ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 12

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 12

அடுத்த நாள் சனிக்கிழமை... வீட்டில் தான் இருந்தாள் ராதிகா...

அவன் நினைவு தான் அவளுக்கு...

ஆனால் தீபிகாவை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?

காலையில் அவனுக்கு "குட் மோர்னிங்" என்று அனுப்பி விட்டு குளிக்க சென்று இருந்தாள்...

தீபிகாவும் இருவருக்கும் டீயை போட்டுக் கொண்டு இருக்க, ராதிகாவின் அலைபேசி அலறியது...

தீபிகாவோ எடுத்துப் பார்த்தாள்...

"என்ஜீனியர் பிரியந்த" என்று விழுந்தது...

பயத்தில் அப்படி தான் பெயரை பதிவு செய்து இருந்தாள்...

"ஏதும் ஒஃபிஸ் விஷயமா இருக்கும் போல" என்று நினைத்துக் கொண்டே, "ராதிகா, பிரியந்த அண்ணாட நம்பர்ல இருந்து கோல்" என்று சொல்ல, குளித்துக் கொண்டு இருந்தவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது...

"இதோ வாறன்" என்று சொன்னவள் சோப் போட்ட பாதியில் மார்பில் பூந்துவாளையை சுற்றிக் கொண்டே ஓடி வர, தீபிகாவோ, அழைப்பு நின்று விட கூடாது என்று, அதனை எடுத்து காதில் வைத்து, "ஹெலோ" கூட சொல்லவில்லை, "ராது" என்று தூக்க கலக்கத்தில் மோகமாக அழைத்த பிரியந்தவோ, அவளுக்கு "இச் இச்" என்று முத்தம் வேறு கொடுக்க, தீபிகாவின் விழிகள் பேயறைந்த போல ஆனது...

ராதிகாவோ, "என்னடி?" என்று கேட்டுக் கொண்டே, அலைபேசியை காதில் வாங்கி வைக்க, இன்னும் அவன் முத்தம் கொடுத்து முடியவில்லை.

"அண்ணா, என்ன பழக்கம் இது? எத்தன தரம் இப்படி எல்லாம் மிஸ்பிகேவ் பண்ண வேணாம் எண்டு சொல்லி இருக்கிறேன்.... டிரெக்டர்ட்ட சொல்லி கொடுத்துடுவேன், பார்த்துக் கொள்ளுங்க" என்று மிரட்ட, அவனுக்கோ தூக்கம் கலைந்து விட்டது...

"என்னது? அண்ணாவா?" என்று கேட்டான்...

தீபிகா அவளையே இமைக்காமல் பார்த்து இருக்க, "இப்பிடியா ஃபோன் எடுத்ததும் நடப்பீங்க? எதுக்கு சனிக்கிழமை ல ஃபொன் எடுக்கிறீங்க? இன்னொரு தடவை இப்படி நடந்தா நான் மனுஷியா இருக்க மாட்டேன்" என்றாள்...

அவனுக்கு அவள் நிலைமை புரிந்து விட்டது...

சிரிப்பும் வர, "அதெல்லாம் இருக்கட்டும், உன்னை இழுத்து வச்சு" என்று ஆரம்பித்து அந்தரங்கமாக பேச, அவளோ விழி பிதுங்கிப் போனாள்...

அருகே தீபிகா வேறு, காதை கூர்மையாக்கிக் கொண்டே, அவள் அருகேயே நின்று இருக்க, 'இவ ஒருத்தி, போறாளும் இல்ல' என்று நினைத்துக் கொண்டே, "சொறி சொன்னா விடுவன் எண்டு நினைக்கிறீங்களா? நான் உங்கள விட மாட்டன்" என்றாள்...

"நானும் உன்னை விட மாட்டேன், விடிய விடிய பெட் ரூம் ல வச்சு" என்று அவன் வார்த்தைகள் இன்னும் ஆழமான அந்தரங்கத்தை நோக்கி, 'நேரம் காலம் பார்க்காம என்ன கதைக்கிறார்' என்று அவனுக்கு மனதுக்குள் திட்டி விட்டு, "இனி உங்களுக்கும் எனக்கும் கதை இல்ல" என்று சொன்னவள் அலைபேசியை வைத்து இருந்தாள்...

தீபிகா இன்னுமே அவளையே பார்த்துக் கொண்டு இருக்க, "என்னடி?" என்று கேட்டாள்...

"அவரோட ப்ரேக் அப் ஆயிட்டு எண்டு தானே சொன்னனி?" என்று கேட்டாள்...

"ஓம், ஆரியன்டபடுத்திட்டு இருக்கார்" என்றாள் எங்கோ பார்த்தபடி...

"அப்போ ஏன் அண்ணா எண்டு சொல்றா?" என்று சொல்ல, 'பெரிய ரிவால்வர் ரீட்டா எண்டு நினைப்பு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காள்' என்று மனதுக்குள் அர்ச்சித்தவளோ, "அப்ப தானே ஒரு டிஸ்டன்ஸ் மேயின்டேய்ன் பண்ணலாம்" என்றபடி மீண்டும் குளிக்க செல்ல, சட்டென அவள் முன்னே வந்து நின்றாள் தீபிகா...

"இப்ப என்னடி?" என்று ராதிகா கேட்க, அவள் விழிகள் ராதிகாவின் வெற்றுக் கழுத்தில் இருந்து கீழிறங்கின...

அவள் பூந்துவளை மட்டுமே அணிந்து இருக்க, அவள் கழுத்தின் கீழே இருந்த சிவப்பான தடயம் பளிச்சென்று தெரிந்தது...

"இங்க ஏன் சிவந்து இருக்கு?" என்று கேட்க, ராதிகாவுக்கோ மயக்கமே வராத குறை தான்...

"இங்கயும் சிவந்து இருக்கு?" என்று அவள் கழுத்து வளைவையும் காட்டினாள்...

"என்னெண்டு தெரியல தீபி... முதல் குளிச்சிட்டு வாறன்" என்று சொல்லிக் கொண்டே, அங்கிருந்து நழுவி, குளியலறைக்குள் நுழைந்தவளுக்கு அப்போது தான் மூச்சே வந்தது...

'எத்தன நாளைக்கு சமாளிக்கனுமோ தெரியல' என்று புலம்பிக் கொண்டே, "பிரியூ வச்சு செய்யுறீங்க என்ன" என்று கண்ணாடியை பார்த்து சொல்லி விட்டு குளிக்க சென்றாள்...

குளித்து விட்டு வந்தவளோ, "கோல் எடுக்காதீங்க, என்ன எண்டாலும் மெசேஜ் பண்ணுங்க" என்று அவனுக்கு அனுப்ப, 'இண்டைக்கு வீட்டுக்கு வா" என்று அவன் அனுப்பி இருந்தான்...

"பிரியூ, விளையாடாதீங்க" என்று அவள் திட்டி அனுப்ப, "எனக்கு நீ வேணும் ராது" என்று மெசேஜ் வந்தது...

அவளுக்கும் அவன் தேவை தான்...

தீபிகா இருக்கும் போது மூச்சு கூட விட முடியாது...

"எனக்கும் நீங்க வேணும் தான்... அடுத்த கிழமை இத பத்தி கதைப்பம், பை" என்று அனுப்ப, அவனுக்கு ஏமாற்றம் தான்...

ஆனால் அவள் நிலையும் புரிந்து, பெருமூச்சுடன் நண்பர்களை தேடி சென்று விட்டான்...

சனி ஞாயிறு இப்படி தான் போனது...

இருவரும் மெசேஜ் மட்டும் அனுப்பி இருந்தார்கள்...

அவனுக்கோ எப்போது அவனைப் பார்ப்போம் என்கின்ற எண்ணம் தான்...

திங்கட்கிழமை காலையில் அவளுக்கோ குதூகலம்...

அழகான நீல நிற புடவையை அணிந்தவள், பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்து செல்ல, அவள் கண்ணில் பட்டது என்னவோ அங்கே ஜீப்பில் சாய்ந்து நின்ற பிரியந்த தான்...

அவனை விழி விரித்துப் பார்த்தாள்...

கண்களால் உள்ளே ஏறும்படி சொன்னவன், ஜீப்பில் ஏறிக் கொள்ள, அவளும் சுற்றிப் பார்த்துக் கொண்டே ஏறியவள், "பிரியூ, இங்க எதுக்கு?" என்று ஆரம்பித்து மீதி வார்த்தைகள் அவன் இதழ்களுக்குள் முற்றுப் பெற்றது...

"யாரும் பார்த்திட போறாங்க" என்று சொல்லிக் கொண்டே, அவன் மார்பில் கையை வைத்து தள்ளியவள், "இப்படி எல்லாம் வராதீங்க" என்று சொல்ல, "அப்படி எல்லாம் நீ சொல்றத கேட்க முடியாது" என்றான்...

அவன் ஆசையாக வந்து இருக்கின்றான்...

இப்படி அவள் பேச, அவனுக்கு கோபம் வந்தது.

"தீபிகா பார்த்தா, எனக்கு தான் பிரச்சனை" என்று திட்டிக் கொண்டே, இறங்கப் போக, அவள் கையை எட்டிப் பிடித்தவன், "சேர்ந்து போகலாம்" என்றான்.

"இல்ல நான் தனியா போறேன், ஒஃபிஸ் ல பார்த்தாலும் பிரச்சனை" என்று சொல்லிக் கொண்டே, அவள் இறங்கி இருக்க, "சொன்னா கேளு ராது" என்றான்...

கேட்கவில்லை அவள்...

விறு விறுவென நடக்க ஆரம்பித்து விட்டாள்...

அவளை முறைத்துப் பார்த்து விட்டு அவனும் வண்டியை கிளப்பி இருந்தான்.

அவள் வழக்கம் போல அலுவலகத்துக்கு வந்து சேர தாமதமாகி விட்டது.

ராதிகா வந்ததுமே அறைக்குள் வர சொல்லி அவன் செய்தி சொல்லி இருக்க, அவள் வந்ததும் வராததுமாக, அவன் அறைக்குள் செல்ல வேண்டிய நிலைமை தான்...

'வந்ததும் ஏன் கூப்பிடுறார்?' என்று யோசித்துக் கொண்டே உள்ளே செல்ல, அவளை ஏறிட்டு முறைத்தவனோ, நேரத்தைப் பார்த்தான்.

"பஸ் ல வர லெட் ஆயிட்டு சார்" என்றாள்...

அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டே, "எக்ஸ்கியூஸ் சொல்ல வேணாம் ராதிகா" என்றான்...

முதல் எல்லாம் அவன் கோபம் பார்த்து பயந்து இருக்கின்றாள்...

இப்போது சிரிப்பு தான் வந்தது...

மெலிதாக சிரித்துக் கொண்டே, கண்களை சிமிட்டிக் கொண்டாள்...

அவளையே பார்த்து இருந்தவனுக்கு கோபத்தைக் கூட அவளிடம் காட்ட முடியவில்லை...

அவள் புடவை அணிந்து இழுத்துப் போர்த்திக் கொண்டு தான் இருக்கின்றாள்...

ஆனால் அவன் கண்களுக்கு என்னென்னவோ நினைவுகள் என்னென்னவோ தோற்றத்தைக் கொடுத்தன...

தலையை உலுக்கி தன்னை சமன் செய்தவன் விழிகள் அவள் இதழ்களில் படிந்து மீள, "யன்ன" (போ) என்றான்...

அவளும் மெலிதாக சிரித்துக் கொண்டே வெளியேறி விட, அவன் இதழ்களுக்கும் சிரிப்பு தான்...

அவள் வேண்டும் என்று அவன் மொத்த அனுவும் துடித்துக் கொண்டு இருந்தது...

உணர்வுகள் ஆண்களுக்கு மட்டும் அல்லவே, பெண்களுக்கும் தானே...

அவளுக்கும் அதே உணர்வு தான்...

பார்த்தும் நெருங்க முடியாத தூரத்தில் தான் இருவரும்...

சைட்டுக்கு சென்றாலும் சேர்ந்து சுராஜ்ஜும் கூடவே இருந்தான்...

மனம் விட்டு பேச முடியாத நிலை...

அவளை முத்தமிட்டே அவனுக்கு மூன்று நாட்கள் கடந்து விட்டன...

வியாழக்கிழமை இரவு போல, ராதிகாவின் தந்தை மகாதேவன் அவளுக்கு அழைத்து இருந்தார்...

அவளும், "சொல்லுங்கப்பா" என்று சொல்ல, "உனக்கு ஜாதகம் ஒண்டு பொருந்தி இருக்கு ராதிகா.. மாப்பிள்ளை கொழும்புல தான் வேலை... பேன்க் மேனேஜர் ஆஹ் இருக்கார், பெயர் குணாளன்... உன்னை நேர்ல பார்க்கோணும் எண்டு சொல்றார்... எனக்கு விருப்பம் இல்ல தான்... உண்ட அண்ணன் எனக்கு ஏசுறான்... அதனால பொது இடத்துல சந்திக்க சொல்லி இருக்கேன்... கடை ஒண்டுக்கு நாளைக்கு பின்னேரம் அஞ்சு மணி போல வருவார். என்ன கடை எண்டு காலைல சொல்றன்... பேசிப் பாரு, பிடிச்சு இருந்தா மேல கதைக்கலாம்" என்றார்...

அவளோ, "என்னப்பா சொல்றீங்க?" என்றார் அதிர்ந்தே விட்டாள்.

நெஞ்சே அடைத்து விட்டது...

"ஜாதகம் நல்லா பொருந்தி இருக்கு, அவங்க வீட்டு ஆட்களும் நல்ல மாதிரி" என்று சொன்னார்... அவளுக்கு மூச்சடைத்து விட்டது...

என்ன சொல்வது? பேயறைந்த போலவே நின்று இருந்தாள்...

"கல்யாணம் நிச்சயம் ஆக முதல் அந்த பெடியனோட நிறைய கதைக்க வேணாம், அதான் நம்பர் கூட நான் குடுக்கல" என்று வேறு சொன்னார்...

அவர் பார்த்த மாப்பிள்ளையிடம் கதைப்பதற்கு தடை போடுக்கின்றார்... ஆனால் அவர் மகளோ, அவள் மனம் கவர்ந்தவனுடன் கட்டிலை பகிர்ந்தே விட்டாளே...

"அப்பா எனக்கு கல்யாணம் இப்ப வேணாம்" என்றாள் அவசரமாக...

உடனே மகாதேவன், "நல்ல சம்பந்தம் மகள்" என்று ஆரம்பிக்க, "அவள்ட்ட என்ன நிறைய கதைச்சிட்டு இருக்கீங்க" என்று அதட்டலுடன் அவரிடம் இருந்து அலைபேசியை பிடுங்கி இருந்தான் அவள் அண்ணனான கிரிதரன்...

"அண்ணா" என்றாள் அவள் திக்கி திணறி...

"இங்க பாரு, இவர் சொல்றது எல்லாம் கேட்காதே, அவர் இன்னுமே அந்த காலத்துல இருந்து வரல, நீ கதைச்சு பாரு, பிடிச்சு இருந்தா சொல்லு, நல்ல மாப்பிள்ளை விட்றாத" என்று கராறாக சொன்னான்...

கிரிதரன் என்றால் அவளுக்கு பயம் தான்... மாறி கதைக்க மாட்டாள்...

"ம்ம்" என்று சொல்லி விட்டு வைத்தவளுக்கு மூச்செடுக்க முடியவில்லை...

அவசரமாக பிரியந்தவுக்கு வீட்டில் ஒளிந்து நின்று வாய்ஸ் நோட் அனுப்பி விட்டு ஹாலுக்குள் வர, "என்ன ராதி, முகம் ஒரு மாதிரி இருக்கு?" என்று கேட்டாள் தீபிகா...

"ஒண்டும் இல்லை, வீட்ல மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க" என்றாள்...

"அட, யாரு மாப்பிள்ளை? சொல்லு, ஃபோட்டோ இருக்கா?" என்று கேட்டு அவள் படுத்திக் கொண்டு இருக்க, "சும்மா இருடி, நாளைக்கு பார்த்துட்டு வந்து சொல்றேன்" என்று முடித்து இருந்தாள்...

அவள் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் பிரியந்த பார்த்தான் தான்...

பதில் இல்லை...

கோபம் வந்தது அவளுக்கு...

மெசேஜாக அனுப்பினாள்.

எல்லாம் பார்த்தான்... பதில் இல்லை..

ஏதாவது கதைங்களன் என்று திட்டினாள்.

அதற்கும் பதில் இல்லை...

அலைபேசியில் மிஸ் கால் அடித்தாள்...

எந்த எதிர்வினையும் இல்லை...

அவனுக்கு சிரிப்பு...

'நாளைக்கு பார்க்கிறேன்' என்று முணு முணுத்தவனுக்கு அவளைப் போல பயம் எல்லாம் இல்லை...

எப்படியும் அவனை மீறி ஒரு சின்ன துரும்பை கூட ராதிகாவின் வீட்டினர் அசைக்க முடியாது என்று அவனுக்குமே தெரியும்...

கோபத்துடன் தான் அவள் தூங்கிப் போனாள்...

அடுத்த நாள் குணாளனைப் பார்க்க வேண்டிய ரெஸ்டாரன்ட் பற்றிய தகவல்கள் வந்து சேர்ந்தன...

அதையும் பிரியந்தவுக்கு அனுப்பினாள்.

அதற்கும் பதில் இல்லை...

'இவருக்கு என்ன நடந்தது? இண்டைக்கு ஒஃபிஸ் போய் கிழிச்சு காட்டுறேன்' என்று திட்டிக் கொண்டே அலுவலகம் சென்றாள்...வெண்ணிற நிற சுடிதார் தான் அணிந்து இருந்தாள்.

அவன் அன்று சைட்டுக்கு காலையிலேயே சென்று விட்டான்...

அவளுக்கு தலை வெடிக்கும் உணர்வு...

அலைபேசியில் அழைத்தாள்.

"பிசியா இருக்கேன் ராது, பிறகு எடுக்கிறேன்" என்று வைத்து விட்டாள்...

அவனுக்கு திட்டிக் கொண்டே, அன்று மாலை அலுவலகத்தில் இருந்து நேரத்துக்கு கிளம்பினாள்.

குணாளனை சந்திக்கவே விருப்பம் இல்லை...

இதனை சொன்னால் கிரிதரன் உண்டு இல்லை என்று ஆக்கி விடுவான் என்று பயம்...

அவள் பஸ்ஸுக்காக காத்துக் கொண்டு நின்ற சமயம், அவள் முன்னே வந்து நின்றது, பிரியந்தவின் ஜீப்...

அவளோ விழி விரித்துப் பார்க்க, ஜீப் கண்ணாடியை இறக்கி, ஏறும்படி சைகை செய்தான்...

அவனுக்கு வாய்க்குள் திட்டிக் கொண்டே ஏறிக் கொண்டவளோ, "எத்தன தரம் உங்களுக்கு மெசேஜ் அனுப்புறது?" என்று சீற, "வெள்ளவத்தைல இருக்கிற ஹோட்டல் தானே" என்று கேட்டான்...

"நான் என்ன கதைச்சிட்டு இருக்கிறன், நீங்க என்ன கதைச்சிட்டு இருக்கீங்க" என்று சீறினாள்...

"டைமுக்கு கொண்டு போக வந்துட்டன் தானே" என்றான் அவன்...

"உங்கள இதுக்கா நான் கூப்பிட்டேன்? எனக்கு வீட்ல கல்யாணம் பார்க்கிறாங்க" என்றாள் ஆதங்கமாக...

சிரித்துக் கொண்டான்...

கோபமாக அவனை முறைத்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்...

ஹோட்டலும் நெருங்கியது...

"இப்ப போய் தான் ஆகணுமா?" என்று திட்டினாள்...

"கடைசி நேரத்துல டேட்டிங் கேன்சல் செய்யலாமா?" என்றான் கிண்டலாக...

"நீங்க கதைக்கிறது நல்லாவா இருக்கு?" என்று திட்டினாள்.

அவனோ, "நான் என்ன பிழையா கதைச்சுட்டன்" என்று சிரிப்பை அடக்கிக் கொண்டே கேட்க , "பொண்டாட்டிக்கு மாப்பிளை பார்க்க கூட்டி வாற ஒரே ஆள் நீங்க தான்" என்றாள்.

"சரி இல்லை எல்லா... கதைச்சுட்டு வா" என்றான் அவன்.

"லூசா நீங்க??" என்று கேட்டபடி இருக்கும் போதே அவர்கள் வர வேண்டிய சாப்பாட்டு கடையும் வந்து விட்டது...

"இறங்கி போ... ஜீப்பை பார்க் பண்ணிட்டு வாறன்" என்று சொல்ல அவனை முறைத்தபடி இறங்கினாள்.

"சிரிச்சிட்டு போ... அப்ப தானே மாப்பிள்ளைக்கு பிடிக்கும்" என்றான். அதற்கும் முறைப்பு தான்.

கடையினுள் நுழைந்தவள் விழிகள் அவனை தான் தேடின...

"ஹாய்" என்று அழைத்தான்.

கஷ்டப்பட்டு சிரிதப்படி அவன் முன்னே வந்து அமர, "நான் குணாளன்" என்று கையை குலுக்க நீட்ட, "நான் ராதிகா" என்றாள்..

கையை குலுக்கவில்லை.. அவன் தயக்கத்துடன் கையை உள்ளே இழுத்தபடி, "அப்பம் ஓடர் பண்ணி இருக்கன்" என்றான்.

"ஓஹோ" என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே , அவளை பார்த்தபடி அடுத்த மேசையில் அமர்ந்தான் பிரியந்த... தனக்கு காஃபியை மட்டும் அவன் ஆர்டர் செய்து இருக்க அவனை கடைக்கண்ணால் பார்த்து முறைத்தாள்.

அவன் இதழ்களுக்குள் குறும்பு சிரிப்பு. நீரை எடுத்து அருந்தினான்.

குணாளன் ராதிகாவுடன் பேச ஆரம்பித்து விட்டான்.

"பிறகு சொல்லுங்க வேலை எல்லாம் எப்பிடி போகுது??" என்று கேட்க அவளோ, "உங்கள்ட்ட ஒரு உண்மையை சொல்லோணும்" என்றாள்.

அவனும், "சொல்லுங்க" என்றான்.

"எனக்கு பைத்தியம்" என்றாள்.

பிரியந்தவுக்கு புரையேறி விட்டது... தலையில் தட்டிக் கொண்டே சத்தமின்றி சிரிக்க ஆரம்பித்து விட்டான்.

குணாளனோ, "என்னது?" என்று அதிர, "குணமாகாத பைத்தியம்... உங்கள ஏமாத்தி என்ன கட்டி வைக்க போறாங்க" என்றாள்.

கஷ்டப்பட்டு சிரிக்காமல் பேசினாள்.

"நீங்க எஞ்சினியர் தானே" என்றான் அவன் தட்டு தடுமாறி.

"ஓம் பைத்தியக்கார எஞ்சினியர் கோபம் வந்தா கடிப்பன்" என்றாள்.

அவன் நம்புவது போல தெரியவில்லை. அவளை ஆராய்ச்சியாக பார்த்தான்.

'நம்ப மாட்டான் போல இருக்கே' என்று யோசித்தவளோ, அருகே இருந்த பிரியந்தவிடம், "என்னடா என்னையே பார்த்துட்டு இருக்கிறா ?? பொம்பிளை எண்டா காணுமே" என்றாள்.

குணாளனுக்கு தூக்கி வாரிப் போட்டது...

பிரியந்த சிரிப்பை அடக்கிக் கொண்டே, "என்னது??" என்று சிங்களத்தில் கேட்டான்.

'இது மினிஸ்டர் ஜெயக்கொடிட மகன் எல்லா' என்று நினைத்த குணாளனோ, "ராதிகா சும்மா இருங்க, அது யாரு தெரியுமா?" என்று கேட்டான்.

"யாரா இருந்தா என்ன ? நியாயம் கேட்கணும்... என்னை வெறிக்க வெறிக்க பார்த்திட்டு இருக்கான்... எனக்காக நீங்க சண்டை போட மாட்டீங்களா?" என்று கேட்டாள்.

"ஐயோ ராதிகா கொஞ்சம் சும்மா இருங்க... மினிஸ்டர் ஜெயக்கொடிட மகன் அவர்" என்று சொன்னவனோ பிரியந்தவைப் பார்த்து, "சமாவென்ன சேர்" ( மன்னித்து கொள்ளுங்க ) என்றான்.

சைகையில் ராதிகாவுக்கு மூளை சரி இல்லை என்று வேறு சொன்னான்.

'அப்பாடா நம்பிட்டான்' என்று நினைத்த ராதிகாவோ அவன் முன்னே வந்து நின்று கொண்டே, "மினிஸ்டர் மகன் எண்டா பெரிய நினைப்பா?? என்னை என்ன செய்ய முடியும் உங்களால ??" என்று கேட்டாள்.

"ஐயோ அவருக்கு தமிழ் தெரியாது" என்று குணாளன் பதறிக் கொண்டே அலைபேசியில் வீட்டுக்கு அழைத்தவன், சற்று தள்ளி சென்றபடி, "அப்பா நீங்க பார்த்த பெட்டைக்கு கொஞ்சம் மூளை சரி இல்ல போல" என்று சொல்லிக் கொண்டே இருக்க , ராதிகாவுக்கு இப்போது தான் மூச்சே வந்தது... பிரியந்த குரலை செருமிக் கொண்டே எழுந்தவன், "நைட்டுக்கு வீட்டுக்கு வா... உன்ன என்ன எல்லாம் செய்ய முடியும் எண்டு காட்டுறேன்" என அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லிக் கொண்டே அவள் இதழ்களை நோக்க, 'கண்ட கண்ட நேரத்துல இவருக்கு மூட் ஆகுது' என்று வாய்க்குள் திட்டிக் கொண்டே அவனை முறைத்தாள். அவனோ ஒற்றைக் கண்ணை அடித்து விட்டு அடக்கப்பட்ட சிரிப்புடன் செல்ல, இப்போது குணாளனைப் பார்த்தாள்.

அவனோ, அவளை பார்க்காமல் விறு விறுவென வெளியேற, "அப்பம் வேணாமா??" என்று அவள் கேட்டது காற்றில் கரைந்து போனது...

அதனை தொடர்ந்து அவளும் பிரியந்தவின் ஜீப்பில் ஏறிக் கொண்டாள்...

இருவருக்குமே சிரிப்பு...

சத்தம் போட்டு சேர்ந்து சிரித்துக் கொண்டார்கள்...

சிரிப்பின் இறுதியில் அவளைப் பார்த்தவன், "வீட்டுக்கு வா ராது" என்றான் கரகரத்த குரலில்...

அவள் சிரிப்பு அடங்கிப் போக, அவனையே பார்த்து இருந்தவள், "நேரத்துக்கு விட்டுறணும்" என்றாள்...

அவனோ கண்களை சிமிட்டிக் கொண்டே, ஜீப்பை கிளப்பி இருந்தான்.
 
Top