்டப்படுறார் போல' என்று அவனுக்காக தான் பரிதாபப்பட்டாள்.

அவனும் பெருமூச்சுடன், "என் கிட்ட உனக்கு ஏதும் சொல்லணுமா?" என்று கேட்டான்...

அவள் இல்லை என்று தலையாட்டினாள்...

"ஓகே ஃபைன், அப்போ நீ ரெஸ்ட் எடு, யாதவ்வுக்கு இது ஸ்வீட் சர்ப்ரைஸ் ஆஹ் இருக்கும், அவன் ரியாக்ஷன் பார்க்க எனக்கு ஆசையா இருக்கு" என்று பூரிப்புடன் சொல்ல, அவளும் மெதுவாக புன்னகைத்துக் கொண்டாள்.

அவர்களின் திருமண வாழ்க்கை ஸ்னேகத்துடன் ஆரம்பித்து இருந்தது...

அவனோ அதனை தொடர்ந்து தனது வேலையை பார்க்க சென்று விட, அவளோ உடையை மாற்றி விட்டு அந்த அறையையே சுற்றி வந்தாள்.

அவளது வம்சி கிருஷ்ணா இருக்கும் அறை...

இப்படி அவனுடன் ஒரே அறையில் இருக்கும் சந்தர்ப்பம் அமையும் என்று அவள் கனவில் கூட நினைத்துப் பார்க்கவே இல்லை...

தாயை நினைத்தும் வசந்தியை நினைத்தும் வலி மனதில் அழுத்திக் கொண்டு இருந்தாலும் அவளுக்கு இதமாக இருப்பது என்னவோ வம்சி கிருஷ்ணாவின் அருகாமை மட்டும் தான்...

இதே சமயம் தனது வீட்டுக்கு சென்ற கல்யாணியோ கதவை தாழிட்டு விட்டு சத்தமாக அழ ஆரம்பித்து விட்டாள்.

கோபத்தில் அறைக்குள் இருந்த பொருட்களை எல்லாம் போட்டு உடைத்தாள்...

அவளால் இந்த ஏமாற்றத்தை தாங்கவே முடியவில்லை...

அவள் தாய் ரதிதேவியும் மிருதுளாவும் வேதவல்லியும், "கல்யாணி கல்யாணி" என்று கதவை தட்டிக் கொண்டு இருந்தார்கள்...

அவள் திறந்த பாடு இல்லை...

பதறி விட்டார்கள்...

ரதிதேவிக்கு ஆத்திரம்...

"பெருசா கல்யாணம் பண்ணி வைப்பேன்னு சொன்னீங்களேம்மா, இப்போ உங்க பேரன் பண்ணுனதை பார்த்தீங்களா??" என்று வேதவல்லி மீது எரிந்து விழுந்தார்...

"நான் என்னம்மா பண்ணட்டும்" என்று அவர் கண்ணீருடன் கேட்டவருக்கு மனம் எல்லாம் தேன்மொழி மீது ஆத்திரம்...

கடைசியாக தோட்டக்காரன் தான் கதவை உடைத்து திறந்து விட்டான்...

உள்ளே அவர்கள் நுழைந்த போது, நிலம் எல்லாம் பொருட்கள் நொறுங்கி சிதறி இருந்தன...

அவளோ ஆத்திரம் தீராமல் அனைத்தையும் உடைத்துக் கொண்டு இருந்தாள்.

"கல்யாணி நிறுத்து" என்று எவ்வளவு சத்தம் போட்டும் அவள் உடைப்பதை நிறுத்தவில்லை... இறுதியில் மூவரும் அவளை பிடித்து அமர்த்தி அவளை நிதானத்துக்கு கொண்டு வர பெரும்பாடு பட்டு விட்டார்கள்...

அவளோ ஆத்திரமாக வேதவல்லியை பார்த்தவள், "ஏய் கிழவி, நீ தானே எனக்கு அவரை கட்டி கொடுக்கிறேன்னு ஆசை காட்டுன, உன்னால என் நிலைமையை பாரு, இதுல அவர் வேற ஒருத்தி கழுத்துல தாலி கட்டுனா முடியை வேற அறுத்துகிறதா சபதம் போட்ட, இப்போ உன்னை" என்று ஆத்திரமாக சொல்லிக் கொண்டே, சுற்றி தேடி கத்தரிகோலை கையில் எடுத்துக் கொண்டாள்.

அவரை மரியாதையாக அழைப்பவளோ இப்போது அவருக்கு கொஞ்சம் கூட மரியாதை கொடுக்கவே இல்லை...

அவர் மீது அளவு கடந்த ஆத்திரம்...

அவள் கத்தரிகோலை தூக்கியதுமே அனைவரும் பதறி விட்டார்கள்...

மிருதுளாவோ, "என்னடி பண்ணிட்டு இருக்க?" என்று அவள் கையை பிடிக்க, அவளோ மிருதுளாவை உதறி தள்ளி விட்டபடி வேதவல்லியை நோக்கி ஆத்திரத்துடன் சென்றாள்.

ரதிதேவியோ, "கல்யாணி, நிறுத்து" என்று அவள் கையை பிடிக்க வர, அவர் கையை பிடித்து தடுத்தார் வேதவல்லி...

ரதிதேவி அவரை அதிர்ந்து பார்க்க, "அவளை விடு, அவள் என் முடியை வெட்டட்டும்" என்றார்...

அடுத்த கணமே, "இப்படி சொன்னா வெட்ட மாட்டேன்னு நினைச்சியா?" என்று கேட்டுக் கொண்டே, அவர் முடியை பிடித்து வெட்டி இருக்க, அவரோ கீழே விழுந்த தனது முடியை வெறித்துப் பார்த்தார்...

கல்யாணிக்கு அப்போதும் ஆத்திரம் அடங்கவே இல்லை...

"எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியலையே" என்று சொல்லிக் கொண்டே தலையை பற்றிக் கொண்டே கட்டிலில் அமர்ந்து அழ ஆரம்பித்து விட்டாள்.

ரதிதேவியோ, "என்னடி பண்ணி வச்சு இருக்க?" என்று அவளுக்கு திட்டிக் கொண்டே வேதவல்லியை பார்க்க, அவர் விழிகளில் இப்போது வன்மம் மட்டுமே...

"என்னை இந்த கோலத்துல தினமும் கண்ணாடில பார்க்கும் போது அந்த ஊமைச்சி மேல ஒரு வெறி வரும்... அவளை அந்த வீட்டை விட்டு விரட்டாம விட மாட்டேன்... அவளை விரட்டிட்டு என் பேத்தியை என் பேரனுக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பேன்... அது தான் எனக்கு வேணும்" என்று சொன்னவரோ அங்கிருந்து விறு விறுவென தனது வீட்டை நோக்கி செல்ல, அவரை அதிர்ந்து பார்த்த ரதிதேவியும் மிருதுளாவும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக் கொண்டார்கள்...

வீட்டுக்கு நடந்து வந்த வேதவல்லிக்கோ மனம் உலையாக கொதித்துக் கொண்டு இருந்தது...

முடி இல்லாமல் அடி மேல் அடி வைத்து வீட்டினுள் நுழைந்த வேதவல்லியை பார்த்த வசந்தியோ அதிர்ந்து வாயில் இரு கைகளையும் வைத்துக் கொள்ள, அவரோ வசந்தியை முறைத்து விட்டு அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டார்...

அவர் மனதில் அப்படி ஒரு ஆத்திரம்...

இதே சமயம் வசந்திக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை...

அதுவரை கணவரிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டு இருந்த வசந்தியோ வேகமாக அறைக்குள் நுழைந்து கணவருக்கு அழைத்தார்...

குருமூர்த்தி தனது அலுவலகத்தில் அமர்ந்து இருந்தார்...

அவர் அலைபேசி அலற, அதனை எடுத்து காதில் வைத்தவர், "சொல்லும்மா" என்றார்...

"என்னங்க, பெரிய பிரச்சனை ஆயிடுச்சு" என்று ஆரம்பித்த வசந்தியோ நடந்ததை ஆதியில் இருந்து அந்தம் வரை சொல்லி முடிக்க, அனைத்தையும் இறுக்கமான குரலில் கேட்டுக் கொண்டு இருந்த குருமூர்த்தியோ, "உன் பையன் மூளையை எங்கயாவது கழட்டி வச்சுட்டானான்னு தெரியல... அடிச்சு திருத்த அவன் ஒன்னும் குழந்தை இல்லை... லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணி இருக்கான்னு சொல்லும் போது நாம என்ன பண்ணிட முடியும்? ஏதோ நல்லா இருந்தா சரி... மகா தான் பாவம், மாப்பிள்ளை வீட்ல எப்படி முழிக்க போறான்னு தெரியல" என்று விரக்தியாக சொல்லி விட்டு வைத்து விட்டார்...

அவர் வைத்ததுமே வசந்திக்கு மகாலக்ஷ்மியின் எண்ணம் தான்...

அவர்கள் நினைத்த போலவே மகாலக்ஷ்மியின் வாசலில் நின்று "ஓடு காலியை என் தலையில கட்ட பார்த்து இருக்கீங்க" என்று ஆரம்பித்து வாய்க்கு வந்ததெல்லாம் திட்டி விட்டு சென்று இருந்தனர் ரஞ்சனும் அவன் தாயும்... ஊரே வேடிக்கை பார்த்தது...

மகாலக்ஷ்மிக்கு அவமானமாக இருந்தாலும் ஒன்றும் சொல்ல முடியாது...

மௌனமாக தலையை குனிந்தபடி நின்று இருந்தார்...

கண்களில் இருந்து கண்ணீர்...

மனம் ரணமாக வலித்தது...

மகளை நினைத்து ஏமாற்றம்...

அவள் இப்படி செய்ய கூடியவள் அல்ல என்று அவருக்கு தெரியும்...

இப்படி ஒரு விஷயத்தை அவள் தேன்மொழியிடம் இருந்து எதிர்பார்க்கவே இல்லை...

கஷ்டமாக இருந்தது...

இதனை கடந்து தான் ஆக வேண்டும்... வேறு என்ன செய்ய முடியும் அவரால்?

இதே சமயம் யாதவ் கிருஷ்ணாவும் வீட்டுக்கு வந்து விட்டான்...

வீடே அமைதியாக வெறிச்சோடி போய் இருந்தது...

வெட்டப்பட்ட முடியுடன் ஹாலில் அமர்ந்து இருந்த வேதவல்லியை புருவம் சுருக்கி பார்த்து விட்டு தனது அறையை நோக்கி மாடிக்கு நடந்து சென்றான்.

அறையை திறந்து உடை எல்லாம் மாற்றி விட்டு சாப்பிடுவதற்காக வெளியேறியவனை மறித்தபடி வந்து நின்றான் வம்சி கிருஷ்ணா... அவனோ மென் சிரிப்புடன் வம்சி கிருஷ்ணாவை பார்த்து புருவத்தை ஏற்றி இறக்க, அவனோ, "உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு, ஸ்டடி ரூமுக்கு வா" என்றான்... யாதவ் கிருஷ்ணாவும் அவனை தொடர்ந்து யோசனையுடன் பின்னே செல்ல, அவனது படிக்கும் அறையை திறந்து உள்ளே போகும்படி சைகை செய்தான் வம்சி கிருஷ்ணா...

யாதவ் கிருஷ்ணாவும் உள்ளே நுழைய, அங்கே நின்று அவனை பார்த்து புன்னகைத்துக் கொண்டு இருந்தது என்னவோ தேன்மொழி தான்... யாதவ் கிருஷ்ணாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிய சட்டென்று திரும்பி வம்சி கிருஷ்ணாவை பார்த்தான்...

அவனோ, "நீ கேட்டதை நான் பண்ணுவேன்னு சொன்னேன்ல" என்றான்...

யாதவ் கிருஷ்ணாவின் இதழ் முழுதும் புன்னகை... இப்போது மீண்டும் திரும்பி கண்களை கசக்கிக் கொண்டே தேன்மொழியை பார்த்தான்...

ஆம் அவளே தான்...

இப்போது அவன் விழிகள் அவள் கழுத்தில் இருந்த தாலியில் படிய, "கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா?" என்று சைகையில் அவளிடம் கேட்டாள்.

அவளும் ஆம் என்று சைகை செய்ய, அடுத்த கணமே, அவன் இறுக அணைத்து இருந்தது அருகே நின்ற வம்சி கிருஷ்ணாவை தான்...

தான் ஆசைப்பட்ட ஒரு விஷயத்தை நிறைவேற்ற இந்த உலகில் தனக்காக ஒருத்தன் இருக்கின்றான் என்று நினைத்த யாதவ் கிருஷ்ணா நெகிழ்ந்தே விட்டான்...

விம்மலுடன் அழுகை...

அதீத சந்தோஷத்தில் வரும் அழுகை... அவனால் உணர்வுகளை இப்படி தானே காட்டிவிட முடியும்...

அவன் முதுகை வருடிய வம்சி கிருஷ்ணாவோ, அவன் தோள்களை பற்றி நிமிர்த்தி அவன் விழிகளுடன் விழிகளை கலக்க விட்டவன், "ஆர் யூ ஹாப்பி?" என்று கேட்டான்...

அவனோ கலங்கிய கண்களுடன் புன்னகைத்துக் கொண்டே தனது கையை உயர்த்தி, "ஐ லவ் யூ" என்கின்ற சைகையை காட்ட, வம்சி கிருஷ்ணாவும் சிரித்தபடி அதே சைகையை அவனுக்கு காட்ட, இருவரையும் இமைக்காமல் பார்த்து இருந்த தேன்மொழி நெகிழ்ந்தே விட்டாள்.

இப்படி ஒரு பாச பிணைப்பு அவர்களிடம் இருக்கும் என்று அவள் நினைத்து கூட பார்த்தது இல்லை...

யாதவ் கிருஷ்ணாவுடன் இருக்கும் போதெல்லாம் வம்சி கிருஷ்ணா அவனை கண்டு கொள்ளாத போல தான் உணர்ந்தாள்...

அவன் அப்போது அப்படி தானே இருந்தான்...

இப்போது அவர்கள் நெருக்கத்தை பார்த்தவள் விழிகள் என்னவோ யாதவ் கிருஷ்ணாவுடன் பேசிக் கொண்டு இருந்த வம்சி கிருஷ்ணா மீது காதலுடன் படிந்து மீண்டது...

இதே சமயம், வெளியே சென்று வந்த கெளதம் கிருஷ்ணாவோ, "என்னடா வீடு மயான அமைதியா இருக்கு? புயலுக்கு பின் அமைதி போல" என்று நினைத்துக் கொண்டே உள்ளே நுழைய, அவன் கண்களில் முதலில் தெரிந்தது என்னவோ ஹாலில் அமர்ந்து இருந்த வேதவல்லி தான்...

அவரை யோசனையுடன் பார்த்துக் கொண்டே, அவர் அருகே அமர்ந்தவன், "ஹேய் பாட்டி, போட்ட சத்தத்துல என்னவோ ஏதோன்னு நினச்சேன்... இதென்ன ஹெயார் ஸ்டைல் எல்லாம் மாத்தி ஸ்டைலிஷ் ஆஹ் இருக்கீங்க? இந்த வயசுல டயானா கட் ஆஹ்? செம்ம செம்ம, அடுத்து ஹெயார் கலர் பண்ணுனா, ஒரு இருபது வயசு குறைஞ்ச போல இருப்பீங்க" என்று சொல்ல, அவனை திரும்பி அனல் தெறிக்க பார்த்தார் அவர்...

அவனோ அதனை எல்லாம் சட்டை செய்பவன் இல்லையே...

அவனோ, "கோபப்பட்டாலும் கியூட் ஆஹ் இருக்கீங்க" என்று சொல்லி அவர் கன்னத்தை கிள்ளி விட்டு செல்ல, அவருக்கு இருந்த கோபத்துக்கோ அவன் பேசி சென்றது ஆத்திரத்தை கூட்டியது... அடக்கிக் கொண்டார்...

கொட்டிவிடும் கோபங்களும் மறந்து விடும் கோபங்களும் நீர் ஊற்றிய நெருப்பை போல அணைந்து விடும்...

ஆனால் அடக்கிக் கொண்டே வன்மத்துடன் வளரும் கோபம் எரிமலை போன்றது... வெடிக்க ஆரம்பித்தால் அந்த இடத்தையே அழித்து விடும்...

அப்படி தான் வேதவல்லியின் கோபமும் எரிமலையாக உள்ளுக்குள் குமுறிக் கொண்டு இருந்தது... அது வெடிக்கும் நாள் வெகு தூரத்திலும் இல்லை...
 

CRVS2797

Member
உன் மௌனமே என்
இசையாக...!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 13)


கல்யாணம் முடிச்சாச்சு. வீட்டுக்கும் வந்தாச்சு. யாதவ்வையும் ஹேப்பி பண்ணியாச்சு.


அப்படி இந்த வேத வள்ளி பாட்டியால என்ன பண்ணிட முடியும்...?
ஒண்ணுக்கு மூணு பேரன்களும் மகன் குருமூர்த்தியும் இருக்காங்க தானே..? அவங்களை மீறி இவங்களால என்ன பண்ணி கிழிக்க முடியும்.
அதுவும் வம்சியோட பொண்டாட்டியை...???


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top