பகுதி 6
பகுதி 6
தி மித்ரன் ராயல் என்று, பொன்னிற எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பெயர் பலகையுடன், பிரம்மாண்டமாக நிமிர்ந்து நின்றது, அந்த ஏழு அடுக்குகளைக் கொண்ட பைவ் ஸ்டார் ஹோட்டல்.
அந்த ஆடம்பர மாளிகை முன்., மின்னல் வேகத்தில் வந்து நின்றது மித்ரனின் BMW 7 series.
வாகனத்திலிருந்து இறங்கியவன், கம்பீரமாக ஹோட்டலுக்குள் நுழைய., அனைத்து பணியாளர்களும் அவனுக்கு வணக்கம் தெரிவித்தனர்.
ஆனால், அதையெல்லாம் கண்டு கொள்ளாத மித்ரன், வரவேற்பில் நின்றிருந்த பெண்ணிடம், "ஆஸ்க் தி மேனேஜர் டூ கம் டூ மை ரூம்" என்றவன், தனது அறை இருக்கும் மூன்றாம் தளத்திற்கு, எஸ்கலேட்டரில் சென்றிருந்தான்.
அவன் கூறிய தகவலை, அந்த பெண் மேனேஜரிடம் தெரியப்படுத்த, அடுத்த இரண்டாவது நிமிடம் முடியும் முன், மேனேஜர் மித்ரன் அறைக்கு வந்திருந்தார்.
மித்ரனின் முன் நின்றிந்த ஜெய்ராம்.. "குட் மார்னிங் சார்" என்று கூற.. ஒரு தலையசைப்பை மட்டும் அவனுக்கு கொடுத்தவன், "நெக்ஸ்ட் மன்த் எல்லா டேட்ஸ்க்கும் நம்ம பார்ட்டி ஹால் புக்காகிருக்கா" என கேட்டான்.
உடனே ஜெய்ராம்.. "ஆமாம் சார், எல்லா டேட்ஸ்மே ஃபுல் ஆயிடுச்சு சார்" என்றான்.
எதையோ யோசித்தவாரே, சில நிமிடம் அமைதியாக இருந்த மித்ரன் பின்.. "தென்.. நம்ம மதன் சென்னைக்கு போயிருந்தானே வந்துட்டானா" என்றான் அவரிடம்.
"எஸ் சார், நேத்து நைட்டே கோயம்புத்தூர் ரீச் ஆயிட்டாரு, எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்துடுவாரு சார்" என்று பதில் அளித்தவனிடம்.. "சரி, மதன் வந்தா, என்னை வந்து பார்க்க சொல்லுங்க" என்று கூறியிருந்தான் அவன்.
"ஓகே சார்" என்ற ஜெயராம் அங்கிருந்து வெளியேறினார்.
அவர் அங்கிருந்து வெளியேறியதும் மித்ரன், தன் மகனின் மாற்றத்தை பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.
இப்போதெல்லாம், பசி நேரத்தை தவிர தன் மகனின் சிணுங்கள் கேட்பதே இல்லை, எவ்வளவு பாந்தமாக தன் குழந்தை, நிவேதாவிடம் ஒட்டிக் கொள்கிறான் என்பதையும், நிவேதாவும் குழந்தையை பார்த்து கொள்வது தன் வேலை என்று எண்ணாமல், பெற்ற பிள்ளையை கவனிப்பது போல் அன்பாக கவனத்து கொள்வதையும், கண் கூடாக பார்த்திருந்தான்.
எப்படியோ குழந்தையை பற்றி, இனி கவலை கொள்ள தேவையில்லை என்று எண்ணியவன், நிவேதா கூறியதை பற்றியே சிந்திக்க தொடங்கினான்.
"ஏன் இவ்வளவு நாளா, அத்தை இந்த விஷயத்தை பத்தி நமக்கிட்ட சொல்லவே இல்லை. அந்த பொண்ணுக்கு தெரிஞ்சது கூட நமக்கு தெரியலை" என எண்ணியவன், சீக்கிரம் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்த வேண்டும் என்று முடிவு செய்திருந்தான்.
அவன் இவ்வாறு யோசித்து கொண்டிருந்த நேரம், அறையின் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தான் மதன்.
மதன்ராஜ்.. மித்ரனின் ஆருயிர் தோழன். இவர்கள் இருவரின் நட்பும் பள்ளி காலத்தில் தொடங்கியது.
மதன்ராஜின் தந்தை ஒரு போலீஸ் அதிகாரி. மதன் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, அவருக்கு ட்ரான்ஸ்ஃபராகி.. அனைவரும் கோயம்புத்தூருக்கு வந்திவிட., மித்ரன் படிக்கும் அதே பள்ளியில் மதனும் சேர்க்கப்பட்டான்.
மதன் மிகவும் கலகலப்பானவன்., அனைவரிடமும், உடனே ஒட்டிக் கொள்வான். ஆனால் மித்ரன் அவ்வளவு எளிதாக யாரிடமும் பழக மாட்டான். இருவரும் ஒரே வகுப்பில் பயின்ற போதிலும், பெயர் தெரியும் அளவு மட்டுமே, இவர்களின் பரிச்சயம் இருந்தது.
ஒருநாள் பள்ளி வளாகத்தில்., நண்பர்களுடன்.. மதன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்க.. மதன் வகுப்பில் படிக்கும் ஒருவன் தான் பேட்டிங் செய்து கொண்டிருந்தான். அப்போது, அருகில் இருந்த பத்தாம் வகுப்பு மாணவன் மேல், தெரியாமல் பந்து விழுந்துவிட்டது.
அதனால், கோபமான அந்த மாணவன், இவர்களை அடிக்க வர.. உடனே, மதனின் நண்பர்கள் அனைவரும் ஓடிவிட்டனர்.
மதன் மட்டும் அவனிடம் சிக்கிக்கொள்ள.. அவனை சரமாரியாக அடிக்க தொடங்கினான் அம்மாணவன்.
அதேநேரம், இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மித்ரன்., உடனே அந்த மாணவனை தடுத்து, மதனை அவனிடமிருந்து காப்பாற்றினான். அன்றிலிருந்து எப்பொழுதும், மித்ரனுடன் தான் சுற்றி கொண்டிருப்பான் மதன். மித்ரனும், மதனை நண்பனாக ஏற்று கொண்டு, அவனுடன் சகஜமாக பழக ஆரம்பித்தான்.
இருவரும் பள்ளி படிப்பை முடித்து, கல்லூரியில் சேரும் நேரம்... மீண்டும் மதனின் தந்தைக்கு டிரான்ஸ்பராகி, அனைவரும் சென்னைக்கு சென்று விட்டனர்.
இருவருக்கும் இந்தப் பிரிவு மிகுந்த வருத்தத்தை கொடுக்க.. எப்படியோ தனித்தனியாக கல்லூரி படிப்பை முடித்திருந்தனர்.
படிப்பு முடித்ததும் மித்ரன் தங்கள் தொழிலில் இறங்கியவன், மதனை தன்னுடன் இணைந்து கொள்ள கேட்க.. அவனும் மகிழ்ச்சியாக நண்பனுடன் சேர்ந்து கொண்டான்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மதனின் தந்தை ரிட்டயர்ட் ஆகிவிட, சென்னையிலேயே நிரந்தரமாக குடியேறி விடலாம் என்று.. மதனை அவர் அழைக்க, மித்ரனிடமிருந்து தன்னால் வர முடியாது, என்றவன் கோவையிலேயே தங்கி விட்டான்.
இப்போது மித்ரனின் அனைத்து தொழில்களையும், அவனுடன் சேர்ந்து மதனும் கவனித்துக் கொள்கிறான்.
எட்டாம் வகுப்பில் தொடங்கிய இவர்களின் நட்பு, இன்று வரை நிலைத்து, நீடித்து கொண்டிருக்கிறது.
உள்ளே வந்த மதன், தான் வந்ததை கூட கவனிக்காமல், ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்த மித்ரனை பார்த்து.. "என்னடா, எந்த கோட்டையை பிடிக்க, இப்படி யோசனை பண்ணிடிருக்க"
என்று கேட்டான்.
அவனின் குரலில் திரும்பிய மித்ரன்.. "வாடா, எப்போ வந்த" என்றவன், "அம்மா, அப்பா எல்லாம் நல்லா இருக்காங்களா" என்றான்.
"ம்ம்ம், அவங்க எல்லாம் சூப்பரா இருகாங்கடா" என்று மதன் கூற..
"ஏன் நீ கோயம்புத்தூருக்கு ரீச் ஆயிட்டேன்னு போன் பண்ணி சொல்லலைவே இல்லை" என்றான் மித்ரன்.
"நேத்து நைட் தான்டா வந்தேன், செம டயர்டு. அதனாலதான் உனக்கு கால் பண்ண முடியல. சரி சொல்லு, நீ ரொம்ப நேரமா என்ன யோசிச்சிட்டு இருந்த" என்று மீண்டும் அதே கேள்வியை கேட்க..
"அதெல்லாம் நான் அப்புறம் சொல்றேன், நீ போன விஷயம் என்ன ஆச்சு" என கேட்டான் மித்ரன்.
"தி கிரேட் மதன்ராஜ், ஒரு விஷயத்துல இன்வால்வானா, அதை முடிக்காமல் விடுவானா என்ன" என்று தன் சட்டையின் காலரை தூக்கிக் கொண்டவன்... "அதெல்லாம் சூப்பரா முடிஞ்சதுடா" என்றான்.
"ம்ம்ம், அப்போ அவன் நம்ம கேட்ட ரேட்டுக்கு, இடத்தை கொடுக்க, ஓகே சொல்லிட்டானா" என மித்ரன் கேட்க.. "இல்லை மித்து, இடத்தைக் கொடுக்கிறேனு சொல்லிட்டான். ஆனால் ரேட்தான் சேர்த்து கேட்கிறான்" என்றான் மதன்.
"எவ்வளவு சேர்த்து கேட்கிறான்" என்று மித்ரன் கேட்க... "50 லேக்ஸ் சேர்த்து கேக்குறான் டா" என்றான் மதன்.
"நோ ப்ராப்ளம் டா, அந்த இடத்துக்கு., அவன் கேட்கற அமவ்ண்ட் வொர்த்து தான்" என்றவன், "சீக்கிரம் டீலை முடிச்சிட்டு, ஒர்க் ஸ்டார்ட் பண்ணிடலாம்" என்றான் அவன்.
"ஓகே மித்து, சீக்கிரம் டீலை முடிக்கிறோம், "தி கிரேட் மித்ரன் ராயலோட" நெஸ்ட் ப்ரஞ்ச் சென்னைல ஓப்பன் பண்றோம்" என்றவன், மேலும் சிறிது நேரம் தங்களின் தொழிலை பற்றி பேசிக் கொண்டிருந்தான்.
"ஓகேடா, அப்போ நான் கிளம்புறேன்" என்ற மதன் இறுக்கையிலிருந்து எழ.. "மதன்" என்று அழைத்தான் மித்ரன்.
"சொல்லுடா" என்றவனிடம்., "குழந்தைக்கு நேம் செரிமனி ஃபங்ஷன் வைக்கனும். அதுக்கான வொர்க் எல்லாம் நம்ம மேனேஜர்கிட்ட சொல்லி அரேஞ்ச் பண்ணிடு" என்றான்.
"மித்து" என்ற மதன், சிறிது நேர அமைதிக்கு பின், "ஃபங்ஷன் பண்ணிடலாம், பட்.. கேட்கறவங்ககிட்ட எல்லாம் என்னடா சொல்றது" என்றான்.
"அதை நான் பாத்துக்குறேன் டா, நீ வேலையை பாரு" என்றவன், "தென் நெக்ஸ்ட் மன்ந்த், நம்ம ஹோட்டல்ல எல்லா டேட்சும் புக் ஆகிடிச்சி. சோ, ஃபங்ஷனை வீட்டுலயே வச்சிகலாம்" என்றான்.
"சரிடா" என்று விடைப் பெற்ற மதன்., யோசனையுடனே அங்கிருந்து வெளியேறினான்.
அவன் சென்றதும் மித்ரன் சிவகாமிக்கு அழைத்து, பெயர் சூட்டு விழாவை பற்றி தெரிவிக்க.. "மித்ரா.. நீ.." என அவர் பேசத் தொடங்கும் முன்., சிவகாமியின் கேள்வி என்னவாக இருக்கும் என தெரிந்தவன்... "அத்தை ஐ'வில் ஹேண்டல் இட், நல்லநாள் எப்போனு பார்த்து மதன்கிட்ட சொல்லிடுங்க" என கூறிவிட்டு அழைப்பை துண்டித்திருந்தான்.
மித்ரன் கூறியதை பற்றி சிந்தித்து கொண்டிருந்த சிவகாமியை... "அம்மா, டைம் ஆச்சி, சாப்பிட வாங்க" என்று அழைத்தாள் நிவேதா.
"நான் அப்புறம் சாப்பிடுறேன் நிவி" என்றவர், "குழந்தை என்ன பண்றான்" என கேட்க..
"குட்டி தூங்குறான் மா" எனக் கூறினாள் அவள்.
"சரிடா, அவன் தூங்கும்போதே நீ சாப்பிடுடு" என்றவரிடம்.,
"நான் அப்போவே சாப்பிட்டேன் மா, நீங்க தான் இன்னும் சாப்பிடவில்லை. மாத்திரை வேற போடணும், வந்து சாப்பிடுங்க ம்மா" என்றாள் நிவேதா, அக்கறையாக.
"ம்ம்ம்.. விடமாட்டியே" என பெருமூச்சுடன் கூறியவர், சாப்பிட சென்றிருந்தார்.
உணவருந்தி முடித்ததும் சிவகாமி, நிவேதாவிடம்.. "நிவி, என்னோட ரூம்ல இருக்க டேபிள் மேல பஞ்சாங்கம் இருக்கும், அதை எடுத்துட்டு வாம்மா" என கூற.. நிவேதா பஞ்சாங்கத்தை கொண்டு வந்து கொடுத்து விட்டு, சிவகாமிக்கு மாத்திரை எடுக்க சென்றிருந்தாள்.
பஞ்சாங்கத்தை புறட்டிய சிவகாமி.. இன்னும் ஒரு வாரத்தில் வரும் வளர்பிறை சஷ்டியன்று பெயர் சூட்டு விழாவை வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து.. மதனுக்கு அழைத்திருந்தார்.
அழைப்பை ஏற்ற மதன்.. "சொல்லுங்க ஆன்ட்டி" எனக்கூற..
"மதன் ஊர்ல இருந்து வந்துட்டியாப்பா. அம்மா, அப்பா, அண்ணன் எல்லாம் சௌக்கியமா" என்றார்.
"நல்லா இருக்காங்க ஆன்ட்டி, நேத்து நைட் தான் வந்தேன்" என்றவன், "குழந்தை என்ன பண்றான் ஆன்ட்டி, புதுசா ஜாய்ன் பண்ணவங்க, குழந்தைய நல்ல பாத்துகுறாங்களா" என கேட்டான்.
"அவன் தூங்குறான் மதன்" என்ற சிவகாமி, நிவேதாவை பற்றி பெருமையாக கூற.. "அப்படியா" என ஆச்சர்யமானான் அவன்.
"ஆமாம் மதன், நீ இங்க வரப்போ தெரிஞ்சிக்குவ" என்றவர், "மித்ரன் உன்கிட்ட நல்லநாள் பார்த்து சொல்ல சொன்னான்" என்று கூற..
"எஸ் ஆன்ட்டி, குழந்தைக்கு நேம் வைக்கிற ஃபங்ஷனை, வீட்டிலேயே அரேஞ்ச் பண்ண சொல்லியிருக்கான்" என்றான் மதன்.
"வீட்டிலேயா".. என்ற சிவகாமி,
"சரிப்பா., அடுத்த வாரம் புதன்கிழமை நாள் நல்லாயிருக்கு. அன்னைக்கே விசேஷத்தை வச்சிகலாம்" எனக்கூற..
"ஓகே ஆன்ட்டி., நான் பாத்துக்குறேன்" என்றவன், அழைப்பை துண்டித்தான்.
இவர்கள் பேசியதை, மாத்திரை எடுத்துக் கொண்டு வந்த நிவி கேட்டிருக்க.. "அம்மா அடுத்த வாரம் குட்டிக்கு பேர் வைக்கிறீங்களா" என்றாள் ஆர்வமாக.
"ம்ம்ம்" என்று குரலில் சுரத்தே இல்லாமல் கூறியவரை பார்த்த நிவி, "ஏன்ம்மா, ஒரு மாதிரி இருக்கீங்க" எனக் கேட்க,
அவளின் கேள்விக்கு பதில் கூறாமல் மாத்திரையை விழுங்கிய சிவகாமி தன் அறைக்கு சென்றுவிட்டார்.
"என்ன இவங்க எதுவுமே சொல்லாம போறாங்க, ஒருவேளை குட்டியோட அம்மா, இப்போ உயிரோட இல்லாததுனால ஃபீல் பண்றாங்களோ" என்று எண்ணியவள், குழந்தையைக் காண சென்று விட்டாள்.
தொடரும்...