ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஒரு மழையோடு தான் வெயில் சேர்ந்ததே

Ammu ramu

New member
Wonderland writer
பகுதி 4
மித்ரன் சென்று., சிறிது நேரம் கடந்திருக்க.. இன்னும் அதே நிலையில் அமர்ந்திருந்தாள் நிவேதா.
"கடவுளே, ஒரு சின்ன விஷயத்துக்கே இப்படி கோபப்பட்டுட்டு போறாரே.. ஒருவேளை, குழந்தை விஷயத்தில், ஏதாவது ஏடாகூடமா பண்ணினேனா.. என் கதி என்ன ஆகுமோ தெரியலையே" என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அதேநேரம், உள்ளே இருந்த சிவகாமியின் மனதிலும்., அதே எண்ணம்தான் ஓடிக்கொண்டிருந்தது.
உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை பார்த்து., "உங்க அப்பாவுக்கு நீ அழுதாலே பிடிக்காது. ஆனா நீ, யார்கிட்ட போனாலும் அழுதுகிட்டே இருப்ப.. உங்க ரெண்டு பேர்கிட்டயும் மாட்டிகிட்டு., அந்த பொண்ணு என்ன பாடுபட போகுதோ தெரியலையே" என குழந்தையிடம் பேசிக் கொண்டிருந்தார் சிவகாமி.
அவர் பேசியதை உணர்ந்தானோ, என்னவோ.. உறங்கிக்கொண்டிருந்த குழந்தை., திடீரென எழுந்து, வீரிட்டு அழ ஆரம்பித்தான்.
உடனே..‌ "சொல்லி வாயை மூடலை, அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டியா டா" என்றவர், குழந்தையை கையில் எடுத்து சமாதானப்படுத்தினார்.
அவரின் சமாதானத்தில் குழந்தை சற்று அழுகையை குறைத்திருக்க...
சிவகாமி அவனிடம்... "உன்னை கவனிச்சுக்க புதுசா ஒரு பொண்ணு வந்திருக்கு கண்ணா.. இப்போ நாம போயி அவங்கள பாப்போமாம், நீ அழுகாம இருப்பியாம்".. என்று பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்.
ஆனால், அப்போதும் குழந்தை அழுவதை நிறுத்தவே இல்லை.
உடனே.. குழந்தையை பார்த்து பெருமூச்சு விட்ட சிவகாமி.. "எப்படியும், நீ அழறதை நிறுத்த போறது இல்லை" என்று சலிப்பாக கூறியவர், குழந்தையை தூக்கிக்கொண்டு அறையிலிருந்து வெளியேறினார்.
அவர் வெளியே வந்ததும்.. இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அந்த மிகப்பெரிய பங்களாவில், குழந்தையின் அழுகுரல், சத்தமாக கேட்டது.
குழந்தையையும், அதன் அழுகையையும் பார்த்து அதிர்ந்த நிவேதா அப்படியே மயங்கி சரிய..
அப்போது வீட்டிற்கு வந்த மித்ரன்., குழந்தையின் அழுகுரல் கேட்டு, சரியாக அங்கே வர..
குழந்தையை கையில் வைத்திருந்த சிவகாமி, அவள் மயங்குவதை பார்த்து.. "மித்ரா, அந்த பொண்ண பிடிடா" என்று கூச்சிலிட...
சிவகாமி கூறியதால், உடனே அவளை நெருங்கிய மித்ரன், நிவேதாவை தாங்கிப் பிடித்தான்.
அப்படியே அவளை அருகில் இருந்த நீளமான சோபாவில் படுக்க வைத்தவன்.. "இடியட்.. இவ இங்க வேலை செய்ய வந்தாள, இல்லை என்னை வேலை வாங்க வந்தாள" என்று கத்தியவன்., தன் அத்தையிடம்.. "இவளுக்கு மயக்கம் தெளிந்ததும்.. வேலைக்கு வேணாம்னு சொல்லி அனுப்பிடுங்க" என்றான் கோபமாக.
"மித்ரா, ஏன் இப்போ இவ்வளவு கோவப்படுற. அவ மொதல்ல கண்ண திறக்கட்டும், அப்றம் பேசிக்கலாம்" என்றார் சிவகாமி.
"அத்தை, என்ன பேச போறீங்க.. குழந்தையை பார்த்துக்கதான் இவளை நான் அப்பாயின் பண்ணேன். ஆனா, இவளை பார்த்துக்கவே ஒரு ஆள் வேணும் போல இருக்கு" கோபம் குறையாமல் கூறியவனிடம்..
"இன்னொரு முறை இப்படி நடந்தா, நீ சொல்ற மாதிரி பண்ணலாம். இப்போ அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு பார்க்கலாம்" என்ற சிவகாமியை.. உக்கிரமாக பார்த்தான் மித்ரன்.
அவனின் பார்வை உணர்ந்த சிவகாமி, "முதலில் இவனை இங்கேயிருந்து அனுப்ப வேண்டும்" என்று எண்ணியவர்.. "மித்ரா, நீ மீட்டிங் போனியே., என்ன ஆச்சு.. ஏன் உடனே வந்துட்ட" என்று கேட்க..
"மீட்டிங்க ஒன் ஹவர் போஸ்ட் போன் பண்ணி இருக்காங்க., அதனால தான் வீட்டுக்கு வந்தேன்" என்றான் அவன்.
"சரி, சரி.. குழந்தை கொஞ்ச நேரம் உன் ரூம்ல வச்சிரு. நான் இந்த பொண்ணை பார்க்கிறேன்" என்று குழந்தையை அவனிடம் கொடுத்து., அவனை அறைக்கு அனுப்பி இருந்தார் சிவகாமி.
அவன் சென்றதும், சிவகாமி.. அவள் முகத்தில் தண்ணீரை தெளிக்க..
மெல்ல கண்களை திறந்த நிவேதா.. சிவகாமியை பார்த்ததும், இருக்கையில் இருந்து எழ.. "ஏன் இப்போ எழுந்த.. உட்காருமா" என்றார் மென்மையாக.
ஆனால் அமராமல் நின்ற நிவேதா, "மன்னிச்சிருங்கமா.. உங்களை தொந்தரவு பண்ணிட்டேன்" என்றாள் சிவகாமியிடம்.
"பரவால்லை", என்ற சிவகாமி.. "என்னாச்சும்மா., உடம்பு ஏதும் சரியில்லையா. திடீர்னு மயங்கி விழுந்துட்டே" என கேட்க..
"இல்லை ம்மா, காலையில சாப்பிடல.. அதனால தான் மயக்கம் வந்திருக்கும்னு நினைக்கிறேன்" என்றாள் நிவேதா.
"ஏன் சாப்பிடலை., ஏற்கனவே நீ ரொம்ப ஒல்லியா இருக்க, நேரத்துக்கு சாப்பிட வேண்டியதுதானே" என்றார் சிவகாமி.
"பசியில்லை, அதனால சாப்பிடலை" என நிவேதா கூற.. வீட்டின் பணிப்பெண்ணை அழைத்த சிவகாமி, "இந்த பொண்ணுக்கு டிபன் கொண்டு வா" என்று கூறினார்.
"இல்லம்மா வேண்டாம்" என்று அவள் அவசரமாக கூற..
"ஏன், மறுபடியும் நீ மயக்கம் போட்டு விழவா" என்றவர், "ஒழுங்கா சாப்பிடு" என அதட்ட, பணிப்பெண் கொண்டுவந்த உணவை, அமைதியாக உண்டாள் நிவேதா.
அவள் உண்டு முடித்ததும்., சிவகாமி நிவியிடம்.. "நீ மயக்கம் போட்டு விழுந்ததாலயே உன்னை வேலைக்கு வேண்டாம்னு சொல்லிட்டாரு உங்க முதலாளி" என்றார்.
"அய்யய்யோ" என்று பதறியவளின்.. கண்களில் கண்ணீர் குளம் கட்டியிருக்க.. "நான் பயந்த மாதிரியே நடந்துருச்சி" என்றாள் கலங்கிய குரலில்.
"முதலில் அழுகிறதை நிறுத்து" என்ற சிவகாமி., "என்ன நினைச்சு நீ பயந்து அதை சொல்லு" என்றார்.
அவர் கூறியதும் கண்களை துடைத்துக் கொண்ட நிவேதா.. "அது, அது என தடுமாற.. இப்போ எதுக்கு இவ்வளவு தடுமாடுற".. என்றார் சிவகாமி சாதாரணமாக.
"இல்லைம்மா, கொஞ்ச நேரம் முன்னாடி, சார் ரொம்ப கோவமா பேசிட்டு போனாரு., அதை நினைச்சு தான் பயந்துட்டு இருந்தேன்" என்றாள் அவள் மெல்லிய குரலில்.
"அவன் அப்படித்தான்.. சின்ன, சின்ன விஷயத்திற்கும்., டக்குனு கோவப்பட்டுருவான். ஆனா வேலையில சரியா இருந்தா, அவன் கோபத்தில் இருந்து தப்பிச்சுக்கலாம்" என்றார் சிவகாமி.
"சரிங்கம்மா, அப்போ நான் போறேன்" என்று நிவேதா கூற..
"எங்க போற" என்றார் அவர்.
"நீங்கதானே சொன்னீங்க, சார் என்னை வேலையை விட்டு அனுப்ப சொல்லிட்டாருன்னு. அதான் போறேன்" என்றாள் நிவேதா சோகமாக.
"சார் அனுப்ப சொன்னார்தான். ஆனா, நான் உன்னை போக சொல்லலையே" என்ற சிவகாமியை.. குழப்பமாக பார்த்தாள் நிவேதா.
அவள் குழப்பமான முகத்தைப் பார்த்த சிவகாமி.. "என்ன முழிக்கிற அவன் அப்படி சொன்னானு தான் சொன்னேன்.. நான் உன்கிட்ட வேலைக்கு வர வேண்டாம்னு சொன்னேனா" என்றவர்..
"இனிமே ஒழுங்கா சாப்பிட்டு வேலைக்கு வர. சாப்பிடாம வந்து, இன்னொரு தடவை மயக்கம் போட்டு விழுந்த., நானே உன்னை வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லிடுவேன்" என்று எச்சரித்தார்.
அவரின் வார்த்தைகளில், உள்ளுக்குள் துள்ளி குதித்த நிவேதா.. "ரொம்ப நன்றி ம்மா, இனிமே இப்படி நடக்காம பாத்துக்குறேன்மா" என்றாள் மலர்ந்த முகமாக.
"ம்ம்ம், என்று புன்னகைத்த சிவகாமி.. இங்கேயே இரு, நான் போய் குழந்தையே வாங்கிட்டு வரேன்" என்றவர் மித்ரனின் அறையை நோக்கி சென்றிருந்தார்.
"கடவுளே, இந்த தடவை காப்பாத்திட்ட .. இனிமேலும் நீ தான் காப்பாத்தணும்" என்று வேண்டிக்கொண்டாள் நிவேதா.
இவளின் வேண்டுதலை கண்டு.. "ஏன்மா, ஏன்.. ஏன் என்னை இப்படி பாடாய் படுத்தற" என்று எண்ணிக்கொண்டார் கடவுள்.
மித்ரனின் அறைக்குச் சென்ற சிவகாமி, கதவை தட்டிவிட்டு உள்ளே செல்ல.. குழந்தையை படுக்கையில் கிடத்தி, தட்டிக்கொடுத்துக் கொண்டு அருகில் அமர்ந்திருந்தான் மித்ரன்.
"மித்ரா குழந்தையை கொடுப்பா" என்று சிவகாமி கேட்க..
"அவளுக்கு செய்ய வேண்டிய சேவகம் எல்லாம் செஞ்சு முடிச்சிட்டீங்களா" என்றான் மித்ரன் சூடாக.
"மித்ரா, அந்த பொண்ணு இன்னைக்கு தான் வேலைக்கு சேர்ந்திருக்கு. உடனே, அவளை வேலைக்கு வேண்டாம்னு சொல்றது தப்புபா. அதுவும் சாப்பிடாம மயங்கி விழுந்ததுக்கெல்லாம் வேலைக்கு வேண்டாம்னு சொல்லலாமா" என்றவர்., "வேலையில ஏதாவது தப்பு பண்ணா, கண்டிப்பா நீ சொல்ற மாதிரி., அந்த பொண்ணை வேலையிலிருந்து நிறுத்திடலாம் சரியா" என்று அவனை சமாளித்தவர், குழந்தையை தூக்கினார்.
அவரின் ஸ்பரிசத்தை உணர்ந்த குழந்தை, மீண்டும் அழ ஆரம்பிக்க.. "இவன் உன்னைத் தவிர, வேற யார்கிட்டயும் அழாமல் இருக்க மாட்டிக்கிறான் மித்ரா" எனக்கூற..
"அதுக்காக எல்லா நேரமும் நானே இவனை வைச்சிருக்க முடியுமா. அதான் சம்பளத்துக்கு ஒருத்திய அப்பாயின் பண்ணி இருக்கேனே. அவகிட்ட குழந்தையை அழாமல் பாத்துக்க சொல்லுங்க" என்றான் திமிராக.
"இவன் என்கிட்ட இருந்தாலே, அழாமல் இருக்க மாட்டான். அந்த பொண்ணுகிட்ட மட்டும் எப்படி அமைதியா இருப்பான்" என்று அவர் கேட்க..
"அதெல்லாம் எனக்கு தெரியாது., அவளோட முக்கியமான வேலை, குழந்தையை அழாமல் பார்த்துகிறது" என்றான் அலட்சியமாக.
"உன்கிட்ட இதெல்லாம் சொன்னேன் பாரு, என்னை சொல்லணும்" என்று தலையில் அடித்துக் கொண்டவர்.. "நீ எப்போ மீட்டிங் போகணும்" என்று கேட்க..
"இன்னும் ஆஃப்னார்ல கிளம்பிடுவேன்" என்றான் மித்ரன்.
"அப்ப டிபன் எடுத்து வைக்க சொல்லவா" என்றார் அவர்.
"சரி" என்று அவன் பதில் அளிக்க.. அழுது கொண்டிருந்த குழந்தையை, கீழே தூக்கி சென்றார் சிவகாமி.
சிவகாமி குழந்தையுடன் வருவதை பார்த்து, நிவேதாவின் யோசனை எங்கோ செல்ல.. தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக நின்றிருந்தாள்.
"நிவேதா, குழந்தை அழுதுகிட்டே இருக்கான். நான் போய் பால் கலந்து கொண்டு வரச் சொல்றேன், நீ இவனை கொஞ்ச நேரம் பாத்துக்கோமா" என்று அவளிடம் குழந்தையை நீட்டினார் சிவகாமி.
குழந்தையை கையில் வாங்கிய நிவேதாவிற்கு, உடலெல்லாம் சிலிர்த்து அடங்க., கெட்டியாக பிடித்திக் கொண்டாள் அந்த சினஞ்சிறு மகவை.
இவ்வளவு நேரம் சிணுங்கி கொண்டிருந்த குழந்தை, நிவேதாவின் கைகளில் வந்ததும் அழுகையை நிறுத்திக் கொள்ள.. அதைப் பார்த்த சிவகாமிக்கு ஆச்சரியமாக இருந்தது.
"என்ன அதிசயம்! யார் தூக்கினாலும் சிணிங்கி கிட்டே இருப்பான், நீ தூக்கின உடனே அமைதி ஆயிட்டான்" என்று சிவகாமி வியந்து பேசிக் கொண்டிருக்க.. உணவு உண்ண கீழே இறங்கி வந்திருந்தான் மித்ரன்.
நிவேதா குழந்தையை வைத்திருப்பதை பார்த்தவன்.. குழந்தை அழாமல் இருப்பதையும் கவனித்தான்.
ஆனால், அதைபற்றி எதுவும் கேட்காமல்.. "அத்தை டிபன் ரெடியா" என்றான் சிவகாமியிடம்.
அப்போதுதான் மித்ரன் அங்கு வந்ததையையே பார்த்த சிவகாமி, அவன் கேட்டதை கவனிக்காமல்..
"மித்ரா, இங்க பார்த்தியா உன் மகனை, அதிசயமா அழாமல் இருக்கான்" என்றார்.
"ம்ம்ம்" என்று அழுத்தமாக கூறியவனை பார்த்தவர்.. "அதுதானே, உன்கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்" என எண்ணிக் கொண்டு, குழந்தைக்கு பால் கொண்டு வருமாறு பணிப்பெண்ணிடம் கூறியவர், மித்ரனுக்கும் காலை உணவை பரிமாறுமாற சொன்னார்.
குழந்தைக்கு பால் கொடுத்த நிவேதா.. அவனை தோளில் போட்டு தட்டிக்கொடுக்க, அப்படியே உறங்கியிருந்தான் மித்ரனின் புதல்வன்.
இதை அனைத்தையும் பார்க்காதது போல் பார்த்தக் கொண்டிருந்த மித்ரன், உண்டு முடித்து.. சிவகாமியிடம் கூறிவிட்டு., மீட்டிங்ற்கு புறப்பட்டான்.
அவன் ஏறி அமர்ந்ததும் அந்த BMW 7 series மின்னல் வேகத்தில் சீற.. மித்ரனோ, நிவேதாவிடம் குழந்தை அழாமல் உறங்கியதை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான்.
தொடரும்....
 

Attachments

  • IMG_20260109_232112.jpg
    IMG_20260109_232112.jpg
    731.8 KB · Views: 0
Top