ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 6

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 6

இதே சமயம் அக்ஷயாவின் தொலைபேசி அலற, அதனை எடுத்து காதில் வைத்தாள். மறுமுனையில் கீர்த்தனா தான்...

"என்னடி ஆச்சு? இந்த ஹிட்லர் கிட்ட சிக்கிட்டு பெரும் பாடா இருக்கு" என்று அவள் சலித்துக் கொள்ள, அக்ஷயாவோ, "ஃபீவர் ஹை ஆயிடுச்சு... ட்ரிப்ஸ் ஏத்தி இருக்காங்க, நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ண சொல்லி இருக்காங்க" என்றாள்.

"நாளைக்கா? இந்த ஹிட்லர் லீவு தர மாட்டானேடி" என்று அவள் கேட்க, "இல்ல, லீவு எடுக்க சொல்லிட்டார்" என்று அக்ஷயா சொன்னாள்.

"அதிசயம் தான்... ஈவினிங் வந்திடுறேன்... ஹாஸ்பிடல் பெயர் அண்ட் ரூம் நம்பர் மெசேஜ் பண்ணிடு" என்று சொல்லி விட்டு கீர்த்தனா வைத்து விட, "பிக் ஆஹ்?" என்று கேட்டான் நெடுஞ்செழியன்...

"இல்ல கீர்த்தனா?" என்று அவள் அழுத்தமாக சொல்ல, "ரெண்டும் ஒன்னு தான்" என்று அவன் சொல்லிக் கொண்டான்...

நண்பியை அவன் கிண்டல் செய்வது இவளுக்கு கோபம் வர வைத்தாலும் அடக்கிக் கொண்டு தான் அமர்ந்து இருந்தாள் அவன் செய்த உதவிகளுக்காக...

சிறிது நேரத்தில் அறைக்குள் வந்த .மனோகரியோ, "வந்துட்டியாம்மா?" என்று கேட்டுக் கொண்டே திருநீறை நீட்ட, அதனை நெற்றியில் வைத்துக் கொண்டவளுக்கு கண்கள் கலங்க, "என் அம்மா ஸ்தானத்துல இருந்து எல்லாமே பண்ணுறீங்க... இதுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல" என்றாள்.

மனோகரியோ, "இதுக்கெல்லாம் அழுதுகிட்டு" என்று சொல்லிக் கொண்டே, சட்டென நெடுஞ்செழியனின் நெற்றியில் திருநீறை வைத்து விட, "அம்மா" என்று அவன் அழுத்தமாக அவரை அழைத்துக் கொண்டே திருநீறை அழிக்க முற்பட, அவன் கையை பிடித்தவர், "அழிக்காதடா" என்று சொல்லி விட்டு தனிஷாவின் நெற்றியிலும் திருநீறை வைத்து விட்டார்...

அவர்கள் பேசிக் கொண்டு இருக்க, நெடுஞ்செழியன் அனைவர்க்கும் உணவு எடுத்துக் கொடுத்தான்... இதே சமயம் மாலை நேரம் அலுவலகம் முடிந்து ஹாஸ்பிடல் அறையை வேகமாக திறந்து கொண்டே உள்ளே வந்த கீர்த்தனா, வெளியே செல்ல முற்பட்ட நெடுஞ்செழியனில் மோதி நின்றாள்.

அவள் "சாரி" என்று ஆரம்பிக்க முதலே, "பார்த்து வர மாட்டியா?" என்று சீறி இருந்தான் அவன்...

அவளிடம் மட்டுமே இந்த கடுமை... அது ஏன் என்று அவளுக்கும் தெரியவில்லை, அக்ஷயாவுக்கும் புரியவில்லை... "தெரியாம தானே இடிச்சேன்... இப்போ எதுக்கு இப்படி திட்றீங்க?" என்று ஆதங்கமாக கேட்க, அவளை ஆழ்ந்து பார்த்து விட்டு வெளியேறி விட்டான் அவன்...

கீர்த்தனாவோ அவன் முதுகை வெறித்துப் பார்த்துக் கொண்டே, அங்கே அமர்ந்து இருந்த அக்ஷயாவிடம் வந்தவள், "இப்போ எப்படி இருக்குடி?" என்று கேட்டுக் கொண்டே குழந்தையின் நெற்றியை தொட்டுப் பார்த்தாள்.

"இப்போ பரவால்ல" என்று சொல்லிக் கொண்டே, அவளுடன் பேச ஆரம்பித்தாள்...

அன்று இரவு கீர்த்தனாவை வீட்டுக்கு அனுப்பி விட்டு, அக்ஷயா மட்டும் தான் ஹாஸ்பிடலில் இருந்தாள்.

நெடுஞ்செழியன் தேவையானவற்றை எல்லாம் செய்து கொடுத்து விட்டு தான் சென்றான்...

அடுத்த நாள் கீர்த்தனா அலுவலகத்துக்கு சென்று விட, அக்ஷயாவும் மதிய நேரம் போல் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்து விட்டு, நெடுஞ்செழியனுடன் தான் காரில் வீட்டை நோக்கி புறப்பட்டு இருந்தாள்.

இப்போது இருவருக்கும் ஒரு அழகான நட்பு மலர்ந்து இருந்தது...

கொஞ்சம் மனம் விட்டு பேசும் அளவுக்கு அவர்கள் நெருங்கி இருந்தார்கள்...

நெடுஞ்செழியன் தான் அவளது மருத்துவமனை பணத்தை கூட கட்டி இருந்தான்...

அவளிடமும் பணம் இல்லை கட்டுவதற்கு...

"எப்படியாவது திரும்ப பணத்தை கொடுத்துடுவேன்" என்று அவள் சொல்ல, அவனோ, "அது பணம் வரும் போது பார்த்துக்கலாம்" என்றவனோ மேலும், "இந்த ஞாயிற்றுக் கிழமை உனக்கு பேர்த் டே தானே" என்று கேட்டான்...

"உங்களுக்கு எப்படி தெரியும்?" என்று அவள் கேட்க, "ம்ம் அம்மா கிட்ட உன்னோட டீடைல்ஸ் கொடுத்து வச்சு இருக்க தானே... அந்த ஃபைல்ல பார்த்தேன்" என்றான்... ஒரு பெருமூச்சு அவளிடம்...

அப்படியே கண்ணாடியூடு வெளியே பார்த்தவளுக்கு கரிகாலனின் நினைவுகள் வந்து போனது...

அவள் பிறந்தநாளை அவன் கேக் வெட்டி தான் கொண்டாடுவான்...

அப்படி இருந்தவனுக்கு இப்போது என்ன ஆனது என்று அவளுக்கு புரியவே இல்லை...

அவளை ஒரு கணம் பார்த்து விட்டு, முன்னால் பார்த்தபடி காரை செலுத்திய நெடுஞ்செழியனோ, "சன்டே லன்ச் போகலாம்... உன் ஃபிரெண்டையும் வர சொல்லு" என்றான்...

அவளோ, "என் கிட்ட ட்ரீட் கொடுக்கிற அளவுக்கு பணம் எல்லாம் இல்லை, மன்டே தான் சேலரி" என்றாள்.

"நீ ட்ரீட் கொடுக்க தேவல... நான் உங்க எல்லாருக்கும் கொடுக்கிறேன்... வித்தியாசமா இருக்கட்டுமே" என்று அவன் சொல்ல, அவளுக்கு மறுக்க நினைத்தாலும் மறுக்க முடியாத நிலை...

குழந்தைக்கு அவன் எல்லாமே செய்யும் போது இல்லை என்று சொல்வது அதிகப்படி என்று தெரிந்தது...

அன்று இரவு அருகே படுத்து இருந்த கீர்த்தனாவிடம் எல்லாமே சொன்னவள், "ஃபிரென்ட் ஆஹ் பழகுறார்ன்னு புரியுது கீர்த்து, ஆனாலும் பயமா இருக்கு... பார்க்கிறவங்க தப்பா நினைப்பாங்களோன்னு பயமா இருக்கு" என்றாள்.

கீர்த்தனாவோ, "லூசு மாதிரி உளராதே, யார் எப்படி பார்த்தா என்ன? உனக்கு நீ உண்மையா இருந்தா ஓகே தானே" என்றாள்.

"ஆஹ் உன்னையும் வர சொன்னார்" என்று சொல்ல, அவளோ, "சரி நானும் வரேன்" என்று பதிலளித்து இருக்க, அந்த வாரம் முடிந்து சனிக்கிழமையும் வந்தது...

அவளுக்கு வீரராகவன் விடுப்பு கொடுத்ததால், சனிக்கிழமை வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது...

ஆபீஸுக்கு சென்றவளை விசித்திரமாக பார்த்த செக்கியூரிட்டியோ, அங்கே நின்ற வீரராகவனின் பி எம் டபிள்யூ காரையும் பார்த்து விட்டு, "என்னவோ நடக்குது முருகேசா, இந்த பொண்ணு நடத்த கெட்டவ தான் போல" என்று அருகே நின்று இருந்த காவலாளியிடம் சொல்ல, அவனோ, "பெரிய இடத்து விஷயம் நமக்கு எதுக்கு? வேலைய மட்டும் பார்ப்போம்" என்று சொல்லிக் கொண்டான்.

அக்ஷயாவுக்கு சுருக்கென்று தைத்தது... உணர்வுகளை அடக்கிக் கொண்டே அலுவலகத்தினுள் நுழைந்தாள்.

வீரராகவன் அவள் முகத்தை கூட பார்க்க மாட்டான்...

ஆனால் வேலை மட்டும் மலை போல குவிந்து இருக்கும்...

அனைத்தையும் செய்து விட்டு வீட்டுக்கு வந்தவளோ, "இன்னைக்கு எவ்வளவு வேலை தெரியுமா கீர்த்து? முடியல..." என்று சலித்து விட்டு குளிக்க சென்றவள், அவளுடன் பேசிக் கொண்டே சாப்பிட்டாள். அதன் பிறகு குழந்தையையும் தூங்க வைத்தவள், கீர்த்தனாவுடன் பேசியபடி தூங்கிப் போனாள்.

அடுத்த நாள் மதியம் அக்ஷயா, கீர்த்தனா மற்றும் தனிஷாவை அழைத்துக் கொண்டு நெடுஞ்செழியன் சாப்பிட புறப்பட்டு இருந்தான்...

மனோகரிக்கு கடை உணவு உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது... அதனாலேயே வரவில்லை என்று சொல்லி விட்டார்...

கடைக்கு முன்னே கார் நின்றதுமே, "நீங்க ரெண்டு பேரும் கடைக்குள்ள போங்க, எனக்கு பக்கத்து கடைல ஒரு திங்க் வாங்கணும்... வந்திடுறேன்" என்று பதிலை எதிர்ப்பார்க்காமல் கீர்த்தனா சென்று விட, அக்ஷயாவும் நெடுஞ்செழியனும் தனிஷாவும் தான் கடைக்குள் நுழைந்தார்கள்...

அக்ஷயாவோ, "ஹாண்ட் வாஷ் பண்ணிட்டு வாரேன்" என்று சொல்லி விட்டு குழந்தையை நெடுஞ்செழியனிடம் கொடுத்தவள், வாஷ் ரூமிற்குள் சென்றாள்.

அவனோ, "டார்லிங்" என்று சொல்லிக் கொண்டே குழந்தைக்கு முத்தம் பதித்து நேரத்தை கடத்திக் கொண்டு இருந்தான்...

சிறிது நேரத்தில் வாஷ் ரூமில் இருந்து வெளியே வந்த அக்ஷயாவோ அங்கே அவள் குழந்தையை தூக்கிக் கொண்டு நின்று இருந்த நெடுஞ்செழியன் அருகே வந்தாள்.

அவனோ, "இவ செம கியூட்ல" என்று சொல்லிக் கொண்டே இருக்க, மென்மையாக புன்னகைத்தபடி குழந்தையை வாங்க போனவளது கைகள் அந்தரத்தில் நின்றன...

உணவகத்தினுள் நுழைந்து கொண்டு இருந்தது வேறு யாருமல்ல கரிகாலன் தான்... உள்ளே வந்தவன் கண்கள் அக்ஷயாவிலும் நெடுஞ்செழியனிலும் ஒரு கணம் பதிந்து மீள, நேரே உணவை ஆர்டர் செய்ய கவுண்டருக்கு தான் சென்றான்...

அக்ஷயாவின் வெளிறிய முகத்தை பார்த்த நெடுஞ்செழியனோ, "அக்ஷயா வாட் ஹப்பெண்ட்?" என்று கேட்க, "ஒண்ணும் இல்ல" என்று சொல்லிக் கொண்டே, அவள் குழந்தையை வாங்க முற்பட, "நோ... நீ சொல்லி தான் ஆகணும்... அப்போ தான் குழந்தையை தருவேன்" என்றான்...

"அவர் என்னோட ஹாஸ்பண்ட்" என்று ஒற்றை வரியில் சொல்ல, "ஓஹோ" என்று சொல்லிக் கொண்டே குழந்தையை அவளிடம் கொடுத்த நெடுஞ்செழியனோ, "எஸ் அம்மா எல்லாம் சொன்னாங்க... நானே உன் கிட்ட இதெல்லாம் பேசணும்னு நினச்சேன்" என்றான்...

அவளுக்கு அவன் அக்கறையில் ஒரு நெருடல்... பெரிதாக பழக்கம் இல்லை...

ஆனால் அவன் மிகவும் நெருங்கி விட்ட போல உணர்வு அவளுக்கு... ஏற்கனவே குழந்தை விஷயத்தில் சந்தேகப்படுபவன் கரிகாலன்... இப்போது செழியனுடன் பார்த்த பின்னர் என்ன எல்லாம் நினைப்பான் என்கின்ற படபடப்பும் இருக்க, "அது முடிஞ்ச விஷயம்..." என்று சொல்லிக் கொண்டே இருப்பதற்காக இடம் தேட, "இங்க வா" என்று அருகே ஒரு மேசையை காட்டியவன், அவளுடன் அமர்ந்து கொண்டான்...

கரிகாலன் அங்கே இருந்து செல்லும் வரை அவளுக்கு என்னவோ போல இருந்தது... நெடுஞ்செழியனோ, "வாஷ் ரூம் போயிட்டு வரேன்... ஃபூட் ஆர்டர் பண்ணிடு, எனக்கு ஒரு காஃபி போதும்" என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து எழுந்து செல்ல, அவளுக்கு அப்போது தான் மூச்சே வந்தது...

அவள் ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டபடி நிமிர்ந்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது...

அவள் முன்னே அமர்ந்து காஃபி குடித்துக் கொண்டு இருந்த கரிகாலனோ, "குழந்தையோட இனிஷியலுக்கு ஆள் பிடிச்சுட்ட போல" என்று சொல்ல, சுருக்கென்று வலித்தது அவளுக்கு... கண்கள் கரித்துக் கொண்டே, வர, "ஆமா சார், ஆள் தான் பிடிச்சுட்டா... இப்போ உங்களுக்கு என்ன?" என்று கேட்டுக் கொண்டே, அக்ஷயா அருகே வந்து அமர்ந்தாள் அவள் நண்பி கீர்த்தனா...

கரிகாலனோ, அவளை முறைத்துக் கொண்டே எழ, "சும்மா இரு கீர்த்து" என்று அக்ஷயா நண்பியிடம் சொல்ல, "நான் ஏன் சும்மா இருக்கணும்?" என்று அவள் எகிற, கரிகாலனோ அங்கிருந்து கிளம்பி விட்டான்.

அவன் சென்றதுமே, "இதுக்காகவே நீ இன்னொரு கல்யாணம் பண்ணுடி, பேசாம செழியனையே பண்ணிக்கோ... எனக்கென்னவோ அவனுக்கு உன் மேல ஒரு ஐடியான்னு தோணுது, உன் பேர்த்டே க்கு அவன் லன்ச் கொடுக்கிறான்" என்று சொல்லி முடிக்கவில்லை, மேசையில் இருந்த கரண்டியால் அவள் தலையில் டங்கென்று அடித்தபடி அங்கே அமர்ந்தான் நெடுஞ்செழியன்...

அவளோ, "ஆஹ்" என்று தலையை வருடிக் கொண்டே, அவனை முறைத்துப் பார்க்க, "ஹேய் பிக், நான் ஐடியா இருக்குன்னு சொன்னேனா? அப்படி ஐடியா இருந்தா நேரடியாவே கேட்டிடுவேன்... லன்ச் கொடுத்து கரெக்ட் பண்ணனும்னு அவசியம் இல்லை... ஷீ இஸ் மை பிரென்ட்... தட்ஸ் இட்" என்றான் இரு கைகளையும் விரித்து...

"என்னை பன்னின்னு கூப்பிட வேணாம்னு சொல்லிட்டேன்" என்று கீர்த்தனா ஒற்றை விரல் காட்டி மிரட்ட, "அப்படி தான் கூப்பிடுவேன்..." என்று சொல்ல, "எனக்கு லன்ச் வேணாம்" என்று அவள் எழ முற்பட, "இருடி" என்று ஒற்றைக் கையால் அவள் கையை பிடித்து இருக்க வைத்தாள் அக்ஷயா...

சிடு சிடுவென அவனுக்கு திட்டிக் கொண்டே அமர்ந்து இருந்த கீர்த்தனாவை இதழ்களுக்குள் அடக்கப்பட்ட புன்னகையுடன் பார்த்து விட்டு கையில் இருந்த மெனு கார்டில் பார்வையை செலுத்தினான் நெடுஞ்செழியன்...
 

CRVS2797

Member
தடம் மாறிய இலக்கணம்..!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 6)


இந்த நெடுஞ்செழியன், கீர்த்தனாவை சும்மாவே சீண்டி, சீண்டியே கரெக்ட் பண்ணுறானோன்னு தோணுது


அது சரி, இந்த கூறுகெட்ட கட்டைக்காலன், இவன் கூட படுக்க ரேகாவை பிடிக்கலாம்..
ஆனா, அசஷயா மட்டும் டிவோர்ஸ்க்கு அப்புறமும் இவனை நினைச்சு உருகி, உருகி ஓடாய் தேஞ்சு போகணுமாக்கும்.


"போடா, போடா புண்ணாக்கு..
போடாத தப்புக் கணக்கு....
போடா, போடா புண்ணாக்கு..
போடாத தப்புக் கணக்கு....
கிறுக்கு உனக்கு இருக்கு...
இப்போ எண்ணாத மனக்கணக்கு...
பல கிறுக்கு உனக்கு இருக்கு...
இப்போ எண்ணாத மனக்கணக்கு..."


நீ வேணா பாருடா, அவளுக்குன்னே ஒருத்தன் வந்திருக்கான், அவன் அவளை எப்படி கொண்டாடப் போறான்னு..!!!


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top