ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 10

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 10

உள்ளுக்குள் வந்த ஜனார்த்தனன் வாசலில் நின்ற நாராயணியை ஆழ்ந்து பார்த்தான்.

சற்று முன்னர் ஆம் என்று சொல்ல சொன்னான் தான்...

ஆனால் இதற்கெல்லாமா சொல்வது? என்கின்ற கேள்வி அவளிடம்...

வெளியே தயங்கி நின்றவளை, "உள்ள வா, வலது காலை எடுத்து வச்சு வா" என்றான்...

கோதாவரி யோசனையுடன் நின்று இருக்க, கனகசிங்கமும் எழுந்து வந்து விட்டார்...

நாராயணிக்கு திரும்ப செல்லவும் முடியாது.

கோதாவரி வேறு என்னென்னவோ பேசிக் கொண்டு இருக்கின்றார்.

அவன் வேறு, உள்ளே வர சொல்லிக் கொண்டு இருக்கின்றான்...

வலது காலை எடுத்து வைத்து உள்ளே வர, "இது யார் எண்டு தெரியுதா?" என்று கேட்டான்.

கனகசிங்கமும் சரி, கோதாவரியும் சரி இல்லை என்று தான் தலையாட்டினார்கள்.

"உங்கட மருமகள் தான்... மிஸ்டர் புருஷோத்தமன்ட மகள்" என்று சொன்னதுமே இருவரின் விழிகளும் அதிர்ந்து விரிந்து கொண்டன.

"இனி இங்க தான் இருப்பா, உங்கட மச்சான் தனியா விட்டுட்டு போய் இருக்கார், ஓஃப் ஏரியா வேற, ஏதும் நடந்தா என்ன செய்யுறது?" என்று கேட்டான்.

கனகசிங்கமுக்கு அவன் சொல்வது சரி என்று தான் பட்டது...

ஆனால் இந்தளவுக்கு அவனுக்கு பரந்த மனம் இருக்கும் என்று அவருக்கே இன்று தான் தெரியும்...

"கோதாவரி, பிள்ளைக்கு ரூமை ரெடி பண்ணி குடு" என்று சொல்லி விட்டார்...

கோதாவரியும், "வாம்மா" என்று அவளை அழைத்து செல்ல, அவளும் தயங்கி தயங்கி அவருக்கு பின்னே செல்ல, அவர்களை தாண்டி சென்ற ஜனார்த்தனனோ அவளுக்கு ஏற்பாடு செய்ய இருக்கும் அறைக்குள் அவளது உடைப்பெட்டியை வைத்து விட்டு வந்தான்.

கனகசிங்கமோ, "இப்பிடி கூட்டி வந்து இருக்கா, மச்சானுக்கு தெரியுமா?" என்று கேட்க, அவனோ, "குமர் பெட்டை எண்டு பார்க்காம விட்டுட்டு போறார், ஏதாவது ஏற்பாடு செஞ்சுட்டு போயிருக்கலாம் எல்லா, அவர்ட்ட எல்லாம் நான் சொல்லல்ல நீங்க சொல்றது எண்டா சொல்லுங்க" என்று சொன்னவன் ஒரு கணம் நிறுத்தி, "எனக்கு இந்த சம்பிரதாயத்துல எல்லாம் நம்பிக்கை இல்லை, நான் அவளை கல்யாணம் கட்டலாம் எண்டு இருக்கேன்" என்றானே பார்க்கலாம்...

அவர் நெஞ்சில் பாறாங்கல் விழுந்த உணர்வு தான்...

"என்ன விளையாடிட்டு இருக்கியா?" என்று அவர் அதிர, "நான் அண்டைக்கு சொன்ன பெட்டை இவள் தான்... உங்கட மச்சான் அவளுக்கு மாப்பிள்ளை எல்லாம் தேடி கிழிக்க மாட்டார், நானே கட்டுறேன்" என்று சொன்னவன் அதனை ஒரு தகவலாக தான் சொன்னான் தவிர, அவரின் பதிலையோ சம்மதத்தையோ எதிர்பார்க்கவே இல்லை...

அதனை தொடர்ந்து தனது அறைக்குள் சென்று படுத்து விட்டான்... கனகசிங்கம் நேரத்தைப் பார்த்து விட்டு, குழப்பத்துடன் தான் படுக்க சென்றார்.

கோதாவரி, நாராயணியின் அறைக்குள் இருந்த கட்டிலில் படுக்கை விரிப்பை விரித்தவரோ, ஏ சி யை போட, "எனக்கு குளிரும், ஃபேன் போதும் ஆன்டி" என்றாள்.

"அதென்ன ஆன்டி? உனக்கு மாமி முறை தானே நான், மாமி எண்டு கூப்பிடு" என்றார்.

அவருக்கு எப்போதுமே அவள் மீது ஒரு பரிதாபம் இருந்தது...

கணவன் அந்தக் காலத்தில் கருணாவை மிரட்டி விட்டு வந்த நேரமே, "அந்த சின்ன பிள்ளை என்ன செஞ்சவள். அவளை எதுக்கு அப்படி கதைச்சீங்க?" என்று கணவனை முதலில் கண்டித்தவர் அவர் தான்...

நாராயணிக்குமே அவரை பிடித்து விட்டது...

மென்மையாக சிரித்துக் கொண்டே, "சரி மாமி" என்று சொல்ல, அவரும் ஏ சி யை அணைத்து விட்டு, "ஏதும் எண்டா கேளு, இது உன்ட வீடு போல தான், விளங்குதா?" என்று கேட்க, அவளும் சரி என தலையாட்டினாள்.

அவர் சென்று விட்டார்...

கட்டிலில் அமர்ந்த நாராயணி வீட்டை சுற்றி பார்த்தாள்.

அந்நிய வீடு என்னும் உணர்வை தடுக்க முடியவில்லை...

அவள் இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டு வாழ்ந்தாள்.

இந்த வீட்டில் எல்லாமே அதிகப்படியாக இருந்தது.

ஒரு மாதிரி அழுத்தமாகவும் இருந்தது.

ஆனால் பாதுகாப்பான உணர்வு தான் தோன்றியது...

அதற்காக தானே எதையும் பற்றி யோசிக்காமல் ஜனார்தனனுடன் கிளம்பி வந்து இருந்தாள்.

எடுத்து வந்து இருந்த தாயின் புகைப்படத்தை அங்கே வைத்து இருந்தாள். அதனை பார்த்துக் கொண்டே கட்டிலில் படுத்தவளுக்கு தூக்கம் சற்று நேரத்தில் தழுவிக் கொண்டது.

இதே சமயம் அறைக்குள் வந்த கோதாவரியிடம், "உன்ட மகன் அந்த பிள்ளையை கல்யாணம் கட்ட போறானாம்" என்று சொல்ல, அவரோ அதிர்ச்சியுடன், "என்ன விளையாடிட்டு இருக்கானா?" என்று கேட்டார்.

"என்ன நிலவரம் எண்டு தெரியல, நாளைக்கு இத பத்தி கதைப்பம்" என்று சொல்லி விட்டு தூங்க ஆரம்பித்து விட்டார்.

இதே சமயம், அடுத்த நாள் தான் கண்களை விரித்தாள் நாராயணி.

நேரம் ஆறு மணியை காட்டியது...

இன்று அவள் கல்லூரிக்கு சென்றே ஆக வேண்டும்...

சட்டென எழுந்தவள், அறையுடன் இருந்த குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

குளித்து விட்டு அவள் வெளியே வந்த சமயம், ஜாக்கிங் போய் விட்டு வீட்டினுள் நுழைந்தான் ஜனார்த்தனன்.

அவளை பார்த்து விட்டு, "அம்மா" என்று அழைக்க, அவரும் சமையலறைக்குள் இருந்து வர, "அவளுக்கு சாப்பாட்டை குடுங்க, இண்டைக்கு கேம்பஸ் போகணும்" என்று சொல்ல, "இடியப்பமும் சொதியும் இருக்கு, வந்து சாப்பிடு நாராயணி" என்றார் அவர்...

"சரி மாமி" என்றவளுக்கு அவனை எண்ணி ஆச்சரியம் தான்...

அவள் பேச முதலே, அவன் எல்லாமே பேசி விடுகின்றானே...

அவளும் சாப்பாட்டு அறைக்குள் தயங்கி செல்ல, "இண்டைக்கு எனக்கு லெக்ஸர்ஸ் இல்லை, வீட்ல தான் நிற்பன், கொண்டு விடணும் எண்டா சொல்லு, விடுறேன்" என்றான்...

அவனை திரும்பி பார்த்தவள், "இல்ல, நான் பஸ் ல போறேன், பஸ் ஸ்டொப் எங்க இருக்கு சேர்?" என்று கேட்டாள்.

அவனோ, "சேரா?" என்றான் ஒற்றை புருவம் உயர்த்தி...

அவள் அவனை புரியாமல் பார்க்க, "அவங்கள மாமி எண்டு தானே கூப்பிடுறா, என்னை அத்தான் எண்டு கூப்பிடு, அப்பிடி தான் திவ்யா கூப்பிடுவாள், இது உன்ட சின்ன அத்தான்" என்று அங்கே வந்த இளஞ்செழியனை காட்ட, அப்போது தான் தூக்கத்தில் இருந்து எழுந்து வந்த இளஞ்செழியனுக்கு அங்கே நின்ற நாராயணியை கண்டதுமே அதிர்ச்சி தான்...

கண்களை கசக்கி விட்டு மீண்டும் அவளை பார்த்தவன், "இது நாராயணி தானே" என்றான்.

"ம்ம், இனி இங்க தான் இருப்பாள்" என்று அவனுக்கு பதில் சொன்ன ஜனார்த்தனன், நாராயணியிடம், "பஸ் ஸ்டொப் கேட்டனி தானே, சாப்பிட்டுட்டு வா, நானே விட்டுட்டு வாறன், நடந்து போற தூரம் தான்" என்று சொல்லி விட்டு, ஹாலிலேயே அமர்ந்து கொள்ள, அவளும், தலையசைத்து விட்டு சாப்பிட சென்றாள்.

உணவை எடுத்து வாய்க்குள் வைத்தவளுக்கு கண்கள் கலங்கி விட்டன...

சாப்பாடு நன்றாக இருந்தாலும், தாயின் கைப்பக்குவத்தை மனம் வேண்டியது...

உணர்வுகளை அடக்கிக் கொண்டே, சாப்பிட்டு முடித்தவள் தனது பையை அறைக்குள் சென்று எடுத்துக் கொண்டே வர, "ரெடியா?" என்று கேட்டான்.

"ம்ம்" என்றாள்.

"சரி வா" என்று சொல்லி அவனே அவளை அழைத்து சென்றான்.

அவர்கள் வீட்டில் இருந்து கொஞ்ச தூரம் தான்...

இருவரும் ஒன்றாக நடந்து செல்ல, அந்த வீதியில் பூக்களை பறித்துக் கொண்டு நின்று இருந்த வயதான பக்கத்து வீட்டு பாட்டி கற்பகமோ, "யாரு புள்ள மனே இது?" என்று ஜனார்த்தனனிடம் கேட்க, அவனோ சிரித்துக் கொண்டே, "நான் கல்யாணம் கட்டப் போற பெட்டை அம்மம்மா" என்றான்...

நாராயணி சட்டென பக்கவாட்டாக திரும்பி அவனை அதிர்ந்து பார்க்க, அவனுக்கு அது தெரிந்தாலும் கண்டும் காணாமல் நடக்க, கற்பகமோ, "வடிவான பிள்ளை, சோடி பொருத்தம் நல்லா இருக்கு, உங்களுக்கு பிள்ளை பிறந்தா தங்கக்கட்டி போல இருக்கும்... ஒண்டு ரெண்டு பிள்ளையோட நிப்பாட்டாம, ஒரு ஏழெட்டு எண்டு பெத்து தள்ளு" என்றார்.

அவன் சிரிப்பை அடக்கிக் கொண்டே நடக்க, அவள் சட்டென நின்று விட்டாள்.

திரும்பி பார்த்து, "என்ன?" என்றான்...

"நீங்க ஒரு மாதிரி கதைக்கிறீங்க, அவங்க அதுக்கும் மேல கதைக்கிறாங்க" என்றாள்.

அவன் கல்யாணம் முடிக்க போகின்றேன் என்கின்றார்...

கற்பகம் குழந்தை பற்றி பேசுகின்றார்...

அவளுக்கு இதனை எல்லாம் கேட்டு மயக்கம் வராத குறை தான்...

அவன் இதழ் குவித்து ஊதிக் கொண்டே, "உன்னை நான் எப்பிடி அறிமுகம் செய்யுறது? புருஷோத்தமன்ட மகள் எண்டு சொல்றதுல எனக்கு விருப்பம் இல்ல" என்றான்.

"அதுக்கு நீங்க சொன்னது?" என்று அவள் ஆரம்பிக்க, "பஸ்ஸுக்கு லேட் ஆகுது, இத பிறகு கதைக்கலாம் வா" என்று அவளை அழைத்து செல்ல, அவளோ அதிர்ந்தபடி நடந்தவள், "அவங்க ஏன் இப்பிடி கதைச்சவங்க?" என்று கேட்டாள்.

"அத அவங்கள்ட்ட தான் கேக்கணும், வயானவங்க தானே... அவங்க கதைக்கிறது எல்லாம் ஏன் நீ பெருசா எடுக்கிறா" என்று கேட்டப்படி நடந்தான்.

"அவங்க இந்த கதையை பரப்புனா என்ன செய்யுறது?" என்று அவள் கேட்க, "கல்யாணம் நடக்கக்குள்ள எல்லாருக்கும் தெரிய தானே போகுது" என்றான்.

"என்னது கல்யாணமா?" என்று அவள் அதிரவும், பஸ் ஸ்டாப் வரவும் நேரம் சரியாக இருந்தது...

"இந்தா பஸ்ஸும் வந்துட்டு, முதல் ஏறு, மிச்சத்தை பிறகு கதைக்கலாம்" என்று சொல்ல, அவள் குழப்பத்துடன் தான் பஸ்ஸில் ஏறிக் கொண்டாள்.

அவனுடன் வந்திருக்க கூடாதோ என்று இப்போது தோன்றியது...

திருமணம் என்று எல்லாம் பேசுகின்றானே....

நிஜமாவே திருமணம் செய்ய போகின்றனா என்ன?

நினைக்க நினைக்க அவளுக்கு மயக்கம் வராத குறை தான்...

ஏற்கனவே தாயின் இழப்பில் தோன்றிய மன அழுத்தம், இதனை பற்றி யோசித்து இன்னுமே தலை வலித்தது...

இத்தனை நாட்கள் கல்லூரியில் அவள் செல்லாத பாட குறிப்புகளை வேறு இன்று எழுதி எடுக்க வேண்டும்...

முதல் அதனை பற்றி யோசிக்கலாம் என்று நினைத்தவள் ஜனார்தனனின் விஷயத்தை தள்ளிப் போட்டாள்.

இதே சமயம், காலையில் ஜாக்கிங் சென்ற ஜனார்த்தனன் பவித்ரனிடம் விஷயத்தை சொல்லி இருந்தான்...

அவனுக்கு அதிர்ச்சி தான்...

"டேய் நீ சீரியஸ் ஆஹ் இருக்கியா?" என்று கேட்க, "நான் ஒண்டும் விளையாடல" என்று பதில் வந்தது.

பவித்ரன் வீட்டுக்கு வந்ததும் வராததுமாக, "அப்பா, ஜனார்த்தனன் நாராயணியை அவன்ட வீட்டுக்கு கூட்டி போயிருக்கான்" என்று சொல்லி விட்டான்...

கனகசிங்கம் காலையில் எடுத்து விஷயத்தை சொல்ல யோசித்து இருந்தார்.

அதற்கு முதலே, பவித்ரனினால் விஷயம் அவர் காதுக்கு சென்று விட, அவர் சற்று கடுப்புடன் நேரடியாகவே ஜனார்த்தனனின் வீட்டுக்கு வந்து விட்டார்...

நாராயணியை பஸ் ஸ்டாப்பில் விட்டு வந்த ஜனார்த்தனன் கண்ணில் அங்கே நின்ற புருஷோத்தமனின் கார் தான் தென்பட்டது...

'பவித்ரன் சொன்னானா? இல்ல அப்பா சொன்னாரா எண்டு தெரியல' என்று நினைத்தபடி உள்ளே நுழைந்தான்...

கனகசிங்கமோ, "காலைல நான் சொல்ல நினச்சேன், அதுக்குள்ள நீங்களே வந்துட்டிங்க" என்று சொல்ல, "அதெல்லாம் இருக்கட்டும் மச்சான், கூட்டி வர முதல் என்னட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே" என்று கேட்டார்...

அவரை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே அங்கே வந்து அமர்ந்த ஜனார்த்தனனோ, "சொல்லி இருந்தா போல, உடனே உங்கட வீட்டுக்கு கூட்டிட்டு போயிருப்பீங்க பாருங்க" என்றான்...

புருஷோத்தமனுக்கு கடுப்பாகி விட்டது...

"அது என்ட மகள் எனக்கு என்ன செய்யோணும் எண்டு தெரியும்" என்றார்.

இருவருக்கும் தான் ஒத்து போகாதே.

"ஓம் ஓம் தெரிஞ்சு தான் தனியா விட்டுட்டு வந்தீங்க போல" என்றான் கிண்டலாக...

அவன் கிண்டல் தொனி கனகசிங்கத்துக்கு சரியாக படவில்லை.

"கொஞ்சம் மரியாதையா கதை ஜனா" என்றார்.

ஜனார்த்தனன் எதுவும் பேசவில்லை...

பெருமூச்சுடன் புருஷோத்தமனை பார்க்க, "இவன்ட மரியாதை எல்லாம் நான் எதிர்பார்க்கல மச்சான்... இங்க அவளை வச்சு கொள்ளுறது நல்லா இருக்காது, நான் கூட்டிட்டு போறேன்" என்றான்.

"என்ட பொண்டாட்டியை இங்க வச்சு கொள்ளாம எங்க வச்சு கொள்ளுறது?" என்று கொஞ்சமும் பயமே இல்லாமல் கேட்டான்.

இளஞ்செழியனுக்கு இந்த விஷயம் தெரியாதே.

"பொண்டாட்டியா இது எப்ப?" என்று அவன் அதிர, "ம்ம் உனக்கு அண்ணி" என்றான்.

"என்ன கதைச்சிட்டு இருக்கா? அவளை உனக்கு கல்யாணம் கட்டி தாற எண்ணம் எல்லாம் எனக்கு இல்ல" என்றார்.

"உங்கட எண்ணத்தை யாரு இங்க கேட்டா?" என்று எகத்தாளமாக அவனிடம் இருந்து பதில் வந்தது...

"அவள் என் ட மகள்" என்றார்.

"இத ஊர் முன்னால உங்களால சொல்ல ஏலுமா? ஆனா கல்யாணம் கட்டுனா என்ட பொண்டாட்டி எண்டு கையை பிடிச்சு கூட்டிட்டு போவன்" என்றான்.

கனகசிங்கமோ, "வார்த்தையை விடாம சும்மா இரு ஜனா" என்று சொல்ல, அவன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டே, அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

புருஷோத்தமனோ, "எனக்கு சொல்ல ஏலாது எண்டு யார் சொன்னது? செத்த வீட்ல எண்ட பிள்ளை எண்டு ஊருக்கு தெரியும் தானே" என்றார்.

"ஏன் என்டா அந்த ஊர்ல உங்களை பெருசா யாருக்கும் தெரியாது, நிறைய வேணாம், மாமிக்கு முன்னால, இது என்ட மகள் எண்டு கையை பிடிச்சு சொல்லி காட்டுங்க பார்ப்பம்" என்றான்.

"ஜனா கொஞ்சம் சும்மா இரு" என்றார் கனகசிங்கம்.

"விடுங்க மச்சான், இவனுக்கு மரியாதை சுட்டு போட்டாலும் வராது" என்று சொன்ன புருஷோத்தமன், கடுப்பில் நான்கு வார்த்தைகள் சேர்த்து அவனுக்கு திட்டியும் இருந்தார்.

அவன் எதுவும் பேசவில்லை.. நாடியை நீவியபடி அவரையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவனது எகத்தாளமான தோரணையை முறைத்து விட்டு, கனசிங்கத்தை பார்த்த புருஷோத்தமனோ, "மச்சான் இவன் பண்ணுறது கொஞ்சமும் நல்லா இல்லை... அவளை நான் இவளுக்கு கட்டி கொடுக்கவே மாட்டேன். இவனுட்ட அவ சிக்கி சீரழிய வேணாம். அவள்ட்ட என்ன கதை எல்லாம் கதைச்சுப் போட்டு எந்த மூஞ்சை வச்சுட்டு அவளுக்கு தாலி கட்ட போறானாம்." என்று பேசி முடிக்கவும் ஜனார்த்தனன் குரலை செருமிக் கொண்டே எழுந்து கொள்ளவும் நேரம் சரியாக இருந்தது...

அவன் வாயில் இருந்து வார்த்தைகள் வர முதலே, "ஜனா நான் கதைக்கிறேன் நீ இரு." என்றார் கனகசிங்கம். மகனின் வாயில் இருந்து வரும் வார்த்தைகளின் வீரியம் அவருக்கும் தெரியும் தானே. இவ்வளவு நேரமும் அவன் வாயில் இருந்து அம்பு போல தானே வார்த்தைகள் வந்து கொண்டு இருந்தன.

"இது என்ட பிரச்சனை நான் தான் கதைக்கணும் , நான் என்ன குழந்தை பிள்ளையா??" என்று அலட்சியமாக கேட்டவன் விழிகள் புருஷோத்தமனில் படிய, "அவளை நான் தான் கட்டுவேன். இடைல உங்களால இதுல பிரச்சனை வந்தா உங்கட இன்னொரு பிள்ளை ட கல்யாணம் நடக்க விடவே மாட்டேன்." என்று சொன்னவன் இளஞ்செழியனை பார்த்தான்.

'இவன் என்ன நம்மள வம்புக்கு இழுக்கிறான்' என்று அவன் நினைக்க முதலே, "என்னை மீறி திவ்யாட கழுத்தில நீ தாலி கட்டிடுவியா என்ன??" என்றான் மிரட்டலாக.

இளஞ்செழியனுக்கு குப்பென்று வியர்த்தது... சொன்னால் செய்து விட்டு தானே மறுவேலை பார்ப்பான் அவன்.

"டேய் அதெல்லாம் இப்ப எதுக்கு?" என்று அவன் கேட்க, அவனை ஆழ்ந்து பார்த்தவன், "என்ட கல்யாணம் நடக்கல எண்டா எவனையும் வாழ விட மாட்டேன்" என்று சபை நடுவே ஒற்றை விரலை நீட்டி மிரட்டி விட்டு அறைக்குள் சென்றான்.

அவன் பேச்சுக்கு எதிரே மூச்சு விட கூட அங்கே யாருக்கும் தைரியம் இருக்கவில்லை.

'பையன பெக்க சொன்னா பொறுக்கிய பெத்து வச்சு இருக்கா' என்று மனதுக்குள் தான் கனகசிங்கத்தினால் திட்ட முடிந்தது.

அவனை வெறித்து பார்த்த புருஷோத்தமனோ, "இவன் முடிவு எடுத்தா சரியா? அவள் இவனை கட்டிக்கொள்ள ஓம் எண்டு சொல்லோணுமே" என்றார்.

கனகசிங்கமோ, "பின்னேரம் வாங்க மச்சான், அவளும் வந்திருவாள், நாம கதைச்சு ஒரு முடிவு எடுப்பம்... அவள் இல்லாம முடிவு எடுக்கிறது சரியா வராது" என்று சொல்ல, அவருமே, "சரி அவள் வரட்டும், பிறகு கதைச்சு கொள்ளுறேன்" என்று கடுப்பாக சொல்லி விட்டு தான் சென்றார்.
 
Super and waiting for next epi sis
 
Top