ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பன்னீரைத் தூவும் மழை-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 35

ஒரு வாரம் சென்று அவன் வந்ததும், நடந்தவற்றை கூறினாள். அவனுக்கு அவள் தேவ் வேண்டாம் என்று சொன்னது அவ்ளோ சந்தோசம்.

“சரி, கல்யாணத்தை நிறுத்திடு ஐஷு. நீ வேண்டாம்னு சொன்னா வீட்ல கேப்பாங்கல”

“கேப்பாங்க தான். அவன் தானே பேசுனான். அவனை நிறுத்த சொல்லி பேசுனேன். அவன் முடியாதுனு சொல்லிட்டான் அத்தான். ஏன் வீட்ல எப்படி சொல்றதுனும் தெரில. இன்னும் ரெண்டு வாரம் தன் இருக்கு அத்தான்”

“நீ உன் அப்பாகிட்ட சொல்றது தான் நல்லது. உன் அப்பா நீ என்ன சொன்னாலும் கேப்பாருல”

“ஹ்ம்ம் சரி. நா பேசுறன்”

“ஐஷு, உனக்கு அவனை பிடிக்கல சரி. கல்யாணமும் வேண்டாம்னு சொல்ல போற. எல்லாம் சரி. அடுத்து என்ன. நா வருவேனா?”

“அத்தான் எனக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு. நா ஆல்ரெடி ஒருத்தன லவ் பண்ணவ. எப்படி உடனேனு புரில”

“இது போதும் ஐஷு. நீங்க ரெண்டு பேரும் பண்ணதுக்கு பெரு லவ்ஆஹ்.. நா சொல்லி தரேன் லவ்னா என்னனு” என்று கூறி அவளை நெருங்கி அவள் இதழோடு இவன் இதழ் பொருத்தினான்.
சிறிது தயக்கம் இருந்தாலும், அவன் குடுத்த முத்ததில் திளைத்துவிட்டாள். முதல் முறையாக இன்னோருத்தர் குடுக்கும் முத்தத்தை அனுபவிக்கிறாள்.. பெற படுவதும் சுகம் என்று உணர்ந்தாள்.

சிறிது மூச்சுக்கு தவித்தாள். உடனே அவன் விடுவித்தான். பின், சிறுது நிமிடம் விட்டு மறுபடியும் அவள் இதழ்களை கொய்தான். அவள் ஒரு மோன நிலைக்கு சென்று விட்டாள். “லவ் யூ ஹனி” ஹுஸ்கி வாய்சில் அவள் காதுக்குள் மீசை உரச கூறினான். பின், அணைத்து கொண்டான். அவனை கொள்ளை கொள்ளையாக பிடித்தது.

நீ கல்யாணத்த நிறுத்த ட்ரை பண்ணு ஐஷு, மிச்சத்தை னா பாத்துக்கிறேன். உன்னால நிறுத்த முடியும், நமக்கு இன்னும் கல்யாண நாள் வரைக்கும் நேரம் இருக்கு. ரொம்ப மனதை போட்டு குழப்பிக்காத சரியா என நெற்றியில் முட்டினான்.
பின், கலைந்து இருந்த தங்களை சீர் படுத்தி ஆபீஸ் விட்டு வெளியே வந்தார்கள்.

எப்படி பேச என்று யோசித்து யோசித்து அவள் ஒன்றும் பண்ண வில்லை. தேவ் கிட்டயும் பேச வில்லை. அந்த வாரமும் அப்டியே சென்று விடவே. அப்புறம் தான் பயம் பிடித்தது. எப்படி நிறுத்த போறோம், என்ன பண்ண போறோம் என்கிற பயம்.. அந்த வார இறுதியில் மதுரைக்கு கிளம்புவதாக இருந்தது. அதற்கு முன் வினோத்திடம் பேச வந்தாள்.

“அத்தான், என்னால நிறுத்த முடில. ஆனா கண்டிப்பா கல்யாணத்த நிறுத்த தான் போறேன். நா என்ன பண்ணாலும் ஏன் கூட நிப்பீங்களா? நா கல்யாணத்துக்கு அன்னைக்கே நிறுத்த யோசனை வச்சுருக்கேன். அன்னிக்கே உங்கள என்கூட கல்யாண பண்ண சொன்னாலும் பண்ணுவீங்களா?”

“நா ஏற்கனவே சொன்னது தான் ஐஷு, நீ பண்ணாலும் கூட நிற்பேன்.”

“இது போதும். அவன் பண்ணதுக்கும் சேர்த்து வச்சு அவனை பழி வாங்கலாம்னு இருக்கேன்.

சரி அத்தான் நான் கிளம்புறேன். நாம மதுரைல மீட் பண்ணுவோம்” என கிளம்பிவிட்டாள்.

அவள் திருமாங்கல்யம் வாங்கவும் போக வில்லை. எங்கேஜ்மெண்ட் ரிங் வாங்கவும் செல்லவில்லை. திருமண பட்டு எடுக்கவும் செல்லவில்லை. ஏதாவது காரணம் சொல்லி தவிர்த்து விட்டாள்.
வெள்ளிக்கிழமை எங்கேஜ்மெண்ட், சனிக்கிழமை மாலை கல்யாணம் என நிர்ணயத்து இருந்தார்கள்.

வியாழகிழமை இரவு, அவள் அப்பாவிடம் போய் நின்றாள்.

“அப்பா, எனக்கு இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லை”
இவள் இப்டி சொன்னதும் என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றார்.

“ஏன் ஐஷு.. இப்போ வந்து இப்டி சொல்ற. கல்யாண பத்திரிகை அடிச்சாச்சு. எல்லாருக்கும் கூப்டாச்சு”

“இரண்டு வாரம் உங்கள்ட சொல்ல நினைச்சு முடில. இப்போ இந்த திருமணம் அதுவும் தேவ்வோட நினைச்சு கூட பார்க்க முடிலப்பா”
“இப்போ நிறுத்துனா, ரொம்ப பெரிய அவமானம் ஐஸ்வர்யா”

“அப்பா, தேவ் கூட நடக்குறது தான் நிக்குமே தவிர, கல்யாணம் நிக்காது”

நீ என்ன சொல்ற என அவளை எர்றேடுத்து பார்த்தார்.
“அப்பா, அவன் எனக்கு தெரியாமயே உங்கள்ட பெண் கேட்டான். கமிட் ஆகிகிட்டோம்னு இவ்ளோ நாள் போச்சு. அவனை எனக்கு புடிக்காதுப்பா. என்னைய கட்டாய படுத்தி கல்யாணம் பண்ண நினைக்குறான்”

“சரி, இவ்ளோ வருஷம் இருந்துச்சேம்மா. இப்போ வந்து நிப்பாட்ட சொல்ற.. ஏன் மானம் மரியாதை என்ன ஆகுறது. நீ விரும்புறேனு ஒரே காரணத்துக்காக மட்டும் தான் நான் எந்த கேள்வியும் கேக்காம சம்மதிச்சேன். இப்போவும் உன் ஆட்டத்துக்கு ஆட சொல்றியா”

“இல்லை அப்பா, உங்களுக்கு எப்படி சொல்றது. நீங்க தேவ் கூட கல்யாணம் பண்ணி வச்சா எனக்கு வம்சமே இல்லாம போய்டும். இதுக்கு மேலே என்ன சொல்றது. பாத்ததுக்கு அவன் நல்லவும் சம்பாதிக்கல” எப்படி பேசுனா அவரு விழுவார் என்று அறிந்தவள் அதனை நோக்கியே குறியை எய்தாள்..

இவள் இப்டி சொன்னதும் கொஞ்சம் நிதாணித்தார்.

“சரி என்ன பண்ணலாம்னு இருக்க”

“வினோத் அத்தானுக்கு ஏன் மேல விருப்பம். எனக்கும் தான் அப்பா. தேவ் விட எல்லாத்துலயும் மேல்ப்பா வினோத். கல்யாணத்து அன்னைக்கு, விருப்பமானு பாதர் கேட்கும் போது சொல்ல போறேன்.. ஏன் கூட துணையா மட்டும் நில்லுங்க. ப்ளீஸ் ப்பா.” கிட்ட தட்ட கெஞ்சினாள்

எங்கிருந்து தான் சோபனா வந்தாரோ.. அவள் முதுகிலே நாலு அடி அடித்தார். ஏன்டி தேவா என்ன பண்ணான்.. எதுக்கு அவனை பழி வாங்க நினைக்குற. உன் கண்ணுல பழி வெறி தெரிதுடி. நீ கல்யாணத்த நிறுத்த கூடாது.

“முடியாதும்மா, அவன் ஒரு இம்போட்டென்ட். உங்க அண்ணன் பையன தானே கல்யாணம் பண்ண இப்போ நினைக்கிறன். அதுக்கு சந்தோசம் தான் படனும்.”

அவள் இப்டி பேசவும் அவளை அடிக்க மறுபடியும் பாய்ந்தார்..
சோபனாவை தடுத்து அவர் கன்னத்தில் ஒரு அடி குடுத்தார் ராபர்ட். இன்னொரு அடி அவள் மேலே பட கூடாது சொல்லிட்டேன்.. தொலைச்சிடுவேன். நா ஏன் மகள் சந்தோஷத்திற்காக என்னவேணும் என்றாலும் செய்வேன்.

“ஐஷு, உன் இஷ்டம் போலவே பண்ணு. எது வந்தாலும் பார்த்துக்கலாம்”

“ஏங்க நீங்களும் இப்டி பண்ட்ரீங்க? ஜெயா அண்ணிகிட்ட சொல்லி நிறுத்தலாம். இப்டி அவமானப் படுத்துறது பாவம்.”

“அந்த குடும்பத்துக்கு பாவம் பாக்குறதா இல்லை. ஒண்ணும் இல்லனாலும் சில எடுத்துல என்னைய அவமான படுத்திருக்காங்க.”

“அது அவமானம் இல்லைங்க. நீங்க தவறு செய்ததை சுட்டி கட்டினாங்க.”

“நீ கொஞ்சம் நிறுத்திரியா உன் சொற்பொழிவை”

“ஐஷு, நா வினோத் கிட்ட பேசணும். அவன் குடும்பத்துகிட்டயும் பேசணும்” என்று வினோத் மற்றும் அவன் குடும்பத்திடம் பேசி சம்மதம் வாங்கினார். அவர்களுக்கு சிறிது வருத்தம் இருந்தது தான். தங்கள் ஒரே பையனுக்கு பத்திரிகை அடித்து, ஊரெல்லாம் அழைத்து பெரிதாக கல்யாணம் வைக்க விரும்பினார்கள்.

அதற்கும் ராபர்ட், “உங்கள் வருத்தம் புரிகிறது. கல்யாணம் மட்டும் முடியட்டும். பெருசா வரவேற்பு வைக்கலாம்” என்று அவர்களை தேற்றினார்..

அப்டியே அந்த நாள் சென்று, அடுத்த நாள் வந்தது.

எங்கேஜ்மெண்ட்டும் முடிந்தது. அன்றைய இரவு ஜெயாவை பார்த்தார் சோபனா.

“அண்ணி, ஒரு நிமிடம். ஐஷு கல்யாணத்த நிறுத்திருவாளோனு பயமா இருக்கு”

“அண்ணி, அவங்க லவ் பண்ணவங்க.. அப்டிலான் பயப்படாதீங்க” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அவரை மரகதம் கூப்பிடவே. இதோ வரேன் என்று சென்றவர் தான் பின் பார்க்க வாய்ப்பும் அமையவில்லை.

அடுத்த நாள் காலை. தேவ் ரொம்ப சந்தோசமாக இருந்தான். ஏதோ சாதித்த உணர்வு. உள்ளம் பொங்கியது. அவன் விரைவாக தயாராகி சர்ச்குள் சென்றான். ஐஷுவும் தயாராகி ஆலயத்துக்குள் வந்தாள்.
பாதர், “இந்த திருமணத்தில் இவர்கள் இருவரும் சேருவதற்கு யாருக்காவது விருப்பம் இல்லை என்றால் நியாயமான காரணத்தை தெரிவிக்கலாம் என்று சிறிது நேரம் கொடுக்கவும் இவள் கையை உயர்தினாள்.

இவள் கையை உயர்த்தவும் பயங்கர சல சலப்பு எழுந்தது. பாதர், அவள் பேசுவதற்கு அனுமதி குடுத்தார்.

குடுத்ததும், “எனக்கு இவரை திருமணம் செய்ய விருப்பம் இல்லை.”
பாதர், “நியாயமான காரணம்”

“ஹி ஈஸ் இம்போட்டென்ட். ஐ ஆஸ்க்டு ஹிம் டு ஸ்டாப் தே மரேஜ். பட் ஹி ரெப்பியூஸ்ட் அண்ட் போர்ஸ்ட் மீ. ஐ லவ் மை அத்தான் வினோத் ஐ வான்ன மார்ரி ஹிம்.” என்று அவள் சொன்னது ஏற்புடையதாய் இருந்தது.

உடனே பாதர் அவர்கள், “இந்த பெண்ணின் வார்த்தையை கொண்டு, இந்த திருமணம் நடக்காது என்று அறிவிக்கிறேன். மேலும், ஒரு பெண்னை கட்டாய படுத்த கூடாது என்றும் அறிவுறுத்துகுறேன்”

அதற்குள், ராபர்ட் பாதர் பக்கத்தில் போய் கொஞ்சம் பேச வேண்டும் என்று கூறி மேலும், என் மகள் விரும்புகிற பொண்ணை திருமணம் செய்து வைக்கஇப்பொழுதே விரும்புகிறேன்”

என்று சொல்லும் போது முதலில் மறுத்தார். பின், ஒத்துழைத்தார்.

உடனடியாக, வினோத்திற்கும் ஐஷுவிற்கும் திருமணம் முடிந்தது.

தேவ் மனநிலையோ சொல்ல முடியாத நிலை. கூனி குறிகி நின்றிருந்தான். அவள் இம்போர்ட்டண்ட் என்று சொன்னதை அவன் மனதை காய படுத்தியது. இப்டி ஒன்றை அவன் வாழ் நாளில் சந்தித்தது இல்லை. அவ்ளோ மன வருத்தம். அவன் அவமான பட்டதும் இல்லாமல் அவன் குடும்பமும் சேர்ந்து அவமானப்பட்டதும் கூடவே வலியை அதிக படுத்தியது.

எதுவும் புரியாமல், அவளை தேடவில்லை என்ற காரணத்திற்காக இம்போர்ட்டண்ட் என்று சொன்னது ரணமாக்கியது. உடல் தேவை, பணத் தேவை தான் இந்த பெண்களுக்கு பெருசா என்று தோன்ற செய்தது. எவ்ளோ முயன்றும் மனதை சமன் படுத்த இயலவில்லை.
ஜெயாவும் அழுது கொண்டிருந்தார். உடனே அவன் குடும்பத்தை அங்கே இருந்து அழைத்து வீட்டுக்கு சென்றான்.

பெரிய அவமானம் தான். ஒரு வாரம் எங்கயும் செல்லவில்லை. அவன் ஊரில் இருந்தமையால், துக்கம் விசாரிக்கிற மாதிரி மாத்தி மாத்தி கேட்டு கொண்டே இருந்தார்கள். இரு வாரம் சென்றதும், வெளியே வந்தான்.. வந்ததும் சென்னைக்கே சென்றான்.
வெறியாக உழைத்தான். அதன் பின், அவன் தொட்டதெல்லாம் ஹிட் தான் என்கிற நிலை. எவ்ளோ பெரிய ரிஸ்க்க்கும் அவன் தயங்கவில்லை. அடுத்த ஐந்து வருடத்தில் பெரிய கார்பொரேட் கம்பெனியாக உயர்ந்தது.

இப்படியாக அவன் மனதில் பழைய நினைவலைகள் சுழன்றது.
 
Status
Not open for further replies.
Top