அத்தியாயம் 10
வெள்ளவத்தையில் இருந்து புறப்பட்ட அவர்கள் வண்டி, பெலவத்தை வழியே சென்றது...
அங்கே தான் பாராளுமன்றமும் இருந்தது...
அதனை தாண்டி தான் வண்டி செல்ல, அவளோ, அதனை வியப்பாக பார்த்தவள், "இண்டைக்கு தான் நேர்ல பார்லிமென்ட்டை பார்க்கிறேன்" என்றாள்...
அவனோ, "உள்ளே ஒரு நாளைக்கு கூட்டி போறேன்" என்றான்...
"நீங்க போய் இருக்கீங்களா?" என்று கேட்டாள்...
ஒரு பார்வை தான், சிரித்தபடி பார்த்தான்.
"அது சரி, உங்கள்ட இதெல்லாம் லூசு மாதிரி கேட்டுட்டு இருக்கிறேன் பாருங்க" என்று சொன்னவளோ, "இப்ப எங்க போறோம்?" என்று கேட்க, "ஃப்ரென்ட் வீட்ட" என்றான்.
"ரெஜிஸ்டர் ஒஃபிசுக்கு போகலையா?" என்று கேட்க, அவளை புருவம் சுருக்கிப் பார்த்தவன், "நாளைக்கு ஹெட்லைன் ல வர ஆசைப்படுறியா?" என்று கேட்டான்.
"ஐயோ இல்ல இல்ல" என்று பயத்துடன் சொல்ல, அவனும் முத்துப் பற்கள் தெரிய சிரித்தபடி, அவன் நண்பனின் வீட்டுக்கு வந்து விட்டான்.
அவளோ தயக்கத்துடன் இறங்கிக் கொண்டாள்...
அவன் அருகே சிவப்பு நிற புடவையில் வந்த ராதிகாவைப் பார்த்த பிரியந்தவின் நண்பன் குமார சிரித்தபடி ஏதோ சிங்களத்தில் சொல்ல, அவளுக்கோ புரியவில்லை...
அருகே வந்த பிரியந்தவைப் பார்த்தாள்.
அவனோ, சிரித்துக் கொண்டே, "இப்பவே கட்சில செர்ந்துட்டியா எண்டு கேக்கிறான்" என்றாள்..
"நா நா" (இல்லை இல்லை) என்றாள் அவசரமாக...
"ஏன் சேர மாட்டியா?" என்று கேட்டபடி அவள் வீட்டினுள் நுழைய, "நீங்க முதல் தமிழ் பெட்டையை கட்சில சேர்த்துக் கொள்ளுவீங்களா?" என்று கேட்டாள்...
கிண்டலாக தான் கேட்டாள்..
அவனும், அவளை ஆழ்ந்து பார்த்தவன், "வாழ்க்கைலேயே சேர்த்துக் கொள்ளுறேன், கட்சில சேர்த்துக் கொள்ள மாட்டேனா?" என்று கேட்க, அவள் கன்னங்கள் சட்டென சிவந்து போக, அவனில் இருந்து பார்வையினை அகற்றிக் கொண்டே, உள்ளே சென்றாள்...
வந்தது என்னவோ சிங்கள பதிவாளர் தான்...
அவரிடம், "இந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாது" என்று உறுதியாக பிரியந்த சொல்லி இருக்க, அவர்களது திருமணம் பதிவு செய்யட்பட்டது...
அவன் கையெழுத்தை இட்டான்...
அவளுக்கு கீழ் அவளும் கையெழுத்தை இட்டாள்.
இரு சாட்சி கையெழுத்துக்கள் இடப்பட்டன...
பிரியந்தவனின் நண்பர்கள் கையெழுத்தை இட்டார்கள்...
சத்தியப்பிரமாணத்தை அவன் சிங்களத்தில் சொல்லி முடித்து விட்டான்...
அவள் விழி பிதுங்கிப் போனாள்...
அவன் தமிழில் மொழி பெயர்க்க, அவளும் சொல்லி முடித்து விட்டாள்...
இருவருக்கும் பதிவாளார் வாழ்த்தை தெரிவித்து, அவர்களது பதிவு காப்பி ஒன்றை கையில் கொடுத்தார்...
சேர்ந்து வாங்கிக் கொண்டார்கள்...
அவனோ அதனை தொடர்ந்து பாக்கெட்டில் இருந்து ஒரு செயினை எடுத்து அவள் கழுத்தில் போட்டு விட்டான்...
பதறிக் கொண்டே, அவனை ஏறிட்டுப் பார்க்க, "செயின் தான்... உன் கழுத்துல எப்போவுமே இருக்கட்டும், நீயே காசு கொடுத்து வாங்குன எண்டு சொல்லு, அதுல உன்ட பேர் தான் இருக்கு" என்றான்...
குனிந்து பார்த்தாள்...
"ராதிகா" என்று தான் ஆங்கிலத்தில் இருந்தது...
மெலிதாக சிரித்துக் கொண்டே, "இதெல்லாம் எதுக்கு?" என்று கேட்க, "நீ தாலி எண்டு நினை" என்று மட்டும் சொல்லிக் கொண்டான்...
அதனை தொடர்ந்து நண்பர்களிடம் பேசி விட்டு புறப்பட்டு விட்டான்...
அவள் கையில் அவர்களது பதிவு இருந்தது...
"இத என்ன செய்ய?" என்று கேட்க, "நீ கவனமா வச்சு கொள்ளு, நான் ஏமாத்திட்டன் எண்டா பேப்பர் ல கொடு" என்றாள்...
அவனை முறைத்தவள், "என்ன கதை இது?" என்று திட்டினாள்...
கணவன் மனைவி ஆகி விட்டார்கள்...
அதுவரை ஏதோ ஒரு தயக்கம் அவளிடம் இருந்தது...
திருமணம் முடிந்து விட்டது, இனி எதுவும் மாற்ற முடியாது என்று இயல்பாகி விட்டாள்...
காலை பத்து மணி தான்...
"வீட்டுக்கு வாறியா?" என்று கேட்டான்...
"ஐயோ எனக்கு ஏலாது" என்றாள்...
"ஏன்?" என்று அவன் கேட்க, "யாரும் பார்த்துட்டாங்க எண்டா?" என்று கேட்டாள்...
"நான் மாட்டும் தான் வீட்ல இருக்கிறன், வா, ஒஃபிஸ் லீவு தானே, வீட்டுக்கு போய் என்ன செய்ய போறா?" என்று கேட்டான்...
அவளும், "ஓகே" என்று சொல்ல, அவளை தனது ஃப்ளாட்டுக்கு அழைத்து சென்றான்.
வண்டியை பார்க்கிங்கில் பார்க் செய்து விட்டு, லிஃப்ட்டை நோக்கி நடந்தான்...
அங்கே நின்ற செக்கியூரிட்டியோ, இருவரையும் குறு குறுவென பார்த்தான்.
"அவர் ஏன் ஒரு மாதிரி பார்க்கிறார்?" என்று கேட்டபடி அவள் பிரியந்தவுக்கு பின்னே ஒளிந்து நடக்க, அவனோ, "ஆஹ் யாரோ தமிழ் பிள்ளைய சம்பவம் பண்ண கூட்டி வர்றன் எண்டு நினச்சு இருப்பான்" என்றான்..
"ஐயோ" என்று அவள் வாயில் கையை வைக்க, "தெரிஞ்சவன் தான் வெளிய சொல்ல மாட்டான்" என்றான்...
"உங்களுக்கு பயமே இல்லையா?" என்று கேட்க, "பொண்டாட்டியோட வாறதுக்கு எதுக்கு பயப்படனும்?" என்று கேட்டுக் கொண்டே, அவள் விரல்களுடன் விரல்களை கோர்த்தபடி லிஃப்ட்டில் ஏறிக் கொண்டான்...
அவன் வீடு இருக்கும் தளமும் வந்தது...
அவனும் வீட்டை திறந்து கொண்டே, அவளை உள்ளே அழைத்து வந்தான்...
அவளும் வீட்டை சுற்றிப் பார்த்தவள், "எந்த பெரிய வீடு, வடிவா இருக்கு, தனியாவா இருக்கீங்க?" என்று கேட்டாள்...
"ம்ம், இது வரைக்கும் தனியா தான் இருந்தன், நீ மட்டும் சரி எண்டு சொல்லு, சேர்ந்து இருக்கலாம்" என்றான்...
அவளோ, "ஆஹ் ஆசை தான்" என்று சொல்லிக் கொண்டே, எல்லா இடமும் சுற்றி விட்டு அவன் படுக்கை அறைக்குள் நுழைந்தாள்...
அப்படியே கட்டிலிலும் உரிமையாக அமர்ந்து கொண்டே, "கட்டிலும் நல்லா இருக்கு" என்றாள்...
அவன் சிரித்துக் கொண்டான்...
அதனை தொடர்ந்து, "குடிக்க ஜூஸ் எடுத்து வாறன், இரு" என்று சொல்லி விட்டு அவன் செல்ல, அவளோ, கட்டிலில் மெதுவாக படுத்தாள்.
அவன் வாசம் அதில்...
மெல்லிய வெட்க புன்னகை அவளுக்கு...
அப்படியே மல்லாக்க படுத்துக் கொண்டே, எட்டி அங்கே இருந்த புத்தகம் ஒன்றை எடுத்தாள்.
சிங்களத்தில் இருந்தது...
"முதல் சிங்களம் நல்லா படிக்கோணும்" என்று நினைத்துக் கொண்டே, அதில் இருந்த எழுத்துக்களை கூட்டி வாசிக்க ஆரம்பித்து விட்டாள்...
அவள் தப்பு தப்பாக சிங்களம் வாசிப்பதை கேட்டுக் கொண்டே உள்ளே வந்த பிரியந்தவுக்கு சிரிப்பும் வந்து விட்டது...
அவளுக்கு என்று கொண்டு வந்த ஜூசை மேசையில் வைத்து விட்டு ஷேர்ட்டை கழட்டினான்...
புத்தகத்தை படித்துக் கொண்டு இருந்த ராதிகா அதனை கவனிக்கவே இல்லை...
ஒரு கட்டத்தில், "இந்த எழுத்து ட தானே" என்று கேட்டுக் கொண்டே, அவனைப் பார்த்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது...
வெற்று மார்புடன் நின்று இருந்தான்... இடையில் ஜீன்ஸ் மட்டும் இருந்தது...
அதில் இருந்த பெல்டையும் கழட்டிக் கொண்டு இருந்தான்.
மூச்சடைத்துப் போனது...
சட்டென பார்வையை புத்தகத்தில் செலுத்தியவளுக்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்து விட்டது...
அவனோ, சற்றும் சலனம் இல்லாமல், "என்ன கேட்டனி?" என்று கேட்டபடி, அவள் அருகே படுத்தே விட்டான்...
பெண்ணவளுக்கு மயக்கம் வராத குறை தான்...
விலகினால் அவன் தவறாக நினைப்பான்...
அவன் வெற்று மார்பு, அவள் தோள்களுடன் தாரளமாக உரசியது... எட்டடி புத்தகத்தை அவனும் பார்த்தான்...
அவன் தாடி மீசை, அவள் முகத்தில் உரசியது...
மேனியில் என்னென்னவோ உணர்வுகள்...
முதல் முறை ஒரு ஆணை இந்தளவு நெருக்கத்தில் வெற்று மார்புடன் பார்க்கின்றாள்...
அதுவும் உரியவன்...
மேனியில் உணர்வுகள் தோன்ற தானே செய்யும்...
அவன் தோற்றம் வேறு, ஆளுமையாகவும் திடகாத்திரமாகவும் இருக்க, அவளுக்கோ பேச்சும் வரவில்லை...
மூச்சும் வரவில்லை...
புத்தகத்தை பார்த்து விட்டு அவளைப் பார்த்தவன், "என்ன கேட்டனி?" என்றான் மீண்டும்...
இருவரின் மூச்சு காற்றுகளும் கலந்து வெளியேறிய தருணம் அது...
அவளும் அவனையே பார்த்தான்...
அவனுக்கும் இந்த நெருக்கத்தில் உணர்வுகள் பீறிட்டு கிளம்ப, "ராது" என்றான்...
அவள் பதில் பேசவில்லை...
அவன் பேசும் போது, அவன் இதழ்களில் இருந்து வந்த சுவிங்கத்தின் மணம் அவள் நாசியை ஊடுறுவி சென்றது..
மெதுவாக அவள் கையில் இருந்த புத்தகம் நழுவியது...
அவள் வயிற்றில் அது விழுந்தும் விட்டது...
கையை நீட்டி, அவனே புத்தகத்தை தூக்கி தள்ளி வைத்து விட்டு, அவள் கன்னத்தை வருடினான்...
"என்ன செய்ய போறீங்க?" என்று கேட்டாள்...
அவனோ அவளை பார்த்துக் கொண்டே, அவள் மூக்குத்தியில் முத்தமிட்டான்...
அவள் மெதுவாக கண்களை மூடிக் கொண்டாள்...
அவள் நெருக்கத்தில் அவன் மோகம் கரை புரண்டு ஓட, அப்படியே கீழிறங்கி, அவள் இதழ்களுடன் இதழ்களை பொருத்திக் கொள்ள, தலையணையை பற்றி இருந்த அவள் கரம் இறுகியது...
அவனோ, அவள் கரத்தை பற்றி தனது விரல்களை கோர்த்துக் கொண்டே முத்தமிட்டான்...
நீண்ட நேரம் தொடர்ந்தது அவர்களது முத்த யுத்தம்... அவள் இரு பாதங்களையும் கோர்த்து உணர்வுகளை அடக்க முயல, அவன் பாதமோ அவள் பாதத்தில் அழுத்தத்தைக் கொடுத்தது...
அவளுக்கு எங்கே இருக்கின்றோம் என்று நினைவே இல்லாத அளவு ஒரு ஆழ்ந்த மேற்கத்தேய பாணியிலான முத்தம் அது... அன்று அவன் மட்டுமே முத்தமிட்டான்... இன்று அவளும் முத்தமிட்டாள்...
முத்தப் பற்றிமாற்றங்களுடன் சேர்ந்து எச்சில்களும் பரிமாறப்பட்டன...
இருவரின் மேனியும் பிணைந்து இருக்க, அவள் மேனியின் மென்மையை அவன் உணர, அவன் மேனியின் வன்மையை அவள் உணர்த்தாள்.
முத்தத்தின் முடிவில், மெதுவாக கண்களை விரித்து அவளைப் பார்த்தான்.
அவளும் மெதுவாக விழிகளை திறந்து அவனைப் பார்க்க, அவள் நாசியுடன் நாசி உரசினான்...
இதழ்களும் உரசின...
அவன் மேனி அவளில் மொத்தமாக படிந்து இருக்க, "ராது" என்றான்.
"ம்ம்" என்றாள்...
"உன்னை முழுசா எடுத்துக்கவா?" என்று கேட்டான்...
தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு...
விழிகள் அதிர்ந்து விரிந்தன...
மொத்தமாக கேட்கின்றான்...
என்ன சொல்வாள் அவள்...
உரிமை உள்ளவன் தான் அவன்...
ஆனாலும் ஒரு வித நடுக்கம் அவளுக்கு...
"ப்ரெக்னன்ட் ஆக வாய்ப்பிருக்கா?" என்று கேட்டான்...
வாய்ப்பு இல்லை தான்...
அவனை பார்த்துக் கொண்டே இல்லை என்று தலையாட்டினாள்...
"என்னால கன்ட்ரோல் பண்ண முடியல ராது, இண்டைக்கே கல்யாணம் கட்டிட்டு கேக்கிறது ஒரு மாதிரி தான் இருக்கு, இதுக்காக தான் கல்யாணம் கட்டுனேனா என்று நீ நினைக்கவும் வாய்பிருக்கு, ஆனா எனக்கு ஏலாம இருக்கு, நீ முழுசா வேணும் எண்டு தோணுது" என்றான்...
மனதில் பட்டதை எல்லாம் பளிச்சென்று பேசி விடுகின்றான்...
அவனிடம் அவளுக்கு பிடித்ததே அது தான்...
"நான் அப்படி எல்லாம் நினைக்கல" என்றாள்...
அவனோ மென் சிரிப்புடன், "உனக்கு விருப்பம் இல்ல எண்டா வேணாம்" என்று சொல்லிக் கொண்டே, நகர முற்பட, அவன் கையை எட்டிப் பிடித்துக் கொண்டாள்...
அவனும் அவளை கேள்வியாக பார்க்க, "முழுசா எடுத்துக் கொள்ளுங்க" என்றாள் வெட்கத்துடன் தலையை தாழ்த்திக் கொண்டே... அவன் மென் சிரிப்புடன், அவளை நெருங்கிப் படுதத்தவன், அவள் வயிற்றில் கையை படரவிட்டுக் கொண்டே, அவள் இதழில் இதழ் பதிக்க, அவள் விழிகள் மோகத்துடன் மூடிக் கொண்டன...